• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Idaividaatha Innalgal - 14

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

MithraPrasath

SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
274
Reaction score
1,366
Age
31
Location
Bangalore
இடைவிடாத இன்னல்கள்​

அத்தியாயம் 14

சுந்தரம் வீட்டிற்கு சென்று கிளம்பினான். சாப்பிட செல்லலாம் என்று எண்ணி விக்னேஷ்க்கு கால் செய்தான். அவனையும் உடன் அழைத்து செல்லலாம் என்று எண்ணி கூப்பிட நினைத்தான். போனை எடுத்த போது அதில் சில மிஸ்டு கால் இருந்தது. எடுத்து பார்த்தான்.., அழகனிடம் இருந்து கால் வந்து இருந்தது.

உடனே அவனுக்கு கால் செய்தான். ஆனால் அப்போது அழகன் எடுக்கவில்லை. சிறிது நேரம் கழித்து ட்ரை பண்ணலாம் என்று நினைத்து விட்டான்.

விக்னேஷ்க்கு கால் செய்து சாப்பிட வர சொன்னான். அவனும் சுந்தரமும் சாப்பிட ஒரு ஹோட்டல் சென்றனர். சாப்பிட்டு விட்டு கிளம்பும் போது அங்கே ஒரு போலீஸ் கான்ஸ்டபில் வந்தார். அதுவும் சுந்தரத்தை தேடி வந்திருந்தார்.

சுந்தரம் என்ன என்று கேட்டதற்கு, பணம் தொலைஞ்சத பத்தி விசாரிக்க இன்ஸ்பெக்டர் ஸ்டேஷன் வர சொல்லிருப்பதாக கூறிவிட்டு அவர் சென்று விட்டார். விக்னேஷ் தானும் உடன் வருவதாக கூறி ஒன்றாக சென்றான் சுந்தரத்துடன். ஸ்டேஷன் வாசலுக்கு வரும் போதே விக்னேஷ்க்கு வேலை வந்து விட்டது.

“நீ போய் பாரு... எனக்கு கொஞ்சம் வேலை வந்துடுச்சு... நான் கொஞ்ச நேரத்துல வந்துடுறேன்...” என்று கூறிவிட்டு வேகமாக சென்று விட்டான்.

ஸ்டேஷன் உள்ளே சென்று பார்த்தான். அங்கு இன்ஸ்பெக்டர் இல்லை. அவர் சுந்தரத்தை காத்திருக்க சொல்லிருப்பதாக கான்ஸ்டபில் வந்து சொன்னார்.

“சார் எங்க போயிருக்கார்...? எப்போ வருவாரு..?” என்று சுந்தரம் கான்ஸ்டபில் ஒருவரிடம் கேட்டான்.

அவர் பதிலே பேசாமல் முறைத்து பார்த்து, “போய் உட்காரு..., அவர் வரவும் நாங்களே சொல்லுவோம்...” என்று கூறிவிட்டு அவர் வேலையை கவனிக்க தொடங்கினார்.

சுந்தரம் அமைதியாக சென்று அமர்ந்தான். நேரம் சென்று கொண்டே இருந்தது. இன்ஸ்பெக்டர் வரவே இல்லை, விக்னேஷும் வரவும் இல்லை. பொறுமை இழந்து வெளியே எழுந்து சென்றான்.

அழகனுக்கு கால் செய்தான். அப்போதும் அழகன் எடுக்கவில்லை. குழப்பமாக இருந்தது. அங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறதோ என்று நினைத்து கவலை கொண்டிருந்தான். அப்போது ஆனந்த்திடம் இருந்து கால் வந்தது.

அட்டென்ட் செய்து காதில் வைத்தான். அவன் பேசுவதற்கு முன்பே ஆனந்த் பேசினான்.

“என்னடா கிளம்பியாச்சா...? போகலாமா..?” என்று கேட்டான்.

