• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Ennai Ko(Ve)llum Vennilavei - 31

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Aadhiraa

SM Exclusive
Author
Joined
Jan 17, 2018
Messages
1,073
Reaction score
7,772
Location
Tirunelveli
ஹாய்.....ஹலோ...வணக்கம்

நான் வந்துட்டேன்...

ஹி ஹி தினமும் உனக்கு இதே வேலையா போச்சுன்னு நீங்க திட்டுறது என் காதில் விழுந்தாலும், அதையெல்லாம் கண்டுக்காம கெத்தா தில்லா தனியா வரேன்னா அதுக்கு ஒரே ஒரு காரணம் உங்களால என்னைத் தேடி வந்து அடிக்க முடியாதுங்கிற நம்பிக்கையால மட்டும் தான்..

அப்புறம் கதைக்கு லைக் கொடுக்காம டேக்கா கொடுக்கும் உங்களுக்கு ஒன்றே ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்... "நீங்க யாரா வேணும்னாலும் இருக்கலாம் ஆனா ஒரு குயந்தை புள்ள பாவம் உங்களுக்கு வேண்டாம்..அதானால ஒழுங்கா வந்து 2 வரில குறை சொல்லிட்டு போங்க..

இன்னொரு முக்கியமான விஷயம் Nice UD super UD போடும் மகா ஜனங்களே, கருத்து சொல்ல சொன்னா குயந்தை புள்ளைய ஏமாத்தி 2 வார்த்தை சொல்லுறீங்களா..?:mad::mad::mad:

இனி இந்த ரெண்டு வார்த்தை வந்துச்சு அப்புறம் ஒரு மணி நேரத்துக்கு ஒரு யூடி கொடுத்து படிக்க வச்சிருவேன் பார்த்துக்கோங்க..

ரொம்ப நேரம் பேசிட்டேன்... இப்போ வாங்க நாம போய் மதியையும் ஆதிக்கையும் வேடிக்கைப் பார்க்கலாம்..

ஹி ஹி முக்கியமா ஒன்ன மறந்துட்டேன்..எனக்கு கருத்துகளை வாறி வழங்கி உற்சாகப்படுத்தும் சகோதர சகோதரிகளான banumathi, priya praveenkumar, saroja, nadarajan, keerthi, chitrasaraswathi, navamani, thara, sridevi, mathiman, deepi, barti, ugina, sony, premi, riha, sahanama, lakshmiperumal, stella, nishirdha, chitraravi, banupriya, maha, pradeep, sanshiv, gashini, saranya, thadsa, anu எல்லோருக்கும் கோடான கோடி நன்றி மக்களே கோடான கோடி நன்றி..

இப்போ என் இன்றைய பேச்சோட இறுதி கட்டத்தை நெருங்கிட்டோம் சோ கடைசியா ஒன்றே ஒன்று சொல்லிக் கொள்ள(ல்ல) ஆசைப்படுகிறேன் மக்களே, தயவு செஞ்சி என்னை mam, akka, சொல்லி கஷ்டப்படுத்தாதீங்க மக்காஸ்.. ஆதிரா சொல்லுங்க போதும்.. எனக்கு சிப்பு சிப்பா வருது...பிகாஸ் நான் பொறந்ததே 2010ல தான் பாஸ்..

அம்புட்டு தான் வாங்க கதைக்குள்ள ஓடிப் போகலாம்..

இப்படிக்கு,
உங்கள் அன்புள்ள பண்புள்ள எல்லாமும் உள்ள
குயந்த புள்ள..
 




Last edited:

Aadhiraa

SM Exclusive
Author
Joined
Jan 17, 2018
Messages
1,073
Reaction score
7,772
Location
Tirunelveli
~31~

கதவை அகலத் திறந்து வைத்துப் பேசும் ராஜிடம், திறந்திருக்கும் கதவினைக் கண்களால் சுட்டிக் காட்ட, அவன் சொல்ல வருவதைப் புரிந்து கொண்ட ராஜும் கதவின் கைப்பிடியில் இருந்து கையை எடுத்து ஆதிக்கின் எதிரே வந்து நின்றான்..

