• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Enathu Punnagaiyin Mugavari - 41 [Final - 2]

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அத்தியாயம் – 41 [பாகம் – 2]

பத்து வருடங்களுக்குப் பிறகு....

மாலைநேரம் சூர்யன் மறைவதற்கு தயாராகிக் கொண்டிருக்க இளநிலா, இளமாறன், கிருஷ்ணா, ஆதித்யா மட்டும் ரோட்டோர சாலையில் ஓரமாக நடந்துக் கொண்டிருக்க தூரத்தில் இருக்கும் பஸ் ஸ்டாப்பில் சுனிலும், நிவாஸும் நிற்பதைப் பார்த்த இளநிலா கிருஷ்ணாவின் பக்கம் திரும்பினாள்..

“டேய் கிருஷ்ணா நான் நேற்று சொன்னப்போ நம்பலை இல்ல அங்கே பாரு சுனில் மாமாவையும் , நிவாஸ் மாமாவையும்” என்று கூறியதும் கிருஷ்ணாவின் பார்வை பஸ் ஸ்டாப்பிற்கு சென்றது.. கிருஷ்ணா சாருவின் மகன்..

அவனைத் தொடர்ந்து பார்த்த இளமாறனும், ஆதித்யாவும், “இதுதான் தினமும் நடக்குது.. இதை இப்படியே விடக்கூடாதே..” என்று சொல்ல, “இருவரையும் மிரட்டுவோமா..?” என்று இளநிலா கேட்டதும், “ஓகே நிலா..” என்று கூறினான் மாறன்..

அவங்க பக்கத்தில் வந்துக்கொண்டிருந்த அவங்க ஸ்கூல் டீச்சர் அவர்களை முறைக்க, “டேய் மாறா இவங்களுக்கு முதலில் ஆப்பு வைக்கணும்.. இந்த மாசம் எக்ஸாம்ல எழுதாமல் பேப்பர் கொடுத்துவிடலாம்.. அப்போதான் நம்ம பிரின்சி குண்டம்மாகிட்ட நல்ல திட்டு வாங்குவாங்க..” என்று நிலா சொல்ல மாறனும் சரியென்று தலையசைத்தான்..

இவர்கள் இதை அடிக்கடி செய்வதுதான்.. இரண்டும் வாலுங்க இல்ல.. அதுதான் வாலுதனத்தை டீச்சரிடமே காட்டுதுங்க.. கிருஷ்ணாவும், ஆதித்யாவும் “அந்த டீச்சர் செப்டர் க்ளோஸ்..” என்று சொல்ல நால்வரும் சிரித்தபடியே பஸ் ஸ்டாப் அருகில் வந்து சேர்ந்தனர்..

ராகினியிடம் சுனிலும், கீதாவிடம் நிவாஸும் வம்பு வளர்த்துக் கொண்டிருக்க அவர்களிடம் வம்பு வளர்க்க வந்தது நாலு வாலுகளும்.. என்ன செய்வது பஞ்ச பாண்டவர்களுக்கு வந்த கால கொடுமை..?! சுனில், நிவாஸ் இருவரும் படிப்பை முடித்துவிட்டு நிவாஸ், மனோவின் நிறுவனத்தில் வேலைப்பார்க்கிறான்.. சுனில் சூர்யாவின் நிறுவனத்தில் வேலைப்பார்க்கிறான்..

அவர்களில் அருகில் வந்த நிலாவும், மாறனும், “அம்மாடி இதுதான் காதலா..” என்று பாட ஆதியும், கிருஷ்ணாவும் கோரஸ் போடராகினியும், கீதாவும் திருதிருவென விழித்தனர்.. அவர்கள் பார்வை கண்ட நிவாஸும், சுனிலும் திரும்பிப்பார்க்க அங்கே நின்று கொண்டிருந்த நால்வரையும் பார்த்தனர்..

“மச்சி இவங்க கண்ணில் பட்டுவிட்டோமே..” என்று நிவாஸ் சொல்ல, “தலை எழுத்தை யாரால் மாற்ற முடியும்..” என்று கூறிய சுனில், “நிலா மேடம் உங்களுக்கு இங்கே என்ன வேலை..?” என்று பணிவாகக் கேட்க, “மாமாவிற்கு இங்கே என்ன வேலை..?” என்று கிடுக்குப்பிடி போட்டான் மாறன்..

