• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Idaividaatha Innalgal - 12

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

MithraPrasath

SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
274
Reaction score
1,366
Age
31
Location
Bangalore
அத்தியாயம் 12

சுந்தரம், விக்னேஷ் இருவரும் நீலமேக பெருமாள் கோவிலுக்கு சென்றனர். அன்று நடந்த கல்யாணம் ரிஜிஸ்டர் செய்யவில்லை என்பதை ஏற்கனவே தெரிந்து இருந்ததால் அவர்கள் நேராக சென்று கோவில் நிர்வாகத்திடம் பேசினர். கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமராவில் அன்று பதிந்த கல்யாணத்தை தெரிந்து கொள்ள முயற்சித்தனர்.

கோவிலின் முன் வாசலில் இருக்கும் கேமரா மட்டுமே இயங்கி கொண்டிருப்பதும், பின் வாசல் கேமரா இயங்க வில்லை என்றும் தெரியவந்தது. கல்யாணத்திற்கு வந்தவர்கள் அனைவரும் பின் வாசல் வழியாக வந்து இருக்கின்றனர்.

இருந்தாலும் முன் கேமராவில் பதிவானதில் இருந்து அன்று அங்கு மலர் அங்கு வந்தது தெரியவந்தது. மேலும் கல்யாணம் முடிந்த பின்னர் மலரும், கல்யாண பெண் ராஜியும் எதற்காகவோ கோவிலுக்கு வெளியே சென்று இருக்கின்றனர். அதன் பின் சிறிது நேரத்தில் அனைவரும் வேகமாக வெளியே ஓடுவதும் பதிவாகி இருந்தது.

“எல்லாரும் எதுக்கு இவ்ளோ வேகமா வெளில ஓடுறாங்க...?” என்று சந்தேகத்தை கேட்டு கொண்டிருந்தான்.

கோவில் நிருவாக அதிகாரி, “வாசல்ல ஒருத்தருக்கு ஆக்சிடென்ட் ஆகிடுச்சு சார்... அதான்...” என்று அவர் விளக்கம் அளித்தார்.

“யாருக்குன்னு தெரியுமா...?” என்று கேட்டான்.

“கல்யாண பெண்ணுக்கு தான் சார்...” என்று சொல்லவும் சுந்தரமும் விக்னேஷ் இருவரும் அதிர்ந்தனர். குழப்பமாக இருந்தது இருவருக்கும்.

“அத நீங்க நேருல பார்த்தீங்களா..?” என்று கேட்டான் சுந்தரம்.

“நான் பார்க்கல சார்... நான் வெளில வர்றதுக்குள்ள அந்த பொண்ண ஹாஸ்பிட்டல் அழைச்சுட்டு போய்ட்டாங்க...

அங்க இருந்தவங்க கல்யாண பொண்ணுக்கு தான் ஆக்சிடென்ட் ன்னு சொன்னாங்க... அன்னைக்கு ரெண்டு கல்யாணம் நடந்தது., அதுவும் ஒரே நேரத்துல... அதுனால எனக்கு எந்த பொண்ணுக்கு நடந்ததுன்னும் சரியா தெரியல...” என்றார்.

“எந்த ஹாஸ்பிட்டல்..?”என்று சுந்தரம் கேட்டான்.

“பக்கத்துல இருக்க நலம் ஆஸ்பத்திரி தான் சார்...” என்று சொல்லவும்,

“சரி.... வேற ஏதாவது டீட்டைல்ஸ் வேணும்னா நான் வர்றேன். தேங்க்ஸ்..” என்று கூறி அங்கிருந்து கிளம்பினர்.

வெளியே வந்ததும், “இப்போ என்ன பண்ண..?” என்று சுந்தரம் கேட்டான்.

“அங்க போய் தான் விசாரிக்கணும்...” என்று கூறினான் விக்னேஷ்.

“ஹ்ம்ம்... ஓகே...

அப்புறம் நீ மலர் நம்பர் வாங்கின... என்னாச்சு..? அவ எங்க இருக்கான்னு தெரிஞ்சதா..?” என்று சுந்தரம் கேட்டான்.

“அவளோட நம்பர் ஆக்டிவா இல்ல... அந்த நம்பர் கடைசியா இருந்தது தஞ்சாவூர் தான்னு சிக்னல் காட்டுது. எனக்கு தெரிஞ்சு அவ நம்பர இங்கேயே தூக்கி போட்டுருப்பாங்க...” என்று சொல்லவும் சுந்தரம் குழப்பமானான்.

“அந்த ராஜி... அந்த பொண்ணுக்கு தான் ஆக்சிடென்ட் ஆகிருக்கணும்... அதான் அன்னைக்கு மலர் ரொம்ப நேரம் அழுதுட்டே இருந்துருக்கா...” என்று சுந்தரம் உகித்து சொன்னான்.

“இருக்கலாம்.... அதே போல அந்த பொண்ணுக்கு உடம்பு சரி இல்லைன்னு சொல்லி கூட கூட்டிட்டு போயிருக்க வாய்ப்பு இருக்கு... ஏன்னா உன்னோட தங்கச்சி அவங்க கூப்பிடவும் அமைதியா போயிருக்கான்னா இதுவா தான் இருக்கணும் காரணம்...” என்று விக்னேஷ் ஒன்று கூறினான்.

