• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Ennai Ko(Ve)llum Vennilavei - 35 (Pre Final)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Aadhiraa

SM Exclusive
Author
Joined
Jan 17, 2018
Messages
1,074
Reaction score
7,776
Location
Tirunelveli
ஹாய் மக்காஸ்..

வந்துட்டேன் வந்துட்டேன்...நீங்க சொன்ன மாதிரியே அடுத்த அத்தியாயத்தோடு ஓடி வந்துட்டேன்..

கொஞ்சம் தாமதமானதுக்கு மன்னிக்கவும்..

அப்புறம் முந்தைய அத்தியாயத்துக்கு கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றியோ நன்றி...

இப்போ போய் மதி ஆதிக்கை பார்த்துட்டு வாங்க டியர்ஸ்...

இப்படிக்கு
உங்க குய்ந்த புள்ள
 




Aadhiraa

SM Exclusive
Author
Joined
Jan 17, 2018
Messages
1,074
Reaction score
7,776
Location
Tirunelveli
~35~

ஆதிக்கின் தொழில் வட்டாரத்தில் இன்னும் அவனது இல்வாழ்க்கை விமர்சிக்கப்பட்டுக் கொண்டேயிருக்க, அதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கும் பொருட்டும், மதியின் பெயர் இதற்குமேல் விமர்சிக்கப்படுவதை விரும்பாதவன் தொழில் முறை பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தான்..

முதல் நாளே மதியிடம் சொல்ல வேண்டுமென நினைத்திருந்தவன் வீட்டிற்கு வரும் போதே மணி ஒன்றைக் கடந்துவிட, காலையில் சொல்லிக் கொள்ளலாம் என நினைத்தவனை அடுத்தடுத்த அலுவல் வேலை விழுங்கிவிட்டது..

ஐந்து மணிக்கு ராஜ் சொன்னபின்பு தான் அவனுக்கு நினைவே வந்தது, அதன்பின் மிச்சமிருந்த வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு, ரேகாவை மருத்துவமனை அழைத்துச் செல்ல ராஜ் கிளம்பிய பின், அவன் அனைத்தையும் சரிபார்த்து வீடு வர எட்டைத் தொட்டிருந்தது..

தொழில் முறை பார்ட்டிகளில் இரவு ஒன்பது மணிக்கு ஆரம்பிப்பது என்பது சர்வ சாதாரணம்...அவரவருக்கு இருக்கும் வேலைகள் அனைத்தையும் முடித்துக் கொண்டு வர அந்நேரம் உகந்ததாய் இருப்பதால் அப்போதே ஏற்பாடு செய்திருந்தான்..

ரேகாவிற்கு மாதாந்திர செக்அப் இருப்பதால் ராஜ் அன்று மாலை ரேகாவை மருத்துவமனைக்கு வரச் சொல்லிவிட்டு அவன் நேரே அங்கே சென்றுவிட, பார்ட்டிக்கு அவன் செய்ய வேண்டிய வேலைகள் அனைத்தும் லீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது..

முழுதாய் இந்த ஒருமாதக் காலம் ராஜிற்கும் வீட்டில் இருக்க நேரமின்றி ரேகாவிடம் பேசக் கூட முடியாத பட்சத்தில் அவனுக்கும் வேலை இருந்ததால், ஆதிக் அவனை பார்ட்டிக்கு வரவேண்டாம் எனவும், ரேகாவுடன் வெளியே நேரம் செலவழிக்க சொல்லிவிட்டுத் தான் அவன் வீட்டிற்கு வந்ததே..

கட்டிலில் அமர்ந்து மதியை நினைத்துக் கொண்டிருந்தவனை லீனாவின் போன் அழைப்பு கலைத்தது..

நேரமாகிவிட்டதை உணர்ந்தவன் தனது அறைக்குச் சென்று உடைமாற்றிக் கிளம்பும் போது, ட்ரெஸிங் டேபிள் முன் அமர்ந்து தலைவாரிக் கொண்டிருந்தாள் மதியழகி..

அவள் மீது ஒற்றைப் பார்வையை வைத்துக் கொண்டே, கிளம்பியவன் கண்ணாடிக்கு அருகே வர, பதுமையாய் கிளம்பியிருந்தவளின் முகத்தில் இருந்த ஜொலிப்பு கண்களில் இல்லை..

அவள் கேட்டதை மறுத்தது தவறோ என அவன் நினைக்க, அவள் கேட்டதைமட்டுமே கொடுத்துவிட்டு அவனால் விலக முடியாது என மனம் எடுத்துரைத்தது..

