• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Enathu Punnagaiyin Mugavari - 24

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அத்தியாயம் – 24

மனோ, தென்றல் இருவரும் கிளம்பிச் சென்றபிறகு, “தாத்தா இந்த தென்றல் லூசுத்தனமாக ஏதாவது செய்து வைப்பாள்.. அவளுக்கு எதுவும் தெரியாது.. நம்மிடம் பொய் கூட சொல்லி இருப்பாள்..” என்று நிவாஸ் யோசனையோடு சொல்ல, அனைவரும் அவனையே பார்த்தனர்..

“ஆமா தாத்தா அவளை நம்பவே முடியாது.. அவள் ஒரு முடிவு எடுத்துவிட்டால் அதிலிருந்து சீக்கிரம் மாறவே மாட்டா.. நம்மை திசை திருப்ப கூட அவள் அப்படி சொல்லிருப்பா..” என்று பிரதாப் கூறினான்..

அவர்கள் இருவரும் சொல்வதைக் கேட்ட அனு, “இவங்க சொல்வதும் சரிதான் தாத்தா.. அவளை நம்பவே முடியாது..” என்று சொல்லவே அவர் கொஞ்சம் யோசிக்க ரிஷி வேறு சொன்னான்..

“இல்ல தாத்தா தென்றல் அங்கேதான் போயிருப்பாள், மனோதான் தேடி போயிருக்கான் இல்ல அவன் அவளைப் பார்த்தும் கண்டிப்பாக நமக்கு போன் பண்ணுவான்.. அதுவரை வெய்ட் பண்ணலாம்..” என்று சொல்ல, “எனக்கும் ரிஷி சொல்றதுதான் சரின்னு படுது..” என்று கூறினாள் சாரு..

அவர் கொஞ்சநேரம் யோசித்துவிட்டு, “இன்னைக்கு நைட் வரை பார்க்கலாம்.. எந்த போனும் வரலை என்றால் காலையில் நாம் எல்லோரும் கோயம்புத்தூர் போலாம்..” என்று சொல்ல,

“சரிங்க தாத்தா..” என்று அனைவரும் ஒப்புக்கொள்ள இரவு வரையில் இவர்களின் போனுக்காக காத்திருந்தனர்.. இரவு பதினொன்று ஆனபிறகும் கூட எந்த போனும் வரவே இல்லை என்றது காலையில் ஊருக்கு செல்வது என்று முடிவானது...

காலைப் பொழுது அழகாக விடிய கிழக்கே தனது பயணத்தைத் தொடங்கினான் கதிரவன். பறவை இரை தேடி வானில் பறந்து சென்றது.. அந்த காலைபொழுதில் தென்றலின் செல்போன் அடிக்க அப்பொழுதுதான் கண்விழித்த தென்றல் முதலில் பார்த்து மனோவின் முகத்தைத்தான்..

மடியில் தலைவைத்து தனது இடையோடு கைகோர்த்துத் தூங்கும் அன்பு கணவனின் முகத்தைப் பார்த்தாள். தாயின் மடியில் தூங்கும் குழந்தை போல அசையாமல் தூங்கும் மனோவைப் பார்த்து அவளின் முகத்தில் புன்னகை அழகாக மலர அவனின் நெற்றியில் இதழ்பதித்தது நிமிர்ந்தாள்..

பிறகு அவனின் தூக்கம் கலையாதவாறு அவனின் தலையை தலையணைக்கு மாற்றிய தென்றல் அந்த இடத்தை விட்டு நகர நினைக்க அவளின் கால்கள் அசைய மறுத்தது.. இரவு முழுக்க மனோ அவளின் மடியில் படுத்திருந்தால் காலுக்கு ரத்தஓட்டம் செல்லாமல் அவளின் கால்கள் இரண்டும் மரத்து போக சிறிது நேரம் கால்களை அசைத்தவள் மெல்ல எழுந்து சென்றாள்.. பிறகு குளியலறைக்குள் புகுந்தவள் குளித்து முடித்துவிட்டு வந்து மணியைப் பார்த்தாள்.. அது ஏழு என்று காட்டியதும் கண்ணாடியின் முன்னே நின்று தலையை வாரி பின்னலிட்டு நெற்றிக்கு ஒரு சின்ன போட்டு வைத்துவிட்டு சமையலறைக்குள் புகுந்தாள்..

