• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Evano Oruvan epi10

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anisiva

SM Exclusive
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,578
Reaction score
7,649
Location
Tvl
எப்போ போடுவேன்னு தெரியாதுன்னு சொன்னேனில்ல அதற்கு அர்த்தம் இது தான்.?
படிச்சு பாருங்க. உங்க கமெண்ட்ஸ்க்கு வெயிட்டிங்...



‘சின்ன செடியை நட்டு வைத்து அது புது தளிர் எப்போது விடும், பூக்குமா, நோய் தாக்கிவிடுமோ என்று பார்த்து பார்த்து வளர்க்கும் பல பேருக்கு தெரியும் இந்த மரங்களை இழந்து நிற்பவர்களின் வலி.எல்லாமும் சாய்ந்து கிடக்கிறதே,அதை போல் ஒரு தென்னந்தோப்பை மீண்டும் உருவாக்க எத்தனை உழைப்பு,எத்தனை காலம் தேவை!

மனிதர்களை சோதிப்பாய் தெரியும்,ஆனால் இந்த அளவுக்கா?! இயற்கையே உன் மீது கோபம் வருகிறது!’
தன் கிறுக்கல் புத்தகத்தில் போன வாரத்தில் எழுதியிருந்தாள் தாரிணி!

கஜா புயல் வந்து பெரும் சேதத்தை உண்டு செய்திருந்தது.அவள் தோட்டத்தில் பிரச்சனை பெரிதாக இல்லையென்றாலும், தஞ்சை சுற்றுவட்டாரத்தில் உள்ள செய்திகளை படிக்க அவளுக்கும் கஷ்டமாய் இருந்தது.

இன்று அந்த வரிகள் கண்ணில் பட அதனை பற்றிய யோசனையில் ஆழ்ந்தாள் தாரிணி. தன் நிலத்திலும் என்னென்ன பாதுகாப்பு வசதிகள் செய்ய வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.

திடீரென கண்ணில் பட்டது,
‘என் வாழ்க்கையிலும் ஒரு புயல் இன்னமும் அடித்துக் கொண்டிருக்கிறது,அதன் பெயர் தாரிணி’
அவனின் கையெழுத்து தான்.அதே பக்கத்தில் ஒரு ஓரமாய் எழுதியிருந்தான்.

‘என்னடா ஃபீலிங்கா, எனக்கு தான் டா இருக்கணும் அந்த ஃபீலிங்’
தன் கைப்பையில் அதனை வைத்து விட்டு நிமிர அவள் கண்ணில் பட்டாள் அவள்.

இப்போதெல்லாம் அற்புதாவை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போலிருந்தது தாரிணிக்கு. அத்தனை அழகியாய் மாறிவிட்டாள்.ஏற்கனவே நல்ல நிறம் அவளுக்கு.எப்போதும் எளிய ஒப்பனையுடன் இருப்பாள்.இப்போது எல்லாம் இரட்டிப்பாயிருந்தது.

காலேஜில் வகுப்புக்கள் நடத்துவதால் அடிக்கடி அவளை புடவையிலும் பார்த்திருக்கிறாள் தான், ஆனாலும் இப்பொது புடவையை தவிர எதையும் அணியப் போவதில்லை என்ற சபதத்தில் இருந்தாள் போல.

இந்த இரண்டு மாத காலமாய் அவள் செய்யும் அலம்பல்,
‘ஷப்பா இப்பவே கண்ணை கட்டுதே’ என்று புலம்ப வைத்திருந்தது தாரிணியை.
கொஞ்சம் சீண்டிப்பார்க்கலாம் என்றெண்ணி,தன்னிடத்தில் இருந்தபடி அற்புதாவின் மொபைலுக்கு அழைத்தாள். யாருடனோ பேசிக் கொண்டிருக்கிறாள் என்று தெரிந்துமே!

