• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Evano Oruvan 14-Final

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anisiva

SM Exclusive
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,578
Reaction score
7,649
Location
Tvl
வணக்கம் மக்களே,
ரொம்ப நாளா சின்ன கதை எழுதணும்னு ஆசை பட்டென். அது இந்த எவனோ ஒருவனால் நிறைவேறிடிச்சு.
இந்த வாய்ப்பு தந்த சஷி முரளிக்கு நன்றி.
கதையை படிச்சு கமெண்ட்ஸ் லைக்ஸ் செஞ்ச எல்லாருக்கும் நன்றியோ நன்றி??

எவனோ ஒருவன் 14

தாரிணிக்கு இன்னும் தூக்கம் கலைந்திருக்கவில்லை. நீண்ட வருடங்களுக்கு பிறகான நிம்மதியான தூக்கம் என்பதாலோ என்னவோ!

அவன் மார்பில் வசமாய் சாய்ந்து உறங்கியிருந்தாள்.
தூங்கும் தன் மனைவியை அணைத்துக் கொண்டு படுத்திருந்தவனுக்கு விடியலுக்கு முன்பே முழிப்பு வந்திருந்தது.
‘எத்தனை காலத்தை வீணாக்கி விட்டோம்’ என்ற எண்ணம் மறுபடியும் தலைதூக்க, கஷ்டப்பட்டு அதை மாற்றினான்.

சற்று நேரத்துக்கெல்லாம் எழுந்த தாரிணி அவனிடமிருந்து விலக முயல, அவளை விடாமல் மறுபடியும் தன்னுடன் இறுக்கிக் கொண்டான்.

அவனுக்கு தெளிவுபடுத்த நிறைய விஷயங்கள் இருந்தது!
“நான் இனி எங்கையும் போறதா இல்லை தாரிணி”
“ஏன்” என்று அவள் வாய் கேட்டாலும் மனதினுள்,
‘போனால் என் கதி’ வினோதமாய் தோன்றியது அந்த பெண்ணுக்கு!

“என் குடும்பம் இங்கே தானே இருக்கு! என் பொண்டாட்டிய இனியும் தனியா விடுறதா இல்லை!”

“இது எப்போதிலிருந்து?”

“ரொம்ப வருஷமாவே! நீ தான் அதை சொல்ல ஒரு வாய்ப்பு தரலை”
அவள் பதில் பேசவில்லை. கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்தாள். அவள் கை தன் பாட்டுக்கு அவனின் தலைமுடியை கோதி விட்டுக் கொண்டிருந்தது.

“நான் இப்ப என்ன பண்ணட்டும்?” என்றான் மறுபடியும். கிடைத்த இந்த சூழ்நிலையை வீணாக்கவில்லை அவன்.
“என்னை கேட்டா?”
“வேற யாரை போய் கேட்க சொல்றே! நீ இல்லாம நான் எவ்ளோ தவிச்சேன்னு தெரியுமா டி பவதாரிணி?”
அவன் தலையில் இருந்த அவள் கையை எடுத்து விட்டான். அவள் கண்களை நேராக பார்த்து அவன் குற்றம் சாட்ட, தாரிணி அவன் கண்களை சந்திக்க முடியாமல் வேறு பக்கம் முகத்தை திருப்பிக் கொண்டாள்.
அவள் பக்கம் வந்து அமர்ந்தவன்,

“சுயநலம் பிடிச்சவளே! உன் பிரச்சனை மட்டும் தான் உனக்கு பிரதானமா தெரிஞ்சது! என்னை மறந்திட்ட தானே! என் மூலமா வந்த என் பிள்ளை வேணும், ஆனா நான் வேண்டாமா, இதெல்லாம் எந்த ஊர் நியாயம்?”

“எதுக்கு இப்ப இப்படியெல்லாம் பேசுறீங்க. விடுங்க!”

“உனக்கு ஈசியா இருக்குல்ல? விடுங்கன்னு ஒத்தை வார்த்தையில் சொல்லிட்டே! நான் இப்பவும் இங்க வராம இருந்திருந்தா இன்னமும் தனியா இருந்திருப்ப தானே?”

“மாட்டேன்…”
அவன் கேள்வியாய் பார்க்க,
“ஏதோ என் வாழ்க்கை ஓடிச்சு இத்தனை நாளும்…நான் மட்டும் என்ன சந்தோஷமாவா இருந்தேன். நீங்க இப்ப இங்க வரலைன்ன நான் வந்திருப்பேன்!”

