• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Evano Oruvan epi 13

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anisiva

SM Exclusive
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,578
Reaction score
7,649
Location
Tvl
அற்புதாவுக்கு கவலையாகிப் போனது.போன் செய்தால் தாரிணி எடுக்கவில்லை. வீட்டுக்கு போனால் அவள் வண்டி இருந்தது, ஆனாலும் அழைப்பு மணிக்கு யாரும் கதவை திறக்கவில்லை.வேறு வழியே இல்லாமல் தான் சரணிடம் போனில் அவள் கேள்விப்பட்ட விஷயத்தை சொன்னது.
‘எந்த ஹாஸ்பிட்டல், டாக்டர்’ எல்லா விபரமும் கேட்டவன் அதன் பின் இவளிடம் எதுவும் தெரிவிக்கவில்லை.
கண்ணனிடமும் தன் மாமனாரிடமும் இதை பற்றி சொன்னால் அவ்வளவுதான்,எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடித்துவிடுவார்கள்.அத்தையிடம் சொல்லலாம் என்று அவள் சொன்னது தான் மிகப் பெரிய தவறாகிப் போனது.

“ஏன் பா”
மித்து மறுபடியும் கேட்டான்.இவன் மனைவியுடனான பார்வை ஜாலத்தை முடித்துக் கொண்டு,
“ஏன்ன்னா…”
தாரிணியின் பதட்டத்தை கொஞ்ச நேரம் ரசித்தபின்,
“முதலில் மித்துவுக்கு ஐஸ்கிரீம்,அப்புறம் தான் பேச்சு.நீயே போய் வாங்கு பார்ப்போம்”
பள்ளிக்கு சற்று தள்ளியிருந்த கடையில் மகனை இறக்கிவிட்டவன்,அவன் மீது ஒரு கண்ணும் கண்ணாடியில் இன்னொரு கண்ணுமாய் காரில் அமர்ந்திருந்தான்.

“சரண்,சின்ன பிள்ளையை இந்த விஷயத்தில் இழுக்காதீங்க! எதுவானாலும் நாம ரெண்டு பேரும் பேசிக்கலாம்”
“எப்படி?”
“எப்படின்ன?”
“இல்லை உன் அகராதியில் பேச்சுவார்த்தைன்ன, நீ சொன்னதை தானே சுத்தி உள்ளவங்க கேட்கணும்! அப்படியா?”
“ம்ம்...ஆமாம் சரண்”
‘எத்தனை திண்ணக்கம்!’
“முடியாது”
“சரண் ப்ளீஸ்!அவன்ட சொல்லாதீங்க. நாளைக்கு இல்லைன்னு ஆச்சுன்ன அவன் வருத்தப்படுவான்.ப்ளீஸ் சரண், இதை மட்டும் எனக்காக செய்ங்க!”
“நீ எனக்காக என்னடி இதுவரை செஞ்சியிருக்கே!இனியும் என்ன செய்திட போறே!நீ பாட்டுக்கு போவே நான் உன் பின்னாடியே வந்து நீ சொன்னதை மட்டும் செய்யணுமா?”

மித்து காருக்கு திரும்ப தயாரானான்.அவன் காரை நெருங்கும் முன்,
“இனி நீங்க என்ன சொன்னாலும் செய்றேன் சரண்,ப்ளீஸ்” என்றாள் அவசரமாய்.
இருவரின் கண்களும் சந்தித்துக் கொண்டது அந்த கண்ணாடியில்.உதிர்த்துவிட்ட வார்த்தைகள் அதிகப்படியோ என்ற எண்ணம் தாரிணிக்கு தோன்றாமல் இல்லை.
வந்து சீட்டில் அமர்ந்து விட்ட அடுத்த நொடி,
“இப்ப சொல்லுங்க பா”என்றான் மித்து.

மனைவியை பார்த்தபடி இருந்தான்.
போட்டு கொடுக்கத் தான் போகிறான் என்று அவள் நினைக்க,
“அம்மாவுக்கு உடம்பு சரியில்லை.வயிறு ரொம்ப வலிக்கிதாம்.நீ அப்படி குதிச்சா இன்னமும் வலிக்கும் தானே.அதுக்கு தான் அப்பா கோபமாகிட்டேன்”
பிள்ளை நம்பிவிட்டது.தாரிணி பெருமூச்சு ஒன்றை விட்டு தன்னை சமன் செய்துக் கொண்டாள்.

வீட்டில் இறங்கி மகன் உள்ளே ஓடவும்,
“சொன்ன சொல் நியாபகம் வச்சிக்கோ தாரிணி.பேச்சை மாத்த கூடாது”
அவனை ஒரு பார்வை பார்த்தவள் எதுவும் சொல்லாது உள்ளே சென்றுவிட்டாள்.

