• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

En asai kanmaniye-4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
மணமக்களுக்கு கல்யாணம், நிச்சயதார்த்தம் இரண்டிற்கும் துணி எடுக்க இரு வீட்டாரும் உமா டெக்ஸடைல் வந்து விட்டார்கள்.

கீர்த்தனா மற்றும் கார்த்திகேயன் இருவருக்கும் பிரத்யோகமாக விலை உயர்ந்த ஆடைகளை ஆர்டர் செய்து வரவழைத்து இருந்தான் செல்வ கணேஷ்.

மணமக்கள் தவிர இரு வீட்டு நபர்கள் எடுக்க விசேஷமாக சில ஆடைகள் வரவழைக்கப்பட்டு இருந்தன.

கீர்த்தனாவும், கல்பனாவும், எல்லாவற்றையும் பார்த்து எதை தேர்ந்தெடுப்பது என்று யோசிக்க விஜயலட்சுமி அவர்களுடன் இணைந்து கொண்டாள்.

கார்த்திகேயன் தன் அருமை காதலி துணி எடுக்கும் அழகை தூரத்திலிருந்து அவளுக்கும் தெரியாமல் ரசித்து கொண்டு இருந்தான்.

மூன்று பெண்களும் சேர்ந்து ஆலோசித்து இறுதியில் கல்யாணத்திற்கு மஞ்சள் வண்ணத்திற்கு டிசைன் வேலைபாடுகள் அமைந்த பட்டு புடவையும், நிச்சயதார்த்திற்கு பிங்க நிற பட்டு புடவையும் கீர்த்தனா எடுத்து கொண்டாள்.

கார்த்திகேயன் திருமணத்திற்கு பட்டு வேட்டி, பட்டு சட்டையும், நிச்சயத்திற்கு சபாரி சூட்டும் எடுத்து கொண்டான்.

விஜயலட்சுமியும். கல்பனாவும் தங்களுக்கு பிடித்த டிரஸ்களை எடுத்து கொண்டார்கள்.

அடுத்ததாக மஞ்சுளா ஜுவல்லரி சென்று தாலியை தேர்ந்தெடுத்து விட்டு வீடு திரும்பினார்கள்.

கல்யாண நாள் மிக அருகில் நெருங்கி வர ஆரம்பித்தது.

இரு வீட்டாரும் திருமணத்திற்கு செய்ய வேண்டிய சடங்குகள் முதலிய காரியங்களை செய்து முடித்தார்கள்.

கீர்த்தனாவிற்கு காயங்கள் ஆறி முழுவதும் தேறி இருந்தாள்.

கார்த்திகேயன் எப்பொழுது கீர்த்தனா தன் மனைவியாக வருவாள் என்று ஆவலாக கனவு கண்டு கொண்டிருந்தான்.

கீர்த்தனாவிற்கு அதேசமயம் திருமணத்திற்கு பின்னர் தான் விளையாட முடியுமா என்ற கவலையில் இருந்தாள்.

"அக்கா" என்று அழைத்தபடி கல்பனா அறைக்குள் வந்தாள்.

கீர்த்தனா அவள் அழைத்தது கூட கவனிக்காமல் தீவிர சிந்தனையில் இருந்தாள்.

கல்பனா அவளின் அருகில் வந்து அக்கா என்று சத்தமாக அழைக்க சிந்தனை கலைந்து தங்கையை என்ன என்பது போல் பார்த்தாள்.

"அக்கா... என்ன மாம்ஸ் கூட டீரீம்சில் டூயட்டா?" என்று கேலியாக கேட்டாள் கல்பனா.

கீர்த்தனா அவளை கோபமாக முறைத்து விட்டு மீண்டும் திரும்பி முகத்தை சோகமாக வைத்து கொண்டாள்.

கல்பனா அக்காவை கட்டி முத்தமிட்ட பின்னர் அவளிடம் "அக்கா... நானும் உன்னை கவனித்து கொண்டுதான் வருகிறேன். உன் முகமே சரியில்லை. என்ன பிராபளம் உனக்கு?" என்றாள் கல்பனா.

"அதெல்லாம் ஒன்றுமில்லை கல்பி. கல்யாண டென்சன்தான்" என்று சமாளித்தாள் கீர்த்தனா.

"பொய்" என்று அவள் கூற அவளை அதிர்ச்சியாக பார்த்தாள் கீர்த்தனா.

"பொய்யா? என்ன பொய்?"