“சரியாகிடுவா..” தன்னைத் தானே தேற்றிக் கொண்டவன்

“மதி டைம் ஆகிட்டு..” எனச் சொல்லவும்,

“சரி ஆதிக்..இது ஓகேவா..” என்று கேட்டவள் அவன் முன்னே வந்து நிற்க, சந்தன நிற கல் பதித்த சேலையில், பிங் பார்டர் வைத்து அதற்கு ஏதுவாய் சின்ன சின்ன நகைகள் அணிந்தவளின் கூந்தல் தோளில் புரண்டு கொண்டிருந்தது..

“ம்ம்ம்….” என்றவனின் வாய் திக்க கண்கள் என்னவோ லேசாகத் தெரிந்த அவளது இடுப்பில் அன்று பார்த்த மச்சத்தைத் தேடிக் கொண்டிருந்தது.

அவனது பார்வையை உணராதவள், “நம்ம கிட்ட பேசக் கூட இவனுக்கு பிடிக்கலையா..?” என்ற கேள்வியை மனதிடம் கேட்டு வைத்தவள், அழகாய் தனது முகத்தில் சிரிப்பெனும் முகமூடியை அணிந்து கொண்டாள்..

“ம்ம்ம்...சரி போகலாமா ஆதிக்..” அவளின் கேள்வியில் மணியைப் பார்த்தவன்

“வா மதி..ரொம்ப டைம் ஆகிட்டு..” கீழே வந்தவன் அனைவரிடமும் சொல்லி வெளியேப் போக, மதியை ஒரு நிமிடம் நிற்கச் சொன்ன வேணி,

“ஆதிக் நீ போய் வண்டிய ரிவர்ஸ் எடு..மதி வருவா..” என்றவர் மதியை அழைத்துக் கொண்டு தனது அறைக்குச் சென்றார்..

ஏன்? எனக் கேள்வி கேட்காமல் தன்பின்னே வரும் மதியின் தலை தடவி ட்ரெஸிங் டேபிள் முன் அமர வைத்தவர், “என்ன ஆச்சு மா..?” என்று வினவ

“அத்தை..” என்றவள் இப்போது வேணியின் வயிற்றில் முகம் புதைத்திருந்தாள்..

தனது வயிற்றில் முகம் புதைத்திருப்பவளை தன்னிடமிருந்து பிரித்தெடுத்தவர், “என்ன மதி…?” என்றவரின் கை அவளது சிகையை பின்னலிட்டுக் கொண்டிருக்க, பார்வையோ கண்ணாடியில் தெரிந்த கலங்கிய அவள் விழிகளை மட்டுமே பார்த்திருந்தது..

“ஒண்ணுமில்லை அத்தை..” என்றவள் சிரிக்க முயல, ஓட்டுமுடி வைத்து இடை தாண்டி பின்னலிட்டு முடித்தவர், இருபுறமும் தொங்கும் அளவிற்கு ஜாதிமல்லி பூச்சரத்தைச் சூட்டிவிட்டார்…

அவரின் செய்கைகள் எதையும் கவனியாதவள், விரலின் இடுக்கையே பார்த்துக் கொண்டிருக்க, மீண்டுமொரு முறை கன்னம் தாங்கி, “என்ன ஆச்சு மதி..” என்று கேட்கும் தன் மாமியாரிடம்

“அத்தை அவருக்கு என்னைப் பிடிக்கலன்னு நினைக்கிறேன்..” காரணமோ சம்பவமோ எதையும் சொல்லாமல் இதை மட்டுமே சொல்லும் மதியின் நெற்றியில் குங்குமம் வைத்து திருஷ்டி கழித்தவர்,

“அவன் வாயால உன்னைப் பிடிக்கலன்னு சொன்னானா..?” அவளது முகம் நிமிர்த்திக் கேட்டதும்

இல்லையென அவரது விழிப் பார்த்து தலையசைத்தவள்,

“எனக்கே தோணுது..” என்க

“நமக்கு தோணுறதெல்லாம் சரியா இருக்கணும்னு எந்த அவசியமும் இல்லையே மதி..அன்னைக்கே சொன்னேன் தான அவங்க அவங்க முடிவ அவங்க தான் எடுக்கனும் நாம எடுத்தா அது அவங்க முடிவாகிடாது..சோ எதுக்கும் கவலைப்படாம போயிட்டு வா..” அவர் சொல்லி முடித்தும் தெளியாத அவளது முகத்தை மீண்டும் தனது கைகளில் ஏந்தியவர்

“சீக்கிரம் போடா..ஆதிக் வெளியே ஹாரன் அடிக்கிறான் பாரு..” அவரின் பதிலுடன் கூடிய ஹாரன் ஒலியில்,

“பை அத்தை..” என்றவள் அவரைக் கட்டியணைத்து வெளியே ஓட

“மெதுவா போ மதி..கால் தடுக்கிட போவுது..” என்ற வேணியின் ஜாக்கிரதைகள் காற்றோடு கலந்தது..
 




