• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

General Audience Happy sm site day darlings(about competition judges)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
ஹாய் மக்களே!

எல்லோருக்கும் அன்பான ஆரோக்கியமான கோலாகலமான... நம் sm site day வாழ்த்துக்கள்...:love::love::love::love::love::love:


எல்லோருக்கும் தோணும்.... இப்படி ஒரு கொண்டாட்டத்துக்கு என்ன அவசியம், அப்படி என்ன நம்ம சைட்ல.... புதுசா பெருசான்னு ?

அதுவும் இன்னைக்கு மானாவாரியாய் சமூகவலைத்தளங்கள் மண்டி கிடக்கு. நாவல்கள் படிக்க நிறைய blogs sites apps ன்னு வந்திருச்சு. எல்லா தளங்களிலும் ரொம்பவும் சிறப்பான கைதேர்ந்த எழுத்தாளர்கள் அவர்களோட திறமையான எழுத்துக்களால் எண்ணற்ற வாசக பெருமக்களை கட்டிப்போட்டு வைசிருக்காங்க. ஆனா மற்ற தளங்களுக்கும் நம் sm தளத்திற்கும் ஒரு பெரிய வித்தியாசம் இருக்குங்க. என்ன தெரியுங்களா?

இங்க வாசகர்கள்தான் எழுத்தாளர்களைக் கட்டி போட்டு வைச்சிருக்காங்க... யாராச்சும் இதை மறுக்க முடியுமா.?

இன்னைக்கு இருக்கிற காலகட்டத்தில யாருடைய திறமையும் யாருக்கும் பாராட்ட கூட நேரமில்லை. அன்றும் அதே 24 மணி நேரம்தான். இன்றும் அதே 24 மணி நேரம்தான். ஆனால் நேரமில்ல

இத்தனைக்கும் அன்னைக்கு தன் மனம் கவர்ந்த கதைக்கும் எழுத்தாளருக்கும் வாசகர்கள் மெனக்கெட்டுதங்கள் கருத்துக்களைக் கடிதம் மூலமா எழுதி அனுப்புவாங்க. பதில் வரலனாலும் நாம சொல்ல நினைத்ததை சொல்லிடோங்கிற ஓர் திருப்தி.

ஆனா இன்னைக்கு கைக்கு எட்டிய தூரத்தில கமெண்ட் பாக்ஸ் இருந்தும் கமெண்ட் போட நேரமில்லை. இன்னும் கேட்டா அன்னைக்கு எல்லாம் வாரத்துக்கோ அல்லது மாதத்துக்கு ஒரு முறைதான் update...இன்னைக்கு நினைக்கும் தருவாயில் விதவிதமாய் ரகம்ரகமாய் latest episodes.

படிப்பவர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டதா இல்லை எழுத்துக்களோட தரம் குறைந்து விட்டதான்னு கேட்டா எனக்கு சத்தியமா பதில் தெரியல?

.இப்படி ஓர் சூழ்நிலையில் சூப்பர் நைஸ்ங்கிற வார்த்தையே என்னை மாறி வளர்ந்து வரும் எழுத்தாளர்களுக்கு பெரிய மேட்டர்.

ஆனா இந்த எண்ணங்களை முற்றிலுமாய் மாற்றி அமைத்தது sm சைட்டின் இந்த புதிய பரிமாணமும் தேடல் போட்டியும்.

அப்பப்பா.... பதில் போட முடியாதளவுக்கு அவ்வளவு கமெண்ட்ஸ் ... வியந்து போகிற அளவுக்கு அத்தனை views and likes.

இதெல்லாம் தாண்டி நம்ம சைட்ல வேறு ஒரு miracle நடந்துது.

sm தள தோழமைகள்

முகம் பார்க்காமல் நண்பர்கள் ஆனோம்

வயது மறந்து மீண்டும் வாலிபம் திரும்பினோம்

காலம் நேரங்களை கடந்து பேசி பழகினோம்

இணையத்தளம் என்கிற கருவி மூலமாக இதயத்தால் இணைந்தோம்.

இறுதியாய் தீண்டாமலே கரம் கோர்த்து ஓர் குடும்பமாய் மாறினோம்

அதற்கான சான்றுதாங்க இந்த சைட் டே கொண்டாட்டம்.

சரியா சொல்லணும்னா இது நம்ம smsite குடும்ப விழா.

