• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Editedepisode 9

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Venba

SM Exclusive
Author
Joined
Mar 25, 2018
Messages
1,217
Reaction score
3,967
Location
Coimbatore
யாழினி தான் அழைத்திருந்தால்.அவள் எதற்கு அழைத்திருப்பாள் என்பதைத் தெரிந்த விநாயக் புன்முறுவலோடு போனை எடுத்தான்.

போனை எடுத்தவுடன் "என்னோட இயர் போன் உங்கிட்ட தான இருக்கு?" என்று கேட்க அவன் சத்தமில்லாமல் சிரித்துக்கொண்டே "இப்ப எதுக்கு இயர் போன் உனக்கு?ஒழுங்கா போய் தூங்கு...."என்றான்."என்னோட பெர்மிசன இல்லாம எதுக்கு என்னோட இயர் போன் எடுத்த?" என்று கோபத்தில் கத்த "இப்ப எதுக்குடி கத்துற?ஒழுக்கமா போய் தூங்கு" என்றான்."எனக்கு தூக்கம் வரல.அதனால பாட்டு கேக்கனும்..."என்றால்.

அவன் ஒன்றும் பதில் சொல்லாமல் இருக்க கடுப்பானவள் போனை கட் செய்தால்.அழைப்புமணி ஒலிக்க இந்த நேரத்தில் யாராக இருக்கும் என்ற யோசனையுடன் கதவைத் திறந்தால்.

விநாயக் நின்று கொண்டிருந்தான்.அவன்ம மேல் கோபத்தில் இருந்தவள் அவனை முறைக்க அதைக் கண்டுகொள்ளாமல் "டிரஸ் மாத்திட்டு வா" என்றான்.அவன் மேல் இன்னும் கோபம் வர "நான் கேட்டப்ப இயர் போன் குடுத்திய?அதுவும் என்னோட இயர் போனைய எடுத்து வெச்சுட்டு தர மாட்டனு சொல்லற....நான் மட்டும் ஏன் நீ சொல்லறத கேக்கனும்" என்று முறைத்துக்கொண்டு கூற "அப்ப நானு உனக்கு ஹரிஷ் மேட்டர்ல ஹெல்ப் பண்ண மாட்ட" என்று கையை விரித்துக் கூற கடுப்பானவள்"எல்லா என் நேரம்" என்று முனங்கிக்கொண்டே கதவை மூடினால்.


ஐந்து நிமிடத்தில் வெளிய வந்தவள் "போலாம்"என்றால்.வெளிய வரும்பொழுது சந்தனலக்ஷ்மி அழைக்க யாழினி போனை பேசியபடி விநாயக்கின் பின்னல் நடந்து வந்து கொண்டிருந்தால்.விநாயக் கூகுள் மாப்பை பார்த்து முன்னால் நடந்து போய்க் கொண்டிருந்தான்.விநாயக் திரும்பி பார்க்க யாழினியின் பின்னால் ஒருவன் நடந்துவந்து கொண்டிருந்தான்.அவன் குடித்திருக்கிற‍ான் என்பதை உணர்ந்த விநாயக் யாழினியை தன்
பக்கத்தில் இழுத்துக்கொண்டான்.

யாழினி போனை வைத்தவுடன் "உனக்கு இருபத்தி நாலு வயசு ஆச்சு.கொஞ்சமாச்சு பொறுப்பு இருக்கா?பின்னாடி ஒருத்தன் வரது தெரில ....கொஞ்சமாச்சு கேர்புல்லா இரு..."என்றான்.

யாழினிக்கு அவன் திட்டியது மகிழ்ச்சியாக இருந்தது.தன் விநாயக் எப்பொழுதும் இப்படித்தான் தன்மீது அக்கறை கொள்வான் என்ற நிம்மதி .ஆனால் இப்பொழுது அவன் ப்ரியாவின் விநாயக் என்று நினைத்தவுடன் மனதில் சுர் என்ற வலி.

அவள் முகம் வாடுவதைப் பார்த்த விநாயக் தான் திட்டியதால் தான் அவள் முகம் வாடிற்று என நினைத்து அவள் மூடை மாற்ற எண்ணி "நாம இப்ப எங்க போறோம் தெரியுமா?" என்று கேட்க அவளிடம் பதில் இல்லை."என்ன கேட்டதுக்கு பதிலை காணோம்?" என்றவள் முகத்தை திருப்ப "ஆமா கேட்டா மட்டு எங்க போறோனு சொல்லற மாரி" என்று முனங்க சிரித்தவன் "கோல்டன் கேட் ப்ரிட்ஜ்" என்றான்.

