• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Ennai Verodu Saithavale(ne) - 21

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Aadhiraa

SM Exclusive
Author
Joined
Jan 17, 2018
Messages
1,073
Reaction score
7,772
Location
Tirunelveli
வேர் – 21

தொட்டிலில் தூங்கிக் கொண்டு இருந்த ஆருஷ், இவனின் காட்டு கத்தலில் வீரிட்டு அழ, அப்பொழுது தான் தன் ,முழு கோபம் புரிய., தலையை கோதிய அவன், அதிர்ந்து நின்ற இதழியையும் பொருட் படுத்தாமல் கதவை அறைந்து சாத்தி வெளியில் சென்றான்....

அத்தனை கோபமாக வந்தது அவனுக்கு... வெளியில் வந்தவனை “ டேய் சக்தி “ என நாராயணன் அழைப்பதையும் பொருட்படுத்தாமல் வெளியில் சென்றவன் காரை படுவேகமாக எடுத்து சென்றான்...

அறைக்குள் இருந்த இதழிக்கு வருத்ததுடன் கூடிய சந்தோசம் முகத்தில் ஜொலிக்க அழுத குழந்தையை ஓடி வந்து தூக்கிக் கொண்டாள்...

அவளும் அவனிடம் இப்படி பேச வேண்டும் என்று எண்ணவே இல்ல... ஆனால் அவளையும் அறியாமல் வெளியில் வந்துவிட்டது.. ஒவ்வொருநாளும்அவன் மனதில் தான் இல்லையே என்று வருந்திய நாட்கள் போய் எல்லாம் ஒரே நாளில் வண்ணமயமாக மாறிய உணர்வு..!!

சக்திவெளியில் வரவும் “ டேய் சக்தி. என்னடா ஆச்சு.. எதுக்கு அவளை திட்டுற “ என கேட்டுக் கொண்டே வெற்றி வர..,

“ நீ தாண்டா எல்லாத்துக்கும் காரணம் “ என அவன் மேல் சாட..

“ டேய் என்னடா சொல்லுற.. நான் என்ன பண்ணுனேன்..? புரியுற மாதிரி சொல்லு..? “ என

“ இதழி இருக்க இடம் தெரிஞ்சும் தெரியாத மாதிரி சுத்தியிருக்க, இப்போ பாரு அவ என்மேல கோபமா இருக்கா.. நானும் அவ மேல கோபபட்டுடேன் “ என வருத்தமாக கூற..

“ நீ எதுக்குடா அவ மேல கோபப்பட்ட.. அவ பட்டா ஓகே. நீ ஏன் பட்ட “ என லக்ஷ்மி முறைத்துக் கொண்டே கேட்க

“ எல்லாம் நீ தாம்மா. நீ தான் அவளை மரத்துல உச்சி மேலே ஏத்தி வச்சுருக்க.. இப்போ இறங்க மாட்டேன்னு அடம் பிடிக்கிறா... அன்னைக்கு மட்டும் நீங்க எதுவும் சொல்லாம, அவளை போக விடாம விட்டிருந்தா இந்த அளவுக்கு வந்திருக்காது...

இந்தா நிக்குறானே வெற்றி இவனும் என் வாழ்கையில் நல்ல்லா விளையாடிட்டான்... அவ எங்க இருக்கான்னு இவனுக்கு தெரிஞ்சதும் என்கிட்டே சொல்லிருந்தா நான் போய் தூக்கிட்டு வந்திருப்பேனே.? “ எனஅவனை முறைத்துக் கொண்டே கேட்க..

“ நீ கிழிச்ச... தாடி வளர்க்க தெரிந்த உனக்கு. பொண்டாட்டி எங்கன்னு ஒரு முறையாவது கேட்க தோணிச்சா “ என கேட்க

“ சரிடா.. எனக்கு தான் அந்த அறிவு இல்ல.. நீயாவது சொல்லிருக்கலாமே..? அப்படியும் புரியலன்னா. ரெண்டு அடி அடிச்சாவது சொல்லிருக்கலாமேடா.? அம்மாகிட்ட இல்ல அப்பாகிட்டயாவது சொல்லி அவளை பார்க்க என்னை அனுப்பிருக்கலாமேடா..?

ஆருஷ் பிறக்கும் போது எத்தனை கஷ்டபட்டாளோ..? அவன் வயித்தில இருக்கும் போது எத்தனை வேதனைப்பட்டாளோ...? எதையும் என்னால பார்க்கமுடியல, அவளை தாங்க முடியல... நான் எல்லாம் எதுக்கும் லாயக்கில்லை அப்படி தானே வெற்றி “ என கவலையாக கேட்க..

“ அது வந்து சக்தி “ என கூற வர “ பச் போடா “ என கூறி வெளியில் சென்றான் அவன்...

முகத்தை அழுந்த துடைத்த அவள் “ குட்டிமாமா“ என அழைத்துக் கொண்டே குழந்தையை தூக்கிக் கொண்டு வெளியில் வந்தாள்..,

எல்லாரும் இவர்கள் அறையை பார்த்துக் கொண்டே நிற்பதை கண்ட இதழி, அப்படியே தன் நடையை நிறுத்திக் கொண்டாள்...

அவளை நோக்கி வந்த லக்ஷ்மி “ என்னாச்சு இதழி.., சக்தி கோபமா போறான்... என்னாச்சு“ என கேட்க...