“ஹ்ம்ம்.... எனக்கும் அப்படி தான் தோணுது...” என்று சுந்தரம் சொல்லி கொண்டிருக்க அவனது போன் ஒலித்தது.

ஆனந்த் அழைத்தான். எடுத்து பேசினான்.

“என்னடா சொல்லு...” என்று கேட்டான் சுந்தரம்.

“நான் அந்த பொண்ணு லலிதாவ அவங்க வீட்டுல பத்திரமா விட்டுட்டேன்...” என்று சொல்லி அமைதியானான்.

“ஹ்ம்ம்... சரி நீ வீட்டுக்கு போய்ட்டியா..?” சுந்தரம் கேட்டான்.

சலிப்புடன், “எனக்கு மனமே இல்லடா... வீட்டுக்கு போனா அம்மா கண்டு பிடிச்சுடுவாங்க நடந்தத, என்னோட முகத்த வச்சே...” என்று இறங்கிய குரலில் சொன்னான்.

அவனது சோகம் புரிந்தாலும் என்ன செய்ய என்று நினைத்தான்.

“இப்போ அதுக்காக வீட்டுக்கு போகாம இருப்பியா..? அம்மா அப்போவும் ஏதாவது தப்ப நினைச்சுடுவாங்க... நீ வீட்டுக்கு போ... எல்லாம் நல்லதா நடக்கும்ன்னு நம்பு.

அப்புறம் இன்னொன்னு... நீ இல்ல யாரு சொன்னாலும் சரி, சொல்லலைனாலும் சரி, நான் இந்த கல்யாணத்த நடக்க விட மாட்டேன்...

நீ நம்பிக்கையா இரு... நீயே நடந்தத அம்மா, அப்பா கிட்ட சொல்லாத...

எல்லாம் நல்லதா நடந்த பின்னாடி சொல்லிக்கலாம். இப்போ நீ சாதரணமா இருக்க மாதிரி இரு...” என்று அறிவுரை கூறினான்.

“சரி டா.... ஆனாலும் எப்டிடா என்னால சாதரணமா இருக்க முடியும்..?

உன்னோட தங்கச்சி என்ன கொல்லாம கொன்னுட்டா... மனசாட்சியே இல்லாதவ... திமிருப் பிடிச்சவ...” என்று மனம் தாங்காமல் வாய் விட்டு திட்டினான்.

தங்கையை திட்டவும் அண்ணனுக்கு கோபம் வந்துவிட்டது.

“என்னடா மீனாட்சிய திட்டுற...? அவ சூழ்நிலை என்னவோ...? அத தெரியாம இப்டி பேசாத... உன்னோட இடத்துல மட்டும் இருந்து யோசிக்காத... அதுவும் அவ பொண்ணு... அவ நிலைமைல இருந்தா தான் கஷ்டம் தெரியும்...

அதுவும் என்னோட தங்கச்சிய என்கிட்டயே திட்டாத... எனக்கு அது பிடிக்காது...” என்று சுந்தரம் பொங்கி கொண்டு பேசினான்.

ஆனந்தும் விடாமல், “நான் அப்டி இருக்கேனா... அப்போ சார் எப்டி இருக்கீங்க..? நீயும் உன்னோட இடத்துல இருந்து தான் யோசிக்குற... என்னை பத்தி யோசிக்குறியா..?

சுயநலவாதி... உனக்கு உன்னோட குடும்பம் மட்டும் தான் முக்கியம்... நான் மூணாவது மனுஷன் தான... போடா..” என்று கோபமாக சொன்னான்.

அவர்கள் போடும் இந்த சிறுபிள்ளைதனமான சண்டை பார்த்து விக்னேஷ் தான் சற்று எரிச்சல் அடைந்தான்.

“என்னடா ரெண்டு பேரும் விளையாடுறீங்களா..? சின்ன பசங்க மாதிரி பேசிட்டு... பேசாம வச்சுருங்க போன... இல்ல ரெண்டு பேரையும் அடிக்க வேண்டிருக்கும்...” என்று கறாராக அதே நேரத்தில் கேலியாகவும் சொன்னான்.

சுந்தரம் சின்ன பிள்ளை போன்று போனை விக்னேஷிடம் திணித்தான்.

“அப்போ நீயே உன் ப்ரெண்ட் கிட்ட பேசு.... பேசி வைக்க சொல்லு... நான் பேசல...” என்று சொல்லி முகத்தை திருப்பி கொண்டான்.
 




MithraPrasath

SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
274
Reaction score
1,366
Age
31
Location
Bangalore
விக்னேஷ், “சிரிப்பு தாண்டா வருது... நீங்க பண்றத பார்த்தா...” என்று சிரித்தான்.

“டேய்... நான் உங்களுக்கு காமெடி ஆய்ட்டேன்...” என்று சலித்து கொண்டான் ஆனந்த்.

“மறுபடியும் ஆரம்பிக்காத... தாங்க முடியல...” என்று வாய்விட்டு சிரித்தான் விக்னேஷ்.

“சரி...சரி... இப்போ எங்க இருக்கீங்க..? எப்போ ஊருக்கு வருவீங்க...?”

