• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Ennai Verodu Saithavale(ne)...!! Epi - 19

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
ஹாய்... ஹலோ... மக்களே..!!

சாரிப்பா... லேட்டா வந்துட்டேன்... மழையின் காரணமா லேப்க்கு காச்சல் மாதிரி எனக்கும் உடம்பு சரி இல்லை.... ஆனாலும் உங்களை தேடி வந்திருக்கேன்... சோ லைக், கமெண்ட் கண்டிப்பா பண்ணனும்... அது தான் லேட்.... என்னை வேரோடு சாய்த்தவளே(னே)...!!! அடுத்த எபி 19 போடுறேன்.. படித்து உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க... படிக்கும் அத்தனை மக்களுக்கும் நன்றி செல்ல்லம்ஸ்....... ஹார்ட் இன்னைக்கு சக்திக்கா..? வெற்றிக்கா..? எனக்கு கண்டிப்பாக சொல்லவும்.... எல்லாரும் தேடல் ரிஸல்டில் திக் திக்னு இருப்பாங்க நான் கூலா இங்க அட்டனன்ஸ் போடுறேன்.. என் மன தைரியம் எம்புட்டு பார்த்தீங்களா..??? ஹா...ஹா...

img1539515521271.jpg

வேர் – 19

அந்த மாலை பொழுது மிக ரம்மியமாக ஆரம்பிக்க... சூரியன், இரவு பெண்ணின் வருகையை ஆவலுடன் எதிர் நோக்கி காத்திருக்க... மரங்களோ தன் கிளைகளில் உள்ள மலர்களை தூவி, பூமியை நலம் விசாரித்து கொண்டிருக்க... தென்னம் கீற்றுகளோ தன் காதலி தென்றல் காற்றுடன் காதல் வசனம் பேச...,

சக்தி அழைக்கவும் “ என்னண்ணா “ என கேட்டுக் கொண்டே அவன் அருகில் வந்தான் வெற்றி..,

“ டேய் வெற்றி, குழந்தை அழுறான்... ஏதாவது செய்டா “ என குழந்தையை தூக்கி வைத்து தட்டிக் கொண்டே கூற..

கடுப்பேத்துறியா எரும உன்னை.. “ டேய் உன் பொண்டாட்டி கிட்ட கொண்டு குடுடா.. அவன் பசில அழறான்.. இது கூட தெரியாமா... போடா போ “ என கடுப்புடன் கூற..

“ டேய்.. அவ டயர்ட்ல இருக்காடா... இப்போ தூங்கிருப்பா.. நீ ஏதாவது செய் “

அவனை கடுப்புடன் முறைத்துக் கொண்டே “ நான் வேணா பால் குடுக்கவா..? “ என கடுப்புடன் கேட்க..

“ ஈஈ.. சரிடா... இந்தா குடு “ என குழந்தையை அவன் கையில் கொடுக்க வர,

“ அய்யோ ஆண்டவா... இவன் தெரிஞ்சு செய்றானா.. இல்லை தெரியாம சொல்லுறானான்னே தெரியலியே..? என புலம்பிய வெற்றி “ அண்ணி கிட்ட கொண்டு குடுடா குழந்தையை “ என அவனிடம் கத்திவிட்டு “ ம்மா “ என அழைத்துக் கொண்டே சென்றான் வெற்றி...

“ டேய் சக்தி.. நீ ரொம்பவே சொதப்புறடா.. போ எப்படியும் அவகிட்ட அடி கன்பார்ம் “ என புலம்பிக் கொண்டே மாடி ஏற கால் வைக்கவும்...

“ செல்லம்.. எதுக்குடா. அழுறீங்க அப்பா அடிச்சுடாங்களா.? நீங்க வாங்க... அப்பாவை பிறகு நாம அடிக்கலாம் “ என குழந்தையிடம் கூறிக் கொண்டே குழந்தையை அவனிடம் இருந்து வாங்கிக் கொண்டு தங்கள் அறைக்கு சென்று மறைந்தாள் இதழினி...

மாலை ஆக வீட்டில் சிறு பூஜை செய்ய வீட்டில் அத்தனை பேரும் பூஜை அறையில் இருந்தனர்... அப்பொழுது தான் பூஜையறையை நன்கு பார்த்தாள் இதழி... இப்பொழுது புதிதாக அவளின் பெற்றோரும், அவளின் பாட்டி மணியும் போட்டோவாக வீற்றிருந்தனர்.....