“ மாமா எங்க அத்தை “ என கேட்க

“ கோபமா வெளிய போறான்... இவன் கோபம் தான் இவனுக்கு எதிரியே... கோபத்துல ஏதாவதுபண்ணிட்டு அப்புறம் வருத்தபடுவான்... கோபத்தை குறைக்க சொன்னா செய்யவே மாட்டான்.. இப்போ உன்னை ரொம்ப திட்டிட்டானா ” என வருத்தமாக கேட்க

“ திட்டவெல்லாம் செய்யலத்தை வீட்டை விட்டு போக சொல்லிட்டாங்க “

அதிர்ந்த லக்ஷ்மி “ என்னம்மாசொல்லுற..” என கேட்டு முகத்தில் வீட்டை விட்டு போகபோறியா என கலங்கி பார்க்க..

சிரித்த அவள் “ இந்த முறை எங்கையும் போகமாட்டேன் அத்தை.. அப்போ ஏதோ கோபத்துல போய்டேன்.. இப்போ தான் தெரிது லூசு தனமா எல்லாம் பண்ணிருக்கேன்... மாமா மனசுல நான் இல்லன்னு நெனைச்சுட்டு அப்படி ஒரு முடிவெடுத்தேன். இப்போ தான் தெரிது.. இதழி ஒரு லூசுன்னு “ என லஷ்மியிடம் கூற..

அவள் அருகில் வந்த இனியாளோ “ நான் சொன்னேன்ல இதழி. மாமாவுக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்ன்னு நீ தான் கேட்கவே இல்லை... இப்போ பாரு சக்தி மாமா கோபத்துல போறாங்க “ என கூற

“ குட்டிமாமாவைநான் சமாளிச்சுகிறேன் “ என கூற

“ இதழி அவனுக்கு உன் மேல நிறைய பாசம், காதல் உண்டு.., ஆனா எனக்கு உன்னை பிடிக்காதுன்னு தான் அவன் எதையும் உன்கிட்ட சொல்லாமல் மறைத்துவிட்டான்... அவனுக்கு நீயும் வேணும், நானும் வேணும் அது தான் என்ன முடிவெடுக்கதுன்னு தெரியாம உன்னை தேடி வராமல் இருந்துட்டான்... ஆனாலும் உன்னை அவன் ஒரு நொடி கூட மறக்கலை.. இந்த வெற்றி மட்டும் நீ இருக்கும் இடம் சொல்லி இருந்தால் இந்த அளவுக்கு பெருசா பிரச்னை வந்திருக்காது... சரி நடந்ததை எல்லாம் விடுங்க.. இனி நடக்க போறதை பாப்போம் “ என கூறி லக்ஷ்மியும் நாராயணனும் செல்ல...

மெதுவாக அவள் அருகில் வந்த வெற்றி“ ரொம்ப திட்டிட்டானா.. சாரி இதழி நான் அவன்கிட்ட சொல்லாம இருக்கணும்னு நினைக்கல.. அவன் உன்னை ரொம்ப தேடினான்னு எனக்கு நல்லாவே தெரியும்.., ஆனா மனசுக்குள்ளையே எல்லாம் வச்சிருந்தான்... வெளிய ஒரு நாள் உன் பேரை அவன் சொல்லிருந்தாலும் அடுத்த நிமிஷம் உன் முன்னாடி அவனை கொண்டு வந்து நிறுத்திருப்பேன்... ஆனாலும் சீக்கிரமே உன்னை அவன் தேடி வரமாதிரி தான் ஏற்பாடு பண்ணனும்னு இருந்தேன்...

அப்போ தான் இனி சொன்னது நியாபகம் வந்திச்சி “ நீ அண்ணனை விரும்பி தான் கல்யாணம் பண்ணுன. ஆனா அண்ணன் மனசுல என்ன இருக்குன்னு அறியாமலே நீ அவனை விட்டு போயிட்டு ஒவ்வொரு நாளும் அவன் உன்னை நினைக்கல தேடி வரலன்னு, நீ ரொம்ப வருத்ததுல இருக்கன்னு சொன்னா. அது தான் அவனே உன்னை தேடி வரட்டும்ன்னு தான் அவன்கிட்டஉன்னை பத்தி சொல்லலை...

அதுக்குள்ளஎனக்கு கொஞ்சம் வேலை வந்துட்டு... உனக்கும் வலி வந்து அங்கு போனா அருண்... அருண் அண்ணனோட பிரண்ட் அவன் அண்ணாகிட்ட சொல்லவும் அவ்ளோ சந்தோசமா தேடி வந்தான்... அந்த நிமிஷம் அவன் பட்ட சந்தோசம் வார்த்தையால் சொல்லமுடியாது... அப்போ தான் நினைச்சுகிட்டேன் உன்னை அவன் ரொம்ப மனசால தேடிகிட்டு இருக்கான்னு...

மிக பெரிய தப்பு பண்ணிட்டேன்னு தோண ஆரம்பிச்சுது.... அடுத்து உடனே அண்ணன் இங்க உன்னை அழைக்கணும்னு சொல்லவும் சந்தோசமா இருந்தது.. நீ வரமாட்டேன்னு சொல்லவும் கோவமா வந்திச்சு... எல்லாம் லூசு மாதிரி பண்ணுறேன்னு... அதுக்கப்புறம் நீயும் இங்க வந்துட்ட...

எல்லாம் நல்லா தான் போயிட்டு இருக்கிறதா இத்தனை நாள் நான் நினைச்சேன் ஆனா இன்னைக்கு நீங்க ரெண்டு பேரும் பேசுனதை கேட்ட பிறகு தான் தெரிஞ்சது. எதுவும் சரியாகலை. எல்லாம் அப்படியே தான் இருக்குன்னு “ என மெதுவாக அவளை பார்த்து நிறுத்த..

