• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Ennai Verodu Saithavale(Ne)..!! Epi - 17

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
ஹாய்.. ஹலோ... மக்களே....



என்னை வேரோடு சாய்த்தவளே(னே).. !! அடுத்த எபி 17 கொண்டு வந்துட்டேன்... கதையை தேடுன மக்கள் எல்லாரும் ஓடி வந்து படிச்சுட்டு லைக் & கமெண்ட் பண்ணுங்க... கமெண்ட் பண்ணுறவங்க அப்படியே ஒரு சக்திக்கு ஒரு ஹார்ட் விட்டுட்டு போங்கப்பா.. மீ பாவம்.... இந்த எபியில் ஏதாவது டவுட் சந்தேகம் இருந்தா கேளுங்க... எதுக்குன்னா அடுத்த எபியோட பிளாஷ்பேக் முடிக்கலாம் என்று நினைக்கிறேன்.... “ என்ன கண்ணு பாட்டிய இப்படி சாச்சுபுட்டீங்க “ என்று கேட்டவங்களுக்காக அவங்க இன்னும் இருக்காங்க.. “ என்னோட நண்பி வருங்கால டாக்டர் மஹா அவர்கள் கூறிய படி பாட்டியை கொஞ்சமாக தான் சாய்த்திருகிறேன்... அடுத்து எப்படி சாய்க்க என்று நாளை டாக்டர் ஐடியா தருவதாக கூறி இருக்கிறார்.... இந்த எபிக்கு கொஞ்சம் டவுட் கிளியர் செய்த டாக்டர் படித்துக் கொண்டிருக்கும் என் தோழி மகாவுக்கு ரொம்ப நன்றிகள் “.... கூடவே “ எபியை படித்து உங்க கருத்து கூறும் உங்க எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி செல்லம்ஸ் “...

வேர் – 17

சக்திவேலுக்கு தன் தாயை திட்டியதில் இருந்து மனதே கேட்கவில்லை... அவனுக்கு லக்ஷ்மி என்றால் உயிர் என்று கூட சொல்லுவான்... எந்த பிள்ளைக்கு தான் தன் தாயை பிடிக்காமல் போகும்...

வெற்றியை விட லக்ஷ்மி அதிகம் கைக்குள் வைத்திருந்தது சக்தியை தான்... தன் குணத்தை அப்படியே அவனுக்கு தள்ளிவிட்டிருந்தார்.. ஆனாலும் அவன் வளர வளர குணத்தை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் கொண்டான்...

ஆனாலும் அவரை திட்டியது மனத்தை வருத்த அவரை நோக்கி சென்றான்... கட்டிலில் படுத்திருந்தவர், இவனை கண்டதும் அந்த பக்கம் திரும்பி படுத்துக் கொண்டார்..

மெதுவாக சிரித்துக் கொண்டு “ ம்மா “ என அழைத்துக் கொண்டே கட்டிலின் அந்த பக்கம் அமர்ந்துக் கொண்டான்..

அவர் மீண்டும் திரும்பி படுக்க.. “ ம்மா.. என்னம்மா நீ... இதுகெல்லாம் கோச்சுகிட்டா எப்படி... நான் என்ன தப்பா சொல்லிட்டேன்.. நீ பண்ணுறது நல்லதில்லைம்மா... பெண் பாவம் பொல்லாதது.. அதிலும் இப்படி ஏழைகளின் சாபம் நம்மை சும்மா விடாதும்மா... உங்க பிள்ளைகள் நல்லா இருக்கணும்ன்னா இப்படி கொஞ்சம் நல்லது செய்யணும்மா... அவங்க ரெண்டு பேர் மேலையும் உங்களுக்கு அப்படி என்ன கோபம் சொல்லுங்க “

“ நம்ம வீட்டுல வேலைகாரிகளை தலையில் எடுத்து வச்சு கொஞ்சுறாங்கடா... எங்க வீட்டுல அவங்களை சமையலறை தவிர எங்கையும் விடமாட்டங்க... ஆனா இங்க எல்லாம் தலைகீழா நடக்குது... அதிலும் உன் பாட்டி அவளுகளையே எனக்கு மருமகளா கொண்டு வர பாக்குறாங்க... நம்ம குடும்பம் என்ன, கௌரவம் என்ன.. இவங்களை நம்ம வீட்டுக்கு மருமகளா கொண்டு வந்தா நம்ம மதிப்பு, மரியாதை என்ன ஆகிறது...

