• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Enathu Punnagaiyin Mugavari - 41 (Final - 1)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அத்தியாயம் – 41

அடுத்த ஒரு மாதத்தில் மனோ தென்றலை விட்டு நகரவே நேரம் இல்லாமல் போனது.. இரட்டை குழந்தைகள் என்பதால் ஒருவர் தூங்கினால் ஒருவர் விழித்திருக்க வேண்டிய நிலைதான்.. எங்கும் அமைதி எதிலும் அமைதி என்ற வீடு இப்பொழுது குழந்தைகள் அழுகுரல் இன்னிசையாக இசைத்தது..

ஒரு மாதம் சென்ற பிறகு மனோவின் குழந்தைகளுக்கு பெயர் சூட்டும் விழா ஏற்பாடு செய்யப்பட அதற்கு ஏற்றது போல வேலைகளை செய்துக்கொண்டு இருந்தனர்.. பெயர் சூட்டும் விழாவுக்குத் தயாராகிக் கொண்டிருந்த தென்றலுக்கு சிரிப்பை அடக்கவே முடியவில்லை..

அவள் கண்ணாடி முன்னாடி நின்று சிரிப்பதைப் பார்த்த மனோ, “என்ன புயல் தனியாக நின்று சிரிக்கிறது..?” என்று கேட்டுக் கொண்டே அறைக்குள் நுழைந்தான்.. அவனைப் பார்த்தும் தென்றலுக்கு சிரிப்பை அதிகமே ஆனது.. அவளின் சிரிப்பின் ரகசியம் அறிய நினைத்த மனோ குழந்தைகளைப் பார்க்க அவர்கள் இருவரும் சமத்தாக தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தனர்..

உடனே மனைவியின் அருகே சென்ற மனோ, “ஏய் என்னடி ரொம்ப சிரிக்கிற..?” என்று கேட்டுக் கொண்டே அவளின் இடையோடு கைகொடுத்து அணைத்துக் கொள்ள அவனை கண்ணாடியின் வழியாகப் பார்த்தாள் தென்றல்..

பிறகு “பாவா உங்களை முதல் நாள் பார்த்ததற்கும் இப்பொழுது பார்ப்பதற்கும் எத்தனை மாற்றங்கள்.. அதுவும் குழந்தைகளை நீங்கள் சமாதானம் செய்யும் பொழுது பார்த்தால் இது என்னோட இரும்பு மனிதனா என்ற சந்தேகம் கூட வருது..” என்று அவள் சொல்ல அவளை அணைத்து நின்ற மனோவின் கண்கள் காதல் மட்டும் இருந்தது..

“எல்லாம் இந்த வாலு பொண்ணு பண்ணிய வேலைதான்..” என்று சொல்லி அவளை முத்தமிட வர அவனின் செல்ல மகன் சிணுங்க ஆரம்பித்தான்.. அவன் சிணுங்களைப் பார்த்து தென்றல் சிரிக்க ஆரம்பிக்க, “டேய் அப்பா ரொம்ப பாவம்டா.. என்னோட பொண்டாட்டிக்கு ஒரு முத்தம் கொடுக்க விடமாட்டிங்கற..” என்று சொல்லிவிட்டு மகனை சென்று தூக்கினான்..

மனோ தூக்கியதும் சிணுங்கள் நின்று அவன் சிரிக்க ஆரம்பிக்க அந்த புன்னகையில் மனதைத் தொலைத்த மனோ, “ஐயோ புயல் மாதிரியே சிரிக்கிறீங்க செல்லம்..” என்று அவனின் நெற்றியில் முத்தமிட்டு கொஞ்சியபடியே மகளைப் பார்க்க அவள் சிணுங்க தயாராக இருந்தாள்..