எழுத்தாளர்கள் வாசகர்கள்னு துளியளவு கூட வேறுபாடில்லாம எல்லோரும் ஒன்றாய் சேர்ந்து நடத்தின விழா. அதுவும் எல்லோரும் இந்தப் பூமி பந்தோட ஒவ்வொரு மூலையில் இருந்துக்கிட்டு. அதுதாங்க வியப்பின் உச்சம்!

அதாவது தனி தனி புள்ளிகளா தனித்து இருந்தாலும் ஒரே கோலமா smsiteல இணைந்தோம்னு சொல்லணும்.

அப்படி நம்மை இணைத்து வைத்திருக்கும் நம்ம sm சைட்டுக்கு ஒரு பெரிய

ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ.................

இந்த ஒ லண்டன் மாகணத்தில இறங்கி அப்படியே அமெரிக்கா கண்டத்தில தடுக்கி விழுந்து ஒரு லாங் ஜம்ப் பண்ணி ஜப்பானை தொட்டுட்டு நேரா மலேசியாவில குதிச்சு இலங்கைக்கு வந்து தமிழ்நாட்டில தரை தட்டும்.

அதான்டா தமிழன்... எங்கயும் இருப்பான்,.. எங்க இருந்தாலும் அவன் தமிழனா இருப்பான்,..

இப்படி நம்மை வெவ்வேறு இடங்களில் இருந்தாலும் நாம் எல்லோரும் ஓர் புள்ளியில் இணைந்ததிற்கு இன்னொரு முக்கிய காரணி இருக்கு. அதுதான் vne shyama.:love::love::love:

வீணையடி நீ கதையை அத்தனை உயிரோட்டமா எழுதி நம்மை எல்லாம் ஓர் உறவா உணர வைச்ச நம்ம சைட் நிறுவனர் மற்றும் நம் தலைவி @smteam சஷி அக்காவுக்கு ஒரு பெரிய பெரிய பெரிய பெரிய சலாம்.....

இறுதியா நம்ம சைட் டே கொண்டாட்டத்தின் உச்சகட்ட ஓர் அறிவிப்பு..

எப்போதும் நான் என் கதைகள் மூலமா கற்பனையான சில நிழல் கதைநாயகிகளையே அறிமுகப்படுத்தியிருக்கேன். பாரதி கண்ட புதுமை பெண், வீரமான தீரமான அறிவானன்னு ஒரே மாதிரியான பல முகங்கள். ஆனா இன்னைக்கு ரொம்பவே வித்தியாசமா... நம்ம சைட் டே ஸ்பெஷலா சில நிஜ கதைநாயகிகளை அறிமுகப்படுத்த போறேன். அதாவது நிஜ முகங்களை நிஜ பாரதி கண்ட புதுமை பெண்களை

அவங்கதான் நம்ம நடத்தின போட்டிகளின் ஜட்ஜஸ்

ஒரு பக்க கதை போட்டி:

இவங்க தன் இளம் வயதில் டைப்பிஸ்ட்டா அரசுப்பணியில் சேர்ந்து நேர்மையாக வேலை செய்து பின் அவரே தாசில்தாராக உயர்ந்து வேலைகளிலும் வாழ்க்கையிலும் பலதரப்பட்ட இன்னல்களைக் கடந்து தற்போது பணி ஓய்வு பெற்றுவிட்ட போதும் அசறாம அதே உத்வேகத்தோடும் உற்சாகத்தோடும் நமக்கிடையில் வெகுசாதரணமாய் உலவி வரும் ஓர் சாதனை பெண்மணி..

இவங்க கதைகள் படிக்க ஆரம்பித்து குறிகிய காலமே ஆனாலும் எழுதிற எல்லோரையும் பாரட்டனுங்கிற அந்த பரந்த மனப்பான்மை இருக்கு இல்ல.அதுக்கே பெரிய hats off. கொடுக்கணும் இவங்களுக்கு . இவங்க பாராட்டுக்கள்தாம் பல அறிமுக எழுத்தாளர்களுக்கு எழுதிற உத்வேகத்தை கொடுத்திட்டு இருக்கு..

இவங்களை பத்தி இன்னும் சரியா சொல்லணும்னா... நம்ம தலைவர் ஸ்டைல்ல.... இவங்க எப்படி வருவாங்க எப்போ வருவாங்கனெல்லாம் தெரியாது. ஆனா வர வேண்டிய நேரத்தில கரெக்டா வருவாங்க. :love::love::love:

@banumathi jayaraman அது பானுமா. இவங்கதான் நம்ம சிறு கதை போட்டிக்கு தீர்ப்பு வழங்க போற நாட்டாமை ங்கோ.

