• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Idaividaatha Innalgal - 16

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

MithraPrasath

SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
274
Reaction score
1,366
Age
31
Location
Bangalore
இடைவிடாத இன்னல்கள்​

அத்தியாயம் 16

மீனாட்சிக்கும் ஆனந்திற்கும் திருமணம் என்று நிச்சயித்த நாளில் இருந்து ஆனந்திற்கு தலை கால் புரியவில்லை. பொழுது மொத்தத்தையும் மீனாட்சியுடனே செலவிட்டான். கல்லூரி, வீடு அனைத்தையும் மறந்து சுற்றினான். அது கல்லூரி விடுமுறை நாட்கள் என்பதால் அவனுக்கு அதில் எந்த பிரச்சனையும் அமையவில்லை.

பெற்றோர்கள் ஏதாவது சொல்வார்கள் என்பதற்காகவும், கல்யாணம் செய்யாமல் ஒன்றாக இருக்க கூடாது என்று சொன்னதாலும் இரவு நேரத்திற்கு மட்டும் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தான்.

அது இன்று வரை மாறவில்லை. நாளை திருமணம் என்ற போதிலும் கூட அவன் இங்கு சுந்தரத்தின் வீட்டிற்கு மீனாட்சியிடம் பேச வந்திருந்தான். அவனை பார்த்ததும் மீனாட்சிக்கு முகம் மலர்ந்தது. வெட்கத்தில் சிவந்தது. அருகில் இருந்த தோழிகளை, தங்கையை மறந்து ஆனந்தையே பார்த்து கொண்டிருந்தாள்.

தோழிகளின் கிண்டலையும் பொருட்படுத்தாமல் அவனையே ரசித்து கொண்டிருந்தாள். காதல் கனிந்த நிலையில் இருந்தனர் இருவரும். தன்னால் இனி அவன் இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலைமை இப்போது அவளுக்கு. தன்னை இந்த ஒரு மாதத்திலே மொத்தமாக மாற்றி விட்டான் என்று சில நேரம் எண்ணி சிரித்து கொள்வாள் தனக்குள்ளே.

அப்போது உள்ளுக்குள் இருந்து வந்த சுந்தரமும், விக்னேஷும் ஆனந்தை பார்த்தனர். சுந்தரம் ஆனந்தை பார்த்து சிரித்து விட்டு அங்கிருந்து அகன்று விட்டான். அவனுக்கு இது புதிது இல்லை என்பதால் கண்டு கொள்ளவில்லை. விக்னேஷ் பார்த்தவுடன் ஆச்சர்யமாக பார்த்தான்.

“என்னடா வந்துருக்க..?!! என்னை பார்க்க வந்தயா..?” என்று நண்பனின் அருகில் செல்ல, அவனின் பார்வை வேறு எங்கோ இருப்பதை கவனித்து திரும்பி பார்த்தான். ஆனந்த் மீனாட்சியை பார்த்து கொண்டு இருப்பது தெரிந்தது.

“ஓகோ... இதுக்கு தானா... கொஞ்சமாது பொறுப்போட இரு... கிளம்பு வீட்டுக்கு...” என்று விக்னேஷ் சொல்லவும், சட்டென திரும்பி, “எதுக்கு...?” என்று அவசரமாக கேட்டான் ஆனந்த்.

“டேய்.. நீ வீட்டுக்கு ஒரே பிள்ளை. உங்க அப்பாவே எத்தனை வேலை பார்ப்பார்...? போய் பொறுப்பான பிள்ளையா எல்லா வேலையும் நீ பாரு.. நாளைல இருந்து மீனாட்சி உன் கூட மட்டும் தான் இருப்பா... அப்போ பார்த்துக்கலாம் நல்லா... இப்போ கிளம்பு..” என்று கூறி கொண்டே அவனை இழுத்து கொண்டே வெளியே வந்தான்.

