• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Enge Enadhu Kavithai - 15

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
சென்ற பதிவுக்கு லைக்,கமெண்ட்ஸ் அளித்த அனைவருக்கும் நன்றி:giggle::giggle::giggle:



IMG_20181226_231953.png
கதவு தட்டும் சத்தம் கேட்டதும் வெண்ணிலா சூர்யா சென்று விட்டான் போல என்று எண்ணி அறை கதவை திறந்தாள்.


இத்தனை நாட்களாக வெண்ணிலா ஆடிய கண்ணாமூச்சி ஆட்டம் ஒரு வழியாக முடிவுக்கு வர சூர்யாவோ சொல்லண்ணா வேதனையோடு வெண்ணிலாவை பார்த்து கொண்டு நின்றான்.


என்ன பேசுவது என்று தெரியாமல் வெண்ணிலா தடுமாற சூர்யாவோ வெண்ணிலா ஒரு வார்த்தையாவது தன்னோடு பேச மாட்டாளா என்று ஏக்கமாக பார்த்து கொண்டு நின்றான்.


வெண்ணிலாவின் பிடிவாதம் சூர்யா அறிந்த விடயம் என்பதனால் அவனே முதலில் பேச தொடங்கினான்.


"ஐசு..........." என்று சூர்யாவின் ஒற்றை அழைப்பு வெண்ணிலாவின் உயிர் வரை தீண்டிச் சென்றது.


சூர்யாவின் குரலை மறைவாக நின்று அவள் கேட்டிருந்தாலும் இன்று காதலோடும், ஏக்கத்தோடும் வந்த அவனது அழைப்பு அவளை இம்சித்தது.


சட்டென்று கண்கள் கலங்குவது போல இருக்கவும் மறுபுறம் வெண்ணிலா திரும்பி நின்று கொள்ள சூர்யா முகம் வாடிப் போனான்.


"என் கூட பேச மாட்டியா நிலா??? நான் அப்படி என்னடி தப்பு பண்ணேன்???? எதுக்கு என்னை அவாய்ட் பண்ற?? ஒரு வருஷமாச்சுடி உன்னை பார்த்து, பேசி.....ஏன்டி என்னை இப்படி கஷ்டப்படுத்துற???" என்று சூர்யா கேட்கவும் வெண்ணிலா எதுவும் பேசாமல் கண்ணீர் வடித்து கொண்டு நின்றாள்.


"ஏதாவது பேசு நிலா......" என்றவாறு சூர்யா வெண்ணிலாவின் முன்னால் வந்து நிற்க அவளது அழுது விழிகளைப் பார்த்து முற்றாக நொறுங்கிப் போனான்.


"என்னாச்சு நிலா??? இப்போவாது சொல்லு......" என்று சூர்யா கேட்க


நிமிர்ந்து அவனைப் பார்த்தவள்
"உங்களுக்கு வந்த வேலை முடிஞ்சதுனா நீங்க போகலாம்....." என்று அறையின் வாயில் புறமாக கை காட்ட சூர்யாவின் கண்கள் கோபத்தால் சிவந்தது.


"என்னதான் டி நினைச்சுட்டு இருக்க உன் மனசுல??? எதுக்கு இவ்வளவு பிடிவாதம்??? காரணமே சொல்லாம ஒதுங்கி போனா என்ன அர்த்தம்???" என்று சூர்யா கேட்க


"ஏன் உங்களுக்கு தெரியாதா??? அது தான் பிரச்சினையை உங்க கூடவே வைச்சுட்டு சுத்திட்டு இருக்கிங்களே...." என்று வெண்ணிலா கூற


"என் கூடவா????" என்று சூர்யா குழப்பமாக பார்க்கவும் அவனது தொலைபேசியில் ஜனனியின் அழைப்பு வரவும் சரியாக இருந்தது.


சூர்யாவையும், அவனது போனையும் மாறி மாறி முறைத்து பார்த்த வெண்ணிலா கோபமாக அவனை தாண்டி செல்ல போக அவளை போக விடாமல் சூர்யா கை பிடித்து தடுத்தான்.