லக்ஷ்மியின் இத்தகைய புது மாற்றம் எல்லாருக்கும் மகிழ்ச்சியளிக்க கடவுளை வேண்டி நின்றனர்... இதழியோ அங்கிருந்த கண்ணன் சிலையைப் பார்த்து தன்னையும் அறியாமல் எப்பொழுதும் பாடும் அவளின் மனதுக்கு நெருங்கிய பாடலை அவள் பாட ஆரம்பித்தாள்...

அவளுக்கு பாட எல்லாம் தெரியாது.. ஆனால் சந்தோசத்திலோ இல்லை கவலையிலோ அவளின் வாய் தானாக பாடலை பாடும்.. இப்பொழுது ஒரு பரவச நிலையில் இருக்க... சக்தியின் மேல் தான் வைத்த காதலும் மனதில் எழ..., அவளின் கண்களோ தானாக மூடிக் கொள்ள.., இதழோ மெதுவாக....

“ அலைபாயுதே கண்ணா... என் மனம் மிக அலைபாயுதே... உன் ஆனந்த மோஹன ” என்று ஆரம்பித்த பொழுது அவள் குரல் குழைந்து, இழைந்து அனைவரின் மனதில் தேனாய் பாய்ந்தது...

இதழியின் அலைபாயும் மனது சக்திக்கு மட்டுமே புரிந்தது... வார்த்தைகளால் கூற முடியாத செய்திகளை அந்த பாடல் அவனுக்கு உணர்த்துவதாய் தோன்றியது...

பாடலின் இடையே வரும் “ தனித்த மனத்தில் உருக்கி பதத்தை எனக்கு அளித்து மகிழ்த்தவா....

ஒரு தனித்த வனத்தில் அணைத்து எனக்கு உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா..? “ என்ற வரிகள் பாடும் பொழுது தன்னையும் அறியாமல் கண்களை திறந்தவளின் பார்வை சக்தியையே நோக்க...

அவளின் பாடலில் லயிதிருந்தவன், அவளின் அந்த வரியில் அன்றொரு நாள் தன் கையில் மலரைப் போல் மென்மையாய், இனிமையாய் அடங்கி லயித்திருந்த அவளின் உருவம், அவனின் மனதின் உணர்வுகளை மீட்டுவதாய் இருந்தது...

கண்மூடி மெய்யுருக அவள் பாடிக் கொண்டிருக்க, கன்னத்தில் ஈரத்தின் சாயல் தெரிய கண்திறந்தவளின் முன்னே, கன்னத்தில் முத்தமிட்டு நிமிர்ந்த சக்தி அவளை நோக்கி கைகளை நீட்டி நிற்க... அவனை நோக்கி எட்டு எடுத்து வைத்தவளின் நினைவலையில் கடந்த காலம் வர அப்படியே தன் நடையை நிறுத்திக் கொண்டாள்....

அவளின் நிலை புரிந்த சக்தியும் தன்னை சமாளித்துக் கொண்டு குழந்தையை பார்ப்பதுப் போல் குனிந்துக் கொண்டான்.... ஆனாலும் மனதின் ஓரம் சிறு வலியெடுக்க தான் செய்தது....

பூஜை முடிந்து சக்திக்கும், குழந்தைக்கும் விபூதி வைத்து விட்ட லக்ஷ்மி இதழி பக்கமாய் திரும்ப

“ ம்மா “ என சக்தி அழைக்கவும் “ என்னடா “ என கேட்டு அவன் பக்கம் திரும்பினார் லக்ஷ்மி...

“ ம்மா.. அவளுக்கு நான் வைக்குறேன்மா “

மனதில் பய நல்லா தேறிட்டான் போலவே என எண்ணி “ சரிடா “ என கூறி அவனிடம் குங்கும சிமிழை நீட்ட குங்குமம் எடுத்து இதழியின் நெற்றியிலும், வகிட்டிலும் வைத்த சக்தி மெதுவாக அவளை அணைத்து நெற்றியில் முத்தமிட... இதழியோ அவனைப் பார்த்து நின்றாள்...

“ ம்மா.. நானு “ என வெற்றியும் வர..

“ நீயுமாடா “ என செல்லமாக சலித்த லக்ஷ்மி அவனிடம் குங்கும சிமிழை நீட்ட வாங்கிய அவன் இனியாளுக்கு வைத்து விட்டு அவளை தோளோடு அணைத்துக் கொண்டான்...