“டேய்... நான் ஸ்டேஷன்ல இருக்கேன்.” என்று சொல்லிகொண்டிருக்கும் போதே, இடை புகுந்து,

“அங்க எதுக்கு போன...? அடுத்து என்ன பிரச்சனை..? என்னடா நீ... நமக்கு இருக்க பிரச்சனை எத்தனைன்னு கூட தெரியாத மாதிரி ஒரு புது பிரச்சனைய கொண்டு வந்துட்டியா...? எப்டி தான் இப்டி இருக்கியோ..?” என்று அவனாக கற்பனை செய்து ஏதோ ஏதோ சொல்ல சுந்தரம் கோபமானான்.

“டேய்...! நிறுத்துடா... என்ன நினைச்சுட்டு இருக்க....? என்ன பார்த்த உனக்கு அவ்ளோ மோசமாவா தெரியுது... என்ன எதுன்னு கேட்காமலே உன் இஷ்டத்துக்கு பேசிட்டு இருக்க...” என்று கத்தினான்.

“அதுக்கு எதுக்கு நீ கத்துற..? என்னன்னு தான் சொல்லேன்...”என்று தணிந்து சொன்னான்.

“ஆனாலும் எல்லாருக்கும் என்னை பார்த்தா எப்டி தான் தெரியுமோ...?” என்று வர சொல்லிவிட்டு காத்திருக்க வைத்திருப்பதைம், அதில் இவன் வேறு இன்னும் கொஞ்சம் அவனை பேசியது என்று எல்லாம் நினைத்து சலித்து கொண்டு சொன்னான்.

“யாரு என்ன பண்ணா...? எதுக்கு அங்க போன..? சொல்லு..” என்று நிதானமாக கேட்டான்.

“ம்ஹும்... பணம் காணோம்ன்னு கொடுத்த கம்ப்ளைன்ட் க்கு விசாரிக்க வர சொல்லிட்டு அந்த இன்ஸ்பெக்டர் எங்கையோ வெளில வேலைன்னு போய்ட்டார். எங்க போனாருன்னும் தெரியல, எப்போ வருவாருன்னும் தெரியல... கேட்டாலும் இளக்காரமா பார்க்குறாங்க...

ஒரு மணி நேரமா உட்கார்ந்து இருக்கேன் இங்க...” என்று சொன்னான்.

“விக்னேஷ் வச்சு பேச வேண்டியது தான...” என்று அவன் கேட்டான்.

“டேய்... அது அதுக்கு மேல., அவனும் ஏதோ வேலைன்னு ஓடிட்டான். அவனும் இன்னும் வரல.. ஒரே மண்ட வழியா இருக்கு..” என்று சலித்து கொண்டே சொல்ல அப்போது அங்கு விக்னேஷ் வந்தான்.

“என்னடா மண்ட வலிக்குதா..? எதுக்கு..? என்ன இங்க நிற்குற..? நீ வீட்டுக்கு போயிருப்பன்னு நான் நினைச்சேன்..” என்று கூறி கொண்டே பின்னாடி இருந்து வந்தான் விக்னேஷ்.

“விச்சாரிக்கவே இல்லையாம்.. இதுல எங்க நான் வீட்டுக்கு போறது..” என்று சலித்து கொண்டே சொன்னான்.

“டேய்... நான் இருக்கேன் போன் ல...” என்று சொல்லி ஆனந்த் எரிச்சல் அடைந்தான்.

“நான் உன் கிட்ட அப்பறம் பேசுறேன். நீ வை போன...” என்று கூறி கட் செய்தான். பின் இருவரும் உள்ளே சென்றனர்.

விக்னேஷை பார்த்த பின் விக்னேஷுடன் சேர்த்து சுந்தரத்திற்கும் அங்கு கொஞ்சம் மரியாதை மற்றும் செய்திகள் உடனுக்குடன் தெரியவும் வந்தது.

இன்ஸ்பெக்டர் அவசர வேலைக்காக சென்று உள்ளதால் தான் இவ்வளவு நேரம் ஆகிறது என்று தெரிய வந்தது. விக்னேஷ் இன்னும் வேலை இருப்பதாக கூறி சென்று அங்கிருந்த கான்ஸ்டபில் இருவருடன் ஏதோ பேசி கொண்டிருந்தான்.