“நாங்க இப்போ தான் கோவில் ல விசாரிச்சு முடிச்சுருக்கோம்... அடுத்து ஹாஸ்பிட்டல் போய் விசாரிக்கணும்... அதுனால எப்போ வருவோம்ன்னு தெரியாது...” என்று விக்னேஷ் சொன்னான்.

“எதுக்கு ஹாஸ்பிட்டல்...?” என்று தெரியாததால் கேட்டான்.

“கோவில் வாசல் ல அன்னைக்கு ஆக்சிடென்ட் நடந்துருக்கு... அதுவும் கல்யாண பொண்ணுக்கே...

இங்க அந்த பசங்க பத்தி எதுவும் தெரிஞ்சுக்க முடியல... அதான் ஹாஸ்பிட்டல் போய் விசாரிச்சா ஏதாது தகவலும் கிடைக்கும்.., அவனோட முகமும் கிடைக்கும்... அப்போ தான் அவன வச்சு மலர் எங்க இருக்கான்னு கண்டு பிடிக்க உதவியா இருக்கும்...” என்று தெளிவாக எடுத்து சொன்னான் விக்னேஷ்.

“ஒஹ்... சரி... எந்த ஹாஸ்பிட்டல்...?”

“நலம் ஹாஸ்பிட்டல்...” என்று யோசித்து கொண்டே சொன்னான் விக்னேஷ்.

“அப்டியா... அங்க எனக்கு தெரிஞ்ச டாக்டர் வேலை பார்க்குறாங்க... நான் சொல்லவா உதவி பண்ண சொல்லி...?” என்று கேட்டான்.

“டேய்.. நானே போலீஸ்டா... நான் கேட்டாலே சொல்ல போறானுங்க... இதுக்கு எதுக்கு உதவி...?” என்று தன்னை போலீஸ் என்று ஒரு முறை ஞாபக படுத்தினான்.

“ஆமாம் மறந்து போச்சு... சரி...

ஊருக்கு வரவும் பேசுங்கடா... மறக்காம மீனாட்சி என்ன பண்றான்னு ஒருக்க பார்த்துட்டு வாங்க...

அதே போல அவளுக்கு பாதுகாப்புக்கு ஆள் ஏற்பாடு நீ பண்ணிடு...” என்று ஆனந்த் விக்னேஷ்க்கு உத்தரவு போடுவது போல சொன்னான்.

“டேய்.. என்ன நினைச்சுட்டு இருக்க..? போலீஸ் உங்க வீட்டு வேலைக்காரங்களா..? போடா... போன வை...” என்று திட்டி கட் செய்தான்.

சுந்தரம் புரியாமல், “என்ன சொன்னான்...?” என்று கேட்டான்.

“உன் தங்கச்சிக்கு போலீஸ் பாதுகாப்பு போடவாம்...” என்று கோபமாக சொன்னான்.

சுந்தரம் சும்மா இல்லாமல், “போட்டா நல்லா தான் இருக்கும்...” என்று கிண்டலுக்கு சொல்ல,

இடுப்பில் கை வைத்தவாறு சுந்தரத்தை முறைத்து கொண்டே, “நான் போலீஸ் மாதிரி இல்லாம உங்க ப்ரெண்டாவே நடந்துக்குறத அதிகமா எடுத்துகுறாதீங்க... அப்புறம் வேற மாதிரி இருக்கும் என்னோட நடவடிக்கை...” என்று அவன் மிரட்டும் தோணியில் பேசினான்.

ஆனாலும் சுந்தரம் அவனை பார்த்து கிண்டலாக, “ஓ...” என்று கூறி சிரித்தான். அவன் கிண்டல் செய்வது புரிந்தாலும் விக்னேஷ் அவன் கஷ்டத்தை மறந்து சிரிப்பதை நினைத்து சந்தோஷ பட்டான்.

அங்கிருந்து கிளம்பி நலம் ஹாஸ்பிட்டலுக்கு சென்றனர். அது பெரிய ஹாஸ்பிட்டல். அங்கு சென்று ரிசப்ஷனில் நின்றிருக்கும் போது விக்னேஷ்க்கு கால் வந்தது. அவன் சுந்தரத்தை கேட்க சொல்லி விட்டு பேச சென்று விட்டான்.

சுந்தரம் அங்கிருந்த பெண்ணிடம், “எங்களுக்கு ஒரு தகவல் வேண்டும்... அதுக்காக விசாரிக்க வந்துருக்கோம்... போன வாரத்துக்கு முந்தின வாரம் உங்க ஹாஸ்பிட்டல் ல அட்மிட் ஆன ஆக்சிடென்ட் கேஸ் பற்றி தெரிஞ்சு கொள்ள வந்துருக்கோம்...” என்று கூறினான்.

“நீங்க யாரு...? எதுக்காக கேட்குறீங்க..?” என்று அந்த பெண் கேட்டாள்.

அவன் யோசித்து விட்டு, “நாங்க போலீஸ்... ஒரு கேஸ் விசாரணைக்காக வந்துருக்கோம்..” என்று சொல்லவும், அந்த பெண் சுந்தரத்தை ஏற இறங்க பார்த்தாள்.