அவர்கள் இத்தனை சந்தோசமாக இருப்பதை கண்ட லக்ஷ்மிக்கு கண்கள் கலங்க, மெதுவாக கண்களை துடைத்தவரைக் கண்ட நாராயணன் “ என்ன லச்சு “ என கேட்டு தோளோடு அணைத்துக் கொள்ள..

“ ப்பா.. நீங்களுமா.. சரி சரி அம்மாவுக்கும் குங்குமம் வைத்து விடுங்க “ என வெற்றிக் கூற லக்ஷ்மியிடம் இருந்து கும்கும சிமிழை வாங்கிய நாராயணன் லக்ஷ்மி நெற்றியில் வைத்து விட்டு.. மெதுவாக ஊதி விட அதை கண்ட வெற்றி “ ஓஹோ “ என குரல் கொடுக்க...

முகத்தில் தோன்றிய வெட்க புன்னகையுடன் நாராயணன் தோளில் சாய்ந்துக் கொண்டார் லக்ஷ்மி... அவருக்கு தன் குடும்பத்தை இப்படி பார்க்க அத்தனை சந்தோசமாக இருந்தது...

சக்தி கையில் இருந்து குழந்தையை வாங்கிய லக்ஷ்மி “ டேய் செல்லம்.. உன்னோட ரெண்டு அம்மாவும் வந்த ராசி எல்லாருக்கும் எத்தனை சந்தோசமா.. இருக்கு பாரேன் “ என கூறி குழந்தையின் கன்னத்தில் முத்தமிட அவனும் தன் பொக்கை வாயை திறந்து சிரிக்க.. அந்த நேரம் எல்லார் முகங்களும் புன்னகையை தத்தெடுத்துக் கொண்டன....

அதே புன்னகையுடன் எல்லாரும் தங்கள் அறைக்கு செல்ல.., இனியாளை அழைத்த லக்ஷ்மி அவளிடம் “ என் மூத்த மருமகளை போல, சீக்கிரமே ஒரு பேரனையோ, பேத்தியையோ பெத்து குடுத்துட்டு உன் படிப்பை தொடரு இனியாள்... இதை என்னோட வேண்டுதலா எடுத்துக்கோ சரியா.. அத்தை இப்படி சொல்லுறாங்களேன்னு அத்தை மேல கோபப்படாத இனி.... இத்தனை நாளும் இதழியையும், ஆருஷ் குட்டியையும் பார்த்துட்டு, உன் படிப்பையும் பார்த்து உங்க வாழ்கையை பார்க்காம விட்டுட்ட.. இனியாவது அப்படி இருக்காத... அவங்க ரெண்டு பேரையும் அத்தை நல்லா பாத்துகிறேன்.. முக்கியமா சக்தியையும், இதழியையும் பார்த்துகிறேன்... நீ வெற்றியை மட்டும் கவனிம்மா... ஏற்கனவே என மேல செம காண்டுல இருப்பான்.. போ அவன் காத்துகிட்டு இருப்பான் “ அவளை அவன் அறைக்கு அனுப்ப..

அந்த நேரம் அவர் அறைக்குள் நுழைந்தாள் இதழி.. லக்ஷ்மி இத்தனை நேரம் பேசிக் கொண்டிருந்ததை கேட்டுக் கொண்டு தான் இருந்தாள்... லக்ஷ்மியின் இந்த மாற்றம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது... இவர்கள் திருமணத்தை மீண்டும் நடத்தியதிலே மகிழ்ந்துப் போய் இருந்தவள்.. இப்பொழுது முழுதாக அவர் அன்பில் குளிர்ந்துப் போனாள்...

ஆனாலும் எதையும் காட்டாமல் அவளிடம் பேசிக் கொண்டே இனியாளுக்கு மெலிதாக அலங்காரம் செய்ய “ ஏய் இதழி.. ஏண்டி இப்படி என்னை பேய் மாதிரி மாத்துற “ என இனியாள் அலற..

“ அக்கா நீ சும்மா இரு.. வெற்றி மாமா உன்னை பார்த்து மயங்கணும்ல “ என கண் சிமிட்டிக் கூற...