அவளைப் பார்த்த மனோ, “தம்பியை தூக்கியதும் அக்காவுக்கும் பொறாமை வந்துவிட்டதா..?” என்று செல்லமாக குழந்தையிடம் பேசியபடியே மகனை மகளின் அருகே படுக்க வைத்துவிட்டு மகளைத் தூக்கினான்.. “என்னோட செல்லத்துக்கு தூக்கம் கலஞ்சு போச்சா..?! தூக்கம் எப்படி கலஞ்சிது..?” என்று கேட்டுக் கொண்டே அவளுடன் பேச அவளுக்கு என்ன புரிந்ததோ தெரியவில்லை.. ஆனால் அப்பாவைப் பார்த்து பொக்கை வாயைத் திறந்து சிரிக்க ஆரம்பித்தாள்..

மனோ குழந்தைகளுடன் பேசுவதைப் பார்த்த தென்றல் அவனின் அருகில் வந்து அவனின் தோளோடு சாய்ந்துக்கொண்டு, “பாவா நான் ஏன் குழந்தையாகவே இருந்திருக்க கூடாது என்று இப்பொழுது தோன்றுகிறது..” என்று சொல்ல அவளைப் புரியாமல் பார்த்தான் மனோ..

அவனின் பார்வையை உணர்ந்து, “குழந்தையாகவே இருந்திருந்தால் நானும் உன்னோட கையில் இப்படி தவழ்ந்து இருப்பேன் இல்ல..” என்று மகளைச் சுட்டிக்காட்டி அவள் சொல்ல அவளின் நெற்றியில் முட்டிய மனோ,

“என்னோட பொண்ணு கூட போட்டி போடதே புயல்.. அவங்க எல்லாம் உனக்கு அப்புறம்தான்.. நீ வந்த பிறகுதான் இவங்க எல்லாம் வந்திருக்காங்க..” என்று குழந்தைகளைக் கூறியவன், “அதுவும் என்னோட செல்லத்துக்கு இவங்க போட்டியா..?” என்று கேட்டதும், “யார் உங்க செல்லம் எங்கள் மூவரில்..?” என்று கோபம் போல கேட்டாள்..

அவளின் கேள்வியில், ‘இவளை எப்படி சமாளிப்பது..?’ என்று கொஞ்சம் யோசித்தவன் வேண்டும் என்றே, “இதில் என்ன சந்தேகம் நம்மோட மகளும், மகனும் தான் என்னோட செல்லங்கள்..” என்று சொல்ல அவளுக்கு நிஜத்திலேயே கோபம் வந்தது..

அவளின் கோபம் கண்டு சிரித்த மனோ, “இதில் என்னடி உனக்கு சந்தேகம் மூவருமே என்னோட செல்லம் தான்.. ஆனால் இதில் அருந்தவாலு நீ மட்டும் தான்..” என்று சொல்ல அவனை முறைக்க குழந்தையைப் பத்திரமாக தொட்டிலில் போட்டவன்,

“தென்றல் என்ன விசயமாக இருந்தாலும் பேசி தீர்த்துக் கொள்ளலாம்..” என்று அவன் சொல்ல, “நான் அருந்தவாலு என்றால் நீ யாருடா..?” என்று கேட்டு அவனைத் துரத்த ஆரம்பித்தாள்.. கொஞ்சநேரம் அவளுக்கு போக்கு காட்டிய மனோ தானே வந்து வந்து அவள் கையில் அகப்பட்டுக் கொள்ள அவளுக்கு ஆசை தீர அடித்தாள்..

அவளின் அடியும் அனைத்தையும் வாங்கிய மனோ, “நானும் அருந்தவாலு தான் செல்லம்.. இரண்டு குழந்தைக்கு தகப்பன் மாதிரியா நான் இருக்கேன்.. இங்கே பாரு உன்னோட சரிக்கு சரி விளையாடிட்டு இருக்கேன்..” என்று சொல்லி அவளின் மூக்கைப் பிடித்து ஆட்ட அவனின் மீசையை முறுக்கிவிட்டு விளையாடியவள்,

“என்னோட பாவா இப்படிதான் இருக்கணும்.. அப்போதான் நம்ம குழந்தைகள் நம்மைப்போல் நல்லபடியாக வளரும்.. அவங்க வளர்ச்சி நம்மோட புன்னகையைப் பொறுத்து இருக்கு..” என்று சொல்ல அவள் சொல்லி முடித்ததும் இரண்டு கைகளாலும் அவளை வளைத்து முத்தமிடும் தருணம், “தென்றல் பாப்பாவை ரெடி பண்ணிட்டியா..?” அவர்களின் அறைக்குள் நுழைந்தாள் சாரு..