ஒரு வேளை நம்பலையோ...? என்று சந்தேகம் வந்தாலும் அதை காட்டி கொள்ளாமல், “என்னம்மா...? என்ன...?” என்று கேட்டான்.

“நிஜமா போலீஸ் தானா..? வேட்டி கட்டி வந்துருக்கீங்க... பார்த்தா போலீஸ் போல தெரியலையே... ஊரு காரங்க போல தெரியுது... ” என்று சந்தேகத்தை சொன்னாள்.

“ஏன்மா... போலீஸ் வேட்டி கட்ட கூடாதா..?”என்று கூறி கொண்டிருக்க,

அப்போது அங்கு விக்னேஷ் வந்து சேர்ந்தான். அவன் தன்னுடைய கார்டை எடுத்து காண்பித்தான். அதை பார்த்த உடன் அந்த பெண், “சாரி சார்... யாருக்கும் தகவல் சொல்லணும் னா நல்லா விசாரிச்சுட்டு தான் கொடுக்கணும்... அதான் கேட்டேன்.. சாரி...சாரி...” என்று சுந்தரத்திடம் மன்னிப்பு கேட்டாள்.

சுந்தரம் முறைத்து கொண்டு நின்று இருந்தான்.

விக்னேஷ், “முதல்ல பார்த்து டீட்டைல்ஸ் சொல்லுங்க...” என்று சொன்னான்.

அந்த பெண் டேட் மற்றும் சில தகவல்களை கேட்டு விட்டு கம்ப்யூட்டரில் செக் செய்தாள். சிறிது நேரத்திற்கு பிறகு, “சார் அன்னைக்கு மூணு பெண்கள் ஆக்சிடென்ட் கேஸ் ல அட்மிட் ஆகிருக்காங்க... நீங்க அவங்க பேரு சொன்னா தான்...” என்று இழுத்தாள்.

“அந்த பொண்ணு பேரு ராஜி...” என்று சுந்தரம் சொன்னான்.

மறுபடியும் செக் செய்தாள்., “இல்ல சார்... அந்த நேம் ல யாரும் அட்மிட் ஆகல...” என்று சொல்லவும் குழம்பினார்கள் இருவரும்.

பின் சுந்தரம் யோசித்து விட்டு, “கல்யாண பொண்ணு... ஏஜ் இருபது இருக்கும்... நீங்க மறுபடியும் செக் பண்ணுங்க...” என்று சொன்னான்.

பின் செக் செய்தவள், “ஹ்ம்ம்.... நீங்க சொல்ற மாதிரி ட்வென்டி ஒன் ஏஜ் ல ஒரு பொண்ணு அட்மிட் ஆகிருக்காங்க...” என்று சொல்லி முகத்தை பார்த்தால் அந்த பெண்.

இருவரது முகத்திலும் சிரிப்பு வந்தது அப்போது.

விக்னேஷ், “அன்னைக்கு சிசி டிவி புட்டேஜ் நான் பார்க்கணும்...” என்று சொன்னான்.

“ஓகே சார்... நான் மேனேஜ்மென்ட் க்கு தகவல் சொல்லிடுறேன்...”என்று சொல்லி விட்டு போன் செய்தாள்.

விக்னேஷ், “நீ போய் அந்த பொண்ணுக்கு பார்த்த டாக்டர், அப்பறம் அங்க இருந்த நர்ஸ், அப்பறம் வார்ட் பாய் எல்லார் கிட்டயும் விசாரி, அங்க என்ன நடந்ததுன்னு.... நான் போய் சிசி டிவி புட்டேஜ் பார்க்குறேன். அப்டியே அவனோட போட்டோவ வாங்குறேன்.... சரியா...?” என்று கேட்டான்.

“சரி...”என்று கூறி அவனும் அவசர சிகிச்சை பிரிவுக்கு சென்றான். அங்கிருந்த நர்ஸ் அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் உள்ளே நோயாளி ஒருவரை பார்த்து கொண்டிருப்பதாக கூறி வெயிட் பண்ண சொன்னாள்.
 




MithraPrasath

SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
274
Reaction score
1,366
Age
31
Location
Bangalore
அன்று அப்போது டுயுட்டியில் இருந்தவர்கள் யார் யார் என்று தெரிந்து கொண்டு அவர்கள் எல்லாரிடமும் விசாரித்தான். அன்று இருந்த நர்ஸ் வந்து தனக்கு எதுவும் ஞாபகம் இல்லை என்று கூறிவிட்டாள்.

வார்ட் பாயிடம் விசாரித்தான்.

“எது அந்த கல்யாண கோலத்துல வந்த பொண்ணு.... அந்த பொண்ணா சார்...?” என்று ஞாபக படுத்தினான்.

“ஹ்ம்ம்...” என்று கூறிவிட்டு, சுந்தரம் தனது போனை எடுத்து மலரின் போட்டோவை காட்டினான் அந்த வார்ட் பாயிடம்., “நீ இந்த பொண்ணு பார்த்தியா அன்னைக்கு...? கூட வந்துருந்தாளா...?”

அவன் யோசித்தான்.

“ஹ்ம்ம்... உனக்கு தெரிஞ்சத சொல்லு....” என்று சொன்னான்.