தாரிணிக்கு அன்று ராசிப்பலனில் என்ன இருந்ததோ தெரியாது,ஆனால் அவளை பொருத்தவரை சோதனை நாள்.
இவர்கள் வீட்டுக்குள் வந்து சற்று நேரத்துக்கெல்லாம் சாந்தி வந்தார், அற்புதா மற்றும் கண்ணனுடன்.
“வாங்க அத்தை” சரண் மாத்திரமே வரவேற்றது.
“கண்ணனும் அவங்க அப்பாவும் மித்துவை கூப்பிட்டு எங்கையோ வெளியே போகணுமாம்,நீங்களும் கூட போயிட்டு வாங்களேன் மாப்பிள்ளை”
அவனை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்த நினைக்கிறார் என்பது புரிந்தது சரணுக்கு.
“ம்ம் சரி அத்தை, மித்து குட்டி வா…”
கண்ணன் அற்புதாவிடம் ‘பார்த்துக்கோ’ என்றதை பார்த்தபடி சரணும் கண்ணனுடன் வெளியேறினான்.

அவர்கள் சென்றுவிட்டதை உறுதிப்படுத்திய அடுத்த நொடி,
மகளை அறைந்திருந்தார் சாந்தி.அறைந்த வேகத்தில் தடுமாறி அவள் ஒரு சோபாவில் விழ, இவரும் அவளுக்கு எதிர் இருக்கையில் தள்ளாடியபடி அமர்ந்தார்.
“என்ன டி கொஞ்சம் விட்டா ரொம்ப ஜாஸ்தியா பேசுறே, ஜாஸ்தியா செய்றே. உன் மனசில் என்ன தான் நினைச்சிட்டு இருக்கே?”
தாரிணிக்கு கன்னம் வலித்தது.
“இப்ப எதுக்கு இத்தனை ஆங்காரம் உங்களுக்கு?அப்படி என்ன பெரிய தப்பு பண்ணிட்டேன்”
கண்கள் கலங்கியிருக்க, ஆத்திரமாய் தாயிடம் கேட்டாள்! அற்புதா சாந்தியின் பக்கமிருந்து அவரின் கையை கெட்டியாக பிடித்திருந்தாள்.

“ஓ என்ன தப்புன்னே உனக்கு தெரியலையா? ரொம்ப நல்லா உன்னை வளர்த்து வச்சியிருக்கேன். எல்லாம் என் தலையெழுத்து. நீ இன்னிக்கு அழிக்க நினைச்ச மாதிரி நானும் ஒரு முப்பது வருஷத்துக்கு முன்னாடி செஞ்சியிருந்தா எனக்கு இந்த பிரச்சனையே இருந்திருக்காது”
சாந்தியின் கண்களும் கலங்க ஆரம்பித்திருந்தது.
“எப்போதிலிருந்து இப்படி அரக்கியான தாரிணி.நல்ல பொண்ணா தானே இருந்தே! உன் அண்ணனுக்கு புத்தி சொல்றே! உன் பிரண்ட் வாழ்க்கைக்கு வழி செஞ்சே.உனக்குன்னு வரும்போது உன் மூளை காத்து வாங்க போகுதா?”

அற்புதாவை பார்த்தாள் தாரிணி!
“என்ன அற்பு இது?என்னடி செஞ்சி வச்சியிருக்கே”
“தாரிணி நான்…”
அற்புதாவை இடைமறித்தவர்,
“அவளை எதுக்கு கேட்குறே? நீ போன ஹாஸ்பிட்டலுக்கு போயிருந்தேன். டாக்டர் எனக்கு தெரிஞ்சவங்க. உன் லட்சணத்தை அவங்க தான் சொன்னாங்க. உங்க பொண்ணான்னு வேற திரும்ப திரும்ப கேட்டாங்க. குடும்ப கவுரவத்தை கெடுக்கத்தான் உன்னை பெத்து வச்சியிருக்கேன்”

சாந்தி பேச பேச தாரிணிக்கு மனசு வலித்தது.
“அம்மா என் நிலைமை புரியாம எதையும் பேசாதீங்க”
“உன் நிலைமைக்கு என்ன குறைச்சல்?”
“தனியா இருக்கிறேன் எப்படி மா இரண்டு பிள்ளைகளை வச்சியிருக்க முடியும்?”
“தாரிணி கொஞ்ச நேரம் பேசாம இரேன் டி” அற்புதா பதறியது போலவே,
“அப்போ நீ இன்னும் உன் புருஷன் கூட சமாதானம் ஆகலையா? எங்களை எந்த விஷயத்திலும் சந்தோஷமா இருக்க விட மாட்டியா?”
சாந்திக்கு,ஆத்திரம் கண்ணீராய் வெளிப்பட்டது.