"இவ தான் உன் பிரச்சினையா????" என்று சூர்யா தன் போனை அவளிடம் காட்டி கேட்க வெண்ணிலாவோ அவனிடமிருந்து தன் கையை பிரித்து எடுக்க போராடிக் கொண்டிருந்தாள்.


"நீ பதில் சொல்லாம இங்க இருந்து ஒரு அடி கூட நகர முடியாது....." என்று சூர்யா அழுத்தமாக கூறவும்


அவன் கண்களை நேருக்கு நேராக நோக்கிய வெண்ணிலா
"ஆமா அவ தான் பிரச்சினை......எனக்கு அவளை பார்த்தாலே புடிக்கல.....அவ பேச்சு, நடவடிக்கை எதுவுமே எனக்கு புடிக்கல......முக்கியமாக உங்க கூட அவ எப்போவும் ஒட்டிக்கிட்டு, குழைஞ்சு பேசிட்டு திரியுறது புடிக்கல......மொத்தத்துல அவ கூட நீங்க பேசுறது, பழகுறது எதுவுமே எனக்கு புடிக்கல......புடிக்கல......புடிக்கல......" என்று கத்த அவளை சிரிப்போடு நோக்கினான் சூர்யா.


சூர்யா சிரிப்பதை பார்த்து கோபம் கொண்ட வெண்ணிலா தன் கையை வேகமாக அவன் கையில் இருந்து உருவி எடுத்து கொண்டு அவனை தாறுமாறாக அடிக்க தொடங்கினாள்.


"என்னோட கஷ்டம் உனக்கு சந்தோஷமா????சந்தோஷமா????" என்று கேட்டுக் கொண்டே வெண்ணிலா சூர்யாவை அடிக்க அவனோ ஏதோ அவார்டு தருவது போல பெருமிதமாக அவளது அடிகள் அனைத்தையும் வாங்கி கொண்டான்.


வெண்ணிலாவின் கைகள் வலிக்கவே கோபமாக அவனை தள்ளி விட்டு தன் கைகள் இரண்டையும் வெண்ணிலா ஊதிக் கொள்ள சூர்யா அவள் கைகளை பற்றி தன் இதழ் பதித்தான்.


வெண்ணிலா கோபமாக தன் கையை பின்னால் இழுத்து கொள்ளப் போக அதில் சூர்யாவின் கண்ணீர் துளிகள் படவே அதிர்ச்சியான வெண்ணிலா
"தேவ்....." என்று அவசரமாக அவன் முகம் நிமிர்த்தி பார்த்தாள்.


சூர்யாவின் கலங்கிய கண்களை கண்டு பதற்றம் அடைந்த வெண்ணிலா
"நான் கோபத்துல இப்படி உங்களை அடிச்சுட்டேன்....இனி அப்படி பண்ண மாட்டேன்.....ப்ளீஸ் அழாதீங்க.....வேணும்னா நீங்க என்னை அடிச்சுக்கோங்க.....ப்ளீஸ்....ப்ளீஸ்.....அழாதீங்க தேவ்.....நான் தெரியாம பண்ணிட்டேன்.....ப்ளீஸ் மன்னிச்சுக்கோங்க.....ப்ளீஸ்...." என்று கெஞ்ச


"அடிப்பாவி......." என்று அதிர்ந்து போய் நின்றான் சூர்யா.


"நீ அடிச்சதுக்காகவாடி நான் கண் கலங்கி நிற்குறேன்????" என்று சூர்யா கேட்கவும்


"அப்போ இல்லையா????" என்று குழப்பமாக கேட்டாள் வெண்ணிலா.


"லூசு பொண்ணே.....நீ என் மேல இந்தளவிற்கு பாசமாக இருக்கியேனு நினைச்சு என் கண் கலங்குதுடி....." என்று சூர்யா அவளது தலையில் செல்லமாக தட்ட


"அப்படி எல்லாம் எதுவும் இல்லை....." என்று முறுக்கிக் கொண்டு நின்றாள் வெண்ணிலா.