“என்ன..?” எப்போதையும் போல் ஒற்றை வார்த்தை உதிர்த்தவன், மடிக்கணியை மூடி வைத்துவிட்டுச் சாய்ந்து அமர,

“என்ன என்ன..?” என எதிர்க் கேள்வி கேட்ட ராஜ் அமரவும் இல்லை, ஒரு இடத்தில் நிற்கவும் இல்லை..

“இப்போ என்ன ஆச்சுன்னு கேட்டேன்..?” என்ற ஆதிக்கிடம்

“இன்னும் என்ன ஆகனும்..?” எனப் பதில் கேள்வி கேட்க

“வர வர நீ கூட நல்லா பேசக் கத்துகிட்ட ராஜ்..” மெச்சுதலாய் அவன் சொன்னதும் மறுத்துப் பேச ராஜ் வாயைத் திறக்கும் போது சரியாக உள்ளே நுழைந்தான் விகாஷ் ரகுவரன்..

“வாடா ரகு..” வரவேற்கும் ஆதிக்கைப் பார்த்துச் சிரித்தவன், நின்று கொண்டிருக்கும் ராஜின் தோளில் ஓர் அடி வைத்து

“என்ன ஆதி..என் மாப்பிள்ளைய எதுக்கு கோபப்பட வைக்க..?” கேலியாய் கேட்கும் விகாஷுக்கு, காலை வணக்கத்தைச் சொன்ன ராஜ்,

“சார், என்ன நடந்துச்சுன்னு சொன்னா நீங்க இப்படி பேச மாட்டீங்க..?” ராஜின் பதிலில் விகாஷ் ஆதிக்கிடம் விழிகளால் என்ன என்று கேட்க, அதற்கு தெரியவில்லை எனச் செய்கை செய்தவன்..

“டேய் என்ன பண்ணுனேன்னு சொல்லித் தொலையேன் டா..” ஆதிக்கின் கத்தலை பொருட்படுத்தாதவன்..

“சார்..” என்று விகாஷை அழைக்க

“சார் இல்ல மச்சான்..எங்க சொல்லு பார்ப்போம்..” என்றவனிடம்,

“எனக்கு இப்படியே கூப்பிட்டு பழகிட்டு..அதைவிடுங்க..” மேலே அவன் கதையை தொடங்கும் முன் குறுக்கிட்ட விகாஷ்

“ஒரு நிமிஷம் டா ஒரு பொசிஷன்ல உட்கார்ந்துக்கிறேன்..நீயும் உட்காரு..” என்றவன் சாய்வு இருக்கையில் அமர்ந்துகொண்டு எதிரே அமர்ந்த ராஜிடம் சொல்லு எனக் கை காட்ட, ஆதிக்கும் கதை கேட்கும் பாவனையில் அமர்ந்துவிட்டான்..

நேற்று லீனாவை ஆதிக் அழைத்துச் சென்றதை முதல் குற்றமாகச் சொல்ல, “ஏன் லீனா ஆதிக்கோட பிஏ தான..?” என விகாஷ் கேள்வி எழுப்பியதும்

“என்ன பிஏ..அவளை வேலைய விட்டு அனுப்ப சொன்னா கேட்கல..அவளோட பார்வையும் பேச்சும்..இப்போ தான் அண்ணி வீட்டுக்கு வந்திருக்காங்க..அவங்க வந்து முழுசா ரெண்டு நாள் கூட ஆகல..அதுக்குள்ள…” என்றவனைத் தடுத்த ஆதிக்

“டேய்..நான் லீனாவை என்கூட கூட்டி போனதுக்கும் மதிக்கும் என்னடா சம்பந்தம்..?” எனக் கேட்க, ஆதிக்கை முறைத்துப் பார்த்தவன்

“இவ்ளோ நாள் இல்லாம இப்போ எதுக்கு அவளைக் கூட கூட்டிப் போகணும்..?” திருப்பித் திருப்பி அதிலே வந்து நிற்கும் ராஜின் முன்னால் எழுந்து வந்து மேஜையின் மீது ஏறி அமர்ந்தவன்

“டேய் நீ எதை மீன் பண்ணி கேட்குறன்னு எனக்குச் சத்தியமா புரியல டா..ஆனா நான் லீனாவை என்கூட கூட்டிப் போனது வேற விஷயத்துக்காக..”

