• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Evano oruvan epi 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

How are the first two episodes

  • Good

    Votes: 12 92.3%
  • Bad

    Votes: 0 0.0%
  • Needs improvement

    Votes: 1 7.7%

  • Total voters
    13
  • Poll closed .

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
?சரண் தாரிணியோடா கணவன் இல்லியா ??இது என்னட ஒரே குழப்ஸாக இருக்கு?
அற்புதா கண்ணாவுக்கு என்ன மோதல் ? நிரய கேள்வி குறிகள்!???????
Nice ani ma??
 




anisiva

SM Exclusive
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,578
Reaction score
7,649
Location
Tvl
?சரண் தாரிணியோடா கணவன் இல்லியா ??இது என்னட ஒரே குழப்ஸாக இருக்கு?
அற்புதா கண்ணாவுக்கு என்ன மோதல் ? நிரய கேள்வி குறிகள்!???????
Nice ani ma??
Hi hi ??
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
எவனோ ஒருவன்-2

தன் இருப்பிடம் செல்லாமல் காரை நாகர்கோவில் பைபாஸ் ரோட்டின் ஓரமாய் நிறுத்தியிருந்தாள் அற்புதா. ஏனோ ஒரு வெறுமை.கேட்டுக் கொண்டிருந்த பாடலும் ஒரு காரணம்!

‘மழையின் பயணம் எல்லாம் மண்ணை தீண்டும் வரை
படகின் பயணம் எல்லாம் நதியை தாண்டும் வரை
மனித பயணங்கள் எல்லாம் வாழ்க்கை தீரும் வரை…'


உன்னிமேனனின் குரல் அவளின் துக்கத்தைதை எல்லாம் கிளறி விட்டிருந்தது. சுயபச்சாபத்தை எத்தனை முயற்சித்து தவிர்த்தாலும் சந்தடியில் தன் வேலையை செவ்வனே செய்துவிடுகிறது. பாட்டை கேட்டபடி காரின் ஸ்டீரிங்கில் சாய்ந்து கண் கலங்கியவளை நினைவுலகிற்கு கொண்டு வந்தாள் அவளின் தோழி, போன் மூலமாக!
“என்ன அற்பு போயிட்டியா”
“இன்னும் இல்லை தாரிணி.நீ என்ன செய்றே?சர்வேஷ் வந்தானா?”


பதில் கேள்வி கேட்டு சாதரணமாய் இருப்பது போல் காட்டிக் கொண்டாள்.
“ம்ம்… வந்தான்,வந்தான்!நீ எங்கே நின்னுகிட்டிருக்கே?ஹாஸ்டலுக்கு போ சீக்கிரம், மழை வரும் போலிருக்கு!”
சரி என்பதோடு நில்லாமல் அவள் சொன்னபடியே செய்தாள்.


அடுத்த நாள் கல்லூரி இருந்தது, அதற்கான பாட குறிப்புகளோடு தாரிணி கேட்டிருந்த ஆர்கிட் பூவின் வளர்ப்பு முறைகளை பற்றி ஆராய்ந்து பார்க்க வேண்டியிருந்தது.அறைத் தோழி வேறு சாப்பிட வருமாறு இரண்டாம் தடவையும் அழைத்துவிட்டாள்.

பரபரப்பாய் இவற்றை எல்லாம் முடிக்க எத்தனிக்க, அதற்கு ஊடே வந்தது அந்த போன் கால்.
தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு!
அவள் எடுத்த நொடி,
“ ஹலோ அற்புதா, நான் கண்ணன்...”
அந்த குரலில் அவள் இதயம் தடதடக்க ஆரம்பித்திருந்தது.பதில் பேசும் யோசனையே இல்லாமல் போனை காதில் வைத்திருந்தாள்.
‘ஹலோ ஹலோ’ என்றவன் பதில் இல்லாததால் அழைப்பை துண்டித்தான்.


வந்திருந்தவனை பார்க்க பார்க்க எரிச்சலாக இருந்தது. எந்த முகத்தை வைத்துக் கொண்டு மறுபடியும் இங்கே வந்து நிற்கிறான்?
‘வெளியே போடா’ என்று சொல்ல ஏனோ வாய் வரவில்லை!