இனியாள் மனதோ “ நீ இப்படியே பண்ணிட்டு இருந்தா.. வெற்றிமாமா இங்கையே ஓடி வந்துருவாரு “ என எண்ணிக் கொண்டே அவளிடம் மெல்லமாக சிரித்து வைத்தாள்... ஏற்கனவே இந்த நாலுமாதமாக அவனை ரொம்பவே அலைய விட்டுவிடோம் என தவித்துக் கொண்டு இருந்தாள்..... அதற்குள் இதழி அலங்காரத்தை முடிக்க.. அவள் முன் வந்து கொஞ்சம் தள்ளி நின்று அவளை ரசித்தாள்... ஏற்கனவே இதழி, இனி இருவரும் அழகிகள்.... இப்பொழுதோ பேரழகாக மிளிர்ந்தாள்...

கொடியிடை தாண்டிய கூந்தலும், தங்க நிறமும், எடுப்பான நாசியும், மஸ்காரா போட்ட மைவிழியும், கொஞ்சமே கொஞ்சம் லிப்ஸ்டிக் என ஜொலித்தவளை கண்ட இதழி மனது திருப்திப் பட “ அக்கா செம்மையா இருக்க.. மாமா பிளாட் “ என கண்ணடித்து....

“ அக்கா.. இங்க வா.... கன்னத்துல சின்னதா ஒரு திருஷ்டி பொட்டு வச்சுக்க... என் கண்ணே பட்டுடும்... முகம் அவ்வளவு பிரகாசமா இருக்கு.. எல்லாம் வெற்றி மாமா மயமா ..? “ என கிண்டல் செய்தபடி ஆருஷ்க்கு வைத்து விடும் கருப்பு ****** குச்சியில் சிறு புள்ளியாய் எடுத்து முகவாய் ஓரத்தில் வைத்து விட்டாள் இதழினி...

உடனே அதை கையில் வாங்கிய இனியாள், இதழியின் கன்னத்திலும் ஒரு புள்ளியை வைத்து விட, நெகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்த லக்ஷ்மி

“ ரொம்ப அழகா ரெடி பண்ணிட்ட இதழி.. காலையில் கோவிலுக்கு போகணும் சீக்கிரம் வாங்க “ என கூறி அவர்களை அழைத்துக் கொண்டு வெளியில் வந்தார்.. இனியாளை வெற்றி அறைக்கு அனுப்பிய லக்ஷ்மி தன் அறைக்கு சென்று ஆருஷனை அவள் கையில் கொடுக்க துங்கிய மகனை வாங்கிக் கொண்டு தங்கள் அறைக்கு சென்றாள் இதழினி...

தன் அறைக்கு சென்ற இதழி மெதுவாக பார்வையை திருப்பி சக்தியை தேட அவன் இருபதற்க்கான அறிகுறி இல்லாமல் போக குழந்தையை தொட்டிலில் படுக்க வைத்து விட்டு அவனை தேடி பால்கனிக்கு செல்ல அவனோ...

கையில் சிகரெட்டை கையில் வைத்துக் கொண்டு ஆழ்ந்த சிந்தனையில் இருப்பது பட “ மகனே உனக்கு இந்த பழக்கம் வேற இருக்கா... இத்தனை நாள் உன்னை சரியா கவனிக்கல... உனக்கு இருக்கு... இன்னைக்கு நீ கீழ தான் படுக்கணும்...கட்டிலில் உனக்கு இடம் இல்ல “ என அவனை திட்டிக் கொண்டே தொட்டிலில் தூங்கிய மகனை கட்டிலில் படுக்க வைத்து இருபக்கம் அவனுக்கு அரணாக தலைகாணியை வைத்து விட்டு சக்திக்கு இடம் இல்லாமல் அந்த கட்டிலை மகனும், மனைவியும் பிடித்துக் கொண்டனர்....

பால்கனியில் நின்ற சக்திக்கு தூக்கம் வருவதுப் போல் இல்ல... அவன் மனம்முழுவதும் இதழியே நிறைந்திருந்தாள்... அவளின் பாடலும், அவளின் வேதனையும் அவனை கலங்க வைப்பதாய்.... அந்த நேரம்
 




Last edited:

shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
முடிவெடுத்தான் இனி எக்காரணம் கொண்டும் அவளை வருந்த வைக்க கூடாது... தன் காதலால் அவளை மூழ்கடிக்க வேண்டும்.... அவள் எது சொன்னாலும் கோபப்படகூடாது, ஆயுள் முழுக்க தன் அன்பை அவளுக்கு பொழிந்து அவளின் மனதில் உள்ள காயங்களை ஆற்றவேண்டும்... என் காதலை அவள்முழுமையாக உணர்ந்த பின் என் காதலை கூறி அவளை தன்னுடயவளாக்குவேன் “ என எண்ணிய பிறகு தான் நிம்மதியாக இருக்க அங்கிருந்த கூடை ஊஞ்சலில் அமர்ந்து விட்டான்....