அவர்களுடனே இருந்தான் விக்னேஷ். சிறிது நேரத்தில் அங்கு இன்ஸ்பெக்டர் வந்தார். அவர் வரவும் அவரும் அவர்களுடன் சேர்ந்து கொண்டார். இவனை அங்கு யாரும் கவனிக்கவில்லை.அடுத்தும் அரைமணி நேரம் சென்றது.

பொறுமை கொஞ்சம் கொஞ்சமாக போய் கொண்டிருந்தது சுந்தரத்திற்கு. பின் விக்னேஷ்க்கு கால் வந்தது. உடனே அவசரமாக அவனும் இன்னும் இரண்டு கான்ஸ்டபில் கிளம்பினர். விக்னேஷ் போகும் போது சுந்தரத்தை பார்த்து, “கொஞ்சம் வேலை வந்துருச்சு.. என்னால வர முடியாது. நீயும் ஆனந்தும் கவனிச்சுக்கோங்க...” என்று கூறிவிட்டு வேகமாக புறப்பட்டு சென்று விட்டான்.

அதன் பின் ஒரு கான்ஸ்டபில் சென்று இன்ஸ்பெக்டரிடம் சுந்தரத்தை கை காட்டி ஏதோ சொல்கிறார். அவர் அவனை வர சொல்லி அழைத்தார்.

“என்ன கேஸ்..?” என்று கேட்டார் இன்ஸ்பெக்டர் கான்ஸ்டபிலிடம்.

அவர் ஏதோ பைல் ஒன்றை எடுத்து கொடுத்தார். பார்த்துவிட்டு ஒருநிமிடத்தில், “ஹ்ம்ம்ம்.... சொல்லுப்பா... எப்படி தொலைஞ்சு போச்சு..? உனக்கு யாரு மீதாது சந்தேகம் இருக்கா..?” என்று கேட்டார்.

“சார் எப்படி தொலைஞ்சு போச்சு., எங்க தொலைஞ்சு போச்சுன்னு எனக்கு சரியா தெரியல...” என்று சொல்லவும்,

இன்ஸ்பெக்டர் அவனை ஒருமுறை நிமிர்ந்து பார்த்தார். பின்,

“சரி... அப்போ அன்னைக்கு என்ன நடந்ததுன்னு தெளிவா சொல்லு..”என்று சொன்னார் நிதானமாகவே.

அவனும் நடந்ததை தெளிவாக சொன்னான். சொல்லிவிட்டு அவரை பார்த்தான்.

“சரி இதுல உனக்கு எங்க தொலைஞ்சு இருக்கும்ன்னு ஏதாவது சந்தேகம் இருக்கா..?” என்று கேட்டார்.

“சார் அது அந்த கடைல நான் டீ சாப்பிட நிப்பாட்டின அப்போ தான் யாராது எடுத்துருக்கணும் இல்ல அப்போ பார்த்துட்டு பின்னாடியே வந்து நான் வீட்டுக்குள்ள போன பின்னாடி வந்து எடுத்துருக்கணும்...”என்று சொன்னான்.

“அது எந்த கடைன்னு சொல்லு... நான் கான்ஸ்டபில் அனுப்பி விசாரிக்க சொல்றேன். அதே போல அங்க வீட்டு பக்கமும் விசாரிக்கலாம்.” என்று சொல்லி கொண்டிருக்கும் போதே,

அவன் இடை மறித்து, “சார் எனக்கு அங்க எதிர் வீட்டுல இருக்க கமலா அக்கா மேல சந்தேகம் வந்தது. ஆனா அவங்க பேசுறது எல்லாம் அப்டி இல்லைன்னு சொல்றாங்க. நாங்க விசாரிக்க போனப்ப அவங்க ‘எதுக்கு எடுத்தாலும் இங்கயே வந்தா போலீஸ் கிட்ட நான் கம்ப்ளைன்ட் கொடுப்பேன்’ அப்டின்னு சொல்லி எங்கள விரட்டி விட்டுட்டாங்க. இருந்தாலும் ஒருமுறை அவங்க கிட்ட நல்லா விசாரிச்சா தான் தெரியும்.

