• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

En aasai athai magale 3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Venba

SM Exclusive
Author
Joined
Mar 25, 2018
Messages
1,217
Reaction score
3,967
Location
Coimbatore
Hii friends,

Sorry...Sorry...Sorry...Konjam work and elutha concentrate pannava mudila...Ippa than konjam back to form...

Intha alavuku ud ok va illa innum perusa kudukaratha?Kathai epdi poguthu?Nirai kurai ellame sollunga friends...

With love,
Venba.

Song link:
 




Venba

SM Exclusive
Author
Joined
Mar 25, 2018
Messages
1,217
Reaction score
3,967
Location
Coimbatore
கல்லூரி தொடங்கி கிட்டத்தட்ட ஒரு மாத காலம் முடிவடைந்துவிட்டது.இந்த ஒரு மாதத்தில் அனன்யாவும் வீட்டிற்கு அழைக்கவில்லை அவர்களும் இவளிடம் பேசவில்லை.

ஆனால் அதற்காக அவள் சிறிதும் வருத்தப்படவில்லை.அவளின் கல்லூரி வாழ்க்கையை சந்தோசமாக அனுபவித்துக் கொண்டிருந்தாள்.

இங்கு அவளை அதட்டி மிரட்டுபவர் யாரும் இல்லை.அவள் இஷ்டம் போல் இருந்தாள்.அவளுக்குப் பிடித்ததைச் செய்தால்,அவள் இஷ்டம் போல் உண்டாள்,நினைத்த நேரத்திற்கு தூங்கி எழுந்தாள்.பத்து வருடங்களுக்குப் பிறகு சுதந்திரமாக இருந்தாள்.

அவள் மகிழ்ச்சியாக இருந்ததற்கு காரணம் அது மட்டும் இல்லை..அவள் வாழ்வில் வந்த இரண்டு புதிய நபர்களும் தான்.

கல்லூரி வந்த சிறிது நாட்களிலையே சிநேகா அவளின் உயிர்த் தோழியாக மாறிவிட்டாள்.அவள் அம்மா இறந்தவுடன் சித்தியின் சதியால் அவளுக்கு நண்பர்கள் என்பவர்கள் இல்லாமல் போயினர்..அதனால் எப்பொழுதும் தனித்திருக்கும் சூழல்.

பள்ளியில் அவள் தோழி தெரியாத்தனமாக அவள் மீது மையை சிந்திவிட்டாள்.இவளும் அதைப் பெரிது படுத்தவில்லை.ஆனால் வீட்டிற்குச் சென்றதும் அவள் சித்தி கத்திய கத்தில் அவள் பயந்தே போய் விட்டாள் “ஏன் டி நான் என்ன உனக்கு வேலைக்காரியா? நீ எவ்வளவு அழுக்குப் பண்ணிட்டு வந்தாலும் துவைக்கறதுக்கு...” என்று தீட்டியவர் சாட்டையால் அவளை அடி வெளுத்துவிட்டார்.

பின்பு மை கொட்டிய தோழியின் வீட்டிற்கும் சென்று அவள் வீட்டாருடன் சண்டைப் போட்டு விட்டு வந்தார்.சின்னக் குழந்தை தெரியாமல் மை சிந்திய சின்ன விஷயத்திற்கு எதற்கு அந்தப் பெண் இவ்வளவு சண்டை போடுகிறாள் என்று நினைத்த பெற்றோர் அதற்குப் பிறகு அந்தப் பெண்ணை அனன்யாவிடம் பேச அனுமதிக்கவில்லை.

வீட்டிற்கு வந்தவுடன் “இனிமேல் நான் உன் துணிய துவைக்க மாட்டேன்..நீயே துவைச்சுக்கோ..அப்ப தான் புத்திவரும்” என்றவர் அன்றிலிருந்து அனன்யா துணியை அவளையே துவைக்க வைத்தார்.

எட்டு வயது குழந்தையை துணி துவைக்கச் சொன்னால் அக்குழந்தை எப்படி செய்யும்?ஆனாலும் அனன்யா அதைச் செய்தாள்.அவள் சித்தி எப்படி துணி துவைக்கிறாள் என்பதைப் பார்த்து அவளும் அப்படியே செய்தாள்.