அவனைப் பார்த்து சிரித்த அவள் “ இத்தனை நாள் எதுவும் சரியாகலை வெற்றி மாமா... ஆனா இன்னைக்கு எல்லாம் சரியா போச்சு.. என் மனசுல இருந்ததை நான் குட்டிமாமா கிட்ட சொல்லிட்டேன். அவர் மனசுல இருக்கதையும் தெரிஞ்சுகிட்டேன்.. ஆனா என்ன அதில நான் கொஞ்சம் ஹார்ஷா பேசிட்டேன். மாமா கோவத்துல அவங்க மனசுல உள்ளதை எல்லாம் கொட்டிட்டு போய்ட்டாங்க.. அது மட்டும் கொஞ்சம் கஷ்டமா இருக்கு.. அதிலையும் ரொம்ப சந்தோசமா இருக்கு.. நீங்க எதை பத்தியும் கவலை படாதீங்க மாமா...

நீங்க ஏதோ ஒரு விதத்தில எனக்கு நல்லது தான் செய்திருக்கீங்க... குட்டிமாமாஎன்னை முன்னாடியே தேடி வந்தா அவர் மனசுல நான் இருக்கேன்னு எனக்கு தெரிஞ்சிருக்கும். ஆனா எந்த அளவுன்னு தெரியாமலே போயிருக்கும்... மாமா கோபத்திலையும் ஒருகாதல்.. என் மேல இருந்த அளவுக்கதிகமான காதல் தான் தெரிஞ்சது..“ என கூற

“ அது எனக்கு தெரியும் இதழி.. ஆனா நீ தான் ஏதேதோ நினைச்சு, உன்னையும், அவனையும்ரொம்ப கஷ்டபடுத்திட்ட ... இனியாவது அண்ணனை நல்லா பாத்துக்க “ என கூற

“ ஹான்... அதெல்லாம் நாங்க நல்லா பாத்துகிறோம்.. நீங்க என் அக்காவை நல்லா பாத்துகோங்க.. சீக்கிரம் என் பையனுக்கு ஒரு தம்பியையோ, தங்கச்சியையோபெத்து கொடுக்குற வழியை பாருங்க... உங்க அண்ணனை மாதிரி மக்கு மாதிரி இல்லாம சீக்கிரம் குழந்தை பெத்துகிற வழியை பாருங்க“ என கிண்டல் செய்ய

“ ஹான்... என் அண்ணன் மக்கா... டேய் செல்லம் கேட்டுக்கோ ” என ஆருஷை துணைக்கழைக்க..

“அவனை ஏன் இழுக்கிறீங்க… என்ன மாமா “ என இனியாள் அவனை தோளில் இடிக்க...

இதழியை பார்த்து “ இப்போ அவனை தேடி அழைச்சுட்டு வாரேன்... செங்கல் சூளையில் தான் இருப்பான் என கூறி, இனியாளிடமும் கூறி வெளியில் சென்றான் வெற்றி...

வீட்டைவிட்டு வெளியில் சென்ற சக்தி காரை நேராக சுண்ணாம்பு சூளை நோக்கி காரை விட்டான்... காரை நிறுத்தி அப்படியே ஸ்டீரிங்கில் தலையை வைத்து படுத்து விட்டான்..

அவனின் மனசாட்சியோ “ என்ன பண்ணி வச்சுட்டு வந்திருக்க நீ... நியாயபடி அவ தான் உன் மேல கோபப்படணும்... என்னடான்னு பார்த்தா நீ கோச்சுகிட்டு வந்திருக்க “ என அவனை சாட

“ நான்என் மனசில் இருப்பதை அவளிடம் கூறி விட்டேன்.. ஆனா அவள் பேசியது தவறு... அவளும் என்னை அதிகமா காதலிக்கிறா.? என்னமோ நான் அவளை காதலிக்காத மாதிரி பேசுறா அவ.? என்னைக்காவது அவள் என்கிட்ட உன்னை விரும்புறேன்னு சொல்லிருக்காளா..?” என

“ அது தான் அந்த பிள்ளை குட்டிமாமா உன்னை தான் கட்டிப்பேன்னு சொல்லிகிட்டே சுத்திச்சே.. இதுக்கு மேல உனக்கு என்ன சொல்லணும்... நீ அது கூட சொல்லலை.. உன்னை காதலிக்காமல் தான் உன்னை விட்டு போன பிறகும் உன் குழந்தையை சுமந்திருக்கா.. இதுக்கே நீ அவளுக்கு கோவில் கட்டணும் “ என வாதாட.. அது கூறுவதும் நியாயமாக பட ஆனாலும்,

“ நீ என்ன அவளுக்கு மனசாட்சியா.? எனக்கு மனசாட்சியா.? எனகோபத்துடன் கேட்க
 




Aadhiraa

SM Exclusive
Author
Joined
Jan 17, 2018
Messages
1,073
Reaction score
7,772
Location
Tirunelveli
“ உன்மனசு முழுசும் அவள் தான் இருக்கிறாள் சோ நான் அவளுக்காக தான் பேச முடியும்... “ என அந்தர் பல்டியடிக்க...

அதை அடித்து துரத்திய சக்தி அப்படியே யோசனையில் ஆழ்ந்து விட்டான்... அவள் கூறிய வார்த்தைகள் அவன் அடிமனது வரை தாக்கியது.. அதன் கனம் தாங்காமல் அப்படியே அமர்ந்து விட்டான் அவன்..சக்தியை தேடி செங்கல் சூளைக்கு சென்ற வெற்றி அவன் அங்கு இல்லாமல் போக சுண்ணாம்பு சூளையை நோக்கி சென்றான்...