"அக்கா... உன்னை சின்ன வயசிலிருந்து பார்க்கிறேன். என்னிடமே பொய் சொல்கிறாயா நீ?"

கீர்த்தனா தங்கையை பார்க்க.
"அக்கா... உனக்கு மேரேஜ் டென்ஷன் எல்லாம் இல்லை. கல்யாணத்திற்கு பின்னால் போட்டிகளில் விளையாட முடியுமா இல்லையா என்று கவலைதான் உனக்கு" என்று கூறினாள் கல்பனா.

இவள் எப்படி என் மனதில் உள்ள விஷயங்களை அப்படியே சொல்கிறாள் என்று கீர்த்தனா பார்த்தாள்.

"என்ன அக்கா... நான் சொன்னது சரியா?" என்று கல்பனா கேட்க ஆம் என்பது போல் கீர்த்தனா தலையசைத்தாள்.

"அக்கா... நீ கவலையேபடாதே. நீ கண்டிப்பாக விளையாடுவாய்"
"நடக்கிற கதையை பற்றி பேசு கல்பி."

"ஏன் நடக்காது அக்கா?"

"என்னை அதற்குதான் அவர்கள் மகனுக்கு கல்யாணம் செய்து கொண்டு போகிறார்கள் பாரு. நான் போனதும் மருமகளே நீ போயி டென்னிஸ் விளையாடு என்பார்களாடி"

"ஏன் சொல்ல மாட்டார்களா?"
"கல்பி... நம் அம்மாவுக்கே நான் டென்னிஸ் விளையாடுவது பிடிக்காமல்தான் என்னை கல்யாணம் பன்னி தருகிறார்கள். இந்த லட்சணத்தில் மாமியார் வீட்டில் எப்படிடி சம்மதிப்பார்கள். சொல்லுடி"

"அவர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் என்ன அக்கா? மாம்ஸ் இருக்காரில்லையா? அவரை தாஜா செய்து சம்மதிக்க வை. கண்டிப்பாக மாம்ஸ் உனக்காக செய்வார் அக்கா"

"ஆமாம்டி. அவருக்கு வேறு வேலை இல்லை. ஏதோ அவர் என்னை காதலிக்கிறப்ப என் மேட்சை பார்க்க வந்தாரு. நான் அவர் பொண்டாட்டியான பின் ஹனிமூனுக்கு என்னை கூட்டி கொண்டு போவாரா? என்னை மேட்ச் ஆட வைப்பாராடி" என்றாள் கீர்த்தனா.

"நீ சொல்கிறதும் உண்மைதான். நானே ஆம்பளையாக இருந்தால் உன்னைமாதிரி சூப்பர் பிகரை ஹனி மூனுக்கு சிம்லாவுக்கு அள்ளி கொண்டு போயிடுவேன்"

"அப்புறம்?"

"அப்புறம் தாம்பரம்தான். நீ பேசாமல் உன் டென்னிஸ் கனவை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு கிடைக்கபோகிற வசதியான வாழ்க்கையை நன்றாக என்ஜாய் பன்னு"

Message…
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
நான்தான் First,
சினேகா ப்ரோ
 




Last edited:

snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
தங்கையின் வார்த்தையை கேட்டு கண்ணீர் பெருகிவர அழ ஆரம்பித்தாள் கீர்த்தனா.

"அக்கா... அழறியா? நான் சும்மா ஒரு பேச்சுக்குதான் அப்படி சொன்னேன். என் அக்காவை பற்றி எனக்கு தெரியாதா?" என்றபடி அக்காவை கட்டி அணைத்து முத்தமிட்டாள்.

தங்கையின் அந்த பாசமான அணைப்பும் முத்தமும் சற்று ஆறுதல் தந்தது.

"அக்கா... மாம்ஸ் பேமிலி பற்றி என் சீனியர் விஜிக்காவிடம் பேசி தெரிந்து கொண்டுவிட்டேன். அவர்கள் பேமிலியில் மாம்ஸ், அவர் அப்பா, அம்மா, அண்ணி. அண்ணன், விஜிக்கா என்று எல்லொரும் ஸ்போர்ட்ஸ் பிளேயராக இருந்தவர்களாம். மாம்ஸ் கூட உன்னை மாதிரி டென்னிஸ் பிளேயராம் அக்கா. சோ... கண்டிப்பாக அவர்கள் உனக்கு விளையாட பெர்மிஷன் தருவார்கள். என்ன அவர்களிடம் பேசி பழகி நீ நல்லா பெயர் வாங்கினால் அது நடக்கும்" என்றாள் கீர்த்தனா.