"சரி இல்லைனாலும் பரவாயில்லை......உன்னோட கோபம் எனக்கு எல்லாமே காட்டிக் கொடுத்துடுச்சு......இனி நீயாக மறைச்சாலும் இது மாறப் போறது இல்ல ஐசு.....நீ இனிமேல் என் மேல கோபப்பட்டாலும் நான் புரிஞ்சுப்பேன்......என் மேல இருக்குற அளவு கடந்த காதலால தான் உனக்கு இந்தளவிற்கு கோபம் வருதுனு......" என்று சூர்யா கூறவும்


"கரெக்டா கண்டு பிடிச்சுட்டான் இடியட்......" என்று வெண்ணிலா அவனை மனதிற்குள் செல்லமாக திட்டிக் கொண்டு நின்றாள்.


"இப்போ நீ என்ன நினைச்சேன்னு நான் சொல்லவா???" என்று சூர்யா கேட்கவும்


"ஒண்ணும் தேவை இல்லை....நீங்க முதல்ல என் ரூமை விட்டு வெளியே போங்க...." என்று வெண்ணிலா கூற


"முடியாது...." என்று விட்டு அங்கு போடப்பட்டிருந்த நாற்காலியில் சூர்யா சட்டமாக அமர்ந்து கொண்டான்.


வெண்ணிலா கோபமாக அவனை பார்க்கவும் சூர்யா சிரித்துக் கொண்டே அவளருகில் எழுந்து வந்து அவள் முகத்தை தன் இரு கைகளாலும் ஏந்தினான்.


வெண்ணிலா அவனிடமிருந்து விலகப் பார்க்க
"ப்ளீஸ்......" என்று சூர்யாவின் கெஞ்சலான ஒரு வார்த்தையில் வெண்ணிலா கட்டுப் பட்டு நின்றாள்.


"இதோ பாரு ஐசு......என்ன பிரச்சனை வந்தாலும் எத்தனை பேர் நம்ம லைஃப்ல பிரச்சினையை உருவாக்கினாலும்.....ஏன் நீயாகவே என்னை விட்டு விலகி போக நினைச்சாலும் என் உடம்புல கடைசி மூச்சு இருக்குற வரைக்கும் என் மனசுல உன்னை தவிர வேற எந்த பொண்ணுக்கும் இடம் கிடையாது......என்ன தான் உலகி அழகியே வந்து என் முன்னாடி நின்னாலும் என்னுடைய காதல் உனக்கு மட்டும் தான்......" என்று சூர்யா கூற வெண்ணிலா கண்கள் கலங்க அவனை தாவி அணைத்துக் கொண்டாள்.


"என்ன தான் சொன்னாலும் என் புத்திக்கு ஏற மாட்டேங்குதே தேவ்......அவளை பார்த்தாலே எனக்கு கோபம் கோபமாக வருது.....எனக்கு பிராமிஸ் பண்ணுங்க இனிமேல் அவளை பார்க்க மாட்டேன், பேச மாட்டேன்னு......" என்று வெண்ணிலா கூறவும்


தன்னிடமிருந்து அவளை பிரித்து நிறுத்திய சூர்யா
"நிலா அவளும் உன்னை மாதிரியே ஒரு பொண்ணு தானே....அப்படி இருக்கும் போது நீயே ஒரு பொண்ண பத்தி தப்பாக நினைக்கலாமா சொல்லு???? எனக்கு அபி, அச்சு எப்படியோ அப்படி தான் ஜனனியும்......அவ என்னோட பிரண்ட்.....நல்லா கேட்டுக்கோ பிரண்ட் தட்ஸ் இட்.....ஏன் ஒரு பையனும், பொண்ணும் பிரண்ட்ஸா பழக கூடாதா என்ன????" என்று கேட்க வெண்ணிலாவோ முழுமையாக அவனது கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் நின்றாள்.