அங்கு சக்தியை கண்டு அவனை நோக்கி வந்தவன் “ டேய் அண்ணா.. என் மேல கோபமா “ என கேட்டு அவன் அருகில் காரில் அமர..

“ ச்சே.. ச்சே உன்மேல கோபம் இல்லடா... என் மேலையே எனக்கு கோபம்.. வாய்க்கு வந்த படி அவளை திட்டிட்டேன் “ என வருத்தமாக கூற..

“ அதெல்லாம் இதழி நினைக்கலை வா வீட்டுக்கு போவோம் “ என அழைக்க

“ இல்லடா நீ போ.. நான் அப்புறம் வாரேன் “ என அவனை அனுப்பிய சக்தி அங்கிருந்த ஒற்றைகுடிசையில் போய் அமர்ந்துக் கொண்டான்...

இப்படியாக நாட்கள் கழிய… ஆருஷ் நடக்கவே ஆரம்பித்துவிட்டான்...இந்த இடைப்பட்ட நாட்களில் தினமும் அவளுக்கு பிடித்தமான இடங்களுக்கு அழைத்து சென்றான்...

அவனின் சிறு, சிறு செயலில் அவளுக்கு ஏற்படும் சந்தோசத்தை அப்படியே மனப்பெட்டகத்தில் சேகரித்துக் கொண்டான்... சில சமயம் அவன் கண்களுக்கு இதழியும், ஆருஷும் ஒரே போல் தெரிந்தனர்...

காலையில் எழும்போதே அவள் முகத்தில் விழித்து தான் அந்த நாளை ஆரம்பிப்பான்... தினமும் அவளை அவன் கையணைப்பில் கொண்டு வந்தால் தான் அவனின் அந்த நாள் முடியும்…அதற்கு மேல் செல்ல அவன் எண்ணவே இல்லை.. இந்த சந்தோசமே போதும் என்பது போல் நடந்துக் கொண்டான் அவன்..

அதிலும் வாரத்தில் ஒருநாள் எப்படியும் அவளை நீச்சல் குளத்தில் குளிக்க விட்டு தூரத்தில் இருந்து ரசித்திருப்பான்... அவள் எவ்வளவு அழைத்தாலும் செல்லாமல் கரையில் அமர்ந்துக் கொள்வான்...

அந்த நான்கு மாதத்தில் ஒவ்வொரு நொடியும் “ நீ என் உயிர் “ என்று அவனின் ஒவ்வொரு அசைவிலும் அவளுக்கு உணர்த்தினான்... வாயை திறந்து கூறினால் தான் காதலை உணரமுடியுமா..? ஒவ்வொரு செயலிலும் காதலை உணரலாம் என்பது போல் அவளுக்கு அவனின் காதலை உணர்த்தினான்...!!அவளும் உணர்ந்துக் கொண்டாள்... அன்று அவன் பார்த்த பார்வைகளுக்கு இன்று அர்த்தம் புரிவதாய்..!!

ஆனாலும் அவன் முகம் யோசனையாக இருப்பதை கவனித்துக் கொண்டு தான் இருந்தாள்... அவனின் தொழில் பற்றி கூட அவளிடம் கூற அத்தனை சந்தோசமாக உணர்ந்தாள் அவள்...தன்னை அவன் மறக்கவில்லைஎன்று அவளுக்கு உணர்த்திக் கொண்டே இருந்தான்....

“ தன்னை அவன் தேடவில்லை “ என்ற வருத்தம் போய், அவன் இப்பொழுது அவனின் தேவை, வேலைஎன்று எல்லாவற்றிலும் அவளை தேடினான்...

அதிலும் இன்னும் சில மாதங்களில் அவளை அவனின் தொழிலில் பார்ட்னராக வர அழைத்திருக்கிறான்... முதலில் அவளின் தகுதி பார்த்து அவளிடம் பழகியன் தன் தகுதியை அவளுக்கு வழங்கவிருக்கிறான்...

திருநெல்வேலி ஆபீஸ் பொறுப்பை அப்படியே அவளுக்கு வழங்க இருக்கிறான்... " தன்னால் முடியாது " என்று அடம்பிடித்தவளை.. " உன் கூடவே நான் இருப்பேன் " என கூறி அவளை சம்மதிக்க வைத்திருக்கிறான்...…

அதிலும் அரியர் வைத்திருப்பவள் அவள்.. தன்னால் முடியவே முடியாது என்பவளை நோக்கி " படிப்பு தேவையே இல்லை இதழி, ஆர்வமும், முன்னேறணும் என்ற மனமும் இருந்தாலே போதும் “ என்று கூறி அரை மனதாக அவளை சம்மதிக்க வைத்திருக்கிறான்…

அவளின் திறமையை, அவளின் ஆசையை, அவளின் ஆர்வத்தை பிரதிபலிக்கும் விதமாக அடுத்து வந்த நாட்களில் அவன் சிறு ப்ராஜெக்ட் ஒன்றை அவளுக்கு அளித்தான்... ஆனால் அது அவளின் மிக பெரிய ஆசை...அவன் அளித்தது ஒரு அறையை மாற்ற மட்டுமே.. அதுவே அவள் வாழ்க்கையை மேலும் வண்ணமயமாக்கியது...!!

அன்று அவளை அழைத்தவன் “ இதழி உன்னோட பழைய ரூம் கிளீன் பண்ணனும் வா “ என அழைக்க..

“ இப்போ என்ன அவசியம் மாமா.. பிறகு பார்த்துக்கலாம் “ என மழுப்பி சென்றவளை கைகளில் தூக்கிக் கொண்டு சென்றான் அவள் அறைக்கு...