பட்டிமன்றம் :

அடுத்ததா நான் அறிமுகப் படுத்த போற நாயகி விதவிதமா பலதரப்பட்ட நாவல்களை படிக்கும் ஓர் புத்தக பூங்காவனம்...

பெயரன் பேத்திகள் பார்த்துவிட்ட இந்த நாயகிக்கிட்ட நம்ம பேசும் போது சொன்ன ஆச்சர்யம் என்னன்னா இவங்க மூணாப்பிலேயே புத்தகம் படிக்க ஆரம்பிச்சிட்டாங்களா... இன்னுமும் படிக்கிறாங்க. சும்மா பெயருக்கு இல்ல. அன்றிலிருந்து இன்று வரை புத்தகங்கள் மீதான அதே காதலோடு:love:...

இவங்கள பத்தி இன்னொரு வியப்புக்குரிய விஷயம் இருக்கு. அவங்களோட நாற்பதுகளில் கேன்செர் நோயை எதிர்கொண்டாங்க. சாதாரணமா இல்ல. அசாத்திய துணிச்சலோடு. இன்னைக்கு அதிலிருந்து முழுவதுமாய் மீண்ட நம் நாயகி சொல்றாங்க... புத்தகங்கள்தான் என்னை மீட்டெடுத்துசுன்னு. அந்தளவுக்கு ஆழமா அழுத்தமா அவங்க வாழ்கையில் புத்தகங்கங்கள் பின்னப்பட்டு இருக்கு.

பீனக்ஸ் பறவையாய் இருக்கும் அந்த முகம் தெரியா நாயகி யார் தெரியுங்களா... நம் தள வாசகி... @Chitrasaraswathi
சித்ராம்மா... நம் புதுமையான பட்டிமன்ற முயற்சியில் இன்றைய நாவல்களா அன்றைய நாவல்களா தலைப்பிற்கு வெகுபொருத்தாமான நடுவர்.


பாட்டுப் போட்டி;

ஓர் அழகான கிராமம். அதில ஓர் அழகான குடும்பம். அப்படி ஓர் அழகான குடும்பத்தில இருந்து பிறந்து வளர்ந்து இளமை காலம் தொட்டு புத்தகங்களோடு இயைந்திருந்த இந்த நாயகியோட ஸ்பெஷல் அவங்க இனிமையான குணமும் எளிமையா பழகிற விதமும்தாங்க. வாசகர்கள் தொடங்கி எழுத்தாளர்கள் வரை எல்லோரிடமும் ரொம்பவும் இயல்பா நட்பு பாராட்டிறவங்க, இந்த மாதிரி குணம் இன்றைய காலகட்டத்தில ரொம்பவும் அரிதிலும் அரிது... அவங்கதான் நம்ம ஒன் அன் ஒன்லி பெல் அக்கா...@Manikodi

இவங்கதான் பாட்டு போட்டிக்கு நடுவர். நம்ம பாட்டு போட்டியோட முக்கிய அம்சம் கதை மாந்தர்களோட அந்த பாடல் எந்தளவுக்கு பொருந்துது என்பதுதான். அப்படி பார்த்தா எல்லா கதையில இருக்க கதை மாந்தர்களை பற்றி இவங்களுக்கு ரொம்ப நல்லா தெரியும். அப்படி இருக்க இவங்கள விட பாட்டு போட்டிக்கு ஜட்ஜா வேற யார் இருக்க முடியும். என்ன ஒரே கவலை... ரிசல்ட் சொல்றதுக்குள்ள இவங்க காதுக்கு எந்த டேமேஜூம் ஆகாம இருக்கணும்னு சொல்லி நம்ம அந்த எல்லாம்வல்ல இறைவனை பிராத்திப்போமாக.:p:p:p:p