“அதுதான் என்ன விஷயம்..?”

நம்பாமல் கேள்வி கேட்கும் ராஜைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்டவன், “நேத்து வந்த மலேசியா க்ளைன்ட்ஸ்க்கு இங்க்லீஸ் விட மலாய் தான் நல்லா தெரியுமாம்..எனக்கு மலாய் தெரியாதுன்னு தான்டா லீனாவ என்கூட கூட்டி போய் அவங்கள ஆஃபிஸியலா பார்த்துட்டு வந்தேன்..” அவனின் பதிலைக் கேட்டவன்

“அப்போ எதுக்கு நேத்து ஆல்கஹால் எடுத்தீங்க..?” ராஜ் இக்கேள்வி கேட்டதும், சாடாரென திரும்பியவன் விகாஷைப் பார்க்க, ‘இது உண்மையா’ என விழிகளால் கேட்ட விகாஷ்

“டேய் அவன் குடிச்சிருக்க மாட்டான் டா..மோந்து பார்த்திருப்பான்..” என நக்கலடிக்க

விகாஷின் கூற்றில் வாய்விட்டு சிரித்த ராஜ், “ரெண்டே ரெண்டு அவுன்ஸ் குடிச்சிட்டு நேத்து அண்ணன் வந்த வரத்து இருக்கே..காரை வாட்டர் வாஷுக்கு அனுப்பிருக்கோம்..” இவன் சொன்ன பாவனையில் விகாஷும் உடன் சேர்ந்து சிரிக்க

“டேய் நாலு ஐஞ்சு க்ளாஸ் கிட்ட குடிச்சேனே டா..?” ஆதிக்கின் கேள்விக்கு பக்கென சிரித்த ராஜ்

“அதுல ரெண்டு க்ளாஸ் தான் ஹாட் மத்தது எல்லாம் கோக் தான்..” ஆதிக்கிடம் உரைத்தவன் திரும்பி விகாஷிடம்

“நேத்து என்ன பண்ணி வச்சாங்கன்னு தெரியல..காலையில அண்ணி வந்து ‘உங்க அண்ணன் இவ்ளோ குடிக்கிற வரைக்கும் எதுக்கு சும்மா இருந்தீங்கன்னு கேட்டாங்க பாருங்க..ஹா ஹா செம காமெடி..” ராஜும் விகாஷும் சிரித்து முடித்ததும், மதிக்கும் லீனாவுக்கும் நடந்த வாக்குவாதத்தை டிரைவர் மூலம் அறிந்து கொண்டவன் அதையும் தெளிவாய் சொல்லி முடிக்க, காதல் மணம் புரிந்த விகாஷிற்கு மதியின் மனமும் தெளிவாய் புரிந்தது..

சொல்லி முடித்தவனை அலுவல் வேலை இழுத்துக் கொள்ள, இருவரிடமும் பொதுவாய் சொல்லிக் கொண்டு ராஜ் வெளியேறியதும் ஆதிக்கிடம் திரும்பிய விகாஷ்,

“ராஜ் வர வர நல்லா பேசுறான் இல்ல” என்றான் சிறிது தூரத்தில் சென்று கொண்டிருக்கும் ராஜின் மீது பார்வையை பதித்தவாறு..

“அவன் இதைவிட நல்லா பேசுவான் ரகு..நம்ம ரெண்டு பேர்கிட்டயும் தான் கம்மி..” அவனும் ராஜின் மீது பார்வையை பதித்தே சொல்ல

“நம்ம ரெண்டு பேரும்னு ஏன் என்னைய சேர்க்க, அவன் உன்கிட்ட இப்போ ரொம்ப உரிமையா பேசுறானே..எப்படி இப்படி மாறுனான்..?” கேள்வியாய் கேட்ட விகாஷைப் பார்த்து சிரித்தவன்