ஆனால் எட்டு வயதுக் குழந்தை தன் பஞ்சுக் கரத்தால் துணி துவைத்தால் துணியிலுள்ள அழுக்குப் போய் விடுமா என்ன?அழுக்குப் போகாத உடையை அப்படியே அணிந்து கொண்டு பள்ளிக்குச் சென்றாள்.

அதனால் பள்ளியில் அவள் பெயர் “டர்ட்டி கேர்ள்” (dirty girl) என்றானது.அதனால் மற்ற குழந்தைகள் அவளிடம் இருந்து விலக ஆரம்பித்தனர்.எப்பொழுதும் அவளைக் கேலி செய்து விளையாடுவர்.

இதை எல்லாம் வந்து அவள் தன் சித்தியிடம் சொல்ல அந்தோ நடந்ததோ பரிதாபம்..அவர் அவளை மேலும் இரண்டு சாத்து சாத்தி “ஏன் டி எட்டு வயசு ஆச்சு..இன்னும் உன் துணியை கூட உன்னால துவைக்க முடியாதா?என்ன தான் உங்க அம்மா உன்ன வளர்த்துனாளோ...போறவ உன்னையும் கூட்டிட்டு போகாம என் தலையில கட்டி விட்டுட்டு போயிட்டா..” என்று கத்தினார்.

அவர் பேசியது அனன்யாவிற்கு புரியவில்லை என்றாலும் தன் அன்னையைப் பற்றி அவர் ஏதோ தப்பாக சொல்கிறார் என்பதை அவர் சொல்லிய விதத்தில் கண்டுபிடித்தவள் “என் அம்மா ரொம்ப நல்லவங்க..அவங்கள எதுவும் சொல்லாதிங்க..நான் இனிமேல் ஒழுங்கா துணி துவைக்குற..” என்று வாயைப் பிதுக்கி அழுதவள் கஷ்டப்பட்டு தன் துணியை நன்றாகத் துவைக்கக் கற்றுக் கொண்டாள்.

அவள் நன்றாக துணியை துவைக்கக் கற்றுக் கொண்டாள் என்பதை விட அழுக்கு செய்யாமல் இருக்கக் கற்றுக் கொண்டாள் என்று சொல்வதே மிகப் பொருந்தும்.

ஆனால் இங்கு வந்ததிலிருந்து அவளைக் கேட்பவர் யாரும் இல்லை.அதனால் சிநேகாவுடன் தன் பொழுதுகளைச் சந்தோசமாகக் கழித்தாள்.சிநேகாவும் இவளும் உயிர்த் தோழிகள் ஆகினர்.

அனன்யா சிநேகாவிடம் தன் குடும்பத்தைப் பற்றிச் சொல்லவில்லை அவளும் இவளிடம் அதைப் பற்றி கேட்கவில்லை.ஆனால் சினேகா தன்னைப் பற்றி எல்லாவற்றையும் அனன்யா விடம் பகிர்ந்து கொண்டாள்.ஒட்டிப் பிறந்தவர்கள் போன்று இருவரும் எப்பொழுதும் ஒன்றாகச் சுற்றிக் கொண்டிருந்தனர்.

தினமும் மதிய இடைவெளியின் பொழுது அந்த சீனியர் இவர்களைப் பார்க்க வந்துவிடுவான்.எப்பொழுதும் அனன்யாவைப் பார்த்ததும் அவன் கேட்கும் முதல் கேள்வி “சாப்டியா?” என்பது தான்.இந்தக் கேள்வியை அவன் கேட்பதினாலையே அவளுக்கு அவனைப் பிடித்துவிட்டது.

_---__________________________
சிநேகா அன்று மிகவும் உற்சாகமாக இருந்தாள்.அவள் படிக்க விரும்பிய சித்த மருத்துவத்திற்கான கவுன்சிலிங்கிற்கு அழைப்பு வந்திருந்தது.அவளுக்கு சிறு வயதிலிருந்தே சித்த மருத்துவம் படிக்க வேண்டும் என்று ஆசை.

ஆனால் மதிப்பெண் சற்று கம்மி ஆகிவிட்டதால் தான் வேறு வழி இன்றி இந்தத் துறையை தேர்ந்து எடுத்தாள்.ஆனால் இப்பொழுது இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கிற்கு அவளுக்கு அழைப்பு வந்திருந்ததால் அவள் கனவு நினைவாகப் போகும் சந்தோஷத்தில் இருந்தாள்.
 