“ஆமாம் சார் வந்துருந்தது இந்த பொண்ணும்.... இந்த பொண்ணு மட்டும் தான் கூட வந்தததுல பொண்ணு... மற்ற எல்லாருமே பசங்க. இந்த பொண்ணு தான் ரொம்ப அழுதுட்டு இருந்தது. அந்த பசங்க எல்லாருமே இந்த பொண்ண தான் திட்டிட்டு இருந்தாங்க...”

சுந்தரம் குழப்பமாக, “ஏன், எதுக்குன்னு உனக்கு தெரியுமா..?” என்று கேட்கவும்,

“அந்த பொண்ணு தான் ஆக்சிடென்ட் க்கு காரணமாம்... அதுக்கு எல்லா பசங்களும் திட்டிட்டு இருந்தாங்க...”

“எத்தனை பேரு வந்தாங்க..?”

“அது சார்....” என்று மண்டையை சொரிந்தான். சுந்தரம் புரிந்து கொண்டு,

“சரி... ஓகே, தேங்க்ஸ்.” என்று சொன்னான்.

“எதுக்கு சார் விசாரிக்குறீங்க..?” என்று கேட்டான் அவன்.

மலரின் போட்டோவை காட்டி, “இந்த பொண்ண காணோம்... அதான் விசாரிக்க வந்தோம். அன்னைக்கு என்ன நடந்ததுன்னு விசாரிக்க வந்துருக்கோம்..” என்று சொன்னான்.

அவன் கண்களை விரித்து “ஒஹ்...” என்று கூறிவிட்டு, “அன்னைக்கு இந்த பொண்ண ரெண்டு பசங்க வலுகட்டாயமா வெளில போக சொல்லி தொரத்தி விட்டானுங்க... இத்தனைக்கும் அந்த பொண்ணு தான் பணம் கட்டுச்சு... ஆனாலும் இங்க இருக்க விடல...” என்று அவன் சொல்லவும் சுந்தரம் கோபம் கொண்டான். ஆனால் குழப்பமானான்.

ஒருவேளை அந்த பெண்ணுக்கு ஏதாவது ஆகிருக்குமோ..? அதனால் தான் கடத்தி சென்று இருப்பார்களோ..? என்று சந்தேகம் வந்தது.

“ஆமாம் அந்த ஆக்சிடென்ட் ஆன பொண்ணுக்கு என்ன ஆச்சு..?” என்று கேட்டான்.

“அதெல்லாம் எனக்கு தெரியாது சார்... ஆனால் அன்னைக்கே டிஸ்சார்ஜ் பண்ணிட்டு போய்ட்டாங்க..” என்று சொல்லி கொண்டிருக்கும் போதே அங்கு நர்ஸ் வந்து, “சார் டாக்டர் ப்ரீ ஆகிட்டாங்க... உங்கள கூட்டிட்டு வர சொன்னாங்க...” என்று சொன்னாள்.

“ஓகே...” என்று கூறி உள்ளே சென்றான்.

லேடி டாக்டர் இருந்தார். சென்று பொதுவாக விஷ் பண்ணினான். பின் விசாரித்தான்.

“அந்த பொண்ணுக்கு பெருசா ஒன்னும் இல்ல சார்... தலைல அடி பட்டு இருந்தது. ட்ரிப்ஸ் தான் போட்டோம்.

அன்னைக்கு இங்கயே இருந்துட்டு மறுநாள் கூட்டிட்டு போக சொன்னேன். அவங்க அவசரம்ன்னு சொல்லி அன்னைக்கு நைட்டே டிஸ்சார்ஜ் பண்ணி கூட்டிட்டு போய்ட்டாங்க...”

“ஓகே.... அந்த பொண்ணுக்கு வேற எந்த பிரச்சனையும் இல்லையே...? இல்ல என் கேட்குறேனா தலைல அடி பட்டுருக்கு... பின்னாடி ஏதாவது பிரச்சனை வர வாய்ப்பு இருக்கான்னு தெரிஞ்சுக்க தான்...” என்று மறுபடியும் கேட்டான்.

“இல்ல சார்... அந்த பொண்ணுக்கு நாங்க ஸ்கேன் எடுத்து கூட பார்த்துட்டோம்... எந்த பிரச்சனையும் இல்ல..., அதுனால தான் நாங்க அவங்க அன்னைக்கே டிஸ்சார்ஜ் பண்ணனும்ன்னு கட்டாய படுத்தவும் சரி சொல்லி அனுப்பினோம்...”

“அவங்க கூட்டிட்டு போகும் போது அந்த பொண்ணு மயக்கமா இருந்தாங்களா..? இல்ல..?” என்று இழுத்தான்.

“இல்ல சார்.. அந்த பொண்ணு கண்ணு முழிச்ச பின்னாடி தான் இங்க இருந்து அனுப்புவோம்ன்னு சொல்லி அனுப்பினோம்...”

“ஓகே டாக்டர்... ரொம்ப தேங்க்ஸ்.” என்று கூறி விட்டு எழுந்தான்.

“அன்னைக்கு அந்த பொண்ணோட ரிப்போர்ட் அவங்க வாங்காமலே போய்ட்டாங்க... அது இருக்கு தரவா சார்...?” என்று அந்த டாக்டர் கேட்டார்.