@@@@@@@@@@@@@@

“ நிலவை கொண்டு வா கட்டிலில் கட்டி வை

மேகம் கொண்டு வா மெத்தை போட்டு வை

நிலவை பிடித்தேன் கட்டிலில் கட்டினேன்

மேகம் பிடித்தேன் மெத்தை விரித்தேன்

காயும் சூரியனை கடலுக்குள் பூட்டி வை

இரவு தொடர்ந்திட இந்திரனை காவல் வை

காயும் சூரியனை கடலுக்குள் பூட்டினேன் இரவு தொடர்ந்திட இந்திரனை நம்பினேன்..

இன்று முதல் இரவு... இன்று முதல் இரவு... நீ என் இளமைக்கு உணவு “ என பாடலை பாடிக் கொண்டு இனியாள் வரவுக்காக வெற்றி அவன் அறையில் காத்திருக்க.... மெதுவாக கதவு திறக்கும் சத்தம் கேட்டு ஆவலுடன் திரும்பினான் அவன்....

பளிங்கு சிற்பமாய் தரைக்கு வலிக்குமோ என்பது போல் மிக மெதுவாக நடந்து வந்தவளின் மேல் பார்வையை நிலைக்க விட்டவனின் மனதில் பல உற்சாக சிதறல்கள்....

ரோஜா வனமே அவன் முன் வந்ததுப் போல் ஒரு சிலிர்ப்பு அவனுள்... மனதின் ஓரத்தில் “ இனியாளுக்கு இன்னும் நான்கு மாத படிப்பிருக்கிறதே என்ற எண்ணமும் எழாமல் இல்லை “ ஆனாலும் அவளிடம் மயங்கி இருந்தன அவனின் உள்ளம்...

விழிகள் அவளை விட்டு அகல மனமின்றி குறுகுறுவென அவளையே பார்த்தன... மெல்ல நிமிர்ந்த இனிக்கு அவனின் பார்வை சிறு நடுக்கம் வரவைப்பதாய்... அவளை விட்டு நொடியும் விலகாத “ என் உயிர் நீ “ என்ற ஆளுமையுடன் அவளை சிறைபிடித்த அவனின் பார்வை, அவளின் மனதில் உள்ள காதலை எழ செய்தது... மெதுவாக கண்களை தரையை நோக்கி குனிந்தவளை கண்ட வெற்றியின் மனதில் மகிழ்ச்சி பெருக, ஆனாலும் அவளின் இந்த அமைதி நிலை அவனை ஏதோ செய்ய “ ஏய்... பொண்டாட்டி என்ன அங்கயே நிற்கிறதா உத்தேசமா “ என சீண்டலுடன் கேட்க...

அவனின் “ பொண்டாட்டி “ என்ற அழைப்பு என்றும் போல் இன்றும் அவளை சிலிர்க்க செய்ய.. மேலே அடியெடுத்து வைக்கும் எண்ணம் இல்லாமல் அப்படியே நின்றிருந்தாள்... அவளை பார்த்த அவன் “ இன்னைக்கு ரொம்ப அமைதியா இருகிறாளே..? “ என எண்ணி..

அவள் அருகில் வந்து, கையை பிடித்து கட்டிலில் அமரவைத்து கையிலிருந்த பால் செம்பை வாங்கி அருகில் இருந்த டேபிள் மேல் வைத்தவன் அவளருகில் அமர்ந்துக் கொண்டான்... வெகுநேரம்மாகியும் அவன் எதுவும் கூறாமல் போக அவனை மெதுவாக நிமிர்ந்துப் பார்த்தாள் இனி...

அவனின் கண்களில் இருந்த கேள்வியை படித்த அவள் மீண்டும் குனிந்துக் கொள்ள, அவள் முகம் நோக்கி குனிந்த வெற்றி மெதுவாக, மிக மிக மெதுவாக “ இந்த வெட்கம் உனக்கு செட் ஆகவே இல்ல பொண்டாட்டி “ என சீண்ட..

படக்கென நிமிர்ந்த இனி “ பாவி மனுஷா....!!! கஷ்ட பட்டு வெட்கபட்டா இப்படி டோட்டலா வெட்கத்தையே டேமேஜ் பண்ணிட்டியே..... உன்னை “ என அவனை அடிக்க பாய...

