• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Ennaruge nee irunthaal #2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
மாலை வேளை கயல்விழி வீட்டில் சின்னதாக ஒர் பர்த்டே பார்ட்டி ஏற்பாடு செய்து இருந்தார்கள்.

கயல்விழியின் தோழிகள், பக்கத்து வீட்டுகாரார்கள், முக்கிய உறவினர்கள் என பலரும் அழைக்கப்பட்டு இருந்தார்கள்.

மதியழகன் கேக்குடன் முன்னரே வந்து ரிப்பன் கட்றது, பலூன் கட்றது என பல விஷயத்தில் அவளுக்கு உதவி செய்ய கயல்விழி சந்தோஷமாக இருந்தாள்.

மதியழகனின் பெற்றோர்கள் முதலில் வந்தார்கள்.

மதியழகனின் அப்பா சண்முக நாதன் அரசு பள்ளி தலைமை ஆசிரியர். மதியழகன் அம்மா வடிவாம்பிகை அன்பான இல்லத்தரசி. அவர்களுக்கு ஒரு மகன் மதியழகன், ஒரு மகள் சந்திரா. பி.இ இரண்டாமாண்டு படிக்கும் மாணவி.

"கயல் செல்லம்!" என்று அத்தை அழைத்ததும் திரும்பி பார்த்த அவள் "அத்தை!" என்று அழைத்தபடி தாவி சென்று அணைத்துக் கொண்டாள் கயல்விழி.

தன்னை அணைத்தபடி இருந்த கயலை அணைத்து முத்தமிட்ட பின் "பிறந்த வாழ்த்துக்கள் செல்லம்" என்றாள் அத்தை.

சில நிமிட அணைப்புக்குபின் பிரிந்த கயல்விழி "என்னை பார்த்ததும் செல்லம், தங்கம் அப்படிங்கறிங்க. எனக்கு காலைலயே வந்து ஏன் விஷ் பன்னலை" என்று சட்டென்று பொய்க் கோபத்துடன் முகத்தை திருப்பிக் கொண்டு நின்றாள்.

"சாரிடா செல்லம்! கொஞ்சம் முக்கியமான பங்ஷன் போக வேண்டியதாக போச்சு. அதான் எங்களால வரமுடியலை. சாரிடா தங்கம்!" என்று கொஞ்சினாள் அத்தை.

"என் அத்தையை பற்றி எனக்கு தெரியாதா?" என்று பாசம் காட்டிய கயலிடம் "உன் மாமாவை எதுவும் கேட்க மாட்டியா நீ?" என்றாள் அத்தை.

கயலின் பார்வை மாமாவின் பக்கம் திரும்ப "கயல்! மாமா அத்தைகிட்ட என்ன வம்பு பன்னிட்டு இருக்க?" என்றபடி வந்தாள் அன்னலட்சுமி.

"அன்னம்! அவ எங்க வம்பு பன்றா? அவ எங்க சமர்த்து பொண்ணாச்சே" என்று மாமா பரிந்து பேசினார்.

"நீங்க ரெண்டுபேரூம்தான் அவளை செல்லம் கொடுத்து கெடுக்கறிங்க?" என்று குற்றம் சாட்டினாள் அன்னம்.

"எங்க தங்கம் உனக்கு என்ன தொல்லையா தந்துகிட்டிருக்கா? அவ அப்பா இல்லாத பொண்ணாக இருந்தாலும் அப்பா பற்றி கேட்டு உன்னை படுத்தாமதான் இருக்காள்" என்ற கயலுக்கு ஆதரவாக வடிவு பேசத் தொடங்கினாள்.

ஆம். கயலுக்கு ஆறு வயது இருக்கும்போது பாங்க மேனேஜர் பொறுப்பில் இருந்த அவள் அப்பா ரவிச்சந்திரன் இறந்துவிட அன்றிலிருந்து இன்றுவரை தாயாக தந்தையாக இருந்து வருபவள் அவள் அம்மா.

அன்னலட்சுமி ஒர் அரசு மகளிர் பள்ளியில் ஆசிரியை. தன் மகளையும் தனியார் பள்ளியில் எங்கும் சேர்க்காமல் தான் வேலை பார்க்கும் பள்ளியில் பிளஸ்டு வரை படிக்க வைத்து விட்டாள்.

கயல்விழிக்கு பள்ளியில் எந்த சலுகையும் அவள் காட்டாமல் கண்டிப்பாக இருக்கும் தாய்.

கயல்விழியும் தன் தாயிடம் தந்தையை பற்றி கேட்டு இதுவரை தொல்லை செய்யாமல் அம்மாவுக்கு எல்லா விஷயத்திலும் உதவியாக உள்ளாள்.

"சந்திராக்கா உங்க கூட வரலையா அத்தை?" என்றாள் கயல்விழி

"உனக்கு தனியா கிப்ட் வாங்க போகிறதா போனா தங்கம்" என்றாள் அத்தை வடிவு.

அக்கம் பக்கம் நபர்கள், உறவினர்கள் எல்லாம் வரத் தொடங்க அன்னம் அவர்களை கவனிக்க தொடங்க மற்றவர்கள் அவளுக்கு உதவி செய்ய ஆரம்பித்தார்கள்.

கயலின் தோழிகள் வர அவள் கும்பலில் ஐக்கியமாக பார்ட்டி களை கட்ட தொடங்கியது.

"கயல்!" என்றழைத்தபடி கிப்ட் பொருளுடன் சந்திரா வர "அக்கா!" என்றபடி அவளிடம் வந்துவிட்டாள்.

கயல்விழியை கட்டி அணைத்து முத்தமிட்டு "ஹேப்பி பர்த்டே கயல்" என்று சொல்ல "தாங்க்ஸ் அக்கா" என்றாள்.