அவளின் குரல்கேட்டு முத்தமிடுவதை நிறுத்திய மனோ, “ஒரு முத்தம் கொடுக்க எத்தனை தடங்கல்டா சாமி..” என்று அவன் சலித்துக் கொள்ள வாய்விட்டு சிரித்தாள் தென்றல்..

அவன் சொன்னதைக் கேட்ட சாரு, “வரவர உங்கள் இருவருக்கும் வாலுத்தனம் கூடிப்போச்சு.. இந்த இரண்டு வாலுகள் வளர்ந்தால் தான் உங்களை அடக்கமுடியும்..” என்று சொல்ல,

“எங்க பசங்களை அடக்க நீங்க எல்லாம் தனியாக ஸ்கூல் போய் படிக்கணும் சாரு.. நாங்களே இந்த அளவுக்கு சேட்டை செய்கிறோம் என்றால் எங்க பசங்க எங்களைவிட இரண்டு பங்கு அதிகம் பண்ணுவாங்க..” என்று சொல்லிக் கொண்டிருக்க மீண்டும் குழந்தைகள் சிணுங்க ஆரம்பித்தனர்..

குழந்தைகளின் சிணுங்கள் மொழி கேட்டதும் மனோ, “செல்லம் அப்பாக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு முடித்துவிட்டு வருகிறேன் டா..” என்று சொல்லவும் சிணுங்கள் நின்றது..

அதைப் பார்த்த மனோ, “என்னோட சமத்து சக்கரக்கட்டி..” என்று குழந்தைகளைச் சொல்ல, “டேய் நீ இப்படி மாறியதும் ரொம்ப சந்தோசப்பட்டேண்டா.. ஆனால் இப்பொழுதுதான் நீ ஏண்டா திருந்தினாய் என்று நினைக்க தோணுது..” என்று சொல்லவும், “சரி சாரு நீங்க வெளியே போங்க..” என்று மனோவைப் பார்த்து குறும்பாகக் கண்சிமிட்டி சொன்ன தென்றலைப் பார்த்து மனோ சிரித்தான்..

அவள் சொன்னதைக் கேட்டு, “நீங்க இன்னைக்கு குழந்தைக்கு பெயர் வைக்க மாட்டிங்க.. அது நல்ல தெரிஞ்சிப்போச்சு..” என்று சொல்ல மீண்டும் குழந்தைகள் சிணுங்கள் ஒலி கேட்ட மறுநொடியே அவர்களை வந்து தூக்கிய மனோவையும், தென்றலையும் பார்த்த சாருவுக்கு சிரிப்புதான் வந்தது..

“என்னடா பாசம் இது.. நீங்க இருவரும் அப்பா, அம்மாவாக கிடைக்க இவங்கதான் தவம் பண்ணிருக்கணும்.. சரி சீக்கிரம் வாங்க கீழே எல்லோரும் தயாராக இருக்காங்க..” என்று சொல்ல சரியென தலையசைத்து சாருவை அனுப்பி வைத்தனர்..

அவள் சென்றதும் குழந்தைகளை சமாதானம் செய்தவர்கள் இருவரையும் தயார் செய்து ரெடி செய்து புன்னகையுடன் கீழிறங்கி வர இருவரையும் பார்த்த நிவாஸ், “மாமா பாப்பாங்க இருவரும் ரெடி ஆக இவ்வளவு நேரமா..? இல்லை நீங்க இருவரும் தயாராக இவ்வளவு நேரமா..?” என்று புன்னகையோடு கேட்டான்..

அவனின் கேள்வியில் அங்கிருந்த அனைவரும் சிரிக்க, “இரண்டும் தான்..” என்று மனோ சொல்ல அங்கே சிரிப்பலை அடங்க கொஞ்சநேரம் ஆனது.. கணவன் மனைவி இருவரும் குழந்தைகளுடன் மனையில் அமர்ந்து ஐயர் சொல்லும் மந்திரங்களை இருவரும் திரும்ப கூறினார்..