அவளின் எண்ணம் புரிந்தவன் போல் அவளின் பக்கமாய் சாய்வதுப் போல் தலைகாணி பக்கமாய் சாய்ந்தவன் நொடிக்குள் தலைகாணி கீழ் அவன் மறைத்து வைத்திருந்த பொருளை எடுக்க....

அவனின் இச்செயலில் அவனை அவள் கேள்வியாக பார்க்க,

அவளின் கேள்வியை படித்தவன், அருகில் இருந்த பால் சொம்பை எடுத்து “ அது ஒன்னும் இல்லை ஜுஜிலி... இந்த பால் இருக்குல்ல அதை பார்த்தாலே எனக்கு கோவமா வருது ஜுஜிலி... அது தான் இந்த வெற்றி பஸ்ட்நைட் ஸ்பெஷலா இருக்கணும்ல அது தான் பூஸ்ட் போட்டு மீ பால் குடிக்க போறேன்....உனக்கு வேணுமா..? “ என அவளை நோக்கி சிரிப்புடன் கேட்டு பூஸ்ட் பால் குடிக்க...

அவனை முறைத்த அவள் “ மாமா.. நீ திருந்தவே இல்ல... உன்னை என்ன தான் செய்வது “ என முறைத்து அவனை பிடித்து இழுக்க...

“ யப்பா... இவளை பார்ம்க்கு கொண்டு வர எவ்வளவு கஷ்டபடவேண்டி இருக்கு “ என எண்ணவுமே, அவளின் எதிர் பாராத இழுப்பில் அவள்மேலையே விழுந்தான் அவன்...

அவள் மேல் விழவுமே, தவித்த வெற்றி புரண்டு அவளை தன் மேல் தாங்கிக் கொள்ள, அவன் நெஞ்சில் அப்படியே தலையை வைத்து அப்படியே படுத்தவளின் தலையை மெதுவாக வருடிய வெற்றி “ இனி..உனக்கு இன்னும் படிப்பு நாலு மாசம் இருக்கு.. இனி “ என மெதுவாக கூற...

அவனின் கேள்வியில் அவனை நிமிர்ந்துப் பார்த்த அவள் “ அதுக்கு “ என கேட்டு அவன் நெஞ்சில் முகத்தை அழுத்தமாக பதித்துக் கொள்ள...

திடீரென நினைவு வந்தவளாக அவன் நெஞ்சில் இருந்து தலையை உயர்த்தியவள் அவனின் சட்டை பட்டனை கழட்ட, இதை எதிர் பார்க்காத வெற்றி “ ஏய் பொண்டாட்டி என்னடி பண்ணுற “ என தன் சட்டையை பிடித்துக் கொண்டே அலற...

“ யோவ்.. மாமா.. எல்லாரும் லவ் பண்ணும்போதே பிரஞ் கிஸ், அந்த கிஸ், இந்த கிஸ்ன்னு என்னை டார்ச்சர் பண்ணுன்னல ”

“ அதுக்கு, எதுக்குடி என் சட்டையை கழட்டுற “ என பொய்யாக முறைக்க..

“ இப்போ லவ் பண்ணுறவங்க எல்லாரும் பேரை நெஞ்சுல பச்சை குத்துறாங்களாம்.... அது தான் நீங்களும் குத்திருகீன்களான்னு பாக்குறேன் மாமா “ என கூறி அவன் நெஞ்சை பார்க்க...

“ பாவி... எப்படியெல்லாம் யோசிக்குறா... ஒரு கிஸ் கேட்க சொன்ன பொய் இப்போ ரத்த களரியால்லா வந்து நிற்குது.. அடி ஆத்தி “ என எண்ணி அவளை பார்க்க.. அவளோ அவனின் நெஞ்சை,மெதுவாக தன் இதழை கடித்து கொண்டே ஆராய்ச்சி பண்ண..

இந்த ஒரு ஜாண் நெஞ்சுல அவ அப்படி என்ன தான் ஆராய்ச்சி பண்ணுறா என யோசித்து “ செல்லம் என்ன பண்ணுறடா “ என கேட்க..