காலம் காலமா பாரம்பரியமா வாழுற குடும்பம்டா... அதை இந்த ஒன்னும் இல்லாதவளுக வந்து அழிக்கணுமா..? எனக்கு ஒரு ஆசை இருக்கும்டா... உங்க பாட்டி மட்டும் உங்க அப்பாவுக்கு என்னை கல்யாணம் பண்ண நினைக்கும் போது முதலில் விசாரித்ததே நல்ல குடும்பமா..? நம்ம ஸ்டேட்டஸ்க்கு ஒத்து வருமா இப்படி எல்லாம் பார்த்து தான் என்னை இங்க கொண்டு வந்தாங்க..

அதே போல தான நானும் இருப்பேன்.. எனக்கு வர மருமகளும் நல்ல வீட்டுல இருந்து வரணும், என் பசங்களும் நல்லா வாழணும் என்று நான் நினைகுறதுல என்ன தப்பிருக்கு... அது தான் அவங்களை இந்த வீட்டுக்கு மருமகளா.? கொண்டு வந்திர கூடாதே என்ற ஒரே காரணத்துக்காக மட்டும் தான் நான் அவங்களை வெறுத்து ஒதுக்குறேன்..

இதே இது நாளைக்கே ரெண்டு பேருக்கும் ஒரு கல்யாணத்தை பண்ணி வெளியில் அனுப்பின பிறகு இந்த வீட்டுக்கு தாராளமா வரட்டும், போகட்டும் நான் ஒண்ணுமே சொல்லமாட்டேன்...

ஆனா என்னமோ அவங்க வீடு மாதிரி அதிக உரிமை எடுக்குறதும், உங்க பாட்டி, உன் தம்பி, என் புருஷன் அது தான் உங்க அப்பா எல்லாரும் தலையில் தூக்கி வச்சு ஆடுறதும் எனக்கு பிடிக்கலை...

நீ மட்டும் தான் அவங்களை கண்டும் காணாம இருந்த.. ஆனா இப்போ அதுவும் போச்சு.. உன்னை நல்லா மயக்கி வச்சுட்டாங்க “ என கண்ணீர் வடிக்க...

அவர் கூறுவதும் அவனுக்கு சரியாக பட அமைதிக்காத்தான்.. அவனும் இந்த தகுதி பார்த்து பழகும் ரகம் என்பதால் அவர் கூற்று சரியாக பட்டதோ என்னவோ... ஆனாலும் அவர்கள் அத்தை பொண்ணுங்க என்று அவனுக்கும் சொல்ல மனது வரவில்ல...

அதிலும் அவன் எண்ணம் முழுவதும் ஒன்றே ஓன்று தான்... இதழியை தன் தாய்க்கு நன்கு பிடித்த பிறகு அவளை கைபிடிக்க வேண்டும் என்று எண்ணி இருந்தான்... ஆனால் அவன் ஓன்று நினைக்க, நடப்பது வேறாக இருக்கிறது... என்ன செய்வது... “ ஆனாலும் அவரின் கண்ணீர் அவனுக்கு வேதனையளிக்க.. அம்மாவை முதலில் சமாளிப்போம் என எண்ணி.., அவரை சகஜம் ஆக்கும் பொருட்டு “ ம்மா.. என்னம்மா நீ.. இதுக்கு போய் அழுற.... நான் யாரு... என்னை யாரும் மயக்க முடியாது.. நான் உன் சக்திம்மா “ என காலரை தூக்கி விட..

அவனின் மனசாட்சியோ “ குட்டிமாமா என்று ஒரு சத்தம் கேட்டா போதும் அய்யா சத்தமில்லாம மயங்கிருவாறு “ என அவனை வார... “ சகுனி.. சகுனி.. “ என அதை அடித்து விரட்டிய அவன்..

“ ம்மா... எல்லாம் நான் பாத்துகிறேன்.. நீ அவங்களை திட்டாமல் மட்டும் இரு... உனக்கு நேரத்துக்கு நேரம் சாப்பாடு தருவது அவங்க தான்... வீட்டுல எல்லாம் பொறுப்பா பாத்துகிறாங்க.. நீ எதுக்கும்மா அவங்க மேல வெறுப்பை சம்பாதிக்குற..

ஒரு வேளை வெற்றி எனக்கு முன்னாடியே இனியை சத்தமில்லாமல் கல்யாணம் பண்ணிட்டு வந்தா நம்ம கெளரவம் என்ன ஆகிறது... அதிலும் நீ இப்படி அவங்களை பேசிட்டே இருந்தா யாரும் வேண்டாம் என்று சக்தி தனியா போய்ட்டானா.? நம்ம மதிப்பு என்ன ஆகுறது....

கொஞ்ச நாள் தாம்மா அவங்களை சகிச்சுக்கோ... எல்லாம் சரியா போகும் என கூறி வெளியில் வரவும், நித்தி லக்ஷ்மி அறைக்கு செல்லவும் சரியாக இருந்தது... அவளை ஒரு பார்வைப் பார்த்துக் கொண்டே அறையை விட்டு வெளியில் வந்தான்....