அவள் காபி வைத்ததும், ‘மனோவை எழுப்பலாம்’ என்று நினைக்கும் பொழுது மீண்டும் அவளின் செல் அடிக்க அதை எடுத்து, “ஹலோ தாத்தா.. குட் மார்னிங்..” என்று அவள் உற்சாகத்தோடு சொல்ல, “மனோ எங்கே தென்றல்.. நீங்க இருவரும் எங்கே இருக்கீங்க..?! நீ வீட்டில் தான் இருக்கிறாயா..?” என்று வேகமாகக் கேள்வியை அடுக்கினார்..

அப்பொழுதுதான் அவருக்கு அழைத்து தகவல் சொல்லவில்லை என்ற நினைவு வர நாக்கைக் கடித்த தென்றல், “சாரி தாத்தா.. நான் நேராக வீட்டுக்குத்தான் வந்தேன்.. உங்களுக்கு கூப்பிடவே மறந்துவிட்டேன்.. ஸாரி ஸாரி..” என்று கூறினாள்..

“சரிம்மா நீ வீட்டில் இருக்க மனோ எங்கே..? அவனும் இன்னும் ஒரு போனும் பண்ணல.. எனக்கு ஒரே பதட்டமாக இருக்கு..” என்று சொல்ல அவரின் பதட்டம் கண்டு சிரித்த தென்றல், “தாத்தா பாவா நல்ல தூங்கிட்டு இருக்காங்க.. நான் வந்ததும் அவரும் வந்துவிட்டார்..” என்று கூறினாள்..

அவள் சொன்னதைக் கேட்ட ராஜசேகர் பெருமூச்சுடன் பேசும் முன்னே, “தாத்தா நான் பேசுகிறேன்..” என்றுஅவரிடமிருந்துப் போனை வாங்கிய அனு, “உனக்கு எல்லாம் அறிவே இல்லையா தென்றல்..?” என்று கேட்டதும், “எனக்கு அது எல்லாம் இருக்கு என்று உன்னிடம் எப்போ சொன்னேன் அனு..?” என்று கிண்டலாகக் கேட்டாள் தென்றல்..

அவளின் கேள்வியில் அனுவிற்கு அப்படியே பத்திக் கொண்டு வந்தது.. அவள் பல்லைக் கடிப்பதைப் பார்த்து அவளிடமிருந்து செல்லை வாங்கிய சாரு, “அடியே புயல் உனக்கு எதில் விளையாடனும் என்று தெரியாதா..?! இங்கே எல்லோரும் ரொம்ப பதட்டத்துடன் இருக்கோம்.. இருவரும் என்ன பண்றாங்களோ என்று.. கடைசியில் எங்களை எல்லாம் முட்டாள் பண்ணியது நீங்கள் இருவரும்தான்.. இருடி உன்னை நேரில் வந்து பேசிக் கொள்கிறேன்..” என்று அவள் சரம்வாரியாக திட்ட சத்தமில்லாமல் சிரித்த தென்றல் அவளின் அழைப்பை துண்டித்தாள்..

அவள் வைத்துவிட்டால் என்றதும் அனுவை நிமிர்ந்து பார்த்த சாரு, “நீ எப்படி அனு அவளை சமாளிக்கிற..? இந்த மனோ போன ஜென்மத்தில் ரொம்ப பாவம் பண்ணிட்டான் போலவே..” என்று புலம்பினாள்.. அவள் புலம்புவதைப் பார்த்த ரிஷி, “சாரு அந்த டயலாக்கை நான் சொல்லணும்..” என்று சிரிக்காமல் சொல்ல அனுவுக்கும், தாத்தாவுக்கும் சிரிப்பு வந்தது..