Aadhiraa

SM Exclusive
Author
Joined
Jan 17, 2018
Messages
1,074
Reaction score
7,776
Location
Tirunelveli
ஓடி வரும் மதியைக் கண்டவனுக்கு முதல் நாள் அவள் நாய்க்குப் பயந்து ஓடி வந்து தன்மேல் ஏறிக் கொண்ட சம்பவம் நினைவுக்கு வர, அழகாய் வெட்கத்துடன் கூடிய சிரிப்பொன்றை உதிர்த்தவனுக்கு அவனது அன்னை செய்துவிட்ட அலங்காரம் அவளை மெருகூட்டியதாய் இருந்தது..

மன்னிப்பு வேண்டிக் கொண்டே காரில் ஏறி அமர்ந்தவளிடம் கண்கள் மின்னச் சிரித்தவன், “லுக்கிங் கார்ஜியஸ் டி..” என்று குரல் குலைந்து சொல்ல

அவனது பாராட்டுதலில் படபடக்கும் மனதை மறைத்தவள், “தாங்க்ஸ்..” எனத் தலை குனிந்து சொல்ல, அவளின் மீது ஒற்றைப் பார்வை பதித்துக் கொண்டே காரைக் கிளப்பியவனின் கைகளில் கார் கூட பதமாய் ஓடியது..

இவ்வளவு நேரம் மதிக்கு இருந்த சுணக்கம் அவனது பாராட்டுதலில் மறைந்துவிட, சிரித்த முகமாய் பயணித்தவளின் மனதிலும் வயிற்றிலும் ஏதோ ஒன்று படபடப்பாய் சுழன்றது..

(அதான் பா..அந்த வயிற்றும் தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருண்டை உருண்டுச்சாம்)

காரின் சாவியை வெளியே நின்றவரிடம் கொடுத்தவன், மதியின் கைப்பற்றி பார்ட்டி ஹாலுக்குள் அழைத்துச் செல்ல, அந்த உரிமையான அவனது செய்கையில் அதிலும் முதன் முறையாக அவனது கரத்திற்குள் தன் கரம் பொதிந்து நடப்பவளுக்குப் பூமி மொத்தமும் அவளது காலடியில் வீழ்ந்தது போல தான் இருந்தது..

இவனுக்கு முன்பே காரிடாரில் விகாஷும் அவனது மனைவி மித்ராளினியும் காத்திருக்க, இருவரையும் மதிக்கு அறிமுகம் செய்து வைக்கும் போதே, விகாஷ் கண்களால் மதியிடம் செய்கை செய்து அப்போது தான் பார்ப்பதைப் போல பேசினான்..

அவளும் அதைப் பெரிதாய் எடுத்துக் கொள்ளாதவள் பார்ட்டி ஹாலுக்குள் நுழைய, அங்கிருந்த அனைவருக்கும் முன்பிருந்த சிறுமேடையில் மதியின் கையைப் பிடித்து ஏறி நின்றவன்..

“ஹாய் ப்ரெண்ட்ஸ்..” என்றவனுக்கு பதிலளிக்கும் விதமாய் கை தூக்கி அனைவரும் ஆர்ப்பரித்தனர்..

தன்னுடைய ப்ராஜெக்ட் மற்றும் இன்றைய சந்திப்பை பற்றி ஒருசின்ன இன்ட்ரோ கொடுத்தவன், மதியை அறிமுகப்படுத்தி, இனி அவளும் அவர்களது குழுமத்தின் ஒரு பங்குதாரரென அறிவித்தான்..

இந்த விஷயத்தை அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போது சரியாய் மித்ராளினி ஏதோ கேள்வி கேட்டு வைக்க, திரும்பி அவளிடம் பேசிக் கொண்டிருந்த மதிக்கு அவன் சொன்னவை காதில் விளாமல் போனது..

பார்ட்டி தொடங்கிய கொஞ்ச நேரத்தில் மதியை தன்னுடன் இருத்திக் கொண்டவன் அனைவரிடம் கலந்துரையாட, அரை மணி நேரத்தில் ஆதிக்கை தேடி வந்த லீனா பக்கத்தில் நின்ற மதியிடம் சிறு சிரிப்பொன்றை உதிர்த்தாள்..