அங்கு செல்ல அவளை ஆவலுடன் வரவேற்றது தூசு படிந்த அவள் ஆசையாக செய்த அவளின் கப், ஜாடி மற்றும்அவளின்ஓவியங்கள்.. அதை ஆசையாக வருடியவளை, மெதுவாக வந்து அணைத்துக் கொண்டான் சக்தி...!!

கிட்ட தட்ட ஆறு மாதங்களாக அந்த அறைக்கு அவளும் செல்லவில்லை, அந்த அறையை எப்பொழுதும் கிளீன் செய்யும் கங்காவையும் அவள் அனுப்புவதில்லை...

வீட்டில் இருக்கும் பொழுது அவளின் இருப்பிடமே அந்த அறைதான்.. ஆனால் நாளடைவில் அவளே அந்த அறைக்கு செல்வதை நிறுத்திக் கொண்டாள்...

இன்று சக்தி அவளின் ஆசையை மீண்டும் எழசெய்தான்... அதில் இருந்த ஒவ்வொரு பொருளிலும் அவளின் திறமையும், அதை அவள் வருடும் பொழுது அவளின் ஆசையும் சக்தி கண்களுக்கு தெரிவதாய்..!

அதில் இருந்தவற்றை கொண்டு அவளையே வைத்து வீட்டை மாற்றியமைக்க கூறினான்.. அந்த சின்ன விசயத்திலையே அவளின் அளவுக்கதிகமான சந்தோசத்தை கண்டவன் மனது அவளுக்காக, அவளின் சந்தோசத்துக்காக அவளுகென்று தனி உலகத்தை படைக்க ஆசை கொண்டது...!!

அதன் பிறகு வீட்டில் பல மாற்றம்... அன்று அவளிடம் வந்து “ இதழி ஒரு பெரிய ரூம் கட்டணும் உன் ஆசைப்படி அதை எப்படி டிசைன் பண்ணனும் என்று சின்னதா ஒரு ட்ரா பண்ணு.. டைம் எவ்ளோ வேணாலும் எடுத்துக்க “ என கூறி அவளிடம் ஒரு பெரிய பொறுப்பை ஒப்படைத்தான்அவளின் குட்டிமாமா...!!

ஆம், அது அவளை பொறுத்தவரை பெரிய பொறுப்பு தான்.. அவனை பொறுத்தவரை ஒருசிறு வேலை...

அந்த ஓவியத்தை வரைய அவள் ஒரு மாதம் எடுத்துக் கொண்டாள்... அத்தனை அழகாக வரைந்திருந்தாள்.. சக்தியே அந்த ஓவியத்தை பார்த்து அவளை கட்டியணைத்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான்...

சிறு, சிறு அணைப்பும், முத்தமும் வாழ்கையை சந்தோசமாக கொண்டு சென்றது... இதழி வாழ்கையும் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும் அவளுக்கு பிடித்த மாதிரி கொண்டு சென்றான்...

அவனின் காதலை தான் அவன் இத்தனை நாளும் அவளுக்கு உணர்த்தினான்.. ஆனால் அவளோ அதை உணராமல் இருந்திருக்கிறாள்... அதையும் அறிந்துக் கொண்டு அவளுக்கு இப்பொழுது ஒவ்வொரு நொடியும் உணர்த்தினான்...

அவனுக்குஇந்த“ ஐ லவ் யூ “ சொல்லி காதலை கூறுவது எல்லாம் தெரியாது... எதையும் செய்கையிலும், அவர்கள் மேல் வைத்திருக்கும் பாசத்திலும் காட்டுவான்.. அது தான் அவளிடம் கூட அவன் அந்த வார்த்தையை கூறவில்லை... மனம் முழுக்க அவள் இருந்த பின்னும் அவள் ஆசைப்பட்ட இந்த ஒன்றை மட்டும் செய்யாமல் அவளின் வாழ்கையை வண்ணமாக மாற்றுகிறான்...

இனி வரும் நாளில் அதையும் அவன் அவளுக்காக, அவள் ஒருத்திக்காக செய்வான்...ஆழ்கடலளவு நேசத்தை சுமந்திருந்த அவன் மனதில் அவளின் சிறு சிறு சந்தோஷமும் அவனில் சிறு சிறு அலைகளை ஏற்படுத்தின..!!

அவளின் ஓவியத்தை கொண்டு அடுத்த மாதமே வேலையை ஆரம்பித்தான்.. அவர்கள் வீட்டிலையே வேலையை ஆரம்பிக்க இதழி அத்தனை சந்தோஷமடைந்தாள்.... அவளின் முதல் வேலை வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டது...

ஆனால் அது எதற்கு என்று தான் தெரியவில்லை.. அவர்களின் வீட்டை மேலும் அழகாக்குவதுப் போல்இருந்தது அந்த மாடி ஒற்றை அறை...

இதற்கிடையில் இனியாளும் தன் படிப்பை முடித்திருந்தாள்... படிப்பு முடியும் வரை வெற்றி கூறியதுப் போல் அவளை எந்த தொந்தரவும் செய்யாமல், அவளின் படிப்புக்கு பக்க பலமாக இருந்தான்....

திருமணம் முடிந்த இந்த ஒன்பது மாதத்தில், அவளை அவன் எங்குமே அழைத்து சென்றதில்லை... ஏற்கனவே லக்ஷ்மி அவனிடம் கூறிக் கொண்டு தான் இருக்கிறார்.. ஆனால் அவனோ அவளின் மனதை எங்கும் திசை திருப்பவிடாமல் படிப்பில் மட்டுமே அவளை கவனம் செலுத்த வைத்திருக்கிறான்...