“எல்லாம் மதியோட வேலை தான்...மேடம் ஆர்டர் போட்டு இவனை மாத்திட்டாங்க..” என்றவனிடம்

“எப்படி டா..கல்யாணம் முடிஞ்சு இருந்ததே இரண்டு நாள் தான..?” ஆர்வமாய் கேட்கும் விகாஷிடம் ஆம் எனத் தலையசைத்த ஆதிக்

“கல்யாணமாகி வந்த அன்னைக்கு சாய்ந்திரமே அவனை என்கிட்ட கூட்டி வந்து ‘ராஜை அண்ணன் கூப்பிடச் சொல்லுங்கன்னு சண்டைப் போட்டான்னா பார்த்துக்கோ..” என்றவனிடம்

“அப்புறம் எதுக்கு போனாங்க..?” என்ற விகாஷிடம்

“டேய் அவளுக்கு இந்தக் கல்யாணத்துல விருப்பம் இல்ல அதான் போயிட்டா..” முன்னுக்குப்பின் முரணாய் பதில் சொல்லும் நண்பனை முறைத்தவன்

“அப்புறம் எதுக்கு டா உரிமையா உன்கிட்ட சண்டை போடணும்..”

“எப்படிச் சொல்ல..? அவளுக்கு என்னைப் பிடிக்கும் ஆனா கட்டாயப்படுத்தி அவங்க பேரெண்ட்ஸ் நடத்தி வச்ச இந்தக் கல்யாணத்தை தான் பிடிக்காது..” இவ்வளவு தெளிவான பதிலை எதிர்பார்க்காத விகாஷ்

“இதை உன்கிட்ட மதியே சொன்னாங்களா..?” என்க
 




Aadhiraa

SM Exclusive
Author
Joined
Jan 17, 2018
Messages
1,073
Reaction score
7,772
Location
Tirunelveli
ஆமோதிப்பாய் தலையசைத்த ஆதிக்கை முடிந்தமட்டிலும் தாளித்தவன், “எதுக்கு டா நேத்து குடிச்ச..?” என அடுத்தக் கேள்வியை கேட்டு வைக்க

“ஏன் டா ஒரு இருபத்தி எட்டு வயசு வாலிபனுக்குக் குடிக்க அனுமதியில்லையா..?”

“மதி இந்தியா வந்தது உனக்குப் பிடிக்கலையா ஆதி..” விகாஷின் கேள்விக்கு மறுப்பாய் இல்லையென பதிலளித்த ஆதிக்

“என்னால அவளை அக்சப்ட் பண்ணிக்க முடியல..” என்றவனின் மனம் புரிந்த விகாஷ்..

“உன் மனைவி உன் மனைவியா மட்டும் தான திரும்பி வந்திருக்காங்க அப்புறம் என்ன..?” அவன் கேள்விக்கான அர்த்தம் புரிந்தவன்..

“மதிய பத்தி எனக்கு நல்லா தெரியும் டா..அவள் நிழலைக் கூட யாரலையும் தொட முடியாது...பார்க்கப் பேச விளையாட்டு பொண்ணா தான் தெரிவா பட் ரொம்ப மெச்சூர்ட் அன்ட் கேரிங் ஆல்சோ..” முகம் பிரகாசிக்க பேசும் நண்பனைக் கண்டு சிரித்தவன்

“ஆதிக், உனக்கு மதியைப் பிடிக்குமா..?” இதுயென்ன கேள்வி என்ற பார்வை பார்த்தவனைக் கண்டு கொள்ளாத விகாஷ்

“நீ மதியை லவ் பண்ணுறீயா ஆதிக்..?” அவனது கேள்விக்கு தெரியவில்லையெனத் தோள் குலுக்கியவன், விகாஷின் கவனத்தை தொழில் விவாதத்தில் திருப்ப, அவனது மழுப்பல் புரிந்த விகாஷும் அத்தோடு மதியின் பேச்சை நிறுத்திக் கொண்டான்..

காலையில் உண்டதில் இருந்து அறைக்குச் செல்ல விடாமலே வேணி, மதியை வேலை வாங்கத் ‘தலையெழுத்தே’ என அனைத்தையும் செய்தவளுக்கு ஒரே நாளில் முதுகு வலி வந்திருந்தது..