அவனை சமாளிக்க வேண்டுமே என்று இருவரும் பேய் முழிமுழித்துவிட்டு, “டேய் மாறா வீட்டில் யாருக்கும் தெரியாதுடா.. போட்டு மட்டும் கொடுத்துவிடாதே..” என்று இருவரும் ஒரே மாதிரி சரண்டர் ஆக, “அது அந்த பயம் இருக்கணும்..” என்று கூறிய நிலா,

“மாமா இப்படி எல்லாம் நின்று பேசினால் நாலு நல்லவங்க கண்ணிலும், நல்லு கொள்ளிக்கட்டை கண்ணிலும் படத்தான் செய்யும்.. சோ இனிமேல் இப்படி நின்னு பேச கூடாது..” என்று நிலா சொல்ல அவர்கள் இருவரும் சரியென தலையசைத்தனர்..

“ஸ்வீட் மாமா..” என்று சொல்லிய நிலா, “எங்களுக்கு நடந்து வர முடியவில்லை.. சோ பைக்கில் ட்ராப் பண்ணுங்க..” என்று சொல்ல, “கீதா, ராகினி இருவரும் பஸில் போங்க..” என்று சொல்ல பெண்கள் இருவரும் சுனிலையும், நிவாசையும் எரிப்பது போல பார்த்தனர்..

அவர்கள் பார்வையைக் கண்ட மாறன், “எங்க மாமா இருவரும் நல்லவங்கதான்.. அவங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்ல.. அவங்களுக்கு இது எல்லாம் ஜுஜிபி மேட்டர்.. பட் உங்க வீட்டில் அப்படியா அத்தை..?” என்று கேட்டவனைப் பார்த்து பயத்துடன் நின்றனர்..

அவனின் அத்தை அழைப்பில் நிம்மதி அடைந்தவர்கள், “வேற யாருக்காவது கட்டிக் கொடுத்துவிடுவாங்க குட்டிப்பையா..” என்று ராகினி சொல்லவும், “அதுக்குதான் நாங்களும் சொல்கிறோம்.. நீங்க பொறுமையாக இருங்க நடக்க வேண்டியதை நாங்க பார்த்துக்கிறோம்..” என்று சொல்ல இருவரும் சரியென தலையசைத்தனர்..

அதன்பிறகு நால்வரையும் கொண்டுவந்து விட்டுச்சென்றனர்.. அன்று மாலையே வீடு திரும்பிய மனோவிடம் எல்லா உண்மையையும் சொன்ன வாலுகள் இரண்டும் தங்கள் வேலை முடித்ததும் தூங்க சென்றனர்..

அவர்கள் தூங்கியதும் மனோவின் அறைக்குள் வந்த தென்றல், “பாவா இந்த பசங்க இந்த வேலையெல்லாம் பண்றாங்க சரியான சமத்து சக்கரைக்கட்டிங்க..” என்று சொல்ல சிரித்த மனோ, “நம்ம பிள்ளைகள் இல்லையா தென்றல்.. அதுதான் இந்த வாலுத்தனம் பண்ணுதுங்க.. பட் எல்லாத்தையும் சரியான திசையில் வழி நடத்த கத்துகிட்டாங்க..” என்று அவன் பெருமையாகக் கூறினான்..

தென்றலும், மனோவும் தங்களின் சேட்டையை கொஞ்சம் குறைத்தாலும் கூட பிள்ளைகள் சந்தோசத்தை மையமாகக் கொண்டு அவர்களின் காதல் சக்கரம் அழகாக சுழன்றது.. இருவரும் பேசி ஒரு முடிவுக்கு வந்தனர்.. அதன்பிறகே இருவரும் தூங்க ஆரம்பித்தனர்..