தங்கையின் வார்த்தைகள் சற்று நம்பிக்கை தர அவள் தெளிந்து "இது போதும்டி எனக்கு. இனி பாரு என் பெர்பார்மன்சை" என்று கூறி சிரித்தாள் கீர்த்தனா.

"இதுதான் என் அக்கா." என்று அக்காவிற்கு கல்பனா முத்தம் தர பதிலுக்கு தங்கையை கட்டி அணைத்து முத்தம் தந்தாள் கீர்த்தனா.

"இந்த மாதிரி ரெண்டு முத்தம் தந்தால் மாம்ஸ் அவ்வளவுதான் அக்கா" என்று கல்பனா சொல்லி விட்டு விஷமமாக சிரித்தாள்.

"உன்னை" என்று கீர்த்தனா அடிக்க ஆயுத்தமாகினாள்.

"கல்பி எஸ்கேப்" என்றபடி கல்பனா ஜூட் விட அவளை கீர்த்தனா துரத்த அறைக்குள் அக்கா தங்கைகள் துரத்தி பிடித்து விளையாடிய பின்னர் களைப்பு ஏற்பட இருவரும் கட்டிலில் சரிந்தார்கள்.

கல்யாணம் மறுநாள் இருக்க உறவினர்கள் கீர்த்தனாவின் வீட்டிலும், கார்த்திகேயனின் வீட்டிலும் சொந்தகாரர்கள் வந்து விட இருவரின் வீடுகளிலும் கல்யாணம் களை கட்டியது.

மாலை வேளையில் இரண்டு வீட்டாருடன் கார்த்திகேயன் மற்றும் கீர்த்தனா கல்யாண மண்டபத்தை அடைந்தார்கள்.

நிச்சயதார்த்த நிகழ்ச்சிகள் வெகு சிறப்பாக நடந்து முடிந்தது. கார்த்திகேயன், கீர்த்தனா இருவரும் ஜோடியாய் நின்று போட்டோவிற்கு போஸ் கொடுத்தபடியும், பரிசுகளை வாங்கியபடி இருந்தார்கள்.

பிங்க பட்டு புடவையில் அழகு மயிலாக திகழ்ந்த கீர்த்தனாவை ரசித்தபடி கார்த்திகேயனும், சபாரி சூட்டில் கம்பீரமாக அருகில் நின்றவனை ரசித்தபடி இருந்தாள் கீர்த்தனா.

ஒருவரை அறியாமல் மற்றவர் சைட் அடித்ததை கீழே இருந்து பார்த்து கொண்டிருந்த கல்பனா அக்காவை சைகையால் கேலி செய்ய அவளை சைகையால் மிரட்டினாள் கீர்த்தனா.

விஜயலட்சுமி மறுபக்கம் தன் அண்ணனை வார இரண்டு பேரும் தங்கைகளை சமாளிக்க முடியாமல் விழித்தார்கள்.

போட்டோகிராபர்கள் ஆல்பம் போட விதவிதமாக போஸ் கொடுக்க சொல்ல கார்த்தி தன் காதல் பார்வை வீச கீர்த்தனா அழகு பார்வை வீச அங்கே ஒரு காதல் நாடகம் அரங்கேறியது.

"இங்கே என்ன நடக்கிறது?" என்று விஜயலட்சுமி கேட்க இருவரும் தன்னிலை அடைந்து வெட்கப்பட்டு சிரித்தார்கள்.

தங்கைகள் இருவரும் ரவுண்டு கட்டி வார ஆரம்பிக்க சிரித்து கொண்டே கார்த்திகேயனும், கீர்த்தனாவும் சமாளித்தார்கள்.

இரவு தன் அறைக்கு தூங்க சென்ற கீர்த்தனா சிறிதுநேரம் தங்கையுடன் பேசிவிட்டு கண் அயர்ந்தாள்.

கார்த்திகேயனுக்கோ கனவு கை கூடும் சந்தோஷத்தில் நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் தூங்கினான்.

காலையில் நான்கு மணிக்கு அம்மா ராதா வந்து எழுப்பி விட அரை தூக்கத்தில் எழுந்து குளித்து ரெடியாகி முகூர்த்த பட்டு சேலை மேக்கப் போட்டு மணமகளாக தயராகி தன் அறையில் காத்திருந்தாள்.

Write your reply...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top