யாழினி சந்தோஷத்தில் "யாஹூ!தேங்க்ஸ் டா"என்றால்.இருவரும் இருந்த இறுக்கமான நிலை மாறி பழைய நட்பு குடிகொண்டிருந்தது.அங்கே சென்று பார்த்துக்கொண்டிருக்கும்பொழுது யாழினி கால் இடறி கீழே விழப் போனால்.அவளைப் பிடித்த விநாயக் "எப்ப தா ஒழுங்கா நடந்து பழக போறனு தெரில" என்று கூறி அவள் கையைப் பிடித்துக்கொண்டான்.

யாழினி செல்பி எடுக்க தன் போனை எடுக்க அது சார்ஜ் இல்லாமல் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது."ச்சு..."என்று சலித்தவளைப் பார்த்து சிரித்துக்கொண்டே விநாயக் தன் போனை எடுத்துக் கொடுத்தான்.அதில் செல்பிகளை கிளிக் செய்தவள் அவனிடம் போனை கொடுக் அதைப் பெற்றுக்கொண்டான்.

இருவரும் திரும்பி வரும்பொழுது யாழினி விநாயக்கிடம் ஐஸ் கிரீம் வேண்டும் என்று கேட்க அவனோ "உனக்கு எற்கனவே கோல்ட்.நைட் டைம்ல ஐஸ் கிரீம் சாப்ட ஒதுக்காது.நாளைக்கு வங்கி தர"என்று கூற அவள் "எனக்கு இப்பவே வேணும்.கோல்ட் ஒன்னும் பண்ணாது "என்று அடம் பிடிக்க அவன் முறைத்தான்."நீ இப்ப ஐஸ் கிரீம் வாங்கி தரலைனா நான் இங்க இருந்து வரமாட்ட"என்று அடம் பிடிக்க வேறு வழியில்லாமல் வங்கிக் குடுத்தவன் "நாளைக்கு தொண்ட வலிக்குதுனு எதாச்சு சொல்லிடு என்கிட்ட வா அப்ரோ இருக்கு "என்றான்.

இருவரும் ரூமிற்கு செல்லும்பொழுது நள்ளிரவைத் தாண்டியிருந்தது."குட் நைட்"கூறி தன் அறைக்குச் சென்றால் யாழினி.நீண்ட நாள் கழித்து இருவரும் நிம்மதியாக தூங்கினர்.

அடுத்த நாள் காலை நால்வரும் எஸ்.கேவிற்குச் சென்றனர்.அங்கு அவர்களை வரவேற்ற ஹரிஷ் தங்கள் எம்.டியின் அறைக்கு அழைத்துச் சென்றான்.அவர் அந்த ப்ராஜெக்ட் குறித்த எதிர்பார்ப்புகளை விநாயக்கிடம் கூற அவன் அதை நிறைவேற்றுவதாக வாக்குறுதி கொடுத்தான்.

நால்வரும் அவரவர் வேலையில் மூழ்கி இருந்தனர்.யாழினியால் கொஞ்ச நேரத்திற்கு மேல் வேலை செய்ய முடியவில்லை.தூக்கம் கண்களை சுழட்டியது.ரெஸ்ட்ரூம் சென்று ரெப்ரெஷ் செய்தவள் மீண்டும் வேலையைத் தொடர்ந்தாள்.சிறிது நேரத்திற்குமேல் அவளால் முடியவில்லை.

கம்ப்யூட்டர் பார்த்துக் கொண்டிருந்தவள் அப்படியே கண்ணயர்ந்தாள்.ஹரிஷ் அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டே அவள் மேசையை தட்டி"எக்ஸ்குஸ் மீ மேடம்!திஸ் இஸ் நாட் எ ப்ளேஸ் பார் ஸ்லீபிங்"என்று கிண்டலாக சொல்ல அவள் " போ டா" என்று கூறி தன் வேலையைத் தொடர்ந்தான்.

கொஞ்சம் நேரத்திற்கு மேல் அவளால் முடியவில்லை. கண்கள் தானாக மூடின.எவ்வளவு முயன்றும் அவளால் தூக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

அதை பார்த்த ஹரிஷ்" நைட் தூங்கலையா?" என்று கேட்க அவள் கோல்டன் கேட் பிரிட்ஜ் சென்றதை பற்றி சொன்னான்.

அவன் சிரித்துக்கொண்டே " சரி
நீ நம்ம வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடு..." என்றவனிடம் "இங்க ஒன்னும் ப்ராப்ளம் இல்லையா? " என்று கேட்டாள்."அது எல்லாம் நான் பாதுக்குற... நீ போ" என்று அனுப்பி வைத்தான்.அவள் விநாயக்கிடம் சொல்லிவிட்டு சென்றாள்.