“இதை என்னை நம்ப சொல்றியா? நான் வந்த பின்னும் ஏன் வந்தேன்னு நீ போட்ட ஆட்டத்தை பார்க்க தானே செஞ்சேன்! உங்க வீட்டில உன்னை யாரும் எதுவும் சொல்லலையா தாரிணி?”
“சொல்லாம இருப்பாங்களா? உங்களுக்கு தெரியாதா? நீங்க அவங்க கூட பேசிகிட்டு தானே இருந்தீங்க”
“கண்ணன் மட்டும் அடிக்கடி பேசுவார். மித்துவை என் கூட பேச வச்சியிருந்ததும் அவர் தான்”

“மித்து என் கிட்ட இதையெல்லாம் எதுவும் சொன்னதில்லை தெரியுமா சரண்”
“சின்ன பிள்ளைனாலும், ரொம்ப பொறுப்பான பையன் டி அவன். நீயும் இருக்கியே மனுஷனை பாடு படுத்தவே”
அவளிடம் பதிலில்லை.

“இந்த கற்பனை கதைகளில் தான் டி பொண்டாட்டி கண்காணாம போயிட்டா, புருஷன் அவளை எங்கெல்லாமோ தேடிகிட்டு வருஷக் கணக்கில் காத்திருப்பான். நிஜ வாழ்க்கையில் எவனுக்கும் அப்படி பொறுமை எல்லாம் கிடையாது. இந்த கதையில் வரதையெல்லாம் படிச்சிட்டு அதில் வர ஹீரோயினா உன்னை நீயே நினைச்சிகிட்ட, அப்படிதானே ராசாத்தி!”

“என்ன பேசிறீங்க சரண்?”

“நீ அங்க விட்டிட்டு வந்த கதை புத்தகத்தில் சிலதை பொழுது போகாம நானும் படிச்சேன். ஒரு கதையிலாவது ஹீரோவும் ஹீரோயினும் சேர்ந்து இருந்தாங்கன்னு வருதா?முதலில் பிரிவாங்களாம் பிறகு சேருவாங்களாம்…என்ன டி இதெல்லாம்?”

அவன் ஆக்‌ஷனில் நகைக்க ஆரம்பித்தாள். அவன் கடுப்புடன் அவளை பார்த்துக் கொண்டிருக்க,

“இப்ப நமக்கும் அப்படி தானே நடந்திருக்கு சரண்!”

“நடக்கும் நடக்கும்! இதுக்கு மேல எதுவும் பேசாதே தாரிணி...எனக்குன்னு ஸ்பெஷலா செஞ்சி உன்னை அனுப்பின அந்த ஆண்டவனை தான் சொல்லணும்!”
சலித்துக் கொண்டாலும் திரும்ப படுத்துக் கொண்டு, தாரிணியை அவள் இடையோடு கட்டிக் கொண்டான்.

“போதும் ரொம்ப ஓவரா தான் போறீங்க”

“நீயா உணர்ந்து திரும்ப வருவேன்னு காத்திருந்தேன். வருஷம் தான் போனதே தவிர நீ இறங்கி வர மாதிரி தெரியலை. அதான் மானம் வெட்கம் ரோஷம் வேலையெல்லாம் விட்டிட்டு, தாரிணியே சரணம்னு நானே வந்துட்டேன்”

அவன் சொன்னதில் அவளை குற்ற உணர்வு தாக்கினாலும், தனக்காக இத்தனை செய்திருக்கிறான் தன் கணவன் என்று பெருமையாய் உணர்ந்தாள்.

சந்தோஷமாய் அவன் நெற்றியில் முத்தமிட்டவள் எழுந்து தன் மற்ற காரியங்களை கவனிக்கலானாள்.

அன்றும் சாந்தி வந்தார் மித்துவுடன்! வழக்கம் போல் சரண் மட்டும் வரவேற்க,
“தாரிணி அவங்களுக்கு குடிக்க ஏதாவது கொடு”
மாட்டேன் என்றவளிடம் வம்படியாய் ஒரு பானத்தை தந்து ஹாலுக்கு அனுப்பினான்.
“தாரிணி நல்லாயிருக்கியா டி?
அம்மா ரொம்ப கோவப்பட்டுட்டேன். என்னை மன்னிச்சிடு மா. எங்க அந்த கன்னத்தை காட்டு”

தள்ளாடி அவர் எழ முயல,
“நீங்க இருங்க”
அன்னையின் பக்கம் முட்டி போட்டு தன் முகத்தை அவரிடம் காண்பித்தாள்.