மீனாட்சியை மலரும் வந்து வலுகட்டாயமாக உள்ளே இழுத்து சென்று விட்டாள். ஆனந்த் சென்று விட்டதால் அவளும் சலித்து கொண்டே சென்றாள்.

“விடுடா... அதெல்லாம் அப்பா தனியா பார்க்கல.. அவர் அண்ணன் பையன் தான் இருக்கானே...” என்று சொல்லி கொண்டே உள்ளே மறுபடியும் செல்ல பார்க்க,

“ஏய்..! என்ன நான் சொல்லிட்டே இருக்கேன்... போடா.. இல்ல மரியாத குறையும் அப்பறம்..” என்று சொல்லி சிரித்தான்.

பெரும்பாடு பட்டு ஆனந்தை அங்கிருந்து அனுப்பி வைத்தான் விக்னேஷ்.

சுந்தரம் ஓடி ஓடி தங்கையின் கல்யாண வேலைகளை கவனித்தான். சிவாவும் அவன் பங்குக்கு வேலைகளை செய்தான். அழகனுக்கு சௌந்தர்யாவின் குழந்தையை கவனிக்கவே சரியாக இருந்தது. அக்காவும், தங்கையும் சேர்ந்து மீனாட்சியை அலங்கரித்து கொண்டிருந்தனர்.

மாலை அனைவரும் கல்யாண மண்டபத்திற்கு செல்ல தயாராகினர். சுந்தரம் பட்டு வேட்டி அணிந்து வந்ததை பார்த்ததும், அழகன்,

“என்ன அண்ணா... இன்னைக்கே பட்டு வேட்டிய கட்டிடீங்க..?” என்று கேட்டான்.

விக்னேஷ், “அவன் எப்போவுமே வேட்டி கட்டுவான். இன்னைக்கு அதுவும் பங்க்சன்... பட்டு வேட்டி தான் கட்டுவான். அது உனக்கு தெரியாதா..?” என்று அழகனிடம் கேட்டான்.

“இல்ல அண்ணா இது தான் நாளைக்கு கல்யாணத்துக்கு எடுத்தது. இது நாளைக்கு கல்யாணத்தப்போ கட்டாம இப்போவே கட்டுராறேன்னு கேட்க வந்தேன்..” என்று வருத்தமாக சொல்லி சுந்தரத்தை பார்த்தான்.

“நாளைக்கு நான் அப்பாவோட வேட்டி இருக்கு, அத கட்ட போறேன்.. அதான் இன்னைக்கு இத கட்டினேன்..” என்று சொன்னான்.

“அப்போ எங்களுக்கு எல்லாம் அப்போவோட வேட்டி கிடையாதா..?” என்று கேட்டு கொண்டே உள்ளிருந்து வந்தான் சிவா.

“இருக்கு... நீங்க தான் வேண்டாம்ன்னு அன்னைக்கு சொன்னீங்க.. இப்போ கூட ஒன்னும் இல்ல... நான் எடுத்து தர்றேன் கட்டுறியா..?” என்று கேட்டாம் சுந்தரம்.

“இல்ல இப்போ வேண்டாம் அண்ணா... அடுத்த கல்யாணத்துக்கு கட்டிக்குறேன்... ஒரு நாளுக்கே எப்டி இருக்குமோ.. இதுல ரெண்டு நாளும் கட்டினா, நான் எந்த வேலையும் செய்ய மாட்டேன் அப்பறம்..” என்று சொல்லி சிரித்தான்.

“சரி.. சரி... கிளம்பலாமா... எங்க தங்கச்சி எல்லாரையும் காணோம்..?” என்று கேட்டான் சுந்தரம்.

“அவங்க கிளம்பி வர லேட் ஆகும் அண்ணா... இங்க மாமா இருக்காரு.. அவரு வண்டில வருவாங்க.. நாம கிளம்பலாம்..” என்று சிவா சொன்னான்.

சுந்தரம் கிளம்ப போகும் போது, “அண்ணா... ஒரு நிமிஷம்.. இந்தாங்க..” என்று பெல்ட் ஒன்றை கொடுத்தான் அழகன்.

