• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

En kaadhal kanmaniye-31

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
தீபாவளிக்கு முதல் நாள் தனலட்சுமியின் வீட்டுக்கு அவள் அப்பா மாடசாமி அம்மா கமலம், கண்ணாத்தாள். ஆனந்தன் ஆகியோர் சென்று தங்கி கொண்டனர்.

மரகதம், மாணிக்கம், அருண், ரஞ்சிதா ஆகியோர் அர்ச்சனா வீட்டில் தங்கி கொண்டனர்.

மறுநாள் அதிகாலை எழுந்து குளித்து முடித்தபின்னர் தனலட்சுமியின் வீட்டில் பூஜை செய்து மாடசாமியும், கமலமும் தம்பதி சமேதராய் நின்று தங்கள் இரண்டு மகள்கள் மற்றும் இரண்டு மருமகன்களுக்கும், பேரனுக்கும் புது துணிகளை ஆசீர்வாதம் செய்து தர பெற்று கொண்டனர்.

மகள்கள் தனலட்சுமி மற்றும் கண்ணாத்தாள் எடுத்து தந்த துணியை பெற்று கொண்ட அவர்கள் தனலட்சுமி தந்த துணியை அணிந்து கொள்ள அவளுக்கு தாங்க முடியாத சந்தோஷம் ஏற்பட்டது.

மாடசாமி கமலம் தம்பதியினர் இரண்டு மருமகன்களுக்கும் தீபாவளி சீராக ஒரு பவுனில் மோதிரம் போட அதை பெற்ற தனலட்சுமிக்கு மேலும் ஆனந்தம் ஏற்பட்டது.

அர்ச்சனா விட்டில் அதே போல் மாணிக்கம் விஜயா தம்பதிகள் பூஜை செய்து தங்கை மரகதம் அர்ச்சனா ஆகாஷ் பேத்தி ஆனந்த ஜோதி மகன் அருண் மருமகள் ரஞ்சிதா பேத்தி வைசாலி ஆகியோருக்கு ஆசீர்வாதம் செய்து துணிகளை வழங்கினார்.

அர்ச்சனா-ஆகாஷ், அருண்- ரஞ்சிதா மற்றும் ஆனந்தன்- கண்ணாத்தாள் எடுத்து தந்த துணிகளை மரகதம் மற்றும் மாணிக்கம், விஜயா பெற்று கொண்டாலும் அர்ச்சனா துணிகளை அணிந்து கொண்டதால் அவளுக்கும் மிக்க மகிழ்ச்சி ஏற்பட்டது.

மரகதம் அம்மா தன் மருமகன் ஆகாஷ். அண்ணன் மகன் அருண் இருவருக்கும் ஒரு பவுன் மோதிரம் தீபாவளிக்கு சீராக தந்தார்.

காலையில் பூஜை முடித்து தங்கள் வீடுகளில் டிபன் சாப்பிட்ட பின்னர் ஒன்றாக கோவிலுக்கு சென்று சாமி கும்பிட சென்ற பொழுது சரண்யா விவேக் அவர்களுடன் இணைந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கண்ணாத்தாளுக்கு ஒரு அக்கா போல் இருந்து சரண்யா செய்து வரும் உதவிகளை அறிந்த இரு வீட்டு பெரியவர்கள் கோவிலில் இருந்து வீட்டுக்கு திரும்பும் சரண்யா விவேக் இருவரையும் அவர்களை வீட்டுக்கு அழைக்க அவளுக்கு நெகிழ்ச்சி ஏற்பட்டது.

"எங்கள் கண்ணாவுக்கு நீ ஒரு அக்கா மாதிரி பார்த்து பார்த்து எல்லாம் செய்கிறாய். நீயும் எங்கள் மகள் மாதிரிதான் அதனால் எங்கள் கூட வந்து வீட்டில் தங்கி மதியம் சாப்பிட்டு விட்டுதான் செல்ல வேண்டும்" என்றார் மாடசாமி.

"ஆமாம்மா... என் மருமகளை தங்கையாக பார்த்து கொள்ளும் நீயும் என் மகள் மாதிரிதான். நீ எதுவும் சொல்லாமல் வந்து மதியம் சாப்பிட்டு விட்டு போ" என்றார் மரகதம்.

"கண்ணா... உன் அக்காவை கூட்டி கொண்டு வா" என்று ஆனந்தன் கண்ணாத்தாளிடம் சொல்லி விட "அக்கா... மாமா... இரண்டும் பேரும் உடனே எங்களுடன் வீட்டுக்கு வர்றீங்க" என்று சரண்யா அவள் கணவன் விவேக்கை அழைத்தாள்.