“இந்தா பாரு டி,எங்களுக்கு இந்த பேரப்பிள்ளை எந்த சேதாரமும் இல்லாம பத்திரமா வேணும். அதுக்கு என்ன வழிவகை செய்யணுமோ அதை செய். இன்னும் ஏதாவது சேட்டை செஞ்சியோ ஓங்கி தட்டிபுடுவேன்”
கையிலிருந்த அவரது வாங்கிக் ஸ்டிக்கை வைத்து மகளின் தோளில் பலமாய் தட்டிவிட்டுப் போனார்.

அவர் முதலில் வெளியே போக, இவளிடம் வந்த அற்புதாவிடம்,
“எத்தனை நாளா டி இப்படி நடக்கணும்னு பிளான் பண்ணே! அந்த பின்லேடி வருதுன்னு எனக்கு ஒரு போனாவது செஞ்சி சொல்லியிருக்கலாம்ல அற்பு”
தோழியின் முதுகை ஆதரவாய் வருடிவிட்டவள்,
“அத்தை சொல்றதை கொஞ்சம் சீரியஸா எடுத்துக்கோ தாரிணி.உன்னை பத்தி தான் எப்போதும் நினைக்கிறாங்க தெரியுமா? உன் மேல அவ்ளோ பாசம்,அதனால தான் இந்த கோபம்.அதை நல்ல விதத்தில் எடுத்துக்கோ டி...என்னை பாரு, இப்படி திட்டக் கூட எனக்கு என் அம்மா இல்ல”

அவள் சொன்னது அத்தனையும் உண்மை தான். ஆனால் தாரிணி இப்போது அதை ஒத்துக் கொள்ள மனமில்லை.
“ நாத்தனார் கொடுமைன்ன என்னன்னு என்னை காட்ட வச்சிடாதே. அந்த பின்லேடியை கூப்பிட்டு போயிடு இங்கேயிருந்து”

“லூசே, நான் என்ன சொல்ல வரேன்னா…”

“அற்புதா இன்னும் அந்த கழுதை கிட்ட என்ன பேச்சு?கிளம்பு சீக்கிரம்” சாந்தியின் குரலுக்கு,
“வரேன் அத்தை” என்றவள் இவளிடம் “வரேன் தாரிணி” என்றபடி போய்விட்டாள்.

சோபாவில் அமர்ந்த நிலையில் தன் கால் முட்டியில் முகம் புதைத்து அழ ஆரம்பித்தாள் தாரிணி. திடீரென தனக்கு இந்த உலகத்தில் யாருமே இல்லை என்ற எண்ணம் அவளை தாக்க ஆரம்பித்தது.அதற்கு யார் காரணம் என்பது மட்டும் புரியவில்லை.தன் தோழி அற்புதா கூட மாமியாரின் அழைப்புக்கு அவளுடன் நிற்காமல் ஓடியிருந்தாள்.
எத்தனை நேரம் அழுதாளோ தெரியாது.பக்கத்தில் யாரோ அமரும் அசைவில் கண் திறந்து பார்த்தாள்,சரண் தான்.
“ஏன் தாரிணி, ஏன் இந்த அழுகை.கண்ணெல்லாம் வீங்கி போச்சு பாரு”

கண்ணைத் துடைத்தவள் எழப் போக,
“பரோட்டா வாங்கிட்டு வந்தேன் உனக்கு,சாப்பிடுறியா?”
வயிறு பசியில் சத்தம் போட்டுக் கொண்டிருந்தது.
கிட்சனுள் சென்றவள், ஒரு தட்டை எடுத்துக் கொண்டு வர அவன் பார்சலை பிரித்தான்.
வாழை இலையின் வாசனை அவள் நாசியை நிறைத்தது.
பிளாஸ்டிக் தடையால், அந்த வீணாய் போன பிளாஸ்டிக் பேப்பர் எல்லாம் போய் இப்போது இலையில் கட்டித் தந்திருந்தனர்.

குருமாவை கூட ஒரு எவர்சில்வர் தூக்கில் வாங்கியிருந்தான். தாரிணிக்கு எப்போதுமே கடைகளில் அந்த சூடான குருமாவை கவரில் ஊற்றும் காட்சியே கிலியை உண்டாக்கும். எத்தனை கெடுதல் அதை உணராமல் என்னதிது! ஒரு வழியாய் இது எல்லாவற்றுக்கும் ஒரு மாற்றத்தை உண்டு செய்திருந்தனர் நம்மூரில்!