இருவரும் சிரிப்பதைப் பார்த்த சாரு, “நீங்க பாவம் செய்தவரா..? உங்களுக்கு எல்லாம் சரியான ராச்சசி வந்து வாச்சிருக்கணும்..” என்று சொல்ல, “அதுதான் நடந்துவிட்டதே இனி மாத்தவா முடியும்..” என்று சாருவை வம்பிற்கு இழுத்தான் ரிஷி.. அவன் சொன்னதைக் கேட்ட சாரு அவனை அடிக்க தூரத்த எழுந்து ஓடியேவிட்டான்.. அவர்கள் அனைவரும் ஊட்டியில் இருந்து இரண்டு காரில் கிளம்பினர்..

அவர்களிடம் பேசிவிட்டு போனை வைத்த தென்றல் படுக்கை அறையின் உள்ளே நுழைய மனோ அசந்து தூங்குவதைப் பார்த்துவிட்டு அவனை எழுப்பாமல் மீண்டும் வந்து வேலையை தொடர்ந்தாள்.. எல்லா வேலையையும் முடித்த தென்றல் சமையலறையை ஒதுக்கி வைத்தாள்..

எங்கிருந்தோ கேட்ட ஒரு குயிலின் சத்தத்தில் கண்விழித்தான் மனோ. அவன் விழித்தும் அவனின் பார்வை தென்றலைத் தேட அவள் அந்த அறையில் இல்லை என்றதும் எழுந்த மனோ அந்த அறையைவிட்டு வெளியே வந்து பார்க்க சமையலறையில் இருந்த தென்றலைப் பார்த்தான்..

உடனே சமையலறைக்குள் நுழைந்த மனோ அங்கிருந்த சமையல் மேடையில் ஏறியமர்ந்து, “குட் மார்னிங் புயல்..” என்று சொல்ல, அப்பொழுதுதான் அவனை கவனித்த தென்றல், “என்ன பாவா ரொம்ப சீக்கிரம் எழுந்துட்டீங்க..?” என்று கேட்டாள்.. அவளின் குரலில் இருந்த கேலியை கவனித்த மனோ,

“நான் நேரத்திலேயே எழுந்துவிடுவேன் என்று உனக்கு தெரியாத புயல்..?!” என்று கேட்டதும், “ஓ நல்ல தெரியுமே..” என்று கூறிய தென்றல், அவனிக்கு காபி போட்டுக் கொடுக்க, “இல்ல பிரஷ் பண்ணிட்டு வந்து குடிக்கிறேன்..” என்று கூறினான்.

“இனி எப்போ குடிக்கிறீங்க..?!” என்று கேட்டவளின் கேள்வியில் மணியைப் பார்க்க கடிகாரமுள் ஒன்றில் நிற்க, “என்னது மணி ஒன்னா..?!” என்று அதிர்ச்சியான மனோ, “நான்தான் நல்ல தூங்கிட்டேன்.. நீயாவது என்னை எழுப்பிவிடலாம் இல்ல.. இன்னைக்கு முக்கியமான மீட்டிங் எல்லாம் இருக்கு..” என்று தென்றலை சரம்வாரியாகத் திட்டினான். சமையல் மேடையில் இருந்து இறங்கிய மனோ படுக்கை அறைக்கு செல்ல,

அவன் திட்டுவதை எல்லாம் சிரிப்புடன் கேட்டுக் கொண்டிருந்த தென்றல் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு மனோவைப் பார்த்து, “பாவா உங்களுக்கு காபி வேண்டாமா..?” என்று கேட்டதும், அறைக்குள் சென்ற மனோ திரும்ப வந்து, “அதை நீயே குடி.. உன்னை வந்து பார்த்துகிறேன்..” என்றவன் கோபத்தோடு எழுந்து செல்ல, “ஏன் இப்போ பார்த்த என்னவாம்..” என்று அவனை வம்பிற்கு இழுக்க, “தென்றல் எனக்கு கோபம் வந்தால் என்ன நடக்குமே என்று உனக்கே தெரியும்..” என்று அவன் அவளை விரல் நீட்டி எச்சரித்தான்..