ஏனா அவங்க அன்னைக்கு அதிக நேரம் அவங்க தம்பி வர்றாங்கன்னு சொல்லி வெளிலையே இருந்துருக்காங்க.. அதான் தெரிஞ்சுருக்கலாம் ன்னு கேட்க போனோம்.” என்று தெளிவாக அதே நேரம் மனதில் இருந்த சந்தேகத்தை தெளிவாக எடுத்து சொன்னான்.

இன்ஸ்பெக்டரும் சுந்தரத்தை ஒரு கான்ஸ்டபில் உடன் அனுப்பி வைத்தார். சென்று அந்த கடைக்கு அருகில் விசாரிக்க சென்றனர். ஆனால் அங்கு எந்த விவரமும் கிடைக்க வில்லை. அதிலே நேரம் சென்று கொண்டிருந்தது.

அடிக்கொருமுறை ஆனந்த் கால் செய்து கொண்டிருந்தான். கடைசியாக அவனை மட்டும் சென்று பேச சொல்லி சொன்னான் சுந்தரம். முதலில் ஆனந்த் தயங்கினான். பின் மீனாட்சிகாக சரி என்று சொல்லி கிளம்பினான்.

இங்கு சுந்தரத்தை இன்ஸ்பெக்டர் விடவே இல்லை. அடுத்து அங்கு தெருவில் விசாரிக்க அவரும் உடன் வந்தார். கமலா அக்காவின் தம்பியை விசாரிக்க தனியாக ஒரு கான்ஸ்டபில் ஒருவரை அனுப்பியிருந்தார்.

அங்கு சென்று விசாரித்தும் எந்த தகவலும் சரி இல்லை என்று கூறி இன்ஸ்பெக்டர் ஸ்டேஷன் சென்று விட்டார். சுந்தரமும் உடன் சென்றான். அங்கு சென்ற பின் இன்ஸ்பெக்டரிடம் பேசி கொண்டிருந்தான்.

அப்போது ஆனந்திடம் இருந்து கால் வந்தது. தனியாக சென்று என்ன என்று பேசினான். ஆனந்தின் குரலில் பதட்டம் அதிகமாக தெரிந்தது.

“என்னடா..... அதான் நீ போ நான் வர்றேன்னு சொன்னேன்ல...? அப்பறம் என்ன..?” என்று சலித்து கொண்டே கேட்டான் சுந்தரம்.

“டேய்... நான் இங்க வந்துட்டேன்டா... ஆனா இங்க வீடு பூட்டி இருக்கு..” என்று பதட்டமாக கூறினான்.

“என்ன சொல்ற... அதெப்படி...? நீ அழகன் நம்பர்க்கு கால் பண்ணி கேட்டு பாரு..” என்று சொன்னான்.

“நான் உன் தம்பி நம்பர்க்கும் ட்ரை பண்ணிட்டேன், உன்னோட தங்கச்சி நம்பர்க்கும் ட்ரை பண்ணிட்டேன்... யாரும் எடுக்கல...” என்று சற்று கோபமாக சொன்னான்.

சுந்தரத்திற்கு அடுத்து பதற்றம் தொற்றி கொண்டது.

“ஒரு வேளை தங்கச்சிக்கு எதுவும் உடம்பு சரி இல்லாம போயிருக்குமோ..?” என்று அவன் சொல்ல,

“எனக்கு என்னம்மோ வேற தோணுது..” என்று அவன் சொல்ல

“என்ன..?”

“உன்னோட தங்கச்சிய இப்போவே கல்யாணம் பண்ணிக்க கூட்டிட்டு போயிட்டாங்களோ..? அப்டின்னு தான்...” என்று சொல்லி சுந்தரத்தை மேலும் கலங்கடித்தான் ஆனந்த்.

“அச்ச்சோ.... அப்டியும் நடக்க வாய்ப்பு இருக்கு தான்... அதுக்கு தான் அழகன் காலைல எனக்கு கால் பண்ணிருப்பானோ...?”என்று பதறி கொண்டே சொல்லிகொண்டிருந்தான்.

“என்னடா சொல்ற..? அவன் எப்போ கால் பண்ணான்..?” என்று பதட்டமாகவே கேட்டான்.