போனை பார்த்தவள் பேசி முடித்தபின் தாரிணியிடம் வர,
“யாரு டி போனில்?”என்றாள் தாரிணி
“எதுக்கு?”
“கேள்விக்கு பதில் கேள்வியா? யாருன்னு சொல்லு”
“உன் அண்ணன் தான்”
“நீயே இங்க வந்து ஒரு மணி நேரம் தான் ஆச்சு.அதுக்குள்ள போன்!இதெல்லாம் ரொம்ப ஓவர் டி சொல்லிட்டேன்”
“அதை நீ அவர் கிட்டையே கேளு…” அவள் கேலியை ரசித்தாள்.
“இன்னிக்கு எதுக்கு என்னை வர சொன்னே தாரிணி?பெண்டிங் வர்க் எதுவுமில்லையே”
“நான் எல்லாத்தையும் முடிச்சிட்டேன்,அப்புறம் எப்படி இருக்கும் டி? உன்னை இப்படியாவது பார்க்கலாம்னு தான்”
“லூசே, அதுக்கு என்னை இத்தனை தூரம் அலைய வைப்பியா!”
“ஹி...ஹி”
“அப்புறம் தாரிணி இனி என்னால இங்க வர முடியாது டி… காலேஜ் வேலையையும் விடலாமா வேண்டாமான்னு யோசிச்சிட்டிருக்கேன்”
“30-60 டைமில் வாழ்க்கையில் பெரிய முடிவெல்லாம் எடுக்க கூடாது அற்புதா”
“என்னது அது 30-60?”
“வெல்...ஹெவ் டு சே தட் இன் தமிழ்”
“அட இவ்ளோ நேரம் பேசினையே...”
“ஆசை அறுபது நாள் மோ…”சொல்லி முடிக்கும் முன்பே பட்பட்டென்று அடிக்க ஆரம்பித்து விட்டாள் அற்புதா.
“அடச்சீ” நீ ரொம்ப கெட்ட பொண்ணு தாரிணி”

அற்புதாவின் இந்த வெட்கப்படும் முகம் பார்க்க அத்தனை அழகாய் இருந்தது.
“உன்னை ஒரு போட்டோ எடுத்து வச்சிக்கிறேன். நீ வேற அடிக்கடி வேலைக்கு வராம மட்டம் போடுறே”

போட்டோவை எடுத்த பின் இவள் போனிலிருந்து பார்வையை நிமிர்த்தி பார்க்க கண்ணன் வந்திருந்தான்.அவன் வாசலில் நிற்க, அற்புதா நின்றிருந்த இடத்திலிருந்து அவனுடன் பார்வையால் பேசிக் கொண்டிருந்தாள்.

‘அடேய் அடங்குங்கடா’
தொண்டையை கனைத்து பார்த்தாள் அப்படியும் அவர்கள் தவத்தை கலைக்க முடியவில்லை.சத்தியசோதனை இதுதானோ!
“அற்புதா அற்புதா”
“என்னடி”அப்போதும் பார்வையை இவள் பக்கம் திருப்பவில்லை,
“உனக்கு ரொம்ப முத்தி போச்சு,நீ கிளம்பு”
இப்போது நன்றாக திரும்பி இவளை பார்த்தவள்,
“அப்படியா!ஓகே,உள்ளே வாங்களேன் கண்ணன்” என்றாள் கணவனிடம்.
“இல்ல கிளம்பலாம் அற்பு.பை தாரிணி”
போய்விட்டனர்!

மனைவியின் தோளில் கைப்போட்டுக் கொண்டு அவன் கார் வரை அழைத்துச் சென்றதை சிசிடிவியில் பார்த்து ரசித்தாள் தாரிணி.

அடுத்த ஒரு மணி நேரம் தோட்டத்தை வலம் வந்த பின்,
“ராம் எனக்கு கொஞ்சம் கம்போஸ்டிலிருந்து மண் எடுத்து கொடு..இந்த கவரில்”
வீட்டிலிருந்த மல்லி செடி பூக்கவே இல்லை, இதை போட்டு தான் பார்ப்போமே!
“பாருங்க கா, எவ்ளோ நல்லா வந்திருக்கு!”அவன் காட்டிய அந்த கறுமையான மண்ணை அப்படியே கையில் அள்ளிக் கொள்ளும் ஆர்வம் வந்தது.

“நாளைக்கு நான் வர மாட்டேன்.கொஞ்சம் பார்த்துக்கோ ராம்”
ஆபிஸ் கதவை பூட்டிவிட்டு கிளம்பினாள்.அவள் வருவதற்காக வழக்கம் போல் தன் காரில் காத்திருந்தான் சரண்.அவள் அமரவும்,
“ஏன் ஒரு மாதிரி இருக்கே தாரிணி?உடம்பு முடியலையா?”
“ஒண்ணுமில்லையே நல்லா தான் இருக்கேன்”
“ம்ம்…”
நம்ப முடியாத பார்வை பார்த்த்வன்,
“மித்து ஆப்பிள் கேட்டான் வாங்கிட்டு போயிடலாம்”
மகன் தன்னிடம் இப்போதெல்லாம் எதுவுமே கேட்பதில்லை என்ற எண்ணம் உண்மைதான் போல. எதுவானாலும் தந்தையிடம் கேட்டுக் கொள்கிறான்.அப்படி இப்படி ஓடிப்போன நாட்களை கணக்கிட்டால், அவன் வந்து ஆறு மாதங்கள் முடிந்திருந்தது.