அறைந்திருந்த இடத்தில் அக்கறையாய் தடவிப் பார்த்தார் சாந்தி. ஒரு தடமும் இல்லையென்றாலும் அந்த அன்னையின் கண்கள் எல்லாம் கலங்க ஆரம்பித்திருந்தது!

“பிள்ளைத்தாட்சியை போய் அடிச்சிட்டேனேன்னு ராத்திரி எல்லாம் தூக்கம் இல்ல டி.”
மகளின் கைகளை பற்றிக் கொண்டார்!
“சரி விடுங்க, எப்பவும் உள்ளது தானே” தாரிணி சமாதானம் செய்ய முயல,

“நான் என்ன வாரா வாரம் உன்னை அடிச்சிகிட்டேவா இருக்கேன்! என்னடி இப்படி பேசுறே”
சிரித்தாலும்,
“ஸ்கூல் படிக்கும் போது வாங்கினதையெல்லாம் நேத்து கொடுத்தது தூக்கி சாப்பிட்டிருச்சு”

“அடி கழுதை! இனியாவது சுத்தியிருக்கிறவங்க கஷ்டத்தை புரிஞ்சிகிட்டு ஒழுங்காயிரு!”

அன்னை பேச்சுக்கு முதல் முறையாய் எதிர்த்து பேசவில்லை அவள்!

“நானும் சரணும் இந்த பிள்ளையை பெத்துக்கலாம்னு இருக்கோம் ம்மா”
அன்னையின் கண்களை நிமிர்ந்து பார்த்தவள்,
“போதுமா, இப்ப சந்தோஷமா!”

“ஆண்டவா, இப்பவாவது இந்த பொண்ணுக்கு ஒரு நல்ல புத்தியை கொடுத்தியே”
மேலே பார்த்தபடி தன் கன்னத்தில் போட்டுக் கொண்டார் சாந்தி!

“அற்புதா வரலையா?”

“உங்க எல்லாருக்காகவும் விருந்து சமைக்கிறா! சீக்கிரம் கிளம்பு நீ”

“அப்பா கூட பேச்சு வார்த்தை சரியாகாம நான் அங்க வரப்போறதில்லை. என்னை வற்புறுத்தாதீங்க”

“நான் வந்தேன்ல உன்னை சமாதானப்படுத்த, உன் புருஷனும் அவரா தானே வந்தார்… அப்பாகிட்டையாவது நீ இறங்கி போயேன். உன்னை பெத்து வளர்த்த தகப்பன் தானே! அவரா வந்து மன்னிக்க நீ என்ன சின்ன தப்பா செஞ்சியிருக்க?”

“பாயிண்ட்” என்றான் சரண்.
இவள் திரும்பி அவனை முறைக்க,

“அத்தை தான் இவ்ளோ தூரம் சொல்றாங்கல, கிளம்பு தாரிணி. இன்னையோட இந்த பிரச்சனைக்கெல்லாம் ஒரு முடிவுகட்டு.”
சரணும் ஒத்து ஊத வேறு வழி இருந்ததா அவளுக்கு?

மித்து வேறு சாப்பாட்டை பார்த்து பல காலம் ஆனவன் போல்,
“பாட்டி எனக்கு பசிக்கிது…அற்பு அத்தை ஃபிங்கர் பிஷ் செய்திருப்பாங்க”
அனைவரையும் அவசரப்படுத்தி பாட்டி வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டான்.

இரத்தினவேல் வீட்டு வாசலில் காத்திருந்தார், மகளின் குடும்பத்தை வரவேற்க.
தாரிணி கொஞ்சம் தாமதித்திருந்தாலும் அவரே அங்கு போனாலும் போயிருப்பார்!

இவள் உள்ளே வரவும், “வா தாரிணி, வாங்க மாப்பிள்ளை” என்றார் அன்போடு. தாரிணி நினைத்து இங்கு வந்ததற்கு நேர்மாறாய் சிரித்த முகமாய் காட்சியளித்தார்.