எல்லாவற்றுக்கும் மேலாய் இந்த ‘கொசு தொல்லை தாங்க முடியவில்லை!’
வாய் ஓயாமல் தன் தந்தையிடம் கொஞ்சிக் கொண்டிருந்தான் மித்ரன்!அவர்கள் பேச்சின் ஊடே அவளுக்கு சில விஷயங்கள் மட்டும் புரிந்தது.ஸ்கைப்பில் வாரம் தவறாமல் பேசுகிறார்கள் இருவரும்!பாட்டி வீட்டில் செய்யும் வேலை இதுதானோ?!


யோசனையுடன் இருந்த அன்னையை கண்ட மித்து குட்டி,
“ நீங்க கிட்சன் போங்க மா,எனக்கு பூரி வேணும்.அப்பா உங்களுக்கு பூரி ஓகே தானே!”
தன் பிள்ளை பசி என்றதும் அத்தனை நேரம் அவனை திட்டிக் கொண்டிருந்த மனம் சட்டென்று மாறியது.அவளுக்கு தெரியாமல் தன் மகன் வாழ்க்கையில் எதுவுமே கிடையாது என்று மார்தட்டி கொண்டதெல்லாம் வீண் ஜம்பம் போல. எத்தனை பெரிய விஷயத்தை மறைத்திருக்கிறான்!


யோசனையின் ஊடே வேலைகள் அது பாட்டுக்கு நடந்து சாப்பிடவும் ஆரம்பித்தாயிற்று.
“ மா அப்பாக்கு இன்னும் ஒரு பூரி”
“மா அப்பாக்கும் பால்”
“மா அப்பாவுக்கு நியூ பெட்ஷீட்”
அவளை படுத்தி எடுத்துக் கொண்டிருந்தான் மித்ரன்.
‘சும்மா இரேன் டா!அப்பா லொப்பான்னு!’


முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க நின்றிருந்தாள்.சரண் அவளை அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தான்.அவளிடம் எந்த பேச்சுமில்லை!

“மித்ரன் கீழே இறங்கு.அப்பாவுக்கு வெளியே போற வேலை இருக்காம், நாம தூங்க போலாம்.”
சரணின் தோளில் லாவகமாய் சாய்ந்து இருந்தவன் அவள் பேச்சை நம்ப முடியாமல் தந்தையை பார்த்து அப்படியா என்க,
பதிலுக்கு அவன் மறுப்பாய் தலையசைக்க,
“மா, இட்ஸ் லேட், அப்பா இனி எங்கையும் போக மாட்டாங்க, வாங்க பா நாம தூங்கலாம்.” அவளை தாண்டிக் கொண்டு போன இருவரும் படுக்கையில் விழுந்தனர்.


“கண்ணா அற்புதா நல்ல பொண்ணு தான், எங்களுக்கு தெரியும்.ஆனா யோசிச்சு பாரு ஏற்கனவே கல்யாணம் ஆகி விவாகாரத்து ஆன பொண்ணை…”
தந்தையின் பேச்சு ஏரிச்சலை கிளப்பியது.
முதல் திருமணம் தோல்வியில் முடிந்தால் அது உலகமகா குற்றம் போல் பேசும் இந்த மனிதருக்கு தன் இரு பிள்ளைகளும் அப்படி ஒரு நிலையில் இருப்பது ஏனோ கண்ணுக்கு தெரியவில்லை!
“அதெல்லாம் எனக்கு பிரச்சனை இல்லை. அம்மா விருப்பம் இது, உங்க அபிப்பிராயம் தெரிஞ்சா மேற்படி பார்க்கலாம் பா”
யோசிக்க ஆரம்பித்தார் இரத்தினவேல்!
தன்னிடம் பேச தயங்குபவர்கள் கூட தன் பிள்ளைகளின் பிரச்சனைக்கு வழி சொல்றேன் என்று பேச கிளம்பினர். இன்னும் இவன் அந்த பெண்ணை மறுமணம் செய்தால் என்னென்ன பேச்சு கேட்க நேருமோ என்ற யோசனை அவருக்கு.
“எனக்கு நீ நல்லா இருந்தா போதும் கண்ணா, வேற எதை பத்தியும் கவலை இல்லை!” கண்கள் லேசாக கலங்க ஆரம்பித்தது! தந்தையை நெருங்கி அவர் தோளில் ஆதரவாய் கைவைத்தான்...
“உன் வாழ்க்கையை கெடுத்திட்டேனோன்னு ஏற்கனவே குற்ற உணர்ச்சியில் தவிக்கிறேன் பா. என்னால தெளிவா எந்த முடிவுக்கும் இப்ப வர முடியலை”
“எனக்கு புரியுது பா! பழசை எல்லாம் மறந்திடுங்க. உங்களுக்கும் அம்மாவுக்காகவும் மட்டும் தான் இந்த முடிவு!”