மதியும் பதிலுக்குச் சிரித்தவள் ஆதியோடு இன்னும் ஒட்டி நின்று கொள்ள, தன்னுடன் ஒன்றும் மதியிடம் என்னவென புருவம் உயர்த்தி கேட்டவனுக்கு அச்சமயத்தில் மதியின் மனநிலை புரிந்திருக்க வாய்ப்பில்லை..

மதியின் ஒன்றுதலின் காரணம் புரியாத லீனாவும் அங்கே இசைந்துக் கொண்டிருக்கும் பாடலின் சத்தத்தில் அவனது மறுபக்கம் வந்து அவளது காதருகே குனிந்து ஏதோ சொல்ல, அதைக் கவனமாய் கேட்டுக் கொண்டான்..

அவள் வேணுமென்றே செய்வதாய் கற்பனைச் செய்து கொண்ட மதியழகிக்கு அவள் மீது கோபம் வர, “மதி நீ மித்ரா கூட நில்லு..” என்றவன் பிடித்திருந்த அவளது கரத்தை அகற்றிவிட்டு லீனாவுடன் பார்ட்டி ஹால் விட்டு வெளியேறினான்..

அவனது விலகலைத் தாங்கிக் கொள்ள மனமில்லாதவள், சுற்றி நின்ற கூட்டத்தினருக்காய் சிரிப்பை இதழில் ஒட்டி வைத்து மற்றவருடன் கலந்துரையாட, ஆதிக் சென்று ஒரு மணி நேரம் ஆனதே தவிர வேறெந்த மாற்றமும் அங்கில்லை..

வந்த விருந்தனர் ஒவ்வொருவராய் விகாஷ் மற்றும் மதியிடம் கைக் குலுக்கி செல்லத் துவங்க, எஞ்சியிருந்தது இவர்கள் மூவரும் என்றான நிலையில் வந்து சேர்ந்தான் ஆதிக் வர்மன்..

அவன் வந்ததும் அவ்விடம் விட்டு அகன்றவள் ரெஸ்ட் ரூம் செல்வதாய் சொல்லிவிட்டு அதற்குப் பக்கத்தில் இருந்த பப்பிற்குள் புகுந்துவிட்டாள்..

விகாஷையும் மித்ராவையும் அனுப்பி வைத்துவிட்டு இவளைத் தேடி பப்புக்குள் வந்தவனைச் சேரில் அமர்ந்து குடித்துக் கொண்டிருந்த மதி கையசைத்து அருகே அழைத்தாள்..

அவள் குடிப்பதை நம்ப மாட்டாமல் கண்ணைத் துடைத்து துடைத்துப் பார்த்தவனுக்கு ஒரு டம்ளர் கோக் எடுத்துக் கொடுக்க, அவளை எரித்துவிடுவதைப் போல பார்த்தவன்

“வாட் இஸ் திஸ் மதி..”என்றான் கோபம் மிகுந்த குரலில்..

“தெரியல..?” என்றவள் தனது கையில் இருந்த க்ளாஸை அவனது மூக்கின் அருகே கொண்டு செல்ல,

“ஏய்..எந்திரிச்சு வா டி..” என அடிக் குரலில் சீறியவனை பொருட்படுத்தாதவள்

“ஆதிக்...உன்னை எனக்கு எவ்ளோ பிடிக்கும் தெரியுமா..?” முதல் கட்ட போதையில் இருந்திருப்பாள் போல குரல் லேசாய் உளறியது

“மதி வா வீட்டுக்கு போய் பேசலாம்..” என எழுந்தவனைத் தடுத்தவள்..

“உனக்கு ஏன்டா என்னைப் பிடிக்காம போச்சு..” அவளுக்கு பதிலளிக்க வந்தவனை கைநீட்டித் தடுத்தவள் கையில் இருந்த க்ளாஸை கீழே வைக்க, அவள் அறியா வண்ணம் பேரரை அழைத்து அனைத்தையும் அப்புறப்படுத்தச் சொன்னவன் அவளது முகம் பார்த்து சொல்லு எனச் செய்கை செய்ய

“நான் உன்னைவிட்டு போனேன் போனேன் சொல்றீங்களே தவிர..நான் எதுக்கு போனேன்னு இதுவரை கேட்டியா..நான் மட்டும் எனக்குப் பிடிச்சா உன்னைவிட்டு போனேன்..” இயலாமையில் கேட்டவள்

