• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Ennaruge nee irunthaal 5

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
நிர்மலாவை சந்தித்து வந்த பின் கயல்விழி மனதில் சந்தேக புயல் வீச ஆரம்பித்து விட்டது.

மாமாவை சந்தித்து விளக்கம் கேட்டு விடு கயல் என்று அவள் மனம் சொன்னது.

கயல்! நீ ஏதாவது கேட்க போயி என்னை நீ சந்தேகப் படுகிறாயா கயல்? என்று கேட்டு விட்டால் என்னடி செய்வாய் கயல்? உன் மாமா வாக்கு தவற மாட்டார். கண்டிப்பாக அவர் நிர்மலாவை காதலிக்க மாட்டார். நீ அவசரப் பட்டு காரியத்தை கெடுத்துக் கொள்ளாதே என்று புத்தி எச்சரித்தது.

நாம் அவசரமாக எதையும் கேட்டு நம் காதலை கெடுத்துக் கொள்ள வேண்டாம். காலம் கனியும் வரும் வரை காத்திருக்க முடிவு செய்த கயல்விழி புத்தி வயப்பட்டு விட்டாள்.

நிர்மலாவை பற்றி பிறகு யோசிக்கலாம் என்று முடிவெடுத்து படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தாள்.

தீபத் திருநாளாம் தீபாவளி வர கயல்விழியும் அவள் அம்மா அன்னலெட்சுமியுடன் வழக்கம்போல் முதல்நாள் அண்ணன் வீட்டுக்கு சென்று விட்டார்கள்.

அன்னலெட்சுமியின் கணவர் இறந்த சில வருடங்களுக்கு பிறகு அவளிடம்,
"நீ ஏம்மா அங்கே தனியாக இருந்து கஷ்டபடறே? உன்னை பார்த்து கயலும் சோகமாகி இருக்கிறாள் பாரு. நீ முதல் நாள் வந்த கொண்டாடி விட்டு மறுநாள் உன் வீட்டுக்கு போம்மா" என்றார் கயல்விழி மாமா சண்முக நாதன்.

அன்னலெட்சுமிக்கு அது சரியாக தோன்ற அன்றிலிருந்து அங்கே செல்ல ஆரம்பித்து விட்டார்கள்.

"வாடா என் செல்லம்! அத்தை நீ எப்ப வருவேன்னு பார்த்துகிட்டு இருந்தேன்" என்றபடி அவள் அத்தை வடிவாம்பிகை பாசமாக அணைத்துக் கொண்டார்.

"வாங்க அத்தை!" என்றபடி வந்த சந்திராவை அவள் அத்தை அன்னலட்சுமி அணைத்துக் கொண்டாள்.

"வாம்மா! இப்பதான் வந்தியா?" என்று தங்கையிடம் கேட்டபடி வந்த சண்முக நாதன் உடன்,

"கயல்! வாடா செல்லம்!" என்று அவர் சொல்ல கயல்விழி புன்னகைத்தாள்.

"இப்பதான் வந்தேன் அண்ணா. நீ உடனே வருகிறாய்" என்று தங்கை அன்னம் பதிலளித்தாள்.

"கயல்! காலேஜ் லைப் எல்லாம் நல்லா போகுதா? ஸ்டடிஸ் எல்லாம் நல்லா போகுதா?" என்றார் மாமா.

"எல்லாம் சூப்பரா போகுது மாமா" என்ற கயல் விழி கூற,

"சரிம்மா நல்லா படி" என்று சொல்லிவிட்டு அவர் அறைக்கு சென்று விட்டார்.

"அத்தை! மாமா இன்னும் வரலியா?" என்று கயல்விழி தன் அத்தையிடம் கேட்டாள்.

"அவன் வர கொஞ்சம் டைம் ஆகும் கயல்" என்று அத்தை சொல்ல "சரிங்க அத்தை" என்றாள் கயல்விழி.

கயல்விழி, சந்திரா, அன்னம், வடிவு எல்லோரும் ஒன்றாக சேர்ந்து தீபாவளி பலகாரங்கள் சிலவற்றை செய்ய துவங்கி விட்டார்கள்.

கயல்விழிக்கு தாகம் எடுக்க தண்ணீர் குடிக்க வந்த பொழுது மதியழகன் அறை தென்பட்டது.

கயல்விழி மனதில் அந்த அறையை பார்த்ததும் அவளுக்குள் செய்ய ஏதோ செய்ய "சில்லென்ற தீப்பொறி ஒன்று சிலுசிலுவென குளுகுளுவென சரசரவென் நெஞ்சில் பரவுது பார்த்தாயா" என்ற பாடல் தானாக மனதில் ஒட அவள் அந்த அறைக்குள் புகுந்து விட்டாள்.

தன் மாமாவின் அறைக்குள் நுழைந்து அதன் வாசத்தை சுவாசத்தின் வழியாக நுகர "நீ வாழும் அறைதனில் நின்று உன் வாசம் நாசியில் உண்டு" என்று மனம் பாட தன் ஆசையை தீர்த்துக் கொண்டாள் அந்த பேதை.

மதியழகனின் அறையில் கட்டிலில் அமர்ந்த அவள் பின் படுத்து மெத்தையில் புரண்டு தலையணையை அணைத்து முத்தமிட "உன் மெத்தையில்
நான் தலை சாய்கிறேன்" என்று மனம் பாட ஆரம்பிக்க அவள் மெய் சிலிர்த்தாள்
Message…
 




Last edited:

sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
"மாமா! இனி உன்னுடைய கட்டில், மெத்தை, தலையணை எல்லாவற்றிலும் என்னுடைய சுவாசமும், வாசனையும் கலந்து இருக்கும்" என்றவளின் பார்வை வார்டுரோப் மேல் பாய துள்ளி எழுந்தாள்.