அங்கே சென்றவள் தூங்காமல் அபியிடம் பேச தொடங்கி விட்டாள். இருவரும் கதை அடித்துக் கொண்டிருந்ததால் நேரம் போனதா தெரியவில்லை.அன்று இரவு உணவிற்கு இருவரும் சேர்ந்து பூரி மசால் செய்தனர்.

வேலை முடிந்து விநாயக்கும் ஹரிஷும் அங்கு வந்துவிட நால்வரும் அரட்டை அடித்துக் கொண்டு சாப்பிட்டனர்.இரவு அங்கேயே தங்குமாறு கட்டாயப்படுத்த இருவரும் அங்கேயே தங்கினர்.

அபியும் யாழினியும் ஒரு அணியாக மற்ற இருவரும் ஒரு அணியாக சேர்ந்து சீட்டு விளையாடினர்.இறுதியில் ஆண்கள் அணியே வென்றது.



இப்படியே ஒரு வாரம் செல்ல அன்று ரக்ஷா பந்தன்.யாழினி ஆசையாக இந்தியாவிலிருந்து ஹரிஷிற்கு ராக்கி வாங்கி வந்திருந்தால்..

அலுவலகத்தில் ஹரிஷ் விநாயக்குடன் பேசிக்கொண்டிருந்தான்.ஹரிஷ் அருகில் சென்ற யாழினி "அண்ணா"என்று அழைத்தாள்.அவன் திரும்பி பார்க்காமலே விநாயக்குடன் பேசிக்கொண்டிருந்தான்.விநாயக் " மச்சான் உன் தங்கச்சி" என்று சொல்ல திரும்பி பார்த்தவன் " இன்னைக்கு மழை கொட்டோ கொட்டுன்னு கொட்ட போகுது...என் தங்கச்சி என்ன அண்ணணு சொல்லிட்டா" என்று கிண்டல் செய்ய அவன் முதுகில் இரண்டு போட்டவள் அவன் கையை நீட்டி ராக்கி கட்டி விட்டாள்.

அவனிடம் கிப்ட்டை கேட்க அவனோ " கிப்ட்டா அப்படினா" என்று இழுக்க "போடா லூசு" என்றுவிட்டு தன் வேலையை பார்க்கத் தொடங்கினாள்.

மதியம் இடைவேளையில் ஹரிஷ் யாழினியை வெளியே அழைத்துச் சென்றான்.கூடவே விநாயக்கும் வந்தான்.

" எங்க போறோம்?" என்று கேட்டதற்கு " வீட்டுக்கு " என்று சொன்னவன் அமைதியாக காரை செலுத்தினான்.வீட்டிற்கு சென்றவுடன் அபி விநாயகிற்கு ராக்கி காட்டினாள். அவன் அவளுக்கு புடவை ஒன்றை பரிசளித்தான்.அதைப் பார்த்தவள்"சூப்பரா இருக்க ன்னா... பட் இது யாழி சேலெக்ஷன் தாணு எனக்கு தெரியும்" என்று சொல்ல சிரித்தான்.
ஹரிஷ் யாழினிக்கு வாட்ச் ஒன்றை கொடுத்தான்.

நால்வரும் மதிய உணவை சாப்பிட்டு கொண்டிருக்கும் பொழுது ஹரிஷ் "யாழி...நான் உனக்கு கிப்ட் குடுதன்ல..நீ எனக்கு என்ன கிப்ட் தர போற?" என்று கேட்க அவள் விளையாட்டாக "என்ன கிப்ட் வேணும்னு கேளு என்னால முடுஞ்சா கண்டிப்பா தர" என்று கூற " நீயும் விநாயக்கும்ம் கல்யாணம் பண்ணிட்டு என் பையனுக்கு ஒரு பொண்ணு பெத்து கொடுக்கணும்" என்று சொல்ல விநாயகிற்கு புரை ஏறிவிட்டது.யாழினிக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.

அபியும் விநாயக்கிடம் "அண்ணா..உங்களுக்கு உள்ள என்ன ப்ரோப்ளேம்னு எங்களுக்கு தெரியாது...பட் நீங்க இப்படி இருக்கிறதா பார்க்க எனக்கு கஷ்டமா இருக்கு" என்று சொன்னாள்.

அவன் " எனக்கு அப்படி ஒரு தாட் இல்லம்மா.. எனக்கு டைம் ஆச்சு ...நாங்க கெளம்பறோம்" என்று விடை பெற்றனர்.

யாழினி எவ்வளவு முயன்றும் அவளால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. அவனை இவள் உயிருக்கு உயிராக நேசிக்கிறாள். ஆனால் இவநோ தனக்கு அப்படி ஓர் எண்ணமே இல்லை என்று சொல்லிவிட அவளால் அதை தங்க முடியவில்லை.