“ ஒண்ணுல்ல மாமா.. எங்க என் பேரை பச்சை குத்தலாம்னு பாக்குறேன் மாமா “ என கூற.,

“ விட்டா இவ புள்ளி வச்சு கோலம் வரைவா “ என எண்ணிய அவன், அவளின் பற்களுக்கு இடையில் அகப்பட்ட அவள் இதழை தன் விரல் வைத்து எடுத்து விட்டவன், தன்னுடைய பெரு விரல் கொண்டு அவளின் இதழில் அழுந்த தேய்த்து அவளின் உதட்டு சாயத்தை எடுத்து தன் நெஞ்சில் தேய்த்து விட்டு

“ போதுமா... எல்லாரும் பச்சை தான் குத்துவாங்க.. உன் மாமா சிகப்பு குத்திருக்கேன்.. உன்னை இப்படியே விட்டா நீ நிறைய ஆராய்ச்சி எல்லாம் பண்ணுவ... நான் இப்போ உன்கிட்ட நிறைய ஆராய்ச்சி பண்ணனும் “ என அவளின் இதழின் மென்மையில் மயங்கிய அவன், அவளை அணைத்துக் கொண்டே உணர்சிகள் மிகுந்த குரலில் கூறியவன்

அவளை கட்டிலில் சரித்து மெதுவாக அவள் இதழை நோக்கி குனிந்தான்...

அவன் பேச்சும், செயலும் அவளை ஏதோ செய்ய, அவன் குனிந்த நேரம் வேண்டும் என்றே விலகி திரும்ப, அவளுடைய முகத்தை அழுந்த பற்றி திருப்பியவனின் உதடுகள் அவள் இதழோடு இணைந்து முத்த யுத்தங்களை நடத்தின...!!

அவனுள், அவளின் மேலுள்ள காதல் கிளர்ந்தெழ, அதை போற்றும் விதமாய் அவள் வெட்கம்...!!!

அங்கு நீண்ட நாட்கள் காத்திருந்த இரு நேச உள்ளங்களின் இனிய *******...!!!

நீண்ட காத்திருப்புக்கு பின் சரணடையும் நதியரசியைப் போல்.. அங்கு வார்த்தைகள் மூர்ச்சையாகி அழகிய தென்றலாய் அவனுள் கலந்தாள் அவள்...

வெகு நேரம் அந்த அறையில் மெல்லிய கடிகார ஓசையும், எப்பொழுதும் வெற்றி ரசிக்கும் இளையராஜாவின் காதல் பாடல்களும் மிக மிக மெல்லிய இசையாய்....

திடீரென அந்த நிசப்தத்தை கலைத்தான் வெற்றி... “ இன்னும் நாலு மாசம் காலேஜ் இருக்கு.... வாழ்கையில் கோல்ட்மெடல் வாங்கிட்ட.... படிப்பில வாங்கிருவியா “ என செல்லமாக அவளின் மூக்கை திருகியபடிக் குறும்புடன் கேட்க...

“ போ மாமா “ என வெட்கத்துடன் அவன் நெஞ்சில் சாய... ஒற்றை விரலால் அவளின் முகத்தை நிமிர்த்தியவன் அவளின் இதழை மீண்டும் சிறை செய்திருந்தான்....

ஒருத்தரை ஒருத்தர் ஆள முயற்சி செய்யாமல் “ உனக்கு நான்... எனக்கு நீ “ என்று அன்பையும் நம்பிக்கையையும் மட்டுமே ஆழமான அடிப்படையாக்கி, இயல்பான பிரியத்தோடு ... ஒருவரை ஒருவர் புரிதலோடு இணைஞ்சு இருக்கணும்.. அது தான் அழகான தாம்பத்தியம் “ என கண்சிமிட்டி அவன் முடிக்க...

“ ம்ம்ம்... “ என தலையை ஆட்டிய அவள் “ மாமா விடிஞ்சுட்டு.... அத்தை காலையிலே கோவிலுக்கு போகணும்னு சொன்னாங்க “ என மெதுவாக குறும்புடன் கூறிய அவள் அவனைப் பார்க்க...

அந்த நேரம் நல்ல இடியுடன் கூடிய மழை பொழிய.... அவளை தன் மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டான் அவன்... அவள் அருகில் இருக்கும் பொழுதெல்லாம் “ நீ எப்பொழுது என் அருகில் வேண்டும் “ என அவன் மனம் ஆசைக் கொள்ள அவளை அப்படியே அணைத்துக் கொண்டான்....

@@@@@@@@@@@

பால்கனியில் குளிர் தாக்க மெதுவாக எழுந்த சக்தி தன் அறைக்கு வந்தவன்.. மெதுவாக விடி விளக்கை எரிய விட்டு கட்டில் அருகில் வந்தவன் அப்படியே ஒரு நிமிடம் அதிர்ந்து நின்றான்...