வெளியில் வந்தவன் இதழி கையால் “ ஒரு காதல் டீயை “ குடித்துவிட்டு செங்கல் சூளைக்கு சென்றான் அவன்..

வெற்றியோ திருநெல்வேலி ஆபிஸ் மட்டுமே குறி என்று அங்கயே படுத்துக் கொண்டான்..

மாலை எப்படியும் ஒரு அரைமணிநேரம் இனியாளுக்காக வந்து விடுவான் வெற்றி... எம்.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் முதல் வருடத்தில் இருக்கிறாள்.. அதிலும் லக்ஷ்மி முன் இருவரும் பார்த்துக் கொள்வதே இல்ல... வெற்றி வீட்டில் அதிகம் இருப்பதும் இல்ல...

முன்னொரு நாள் இனியாள் கல்லூரி விட்டு பஸ் ஸ்டாண்ட் வர திடீரென அவள் முன் காரை நிறுத்திய வெற்றி கதவை அவளுக்காக திறந்து விட்டு “ ஏறு “ என கூற....

“ ஊஹும்.. நான் மாட்டேன் “ என சிறுகுழந்தையாக மறுத்தவளை.., முறைத்துப் பார்த்த அவன் “ இப்போ ஏற போறியா இல்ல இறங்கி வந்து உன்னை தூக்கி காரில் உட்காரவைக்கவா “ என கேட்டுக் கொண்டே காரை விட்டு இறங்க...

“ வேண்டாம்.. வேண்டாம்.. நானே ஏறிக்கிறேன் “ என பயந்து கூறிக் கொண்டே சுற்றும் முற்றும் பார்த்து மெதுவாக ஏற கால் வைக்க..

“ யம்மா.. தாயே ஏறும்மா.. கொஞ்சம் உன்கிட்ட பேசணும் “ என கெஞ்சி அழைக்க

அவன் கெஞ்சுவது பொறுக்காமல்.... இல்லை சகிக்காமல் உடனே ஏறிக் கொண்டாள் இனியாள்...

காரை கொஞ்ச நேரம் அமைதியாக ஓட்டி சென்ற வெற்றி ஒரு இடத்தில நிறுத்தி அவளை நோக்கி திரும்பி அவளுக்கு வாங்கி வைத்திருந்த பாணி பூரியை அவளிடம் கொடுக்க...

அவள் “ வேண்டாம் “ என மறுக்க.. “ தாயே.. என் பொண்டாட்டி... மயக்க மருந்து எதையும் கலக்கல... அதிலும் அப்படி மயக்க மருந்து தந்து உன்னை நான் கிஸ் பண்ணனும்னு எந்த அவசியமும் இல்லடி... “ என சம்பந்தமே இல்லாமல் பேச..

அவளின் முழியை கண்ட அவன் “ என்ன இப்போ சம்பந்தமே இல்லாமல் கிஸ் பத்தி பேசுறானேன்னு நினைக்குறியா.. நினைக்கணும்டி... அவன் இவன் லவ் பண்ணும் போதே அப்படி கிஸ் பண்ணுனேன்.. அங்க போனேன் இங்க போனேன் என்று சொல்லுறானுக..

இங்க பல வருசமா லவ் பண்ணி ஒண்ணுக்கும் வழியை காணும் “ என புலம்ப...

“ அன்னைக்கு குற்றாலத்துல வச்சு கிஸ் பண்ணிட்டு பொய்யா சொல்லுற “ என மனதில் எண்ணிய அவள் எம்பி அவன் தலையில் கொட்ட..

தலையை தேய்த்து விட்ட அவன் “ அது ஒரு கிஸ்ஸாடி... நான் அது தான் கிராமத்து கிஸ்ன்னு நெனச்சேன்.. பார்த்தா அது பழங்கால பட்டிக்காடு கிஸ்ஸாம்... அந்த கால கருப்பு வெள்ளை கிஸ்... “ என முகத்தை சுளித்துக் கொண்டு “ இங்க வாயேன் “ என மெதுவாக அழைக்க..

அவனை சந்தேகமாக பார்த்த அவள்.. அவனை விட்டு தள்ளி அமர.., “ அட போமா.. நீ தள்ளி போனா நான் பக்கத்துல நெருங்கி வருவேன் “ என கூறி அவள் அருகில் வந்து.. “ இந்த கிராமத்து கிஸ் என்றால் பச்சக்குன்னு நச்சுன்னு கன்னத்துல அழுந்த குடுக்கணுமாம்.. ஒன்னும் எனக்கு தரியா ” என ஹஸ்கி வாய்சில் கேட்க...