“ஹ்ம்ம் ஓகே தாங்க டாக்டர்... அது யூஸ் புல்லா இருக்கும்...” என்றான் சுந்தரம்.

அந்த டாக்டர் அங்கிருந்த நர்சிடம் சொல்லி அந்த ரிப்போர்ட்டை எடுத்து வர சொன்னார். நர்ஸ் எடுக்க செல்லவும், “நான் வெளில வெயிட் பண்றேன்.. கொடுக்க சொல்லுங்க டாக்டர்...”

“ஓகே சார்...”

“தேங்க்ஸ் டாக்டர்...” என்று கூறிவிட்டு வெளியே காத்திருந்தான்.

சற்று நேரத்தில் நர்ஸ் வந்தாள். எழுந்து வாங்கி, “தேங்க்ஸ்...” என்று கூறி திரும்பும் போது ஒரு பெண் மீது மோதி விட்டான்.

அந்த பெண் நழுவி விழ போக, அவன் அந்த பெண்ணை கை பிடித்து நிறுத்தினான். ஆனால் அந்த பெண்ணின் நழுவும் போது அவளது காலணி அவனது வேட்டியையும் சேர்த்து நழுவ விட்டுவிட்டது. வேட்டி அவிழ்ந்தவுடன் சட்டென அதை பிடித்து எடுத்து அங்கேயே கட்டினான்.

அப்போது அந்த பெண், “சாரி.. அண்ட் தேங்க்ஸ்...” என்று சொன்னாள். சுந்தரத்திருக்கு அது எதுவும் கேட்கவில்லை. விக்னேஷ் அங்கு வந்துட்டான். அவன் தூரத்தில் இருந்தே நடந்தை கவனித்து இருந்தான். அங்கிருந்த அனைவருக்கும் சிரிப்பாய் இருந்தது ஆனால் வெளியில் காட்டாமல் அமைதியாக நின்றிருந்தனர்.

அவன் சும்மா இருக்காமல் சுந்தரத்தின் காதருகில் சென்று, “பெண்ணை காப்பாற்ற போய் மானம் போச்சே...” என்று மெதுவாக சொல்லி அவனை நக்கலடித்தான்.

சுந்தரம் முறைப்பாய் அவனை திட்டினான். அந்த பெண்ணை பார்த்து, “என்னம்மா... கொஞ்சம் கூட பார்த்து நடக்க தெரியாதா..?” என்று சொல்லவும்,

“நாங்க ஒழுங்கா தான் நடந்துட்டு இருக்கோம்... நீங்க தான்...” என்று அவனை ஏற இறங்க பார்த்து கொண்டே சொல்லி, அடக்க முடியாமல் அவள் சிரிக்க, அங்கிருந்த அனைவருமே சிரித்து விட்டனர்.

சுந்தரத்திற்கு கோபம் வந்துவிட, “என்ன பொண்ணு நீ..?”என்று கூறி பல்லை கடித்தான்.

“நீ என்ன ஆம்பள... ஒரு வேட்டி கூட ஒழுங்கா கட்ட தெரியல...” என்று அவளும் பதிலுக்கு பதில் அவனை கேவல படுத்தவே சொன்னாள்.

சுந்தரம் தான் கோபத்தில் முறைத்து பார்த்தான். விக்னேஷ் சுந்தரத்தின் கையை பிடித்து, “வா போகலாம்...” என்று இழுத்து சென்றான்.

வெளியே வந்ததும் கோபமாக விக்னேஷ் கையை உதறி விட்டான். “என்ன நீ... எதுவுமே சொல்லாம, எதுக்கு கூட்டிட்டு வந்த..? என்னோட மானத்தையே வாங்கிட்டா... ச்ச...” என்று சொல்லி கோபமாக அருகில் இருந்த வண்டியின் மீது குத்தினான்.

“டேய்...! எதுக்கு அங்கயே இருந்து இன்னும் மானம் போறதுக்கா..? அந்த பொண்ணு தான் கூட கூட பேசி உன்னை அசிங்க படுத்துதுல, அப்பறம் ஏன் அங்க நிற்கணும் ன்னு தான் இழுத்துட்டு வந்துட்டேன்...” என்று சொன்னான்.

“நீயெல்லாம் போலீஸ்.... நான் இத்தனைக்கும் அங்க நானும் போலீஸ் ன்னு சொன்னேன்... நினைக்கவே அசிங்கமா இருக்கு..” என்று சொல்லி கொண்டே தலையில் கைவைத்தான். விக்னேஷ் சிரித்தான்.

“என்னடா சிரிக்குற... உனக்கு நடந்தது தெரியாது... அந்த பொண்ணு தான் காரணம் நடந்ததுக்கு.... அதுவும் அந்த பொண்ணு எப்டி பேசுது..? என்னம்மோ எனக்கு தான் வேட்டி கட்ட தெரியாதுன்னு சொல்லுது.. அந்த பொண்ணுக்கு தான் ஒழுங்கா நடக்க தெரியல...

எவ்ளோ திமிரு பிடிச்ச பொண்ணா இருக்கு... இதுவரைக்கும் இப்டி ஒரு திமிரு பிடிச்ச பொண்ண பார்த்ததே இல்ல.... ச்ச...” என்று கோபமாக திட்டி கொண்டிருந்தான்.