“பாவா உங்களோட அந்த அரைக்குத்தான் உங்களுக்கு ஆயுள்தண்டனை கொடுத்திருக்கிறேன்..” என்று கூறிய தென்றல் அவனைப் பார்த்து கண்ணடித்து சிரித்தாள்.. அவளின் சிரித்த முகத்தைப் பார்த்த மனோவின் முகத்திலும் புன்னகை அரும்பியது..

“உனக்கு கொழுப்பு அதிகம்டி..” என்று சொல்ல, “நீங்க சமைத்துப் போட்டு ஊட்டிவேற விட்டால் கொழுப்பு ஏறாமல் என்ன பண்ணும்..?” என்று அவள் சிரிப்புடன் கேட்டதும், “உன்னோட பேசிட்டு இருக்கேன் பாரு என்னை சொல்லணும்.. அப்படியே வர கோபத்துக்கு..” என்று அவன் பல்லைக் கடிக்க, “நிஜமா கோபம் வருதா பாவா..” என்று அவனைப் பார்த்து குறும்பாகக் கேட்டாள்..
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அவளின் முகத்தைப் பார்த்த மனோ மீண்டும் சமையலறையை நோக்கிவர, “பாவா உங்களுக்கு டைம் ஆகிறது..” என்று தென்றல் வேகமாக சொல்ல, “இல்ல கோபம் வருதா என்று கேட்ட இல்ல.. அதுதான் காட்டிட்டு போலாம் என்று வந்தேன்..” என்று அவளை நெருங்கிய மனோவைப் பயத்துடன் பார்த்தாள் தென்றல்..

அவளின் அருகில் நெருங்கிய மனோ அவளின் நெற்றியில் இதழ் பாதித்துவிட்டு அவளின் முகத்தைப் பார்த்து, “என்னோட கோபம் போன இடம் தெரியல போதுமா..” என்று சிரிப்புடன் கேட்டதும் அவனின் முகத்தைப் பார்த்த தென்றல், “காபி..” என்று அவனின் கையில் கொடுத்தாள்..

அதை வாங்கிப் பருகியவன் மீண்டும் மணியைப் பார்க்க அந்த கடிகாரமுள் கொஞ்சம் கூட நகரவே இல்லை.. அதைப் பார்த்த மனோ, “தென்றல் என்ன மணி ஒன்னுதான் ஆகுது.. உன்னிடம் நான் அரைமணி நேரமாக பேசிட்டு இருக்கேன்.. ஆனால் கடிகாரமுள் கொஞ்சம் கூட நகரவே இல்லை..” என்று சந்தேகமாகக் கேட்டான்..

அவனிடம் காபியைக் கொடுத்துவிட்டு பாத்திரம் கழுவிக்கொண்டிருந்த தென்றல், “அந்த கடிகாரம் ஓடாது பாவா..” என்று அசால்ட்டாகக் கூறினாள்.. அவள் சொன்னதைக் கேட்ட மனோ, “ஓ ஓடாதா..?!” என்று வடிவேலு போலவே சொல்லிவிட்டு காபியைக் குடிக்க தென்றலால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை.. அவனின் முகத்தை நிமிர்ந்துப் பார்த்த தென்றல் வாய்விட்டு சிரித்தாள்..

அப்பொழுதுதான் அவள் சிரிப்பதை உணர்ந்த மனோ மீண்டும் கடிகாரத்தைப் பார்க்க அது ஓடாத கடிக்காரம் என்று தெரிந்ததும், “உன்னோட சேட்டை கூட்டிட்டே போகுது.. எதுக்குடி என்னை அந்த அளவுக்கு கோபம் வரவச்ச..?” என்று காபி கப்பை ஜிங்கில் போட்டான்..