முகம் சிவக்க தலையை குனிந்துக் கொண்டாள் அவள்... அவளின் வெட்கத்தை ரசித்துக் கொண்டே.. இந்தா என பானிபூரியை அவள் கையில் கொடுக்க.. மெதுவாக வாங்கிக் கொண்டாள் அவள்...

அதை சாப்ட்டுக் கொண்டே பேசிக் கொண்டு இருக்க... ஒரு பானிபூரியை எடுத்து அவனிடம் நீட்ட “ வேண்டாம்மா நீ சாப்டு “என கூறி அவள் சாப்டும் அழகை ரசித்துக் கொண்டு இருந்தான்...

மெதுவாக “ இனி “ என அழைக்க...
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
“ என்ன “ என அவனை பார்த்து நிமிர்ந்தவளிடம்..

“ என் அம்மா எது சொன்னாலும் கண்டுக்காத.. இந்த மாமாவுக்காக பொறுத்துக்கோ இனி... அவங்க ஏதாவது கோபத்துல பேசுவாங்க “ என மெதுவாக கூற..

அவனைப் பார்த்து சிரித்த அவள் “ இதெல்லாம் நீங்க சொல்லணுமா..? அவங்க எது சொன்னாலும் நான் இப்போலாம் கண்டுக்க மாட்டேன்.. எனக்கு தான் நீங்க சப்போர்ட் பண்ணுறீங்களே அது போதும் “ என சிரித்துக் கொண்டே கூற...

அவளின் சிரிப்பை ரொம்ப நாட்களுக்கு பிறகு ரசித்துப் பார்த்த அவன், அவளிடம் நெருங்கி வந்து “ அப்புறம் ஒரு ரகசியம் சொல்லவா...? அதை யார் கிட்டயும் சொல்லகூடாது..!! சீக்ரெட்டா ..? வச்சுக்கணும் “ என மெதுவாக கண்ணடித்துக் கூற..

அவள் மனதோ படபடவென அடித்துக் கொள்ள..., பலவிதமான உணர்சிகள் முகத்தில் மோத கையில் எடுத்த பானிபூரியை அப்படியே பிளேட்டில் வைத்து குனிந்து அமர்ந்திருக்க., “ என்ன சொல்லபோகிறான் “ என மனம் படபடவென அடித்துக் கொள்ள அப்படியே அமர்ந்திருந்தாள்...

அவள் முகத்தில் வந்து போன கலவையான உணர்வுகளை பார்த்துக் கொண்டிருந்தவன், சிரித்துக் கொண்டே அவள் காதுக்கருகில் வந்து “ அம்மா, எது சொன்னாலும் இந்த காதுல வாங்கி, அந்த காதில விட்டுறணும்.. நான் அப்படித்தான் செய்வேன் “ என குறும்பு குரலில் கூறி அவளை பார்க்க...

அவள் முகம் காற்றுப் போன பலூன் போல் “ புஷ் “ என மாற... என்ன இனி நான் சொன்னது கேட்டுச்சா என குறும்புடன் கேட்க... முகத்தில் தோன்றிய ஏமாற்றத்துடன் “ கேட்டுச்சு.. கேட்டுச்சு “ என கூறி “ நேரம் ஆகிட்டு வீட்டுக்கு கிளம்புவோம் மாமா “ என கூற சிரிப்புடன் அவனும் கிளம்பினான்... அதிலிருந்து லக்ஷ்மி எது சொன்னாலும் இனியாள் காதில் எடுப்பதே இல்லை...

வெற்றியை எண்ணி எண்ணி சிரித்துக் கொண்டிருக்க... நித்தியுடன் வெளியில் வந்த லக்ஷ்மி அவளைப் பார்த்துக் கொண்டே “ எப்பவும் கனவுலையே இருக்க வேண்டியது “ என போகிற போக்கில் சொல்லி சென்றார்...

சக்தி வெளியில் வரவும், உள் சென்ற நித்தியா “ ஆன்ட்டி... உங்க மாமியார் சக்தியையும், இதழியையும் சேர்த்து வைக்க எண்ணுகிறார்... பூஜை அறையில் நின்று வேண்டி கொண்டு இருக்கிறார் “ என்று கண்ணழகி வேண்டிக் கொண்டிருந்ததை கேட்டு வந்து கூற... அதிர்ந்த லக்ஷ்மி “ என்ன..!! அப்படி பிளான் போடுறாங்களா..? விடமாட்டேன் “ என கூறிக் கொண்டு “ நீ.. வா நித்தி “ என அவளை அழைத்துக் கொண்டு பாட்டி அறைக்கு சென்றார்...