தூங்கிவிட்ட மகனின் அருகிலேயே இருந்தான் சரண்.அவன் தலையை தடவி விட்டான், அடிக்கடி மகனின் கன்னத்தில் முத்தமிட்டான். நேரம் கடந்து போவதை அவன் உணரவில்லை. தாரிணிக்கு அப்படியில்லை, தவித்துக் கொண்டிருந்தாள்.
இத்தனை நாளும் தனியே இருந்திருக்கிறாள், திடுதிப்பென்று ஒருவன் வந்து இரவு பத்து மணி வரைக்கும் இருப்பதை எப்படி எல்லாம் கதை கட்டுவார்கள்,அவளுக்கு தெரியாதா? நாளைக்கு அவர்களின் நியூஸ் ஃபீடில் தான் விழாமல் இருக்க வேண்டுமானால் இவனை இங்கிருந்து இப்போதே துரத்த வேண்டும்.
“நீங்க கிளம்புறீங்களா?”படுத்தபடியிருந்தவன் அறை வாசலில் நின்றவளை திரும்பி பார்த்து, “ஏன்” என்றான்.
“ஏன்ன!” என்ன?
“நீங்க இங்க இருக்கிறது சரி கிடையாது, ப்ளீஸ் கிளம்புங்க!”


அவள் குரல் சற்று உசந்ததும் மகனை திரும்பி பார்த்தவன், அவன் எழவில்லை என்பதை உறுதி செய்துக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தான்!
“நீ நிறைய விஷயத்தை மறந்திட்டு பேசுறே தாரிணி,இது என் வீடு!”
உண்மைதான்,ஆனால்!
“நான் எனக்கு இதை தரச்சொல்லி…”
அவள் முடிக்கும் முன் ,
“என்னால் உங்க இரண்டு பேரையும் விட்டிட்டு இருக்க முடியலை டி.இனி உங்க கூட தானிருப்பேன்!”
திட்டவட்டமாய் அறிவித்தான்.
“அப்படியெல்லாம் உங்க இஷ்டத்துக்கு மாத்த முடியாது சரண், நீங்க கிளம்புறீங்களா இல்லை நான் போகட்டா?”
“என்னை இங்கிருந்து போக சொல்ல உனக்கு எந்த உரிமையும் இல்லை.”


சாட்டமாய் சோபாவில் அமர்ந்துக் கொண்டான்.
கோபமாய் வந்தது அவளுக்கு. அறையினுள் சென்றவள் தன் கைப்பையை எடுத்துக் கொண்டு வருவதற்குள் கேட்டிலிருந்து வாசல் கதவு வரை அனைத்தையும் பூட்டு போட்டு பூட்டிவிட்டவன் சாவியை தன் சட்டை பையில் பத்திரப்படுத்திக் கொண்டான்.அவள் திரும்பி அந்த இடத்திற்கு வர, அவன் சோபாவில் கால் நீட்டி படுத்தே விட்டிருந்தான்.


கதவை திறந்துவிட்டு பிள்ளையை தூக்கிக் கொள்ளலாம் என்ற நினைப்பில் வந்தவள் சாவியை தேட அது கிடைத்த பாடில்லை.
‘இங்கே தானே வச்சேன்’ தேடி சலித்தது தான் மிச்சம்.கையாலகத்துடன் மறுபடி அறைக்கு சென்றவள் மகனின் அருகே படுத்துக் கொண்டாள்.
‘என் நிம்மதியைக் கெடுக்கவே வந்திருக்கான்.இவன் வேண்டும் வேண்டாம்னு மாத்தி மாத்தி சொல்ல நான் என்ன பொம்பையா?’