ராஜசேகர், வாண்டுகள், சாரு, ரிஷி, சூர்யா, அனு, ரவிசந்திரன், கோமதி, ஷீலாம்மா எல்லோரும் நின்றிருக்க அந்த இடத்தைப் பார்த்த மனோவின் மனதில் ஒரு வகையான நிறைவு ஏற்பட்டது.. அவனின் முகத்தைப் பார்த்த தென்றல் மனதிற்கு அவனின் மனநிலை புரிந்தது..

ஐயர் மனோவிடம், “குழந்தைகள் காதில் அந்த பெயரை மூன்று முறை சொல்லுங்க..” சொல்ல எல்லோரும் மனோவை ஆவலுடன் பார்க்க, “பாவா இப்பொழுதாவது சொல்லுங்க..” என்று தென்றல் கெஞ்சிக்கேட்டாள்..

மனோ யாரிடமும் பெயர் செலக்க்ஷன் பற்றி சொல்லவே இல்லை.. தென்றலிடம் இருந்து கூட அந்த பெயர்களை மறைத்து வைத்தான் மனோ.. இப்பொழுது தென்றல் கேட்டதும் அவளைப் பார்த்து புன்னகை செய்தவன் மகளின் காதில், “இளநிலா..” என்று மூன்று முறை கூறினான்.. அவன் சொன்ன பெயரைக் கேட்டு தென்றலுக்கு ஆச்சர்யமாக இருந்தது..

மகளுக்குத்தான் அந்த பெயர் என்று யோசித்தவள் மகனின் பெயரில் கவனம் செலுத்த மகனின் காதில், “இளமாறன்..” என்று மூன்று முறை சொல்ல அவளால் நடப்பதை உண்மையென நம்பவே முடியவில்லை..
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அங்கிருந்த எல்லோருக்கும் இரண்டு குழந்தைகளின் பெயர்களும் பிடித்திருக்க தென்றல் மட்டும் பித்துபிடித்ததைப் போல அமர்ந்திருக்க அவளின் கைகளில் அழுத்தம் கொடுத்தது அவளை மீட்டு எடுத்தவனின் முகத்தைப் பார்த்தவளுக்கு வார்த்தைகளே வரவில்லை..

எல்லோரும் சந்தோசத்தில் இருக்க, “மாமா இருவருக்கும் பெயர் செலக்க்ஷன் சூப்பர்.. அக்கா பெயர் இளந்தென்றல், இளநிலா, இளமாறன்..” என்று அவன் ரசித்துச் சொல்ல அப்பொழுதுதான் தென்றலின் முகம் பார்த்தான் மனோ..

அவள் அவனைப் பார்த்து, “பாவா..” என்று அழைக்க அவளைப் பார்த்து சிரித்தான் மனோ.. வாண்டுகள் எல்லோரும் சந்தோசத்தில் துள்ளிக்குதித்து தங்களின் மகிழ்ச்சியை வெளிபடுத்த நிகழ்ச்சி முடிந்தது எல்லோரும் பேசிக்கொண்டிருக்க குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு அறைக்குள் வந்த தென்றலின் பின்னோடு அறைக்குள் நுழைந்தான் மனோ..

நிலாவையும், மாறனையும் தொட்டிலில் படுக்கவைத்த தென்றல் மனோ உள்ளே நுழைந்ததும் கதவை சாத்தி தாழிட்டாள்.. அவள் தாழிட்டதும் அவளின் அருகில் வந்து நின்றான் மனோ..

அவளுக்கு குழந்தைகளுக்கு வைத்த பெயரின் முதல் இரண்டு எழுத்தின் விளக்கம் ரொம்பவும் தேவையாக இருக்க அவனின் சட்டை காலரைப் பற்றியவள், “பாவா சொல்லு என்னோட பெயரின் முதல் எழுத்தைக்கொண்டு நிலாவுக்கும், மாறனுக்கும் பெயர் வச்சிருக்க.. பெயரை ஏன் அப்படி வச்சிருக்க..” என்று அவள் ஆவேசமாகக் கேட்டாள்..