"நிலா இப்போ நான் உனக்கு ஒண்ணு சொல்றேன்....எனக்கு ஜனனியோட நட்பும் முக்கியம் உன் மேல இருக்குற காதலும் முக்கியம்.....இரண்டையும் எந்த பிரச்சினையும் இல்லாமல் நான் சுமூகமாக என் லைஃப்ல கொண்டு போவேன்.....புரிஞ்சுதா????" என்று சூர்யா கேட்கவும்
அவன் மனது கஷ்டப்பட்டு விடக் கூடாது என்பதற்காக சிரித்த முகமாக அவனை பார்த்து தலை ஆட்டினாள் வெண்ணிலா.


ஆனால் சூர்யா பின்னாளில் தான் கொடுத்த வாக்கிற்காக திண்டாடப் போவதை அறியாமல் வெண்ணிலாவை சமாதானப்படுத்தி விட்டேன் என்று பெருமிதத்துடன் நின்று கொண்டிருந்தான்.


கடலினில் மீனாக இருந்தவள் நான்

உனக்கென கரை தாண்டி வந்தவள் தான்

துடித்திருந்தேன் தரையினிலே

திரும்பிவிட்டேன் என் கடலிடமே

ஒரு நாள் சிரித்தேன் மறு நாள் வெறுத்தேன்

உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே

மன்னிப்பாயா மன்னிப்பாயா

மன்னிப்பாயா

கண்ணே தடுமாறி நடந்தேன்

நூலில் ஆடும் மழையாகி போனேன்

உன்னால்தான் கலைஞனாய் ஆனேனே

தொலை தூரத்தில் வெளிச்சம் நீ

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே

மேலும் மேலும் உருகி உருகி உனை எண்ணி ஏங்கும்

இதயத்தை என்ன செய்வேன்

ஓஹோ உனை எண்ணி ஏங்கும்

இதயத்தை என்ன செய்வேன்


ஓடும் நீரில் ஓர் அலைதான் நான்

உள்ளே உள்ள ஈரம் நீதான்

வரம் கிடைத்தும் நான் தவர விட்டேன்

மன்னிப்பாயா அன்பே


காற்றிலே ஆடும் காகிதம் நான்

நீதான் என்னை கடிதம் ஆக்கினாய்

அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன்

என் கலங்கரை விளக்கமே

ஒரு நாள் சிரித்தேன் மறு நாள் வெறுத்தேன்

உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே

மன்னிப்பாயா மன்னிப்பாயா

மன்னிப்பாயா மன்னிப்பாயா

மன்னிப்பாயா

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்

அன்பிற்க்கும் உண்டோ அடைக்கும் தாழ்

ஆர்வளர் புண் கண்ணீர் பூசல் தரும்

அன்பிலார் எல்லாம் தமக்குரியர்

அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு

புலம்பல் என சென்றேன்

புலினேன் நெஞ்சம் கலத்தல் உருவது கண்டேன்

ஏன் என் வாழ்வில் வந்தாய் கண்ணா நீ

போவாயா காணல் நீர் போலே தோன்றி

அனைவரும் உறங்கிடும் இரவெனும் நேரம்

எனக்கது தலையணை நனைத்திடும் நேரம்

ஒரு நாள் சிரித்தேன் மறு நாள் வெறுத்தேன்

உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே

மன்னிப்பாயா மன்னிப்பாயா

மன்னிப்பாயா மன்னிப்பாயா

கண்ணே தடுமாறி நடந்தேன்

நூலில் ஆடும் மழையாகி போனேன்

உன்னால்தான் கலைஞனாய் ஆனேனே

தொலை தூரத்தில் வெளிச்சம் நீ

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே

மேலும் மேலும் உருகி உருகி

உனை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்

ஓஹோ உனை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்


மறுபடியும் சூர்யாவின் தொலைபேசி அடிக்க மனதில் எழுந்த சிறு பயத்தோடு போனை எடுத்து பார்த்த சூர்யா திரையில் வேறு பெயர் தெரியவும் நிம்மதியாக பெருமூச்சு விட்டு கொள்ள வெண்ணிலா அவனைப் பார்த்து வாய் விட்டு சிரித்தாள்.