அந்த மழையை வெடிக்கப் பார்த்தபடி அமர்ந்திருந்த நிலாவின் அருகில் வந்து அமர்ந்த மனோ மகளை ஒரு பார்வை பார்த்துவிட்டு தென்றலைப் பார்க்க அவள் வெளியே கையைக் காட்டிவிட்டு தன்னுடைய வேலையைத் தொடர்ந்தாள்..

மகளின் அருகில் சென்ற மனோ, “மழை நல்ல பெய்து.. என்ன பண்ணலாம்..?!” என்று அவன் யோசிக்க, “மழையில் நனையலாப்பா..” என்று கூறினான் மாறன்.. மனோ தென்றலைப் பார்க்க அவள் சரியென தலையசைக்க பிள்ளைகளுடன் தோட்டத்து சென்றான் மனோ..

காலை விடியும் பொழுதே மழை கொட்டிக் கொண்டிருக்க கொட்டும் மழையில் பிள்ளைகளுடன் தோட்டத்தில் செடி நட்டுக்கொண்டு இருந்தான் மனோ.. அவனைப் பார்த்து சிரித்த நிலாவும், மாறனையும் பார்த்து புன்னகை பூத்தான் மனோ..

“இப்படி மழையில் உட்கார்ந்து செடி நட்டால் அதற்கு சீக்கிரம் வேர் பிடிக்கும்..” என்று மனோ குறும்புடன் சொல்ல அவனின் குறும்பைக் கண்டு சிரித்த நிலாவும், மாறனும் தங்களின் உடையைப் பார்க்க அது முழுவதும் நனைத்திருக்க அவர்களால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை..

நிலாவையும் மாறனையும் பார்த்த மனோ, “நாளைக்கும் இப்படியே மழையில் ஆடினால் நல்ல இருக்கும் இல்ல..?!” என்று கேட்டதும் சிரித்த நிலா, “அப்பா அப்படியே டாக்டரை நம்ம வீட்டில் தங்க வைத்துவிட்டால் செலவு மிச்சம் தானே..?” என்று கேட்டதும், “நிலா அதுக்குதான் நம்ம பிரதாப் மாமா இருக்காரு இல்ல..?!” என்று மாறன் சொல்ல, “டேய் அவனே இப்பொழுதுதான் படிப்பை முடிச்சிருக்கான்..” என்று இருவரையும் அடக்கினான் மனோ..

ம்ம் நீங்கள் நினைப்பது சரிதான் பிரதாப் டாக்டர்க்கு படித்து இப்பொழுது கோவையில் ஒரு பெரிய ஹாஸ்பிடலில் வேலையில் இருக்கிறான்.. அடுத்து ராகுல், ஷிவானி இருவரும் படிப்பை முடித்துவிட்டு கோவையில் பெரிய சாப்ட்வேர் கம்பெனியில் வேலையில் இருக்கின்றனர்..

அவர்கள் மூவரும் மழையில் நனைந்த படியே பேசிக்கொண்டிருப்பதை வாசலில் அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள் தென்றல்.. அப்பொழுது அவளின் அருகில் வந்த ராஜசேகர் தோட்டத்தைப் பார்த்தார்..

மூவரும் மழையில் நனைவதைப் பார்த்த ராஜசேகர், “தென்றல் என்னம்மா இது மூவரும் மழையில் நனைகின்றனர்.. நீ வாசலில் அமர்ந்து வேடிக்கைப் பார்க்கிறாய்..?” என்று அவர் கேட்டதும் வாசலில் அமர்ந்திருந்த தென்றல் ராஜசேகரைப் பார்த்து வாய்விட்டு சிரித்தாள்..

அவள் சிரிப்பதைப் பார்த்த ராஜசேகர், “இன்னும் உன்னோட விளையாட்டு குறையவே இல்லையா..?” என்று கேட்டதும், “தாத்தா சூரியன் உதிக்கும் பொழுதே காலை பொழுதை ரசிக்கணும்.. அப்பொழுது விட்டால் அடுத்தநாள் வரை காத்திருக்கணும்.. இல்ல அது உதிக்கும் பொழுது நம்ம மனநிலை வேறாக இருக்கும்.. சோ எதுவாக இருந்தாலும் அந்த நொடி வாழ்க்கையை ரசிக்க கத்துக்கணும்.. இன்னைக்கு மழை பெய்து நாளைக்கு மழை வருமா தெரியாது.. இன்னைக்கு மழை வருது இல்ல..” என்று கூறியவள் அவரின் முகத்தைப் பார்த்துவிட்டு தொடர்ந்தாள்..