“எதுக்குடா..?” என்று யோசித்து கொண்டே கேட்டான் சுந்தரம்.

“வேட்டிக்கு மேல கட்டிக்கோங்க.. இல்ல யார் காலாது பட்டு கழண்டு விழுந்துட போகுது...” என்று கூறி அழகன் கிண்டலாக சிரித்தான்.

உடனே மற்ற இருவரும் சேர்ந்து சிரிக்க, சுந்தரம் கடுப்பாகி, “கொழுப்புடா உனக்கு.. நீ என்னை கிண்டல் பண்றியா..? உனக்கு இதெல்லாம் எப்டி தெரியும்..? இவன் தான சொன்னது..” என்று கூறி விக்னேஷை முதுகில் அடித்தான்.

அனைவரும் சந்தோஷத்தில் சிரித்து மகிழ்ந்தனர். கடந்த இரண்டு வருடங்களாக சுந்தரம் இத்தனை சந்தோஷமாக இருந்தது இல்லை. அதுவும் தந்தையின் இறப்பின் பிறகு நடந்தவை அவனையும், குடும்பத்தையும் ஒரு சேர சோகத்தின் பிடியில் சேர்ந்திருந்தது. இப்போது தான் குடும்பம் மறுபடியும் சந்தோஷத்தை அனுபவிக்க ஆரம்பித்திருந்தனர்.

கிளம்ப தயாராக இருந்தவர்களை சௌந்தர்யா ஒரு நிமிடம் நிறுத்தி, கண்ணு பட கூடாது நம்ம குடும்பத்துக்கு என்று கூறி அனைவருக்கும் சுற்றி போட்டாள். பின் கிளம்பி மண்டபத்திற்கு சென்றனர்.

அனைத்து ஏற்பாடுகளும் வெகு விமர்சியாக நடந்தது. நிச்சயம் இன்னும் சிறிது நேரத்தில் நடை பெற இருக்கும் நிலையில் மண்டபமே சொந்தங்களினால் நிறைந்து இருந்தது. மனமே ஆனந்தமாக இருந்தது சுந்தரத்திற்கு. சுந்தரமும், சிவாவும் ஓடி ஓடி வேலை செய்தனர்.

வந்தவர்களுக்கு அறுசுவையில் விருந்து ஏற்பாடு செய்திருந்தனர். அது சற்று பெரிய மண்டபம் என்பதால் ஆட்களின் கூட்டத்திற்கு ஏற்றார் போல பந்தி பரிமாற இட வசதியும் இருந்தது. சுந்தரம் மேலே பந்தி பரிமாறும் இடத்திற்கு சென்றான். சமையல் காரர் படிக்கட்டுக்கு அருகில் நின்று போன் பேசி கொண்டிருக்கவும் அருகில் சென்றான் பேசுவதற்கு.
 




MithraPrasath

SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
274
Reaction score
1,366
Age
31
Location
Bangalore
“அண்ணே...! இன்னும் கொஞ்ச நேரத்துல நிச்சியம் முடிஞ்சு எல்லாரும் சாப்பிட வருவாங்க.. எல்லாம் ரெடி ஆகிடுச்சா...?!” என்று சமையல்காரரிடம் அவசரமாக கேட்டு கொண்டிருந்தான் சுந்தரம்.

“எல்லாம் முடிஞ்சுடுச்சு தம்பி... இன்னும் ஒரு ஸ்வீட் ஐட்டம் மட்டும் இருக்கு... அதுவும் ரெடி ஆகிட்டு இருக்கு.. முடிஞ்சுடும் இன்னும் பத்து நிமிஷத்துல.. நீங்க கவலையே படாதீங்க..” என்று அவரும் பதிலுரைத்து கொண்டிருந்தார்.