மாலை ஆறு மணிக்கே ராஜ் வீட்டுக்கு வந்துவிட, மதியை அழைத்த வேணி அனைவருக்கும் காபி கொண்டு வரச் சொன்னார்..

மதிக்குத் தெரிந்த அருமையான வேலைக் காபி போடுவது மட்டுமே, தனியாக இருந்த நாட்களில் சுமதியிடம் இருந்து கற்றுக் கொண்டது..

ஆதிக் இல்லாததால் அவனைத் தவிர அனைவருக்கும் காபி கலந்து, சமையல் காரப் பெண் சொல்லிக் கொடுத்து தானே செய்த பஜ்ஜியை எடுத்துக் கொண்டு வந்த மதி, ஒவ்வொருத்தருக்காய் காபி கோப்பையை எடுத்துக் கொடுத்தாள்..

அனைவரும் அவள் காபி கப்பை கொடுத்ததும் குடிக்க, கையில் வைத்துக் கொண்டு தர்மரிடம் எதையோ கேட்டுக் கொண்டிருந்த வேணி மட்டும் குடிக்கவில்லை..

“காபி நல்லா இருக்குமா..” தர்மரைத் தொடர்ந்து ராஜும் ரேகாவும் கூட அவளைப் பாராட்டிவிட, இன்னும் வேணி குடிக்காததில் வருத்தம் கொண்ட மதி, “அத்தை காபியை குடிங்க..” எனப் பாசமாய் சொல்ல, அதே நேரம் வீட்டிற்குள் நுழைந்து, “அம்மா காபி…” எனக் கேட்டு அவரது அருகே அமர்ந்தான் ஆதிக் வர்மன்..

அவன் காபி கேட்டதும் மதியை வேணி திரும்பி பார்க்க, “இதோ போட்டுக் கொண்டு வரேன்..” என்றவள் திரும்ப

“வேண்டாம் மதி, இந்தா டா..” என்ற வேணி தன் கையில் இருந்த காபியை ஆதிக்கிடம் கொடுக்க

“அய்யோ அத்தை வேணாம்..” அவசரமாய் தடுத்தவளின் செய்கையில் ஒற்றுமையாய் ஏன் என ஐவரும் பார்த்து வைத்தனர்..

“ஹி ஹி..அத்தை நீங்க குடிங்க நான் அவங்களுக்கு வேற கொண்டு வரேன்னு சொல்ல வந்தேன்..” என்றவளை மற்றவர் நம்பினார்களோ இல்லையோ வேணி சுத்தமாய் நம்பவில்லை..

அவளின் அவசரத்தில் இருந்தே ஏதோ தடுகிடதத்தோம் செய்திருக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்ட ஆதிக் அன்னையின் கையில் இருந்து காபியை வாங்கி அருந்தத் துவங்கிய முதல், தன் முக பாவங்களை மாற்றப் பெரிதும் சிரமப்பட்டுத் தான் போனான்..

தர்மர் வேறு ஒவ்வொரு வாய்க்கும் மருமகளின் காபியை புகழ, ரேகா ஒரு படி மேலே சென்று, “மதி இனி தினமும் நீங்க தான் எனக்கு காபி போட்டுத் தரனும்..” எனக் கசாப்பு கடை ஆடாய் வரிசையில் நின்றுவிட்டாள்..

அவர்களின் பாராட்டுதலிலும் ஆதிக் மறைத்த முகப்பாவனைகளைக் கண்டுக் கொண்டதாலும் சிரித்தவள், “மாமா, காபி நல்லா இருக்கா..?” என்றவன் கைகளைச் சுரண்ட

யாரும் அறியாமல் அவளை முறைத்தவன் சிரமப்பட்டு காபி முழுவதையும் குடித்து முடிக்க, தன்னையே பார்த்து கொண்டிருந்த ரேகாவை பாவமாய் பார்த்து வைத்தாள் மதியழகி..

மதி ஆதிக்கிடம் பேசுவதையும் அவன் முறைப்பதையும் கவனித்த ரேகா, “ஆதிக் அத்தான் மதி காபி எப்படி இருந்துச்சுன்னு சொல்லிட்டு போங்க..பாவம் நமக்காக பஜ்ஜி வேற பண்ணிருக்காங்க..”