அடுத்து creativity ஜட்ஜ்

இவங்க மை டார்லிங்:love:... இவங்கள பத்தி நினைச்சாலே கலர் கலரா பட்டாம்பூச்சி பறக்குது. வயசில அம்பதை தொட்டாலும் பேச்சில செயலில சிந்தனையிலன்னு இவங்க என்றும் பதினாறு. கிரியேடிவ்வா கமெண்ட் போடறதில இவங்களுக்கு நிகர் இவங்கதான்.:cool: அன் என்னை மாதிரி இவங்களுக்கும் வேறெங்கும் கிளைகள் கிடையாது. smsiteதான் ஒரே போக்கிடம். ;);)அவங்கதான் நம்ம கிரியேட்டிவ் க்வின் மஹா.:love::love::love: @Maha

இவங்களுக்கு பத்தி முக்கியமா சொல்ல வேண்டிய விஷயம் தமிழ் இவங்களுக்கு தாய்மொழி இல்லைனாலும் தன்னோடு முயற்சியின் மூலமா தமிழ்ல அழகா கமெண்ட் போட்டுட்டு இருக்காங்க. தனியா இதுக்காகவே இவங்களுக்கு applause கொடுக்கணும்.

இவங்க creativity judgingல நிச்சயம் அசால்ட் பண்ணிடுவாங்க. நோ டவுட். ஆனா எனக்கு ஒரே ஒரு கோரிக்கை. :pகலாய்ப்பது மற்றும் கவுன்டர்கள் கொடுப்பது எப்படி? உங்க செந்தமிழால ஒரு புக் ரிலீஸ் பண்ணனும் மஹா டார்லிங்... அது என்னை மாறியான அம்மாஞ்சிகளுக்கு வரும்காலங்களில் உதவிக்கரமா இருக்கும்.

last but not the least.... பெண் குழந்தைகள் கட்டுரைக்கான ஜட்ஜ்

‘கடுகை துளைத்து ஏழ் கடலை புகட்டி குறுக தறித்த குறள்’ இந்த வரிகள் இடைக்காடர் திருக்குறளை பற்றி கூறியது.

கிட்டத்தட்ட எனக்கு இவங்க கதைகளை பற்றி யோசிக்கும் போது இந்த வரிகள்தான் நினைவுக்கு வருது. ரொம்பவும் குறுகிய பக்கங்களில் எவ்வளவு விஷயங்களை புகட்டி இருக்காங்கன்னு யோசிக்கும் போதே வியப்பா இருக்கு.

இவங்கதான் உண்மையான பாரதி கண்ட புதுமை பெண்...

நம்ம @lakshmi2407 ஆதிமா... ஆதி லக்ஷ்மி. நடமாடும் encyclopedia.... இவங்களுக்கு தெரியாத மேட்டரே இல்ல... எந்த profession பத்தி எழுதினாலும் சும்மா அசால்ட் பண்றாங்க... புதுசா எழுத ஆரம்பிச்சேன்னு ஒரு போர்வையில சுத்துவாங்க ஆனா நம்பாதீங்க... நிறைய சிறு கதைகள் எழுதி இருக்காங்க. பெரும் அர்த்தங்களோட.....

அவங்க எழுத்திலயும் சரி... குரலையும் சரி... ஒரு தனி கம்பீரம். பெண்மை எப்படி இருக்கணும்னு ஓர் உதாரணம் அவங்க.. அதோடு இவங்க நிறைய நிறைய படிப்பாங்க. கதைகள் மட்டுமல்லாது நிறைய கட்டுரைகளையும்... ஆக பெண் குழந்தைகள் பாதுகாப்பு பற்றிய கட்டுரையில இவங்க நீதிபதியாக இருப்பதே சிறப்பு. :love:
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
இந்த நாயகிகள் எல்லாம் சொல்ல போவது முடிவல்ல.... தொடக்கம்... ஒளிந்திருக்கும் திறமைகளை திறமையாளர்களை வெளிக்கொணரும் ஓர் சிறிய முயற்சி.... முடிவுக்காகக் காத்திருக்கும் ஒவ்வொரு தோழமைகளுக்கும் ஒரு சின்ன விஷயம்.

வெற்றி என்பது செடியில் துளிர்விடும் மலர். தோல்வி அந்தச் செடியின் அடியில் இருக்கும் வேர்....

மலர் துளிர்க்கும் போது அது அழகா ரசனையா பார்ப்பவர்கள் மனதை ஈர்க்கும்

ஆனால் வேர் யார் பார்வைக்கும் படாது... ரசனையாகவும் இருக்காது... ஆனா அது வளர வளர நம்மை உள்ளுர பலப்படுத்தும்.... எல்லோருக்குள்ளும் அப்படி ஓர் வேர் நிச்சயம் இருக்கும்... வேரில்லாமல் செடியும் இல்லை மலரும் இல்லை.

finally ஒரு சின்ன வேண்டுகோள்

comment போடாத தோழமைகள் இந்த occassionல ஒரு ரெண்டு வரியாவது comment போடும்படி தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறேன்..