சக்தி பாட்டியிடமும், அம்மாவிடமும் எல்லாம் கூறி விட்டோம் என நிம்மதியாக வேலையை பார்க்க...

கண்ணுபாட்டியோ தன் பேரன் பேத்திகளின் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டுதல் வைத்துக் கொண்டு குளிக்க செல்ல அடுத்த கொஞ்ச நேரத்தில் அவரின் அலறல் கேட்டு பதறி அறைக்கு ஓடினார் லக்ஷ்மியும், நித்தியும்...

அவர் கீழே விழுந்திருப்பதைக் கண்ட லக்ஷ்மி “ ஐயோ அத்தை.. என்னாச்சு “ என கேட்டுக் கொண்டே அவர் அறைக்குள் நுழைய பாத்ரூம் வாசலில் மயங்கி கிடந்தார் கண்ணழகி....

“ அத்தை “ என பதறி அழைத்துக் கொண்டே அவரை தூக்கி மடியில் வைத்து “ அத்தை என்ன ஆச்சு.. கண்ணை திறந்துப் பாருங்க “

அவர் குரல் கேட்டு இனியாளும், இதழியும் வர பாட்டி நிலை கண்டு பதறியவர்கள் உடனே சக்திக்கு அழைத்துக் கூற.. அடுத்த நிமிடம் ஓடி வந்தவன் அவரை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றான்...

அவரை பரிசோதித்த டாக்டர்ஸ் “ நோ ப்ராப்ளம்.. உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை... விழுந்ததில் மயக்கமாகிட்டாங்க... பிராச்சர் அங்க இங்க இருக்கு.. அதிலும் இடுப்பில பலமா அடிபட்டிருக்கு... எலும்பு முறிவு இருக்கு... எழுந்து நடக்குறது கஷ்டம் தான்.. அவங்களை நல்லா பார்த்துகோங்க நார்மலான பிறகு ஒரு ஆப்ரேஷன் பண்ணுனா சரியாப் போகும்... இப்போ இடுப்பு பெல்ட் போட்டுருக்கேன்.. கவனமா பாத்துகோங்க “ என கூறி அவர் விடைபெற... ஒரு வாரம் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அழைத்து வரப்பட்டார் கண்ணழகி...

கண்ணழகியை நினைத்து மிகவும் வேதனைப்பட்டது நாராயணனே.. " வீட்டில் இளவரசியாக வலம் வந்தவர். ஒரே நாளில் ஒரு மூலையில் முடங்குவதை " அவரால் கண் கொண்டு பார்க்கமுடியவில்லை....

கண்ணழகியை பார்த்துக் கொள்வது முழுவதும் இதழி பொறுப்பானது... ஆனாலும் லட்சுமி விடாமல் " உன் அக்கா லவ் விஷயம் தெரிஞ்ச அன்னைக்கு உன் பாட்டியை காவு வாங்கிட்டா, இன்னைக்கு உனக்கும் , சக்திக்கும் கல்யாணம் பண்ண என் மாமி ஆசைப்பட்டாங்க, இப்போ அவங்களையும் படுக்கையில் வீழ்த்தியாச்சு.. என்ன ராசியோ என்னதோ.. இங்கையே இருந்து இன்னும் யாரை எல்லாம் காவு வாங்க போறியாளோ " என்று இதழி வீட்டில் எல்லாம் கூறிக் இருந்தார் லட்சுமி...

தினமும் இதே வாக்கியத்தை எண்ணியே வருத்தம் கொண்டாள்.. முதலில் கூறியதை அவள் காதில் எடுக்கவே இல்லை... ஆனால் நாளடைவில் தங்கள் ராசி தான் மணிபாட்டி இறக்க காரணமோ.? என எண்ண ஆரம்பித்தாள்...

அதிலும் தினமும் கண்ணுபாட்டி அவளிடம் கூறும் ஒரு வாக்கியம் " உங்க ரெண்டு பேர் கல்யாணத்தை பார்த்துட்டு தான் நான் கண்ணை மூடுவேன் " என்பது தான்... அவர் கூறும் நேரம் மென்னகையுடன் கடந்து செல்வாள் இதழினி...

கண்ணழகியை காண வரும் பொழுது எல்லாம் நாராயணன் கண்ணீர் வடிப்பதைக் கண்ட அவர் " இப்படி தண்ணீர் தூக்கிட்டு வந்தா என்னை பார்க்க வராதேடா... நீயே என்னை ஒரு நோயாளின்னு நினைக்க வைக்குறடா... இப்படி அழுது வடிஞ்சா இங்க வராதே " என கண்டிப்பாக கூற அதிலிருந்து கொஞ்சமாக மாறினார் நாராயணன்.. அப்படியே சக்திக்கு இதழி மேல் உள்ள ஆசையை கூற அவர் அடைந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை... “ தன் தங்கை மகள்கள் இனி எப்பொழுதும் இங்கையே இருப்பார்களே “ அந்த சந்தோசம் அவர் முகத்தில் முழுதாக தெரிந்தது...