“ ஒருவாரம் அவளை எங்கையாவது கடத்திட்டு போகணும்.. ஆனா எங்க போறது “ என யோசித்துக் கொண்டு ஆபிஸ் அறையில் இருக்க...

“ என்ன வெற்றி தீவிரமாயோசிக்கிற..? “ என கேட்டுக் கெண்டே சூர்யா வர

“ அது ஒன்னும் இல்லடா... இனியாள் படிப்பு முடிஞ்சுட்டு... அது தான் இனியாளை அழைச்சுட்டு எங்க போகலாம்ன்னு யோசிக்கிறேன் “ என கூறிய வெற்றி இன்டர்நெட்டில் டூரிஸ்ட் பிளேஸ் செர்ச் செய்ய...

அவனைப் பார்த்துக் கொண்டிருந்த சூர்யா “ வெற்றி பேசாம மூணாறு போ... ரொம்ப நல்லா இருக்கும்.. இயற்கையோடு இணைந்த மாதிரி இருக்கும்.... மனசும் ரிலாக்ஸ் ஆகும் “ என கூற

வெற்றிக்கும் அதுவே “ சரி “ என பட மூணாறுக்கே செல்ல முடிவெடுத்தான்...

மாலையானதும் வீட்டுக்கு செல்ல ஆவான் மனைவியோ முகத்தை ஏழு முழத்துக்கு தூக்கிக் வைத்துக் கொண்டு இருந்தாள்... அவளைப் பார்த்துக் கொண்டே வந்தவன் உடையை மாற்றி அவள் அருகில் அமர அவளோ, அவனை பார்த்து முறைத்து விட்டு முகத்தை மறுபக்கம் திருப்பிக் கொண்டாள்...

மறுபுறம் திரும்பியவளின் முகத்தை தன் பக்கம் திருப்பிய வெற்றி “ ராணியின் கோபம் என்னவோ..? “ என நாடக பாணியில் வினவ..

அவனை திரும்பி பார்த்த அவள் மீண்டும் முறைக்க.. “ என்ன ஜில்லு எதுக்கு இப்படி கோபம் என்ன ஆச்சு “ என கேட்டு அவளின் கன்னத்தை வருட..

அவனின் கையை தட்டி விட்ட அவள் “ உன் மனசுல நீ என்ன தான் நினைச்சுட்டு இருக்க “ என கோபமாக கேட்க..

“ அதான் ஜில்லு நீயே சொல்லிட்டியே.. நான் உன்னை தான் நினைச்சுட்டு இருக்கேன் “ என கூறி அவளின் கையை பிடித்து முத்தம் கொடுக்க...

“ இப்போ மட்டும் இப்படி வந்து கொஞ்சு... நாலு மாசம் ஆகுது நீ என்னை கொஞ்சி... என்கிட்ட இப்படி இருந்து பேசி “ என கடுப்பாக வினவ..

“ இதுக்கு தான் கோபமா.. நான் என்னதோ, ஏதோன்னு பயந்துட்டேன் “ என கூறிக் கொண்டே அவளின் இடையில் கைகொடுத்து தன் அருகில் இழுத்த வெற்றி “ அதுக்கு தான் ஜில்லு ஒரு வாரம் நாம வெளிய போறோம்.. உனக்கும் படிப்பு முடிஞ்சுட்டு.. இனி என்ன எப்பவும் நீ மாமா பக்கத்திலையே இருக்கலாம்“ என கூற..

“ நிஜமாவா மாமா “ என கேட்டவள் அவனை அப்படியே கட்டிக் கொண்டாள்...

அன்று இரவே சக்தியிடம் இந்த விசயத்தை கூறி அவனையும் அழைக்க, “ இல்லடா வெற்றி நீயும் இனியாளும் போங்கடா.. நாங்க அடுத்த முறை போறோம்.. ஆருஷ் இப்போ தான் நடக்கவே பழகுறான் இப்போ அவனை வச்சுக்கிட்டு எங்கையும் போகமுடியாதுடா “ என கூற சக்திசொல்வதும் சரியாக பட வெற்றி – இனியாள் மட்டுமே கிளம்பும்படியானது...
 




Aadhiraa

SM Exclusive
Author
Joined
Jan 17, 2018
Messages
1,073
Reaction score
7,772
Location
Tirunelveli
காலையில் எல்லாரிடமும் கூற லக்ஷ்மிக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது.... அவன் அருகில் வந்தவர் “ ரொம்ப சந்தோசம் வெற்றி உன்கிட்ட அவளை எங்கையாவது அழைச்சுட்டு போக சொல்லணும்னு இருந்தேன்... உன்கிட்ட சொன்னா, சக்திகிட்டயும் சொல்லணும், ஆனா குழந்தையை வச்சுக்கிட்டு சக்தி எங்கையும் போக முடியாது அது தான் மனசுக்குள்ளையே வச்சுகிட்டேன்... சந்தோசமா போய்ட்டுவாங்க “ என கூற

இதழியோ அப்படியோ சந்தோசமாக இனியாளை அணைத்துக் கொண்டாள்...

அன்று மாலையே இருவரும் முணார் நோக்கி கிளம்பினர்... சுற்றிலும் பச்சை கம்பளம் விரிக்கபட்டதுப் போல் எங்கும் சுற்றி தெரிந்த தேயிலை தோட்டத்தின் அழகை ரசித்தபடி காரிலிருந்து இறங்கினர் இருவரும்...

சட்டென்று தாவி அணைத்த ஈர தென்றலும், நாசிக்குள்நிறைந்த தைல வாசனையும், மனதை பெரிதும் வசபடுத்த, கன்னத்தில் கைவைத்து அப்படியே அதிசயித்து நின்றாள் இனியாள்...