“அது மட்டும் இல்ல... யாரு கிட்டயும் இல்லன்னு சொல்லாம எல்லாருக்கும் எல்லாம் கிடைக்குற மாதிரி, கேட்டா இல்லைன்னு முகம் சுழிக்காம, உடனே பண்ணி தர்றேன்னு சொல்லுங்க... நல்லபடியா பரிமாறனும்..

நல்ல ஆட்களா பார்த்து பந்தி பரிமாற சொல்லுங்க.. எந்த தப்பும் நடக்க கூடாது. அதுவும் மாப்பிள்ளை வீட்டுகாரங்க எதுவும் கேட்டா உடனே செய்து கொடுங்க..

பந்தி பரிமாற நிறைய பேர் நிற்க வைங்க.. நான் அடிக்கொருமுறை வந்து பார்க்குறேன்... சில நேரம் நானோ இல்லைனா தம்பியோ வந்து பரிமாறுவோம்.. நல்லபடியா பண்ணுங்க அண்ணே..” என்று விடாமல் அவரிடம் சொல்லி கொண்டே சென்றான் சுந்தரம்.

“தம்பி இன்னொன்னு..” என்று அவர் சொல்ல ஆரம்பிக்கும் போது..

அப்போது அங்கு உள்ளே நின்றிந்த ஒரு பெண், “என்ன நான் பால் கேட்டு ரொம்ப நேரம் ஆகுது.. யாரும் எதுவும் கொடுக்க மாட்றீங்க..?” என்று கோபமாக கேட்டு கொண்டிருப்பதை பார்க்கவும், சுந்தரம் அங்கு கவனித்தான்.

“அண்ணே.. உடனே அவங்களுக்கு பால் கொடுங்க.. அவங்க ரொம்ப நேரமா நிக்குறாங்கன்னு சொல்லுறாங்க பாருங்க... போய் கவனிங்க..” என்று கூறி அனுப்பி வைத்தான்.

அவரும் சென்று பால் எடுத்து வந்து கொடுத்துவிட்டு இவனிடம் வந்தார்.

“தம்பி அவங்களுக்கு கொடுத்தாச்சு.. நான் ஒன்னு சொல்ல வந்தேன்..” என்று இழுக்கவும்,

“சொல்லுங்க அண்ணே... எதுவும் வேணுமா..?” என்றான் கேள்வியாக பார்த்து கொண்டு.

“தம்பி ஒரு மூட்டை அரிசி இன்னும் எக்ஸ்ட்ராவா தேவை படுது... நாளைக்கு தான் தேவை.. அத நைட்க்குள்ள நீங்க கொடுத்துட்டா நல்லது... அதான் உங்கள கூப்பிட்டேன் பேச..” என்று அவர் சொல்லவும்,

“நான் நைட் எல்லாம் முடிஞ்ச பின்னாடி கடைல இருந்து எடுத்து வந்து தர்றேன்.. நீங்க இப்போ எல்லாம் சரியா பண்ணுங்க..”என்று கூறி விட்டு திரும்பினான்.

அந்த பெண் அருகில் வருவதை பார்க்கவும் வழிவிட்டு நின்றனர் இருவரும். அருகில் நெருங்கி வரும் போது தான் அந்த பெண்ணை சரியாக கவனித்தான்.

அது அன்று ஹாஸ்பிட்டலில் சுந்தரத்தின் மானத்தை வாங்கிய பெண் தான். பார்த்ததும் சுந்தரத்தின் கண்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது. அன்று சுடிதாரில் வேறு மாதிரி நகர பெண் போல இருந்தவள் இன்று பட்டு புடவை, நகை எல்லாம் அணிந்து அழகு தேவதை போல அவனுக்கு தெரிந்தாள்.

அவள் தான் தனது வாழ்க்கையின் சரி பாதி என்று தெரியாமலே ரசித்தான். ஆனால் அடுத்த நொடி எந்த பெண்ணையும் அப்படி பார்க்க கூடாது என்று அவனது மனம் சொல்ல கண்களை திருப்பி கொண்டான்.