தான் நினைத்ததை சொல்லலாம் என்று மெதுவாய் பேச்சை ஆரம்பித்தாள்,
“சரண் நீங்க எப்போ அமெரிக்கா போறீங்க?”
அவன் பதில் சொல்லாமல் சாலையில் கவனமாய் இருந்தான்.
“என்னால நீங்க நினைக்கிற மாதிரி அடங்கி நீங்க சொன்னதை மட்டும் கேட்டுகிட்டு இருக்க முடியாது சரண்.நீங்க வேணா இன்னொரு கல்யாணம்…”
‘கீரிச்’
ஹைவேயில் நட்ட நடுவில் காரை நிறுத்தியிருந்தான்.
“இன்னொரு வார்த்தை பேசின பல்லை உடைச்சிடுவேன். வேலை வெட்டி எல்லாம் விட்டிட்டு உன் பின்னாடியே அலையுறேன்னு திமிரில் பேசுறியா?வாயை மூடிட்டு வாடி. மனுசன் உயிரை வாங்கிகிட்டு!”
அவர்களை கடந்து போன வண்டிக்காரன் நிறுத்தி திட்டிவிட்டு போனான் இவனை, சாலையின் நடுவே இப்படி நிறுத்தியிருந்தமைக்கு.

ஏனோ சரண் அப்படி சொன்னது கண்ணீரை வரவழைத்தது.அவளுக்கு முன்பிருந்த உறுதியான மனம் இப்போது இல்லை.சரண் வேண்டும் அவள் வாழ்க்கையில் மித்துவிற்காக மட்டுமாவது என்று சப்பை கட்டு கட்டினாள் தன் மனதினுள்.
——
குழந்தை பிறந்த பின் ஆறு மாதத்தில் அமெரிக்கா திரும்பியிருந்தாள்.சரணிடம் பேசவே இப்போதெல்லாம் நேரமில்லை.காலை இவள் விழிப்பதற்கு முன்பு அலுவலகம் போனான் என்றால் இரவு உறங்கிய பின்பே வருகிறான்.உணவு,உறக்கம்,தாரிணி,குழந்தை எல்லாவற்றையும் மறந்திருந்தான்.

தாரிணிக்கு அது கஷ்டமான காலகட்டம். குழந்தை வளர்ப்பின் ஆரம்ப நிலை.அதுவும் தனியே ஒரு ஊரில். என்னதான் தினமும் அன்னையிடம் பேசினாலும்,மித்து செய்யும் ஒவ்வொரு அசைவையும் சரண் பார்க்க முடிவதில்லையே என்ற ஆதங்கம் இருந்தது.

ஆதங்கம் அவனிடத்தில் பேசுகையில் மட்டும் கோபமாய் வெளிப்பட்டது.அன்றும் எதற்கோ இருவருக்கும் பயங்கர சண்டை!
“வீட்டில் இருக்கவே மாட்றன்னு சொன்னே! இன்னிக்கி லீவ் போட்டு வீட்டிலிருந்தா சண்டை போடுறே! என்ன தாரிணி உன் பிரச்சனை!”
“எதுக்கு இப்ப இத்தனை கோபம் தாரிணி? ஏன் எல்லா விஷயத்துக்கும் இப்படி ஓவர் ரியாக்ட் செய்றே?”
“ நானா ...நானா” அவனிடம் தன் கோப முகத்தை காட்டினாள் அவன் மனைவி.
அவளின் கோதுமை நிற கன்னங்கள் சிவந்திருந்தது!கடைசியில் அவன் மட்டும் மித்துவை ஸ்லிங்கில் மாட்டிக் கொண்டு தனியே நடைபயில சென்றுவிட்டான்.

பிள்ளை வளர்ப்பில் பொறுமை முக்கியம் தானே!அது அவளுக்கு குழந்தையிடம் இருந்ததே ஒழிய கணவனிடம் இல்லை.அந்த குட்டி ஜீவனிடம் கட்டி காப்பாத்தியதை, அவனிடம் கத்தியே கெடுத்தாள்.