“அப்பா என்னை மன்னிச்சிடுங்க பா”
தாரிணி தலைகுனிந்து சொன்ன வார்த்தைக்கு,
“சரி விடு மா. உன் கூட இன்னமும் பாராமுகமா இருக்க எனக்கு என்ன நிறைய வயசா பாக்கியிருக்கு?”

அவர் சொன்ன சொல் சம்மட்டியால் அடித்த வலியை கொடுத்தது. வயதானவர்களை துன்பப்படுத்தி விட்டோமென்று!தான் பெற்ற பிள்ளை நாளை இதைபோல் தனக்கும் செய்தால் தாங்க முடியுமா அவளால்! எண்ணிப்பார்க்க கூட தோன்றவில்லை தாரிணிக்கு. தன் தவறை தாமதமாக உணர்ந்திருக்கிறாள். தந்தை தன்னை முழுதாக மன்னிக்கவில்லை என்பதையும் இப்போது உணர்ந்தாள்!

அற்புதா அழகாய் அங்கு அனைவரையும் வரவேற்று உபசரித்தாள். சாந்தியும் இரத்தினவேலும் அவளை பெருமையாக பார்த்தது போல் தோன்றியது தாரிணிக்கு. கண்ணன் அடிக்கடி இவளை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டான். எப்போதும் சின்ன பிள்ளையாக நடத்தியதே தன் தங்கையை இப்படி ஆக்கியிருக்கிறது என்பதை புரிந்துக் கொண்டவன் அவன் மட்டுமே! அதனாலேயே சரணை குற்றம் சாட்ட தன் பெற்றவர்கள் முயல்கையில் அதை தடுத்தும் வைத்திருக்கிறான்.

கண்ணன் அதே யோசனையில் தாரிணியை கண்ணெடுக்காமல் பார்க்க, அவளும் கண்களாலேயே தமையனிடம் என்னவென்று வினவினாள்!
அவன் ‘ஒன்றுமில்லை’ என்பதாய் தலையசைக்க,
“அண்ணனும் தங்கையும் இன்னும் இந்த மெளன விரதத்தை விடலையா? வாயை திறந்து தான் பேசுங்களேன்” அற்புதா அவர்களை கேலி செய்தாள்.
“ஏன் மா அற்புதா இந்த வீடு அமைதியா இருக்கிறது உனக்கு பிடிக்கலையா? மெளனமும் ஒரு பாஷை தானே, விட்டிடேன்… அவ வாயை திறந்தா பூமி தாங்கும், என்னால தாங்க முடியாது மா” சாந்தி பதறிக் கொண்டு சொல்ல அனைவரும் நகைத்தனர்.

“பாரு டா மித்து உங்க மாமாவை, நாளை பின்ன நீயும் உன் தங்கச்சி சேட்டை செஞ்சா இப்படி தான் பேசாம இருப்பியா?” அற்புதா இதை விடுவதாக இல்லை.
“அற்புதா உனக்கு என்ன வேணும் இப்ப? எங்களை பழைய மாதிரி பார்க்கணும் அவ்வளவுதானே! அந்த சிக்கன் மஞ்சூரியனை முதலில் எடு”

அந்த பாத்திரத்தில் இருந்த மொத்தத்தையும் தன் தட்டில் கொட்டப் போனான் கண்ணன்,
“டேய் கண்ணா, ஏன் டா இப்படி பண்றே? எல்லாத்தையும் நீயே சாப்பிடுறே! எனக்கு வேண்டாமா டா? அம்மா பாரு மா இந்த தடியனை!”

தாரிணி பேச ஆரம்பிக்கவும் சரண், மித்து, சாந்தி அவரவர் தலையில் கைவைத்துக் கொண்டனர். அற்புதா தன் தோழியை நெருங்கி அவள் தலையில் ஒன்று போட, கண்ணன் பெருங்குரலில் சிரித்தான்.

விட்டுக் கொடுப்பவர் கெட்டுப்போவதில்லை. சரண் அதை உணர்ந்தபடியால் தன் குடும்ப வாழ்க்கையை காப்பாற்றிக் கொண்டான்.
என்றும் இந்த குடும்பத்தில் இதே போல் மகிழ்ச்சியும் இனிமையும் பொங்க வேண்டும்!

வாழ்க வளமுடன்!!
 
akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,903
Reaction score
46,332
Location
Earth

Awesome ????????? a decent family story
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top