அவனை நிமிர்ந்துப் பார்த்த தென்றல், “நீங்க திடீரென மாறிட்ட எல்லோருக்கும் சந்தேகம் வரும் இல்ல அதுதான் சின்ன டேஸ்ட்.. உங்களிடம் திட்டு வாங்காமல் இருந்தால் அன்னைக்கு பொழுதே போகாது பாவா.. எதையோ இழந்தது போலவே இருக்கு..” என்று சிரிப்புடன் கூறினாள்..

“மண்ணாங்கட்டி.. இப்போ என்னிடம் திட்டுவாங்குவது உனக்கு ரொம்ப முக்கியமா..?!” என்று கேட்டதும் தென்றல் ஆமாம் என்று தலையை ஆட்ட, அவளின் கன்னத்தை பிடித்து கிள்ளிய மனோ, “தேங்க்ஸ் புயல்..” என்று சொல்ல, “ஐயோ என்னோட கன்னம் போச்சு..” என்று இடது கன்னத்தை பிடித்துக் கொண்டு கூறினாள்..

“வலிக்கும் செல்லம்.. வலிக்கணும் என்றுதானே கிள்ளியதே..” என்று அவன் சிரிப்புடன் சொல்ல அவனின் முகத்தைப் பார்த்த தென்றல், “லவ் யூ பாவா..” என்று சொல்ல, “லவ் செல்லம்..” என்று கூறிய மனோ குளிக்க சென்றான்..

அவன் குளித்துவிட்டு தயாராகி அறையைவிட்டு வெளியே வரவும் அவனின் போன் அடித்தது.. அதன் திரையில் சாரு என்று வர அழைப்பை ஏற்ற மனோ, “சொல்லு சாரு..” என்று கூறியதும், “டேய் ரெண்டு பேரும் எங்கே இருக்கீங்க..?” என்று கோபமாகக் கேட்டாள்..

“வீட்டில் தான் இருக்கிறோம்..” என்று கூறியதும், “நாங்களும் வீட்டில் தான் இருக்கிறோம்.. இங்கே வீடே பூட்டி இருக்கு..” என்று சொல்ல அப்பொழுது அவனின் அருகில் வந்த தென்றல் அவனிடம் இருந்து போனை வாங்கி,

“நாங்க இங்கே பிளாட்டில் இருக்கோம்..” என்று சொல்ல, “அடியே உனக்கு இருக்கு..” என்று சொல்ல, “வாங்க வாங்க நான் வெய்ட் பண்றேன்..” என்று சிரிப்புடன் கூறிய தென்றல் அழைப்பை துண்டித்துவிட்டு மனோவின் கையில் போனை கொடுத்தாள்..

அவளிடமிருந்து போனை வாங்கிய மனோ, “என்ன திட்டுகிறாளா..?” என்று கேட்டதும், “ம்ம் அவங்களுக்கு என்ன வேலை..?” என்று கூறியவள் சமையலறையை நோக்கிச் சென்றாள்..

அவளைப் பார்த்தபடியே நின்றான் மனோ.. காலிங்பெல் அடிக்க தென்றலைப் பார்த்த மனோ அவள் சமைத்த உணவுகளை டைனிங் டேபிளில் எடுத்து வைப்பது பார்த்துக் கொண்டே சென்றவன் கதவை திறக்கும் வரையில் காலிங்பெல் அடிக்கவும் மனோவிற்கு கோபம் வந்தது..

அவனின் கோபம் கண்டு சிரித்த தென்றலைப் பார்த்து, “தென்றல் சிரிக்காதே..” என்று சொல்ல, “முதலில் கதவை திறங்க.. இல்ல காலிங்பெல் அடித்துக் கொண்டே இருக்கும்..” என்று தென்றல் சிரிப்புடன் சொல்ல கதவைத் திறக்க சென்றான் மனோ..