“அதெல்லாம் சரி... விடு இப்போ... அது தான் திமிரு பிடிச்ச பொண்ணா இருக்குல... அது கூட ஏன் வம்பு... வா போகலாம்...” என்று சொல்லி அவனை சமாதான படுத்தினான்.

“எனக்கு மனசே கேட்க மாட்டேங்குது... போடா...” என்று எரிச்சலாக கூறினான். விடாமல் மறுபடியும், “ஒரு சாரி கூட கேட்கல அந்த பொண்ணு... அசிங்கமா போச்சு எல்லார் முன்னாடியும்..” என்றான்.

“ஏய்...! சாரி கேட்டுச்சு, உனக்கு தான் கேட்கல... நீ விடு அத.. அதுவும் அங்க இருந்ததே ஒரு அஞ்சு ஆறு பேரு தான்... அவங்க யாரையும் இனி பார்க்க மாட்ட... அப்புறம் என்ன...?” என்றான் பொறுமை இழந்து.., ஆனால் சுந்தரம் ஏற்காமல் கோபமாகவே இருந்தான்.

“இப்போ வர்றியா...? இல்ல நான் போகவா..? இங்கயே இருந்து சண்டை போட்டுட்டு வா... நான் கிளம்புறேன்..” என்று சொல்லி வண்டியில் ஏறினான். அவனும் வேறு வழியின்றி வண்டியில் ஏறினான்.
 




MithraPrasath

SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
274
Reaction score
1,366
Age
31
Location
Bangalore
சாப்பிட ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தினான் விக்னேஷ். சாப்பிட்டு வெளியே வந்ததும் அழகனுக்கு கால் செய்தான் சுந்தரம்.

“ஹலோ... அண்ணா...”

“ஹ்ம்ம்... எப்டி இருக்கா மீனாட்சி..? எதுவும் பார்த்து பேசுனியா..? எதுவும் சொன்னாளா..?” என்று ஆரவமாக கேட்டான்.

“இல்ல அண்ணா... அக்கா கிட்ட என்னை போகவே விட மாட்டுது இந்த பாட்டி... அதுவும் மீறி நான் பேச போய்ட்டா அதுவும் வந்துடுது. என்னை பேசவே விடாம அது அக்கா கிட்ட பேசி அக்காவ அது கட்டு பாட்டுக்குள்ள வச்சுருக்கு...” என்று அவன் சொன்னான்.

சுந்தரம் கோபமானான். விக்னேஷ் கவனித்து கொண்டிருந்தான், உடனே அவன் சுந்தரத்தை போனை ஸ்பீக்கரில் போட சொல்லி கேட்டான்.

“அதுமட்டுமா... நான் உங்க கூட என்ன பேசுறேன்.., அக்கா கிட்ட என்ன பேசுறேன்னு ஒட்டு கேட்டுட்டு போய், மாமா கிட்ட சொல்லுது...” என்று சொல்லவும்,

“மீனாட்சிய விடாம கவனி... பாட்டி அசந்த நேரம் நீ போய் அக்கா கிட்ட பேசு... அவ எதுக்கு ஒத்துக்கிட்டான்னு கேட்டு பாரு...” என்று விக்னேஷ் சொன்னான்.

“அண்ணா, பாட்டி என்னை பேசவே விடாம அது ஏதேதோ சொல்லுது...” என்று தன்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்று வருந்தினான்.

“பாட்டி பேசினா என்ன...? நீயும் பேசிட்டே இரு... அதுல உனக்கு எந்த பிரச்சனையும் இருக்கா..? அக்கா மாறனும் ல...?” என்று சுந்தரம் கேட்டான்.

“ஹ்ம்ம்..” என்றான் அழகன் அமைதியாக.

“அப்போ நீ அக்கா கிட்ட எப்டி பேசினா மாறுமோ அப்டி பேசு... பாட்டி என்ன சொன்னாலும் சரி நீ பேசிட்டே இரு..” என்று சுந்தரம் சொன்னான்.

“ஆமாம். அது போல நீ பாட்டியும், உங்க மாமாவும் என்ன திட்டம் போட்டுறாங்க... என்ன பேசிக்குறாங்க... எல்லாம் நீயும் மறைமுகமா கேட்டு சொல்லு...” என்று விக்னேஷும் சொன்னான்.

“சரிங்க அண்ணா...” என்று ஒரு தெளிவுடன் சொன்னான்.

பின்னர் அங்கிருந்து கிளம்பி ஊருக்கு சென்றனர்.

இரவு நேரம் மீனாட்சியை தனியே சந்தித்த அழகன், எதற்கு கல்யாணத்திற்கு ஒத்து கொண்டாள் என்று கேட்டு கொண்டிருந்தான். அதற்குள் அங்கு பாட்டி வந்து விட,

“நாங்க தனியா இருந்தா உனக்கு பொறுக்காதே..” என்று முறைத்து கொண்டு நின்றான்.

“நான் உங்க அக்காக்கு சாப்பாடு கொடுக்க தான் வந்தேன்...” என்று சலித்து கொண்டே அங்கயே அமர்ந்தார் அவர்கள் பேசுவதை கேட்க.