ரேகாவின் கூற்றில் சமாளிப்பாய் சிரித்த ஆதிக், “நல்லா இருக்கு..” என அதே சிரிப்போடு சொன்னவன் ‘எங்கே பஜ்ஜியை உண்ணச் சொல்லி விடுவார்களோ’ என்ற பயத்தில் அறைக்கு விரைந்துவிட

அவனது வேகத்தில் வெடித்த சிரிப்பை அடக்கி நின்றாள் மதியழகி..

தர்மரும் ராஜும் அவ்விடத்தைவிட்டு அகன்றதும் மதியின் கைகளை ஆறுதலாய் பிடித்துக் கொண்ட ரேகா, “கவலைப்படாதீங்க மதி, சீக்கிரமே அத்தான் உங்க கிட்ட பேசிடுவாங்க..” என்றதும் தன்னைப் பிடித்திருந்த அவளது கைகளைத் தனது மறுகைக் கொண்டு தட்டிக் கொடுத்தவள்..

“ம்ம்ம்..” என ஆழ பெருமூச்சிவிட்டு வருத்தமாய் இருப்பது போல் அறைக்குச் செல்ல, அவளது அபார நடிப்பைக் கண்டு வேணிக்கு போன நெஞ்சு வலி வந்துவிடும் போல இருந்தது..

அறைக்குச் சோகமாய் செல்லும் மதியை ரேகா கவலையாய் பார்த்து நிற்க, ஆதிக் குடித்த கோப்பையில் மிச்சம் இருந்த காபியை குடித்த வேணி “த்தூஊ..” எனத் துப்பினார்..

அத்தையின் சத்தத்தில் திரும்பிய ரேகா, “என்ன ஆச்சு அத்தை..?” என்க

இவ்வளவு நேரம் மதிக்கு பாவம் பார்த்த ரேகாவிடமும் அக்கோப்பையைக் கொடுத்து, “கொஞ்சமா குடிச்சுப் பாரு..” என்றார் வேணி

வேணியின் கரத்தில் இருந்து கோப்பையை வாங்கியவள் லேசாய் நாக்கில் காப்பியை வைத்துப் பார்க்க காரமும் கரிமசாலா மணமும் சேர்ந்து குமட்டியது..

அவளும் வேணியைப் போல “த்தூஊ” எனத் துப்ப

ரேகாவின் தோளைத் தட்டிய வேணி, “பாவம் மதி கிடையாது நாம தான்..” என்றவர் இவளை என்ன தான் செய்வது என யோசிக்க,

வேணிக்கு மதி போட்டுக் கொடுத்த காபியை நினைத்து விழுந்து விழுந்து சிரித்தாள் வதனரேகா..

அவளின் சிரிப்போடு இணைந்துகொண்ட வேணியும், “நல்ல வேளை என் பையன் என்னோட உயிரைக் காப்பாத்திட்டான்..” என்றதும்

“அப்போ அத்தானோட நிலைமை..” ரேகா மேலே பார்த்துக் கொண்டே கேட்க

“இன்னும் ரெண்டு நாள் அவனுக்கு நான் ஸ்டாப் கொண்டாட்டம்..ஒன்லி அவுட் கோயிங் தான் நோ இன்கம்மிங்..” என்ற வேணியும் ரேகாவும் மதியின் சிறுபிள்ளை செயலில் சிரித்தனர்..

அறைக்கு வந்த மதி, கட்டிலில் அமர்ந்திருந்த ஆதிக்கின் கைகளில் ஒற்றை மாத்திரையைத் திணித்து, “இதைப் போட்டுக்கோங்க..” எனத் தண்ணீர் தர

“பண்ணுறதெல்லாம் பண்ணிட்டு மாத்திரை வேறயா..” ஆதிக்கின் கோபப் பேச்சில் சிரிப்பை அடக்கியவள்

“நான் வலைய விரிச்சது வேற ஒருத்தருக்கு..நீங்களா வந்து சிக்குனா அதுக்கு நான் என்ன பண்ணமுடியும்..” திமிராய் சொல்லியவள்

“மாத்திரை வேணுமா வேண்டாமா..” என இறுதியாய் கேட்க

“எனக்கு உன் கரிசனம் ஒன்னும் தேவையில்லை..” என்றவன் உடை மாற்றச் செல்ல

“அப்போ பின் விளைவுகளுக்கு நான் பொருப்பல்ல…” என்றவளின் வார்த்தையில் இருந்த உள்குத்தை அறியாதவன் பாத்ரூம் கதவை அறைந்து சாற்றினான்..