பசியில் மடமடவென சாப்பிட்டாள். அவன் என்ன செய்கிறான் என்று நிமிர்ந்தும் பார்க்கவில்லை.அடம்பிடித்த பிள்ளை சமாதானமாகி இருப்பது போலிருந்தது அவனுக்கு.தன் மனைவியின் செயல்களை கன்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
“இன்னும் ஒண்ணு வைக்கவா தாரிணி?”
“இல்ல எனக்கு வேண்டாம், நீங்களும் மித்துவும் சாப்பிடுங்க”
“மித்து குட்டி இன்னிக்கு வரலையாம்.லீவ் விட்டாச்சுல அங்கேயே இருக்க போறேன்னு சொல்லிட்டான்”
“உங்களை விட்டுட்டா?”
“அம்மா மாதிரி பையனுக்கும் நான் வேண்டாமாம்!”
தலையை சரித்து இவள் கண்ணுக்குள் பார்த்தபடி அவன் கூற, அந்த இடத்தை விட்டு அகன்றாள்.

“மித்துவுக்கு விஷயம் தெரிஞ்சி போச்சு. அத்தை அவன் கிட்ட சொல்லிட்டாங்க தாரிணி”
‘அவன் முகத்தில் என்ன? வந்த சிரிப்பை அடக்குகிறானா? இவர்கள் எல்லாருக்கும் நான் என்ன விளையாட்டு பொம்மையா?’

“தெரியட்டுமே,அதுக்கென்ன நாளைக்கு இல்லைன்னு சொன்னா…” அவன் பார்வையை சந்தித்தவள் வாயை மூடிக் கொண்டு தன் அறைக்குள் புகுந்தாள்.
“சொல்ல வந்ததை பாதியில் நிறுத்திட்ட! அத்தை அந்த அளவுக்கு உனக்கு பேய் ஓட்டிட்டாங்களா? ஹ ஹா”

“நான் தூங்கணும், வெளியே போகும் போது லைட் ஆப் பண்ணிடுங்க.”
அவள் சொன்னதை உடனே செய்தவன், அவள் பக்கமே வந்து படுத்தான்.

“நீ என் எதிரி இல்லை தாரிணி, என் காதலி, என் மனைவி”

பதிலில்லை அவளிடம்.அவளை நெருங்கி படுத்தவன் அன்பாய் அரவணைத்தான்.தாரிணி அவன் கையை தட்டி விட முயல, அது அசையக் கூட இல்லை.
“தள்ளிப் படுங்க சரண்.எனக்கு இதெல்லாம் பிடிக்கலை”

பேசக்கூடாது என்பதாய் அவள் உதட்டில் விரல் வைத்தவன், இன்னமும் நெருங்கி அவளை அணைத்துக் கொண்டான்.பல வருடங்களாய் அவள் இழந்திருந்த அவனின் அணைப்பு ஏதோ ஒரு பாதுகாப்பு உணர்வை தந்தது.

தனக்கு யாருமில்லை என்று மருகிக் கொண்டிருந்தவளை, நான் இருக்கிறேன் என்பதாய் உணர்த்தினான்.அவளும் உணர்ந்தாள்! அவனின் வாசம் இனிய பழைய நினைவுகளை கிளரி விட்டிருந்தது. விருப்பமில்லாமல் அவன் அணைப்பில் இத்தனை நேரமும் இருந்தவள் இப்போது இன்னமும் நெருங்கி அவன் நெஞ்சில் சாய்ந்துக் கொண்டாள்.

பேசி தெளிவுப்படுத்த ஆயிரம் விஷயமிருந்தும், இப்போது அவளின் நிம்மதியை மட்டுமே பிரதானமாய் எண்ணியவன் தூங்கிவிட்ட தன் மனைவியின் நெற்றியில் முத்தமிட்டான்.














 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
Nice update Ani... அம்மா கொஞ்சம் ஓவரா பேயோட்டிட்டாங்க தாரிணிக்கு ??? அதுல என்ன ஒரு ஆனந்தம் சரணுக்கு...
 




anisiva

SM Exclusive
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,578
Reaction score
7,649
Location
Tvl
Nice update Ani... அம்மா கொஞ்சம் ஓவரா பேயோட்டிட்டாங்க தாரிணிக்கு ??? அதுல என்ன ஒரு ஆனந்தம் சரணுக்கு...
Avan seiya mudiyaadhadai athai senjitaanganu oru aanantham
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top