வெண்ணிலாவின் சந்தோஷம் சூர்யாவையும் தொற்றிக் கொள்ள வெண்ணிலாவிடம் விடைபெற்று விட்டு சூர்யா தன் ஆபீஸை நோக்கி புறப்பட்டான்.


வெண்ணிலா தன் மனதினுள் நிலவிய ஜனனி பற்றிய பயத்தை தற்காலிகமாக தூர ஒதுக்கி விட்டு தன் அன்றாட வேலைகளை கவனிக்க சென்றாள்.


அதன் பிறகு சூர்யாவோடு வெண்ணிலா சுமூகமாக பேசிக் கொண்டு இருந்தாலும் அவ்வப்போது ஜனனி பற்றிய பயம் அவளை சூழ்ந்து கொள்ளும்.


சூர்யாவோடு வெண்ணிலா வெளியே எங்காவது சென்றால் ஜனனியும் ஏதாவது காரணம் சொல்லி அவர்களோடு இணைந்து கொள்வாள்.


வெண்ணிலாவிற்கு இதை நினைத்து கோபமாக வந்தாலும் சூர்யாவிற்காக எதுவும் பேசாமல் சிரித்த முகத்துடன் இருக்க பெரும் பாடு படுவாள்.


சில வேலைகளில் ஜனனியின் பார்வை சூர்யாவையே சுற்றி வருவதைப் பார்த்து வெண்ணிலாவிற்கு அச்சம் தொற்றிக் கொண்டாலும் வெளியில் தைரியமாக இருப்பதை போல அவள் தன்னை காட்டிக் கொள்வாள்.


ஜனனியோ வெண்ணிலாவை எப்படியாவது சூர்யாவிடமிருந்து பிரித்து விட வேண்டும் என்று தன் மனதிற்குள் கங்கணம் கட்டிக்கொண்டு இருந்தாள்.
 




Last edited:

Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
வெண்ணிலாவின் காலேஜ் படிப்பு நிறைவடைந்ததும் உடனே வேலையில் சேர்ந்து கொள்ள விரும்பாத வெண்ணிலா தன் பாடல் வேலையில் கவனம் செலுத்த தொடங்கினாள்.


குறுகிய காலத்திலேயே அவளது குரல் வளத்தினால் வெண்ணிலா பிரபல்யம் ஆகி விட அவளது குடும்பத்தினர் வெண்ணிலாவை எண்ணி பெருமிதம் கொண்டனர்.


சூர்யா வெண்ணிலாவோடு தொலைபேசி வாயிலாக அடிக்கடி பேசிக் கொண்டாலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவளை சந்திப்பதை விடவில்லை.


சூர்யாவிற்கு திருமணம் செய்து வைக்கலாம் என்று ஆரம்பத்திலேயே மகாலட்சுமி கூற சூர்யா வெண்ணிலாவை மனதில் வைத்து திருமணம் இப்போது வேண்டாம் என்று தள்ளி போட்டு கொண்டு இருந்தான்.


மகாலட்சுமியோ அடிக்கடி
"உன் வயசு தானே வெற்றிக்கும், அபிக்கும்.....அவங்களுக்கு ஒரு பையனும் இருக்குறான்.....ஆனா நீ இன்னும் தனியாளா சுத்திட்டு இருக்க......எப்போ தான் டா கல்யாணத்துக்கு சம்மதிப்ப????" என்று கேட்பார்.


அந்த நேரத்தில் சூர்யா ஏதாவது சாக்கு சொல்லி தப்பித்து விடுவான்.


தற்போது வெண்ணிலாவின் படிப்பும் நிறைவடைந்த நிலையில் வீட்டில் தங்களது திருமணம் பற்றி பேசலாம் என்று வெண்ணிலாவும், சூர்யாவும் முடிவெடுத்து கொள்ள ஜனனி இதை கேட்டு உச்சக்கட்ட அதிர்ச்சி அடைந்தாள்.


சூர்யா செல்லும் இடமெல்லாம் ஜனனியும் வருவதனால் திருமணம் பற்றிய இவர்களது பேச்சில் ஜனனியும் கலந்து கொண்டாள்.