அதிலிருந்து அவரை பார்க்க செல்லும் பொழுது கையேடு இதழி, இல்லை இனியை அழைத்து செல்வார்... அவருடன் அமர்ந்து பேசுவதால் கொஞ்சம் சகஜமாக இருந்தார்... இருவரும் முன் கண்ணுபாட்டியும் தன் வேதனையை மறக்க ஆரம்பித்தார்... சக்தி சொல்லவே வேண்டாம் அப்படியே உடைந்து போனான்.. தன கல்யாண ஆசையை கூறியதும் அவரிடம் தான் இப்படி ஆகியதே என மிகவும் வருத்தமுற்றான்..

வெற்றி அவரை காணும் எல்லாம் கண் அவன் அனுமதியில்லாமலே கண்ணீரை பொழியும்.... அப்படி கம்பீரமாக இருந்தவர் கண்ணழகி... எல்லாரிடமும் அத்தனை பாசமாக இருப்பார்.. யாருக்கும் எந்த தீங்கும் எண்ணாதவர்... அவர் இப்படி இருக்கையில் எல்லார் கண்களிலும் ரத்த கண்ணீர் வடிந்தது..

அடுத்து வந்த நாட்களில் கண்ணுபாட்டியின் உடல் நிலை மிகவும் மோசம் ஆக ஆரம்பித்தது... பேசவே மிகவும் சிரமப்பட்டார்... ஒரு வார்த்தை பேசும்முன் மூச்சுவிட மிகவும் சிரமப்பட்டார்... உடல் பெருத்து ஒரே இடத்தில் படுத்திருந்தது வேறு அவருக்கு மேலும் நோயை இழுத்து வந்தது...

டாக்டர் வந்து பார்த்து வீசிங் பிரச்சனை என பார்த்து அதற்கு தனியாக மருந்து மாத்திரை அளிக்க ஆரம்பித்தார்....
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
கண்ணுபாட்டியின் உடல் நிலை மோசம் ஆக ஆக லட்சுமி இதழினியை அருகில் விடவே இல்லை... சக்தி இருக்கும் நேரம் மட்டும் லட்சுமி ஓன்று கூறாமல் இருந்தார்... " தன் தாய் மாறிவிட்டார் “ என்றே சக்தி எண்ணிக் கொண்டு இருந்தான்.. தன் தாய் முன்னேயும் அவளிடம் நன்கு பேச ஆரம்பித்தான்... வீட்டில் நடப்பதை இதழியும் சரி இனியும் சரி யாரிடமும் கூறவில்லை...

நாளடைவில் இதழி மனதில் லட்சுமி கூறியதே ஒலிக்க ஆரம்பித்தது.. “ அதிலும் சிறுவயதில் ஆறுமுகபாண்டியும் - ருக்குமணியும் இவர்களின் பிறந்த நாள் கொண்டாட எண்ணி இவர்களுக்கு எல்லாம் வாங்க சென்ற நேரம் தான் இறந்துவிட்டனர் “ என்று மணிபாட்டி கூறியது வேறு அந்த நேரம் நியாபகம் வந்து அவளை தவிக்க வைத்தது..

“ அன்றும் இனியாள் - வெற்றி காதல் விஷயம் தெரிந்த உடன் தான் மணிபாட்டி இறந்துபி போனாங்க. இப்போ எனக்கும் சக்தி மாமாவுக்கும் கல்யாணம் பேச நினைக்கும் நேரம் கண்ணுபாட்டிக்கு இப்படி ஆகிவிட்டது.. எல்லாம் எங்க ராசி தானோ." என மனம் முழுமையாக என்ன ஆரம்பித்தது...

ஒரு விஷயத்தை நாம் முழுமையாக நம்பினால் அதுவே நமக்கு நடக்க ஆரம்பித்து விடும்... அதே தான் இதழி வாழ்க்கையில் நடந்தது.. அவளின் எண்ணம் போல் தான் அடுத்து வந்த நாட்களும் இருந்தது..

கண்ணழகி ஒரு வார்த்தை பேசவும் சிரமப்படுவதை கண்ட சக்தி தான் அவனின் நண்பன் அருணை ஒருவனை அழைத்து வந்து அவரை டெஸ்ட் பண்ண கூறினான்... அவன் வந்து அவரை பார்த்து அவரின் நிலையை கண்டு மருத்துவமனைக்கு அழைத்து கொண்டு சென்றான்...