“நான் குளிக்கும் போது கால் வந்துருந்தது. நான் வந்துட்டு கூப்பிட்டப்ப எடுக்கல..” என்று தயங்கி கொண்டு யோசித்து கொண்டே சொன்னான்.

“என்னடா இப்போ யோசிச்சு பேசிட்டு இருக்க.. அப்போவே உனக்கு சந்தேகம் வரலையா..? என்னடா நீ இப்டி இருக்க..?”என்று திட்டி கொண்டே பல்லை கடித்தான்.

“சரி நீ டென்ஷன் ஆகாத... பக்கத்துல விசாரிச்சு பாரு.. நான் ஸ்டேஷன் ல சொல்லிட்டு வர்றேன்..” என்று கூறிவிட்டு போனை வைத்தான்.

உள்ளே சென்று இன்ஸ்பெக்டரிடம் சொன்னான். அங்கு நடப்பவைகளை எடுத்து கூறினான். உடனே இன்ஸ்பெக்டர்,

“நான் அங்க பக்கத்துல இருக்க ஸ்டேஷன் போலீஸ விசாரிக்க அனுப்ப சொல்றேன்... நீங்க பயப்படாம போங்க..” என்று கூறி அங்கு தஞ்சை போலீஸ்க்கு கால் செய்து இன்பார்ம் செய்தார்.

சுந்தரம் கிளம்பி வேகமாக சென்றான். அடுத்த அரை மணி நேரத்தில் அங்கிருந்தான். ஆனந்த் பதட்டமாக நின்று கொண்டிருந்தான்.

“டேய் நான் பக்கத்துல விசாரிச்சேன். அவங்க அந்த பரமு மீனாட்சிய கார்ல எங்கையோ கூட்டிட்டு போனதா சொல்றாங்க...”என்று சொல்லவும்,

“அப்போ அழகன், பாட்டி...??” என்று சந்தேகமாக கேட்டான்.

“அவங்கள பார்க்கலையாம்.. அவங்க வெளில வந்த மாதிரி இல்லைன்னு தான் எல்லாரும் சொல்றாங்க... இப்போ அவன் மீனாட்சிய எங்க கூட்டிட்டு போயிருப்பன்னு எப்டி கண்டு பிடிக்குறது..?” என்று கோபமாக கேட்டான்.

“எனக்கும் குழப்பமாவே இருக்கே... தம்பிக்கு வேற என்ன ஆச்சுன்னு தெரியல...” என்று பதட்டத்தோடு சொல்லிக் கொண்டிருந்தான்.

இருவருக்கும் மண்டையை குழப்பிவிடும் நிலையில் இருந்தது சூழல். புரியாமல் திணறி கொண்டு, அடுத்து என்ன செய்ய என்று யோசித்து கொண்டிருந்தனர். ஆனந்த் மனம் கட்டுகடங்காத கோபத்தில் கொந்தளித்து கொண்டிருந்தது.
 




MithraPrasath

SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
274
Reaction score
1,366
Age
31
Location
Bangalore
சுந்தரம் யோசிக்க கூட முடியாமல் தங்கை, தம்பிக்கு என்ன நடந்துருக்குமோ என்று எண்ணி உள்ளுக்குள் கிட்டத்தட்ட அழுது கொண்டிருந்தான்.

அங்கு கான்ஸ்டபில் ஒருவர் வந்தார். அவரை பார்க்கவும் அங்கு இன்ஸ்பெக்டர் சொல்லி இவர் வந்திருப்பது புரிந்தது சுந்தரத்திற்கு. அவரிடம் நடந்ததை எடுத்து சொல்லி புலம்பி கொண்டிருந்தான் சுந்தரம்.

“அப்போ உங்க தம்பி என்ன ஆனானும் தெரியல...? அப்டி தான..?” என்று கேட்டார். பதிலுக்கு ஆம் என்று இருவரும் தலை அசைத்தனர்.

“சரி வீட்டுக்குள்ள போய் பார்த்தீங்களா..?” என்று அவர் கேட்டார்.

இருவரும் திருதிருவென விழித்தனர்.., “இல்ல சார்... அதான் வீடு பூட்டிருக்குல...” என்று ஆனந்த் கூறினான்.