தங்கள் திருமணப் பேச்சை கேட்டு ஜனனி அதிர்ச்சியானதைக் கண்டு கொண்ட வெண்ணிலா எப்படியாவது திருமணத்தை விரைவாக நடத்தி விட வேண்டும் என்று உறுதி பூண்டு கொண்டாள்.


ஆனால் இன்று அவள் கொண்ட உறுதி அடுத்த கணமே தூள் தூளாக உடைந்து போக போகிறது என்பதை அவள் அப்போது அறியவில்லை.


அதன் பிறகு சூர்யா எப்போது வீட்டில் இதைப் பற்றி பேசுவது என்று பிறகு சொல்வதாக கூறவும் வெண்ணிலாவும் தன் வீட்டை நோக்கி புறப்பட்டாள்.


வீடு நோக்கி சென்று கொண்டிருந்த வெண்ணிலா அப்போது தான் தன் பர்ஸை மறந்து விட்டு வந்ததை எண்ணி தன் காரை மறுபடியும் அதே இடத்திற்கு திருப்பினாள்.


அங்கு சூர்யாவின் கார் நிற்கவும் குழப்பமடைந்த வெண்ணிலா
"இவன் இன்னும் போகாமல் இங்க என்ன பண்ணிட்டு இருக்கான்???" என்று யோசித்து கொண்டே உள்ளே சென்ற வெண்ணிலா அவர்கள் ஏற்கனவே அமர்ந்திருந்த இடத்தில் அவளது பர்ஸை காணவும் அதை சென்று எடுத்துக் கொண்டாள்.


எடுத்துக்கொண்டு திரும்பியவள் எதிரில் லிப்டினுள் சூர்யாவும், ஜனனியும் ஒன்றாக நுழைவதை பார்த்து சட்டென்று நின்றாள்.


"சூர்யா!!!!!! உண்மையாகவே அது சூர்யாவா???? முக்கியமான வேலை இருக்குன்னு சொன்னானே......" என்று யோசித்து கொண்டு நின்ற வெண்ணிலா லிப்டில் இருந்து ஆட்கள் இறங்கும் அந்த தளத்தை யோசனையோடு பார்த்தாள்.


ஜனனியின் தோளில் கை போட்டாவாறு மிகவும் நெருக்கமாக நடந்து செல்பவனைப் பார்த்து வெண்ணிலாவிற்கு கண் மண் தெரியாமல் கோபம் வந்தது.


ஆனால் ஒரு கணம் அவள் மனதோ
"அது சூர்யாவா????" என்று கேள்வி எழுப்ப


அவளோ
"அது சூர்யாவே தான்....இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நான் பார்க்கும் போது அவன் போட்டிருந்த அதே சந்தன நிற ஷர்ட்....அந்த ஷர்ட் நான் அவனுக்காக ஸ்பெஷலா ஆர்டர் பண்ணி வாங்கி கொடுத்தது.....அந்த கலர் ஷர்ட் இங்கே எங்கேயும் இல்லை....." என்று தன் மனச்சாட்சிக்கு பதில் சொன்னவள்


"டபுள் கேம் ஆடுறியா சூர்யா??? அதனால தான் அன்னைக்கு ஜனனியை பார்க்காம, பேசாம இருக்க முடியாதுனு சொன்னியா??? இது தெரியாம நான்.....எவ்வளவு பெரிய முட்டாள்...." என்று தன்னையே திட்டிக் கொண்ட வெண்ணிலா கோபமாக தன் காரை எடுத்துக்கொண்டு புறப்பட்டாள்.


வீட்டுக்கு வந்து சேர்ந்த பின்பும் அவளது உள்ளக்குமுறல் அடங்கவில்லை.


"ஏமாத்திட்டான்.....ஏமாத்திட்டான்.....ஏமாத்திட்டான்......" என்று மீண்டும் மீண்டும் அதையே புலம்பிக் கொண்டிருந்த வெண்ணிலா அவளது போன் அடிக்கவும் எடுத்து பார்த்தாள்.