“யாருடா அது..?” என்று கோபத்துடன் கதவைத் திறந்த மனோ அங்கே நின்ற ராஜசேகரைப் பார்த்து, “தாத்தா..” என்று கூறியவன், “உள்ளே வாங்க தாத்தா..” என்று அழைத்து வீட்டின் உள்ளே செல்ல வழிவிட்டதும் முதலில் உள்ளே நுழைந்த நிவாஸ்,

“மாமா அக்கா பின்னாடியே கிளம்பி வந்தீங்க இல்ல.. அக்காவைப் பார்த்தும் எங்களுக்கு போன் பண்ணி சொல்ல தோணுச்சா உங்களுக்கு..?” என்று கேட்டான் நிவாஸ்.. “சாரிடா எனக்கு உங்க ஞாபகமே வரல..” என்று கூறினான் மனோ.. “ஞாபகம் வாராதே எங்களை எல்லாம் ஞாபகமே வாராதே..” என்று உள்ளே நுழைந்தான்..

அவனின் பின்னோடு அனைவரும் உள்ளே நுழைய, “வாங்க..” என்று அனைவரையும் பொதுவாக அழைத்த தென்றலைப் பார்த்து முறைத்தாள் சாரு.. அவள் முறைப்பதைக் கவனித்த மனோ, “எதுக்கு சாரு அவளை இந்த முறை முறைக்கிற..?” என்று கேட்டான்..

“டேய் நீங்க இருவரும் நல்ல ஜாடிக்கு எத்த மூடிடா.. உங்களை நம்பி ஊரில் இருந்து கிளம்பி வந்தால் நடுத்தெருவில் தான் நிக்கணும்..” என்று அவள் கோபமாக சொல்ல, “அக்கா ரொம்ப கோபமாக வந்திருக்கீங்க..” என்று கேட்டதும்,

“உனக்கு இவன் புயல் என்று பெயர் வச்சதில் தப்பே இல்லடா..” என்று தென்றலைக் கட்டிக் கொண்ட சாருவைப் பார்த்த ரிஷி, “டேய் இங்கே வந்தும் ஒரு போன் பண்ணிருக்கலாம் இல்ல எங்க நினைவே உனக்கு வந்திருக்காதே..” என்று கேட்டதும் மெல்ல சிரித்தான் மனோ..

அவன் சிரிப்பதும் ஆச்சரியமாகப் பார்த்த ரிஷி, “டேய் உனக்கு சிரிப்பு கூட வருமா..?” என்று கேட்டதும், எல்லோரும் ஆளுக்கு ஒரு சோபாவில் அமர, ரிஷி சொன்னதைக் கேட்டு “மாமா..” என்று கோபத்தில் கத்தினான் சுனில்.. அவன் கத்துவதைப் பார்த்த மனோ, “நீ எதுக்குடா இப்படி கத்தறா..?!” என்று கேட்டான்..

“அவன் கத்தாமல் என்ன செய்வான்..? அவனோட மாமாவை இல்ல நீங்க கேட்டது..?” என்று சிரிப்புடன் கூறினாள் சாரு.. அப்பொழுதுதான் மற்றவர்கள் எதுவும் பேசாமல் இருப்பதைக் கண்டு, “சுனில், நிவாஸ், பிரதாப், ராகுல், ஷிவானி..” என்று அழைக்க ஐவரும் அவனின் முகத்தை நிமிர்ந்துப் பார்த்தனர்..

“என்னடா இப்படி பார்க்கிறீங்க..? மாமாவோட பிறந்தநாள் கிப்ட் எங்கே..?” என்று அவன் புன்னகையோடு கேட்டதும், அவனின் மாற்றத்தை தாத்தா, சாரு, ரிஷி, அனு நால்வரும் உணர்ந்து கொண்டனர்..