“உள்ள போய் பார்க்கலாம்... ஏதாது தெரிய வரலாம்..” என்று கூறிவிட்டு கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்றனர்.

அங்கு வீடு ஏறுக்கு மாறாக இருந்தது. எல்லா பொருளும் சிதறி கிடந்தது. சில கண்ணாடி பொருள் உடைந்து ரத்தம் படித்தவாறு கிடந்தது. ரத்தம் பட்டவாறு ஒரு கால் தடம் மட்டும் இருந்தது. பதறி போனார் இருவரும்.

“இங்க இருக்குறத பார்த்தா ஏதோ சண்டை நடந்த மாதிரி இருக்கு... இங்க இதுல இருக்குறத ரத்தம் படிஞ்ச காலடிய பார்த்தா பொண்ணோட கால் தடம் மாதிரி இருக்கு. எப்டியும் உங்க தங்கச்சியா தான் இருக்கணும்...” என்று கான்ஸ்டபில் கூறி விட்டு,

“நான் ஸ்டேஷனுக்கு இன்பார்ம் பண்ணுறேன்..” என்று சென்றுவெளியே பேசி கொண்டிருந்தார்.

அப்போது மாடியில் ஏதோ சத்தம் கேட்பது போல இருந்தது சுந்தரத்திற்கு. வேகமாக சென்று பார்த்தான். பூட்டியிருந்த ஒரு அறையில் இருந்து யாரோ முணகுவது போல சத்தம் வந்து கொண்டிருந்தது.

“ஆனந்த்... சார்...” என்று சத்தமாக மற்றவர்களையும் அழைத்தான்.

இருவரும் வேகமாக ஓடி வந்தனர். “உள்ள யாரோ இருக்க மாதிரி இருக்கு சார்... சத்தம் வருது...” என்று சுந்தரம் பதறி கொண்டு சொன்னான்.

ஆனந்தும் கேட்டு பார்த்து, “ஆமாம் கேட்குது..” என்றான்.

திறக்க முயற்சித்து பார்த்தனர். முடியவில்லை என்றதும், உடைத்தனர். உள்ளே பார்த்ததும் அதிர்ந்து விட்டனர். அங்கு அழகனும், வடிவும் ஒரு ஒரு ஷேரில் கட்டிவைக்க பட்ட நிலையில் இருந்தனர். வேகமாக சென்று இருவரையும் விடுவித்தனர்.

அழகனுக்கு வாயில் இருந்த துணியை எடுக்கவும் அதிகமாக இருமல் வந்து மூச்சு விட சிரமப்பட்டு கொண்டிருந்தான். வடிவு அரை மயக்கத்தில் இருந்தார். என்ன நடந்தது என்று கேட்க முடியாமல் இருந்தது. உடனே ஆம்புலன்ஸ் வரவழைக்க பட்டது. அழகன் சிறிது நேர சிகிச்சைக்கு பிறகு பேசினான்.

“அண்ணா அக்காவ போய் காப்பாத்துங்க அண்ணா... காப்பாத்துங்க...” என்று பதறி கொண்டே சொன்னான் அழகன்.

சுந்தரமும், ஆனந்தும் அருகில் அமர்ந்து அவனுக்கு ஆறுதலாக பேசி கொண்டிருந்தனர். தஞ்சை இன்ஸ்பெக்டர் அங்கு வந்திருந்தார். என்ன நடந்தது என்று அழகனிடம் கேட்டு கொண்டிருந்தார்.

“என்ன நடந்தது தம்பி..? உங்கள யாரு அடைச்சு வச்சா...?” என்று கேட்டார் இன்ஸ்பெக்டர்.

“இன்னைக்கு விடிய காலைல நான் எழுந்தப்ப, அந்த பரமு பாட்டி கிட்ட பேசிட்டு இருந்தத கேட்டேன். பாட்டி ரொம்ப திட்டிட்டு இருந்தாங்க அந்த பரமுவ..”

“எதுக்கு..?” என்றார் இன்ஸ்பெக்டர்.