ஹரிஷும் அபியும் விநாயக்கிடம் பேச முயன்று தோற்றனர்.யாழினியை அழைத்துக் கொண்டு ஹோட்டல் சென்று விட்டான்.

இரவு உணவிற்கு செல்வதற்காக விநாயக் யாழினியின் கதவைத் தட்ட அவளிடம் எந்த பதிலும் இல்லை.பத்து நிமிடங்கள் தட்டிய பின்னரும் அவளிடம் பதில் இல்லாமல் போக பயந்தவன் மற்றொரு சாவி வாங்கி கதவைத் திறந்தான்.உள்ளே நுழைந்தவன் யாழினியை எழுப்ப மயங்கிய நிலையில் இருந்தால்.தண்ணீரை முகத்தில் தெளிக்க மெல்லிய முனங்கல் சத்தம் மட்டும் அவளிடம் வந்தது.உடம்பு ரணமாய் கொதித்தது

ரிசப்ஷன்ற்கு போன் செய்து அங்குள்ள மருத்துவர் வந்து பரிசோதித்துவிட்டு மாத்திரை கொடுத்து விட்டுச் சென்றார்.யாழினிக்கு அழுதால் சிறு வயது முதல் சைனஸ் வந்துவிடும்.

ஹரிஷிற்கு போன் செய்து விஷயத்தைக் கூறி அவனையும் அபியையும் ஹோட்டல் வரச் சொன்னான்.விநாயகிற்கு குற்ற உணர்ச்சி தாங்கமுடியவில்லை..யாழினி மிகவும் மென்மையானவள் என்பதைத் தெரிந்தும் தான் அவளிடம் இவ்வாறு நடந்து கொண்டிருக்க கூடாது என்று நினைத்தான்.

இரண்டு மணி நேரம் கழித்து மயக்கத்தில் இருந்து முழித்தால் யாழினி.கண் முழித்தவுடன் விநாயக்,ஹரிஷ்,அபி நின்றுகொண்டிருப்பதைப் பார்த்தால்.விநாயக்கிடம் "என் எல்லாரும் என் ரூம்ல இருக்கீங்க?"என்று கேட்க அவன் முறைத்துக்கொண்டே"வேண்டுதல்"என்றான்.புருவத்தை உயர்தியவளை கண்டு கடுப்பானவன் "ஏண்டீ உனக்கு அறிவில்லையா?இப்டியா அழுவ?அழுதா உனக்கு
சைனஸ் வரும்னு தெரியும்ல ..." என்று கேட்க ஹரிஷ்"டேய் தப்பு உன்மேல தான்...என் தங்கச்சிய திட்டாத..."என்றான்.ஹரிஷ் விநாயக்கை தள்ள சொல்லிவிட்டு அவளுக்கு வேண்டிய மாத்திரையை எடுத்துக் கொடுத்தான்.


.

இவர்கள் இருவரும் பேசுவதைப் பார்த்துக் கொண்டிருந்த விநாயக்"டேய்!டேய் போதும் டா...விட்டா பாசமலர் படமே ஒட்டிருவிங்க போல...."என்று கலாய்க்க அவனை முறைத்த யாழினி "எங்கயோ கருகுறமாதிரி இருக்கு"என்று கூற அவள் தலையில் குட்டிய அபி"ஏன் டி என் அண்ணாவ வம்பு இழுக்கிற" என்றாள்.

எஸ்.கேவில் ப்ராஜெக்ட் முடித்துக்கொடுத்துவிட்டு நால்வரும் இந்தியா திரும்பினர்.அங்கே ஏர்போர்ட்டில் பார்த்த கவிதவைப் பார்த்ததும் யாழினியின் முகம் அஷ்ட கோணலாய் மாறியது.

விநாயக் கவித்தவுடன் பொதுவாக பேச அவள் அதில் கலந்து கொள்ள வில்லை.பின்பு அவளிடம் விடை பெற்று பிலைட்டை நோக்கி நடந்தார்.

யாழினி தனக்கும் விநாயகிற்கும் ஏற்பட்ட முதல் விரிசலை பற்றி நினைத்துப் பார்த்தாள்..

View attachment 2876
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
Kaniskavarna டியர்
 




Last edited:

sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
.அங்கே ஏர்போர்ட்டில் பார்த்த கவிதவைப் பார்த்ததும் யாழினியின் முகம் அஷ்ட கோணலாய் மாறியது.
priyaku pathil kavithanu type panniteengala sis. nice epi sisvinayak also likes yazhu thane why he didn't say anything to harish
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top