அவளின் ஆதங்கம் எல்லாம் மனோவின் முதல் எழுத்தில் குழந்தைகளின் பெயரை தேர்வு செய்யாமல் இப்படி என்னோட பெயரின் முதல் எழுத்தை வைத்தே பெயர் வைத்தது அவளுக்கு ஆச்சர்யமாகவும் அதே அளவு கோபமும் வந்தது.. அந்த கோபம் முழுக்க அவனிடம் திரும்பியது..

அவளின் கோபத்தைக் கூட ரசித்த மனோ, “உனக்கு அப்புறம்தான் எனக்கு எல்லா உறவுகளும்.. நம்மோட காதல் வாழ்க்கைக்கு இவங்க பரிசு என்றால் இந்த மனோவின் வாழ்க்கைக்கு அர்த்தமே தென்றல் மட்டும்.. என்னோட புயல் மட்டும்தான்.. அதுதான் இந்த பெயர்..” என்று அழுத்தமாகக் கூறினான்..

அவனின் பார்வை முழுக்க அவளின் மீதே இருக்க, “நான் என்னடா செய்தேன் உனக்கு எதுக்கு என்மேல் உனக்கு இவ்வளவு பாசம், அன்பு, காதல்..” என்று தன்னுடைய மனதில் இருப்பதைக் கேட்டே விட்டாள்..

அவளின் முகத்தைக் கையில் ஏந்திய மனோ, “நீ எனக்கு என்னடி செய்யல சொல்லு பார்க்கலாம்.. இரும்பாக இருந்த என்னை மனுசனாக மாற்றி சிரிக்க வைத்து உலகத்தில் உள்ள மகிழ்ச்சியின் உச்சத்தை தொடவைத்தவள் நீ.. நீ எனக்கு எல்லாம் செஞ்சிருக்க..” என்று கூறியவன்,

“எனக்கு எல்லா உறவுகளையும், அதன் மூலம் கிடைக்கும் சந்தோசத்தை ஆனந்தத்தையும் கொடுத்தவள் நீ.. என்னோட வாழ்க்கையில் நான் ரசிக்கும் ஒவ்வொரு நொடிக்கும் அர்த்தம் கொடுத்தவள் நீ.. நீ மட்டும் தான்..” என்று கூறியவன் நிறுத்து அவளின் முகத்தைப் பார்த்துவிட்டு மீண்டும் தொடர்ந்தான்..

“சோ உன்னோட பெயரில் தான் நம்ம குழந்தைகள் பெயர் தொடங்கணும் என்று முடிவெடுத்தேன்.. இதில் என்னடி தப்பு இருக்கு சொல்லுடி..” என்று கேட்டவனின் குரலில் சத்தியமாக கோபம் இல்லை.. காதல் மட்டுமே இருந்தது..

“ஒரு மனுஷனை சிரிக்க வைப்பது ரொம்வ கஷ்டம்டா.. ஆனால் நீ என்னை முற்றிலும் மனுசனாக மாத்தியிருக்க.. என்னோட காதலை நான் வார்த்தையில் சொல்ல முடியாதுடி.. உனக்கு என்ன கோபம் வந்தாலும் என்னிடம் காட்டு.. நான் அதை தாங்குவேன்..” என்று சொல்லவும் அவனின் மார்பில் சாய்ந்தாள்..

“பாவா காதலுக்கு அர்த்தம் எல்லாமே மாறிவிட்டது என்று சொல்றாங்க.. ஆனால் உன்னைப்போல மனைவியை நேசிக்கும் கணவன், காதலியை நேசிக்கும் காதலன் இருக்கும் வரை காதலின் அர்த்தம் மாறாது..” என்று சொல்ல அவளை அணைத்துக் கொண்டான் மனோ..

அவளின் கூந்தலை வருடி அவளை சமாதானம் செய்த மனோ, “தென்றல் உனக்கு இந்த பெயர்கள் பிடித்திருக்கிறதா..?” என்று வருத்தத்துடன் கேட்டதும், “பாவா பெயர் ரொம்ப நல்ல இருக்கு..” என்று அவள் சிரித்துக்கொண்டே கூறினாள்..