Venba

SM Exclusive
Author
Joined
Mar 25, 2018
Messages
1,217
Reaction score
3,967
Location
Coimbatore
அவள் அம்மா போன் செய்து அவளுக்கு இந்த விஷயத்தை சொல்ல அவள் கால் தரையில் நிற்கவில்லை.16 வருட கனவு நினைவாகப் போகும் சந்தோஷத்தில் அவள் மனம் குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்தது.

அனன்யாவைக் கட்டிக் கொண்டவள் இந்த விஷயத்தை சொல்ல அனன்யாவிற்கும் மிக மகிழ்ச்சியாக இருந்தது.இந்த 1 மாதப் பழக்கத்தில் அவளின் ஆசைகள் அனைத்தும் அனன்யாவிற்கு அத்துப்பிடி.அதனால் தோழிக்காக மிகவும் சந்தோசப்பட்டாள்.

ஆனால் அவள் கவுன்சிலிங் சென்ற அன்று தான் அனன்யாவின் மனதிற்கு உரைத்தது அவள் இனி தன்னுடன் இருக்கமாட்டாள் என்பது.சிநேகா இனி தன்னுடன் இருக்க மாட்டாள் என்ற எண்ணம் எப்பொழுது அவள் மனதில் தோன்றியதோ அப்போதிலிருந்து அவள் கண்ணில் கண்ணீர் வந்து கொண்டே இருந்தது.

1௦ வருடங்களாக ஒரு நல்ல தோழிக்காக ஏங்கிக்கொண்டிருந்தவளுக்கு கிடைத்த வரம் தான் சிநேகா.ஆனால் பழகிய 1 மாதத்தில் அவள் தன்னை விட்டுப் பிரிந்து போவதை அவளால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.

தனக்குப் பிடித்தவர்கள் எல்லாம் தன்னை விட்டு வெகு சீக்கிரத்திலையே போய் விடுகிறார்கள் என்று தோன்ற அவள் மேலையே அவளுக்கு வெறுப்பு தோன்றிற்று.

சிநேகாவிற்கு அவள் விரும்பிய கல்லூரியிலையே இடம் கிடைத்துவிட்டது.அதைக் கேட்டதும் அனன்யா மிகவும் சந்தோசப்பட்டாள்.

ஆனால் அவளுக்கு இடம் கிடைத்த கல்லூரி இருக்கும் இடம் திருநெல்வேலி.அதனால் அடிக்கடி கோயம்புத்தூர் வர முடியாது.வாரத்திற்கு ஒரு முறையாவது அவளை சந்தித்துக் கொள்ளலாம் என்று மனதை தேற்றி வைத்த அனன்யாவிற்கு இச்செய்தி பாகற்காயாய் கசந்தது.

சிநேகா ஹாஸ்டலை காலி செய்யும் பொழுது அனன்யா அழுததைப் பார்த்து அங்கிருந்தோருக்கு கண் கலங்கிவிட்டது.சிநேகா தான் அவளைத் திட்டி சமாதானம் செய்தாள்.

“என்ன டி சின்ன பொண்ணு மாதிரி..முதல கண்ணத் தொட..நான் என்ன வேற நாட்டுக்கா போற..இங்க இருக்க திருநெல்வேலிக்கு...நைட் பஸ் ஏறினா விடிய காலைல வந்துருவ..” என்றவள் அவள் கையில் ஒரு போனைத் திணித்து “இதை வெச்சுக்கோ...நாம ரெண்டு பெரும் டேயிலி நைட் பேசலாம்” என்றாள்.

அதை மறுத்த அனன்யா “இல்ல டி இதை நீயே வெச்சுக்கோ...வார்டன் ஆபிஸ்க்கு போன் பண்ணு...நாம அதுல பேசலாம்” என்று சொல்ல “அது எல்லாம் வசதியா இருக்காது டி...உங்கிட்ட போன் இருந்தா நாம நினைச்ச நேரத்துக்கு பேசலாம்..ப்ளீஸ் டி..வங்கிக்கோ” என்று கெஞ்ச அனன்யா அதை வாங்கவில்லை.

சிநேகாவின் அண்ணா அவள் கல்லூரிவிட்டுப் போவதால் அவள் இனி தனியாக இருப்பாள் என்று எண்ணி அவளுக்காக ஒரு போனை வாங்கி சிநேகாவிடம் கொடுத்து இருந்தான்.ஆனால் சிநேகா எவ்வளவோ வற்புறுத்தி பார்த்தும் அனன்யா அதை வாங்க மறுத்துவிட்டாள்.அதை வாங்க அவள் தன்மானம் இடம் கொடுக்கவில்லை.