“மீனாட்சிய சீக்கிரம் கல்யாணம் பண்ணிடு, சொத்து எல்லாம் அப்பறம் வாங்கிக்கலாம்.. அப்டின்னு பாட்டி சொன்னாங்க. ஆனா அந்த பரமு கேட்காம சொத்தும் கிடைக்கும், கல்யாணமும் நடக்கும்... நீ பேசாம இரும்மான்னு அவன் சொல்லிட்டு இருந்தான்.

அப்போ தான் பாட்டி சொன்னாங்க..., ‘உனக்கு அறிவே இல்லையா..? நாமளே அவ கிட்ட பொய் சொல்லி தான் சம்மதிக்க வச்சுருக்கோம். அவளுக்கு மட்டும் நீ அவள கெடுக்கல, நாம பொய் சொல்லி இருக்கோம்ன்னு தெரிஞ்சா அவ்ளோ தான்... அதான் சொல்றேன் சீக்கிரம் கல்யாணம் பண்ணுன்னு... மற்றது எல்லாம் தானா வந்துடும்...’ அப்டின்னு சொல்லி திட்டிட்டு இருந்தாங்க.”

இதை கேட்டுடன் அங்கு சுந்தரத்திற்கும், ஆனந்திற்கும் பேரதிர்ச்சி.

“எவ்ளோ பெரிய பொய்...? அத எப்டி உங்க அக்கா நம்பினா..?” என்று அதிர்ச்சி மாறாமல் கேட்டான்.

“அது தான் பாட்டியோட சாமர்த்தியம்.. அதுவும் அக்காவ கல்யாணத்துக்கும் இன்னும் ஏதேதோ சொல்லி பயமுறுத்தி சம்மதிக்க வச்சுருக்கு... ஊருக்கு போனா நம்ம ஏதாது சொல்லி மாத்திடுவோம்ன்னு அக்காவ இங்கயே இருக்க வச்சுருக்கு பாட்டி.”

சுந்தரம் மீனாட்சியின் நிலையை நினைத்து வருந்தினான். ஆனந்திற்கும் மனமெல்லாம் கனமாகி போனது.

“அடுத்து என்ன நடந்தது..?”என்று இன்ஸ்பெக்டர் கேட்டார்.

“நான் இந்த விஷயத்த அண்ணா கிட்ட சொல்ல கூப்பிட்டேன். அப்போ தான் மலர் அக்கா வந்துருச்சு அப்பறம் பேசுறேன்னு சொல்லி, அண்ணா கட் பண்ணிட்டார். நான் இந்த விஷயத்த சொன்னா அக்கா எப்டி ரியாக்ட் பண்ணும்ன்னு தெரியாது, அதுனால மலர் அக்கா வந்தத சொல்லி ஊருக்கு கூட்டிட்டு போய்ட்டு அங்க வச்சு சொல்லலாம் அப்டின்னு முடிவு பண்ணேன்.

அதே போல அக்கா கிட்ட பேச போனேன். அக்கா கிட்ட மலர் அக்கா வந்தத சொல்லி, அக்காக்கு அங்க உதவிக்கு நீ இருந்தாதான் சரியா இருக்கும்.., நீ வா அக்கான்னு கூப்பிட்டேன். அக்காவும் சம்மதிச்சு வர்றேன்னு சொல்லிடுச்சு.

நாங்க கிளம்பும் போது அங்க பாட்டியும், அந்த பரமுவும் வந்தாங்க.. எங்கள போக விடாம தடுத்தாங்க.. ஆனா மீனாட்சி அக்கா போகணும்ன்னு சொல்லவும், பாட்டி பேசி பேசி மனச மாத்த பார்த்துச்சு. நானும் பதிலுக்கு அவங்க சொத்து கேட்டது எல்லாம் சொன்னேன்.

ஆனாலும் எல்லாத்துக்கும் பாட்டி ஒரு பதில் சொல்லி அக்காவ சமாளிச்சுச்சு. அப்பறம் தான் வேற வழி இல்லாம நான் அந்த பொய் பத்தி சொன்னேன்.