“நிலாவும், மாறனும் அவங்களுக்கு விருப்பமானதை அப்பொழுதே செய்ய நான் முழு சுதந்திரம் கொடுத்திருக்கிறேன்.. அவங்க தவறு செய்யும் பொழுது அவங்களை கண்டிக்க பாவாவும், நானும் இருக்கோம்.. இந்த வயசில் அவங்க எதை எல்லாம் ரசிக்கணும், அனுபவிக்கனும் என்று நினைக்கிறார்களோ அதை எல்லாம் ஒரு தாய், தகப்பன் என்ற முறையில் நாங்க அவங்களுக்கு செய்வோம்..” என்று கூறியவளைப் பார்த்தவர் மனம் சந்தோசம் அடைந்தது..
 




Last edited:

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
மழை முழுவதும் நின்றுவிட வெளியே வரிசையாக வண்டி நிற்கும் சத்தம் கேட்டு கணவனைப் பார்த்தாள் தென்றல்.. அவனோ தென்றலைப் பார்த்து குறும்பாக புன்னகை பூக்க அமர்ந்திருந்த இடத்தில் இருந்தே மனோவைப் பார்த்து, ‘ஓகே..’ என்று கைகாட்டினாள்..

அப்பொழுது வீட்டிற்குள் வந்த ஐவரையும் பார்த்த நிலாவும், மாறனும், “அப்பா இந்த அஞ்சு மாமாவும் சரியான ப்ராடு அப்பா..” என்று சொல்ல இருவரையும் புரியாமல் பார்த்தான் மனோ.. அவனின் பார்வையை உணர்ந்த வாலுகள் இரண்டும், “உங்களுக்கு புரிய வைக்கிறோம் வாங்க..” என்று கையைப்பிடித்து அழைத்து சென்றனர்..

வாசலில் அமர்ந்திருந்த தென்றல், “வாங்கடா நல்லவனுங்களா.. இப்பொழுதுதான் வீட்டுக்கு வர வழி தெரிஞ்சதா..?” என்று கேட்க ஐவரும் பேய் முழி முழிக்க, “என்னடா பிள்ளைகள் இருவரும் என்ன என்னவோ சொன்னாங்க எல்லாம் உண்மையா..?” என்று தீவிரமாக கேட்டாள்..

“நிலாவும், மாறனும் என்ன சொன்னாங்க..?” என்று சுனிலும் நிவாஸும் கேட்க, “ம்ம் நீங்க இருவரும் பஸ் ஸ்டாப்பில் நின்று ராகினியையும், கீதாவையும் ரூட்டு விட்டதை சொன்னாங்க..” என்று சொல்லவும் நிவாஸும் சுனிலும், ‘ஐயோ இந்த வாலுங்க இரண்டும் இன்னும் என்னென்ன சொல்லி வைச்சுக்கோ தெரியலையே..” என்று மனத்திற்குள் புலம்பினர்..

தீவிரமாக விசாரணை நடக்க, தன்னுடைய அம்மாவைப் பார்த்த நிலாவும் மாறனும், “அப்பா உங்க புயல் ரொம்ப பலமாக வீசுது போலவே.. இன்னைக்கு புயல் கரையைக் கடந்துவிடுமா..?” என்று கேட்டதும் இருவரையும் பார்த்த மனோ, “அது தெரியலையே செல்லம்..” என்று சொல்லவும் நிலாவும், மாறனும் மனோவை முறைத்தனர்..

அவர்களின் முறைப்பைப் பார்த்த மனோ, “என்னடா..” என்று கேட்டதும், “புயல் இன்னைக்கு கரையைக் கடக்குமா..? இல்ல இங்கேயே மையல் கொள்ளுமா என்று உங்களுக்கு தெரியாது..?” என்று கேட்டதும், ‘தெரியாதே’ என்று மனோ இடமும் வலமும் தலையசைக்க தலையில் அடித்துக் கொண்டான் மாறன்..