இரு குடும்பத்தின் அன்பில் மகிழ்ந்து கண்கள் கலங்கி நின்ற சரண்யாவை கண்ணாத்தாளும் அவள் கணவன் விவேக்கை ஆனந்தனும் அவர்களுடன்
அழைத்து வந்து விட்டார்கள்.

தனலட்சுமி வீட்டில் இரு குடும்பங்களுடன் சரண்யாவும் இணைந்து கொள்ள அர்ச்சனா, தனலட்சுமி, கண்ணாத்தாள், ரஞ்சிதா, சரண்யா என்று ஐந்து பேரும் பேசி கொண்டு சமைத்து முடிக்க அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர்.

சரண்யாவும் விவேக்கும் சாப்பாடு முடிந்த பின்னர் இரு வீட்டு பெரியவர்கள் ஆசீர்வாதம் செய்து தந்த துணியையும் பரிசையும் பெற்று கொண்டு எல்லோரிடமும் ஆசீர்வாதம் பெற்று மிகுந்த மகிழ்ச்சியுடன் திரும்பினார்கள்.

அன்று மாலை அனைவரும் கிளம்பி ஆனந்தன் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள்.

அன்று இரவு ஆகாஷ்-அர்ச்சனா, தனசேகர்-தனலட்சுமி, சரண்யா மற்றும் விவேக் மகிழ்ச்சியாக
தீபாவளியை பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்.

Message…
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
கண்ணாத்தாளும் ஆனந்தனும் எல்லோரின் கிண்டல் மற்றும் கேலிகளுக்கு நடுவில் தங்கள் தீபாவளியை பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்ந்தார்கள்.

தோழிகள் காவியா, ஜெனிபர் ஒன்றாக பட்டாசு வெடித்து மகிழ்ந்தார்கள். சரண்யாவோ அவர்களுடன் சேர்ந்து கொண்டு கொண்டாடி மகிழ்ந்தாள்.

இந்த தீபாவளி பல பேரின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை உண்டாக்கிய தீபாவளியாக அமைந்தது.

மாடசாமியும் கமலமும் தன் மகள்கள் தனலட்சுமி வீட்டிலும் கண்ணாத்தாள் வீட்டில் தங்கி சாப்பிட்டு விட்டு ஊருக்கு கிளம்பி சென்றார்கள்.

மரகதம், மாணிக்கம், விஜயா மகள் அர்ச்சனா வீட்டிலும், ஆனந்தன் வீட்டிலும் தங்கி சாப்பிட்டு விட்டு ஊருக்கு கிளம்பி சென்றார்கள்.

கண்ணாத்தாளின் சொந்தங்கள் ஊருக்கு சென்ற பின்னர் "அண்ணி!" என்ற அழைத்தபடி சரண்யா வர அவளுடன் விவேக் வந்தான்.

"வாங்க அக்கா!" என்றவள் அழைக்க அருகில் வந்து அமர்ந்த சரண்யாவை பார்த்து,
"அக்கா... நீங்கள் இப்படி என்னை கூப்பிட்டபடி வந்து எவ்வளவு நாளாச்சு தெரியுமா?" என்றாள் கண்ணாத்தாள்.

"அதுவா அண்ணி... உங்கள் சொந்தங்கள் எல்லாம் வந்து இருந்ததால் கொஞ்சம் அடக்கி வாசித்தேன். இப்பொழுதுதான் அவர்கள் இல்லையே? இனி என் அண்ணியை ஆசை தீர சந்தோஷமாக கூப்பிட்டு கொள்வேன்" என்றாள் சரண்யா.

"நானும் என் அக்காவை ஆசை தீர கட்டி கொள்வேன்" என்று கண்ணாத்தாள் அவளை அணைத்து கொள்ள
"நானும் என் அண்ணிக்கு முத்தம் தருவேன்" என்று முத்தம் தந்தாள் சரண்யா.

"ஆனந்த்! இந்த தீபாவளியை நாங்கள் வாழ்வில் மறக்க மாட்டோம். நீ, உன் மனைவி, உங்கள் சொந்தங்கள் காட்டிய அன்பு இருக்கிறதே அதை எங்களால் வார்த்தைகளால் சொல்ல முடியாது. அன்று இரவு நாங்கள் சந்தோஷத்தில் தூங்கவே இல்லை. நீயும் உன் மனைவியும் சரண்யாவிடம் காட்டும் அன்புக்கு இணையே இல்லை. ஒவ்வோரு இரவும் அவள் தூங்கும் பொழுது அவள் முகத்தில் காணும் மகிழ்ச்சி அதை எனக்கு சொல்கிறது." என்றான் விவேக்.

விவேக் பேசி கொண்டிருக்கும் பொழுது சரண்யா அதை ஆமோதித்தபடி இருந்தாள்.