“தாரிணி உன் போக்கு கொஞ்சமும் சரியில்லை. என்னை நிம்மதியில்லாம செய்றே டி நீ. இப்ப தானே நடக்க பழகுறான்,விழத் தான் செய்வான்.அதுக்கு ஏன் இத்தனை ஆர்பாட்டம்! அதுக்காக சாப்பாட்டை கூட செய்யாம நாள் முழுக்க உன் பையன் பக்கத்தில் உட்கார்ந்திருந்தா சரியா ஆகிடுமா”
அவன் சொன்னது அவளுக்கு ஏதோ அவன் பாசமில்லாமல் பேசுவதாக தோன்றியது.
‘உனக்கெல்லாம் எதுக்கு டா கல்யாணம்’
மனதில் அவனை வருத்தெடுத்திருக்கிறாள்.

அன்னையிடம் கணவனின் செய்கையை புலம்பியதற்கு, இதெல்லாம் ஒரு பிரச்சனையா என்றார் அவரும்.
“ நாங்களாம் என்ன தினமும் பேசிகிட்டேவா இருந்தோம்?குழந்தையை பாரு தாரிணி. இனி அது மட்டும் தான் உன் கடமை”

‘நான் மட்டும் என்னை அது என் கடமை இல்லைன்னா சொன்னேன்!’ இவர்களுக்கு இதெல்லாம் ஒரு பிரச்சனை போல் தெரியவில்லையா?

“மா என்ன மா பேசுறீங்க? உங்களுக்கு சுத்தியும் சொந்தகாரங்க இருந்தாங்க, மாசத்துக்கு நாலு கல்யாணம் காட்சின்னு போவீங்க. உங்களையெல்லாம் அமெரிக்காவுல கொண்டு வந்து தனியா விட்டா தான் மா என் கஷ்டமெல்லாம் புரியும்”

“ ஆமாடி இந்த ஊரு மாதிரி வருமா? எத்தனை சுத்தம், சுகந்திரம்னு பேசினவ தானே நீயி?”

சரியான பாயிண்டை அன்னை பிடித்தாலும்,
“அதெல்லாம் அப்போ...இப்ப என்னங்குறீங்க? சரி இது நல்ல ஊரு தான் போதுமா? உங்க மாப்பிள்ளை இந்த ஊரை காட்டிலும் நல்லவரு வல்லவரு. நீங்களே மெச்சிக்கோங்க!”

அற்புதா இவள் சொல்லும் புகார்களை கேட்டுக் கொள்வாளே ஒழிய அட்வைஸ் செய்கிறேன் என்று வாயை திறப்பதில்லை.இவை எல்லாம் ஒன்றுக் கூடி தாரிணி ஒரு நிலையில் இல்லை.

சரண் வீட்டில் உள்ள பிரச்சனைகளை வீட்டோடு மறந்து போனான்.அலுவலகம் அவனுக்கு மற்றுமொரு போர்க்களம்.அங்கே உள்ள பிரச்சனைக்கே அவன் அதிகமாய் சிந்திக்க வேண்டியிருந்தது.அதுவும் அந்த ஊரில் அன்னியர்களின் வேலை வாய்ப்புகளை குறைக்க ஏகப்பட்ட திட்டங்கள் தீட்டப்பட்டுக் கொண்டிருக்க இவன் அதிகம் உழைக்க வேண்டியிருந்தது.

சரணின் வாழ்க்கையில் பணமும் முக்கியம் தான்.பெற்றவர்கள் இல்லாமல் சித்தப்பாவின் நன்கொடையால் வளர்ந்தவன் அவன். கிடைத்த இந்த வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள வேண்டிய முக்கியத்துவம் அவனுக்கு புரிந்தது.

ஒரே நேரத்தில் வாழ்க்கையில் இரண்டு பெரிய போராட்டங்களை சந்திக்க நேர்ந்தவன், அவனறியாமல் கொஞ்சம் கொஞ்சமாய் தன் மனைவியின் பிடியை இழந்துக் கொண்டிருந்தான்.







 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
அற்புவும் கண்ணனும் கண்ணாலே பேசி பேசி கொல்றாங்களோ தாரிணியை ?

சரண் & தாரிணி ரெண்டு பேரும் உட்கார்ந்து மனசுவிட்டு பேசியிருந்தாலே பாதி பிரச்சனை முடிஞ்சிருக்குமே!!!
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top