பிறகு நிலாவிடம், “அக்கா இதுக்குதான் நான் அப்பொழுதே சொன்னேன்.. இவங்க இருவரும் சரியான வாலுங்க.. இவங்க இருவரும் ஏதோ பெருசா பிளான் பண்ணிட்டாங்க.. இது தெரியாமல் அவங்களும் வந்து வழியில் மாட்டிக்கிட்டாங்க..” என்று கூறியதும் மனோவின் முகத்தில் ரகசிய புன்னகை பூத்தது..

அவனின் புன்னகை நிலாவிற்கு காட்டிக்கொடுக்க, “ஐயோ அப்பா.. எப்படிப்பா இப்படியெல்லாம்..? அடுத்தவங்க உயிரை இப்படியா வாங்குவீங்க..?” என்று கேட்பதற்குள் மனைவியின் அருகில் அமர்ந்த மனோ, “டேய் பிரதாப் உனக்கு இன்னமும் உண்மை தெரியாதா..?” என்று கேட்டதும், ‘அடுத்து நானா..?’ என்ற ரீதியில் நின்றிருந்தான் பிரதாப்..

மனோ கேள்வியாக புருவம் உயர்த்துவதைப் பார்த்து, “மாமா அது வந்து நானும் பிரபாவும்..” என்று அவன் திக்கித்திணற அவனைப் பார்த்து சிரித்த நிலா, “மாமா அம்மாவும், அப்பாவும் திருமண ஏற்பாடே பண்ணிட்டாங்க..” என்று சொல்லவும் பிரதாப் முகம் பிரகாசித்தது..

மற்ற நால்வரும், “நீ எங்களிடம் சொல்லவே இல்ல..?” என்று கேட்டு முறைக்க, “இது எல்லாம் வெளியே சொல்ல முடியுமா..? நீ கூடத்தான் ஆபீஸில் வேலை செய்யும் ரேகாவைக் காதலிக்கிற.. நான் ஏதாவது சொன்னேனா..?” என்று வேகமாகக் கேட்கும் பொழுதே மாறன் விழுந்து விழுந்து சிரித்தபடி,

“பிரதாப் மாமா அதுதான் எல்லாமும் சொல்லிட்டீங்களே..” என்று சொல்லவும் மனோவும், தென்றலும் வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரிக்க, “நீ வெளியே வாடா செங்கல் ரெடியாக இருக்கு..” என்று மிரட்டியது வேறு யாரும் அல்ல நம்ம ஷிவானிதான்..

அவனின் மிரட்டலைக் கேட்டு பிரதாப், “டேய் உன்னோட விசயத்தில் தெரியாத்தனமாக வாயைக் கொடுத்தது மாட்டிக்கிட்டேன் இது எனக்கு ரொம்ப தேவைதான்..” என்று சலித்துக்கொண்டான்..

இவர்கள் எல்லாம் திருதிருவென முழிக்க ராகுல் மட்டும் சிக்காமல் இருப்பதைக் கவனித்த நிலாவும், மாறனும் தென்றலின் அருகில் சென்று அவளின் காதோடு வேதம் ஓதியதும் நிமிர்ந்த தென்றல்,

“ராகுல் நீ அம்மா பார்த்த பெண்ணை திருமணம் செய்ய போறதாக கேள்விப்பட்டேன்..” என்று சொல்லவும், “ஆமா தென்றல் அக்கா..” என்று சொல்லவும், “நல்ல அவளை காதலிடா.. வாழ்க்கை ரொம்ப அழகாக இருக்கும்..” என்று வேகமாகக் கூறிய மனோவைப் பார்த்து சரியென தலையசைத்தான் ராகுல்..

மனோவையும் தென்றலையும் பார்த்த நிலாவும், மாறனும், ஐவரின் பக்கம் திரும்பி, “மாம்ஸ் எங்களுக்கு எங்கே லஞ்சம்..?” என்று கேட்டனர்.. மனோவோ, “லஞ்சம் சொல்ல கூடாது..” என்று சொல்ல, “சரிங்க அப்பா..” என்று கூறியவர்கள், “கப்பம் இது ஓகே வா..?” என்று கேட்டனர்..