அவளின் மகிழ்ச்சியை பார்த்து கொண்டிருந்த வெற்றி, அவள் அருகில் வந்து “ ஜில்லு ஒரு வாரம் இங்க தான் இருக்க போறோம் மெதுவா ரசிக்கலாம் வா “ எனஅவர்களுகென்று ஏற்பாடு செய்திருந்த காட்டேஜ்நோக்கி அழைத்து சென்றான்...

குளித்து, உண்டு முடித்துமீண்டும் வெளியில் வர, உடலை ஊசி போல் குளிர் தாக்க இருகைகளையும் தேய்த்து கன்னத்தில் வைத்து அந்த இயற்கையோடு இயற்கையாக சிறுகுழந்தையாக குதுகளித்தவளை அப்படியேவாரி அணைக்க கைகள் பரபரக்க சுற்றிலும் இருக்கும் ஆட்களை கண்டு அடக்கி கொண்டான் வெற்றி...

சிறிது நேரத்தில் அறைக்கு திரும்ப, அவளோ ஜன்னல் கதவுகளை திறந்து புகை மண்டலங்களுக்கு இடையே வீற்றிருக்கும் மலைராணியை ரசித்திருக்க..

கட்டிலில் அமர்ந்திருந்த வெற்றியோ அவனின் ராணியை ரசித்திருந்தான்... குளிர் தாங்கமுடியாமல் கைகளை தேய்த்து,கன்னத்தில் அழுத்தி இயற்கையை ரசித்திருக்க, காண்டான வெற்றி “ இவளை இவளை இப்படியே விட்டு வைக்கிறது நல்லதில்லை “ என எண்ணி அவள் அருகில் சென்றான்..

அவளோ வாயை குவித்து “ உஷ் “ என்ற சத்தத்துடன் கைகளை தேய்த்து கன்னத்தில் வைக்க, அவள் அருகில் வந்த வெற்றி அவளை பின்னிலிருந்து அணைத்து கன்னத்தில் முகத்தை பதித்தவன்..

“ என்ன ஜில்லு செம குளிர்ல “ என கிறக்கமாக வினவ..

அவனை நோக்கி திரும்பியவள் “ ஆமா மாமா.. செம குளிர் “ என கூறி மீண்டும் வாயை குவித்து ஊத வர அவளின் கன்னத்தை பிடித்து அவளின் இதழை சிறைசெய்ய,

உடலை ஊசியாக தழுவிய குளிர் இதமாக மாற, அந்த இதத்தில் மிதமாக கரைந்து போக ஆரம்பித்தனர் அந்த காதல் ஜோடிகள்....

அன்று ஆருஷை தூக்கி நெஞ்சில் படுக்க வைத்திருந்த சக்தி கண்ணை மூடி கட்டிலில் படுத்திருந்தான்... ஆருஷோ அவனின் நெஞ்சில் சுகமாக படுத்திருக்க.. அதிலும் ஆருஷ் ஏதோ புரியாத மொழியில் அவனிடம் ஏதோ கூறிக் கொண்டிருந்தான்... இப்பொழுதுதான் சின்ன சின்ன எட்டு எடுத்து வைக்கும் அளவுக்கு வளர்ந்திருந்தான் ஆருஷன்...

குழந்தையோ அவனின்மீசையை பிடித்து “ ப்பா..ப்பா..” என கூறிக் கொண்டிருக்க “ செல்லம் அப்பா சொல்லுறீங்களா.? “ எனசக்தி கொஞ்ச.. அந்த நேரம் அறைக்கு வந்த இதழி கண்ணில் இக்காட்சி பட....

மனமோ“ டேய் வர வர.. நீ என் இடத்தை பிடிச்சுகிட்டு இருக்க... மாமா உன்னையே சுத்தி சுத்தி வாரார்.. என்னை கண்டுக்கிறதே இல்ல.. பேசாமமாமா மனசுல இருக்கிறதை என்கிட்ட சொல்லாமலே இருந்திருக்கலாம் ” என எண்ணிக் கொண்டே அவன் அருகில் வந்து குழந்தையை தூக்க வர,

மனமோ“ நீ ஏண்டி அவங்களை பார்த்து பொறாமை படுற நீ வேண்ணா அவன் பக்கத்துல போய் இன்னொரு நெஞ்சுல படுத்து கிட்டு அவன் கிட்ட பேசு அதை விட்டுட்டு இப்படி பொறாமை படாத “ என அவள் மனது தலையில் கொட்ட..

அவர்களைப் பார்த்துக் கொண்டே அருகில் இருந்த சோபாவில் கையில் வைத்திருந்த ஆருஷ் உணவை அருகில் வைத்துக் கொண்டு அமர்ந்துக் கொண்டாள்...

அப்பொழுது தான் அவளை கவனித்த சக்தி “ டேய் செல்லம்.. அம்மா வந்துட்டா.. இனி உன்னை கொஞ்சுனா ரொம்ப ஜெலஸ் ஆகிருவாங்க... அவங்க பாவம் தானே “ எனகுறும்புடன் கூறி அவளைப் பார்த்து கண்சிமிட்ட..,

“ ரொம்பத்தான்“ என இதழை சுழித்த அவள் அவனை தூக்க வர,

அவன் கூறுவதுப் புரிந்ததுப் போல் ஆருஷ்சிணுங்கலாகஅழ ஆரம்பிக்க, அவன் அருகில் வேகமாக வந்த இதழி “ அம்மாகிட்ட வாங்கசெல்லம்“ என அவனை தூக்க வர, அவள் அருகில் வரவும் “ அம்மா தன்னை அப்பாகிட்ட இருந்து தூக்கி விடுவாளோ “ என எண்ணிய ஆருஷ் வேகமாக அழ ஆரம்பித்தான்...