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை செய்து, பல டெஸ்ட் செய்து பார்த்ததில் " நுரையீரல் கேன்சர் " என ரிசல்ட் வர.., எல்லாரும் அதிர்ந்துவிட்டனர்... லக்ஷ்மியால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை... என்ன தான் அவர் மேல் கோபமாக இருந்தாலும் கண்ணழகியை ஒரு நாளும் வெறுத்ததில்லை..

தொடர்ந்து அவருக்கு சிகிச்சையளிக்க எந்த பலனும் இல்லாமல் போக... " அவரின் கடைசி காலம் நெருங்கி விட்டது “ என கூறி கையை டாக்டர் விரிக்க... கண்ணழகி வேண்டிக் கொண்டது போலவே " தனது கடைசி நாட்களை என் வீட்டில், என் மக்களுடன் கழிக்க விரும்புகிறேன் " என்று கூறிய நேரம் எல்லார் கண்களும் கண்ணீரில் மிதக்க.. அந்த நேரமும் எல்லாரையும் அதட்டி வீட்டுக்கு வந்துவிட்டார் அவர்.....

எல்லாரும் அப்படி பார்த்துக் கொண்டனர் அவரை... இன்னும் பல வருடம் இவர் வாழ எல்லாரும் ஆசைக்கொள்ள... ஆனால் கடவுளோ " நீ இத்தனை நாளும் சந்தோசமாக வாழ்ந்தது போதும் “ என எண்ணிவிட்டார் போல..???

அடுத்த நாளே மூச்சுவிட மிகவும் சிரமப்பட உடனே அருணை அழைக்க, அவரின் நிலையை கண்டா அவன் உடனே வீட்டில் ஆக்சிஜன் வைக்க ஏற்பாடானது.. எல்லாரும் அவரையே கவலையும் பார்த்திருக்க.. நாராயணன் கண்ணீர் சுமந்த முகத்துடன் நிற்க... அந்த நிலையிலும் அவரை பார்வையால் அதட்டிக் கொண்டிருந்தார் கண்ணழகி...

அவரை உடனிருந்து பார்த்துக் கொள்ள.. அன்று ஒரு பெரிய டாக்டர் அவரை பார்க்க வந்தார்... வந்தவர் " இன்னும் இரண்டு இல்லை மூன்று நாட்கள் தான் இவர் இருப்பார். அதற்குள் இவருக்கு ஏதாவது ஆசை இருந்தால் நிறைவேற்றுங்க.. ஏற்கனவே வீட்டில் இருக்க ஆசைப்பட்டு தான் இங்கு வந்ததாக ஹாஸ்பிடலில் கூறினார்கள் எதற்கும் பார்த்து செய்ங்க " என கூறி சென்றார்......

டாக்டர் செல்லவும் லட்சுமி தீவிரமாக செயல்பட்டார்... அடுத்த நாளே நித்தியை வீட்டுக்கு மருமகளாக கொண்டு வர ஆசைப்பட்டு அவளுக்கான எல்லாம் ரெடி ஆகியது.. அதை கேள்விப்பட்ட சக்தி ஒருகரையில் அதிர்ச்சியாகி இருக்க... இதழியோ வெளி வந்த கண்ணீரை லக்ஷ்மிக்காக அடக்கி நின்றாள்....

அடுத்த நாள் காலையே அவள் மணமகளாகவும், சக்தி முடியவே முடியாது என்று தான் தாயிடம் நிலையாக நிற்க... கடைசி அஸ்திரமாக " நீயும் அந்த வேலைக்காரியை தான் மனசுல நினைச்சுட்டு இருக்க.. போ அவளையே கல்யாணம் பண்ணு.. அவளுக்கு தாலி ஏறும் முன் என் கழுத்தில் கயிறு ஏறும் '" என கூற மேலும் நொறுங்கிப் போனான்...

வாழ்க்கையில் முதல் முறையாக " தன் தாய் மேல் பாசம் வைத்தது தவறோ “என எண்ண ஆரம்பித்தான்... வெற்றி, நாராயணன் எவ்வளவோ கூறியும் லட்சுமி கேட்கவே இல்லை... இதலியோ தன பாட்டி அருகில் இருந்து கண்ணீர் வடித்துக் கொண்டு இருந்தாள். அவள் கண்ணீர் அவருக்கு எட்டியதோ..? இல்லை தன் காதல் அழிய போகிறது என்று அவளின் மனம் பட்ட வேதனை அவருக்கு தெரிந்ததோ என்னவோ.. மெதுவாக கண்ணை திறந்த அவர்.. வீட்டில் உள்ளவர்களை அழைக்க கூறினார்…