பிரதாப் நிலாவைப் பார்த்து கண்சிமிட்ட, “தேங்க்ஸ் மாமா.” என்று மட்டும் சொன்னார்கள் நிலாவும், மாறனும்.. தென்றலை மீது எந்த அளவுக்கு பாசம் வைத்திருந்தனரோ அந்த அளவுக்கு இப்பொழுது நிலாவின் மீதும் மாறனின் மீதும் உயிரையே வைத்திருந்தனர்.. நிலாவும், மாறனும் அவர்கள் மீது உயிரையே வைத்திருந்தனர்

அவர்கள் எல்லாம் பேசி முடித்ததும், “அப்பா உங்களுக்கு ஏதாவது புரிஞ்சிது..?” என்று கேட்டதும், “இல்லம்மா ஒண்ணுமே புரியல..” என்று அவன் குழந்தைபோல உதட்டை பிதுக்க அவனைப் பார்த்த தென்றல், ‘பாவா நீ சரியான ஆளுடா..’ என்று வாய்க்குள் முணுமுணுத்தாள்..

இப்படி ஒருவரையொருவர் கழுவி ஊத்துவைதைப் பார்த்தபடியே வீட்டின் உள்ளிருந்து வெளியே வந்த ராஜசேகர், “தென்றல் இவனுங்களையும் மழையில் நிற்க வைத்துதான் விசாரிக்கனுமா..?” என்று கேட்க, “அக்கா என்னிடம் உண்மையை யாரும் சொல்லவே இல்ல.. அதுதான் மழையில் விசாரணை நடக்குது தாத்தா..” என்று குறும்புடன் சொல்ல அவளின் தலையைக் கலைத்தவர்,

“உள்ளே வாங்க பசங்களா..?” என்று எல்லோரையும் வீட்டின் உள்ளே அழைத்துச் செல்ல கொள்ளு பேரனும் பேத்தியும் தாத்தனின் பின்னோடு ஓடினர்.. அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த தென்றலின் அருகில் நெருங்கி அமர்ந்த மனோ,

“புயல் நிலாவும், மாறனும் நம்மைவிட வாலுத்தனம் அதிகம் பண்றாங்கடா.. அவங்க அளவுக்கு நம்மால் பண்ண முடியல..” என்று சொல்ல அவனின் தோளில் சாய்ந்த தென்றல், “அவங்க அவங்களாகவே இருக்கட்டும் பாவா..” என்று சொல்லவும் வீட்டின் உள்ளே நுழைந்த ஆதியைப் பார்த்த தென்றல், “பாவா சூர்யாவும், அனுவும் வந்தாச்சு..” என்று கூறினாள்..

சூர்யாவுக்கும் அனுவிற்கும் ஆதித்யா ஒரே மகன்.. சூர்யா – அனு இருவரும் அவனின் மீது உயிரையே வைத்திருக்க அவனோ மாறன், நிலா மீது பாசத்தை வைத்திருந்தான்.. மனோ – தென்றல் இருவரும் வேண்டாம் என்று ஒதுக்கிய ஒரு விஷயம். சூர்யாவின் கடந்த காலத்தின் உண்மை.. இப்பொழுதும் அந்த உண்மை அவனுக்கு தெரியாது.. ஆனாலும் இருவரையும் உறவென்ற பாலத்தில் இணைக்க காரணமாக இருந்தனர்..

நிலாவுக்கும், மாறனுக்கும் சூர்யா சித்தப்பாவாகவும், அனுவும் சித்தியாகவும் மாறினார்.. அவர்கள் மழலை மொழியில் அவர்கள் சூர்யாவை சித்தப்பா என்று அழைக்க சொல்லி கற்றுக்கொடுத்தனர் மனோவும் தென்றலும்..! அனுவின் வாழ்க்கைக்காக மட்டும் இதை செய்தனர்..