"விவேக்! நல்ல வேளையாக நீ கடைசியாக நன்றி எங்களுக்கு சொல்லவில்லை. நீ மட்டும் அதை சொல்லியிருந்தால் நானும் கண்ணாவும் பெரிய சண்டை போட்டிருப்போம்" என்றான் ஆனந்தன்

"அதுவும் இந்த அக்கா சொல்லி இருந்தால் அவ்வளவுதான்." என்றாள் கண்ணாத்தாள்.

"கண்டிப்பாக சொல்லியிருக்க மாட்டேன் ஏனென்றால் சரண்யா வரும்பொழுதே சொல்லிதான் அழைத்து வந்தாள்." என்றான் விவேக்.

"இந்த அண்ணிக்கு அதற்கு பதிலாக ஆசை தீர முத்தம் கொடுப்பேன்" என்று சரண்யா முத்தம் தர "நானும்தான்" என்று கண்ணாத்தாள் பதில் முத்தம் தந்தாள்.

"நல்ல அண்ணி! நல்ல நாத்நனார்!" என்று நண்பர்கள் சொல்ல "ரெண்டு பேரும் கண்ணு வைக்காதீங்க" என்று சரண்யா சொல்ல அதை கண்ணாத்தாள் ஆமோதித்தாள்.

அர்ச்சனா மற்றும் தனலட்சுமி தங்கள் கணவர்களுடன் வந்து தங்களின் சந்தோஷத்தை வெளிபடுத்தினார்கள்.

"கண்ணா! நீயும் மாமாவும் இல்லை என்றால் இதெல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை. நாங்கள் கடைசி வரை நம் குடும்பத்துடன் சேர்ந்திருக்கவே முடியாது" என்று கூறினாள் தனலட்சுமி.

"ஆமா அண்ணா... தனா சரியாக சொன்னாள். நாங்கள் இப்பொழுது அனுபவிக்கிற சந்தோஷத்திற்கு காரணம் நீங்களும் அண்ணியும்தான்." என்றாள் அர்ச்சனா.

"நாங்கள் என்னதான் வசதியான வாழ்க்கையை தந்தாலும் அவர்களின் குடும்பத்தை பிரிந்து நின்றதால் அவர்களுக்கு ஏற்பட்ட மனகவலையை தீர்க்க முடியாமல் தவித்து வந்தோம். அந்த கவலை உங்களால்தான் தீர்ந்தது" என்றான் ஆகாஷ்.

"தனா இப்பொழுதுதான் எந்த கவலையும் இல்லாமல் சந்தோஷமாக தூங்குகிறாள். " என்றான் தனசேகர்.

"அர்ச்சனாவும்தான்" என்று ஆகாஷ் சொல்ல அவளும் ஆமோதித்தாள்.

"அர்ச்சனா... தனா... உங்கள் மீது நான் கூட கொஞ்சம் கோபமாக இருந்தேன். உங்களை சந்தித்து விட்டு சென்ற பொழுதுதான் கொஞ்சம் மனம் மாறியிருந்தது. கண்ணாவிடம் நான் பேசிய பொழுது அவள்தான் எனக்கு பக்குவமாக எடுத்து சொல்லி நாம் எல்லாம் சேர வேண்டும் . நீங்கள் அதற்காக பேச வேண்டும் என்று ஆலோசனை தந்தாள். நான் பேசினேன். நம் வீட்டு பெரியவர்கள் ஏற்று கொண்டு சம்மதித்தார்கள். தீபாவளிக்கு உங்களுக்கு டிரஸ் எடுத்தது, உங்களை தீபாவளிக்கு அழைக்க சொல்லி என்னை தூண்டியது எல்லாம் கண்ணாதான்" என்று ஆனந்தன் சொல்லி விட்டு பார்த்தான்.

"நான் சொன்னாலும் அதை ஏற்று செய்தது எல்லாம் அவர்தான் அதனால்தான் நாம் இணைய முடிந்தது." என்றாள் கண்ணாத்தாள்.

"போனது எல்லாம் போகட்டும். இனி நாம் எல்லோரும் இந்த மகிழ்ச்சியுடன் ஒற்றுமையாக வாழலாம்" என்று ஆனந்தன் சொல்ல அனைவரும் ஏற்று ஆமோதித்தனர்.

கண்ணாத்தாளுடன் அர்ச்சனா, தனலட்சுமி இணைந்து சமைக்க அனைவரும் சாப்பிட்ட பின் அர்ச்சனா, தனலட்சுமி தங்கள் கணவர்களுடன் மகிழ்ச்சியாக வீடு திரும்பினார்கள். Write your reply...
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top