இதழியும், அவன் மகனும் அந்த பெரிய கட்டிலை ஆக்ரமித்திருக்க அவனுக்கு கொஞ்சமே கொஞ்சம் பெரிய மனது செய்து இடம் விட்டதுப் போல் இடம் இருக்க “ மனசுல இருந்த இடத்தை தான் எடுத்துட்ட.. கட்டிலிலுமா “ என புன்னகை முகமாக சொல்லிக் கொண்ட சக்தி “ நீ இடம் தரலன்னா என்ன நானே எடுத்துக்கிறேன் “ என எண்ணி மெதுவாக குழந்தையை தூக்கி அவன் தொட்டிலில் படுக்க வைத்தவன் கட்டிலில் அவள் அருகில் படுத்துக் கொண்டான்...

“ எழுந்தாளோ சக்தி செத்தடா “ என எண்ணிய அவன் அவள் அருகில் மெதுவாக சென்று அவளை மெதுவாக தன்னருகில் இழுக்க... “ என்ன குட்டிமாமா “ என சிணுங்கலுடன் அவன் புறம் திரும்பி படுத்தவளை கண்டு புன்னகை வருவதாய்...

“ கனவுல கூட இந்த மாமாவை மறக்கல.. ஆனா நேர்ல கோச்சுக்கிட்டு இருக்க “ என மெதுவாக கூறிய அவன் மெதுவாக அவள் கன்னம் வருடி மென்மையாக முத்தமிட்டு அவளை புன்னகையுடன் நோக்கினான்.... அவள் முகம் பார்த்துக் கொண்டே அப்படியே தூக்கத்தை தழுவினான் சக்திவேல்....

அன்றிரவு நல்ல இடியுடன் கூடிய மழை பெய்ததில், பூமி நன்றாக குளிர்ந்திருக்க.. காலையில் ஜன்னல் வழியே வீசிய காற்று சிறு குளிரை ஏற்படுத்த அழ்ந்த உறக்கத்திலிருந்த இதழி மெதுவாக கண்விழிக்க...

தன்னை வலிமையாக ஒரு கரம் அணைத்து பிடித்திருக்க... தன் முகம் பரந்த மார்பில் தஞ்சம் புகுந்திருக்க அவசரமாக எழுந்தாள் இதழி...

அவளை எழ விடாமல் இறுக்கி பிடித்திருந்த சக்தியை நெஞ்சில் கைவைத்து அழுந்தி எழ அவனின் கரமோ அவளை விடாமல் இரும்பென பிடித்திருக்க... தவித்த அவள் அவன் உறக்கம் முற்றாக கலையும் முன் எழ வேண்டும் என்று அவன் மேலிருந்து சரிந்து எழும்முன் அவளின் இதழில் தன் முத்திரையை ஆழ பத்தித்த அவன் அவளை விடுவித்து மறுபுறம் நமட்டு சிரிப்புடன் திரும்பி படுத்துக் கொண்டான்...

தன்னுடைய முகத்தில் சில்லென்ற நீரை தெளித்ததுப் போல் விதிர்புடன் எழுந்த இதழினி வேகமாக கட்டிலை விட்டு எழுந்து குளியல் அறையில் தஞ்சம் புகுந்தாள்... மனமோ அவனின் அருகாமைக்காய் தவிக்க, அவன் மேல் கோபமாய் வந்தது...

ஆனாலும் அவன் அளித்த முத்தம் அவளின் இதழ் உணர மெதுவாக இதழை வருடிக் கொண்டாள்...

காலையில் லக்ஷ்மி கோவில் செல்ல வேண்டும் என்று கூறியது அந்த நேரம் நினைவில் வர வேகமாக குளித்து விட்டு மாற்றுடையை தேட அப்பொழுது தான் அவசரத்தில் ஓடி வந்ததில் எடுத்து வராமல் வந்தது நியாபகத்தில் வர..,

மெதுவாக கதவை திறந்த அவள் “ சக்தி அங்கிருக்கிறானா “ என பார்க்க, அவன் அங்கிருப்பதை கண்டு.. “ அய்யோ இவன் எப்போ வெளிய போவான்.. நான் எப்படி மாற்றுவது என நகத்தைக் கடித்துக் கொண்டே எண்ணிக் கொண்டு நிற்க...

அவனோ அவளுக்காக காத்திருந்தான் அவள் அறியாமல்...

வேர் அடி வாங்கும்....
 




Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
Oru valiya ella prbm um solve bt sakthi prbm thn apdiye nikkuthu
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top