கேட்ட உடனே அங்க அக்கா தான் ரொம்ப ஒடைஞ்சு போச்சு. அப்பறம் அங்க இருந்து கிளம்பலாம் ன்னு நாங்க நினைக்கும் போது அந்த பரமு ரொம்ப திமிரா நடந்துக்க ஆரம்பிச்சான். எங்கள வெளில நான் விடமாட்டேன்னு சொல்லி கத்தி எல்லா பொருளையும் தூக்கி போட்டு, ஒடைச்சு ரொம்ப மோசமா நடந்துகிட்டான். ரொம்ப பயந்து போய்ட்டோம்.

அக்காவ வலுகட்டாயமா ஒரு ரூம் ல அடிச்சு வச்சான். அப்பறம் என்னை மாடில இருக்க ஒரு ரூம் க்கு இழுத்துட்டு போய் கட்டி வச்சான். அப்போ பாட்டி, இப்போ என்ன பண்ணுறதுன்னு கேட்டதுக்கு.. நான் பொய்ய உண்மை ஆக்க போறேன்., அப்டின்னு சொல்லி சிரித்தான். நான் ரொம்ப பயந்துட்டேன்.

பாட்டி கூட வேணாம் அது இப்போ பெரிய பிரச்சனை அப்டின்னு சொல்லி தடுத்தாங்க... ஆனா கேட்கல அவன். பாட்டி அவன தடுக்கவும் பாட்டிய ஒரு அடி கன்னத்துல அடிச்சுட்டான். அதுல பாட்டி மயங்கி விழுந்துட்டாங்க.. பாட்டியையும் கட்டி வச்சுட்டு வேகமா போய்ட்டான்.

கீழ அக்காவ வலுகட்டாயமா இழுத்துட்டு போய் கார்ல கூட்டிட்டு போன சத்தம் மட்டும் கேட்டது... எனக்கு ரொம்ப பயமா இருக்கு அண்ணா... அக்காவ அவன் எதுவும் செய்யும் முன்னாடி போய் காப்பாத்தனும்..” என்று கூறி அழுதான்.

சுந்தரமும் அழுதுவிட்டான். ஆனந்த், “இப்போ அவன் மீனாட்சிய எங்க கூட்டிட்டு போயிருக்கான்னு உனக்கு தெரியுமா..?” என்று கேட்டான்.

“இல்ல அண்ணா எனக்கு தெரியாது..” என்று அழுது கொண்டே சொன்னான்.

இன்ஸ்பெக்டர் உடனே கால் பண்ணி அந்த பரமு சென்ற கார் நம்பர் மற்றும் நேரத்தை கூறி அந்த வண்டி எங்கு சென்றுள்ளது என்ன சிக்னல் கேமராவில் பதிவானதை பார்க்க சொன்னார். சுந்தரத்திற்கு கோபமாக வந்தது. ஆனந்த் பதற்றத்தோடு இருந்தான். இருவருக்கும் அங்கு இருக்கவே முடியவில்லை.

சிறிது நேரத்தில் அவனது வண்டி பைபாஸ் ரோடு வழியாக அரைமணி நேரத்திற்கு முன்னாள் சென்று இருப்பது தெரிய வந்தது. உடனே புறப்பட்டனர் அனைவரும். போலீஸ் தனியாக சென்று தேடினர். ஆனந்த், சுந்தரம் ஒரு புறம் தேடினர்.

சுந்தரம் ஒரு புதருக்குள் கார் ஒன்று நிற்பதை பார்த்து அருகே சென்று பார்த்தான். அது அந்த பரமுவின் கார் தான். அது மரத்தில் மோதி ஒரே புகையாக இருந்தது. உள்ளே யாரும் இல்லை. உடனே ஆனந்திற்கும், போலீஸிற்கும் தகவல் தந்தான்.

பிறகு அவர்களை தேடி சென்றான். அது வன பகுதி போன்று இருந்தது. போக போக ஒன்றுமே இல்லை. சிறிது தூரத்தில் பாதி இடிந்த நிலையில் ஒரு கட்டிடம் இருந்தது. அருகில் சென்றான். உள்ளே மீனாட்சியின் சத்தம் கேட்டு கொண்டிருந்தது. வேகமாக ஓடினான்.

தொடரும்....
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
மித்ராபிரசாத் டியர்
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top