"தேவ்......." என்று போனில் தெரிந்த அந்த பெயரை படித்தவள் கோபமாக போனை தூக்கி வீச போன் சில்லு சில்லாக உடைந்து நொறுங்கியது.


மறுபடியும் சூர்யா அழைப்பை மேற்கொள்ள போன் சுவிட்ச் ஆஃப் என்று வரவும் சூர்யா குழப்பமடைந்தான்.


"ஏன் போனை ஆஃப் பண்ணிட்டா???" என்று யோசித்து பார்த்த சூர்யா வெற்றிக்கு அழைப்பை மேற்கொண்டான்.


"சொல்லுடா சூர்யா.....பேசி ரொம்ப நாள் ஆச்சு...." என்று வெற்றி கூறவும்


"ஆமாடா ரொம்ப நாள் தான்....காலையில தான் பேசிட்டு ரொம்ப நாளாம்....." என்று சூர்யா கூற மறுமுனையில் வெற்றி சிரித்துக் கொண்டான்.


"சரி என்ன விஷயம் சொல்லு???" என்று வெற்றி கேட்கவும்


சிறிது தயங்கிய சூர்யா
"நிலா போன் சுவிட்ச் ஆஃப் னு வருது.....நீ போய் கொஞ்சம் என்னனு பார்க்குறியா??? வீட்டுக்கு தான் போறேனு சொல்லிட்டு போனா...." என்று கூற


"டேய்.....மாப்பிள்ளை..." என்று வெற்றி கூச்சலிட்டான்.


"டேய்.....டேய்.....சத்தம் போட்டு மானத்தை வாங்காம போய் பாருடா....." என்று சூர்யா கூறவும்


"எத்தனை நாளாடா நடக்குது இது????" என்று கேட்டான் வெற்றி.


"நீயே கெஸ் பண்ணு...." என்று சூர்யா கூற


சிறிது நேரம் யோசித்த வெற்றி
"அக்ஸயா பர்த்டே பங்சன் அப்போ நிலாவை பத்தி கேட்டியே அப்போ இருந்தா???" என்று கேட்கவும்


"இல்லை....." என்று கூறினான் சூர்யா.


"அப்போ வேற எப்போ....." என்று யோசித்த வெற்றி


"தெரியல நீயே அந்த அறிய வரலாற்றை சொல்லு....." என்று கூற


"வெண்ணிலா ப்ளஸ் 1 படிக்கறப்போ ஒரு டைம் நீ வீட்டுக்கு வர சொல்லி என்ன இழுத்துட்டு போனலே.....அன்னைக்கு கூட வெண்ணிலா வீட்டில் இல்லைனு சொன்ன அப்புறம் தான் நான் உள்ளே வந்தேன்.....அப்போ இருந்து......" என்று கூறினான் சூர்யா.


"ஆமா ஆமா.....நிலா வேற அன்னைக்கு மந்திரிச்சு விட்ட ஆடு மாதிரி திரிஞ்சாலே....." என்று வெற்றி கேலி சிரிப்போடு கூற


"ஏய்......" என்று அவனை மிரட்டினான் சூர்யா.


"அப்போ கிட்டத்தட்ட ஆறு,ஏழு வருஷமாக போகுதா இந்த சண்டைகோழி காதல்?????" என்று வெற்றி கேட்கவும்


"ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்....." என்று சூர்யா கூற


"ப்ப்ப்ப்பா.....பலே கேடிங்க இரண்டு பேரும்....சத்தமே இல்லாம ஒரு லவ் பிலிம்மே எடுத்து இருக்கிறீங்க......" என்று வெற்றி சிரித்துக் கொண்டான்.


"எப்படியோ இத்தனை வருஷமா உங்க சண்டையை பார்த்து ரசிச்ச நாங்க வாழ்க்கை பூராவும் அதைப் பார்த்து ரசிக்க போறோம்....." என்று வெற்றி சந்தோஷமாக கூற


மறுமுனையில் சூர்யா
"ஏன்டா இப்படி தான் நீ வாழ்த்து சொல்லுவியா???" என்று கடுப்பாக கேட்க மனம் விட்டு சிரித்தான் வெற்றி.