Love u my darling sm members:love::love::love::love::love:

:love:HAVE A GREAT SITE DAY:love:

 




Last edited:

Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
Super duper Moni ????
Very very excited ... ennakku ippa thookam varuma theriyavillai... un message parthu enakku goose bumps than....

VNE என்றால் அது கதையை தாண்டிய ஒரு மந்திரம் தான் ... ஒரு வகையான magic எல்லாரையும் கட்டி போட்டது... அது சசி ஜியின் எழுத்து செய்த மாயம்... அது ஒரு போதை வஸ்து... போல எங்களை எல்லாம் அடிமை ஆக்கி இருந்தது என்றா மிகை இல்லை... என்னோடு பயணம் செய்தவர்கள் எல்லோரும் அதை ஒப்பு கொள்வார்கள்...

சசி ஜி உடைய கதையை முதல் முதல் படிப்பவர்கள் அந்த நாயகனையோ இல்லை நாயகியையோ மறக்குறது இல்லை... அவங்களுடைய ever green n best கதாபத்திரத்திம் அவங்க தான்... எனக்கு ஷியாம் தான் best... வேற யாரு வந்தாலும் அவன் எனக்கு ஏற்படுத்திய தாக்கம் ரொம்பவே அதிகம்... அவனால் பாதிக்கப்பட்ட பெண்களில் நானும் ஒருத்தி... அதை ரொம்ப ரொம்ப சந்தோஷமாக சொல்வேன் ... ??

சசி ஜியை இப்படி நான் படாய் படுத்துவதற்கும் இது மட்டுமே காரணம்... ருசி கண்ட பூனை சும்மா இருக்காதாம்... இப்ப என் நிலைமையும் அது தான் ??

இந்த SM site =
Full of positivity
Unity
Integrity with
Creativity ??

ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி இந்த தளத்தில் மட்டும் தான் நான் உறுப்பினர் ... மோனி சொன்ன மாதிரி வேறு எங்கும் கிளைகள் இல்லை??
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
Shinchan ஸ்டைல்ல சொல்லணும்னா “கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டமோ கொண்டாட்டம்” தான்... நமக்கு இவ்வளவு சுதந்திரத்தையும் உரிமையும் கொடுத்த ப்ரியங்கா முரளி அவர்களுக்கு நன்றி...
 




karthika manoharan

அமைச்சர்
SM Exclusive
Joined
May 5, 2018
Messages
2,013
Reaction score
7,730
Location
namakkal
wow .....மோனி....செம(y)(y)(y)

நம்ம சைட்ல பல துறைகள்ல வேலை செய்யறவங்க இருக்காங்கன்னு தெரியும்.ஆனா அவங்களுக்குள்ள இவ்வளவு திறமைகள் இருக்குன்னு இந்த கொண்டாட்டங்கள் தெரியபடுத்திருச்சு.
இதுக்கு காரணம் நம்ம பாஸ் ஷ்யாம் ம், அவனோட பாஸ், நம்மளோட Big Boss சஷிமா ம்.

இந்த விழாவுக்கு ஏற்பாடு பண்ண ப்ரேமாக்கா, தனித்தனியா பிரிச்சு விழா நடத்தி கொடுத்த organisors, த்ரெட் open பண்ணி கொடுத்த தென்றல், போட்டியில கலந்துக்கிட்ட அஞ்சா நெஞ்சங்கள், அவங்களுக்கு கைத்தட்டி உற்சாகப்படுத்தின அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் நன்றிகளும், பாராட்டுகளும்..
 




jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
Hai moni ka..

super beginning....

Happy birth day to you sm site

அட sm site எவ்வுளவு site ல சுத்தினாலும் sm site தாய் வீடு வந்த உணர்வு...

சுதந்திரம் அதே இந்த sm site plus point...

Authors அப்படி big image.. அத உடைச்சு... ஆத்தரை ஆத்தி... Absconding author ஐ தேடி... யுடி வரல... Name list போடுவோம்னு மிரட்டி... அப்பப்பா... இங்கே தான்... இங்கே மட்டும் தான்...

All the best all judges...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top