கடவுளின் படைப்பில் அனைவரும் பொம்மைகளே.அவன் திட்டங்களுக்கு ஏற்ப ஆடித் தான் ஆக வேண்டும் என்பதை புரியாத தாரிணி கண்ணயர்ந்தாள்.
——-
“பூஜா உன் இஷ்டத்துக்கு இருக்க இது ஒண்ணும் உன் அப்பா வீடில்லை!”
தாரிணி அவள் அண்ணிக்கு சரிக்கு சமமாய் வாயடித்துக் கொண்டிருந்தாள்.
“யூ ஷட்டப்.பெரியவங்க கிட்ட இப்படி தான் பேசுவியா?”
“அதை நீ சொல்றியா? அம்மா கேட்குறாங்க பதில் சொல்லாமல் எடுத்தெறிஞ்சி பேசுறே!”
கண்ணனும் இரத்தினவேலும் ஊரில் இல்லை.பூஜாவை இங்கே இவர்கள் வீட்டில் விட்டிருந்தான்.


வந்ததிலிருந்து அவள் செயல்களில் எரிச்சலான தாரிணி, அன்று வெடித்துவிட்டாள்.
“தாரிணி அண்ணி கிட்ட அப்படியெல்லாம் பேசாதே, உள்ளே போய் படி” சாந்தி சண்டையை சமாளிக்க முயல,
“நடிக்காதீங்க, அவளை நல்லா தூண்டி விட்டிட்டு நாடகமா ஆடுறீங்க?எங்க அப்பாகிட்ட சொன்னா என்னாகும் தெரியுமா?”
“என்னாகும்? உங்க அப்பா என்ன கடவுளா? போடி”என்றாள் தாரிணி.
“தாரிணி, இதுக்கு மேல ஒரு வார்த்தை பேச கூடாது. உள்ளே போன்னு சொல்றேன் ல, போடி உள்ளே!”
சாந்தி ஆர்பாட்டமாய் கத்தி மகளை அடக்கியிருந்தாள்.


அடுத்த பஞ்சாயத்துக்கான காரணியாக அன்று நடந்தவை அமைந்து விட்டது.
பூஜா கோவித்துக் கொண்டு தந்தை வீட்டுக்கு போக, இரத்தினவேலின் நச்சரிப்பால் கண்ணன் சென்று அழைத்துக் கொண்டு வந்தான்.
அதற்கான மண்டகப்படி எல்லாம் தாரிணிக்கு ,சாந்தியிடமிருந்து!


“பாட்டி எப்படி நீ அம்மாவை வளர்த்தே?”
“எதுக்கு டீ”பேத்திக்கு தலை வாரிக் கொண்டிருந்தவர் கேட்க,
“என்னால முடியலை பாட்டி.ரொம்ப தொல்லை பண்றாங்க. அண்ணனை மட்டும் தான் அவங்களுக்கு பிடிக்கிது. அந்த ராங்கி பூஜாவை கூட ஒண்ணும் சொல்றதில்லை, என்னை மட்டும் ஏன? வொய் மீ?”
பேத்தியின் குரலில் பிசிறு தட்ட நிலைமையை சகஜமாக்க முயன்றாள் ஜானகி,சாந்தியின் தாயார். மகன்கள் எல்லாம் கைவிட்ட நிலையில் மகளுடன் அவள் வீட்டில் தானிருக்கிறார்.
“ஏட்டி தாரிணி, அம்மா என்ன செய்றா உன்னை? ஒவ்வொரு வீட்டில் போய் பாரு,பொம்பளை பிள்ளைங்க வாயே திறக்க முடியாது! உன் வயசுக்கு உன் அம்மாவோட மனசு இப்ப புரியாது புள்ள. அவ சொல்றதை மட்டும் பாட்டிக்காக பல்லை கடிச்சிட்டு செய்திடுவியாம்! என் தங்கமில்ல!”
அவள் பின்னலை கட்டி முடித்திருந்தார்.பேத்தியின் உச்சி முகர்ந்து கொள்ள, தாரிணியும் தன் ஆசை பாட்டியை கட்டிக் கொண்டாள்!


“சாமி கும்பிட போ! விபூதி இல்லாம வீட்டு வாசலை தாண்ட கூடாது!”
“உன் தொல்லைக்கு என் அம்மா தொல்லையே தேவலாம் கிழவி!”
“கிழவியா! சாந்தி அந்த இடுக்கியை அடுப்பில் வை, இந்தா வாரேன்!”
அந்த இடத்தை விட்டு ஓடியிருந்தாள் தாரிணி!
Ok
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top