“உனக்கு என்னைப் பிடிக்கலன்னு தானே போனேன்..” அவளின் பதிலில் புருவம் சுருங்க யோசித்தவனைப் பார்த்து

“இப்படி பார்க்காத டா ரஸ்கல்...எங்கே இங்கயிருந்தா நானே உன்கிட்ட ப்ரப்போஸ் பண்ணிடுவேனோன்னு தான் போனேன்...போதுமா..எனக்கு ஈகோ தான்...உன்னோட ப்ரெண்ட் பேரு..” தலையைத் தட்டி யோசித்தவளுக்கு விகாஷாஆ என்றவள் எடுத்துக் கொடுக்க,

“ஆங்..விகாஷ்… விகாஷ்..அவர் வந்து உனக்கு ஏதோ பிரச்சனைன்னு சொன்னதும் உனக்கு தான் ஏதோ ஆகிட்டுன்னு எப்படி பயந்தேன் தெரியுமா..? நான் உன்னைவிட்டு போனேன் திருப்பி நீ வேணும்னு தான வந்தேன்..ஆனா நீ அப்பவும் வரல இப்பவும் அந்த கோனா பின்னாடி தான போற..” என்றவள் பேச முற்படும் ஆதியின் வாயில் கை வைத்து,

“நீ கவலைப் படாத நாளைக்கு நான் இங்க இருந்து அதான் உன்னைவிட்டு போயிடுவேன்...நீ அந்தக் கோனா வேணாம் வேணாம்…” கீழே குனிந்து மறுப்பாய் தலையசைத்தவள்..

“அவா என்ன என்னைவிட அழகாவா இருக்கா..?” என்றவள் இப்போது அவனது வாயில் இருந்து கரத்தை விலக்கியிருந்தாள்..

அவளது பொறாமை பேச்சை ரசித்தவன், “மதி வா நம்ம வீட்டுக்குப் போகலாம்…” என்றதும்

“சரி வா..” என எழுந்தவள் முன்னே நடந்து சட்டென்று நின்றுவிட, பின்னாடி வந்த ஆதிக் அவள் மீது மோதி அவளது இடைத் தாங்கி நின்றான்…

அவனது நெருக்கம் அவளது கருத்தில் பதியாமல் போக, “ஆதிக்..எனக்கு ஒரு கிஸ் கொடு” எனக் கேட்டு நிற்க, அக்கம்பக்கம் யாரேனும் கேட்டுவிட்டனரா எனச் சுற்றி பார்வையை சுழலவிட்டவன்

“கார்ல போய் தாரேன் வா..” என்க

“சரி வா..” என்றவள் வேகமாய் கார் நிறுத்தும் இடம் வந்து அங்கிருந்த மற்றொரு காரை சாவி இல்லாமலே திறக்க முயன்று கொண்டிருந்தாள்..

அவளது செய்கையில் பதறியவன், “ஹே நம்ம கார் அங்க நிக்கு வாடி…” என்றழைக்க

“ஓஹ்.. அங்க நிக்கா... பாரேன்...யவனோ ஒரு லூசு பய நம்ம காரை தள்ளிட்டு போய் அங்க நிக்க வச்சிருக்கான்” என்றவளின் அடைமழை பேச்சில் திணறிக் காரை எடுத்தான் ஆதிக் வர்மன்.

காரில் ஏறிய சில நிமிடங்களில் மதி தூங்கிவிட, ராஜுக்கு அழைப்பு விடுத்தவன் சில பல கட்டளைகளை வைத்துவிட்டுத் தெரிந்த ட்ராவல் ஏஜென்ஸிக்கு கால் செய்து நாளைக்கான பயணச்சீட்டை உறுதிப்படுத்தியவனின் கைகளில் கார் இப்போது சீறிப் பாய்ந்தது…

ஆதியும் மதியும் வருவார்கள்…
 




Deepivijay

மண்டலாதிபதி
Joined
Jan 29, 2018
Messages
452
Reaction score
976
Location
India
Wow:love:adutha surprise ud :giggle:thanni adika poitala madhi sogatha maraka:LOL:epovum hero than intha velaya paraparu ana Inga ultava namma heroine pub Ku poirukanga:LOL:(y)madhi panranala idu kooda Nalla than iruku:Dhoneymoon tickets potutano adhi:love:avaluke theriyama ellathayum plan Panna porano:unsure:ego gethu nu sollitu ipdi 1gls Ulla ponathulaye Ella visayathayum yaaruku theriya koodathunu nenachiyo avan kittaye poi kakitiye ma:Dana iniyavathu adhi Ku un manasu purinja seri:D:pwaitinggg k.p sis:love:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top