"சரி எப்படியாவது வீட்டுல பேசி இந்த கல்யாணத்தை ஜாம் ஜாம்னு நடத்தி வைக்குற என்ன புரிஞ்சுதா???" என்று சூர்யா கேட்கவும்


"மாப்பிள்ளை சொல்லிட்டாரு இனி அப்பீல் ஏது??? சிறப்பாக செஞ்சிடுவோம்...." என்று விட்டு போனை வைத்த இந்த விடயத்தை முதலில் அபிநயாவிடம் கூற அவளோ சந்தோஷத்தில் திக்கு முக்காடிப் போனாள்.


தன் கையை கிள்ளி பார்த்து நடப்பது கனவா? நிஜமா? என்று பார்த்தவள் சந்தேகம் தாளாமல் வெற்றியின் கையிலும் கிள்ளி பார்த்தாள்.


வெற்றி சத்தமிட்டு கத்தவும்
"ஐயோ நிஜம் தான்....." என்று துள்ளிக் குதித்தவள் அடுத்து என்ன செய்வது என்று வெற்றியோடு இணைந்து பேசத் தொடங்கினாள்.


சிறு வயதிலேயே சூர்யா, வெண்ணிலாவின் நட்புறவு பற்றி தெரிந்து இருந்ததால் ஆண்டாள் மற்றும் அழகர் இதற்கு சம்மதிக்க மாட்டார்கள் என கண்டு கொண்ட வெற்றி மெதுவாக வெண்ணிலாவின் திருமணம் பற்றிய பேச்சை எடுத்து அதில் சூர்யாவின் பெயரை லாவகமாக உள்ளிழுக்க ஆண்டாள் மற்றும் அழகர் ஒரு கணம் தயங்கினர்.


என்ன தான் இருவரும் சண்டையிட்டாலும் ஒருவர் மேல் ஒருவர் கொண்டு இருந்த அன்பு தான் இத்தனைக்கும் காரணம் என்பதை புரிய வைத்த வெற்றி அவர்களை இலகுவாக இந்த திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தான்.


மறுபுறம் சூர்யா பெருமாள் மற்றும் மகாலட்சுமியை சம்மதிக்க வைத்து விட வெண்ணிலாவோ இதை எதையும் அறியாமல் சூர்யாவின் மேல் கட்டுக்கடங்கா கோபத்தோடு இருந்தாள்.


வெண்ணிலாவிற்கு சர்ப்பரைஸ் அளிக்கும் எண்ணத்தோடு இருந்த வெற்றி வெண்ணிலாவிடம் இந்த திருமண விடயம் பற்றி பேசாமலே போனது பின்னாளில் பாரிய பிரச்சினையையும் உருவாக்கி தரும் என்று யாரும் அன்று யோசிக்கவில்லை.


இரண்டு, மூன்று மாதங்கள் எல்லாம் சாதாரணமாக சென்று கொண்டிருக்கையில் சூர்யாவும், வெண்ணிலாவை தொந்தரவு செய்யவில்லை.


திருமண ஏற்பாட்டோடு அவளை சந்தோஷப்படுத்தலாம் என்று சூர்யா நினைத்து இருக்க வெண்ணிலாவோ நடக்க இருக்கும் நிகழ்வை பற்றி எந்தவித கவலையுமின்றி வைபவுடன் விளையாடிக் கொண்டிருந்தாள்.


அடுத்த நாள் காலை தன் அறையில் இருந்து குளித்து முடித்து விட்டு படியிறங்கி வந்த வெண்ணிலா வீடு முழுவதும் நிறைந்திருந்த அலங்காரங்களைப் பார்த்து அதிசயித்து நிற்க வாயிலில் சூர்யாவின் கார் வந்து நின்றது.


"என்ன இது????" என்று வெண்ணிலா யோசித்து கொண்டு நிற்கையில்


"அண்ணி......." என்று அக்ஸயா ஓடி வந்து அவளைக் கட்டி கொள்ள வெண்ணிலா அதிர்ச்சியாகி நின்றாள்........
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top