சிநேகாவிற்கும் அவளைவிட்டுப் போவது மிகவும் கஷ்டமாகத் தான் இருந்தது.ஆனால் அவளுக்கு வேறு வழி இல்லை.அவளுக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள் தான்.ஆனால் யாரும் அனன்யாவைப் போன்று கள்ளங்கபடமில்லாத பாசத்துடன் பழகியவர்கள் இல்லை.அதனால் தான் அவளிடம் ஒரு போன் இருந்தால் தினமும் அவளிடம் பேசிக் கொள்ளலாம் என்று நினைத்தவள் அவளிடம் தன் அண்ணன் போனைக் கொடுத்தாள்.

ஆனால் அனன்யா அவள் கொடுத்த போனை வாங்காதது சிநேகாவிற்கு கோபத்தை ஏற்படுத்தியது.”அப்ப நான் யாரோ தான?நான் கொடுத்த போன வாங்க மாட்டில?” என்று கேட்க அனன்யாவிடம் இருந்து அவளுக்கு மௌனம் மட்டுமே பதிலாகக் கிடைத்தது.

சிநேகா ஒன்றும் பேசாமல் தன் பைகளை எல்லாம் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு வரவேற்பு அறைக்குச் சென்றாள்.அனன்யா அவள் பைகளை தூக்க முயல அவள் கைகளைத் தட்டி விட்டவள் தானே சிரமப்பட்டு தூக்கிச் சென்றாள்.

தன் மற்ற தோழிகளிடம் விடை பெற்றவள் மறந்தும் அனன்யாவைப் பார்க்கவில்லை.அவளின் மனதில் ஒரு சின்ன எண்ணம் ‘தான் அவளிடம் கோபம் கொண்டாலாவது அவள் தன்னிடம் இருக்கும் தொலைப்பேசியை வாங்குவாள்’ என்று.

ஆனால் அவள் வெளியே செல்லும் வரை அவளையே கண்ணீர் நிறைந்த கண்களுடன் பார்த்துக் கொண்டிருந்தவள் அவளிடம் பேசவும் முயற்சிக்கவில்லை அவள் கொடுத்த போனை வாங்கவும் இல்லை.

சிநேகா தன் அன்னை அருகில் சென்று அவர்களிடம் தன் பையைக் கொடுத்தவள் “ஒரு நிமிஷம் ம்மா...வந்தர்ற..” என்றவள் உள்ளே சென்று அனன்யாவின் கன்னத்தில் ஒரு அறைவிட்டு அவளை அணைத்துக் கொண்டாள்.


சில நிமிடங்கள் கழித்து அவளிடம் இருந்து விலகிய சிநேகாவின் கண்கள் லேசாக கலங்கி இருந்தன. “ஏன் டி..நான் உன்கூட பேசலைனாலும் பரவால..ஆனா நான் கொடுத்த போன் வாங்க மாட்டில?” என்று கேட்க “ச்சு..அப்படி எல்லாம் இல்லை டி..எனக்கு போன் என் காசுல வாங்கணும்னு ஆசை..அதுவரைக்கும் நான் போன் யூஸ் பண்ணக்கூடாதுனு இருக்கேன்..உன்ன ஹர்ட் பண்ணதுக்கு சாரி..பட் இது என்னோட ஆசை டி..புரிஞ்சுக்கோ ப்ளீஸ்” என்று கரகரப்பான குரலில் அவள் தாடையைப் பிடித்துக் கெஞ்ச “சாரி டி..உன்கூட டெய்லியும் பேச முடியாதுனு கோபத்துல திட்டிட்ட..” என்றாள்.

அனன்யா சிநேகாவின் பெற்றோர் நிற்கும் இடத்திற்கு வந்து அவளுக்கு விடை கொடுத்தாள்.சிநேகாவுடன் வந்த அனன்யாவைப் பார்த்த சிநேகாவின் தாய் திலகவதி “அனன்யா நல்லா இருக்கியா ம்மா?” என்று கேட்க அவர்க்கு எப்படி தன்னைத் தெரியும் என்று நினைத்தவள் “நல்லா இருக்க ஆண்டி” என்றாள்.