அவளின் சிரித்த முகத்தைப் பார்த்த மனோ, “இனிமேல் என்னை ரஞ்சிதா என்று கிண்டல் பண்ணுவியா தென்றல்..?!” என்று குறும்புடன் கேட்டான்..

அவனின் கேள்வியில் அவனை நிமிர்ந்துப் பார்த்த தென்றல், “ஸாரி ரஞ்சிதா நான் இன்னும் எதைப்பற்றியும் யோசிக்கல.. சோ ஸாரி ரஞ்சிதா..” என்று குறும்பு கூத்தாட கூறியவள் கலகலவென்று சிரிக்க அவளின் சிரிப்பில் தொலைந்தது அவனின் மனது..

பெண் குழந்தை பிறந்ததில் இருந்து தென்றல் மனோவை ரஞ்சிதா என்று அழைத்துக் கிண்டல் செய்ய மனோ அதைக் கேட்டால், “நான் என்னோட பொண்ணுக்கிட்ட பேசுவதைப் பார்த்து உங்களுக்கு பொறாமை..” என்று மனோவை வம்பிற்கு இழுப்பாள்.. அவனும் அவளுக்கு ஏற்றது போலவே அவளை வம்பிற்கு இழுப்பான்.. அதைதான் இப்பொழுது பேசிட்டு இருக்காங்க..

அவனின் முகத்தைக் கையில் ஏந்திய தென்றல், “என்னோட வாழ்க்கையில் இந்த நிமிஷம் எனக்கு எல்லா உறவுகளும் இருக்காங்க என்றால் அதற்கு நீதான் பாவா காரணம்..” என்று கூறியவள் அவனின் நெற்றியில் முத்தமிட்டு, “பணம் முக்கியம் இல்லடா.. மனசு முக்கியம்.. அது உன்னிடம் இருக்கிறது..” என்று சந்தோசமாகக் கூறினாள்..

ஒரு மனிதனின் வாழ்வில் காதல் வந்தால் எத்தனை மாற்றங்கள் நிகழ்கிறது.. இதற்கு எல்லாம் மனசுதான் காரணம், ‘மனம் இருந்தால் மாற்றம் உண்டு..’ என்று எல்லோரும் சொல்றாங்க.. அந்த மனதில் காதல் இருந்தால் வாழ்க்கையே வசந்தம் தான்..

மனோவின் புயலென்று நுழைந்த தென்றல் மனோவை எந்த அளவுக்கு மாற்றி இருக்கிறாள் என்று அவளுக்கு தெரியாது.. ஆனால் மனோவிற்கு தெரியும் தான் எந்தளவுக்கு மாறி இருக்கிறோம் என்று..! அவனின் மாற்றமே அவனுக்கு வாழ்க்கையின் வசந்தத்தைக் காட்டியது தென்றலின் மூலம்..!

அவள் சொன்னதைக் கேட்டு அவளை வளைத்து அணைத்த மனோ அவளின் தேன் இதழ்களில் இதழ் பதிக்க அவனின் முத்தத்தில் தன்னை அவனிடம் தொலைத்து அவனின் கைகளில் மயங்கினாள் தென்றல்.. இருவரையும் பிரிக்க எண்ணிய மாறனும், நிலாவும் சிணுங்க அவர்கள் அழுகுரல் அவர்கள் காதலுக்கு வாழ்த்து பாடியது..
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
இதன் தொடர்ச்சியை இன்று தருகிறேன் தோழிகளே...
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
அருமையான பதிவு சந்தியா அப்பாடா கரெக்ட் டைமுக்கு முதல் ஆளாக வந்தாச்சு சந்தியா வெயிட்டிங் ஹாய் குட்டிஸ் நீ இளநிலாவா நீ இளமாறனா ரெண்டு பேரும் சூப்பர் இந்தாங்க பெரியம்மாவோடா கிப்ட்டாக இந்த தங்க செயின் பிளஸ் ஆசிகள் பிளஸ் முத்தா பை Write your reply...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top