பிரதாப் விஷயம் பற்றி பேசவே எல்லோரையும் வர சொல்லி சொல்லியிருந்தான் மனோ.. இப்பொழுது சூர்யாவைப் பார்த்த மனோவும் தென்றலும் எழுந்து நின்று புன்னகைப் பூக்க, “என்ன மனோ இப்படி மழையில் நனைஞ்சி போய் உட்காத்திருக்கீங்க..?” என்று கேட்டதும்,

“எல்லாம் நிலாவும், மாறனும் செய்த வேலைதான்..” என்று புன்னகையோடு கூறிய தென்றலைப் பார்த்து புன்னகைத்த தென்றல், “வாங்க சூர்யா, வா அனு..” என்று வீட்டின் உள்ளே செல்லும் முன்னே, சாருவும் ரிஷியும் வர அவர்களோடு வந்தான் கிருஷ்ணா..

எல்லோரும் ஒரு இடத்தில் கூடினால் அங்கே வாலுத்தனம் செய்ய ஆள் இல்லாமல் போகுமா..? எல்லோரும் இணைந்து பிரதாப் திருமண நாளை முடிவு செய்ய அங்கே மகிழ்ச்சிக்கு அளவில்லாமல் போனது..

அவர்கள் எல்லாம் கிளம்பியதும் சமையலறைக்குள் சென்ற தென்றலைப் பின் தொடர்ந்து சென்ற மனோ, அவளின் இடையோடு கைகொடுத்து வளைத்துக்கொண்டு, “வசந்தபுயல் நீதாண்டி..” என்று அவன் மனநிறைவோடு சொல்ல அவனின் சொல்லுக்கு கட்டுப்பட்டு அவனின் கைக்குள் அடங்கினாள் தென்றல் என்ற புயல்..

அவன் சொன்னதைக் கேட்டு சிரித்த தென்றலின் புன்னகையில் மறுபடியும் ஒரு காதல் கதை உருவானது.. மனோ மனதில் புயல் என்றும் மையல் கொள்வாள்.. தென்றலின் மனதில் மனோ என்றும் மணம் வீசுவான்..

காலங்கள் மாறினாலும் காதல் மாறாது.. சிரிப்பவர்கள் வாழ்க்கை சீரழிந்தும் போகாது.. விளையாட்டுத்தனம் கொண்டவர்கள் வாழ்க்கையில் புயல் என்று வீசும் என்று சொல்வது எல்லாம் பொய்.. காலங்கள் நமக்கு கொடுக்கும் பரிசை பக்குவமாக கையாள கற்றுக்கொள்ள வேண்டும்.. வாழ்க்கையில் புன்னகைக்க கற்றுகொண்டால் வாழ்க்கையில் என்றும் வசந்த தென்றல் வீசும்...

மனோவின் வாழ்க்கையில் தென்றலாக மாறினால் புயல் இன்றோ நல்ல பெற்றோராக குழந்தைகளின் வழியே சென்று அவர்களுக்கு வாழ்க்கை பாடத்தை கற்பிக்க துணை நிற்கின்றனர்.. காதலும், புன்னகைக்க மனமும் இருந்தால் வாழ்க்கையில் என்றும் வசந்தம் தான்..

இவர்களின் காதலுக்கு முகவரி கொடுத்த சந்தோசத்துடன் அவர்களை வாழ்த்தி விடைபெறுவோம்...
 




Last edited:

jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
super Super.... sema ending...

Ha ha... pancha pandavargaluku vantha sothanai.. ha ha.... sema sis... cute kids... sariya valu pillaikal... sema epi...

Rasipathu pathi superah soneenga sis... yes another day athey sunrise pakalam than... bt namaloda mood vera mathiri irukum...

Oru watapp message... 60years old manta poi... kilukilupa aatuna kovam pattaram... bt avar 1 year ah irukum pothu athey kilukilupa vachu vilayandavarthan... crctla antha antha agela elam crctah rasichu vazanum..

Super story... sis... unga narration and flow super... sis....

Aiyo story mudinjutey... miss u pancha pandavas, thendral, mano, nila, maran, anu, surya, aadhi, saru, rishi, krishna, rajsekar... sis...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top