எல்லாரும் வரவும் மாஸ்க்கை எடுத்த அவர் " சக்தி கல்யாணத்தை பார்க்க வேண்டும் " என்று கூற.... சக்தி தன் காதல் கொஞ்சம் கொஞ்சமாக செத்து கொண்டிருப்பதை எண்ணி கண்ணீர் விட.., நித்தியோ புது புடவை உடுத்தி மணமகளாக அவன் அருகில் நிற்க... அதை காண சக்தி இல்லாதவளாக இதழி மெதுவாக கண்ணை மூடி சகித்துக் கொண்டு இருந்தாள்… நாராயணனோ " தன் அம்மாவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாத பாவி ஆனேனே " என வருந்திக் கொண்டு இருந்தார்…

எல்லாரையும் மெதுவாக பார்த்தவரின் பார்வை கடைசியாக இதழி முகத்தில் அழுத்தமாக பதிய.. கண்களை மூடிக் கொண்டார் அவர்.. பின் மெதுவாக கண்களை திறந்த அவர் இத்தாலியை பார்த்து கண்ணால் அழைக்க... " பாட்டி " என அழைத்துக் கொண்டே அவர் அருகில் வர..,

மெதுவாக... மூச்சு வாங்குவதையும் பொருட்படுத்தாமல் " இந்த கிழவியின் கடைசி ஆசை... குட்டியப்பா இந்த பாட்டிக்காக, இவள் என் பேத்தி இதழி கழுத்தில் தாலி கட்டுவியா குட்டியப்பா " என கண்களில் உயிரை தேக்கி யாசிக்க...

இதழிக்கும், சக்திக்கும் அதிர்ச்சி கலந்த சந்தோசம், நாராயணன், வெற்றி, இனி என எல்லாரும் சந்தோசம் கொள்ள.., லக்ஷ்மியோ " என்ன அத்தை பேசுறீங்க... என் பையனுக்கு இந்த வேலை காரியா... இவளுக்கு இவனை கட்டி வைக்கணும் என்று சொன்ன நாளில் இருந்து நீங்க முடியாம இருக்கீங்க.. அவ அக்கா, வெற்றி விஷயம் பேசும் பொது அவ பாட்டி உயிரை விட்டு போச்சு.. இப்போ இவளுக்கு கல்யாணம் பண்ணி வச்சு அடுத்து யார் உயிரை எடுக்க போறாளோ..? " என பேச..

" லட்சுமி " நாராயணன் கர்ச்சிக்க.. அப்படியே வாயை மூடிக் கொண்டார் லட்சுமி.. நித்தியோ " இப்படி மனா கோலத்தில் கொண்டு வந்து என்னை ஏமாற்றி விட்டாயே " என லக்ஷ்மியை பார்த்து நிற்க... இதை எதையும் நாராயணன் கருத்தில் கொள்ளவே இல்ல... நித்திகென்று லட்சுமி வாங்கி வைத்திருந்த தாலியை எடுத்து நாராயணன் சக்தி கையில் கொடுக்க...

அதை தடுத்த சக்தி " யாருக்காக வாங்கியதும் எனக்கு வேண்டாம் " என கூறி பாட்டியை பார்க்க...

அவரோ என்ன செய்ய போகிறாய் என்பதாக பார்க்க..தன் கழுத்தில் கிடந்த சங்கிலியை கழட்டி அவளுக்கு அனுவித்தான்... இதை யாருமே எதிர் பார்க்கவில்லை.. ஆனாலும் அவளுக்கு அது தான் தாலி... அப்படியே கண்களில் நீர் வழிய, அவனைப் பார்த்து நின்றாள்.... லக்ஷ்மியோ அவளை முறைத்து நின்றார்.. " என்னை மீறி எனக்கு மருமகளாக வந்துவிட்டாயே " என்பதாக.. நித்தியோ அந்த நிமிடமே வீட்டை விட்டு கிளம்பிவிட்டாள்...

வெற்றி இனியை எப்படியும் பார்த்துக் கொள்வான்.. அவளை அவன் எக்காலமும் கைவிடமாட்டான்... இனி சக்தியை பற்றிய கவலையும் இல்லை என்று எல்லாத்தையும் கண்குளிர கண்ட கண்ணழகி அயர்ச்சியில் மெதுவாக தன் கண்களை மூடினார் ( சோர்வில் தான் கண்ணை மூடினார் தப்பா எண்ணிவிடாதீர்கள் மக்களே.. ) ...

இனி வேர் மெல்ல சாயும்..;)
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
chain thaane potrukaanga, thaali kattalaiye.. ithai vachu lakshmi ethuvum prachanai pannuvaangalo????

Nice update shanthini...

apdiye intha "kaathal tea" epdi podrathunnu konjam solli thareengala??? Making tea with love apdinnu sollakoodathu....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top