“உன்னோட பொண்டாட்டி என்னடா கிப்ட் கொடுத்தா..?” என்று சிரிப்புடன் கேட்டாள் சாரு.. அவளின் குரலில் இருந்த குறும்பைக் கவனித்த மனோ, “எனக்கு தாய்மடி கொடுத்தாள்..” என்று சொல்ல அவனின் குரலில் இருந்த சந்தோசமும் அவன் கூறிய வார்த்தையில் இருந்த நிறைவையும் கண்ட ராஜசேகருக்கு தன்னை மீறி கண்கள் இரண்டும் கலங்கியது..

சாரு, ரிஷி இருவரும் இந்த நாளுக்காக காத்திருந்தது போல, “ரொம்ப தேங்க்ஸ் தென்றல்.. என்னோட தோழனை எனக்கு திரும்பத் தந்தற்க்கு..” என்று சொல்ல, “இது எல்லாம் ஒரு விசயமா அக்கா..” என்று கேட்ட தென்றலைப் பார்த்த அனு, “உன்னால் முடியாது என்று இந்த உலகத்தில் ஏதாவது இருக்க..?! ரொம்ப சந்தோசமாக இருக்கு தென்றல்..” என்று கூறினாள்..

அவர்கள் பேசுவதைப் பார்த்த ஐவரும், “கொஞ்ச நேரம் பேசாதீங்க..” என்று சொல்ல, “சரிங்க தம்பி..” என்று சிரிப்புடன் கூறினாள் சாரு.. மனோவின் அருகில் வந்த நிவாஸ், “மாமா எங்க கிப்ட் உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா என்று தெரியல.. ஆனால் உங்களுக்காக கொண்டு வந்திருக்கோம்..” என்று கூறியவர்கள் அவனின் கையில் போட்டோ பிரேமை கொடுத்தனர்..

அதில் மனோவின் முகம் வெகு அழகாக அதே அளவு அவனின் புன்னகை முகத்தை தத்துரூபமாக வரைந்திருந்தனர்.. அவனின் புன்னகை முகம் இவ்வளவு அழகாக இருக்குமா..? என்று மனோவையே யோசிக்க வைத்தது அவர்கள் வரைந்த ஓவியங்கள்..

அதில் அவனை மிகவும் கவர்ந்தது.. திருமணத்தன்று அவன் தென்றலின் நெற்றில் குங்குமம் வைத்து அவளின் முகத்தை காதலோடு பார்க்க, அவளின் முகத்தில் மலர்ந்த புன்னகையோடு அவள் தன்னை காதலோடு பார்த்த பார்வையை அப்படியே வரைந்திருந்தனர்..

இப்படி பல பல வரைபடங்கள் இருக்க, அதில் எல்லாம் தென்றல் மனோ இருவரும் இடம்பிடித்திருக்க அதைப் பார்த்த மனோ, “டேய் இது நீங்களே வரைந்ததா..?” என்று கேட்டதும், “ஆமா மாமா..” என்றனர் ஐவரும் கோரஸாக!

“எனக்கு உங்களோட கைவண்ணம் ரொம்ப பிடிச்சிருக்கு..” என்று கூறிய மனோவை கட்டியணைத்து முத்தமிட்டனர் ஐவரும்.. அவர்களிடம் முத்தம் பெற்ற மனோ, “என்னோட தென்றல் மட்டும் எனக்கு பொக்கிஷம் இல்லடா.. நீங்களும் எனக்கு பொக்கிஷம் தான்..” என்று கூறியவன், “பிரிண்ட்ஸ்..” என்று சொல்ல, “ஹைய்யா..” என்று கத்தியவர்கள் குரலில் இருந்த மகிழ்ச்சியைக் கண்டு அனைவரின் முகத்திலும் புன்னகை மலர்ந்தது..

அதன்பிறகு ஆட்டம், பாட்டம், ஆர்ப்பாட்டம் என்று அழகாக நகர்ந்தது நாட்கள்...!
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
Sooper kaa.. naa kooda eppadi 1 mani aagum nu yoochichen... Sema sema
உனக்கும் குழப்பமா..?! என்ன சிரிப்பே வரல போல..?!
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top