வார்டுரோப்பின் கதவுகளைத் திறந்து அயர்ன் பன்னாத சட்டையை அணிந்து பார்க்க "உன் ஆடைகள் நான் சூடினேன்" என்று மனம் பாட பின் அந்த சட்டையை கழற்றி மார்போடு அணைத்து பின் முத்தமிட்டு வைத்தாள்.

கணினியின் முன் அமர்ந்து கீ போர்டில் விரல்களை பதித்த அவள் " கயல்விழி மதியழகன்" என டைப் செய்து பின் "மாமா ஐ லவ் யூ" என்று டைப் செய்து மகிழ்ந்தாள்.

மதியகனின் சீப்பை எடுத்து தலையில் வாரி விட்டு பின் அவன் போட்டோவை பார்க்க "இதோ உன் காதலன் என விறு விறுவென கலகலவென ஒரு மனநநி பாய" என்ற வரிகள் ஒட தன்னை மறந்து நின்றாள்.

"கயல்!" என்ற குரல் கேட்டு அவள் சுய நினைவுக்கு வந்து திடுக்கிட்டு திரும்ப மதியழகன் நின்றிருந்தான்.

"மாமா!" என்று கயல்விழி காதலுடன் அழைக்க,
"ஏதாவது வேண்டுமா?" என்று அவன் இயல்பாக கேட்டான்.

"இல்லை மாமா." என்று அவள் வாய் சொன்னாலும் மனம் நீதான் வேண்டும் மாமா என்று புன்முறுவல் பூத்தது.

"சரிம்மா" என்று மதியழகன் கூற "நான் வர்றேன் மாமா" என்று கயல்விழி செல்லும் போது "தித்திக்குதே" என்று அவள் மனம் பாட துள்ளிக் குதித்தபடி சென்றாள்.

கயல்விழி அன்று இரவு தூங்க படுத்த பொழுது அவள் மனது அன்றைய நினைவுகளில் மூழ்க தூக்கத்தோடு பின் அவள் தூங்க கனவுகளில் கலவரம் செய்தான் மதியழகன்.

மறுநாள் காலை வீட்டில் எல்லோரும் அதிகாலையில் எழுந்து விட அனைவரும் கங்கா ஸ்நானம் செய்து முடித்து விட்டார்கள்.

"ஹேப்பி தீபாவளி கயல்" என்று சந்திரா ஆரம்பிக்க "ஹேப்பி தீபாவளி அக்கா" என்று கயல் பதிலுக்கு சொல்ல வரிசையாக வாழ்த்துக்களை எல்லாம் சொல்ல பதிலுக்கு அவள் சொல்ல என்று தீபாவளி களை கட்ட ஆரம்பித்தது.

வாசலில் மதியழகன் வெடியை பற்ற வைக்க அந்த சத்தத்தை கேட்டு வெளியில் வந்த கயல் "ஹேப்பி தீபாவளி மாமா" என்றாள்.

"சேம் டூ யூ கயல்" என்றவன் சொல்ல அவளும் மத்தாப்புடன் தீபாவளியை துவக்கினாள்.

"கயல்! மதி! வாங்க சாமி கும்பிடலாம்" என்று அத்தை வடிவாம்பிகை கூப்பிட சென்று பூஜையில் கலந்துக் கொண்ட பின் எல்லோரும் புதுத் துணி வாங்கிக் கொண்டு அணிய சென்றார்கள்.

அன்னலெட்சுமி வாங்கி தந்த சட்டை வேட்டியை அண்ணன் சண்முகநாதன் அணிந்து வந்தார். வடிவாம்பிகை அன்னம் வாங்கி தந்த புடவையில் வர அண்ணன் வாங்கி தந்த புடவையில் அன்னலெட்சுமி வந்தாள்.

சந்திரா அத்தை வாங்கி தந்த தாவணியில் வர மதியழகன் தான் வாங்கிக் கொண்ட பேன்ட் சர்டில் வந்தான்.

நம் கதாநாயகி முத்தாய்ப்பாக தாவணியில் வந்து சந்திராவுக்கு துணையாக நின்றாள்.

கயல்விழியை பச்சை நிறத்தில் டிசைன் போடப்பட்ட தாவணிய அதற்கு மேட்சாக பச்சை பாவாடை அதே நிறத்தில் ரவிக்கை அணிந்து பச்சை தேவதையாக கண்ட மதியழகன்

"வாவ்! தேவதை மாதிரி இருக்க கயல்" என்று மனமார பாராட்ட அந்த வார்த்தையில் தன்னை மறந்தாள் கயல்விழி.

பச்சை கலரில் டிசைன் போட்ட சட்டை அதற்கு மேட்சாக லைட் சந்தன கலர் பேன்ட் என்று அவன் நிற்பதை பார்த்து சேம் பிஞ்ச் என்று வாயெடுக்க அவன் போன் அலறியது.

மதியழகன் எடுத்து "ஹேப்பி தீபாவளி நிர்மலா" என்று அவன் வாழ்த்து சொல்ல மனம் சிதறினாள் கயல்விழி.
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சக்திப்ரியா டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top