ஆதியின் பிரச்சனைக்கு மதி ரெட் சிக்னல் போடுவாளா..?
 




Vijayasanthi

இணை அமைச்சர்
Joined
Jan 29, 2018
Messages
872
Reaction score
1,284
Location
Sivakasi
ஹாய்.....ஹலோ...வணக்கம்

நான் வந்துட்டேன்...

ஹி ஹி தினமும் உனக்கு இதே வேலையா போச்சுன்னு நீங்க திட்டுறது என் காதில் விழுந்தாலும், அதையெல்லாம் கண்டுக்காம கெத்தா தில்லா தனியா வரேன்னா அதுக்கு ஒரே ஒரு காரணம் உங்களால என்னைத் தேடி வந்து அடிக்க முடியாதுங்கிற நம்பிக்கையால மட்டும் தான்..

அப்புறம் கதைக்கு லைக் கொடுக்க டேக்கா கொடுக்கும் உங்களுக்கு ஒன்றே ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்... "நீங்க யாரா வேணும்னாலும் இருக்கலாம் ஆனா ஒரு குயந்தை புள்ள பாவம் உங்களுக்கு வேண்டாம்..அதானால ஒழுங்கா வந்து 2 வரில குறை சொல்லிட்டு போங்க..

இன்னொரு முக்கியமான விஷயம் Nice UD super UD போடும் மகா ஜனங்களே, கருத்து சொல்ல சொன்னா குயந்தை புள்ளைய ஏமாத்தி 2 வார்த்தை சொல்லுறீங்களா..?:mad::mad::mad:

இனி இந்த ரெண்டு வார்த்தை வந்துச்சு அப்புறம் ஒரு மணி நேரத்துக்கு ஒரு யூடி கொடுத்து படிக்க வச்சிருவேன் பார்த்துக்கோங்க..

ரொம்ப நேரம் பேசிட்டேன்... இப்போ வாங்க நாம போய் மதியையும் ஆதிக்கையும் வேடிக்கைப் பார்க்கலாம்..

ஹி ஹி முக்கியமா ஒன்ன மறந்துட்டேன்..எனக்கு கருத்துகளை வாறி வழங்கி உற்சாகப்படுத்து சகோதர சகோதரிகளான banumathi, priya praveenkumar, saroja, nadarajan, keerthi, chitrasaraswathi, navamani, thara, sridevi, mathiman, deepi, barti, ugina, sony, premi, riha, sahanama, lakshmiperumal, stella, nishirdha, chitraravi, banupriya, maha, pradeep, sanshiv, gashini, saranya, thadsa, anu எல்லோருக்கும் கோடான கோடி நன்றி மக்களே கோடான கோடி நன்றி..

இப்போ என் இன்றைய பேச்சோட இறுதி கட்டத்தை நெருங்கிட்டோம் சோ கடைசியா ஒன்றே ஒன்று சொல்லிக் கொள்ள(ல்ல) ஆசைப்படுகிறேன் மக்களே, தயவு செஞ்சி என்னை mam, akka, சொல்லி கஷ்டப்படுத்தாதீங்க மக்காஸ்.. ஆதிரா சொல்லுங்க போதும்.. எனக்கு சிப்பு சிப்பா வருது...பிகாஸ் நான் பொறந்ததே 2010ல தான் பாஸ்..

அம்புட்டு தான் வாங்க கதைக்குள்ள ஓடிப் போகலாம்..

இப்படிக்கு,
உங்கள் அன்புள்ள பண்புள்ள எல்லாமும் உள்ள
குயந்த புள்ள..
Ok akka????
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
Nice update Aadhiraa



எனக்கு ஒரு மணி நேரத்துக்கு ஒரு UD வேணும் அதான் .....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top