அவன் வேகமாக அழவும் பதறியசக்தி“ இங்கையே இருக்கட்டும் லிப்ஸ்.. இப்படியே அவனுக்கு ஊட்டி விடு “ என கூறி ஆருஷை நோக்கி “ அப்பாமடியிலயே இருங்க செல்லம்,அம்மா ஊட்டி விடுவா “ என கூற, இருவரையும் பார்த்து இப்பொழுது தான் முளைத்த நான்கு பல்லையும் காட்டி “ ஈஈ“ என சிரித்து வைத்தான் அவன்...

சக்தி முகத்தை இதழி பார்க்க அவன் ஆசையும், குழந்தையின் சிரிப்பும் கண்ணில் பட கிண்ணத்தை அருகில் வைத்து விட்டு அங்கிருந்த சிறு நாற்காலியைஅவன் அருகில் இழுத்துப் போட்டு அமர்ந்தாள்...இப்பொழுதெல்லாம் அவனின் முகத்தை வைத்தே அவனின் சந்தோசத்தை அறிந்துக் கொள்வாள் அவள்...

ஆருஷை மடியில் வைத்திருக்க, கொஞ்சம் கொஞ்சமாக அவனுக்கு ஊட்ட அவனோ நாலு பல்லையும் காட்டி அப்பாவையும், அம்மாவையும் பார்த்துக் கொண்டே சாப்பிட, சக்தியோ ஊட்டும் அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான்...

எப்பொழுதும் அவளின் முகம் ஒரு சோக சித்திரமாக அவன் கண்களுக்கு தெரியும், ஆனால் இன்றோ அவளின் முகம் பல வர்ண ஜாலங்களை காட்ட அப்படியே பார்த்திருந்தான்... அவளின் இந்த மாற்றத்துக்கு காரணம் அவளின் சின்ன சின்ன ஆசை கூட நிறைவேறிய சந்தோசமே...!!

அவனின்முகம்குறுஞ்சிரிப்பை காட்ட திடீரென “ டேய் செல்லம். அப்பாக்கு அம்மா ஊட்டி விடமாட்டாங்களாமா..? “ என வினவ.

அவனைப் பார்த்த அவள்“ அம்மாவுக்கு அப்பாவை ஊட்டி விட சொல்லுடா செல்லம் “ எனகுழந்தையிடம் கூறி, அவனிடம்“ இனி இப்படி குழந்தையை வச்சுக்கிட்டு என்கிட்ட பேசுவியா“ என கண்ணால் முறைக்க..

அவளின் முறைப்பை புறம் தள்ளியவன் “ அப்படியா... அம்மாவுக்கு ஊட்டி விட்டா, அப்பாவுக்கு அம்மா ஊட்டி விடுவாங்களாமா ..? “ எனஅவளை பார்த்துக் கொண்டே கள்ள சிரிப்புடன் கேட்க...

அவன் பார்வையை கண்டவள் “ இவன் பார்வையே சரி இல்லையே இதழி கவனமா இருடி“ என தனக்கு தானே கூறிக் கொண்டவள், அவனை சந்தேகமாக பார்க்க,

“ ஆஹா.. உசாராயிட்டா.. சக்தி மீதியை பிறகு வச்சுக்கலாம் “ என எண்ணிய அவன் “ என்ன சாப்பிட ரெடியா..? “ என கேட்க..

அவனின் கேள்வியை அறிந்தும் அறியாதவள் போல் “ இவன் குழந்தையா இருக்கதுனால தான இவனை வச்சு என்னை வம்பிளுகிறீங்க “ என சிணுங்கலுடன் கேட்க..

“ இவன் மட்டும் வளர்ந்திருந்தா..? உன்னை எனக்கு ஊட்ட வச்சுட்டு தான் வேறு வேலை பார்த்திருப்பான்... இப்படி கெஞ்ச விட்டிருக்க மாட்டான் “ எனகுழந்தையை பார்த்துக் கொண்டே புன்சிரிப்புடன் கூற..

அவனின் சிரிப்பை அப்படியே ரசித்துப் பார்த்திருந்தாள்... அவளின் முகத்தை கண்டவன் “ இவளுக்கு இப்படி தூரத்தில இருந்து ரசிக்கிறதே வேலையாப் போச்சு “ என எண்ணி அவளை நோக்கி “ என்ன“ என இருபுருவம் உயர்த்தி கேட்க...

“இத்தனை காதலை வச்சுகிட்டு இன்னும் எத்தனை நாள் இப்படி தள்ளி தள்ளி போவ குட்டிமாமா “ என அவனைப் பார்த்து கேட்க..

" ஏன் அது உனக்கு தெரியாதா " என அவளை பார்த்து கண்களால் கேட்டு குழந்தையை அவள் கையில் கொடுத்துவிட்டு வெளியில்செல்ல எத்தனிக்க..

இந்த முறை அவனின் பார்வையை சரியாக படித்தவள், அவன் வெளியில் செல்லும் முன் அவளின் ஷர்ட்டை பற்றி இழுத்து " யோவ் உனக்கு என்னதான்யா பிரச்னை..? " என அதிரடியாய் பழைய இதழியாய் வீறு கொண்டு எழுந்து கேட்க…

அவளின் இந்த அதிரடியில் அவளை நோக்கி திரும்பிய அவன் கண்கள்மின்ன அவளை பார்த்தான்...

வேர் மெல்ல சாய்ந்தது....
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ஷாந்தினிதாஸ் டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top