மீனாட்சி ஆனால் எதுவும் பேசவே இல்லை. அதை பார்த்து பாட்டிக்கு சற்று நிம்மதியாக இருந்தது.

“என்ன அக்கா எதுவுமே சொல்லவும் மாட்டுற... கேட்கவும் மாட்டுற... என்ன தான் ஆச்சு..? எங்க எல்லார பற்றியும் உனக்கு கவலையே இல்லேல...” என்றான். அப்போதும் அவள் அமைதியாக எதையோ பறிகொடுத்தது போல அமர்ந்திருந்தாள்.

“அங்க மலர் அக்காவ யாரோ கடத்திட்டு போய்ட்டாங்க.. ஆனா உனக்கு அதெல்லாம் முக்கியம் இல்ல.. உனக்கு உன்னோட கல்யாணம் தான் முக்கியம்... அப்டி தான..?” சுருக்கென்று சொன்னான்.

அப்போது தான் மீனாட்சி கவனித்தாள். சட்டென திரும்பினால்,

“என்ன சொன்ன...? மலர கடத்திட்டாங்களா..?” என்று அதிர்ச்சியோடு கேட்டாள்.

வடிவுக்கும் அதிர்ச்சியாக இருந்தது. இருந்தாலும் அவன் சொல்வதை நம்பவில்லை. மீனாட்சியை மாற்ற அப்படி சொல்கிறான் என்று நினைத்தார். மீனாட்சி அழுவதை நிறுத்தி, “என்ன நடந்ததுன்னு சொல்லு..” என்று கேட்டாள்.

உடனே வடிவு, “ஏய்... அவன் சொல்றத நம்பாத... அவன் உன்னை ஏமாத்துறான். உன்னை இங்க இருந்து கூட்டிட்டு போக அப்டி ஒன்னு சொல்லி நடிக்குறான்.” என்று சொல்லி மீனாட்சியை திசை திருப்ப நினைத்தார்.

ஆனால் மீனாட்சி அதை கேட்காமல் அழகன் கூறியதையே கேட்டு கொண்டிருந்தாள். இது இப்படியே சென்றால் அவளை இங்கிருந்து அழைத்து சென்று விடுவான் என்று அவருக்கு தோன்றியது. வலுக்கட்டாயமாக அழகனை பேச விடாமல் செய்து அங்கிருந்து அழைத்து சென்றார்.

அவனுக்கு சாப்பாடு பரிமாறி விட்டு மெதுவாக பரமுவை பார்க்க சென்றார். அவனிடம் அனைத்தையும் சொல்லி கொண்டிருந்தார். பரமுவும் அவரை “அப்படியெல்லாம் நடக்காது, நடக்கவும் விட மாட்டேன்...” என்று தைரியம் சொல்லி கொண்டிருந்தான். மேலும், “இனி அழகான மீனாட்சி கிட்ட பேச விடாத...” என்று கட்டளை இட்டு கொண்டிருந்தான்.

இதை மறைமுகமாக அழகன் கவனித்தான். அவனுக்கு அவர்கள் பயப்படுவதை பார்க்கவும் சந்தேகமாக இருந்தது. மீனாட்சி அக்காவை மாற்ற இதுவே சரியான வழி என்று நினைத்து கொண்டு படுக்க சென்றான்.

மறுநாள் காலை, காலை ஆறு மணிக்கே பஸ் ஸ்டாண்ட் சென்றான் சுந்தரம், சிவாவை கூப்பிட. அங்கு நின்று கொண்டிருக்கும் போது, அழகன் கால் செய்தான். எதுவும் பிரச்சனையோ என்று பதறி கொண்டு எடுத்தான்.

“என்னடா அழகா... என்ன எதுவும் பிரச்சனையா..?” என்று பதறி கொண்டு கேட்டான்.

அவனது குரலில் சந்தோசம் கூத்தாடியது. அவன் சிரித்தான். சுந்தரம் மேலும் குழம்பினான்.

“என்னடா..” என்றான் பதட்டத்துடனே,

“அண்ணா...! ரொம்ப சந்தோஷமான விஷயம்... மீனாட்சி அக்காவ எத சொல்லி சம்மதிக்க வச்சுருக்காங்கன்னு தெரிஞ்சு போச்சு...

அதுவும் எவ்வளவு பெரிய பொய்ய சொல்லிருக்காங்க... அத எப்படி அக்கா நம்புச்சுன்னு தான் தெரியல...

எனக்கு இத கேட்கவுமே அப்டியே ஒரு நிமிஷம் ஆடி போயிட்டேன்.”என்று அவன் விடாமல் பேசி கொண்டிருந்தான்.

சுந்தரம் ஆர்வமாகவும் சந்தோஷமாகவும் என்ன என்று கேட்டு கொண்டிருந்தான்.

அப்போது பின்னாடி இருந்து “அண்ணா...!” யாரோ அழைக்க, யார் என்று திரும்ப, அதிர்ச்சியடைந்தான்.

அங்கு மலர் நின்றிந்தாள்...

தொடரும்....
 




Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,488
Reaction score
29,223
Age
59
Location
Coimbatore
அருமை ? ஆனால் புதிர்களை விரைவில் விடுவித்தால. நன்றாக இருக்கும்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top