“நானும் உனக்கு உன் அம்மா மாறிதான்.அம்மானே கூப்பிடு” என்றார்.அவளுக்கு தன் அம்மாவின் நினைவு தான் வந்தது.ஆனால் இம்முறை அவளுக்கு அழுகை வரவில்லை.முகத்தில் புன்னகை தான் வந்தது.நிறைய வருடங்களுக்குப் பிறகு “அம்மா” என்று அழைக்க ஒருவர் கிடைத்தது சந்தோசத்தைக் கொடுத்தது.

“உன்னப் பத்தி சிநேகா நிறைய சொல்லிருக்கா..சிநேகா அவ்வளவு சீக்கிரம் யார்கிட்டயும் க்ளோஸ் ஆக மாட்டாள்..ஆனா உங்கிட்ட ஏதோ மேஜிக் இருக்கு அதனாலதான் 1 மாசத்துலையே உங்கிட்ட இவ்வளவு க்ளோஸ் ஆகிட்டா” என்றவர் சொல்ல அனன்யாவின் முகத்தில் மெல்லிய புன்னகை.

“.அவளுக்கு அந்த காலேஜில சீட் கிடைச்சது எவ்வளவு சந்தோசமா இருக்கோ..அதே அளவுக்கு உன்ன விட்டு பிரியணும்னு கஷ்டமா இருந்துச்சு..” என்றவர் சொல்ல சிநேகாவைப் பார்த்த அனன்யாவின் கண்ணில் கண்ணீர் வரவா வேண்டாமா என்று கேட்டுக் கொண்டிருந்தது.

அவளை பார்த்த சிநேகா “ஓய்..என்ன சைட் அடிச்சது எல்லாம் போதும்..இனிமேல் உன்ன கொட்டி கொட்டி சாப்பிட வைக்க நான் இருக்கமாட்ட..அதனால ஒழுங்கா சாப்பிடு...” என்றவள் “நான் டெய்லி 7 மணிக்கு வர்டன்க்கு கூப்பிடுற..பேசலாம்...அப்புறம் நான் ஊருக்கு வரப்ப இங்க வர..” என்றவள் அவளை அணைத்து விடைபெற்றாள்.

பிரியும்வலி இருவரின் கண்களிலும் தெரிந்தது.

எங்கோ பிறந்தோம்
இங்கே இணைந்தோம்
ஒன்றாய் வளர்ந்தோம்
உலகை உணர்ந்தோம்
எல்லாம் அறிந்தோம்
அன்பால் கலந்தோம்
நட்பால் மலர்ந்தோம்


கனவுகள் பழகிய நாட்களை
நெஞ்சில் ஏந்துவோம் எந்த நாளுமே
இனிவரும் அழகிய நாளிலும்
உன்னைப் பாடுவோம் பாடுவோம்
பள்ளிக்கூடமே

திலகவதி தான் இருவரின் மனநிலையை மாற்றும் பொருட்டு “அனன்யா இனிமேல் நீ ப்ரீயா இருக்கப்ப கண்டிப்பா வீட்டுக்கு வரணும்...அவ திருநெல்வேலில இருந்தாலும் பரவாயில்லை...நீ என்னையும் அப்பாவையும் பார்க்க கண்டிப்பா வரணும்” என்றார்.

“கண்டிப்பா வர ம்மா..”என்றவள் அவர்களுக்கு விடை கொடுத்தாள்.சிநேகா காரில் ஏறியவுடன் அவள் அம்மாவின் மடியில் தலை வைத்து அழ ஆரம்பித்துவிட்டாள்.

இருவரையும் பார்ப்பவர்கள் அவர்களின் பழக்கம் வெறும் 1 மாதம் தான் என்று சொன்னால் நம்ப மாட்டார்கள்.ஆனால் உண்மையான அன்பு என்பது அவர்கள் பழகும் கால அளவைப் பொறுத்து வருவதில்லை.அவர்களின் மனதைப் பொருத்து வருவது.

“நேசிப்பவர்கள் எல்லாம்
நம்மோடு நிலைத்துவிட்டால்
நினைவின் மொழியும்
பிரிவின் வழியும்
தெரியாமல் போய் விடும்”
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
கனிஸ்காவர்ணா டியர்
 




Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,488
Reaction score
29,223
Age
59
Location
Coimbatore
இடைவெளி அதிகம் இல்லாமல் பதிவு கொடுக்கலாம்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top