"ஏய் பெரிய மனுசி! நீ எனக்கே தாங்க்ஸ் சொல்றியா?" என்று செல்லமாக அதட்டினாள்.

"அக்கா!" என்று அவள் சிணுங்க,"சரி சரி நேரமாச்சு வா கேக் வெட்டலாம்" என்றாள் சந்திரா.

Message…
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
நான்தான் First,
சக்திப்ரியா டியர்
 




Last edited:

sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
காலையில் பச்சை தேவதை மாதிரி வலம் வந்தவள் அவள் அம்மா வாங்கி கொடுத்த சுடிதார் அணிந்து மாலையில் பிங்க தேவதையாய் வலம் வந்துக் கொண்டிருந்தாள் கயல்விழி.

கயல்விழி எல்லோர் முன்னால் கேக்கை வெட்டி அம்மாவுக்கு ஊட்ட பதிலுக்கு அன்னம் தன் மகளுக்கு ஊட்ட பின் அத்தை, மாமா, சந்திரா, மதியழகன், தோழிகள் என எல்லோரும் ஊட்ட கேக் மழையில் திணறிக் கொண்டிருந்தாள்.

மாமாவும் அத்தையும் தங்க செயின் பரிசளித்தார்கள். அம்மா ஒரு வாட்ச் பரிசளித்தாள்.

சந்திராவும் மதியழகனும் கூட்டாக டெடிபேர் பொம்மை பரிசளிக்க அதன்பின் வந்த தோழிகள் முதல் கொண்டு பரிசுகளை பரிசு மழையில் நனைந்தாள் கயல்விழி

பார்ட்டி முடிந்து அனைவரும் தங்கள் வீட்டுக்கு திரும்ப கடைசியாக மாமா, அத்தை, சந்திரா, மதியழகனும் விடை பெற்றுக் கிளம்பினார்கள்.

நாளை பள்ளி செல்ல வேண்டும் என்பதால் இரவே அறையை சுத்தம் செய்ய அன்னலட்சுமி தொடங்க பொறுப்பான மகளாக கயல்விழியும் உதவி செய்யத் தொடங்கினாள்.

தாயும் மகளும் வேலையை முடித்தபின் மகளை ஆசையாக அணைத்து முத்தமிட்ட அன்னம் "நேரமாச்சுடா. போய் தூங்கு. காலையில் மீதியை பார்த்துக்கலாம் செல்லம்" என அனுப்பி வைத்தாள்.

கயல்விழி மதி மாமாவும், சந்திராவும் கூட்டாக அளித்த டெரிபேர் பொம்மையுடன் அறைக்கு சென்று படுத்தாள்.

கயல்விழி படுக்கையில் படுத்து கொண்டு அவள் மார்பில் டெரிபேர் பொம்மையை வைத்துக் கொண்டு சிரித்தாள்.

மதியழகன் மாமாவே அவள் முன் இருப்பது போல் அவளுக்கு தோன்ற வெட்கப் பட்டாள்.

"மாமா! ஐ லவ் யூ!" என்றபடி பொம்மையின் காதை திருகி, மூக்கை நிமிண்டி, கன்னத்தை தட்டிவிட்டு மாமாவையே கொஞ்சுவதாக எண்ணி சிலிர்த்தாள்.

"மாமா நீ என்னதான் விலகிச் சென்றாலும் நான் விட மாட்டேன்" என்று பொம்மைக்கு முத்தமிட்டு தூங்கினாள்.

பிளஸ்டு தேர்வுகள் நெருங்கத் தொடங்கின.

தேர்வுகளில் ஆயிரத்து நூறுக்கு மேல் மதிப்பெண்கள் எடுத்துத் தேறி மாமாவிடம் நல்ல பெயரை வாங்கி, சந்திராக்கா படிக்கும் கல்லூரியிலும் சீட் வாங்கி அவர்களுடன் படிக்க வேண்டும் என்ற வெறியுடன் படித்தாள் கயல்விழி.

தாய் அன்னலட்சுமி மகளுக்கு டீ, காபி போட்டு கொடுத்து படிக்க உதவி செய்ய மதியழகன் அடிக்கடி வந்து நல்லாபடி கயல் என்று ஊக்கபடுத்தி சென்றான்.

பரீட்சையின் முதல்நாள் அன்று இரவு அவளிடம் வந்த அம்மா "கயல்! பேனாக்கு இங்க் போட்டு எழுதி பார்த்திடலாம் வா" என்றாள்.

அவள் மாமா வாங்கி கொடுத்த பேனா செட்டிலிருந்து ஒரு பேனாவும், தான் வாங்கி தந்த பேனா என்று இருபேனாக்களில் இங்க் நிரப்பினாள் அன்னம்.

"எழுதி பாரு கயல்" என்றதும் அவள் என் பிரிய அம்மா என்று எழுத தாய்க்கு ஒரே ஆனந்தம்.

கயல் பின் தன் பேரையும் அம்மா பேரையும் எழுதி பார்த்தாள்.

"சரி கயல் இனி நீ படிக்க வேண்டாம். நீ போயி ரிலாக்சா தூங்கு. நாளைக்கு காலையில் படிச்சுக்கலாம்" என்று அனுப்பி வைக்க சரிம்மா என்று தன் அறைக்கு சென்று படுத்துக் கொண்டாள்.

மதியழகன் மாமா தந்த பேனா அவள் கண்ணில்பட எடுத்து "ஜ லவ் யூ மாமா" என்று எழுதி அதை பார்த்து ரசித்து விட்டு டெடிபேர் பொம்மையுடன் தூங்கினாள் கயல்விழி.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சக்திப்ரியா டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top