அவனது மனம் அன்று நடந்ததை நினைத்து பார்க்க, அவன் சட்டென தனது வேட்டியை லேசாக தூக்கி கொண்டான். சமையல்காரர் அவனிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து அகல, அவள் அருகில் வந்தாள்.

சுந்தரம் விலகி நின்று அதுவும் வேட்டியை பிடித்து கொண்டிருப்பதை பார்த்து கிண்டலாக சிரித்தாள். சுந்தரத்திற்கு கோபமாக வந்தாலும் அடக்கி கொண்டு நின்றிந்தான். அன்று போலவே இன்றும் நடந்தது.

அவள் இவனை பார்த்து சிரித்து கொண்டே வந்ததில் படியில் சற்று தவறி விழ போக, சுந்தரம் எப்போவும் போல பிடிக்க சென்றான். ஆனால் அதற்குள் அவள் பக்கத்தில் இருந்த கைபிடியை பிடித்தே நின்று விட்டாள்.

ஆனால் அவள் கையில் வைத்திருந்த பால் தான் கீழே சிந்திவிட்டது. சுந்தரம் அவளை பிடிக்க அருகில் வந்ததால் அது அவன் வேட்டியில் சிந்தி, பாதி அவளது சேலையிலும் சிந்தி விட்டது.

கோபத்தோடு அவள் தான் முதலில் ஆரம்பித்தாள்.

“அய்யோ... உங்களால என்னோட சேலை எல்லாம் பாலா போய்டுச்சு... ச்ச..” என்று கூறி அவனை முறைக்க,

“ஏன்மா.. விழுந்தது நானா? நீயா?... அன்னைக்கும் சரி, இன்னைக்கும் சரி உனக்கு தான் ஒழுங்கா நடக்கவே தெரியல... இருந்தும் என்னை திட்டுற.. கொஞ்சம் கீழ பார்த்து நடக்க கத்துக்கோ..” என்று கோபமாக அவனும் சொல்ல, இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்து கொண்டு நின்றிந்தனர்.

அடுத்து அவள் எதோ சொல்ல ஆரம்பிக்கும் முன் அவன் வேகமாக கீழே இறங்கினான். இவன் வேகமாக செல்லும் போது இடையே அங்கு அழகன் வந்தான்.

“அண்ணா எங்க போனீங்க..? தட்டு மாத்த ஆரம்பிச்சுட்டாங்க... வாங்க சீக்கிரமா..” என்று கூப்பிடவும்,

சுந்தரம் வேட்டியை பிடித்து கொண்டு நிற்பதை பார்த்து புரியாமல், “என்ன அண்ணா... ஏன் இப்டி நிற்கிறீங்க..?” என்று கேட்டான்.

“பால் கொட்டிடுச்சு.. சரி நான் வேற டிரஸ் மாத்திட்டு வர்றேன்.. நீ போ...” என்று கூறவும்.

“வேற டிரஸ் எதுவும் எடுத்துட்டு வரலையே..” என்று யோசித்துகொண்டே சொன்னான் அழகன்.

“நான் ஆனந்த் கிட்ட வாங்கி மாதிக்குறேன்.. நீ போ..” என்று கூறிவிட்டு வேகமாக மாப்பிள்ளை ரூம்க்கு சென்றான்.

ஆனந்தும், விக்னேஷ் இருவரும் பேசி கொண்டிருந்தனர். சுந்தரம் கோபமாக வருவதை பார்த்து, “என்னடா... என்னாச்சு...?” என்று கேட்டனர்.

“எல்லாம் என் நேரம்...” என்று தலையில் கை வைத்து கொண்டே., “உன்கிட்ட வேற டிரஸ் ஏதாது இருக்கா...?” என்று டென்ஷனாக ஆனந்திடம் கேட்டான்.

“இருக்கு... ஆனா எதுக்கு...? என்னன்னு சொல்லு..”என்று கேட்டான்.

“வேட்டில பால் கொட்டிடுச்சு..” என்று எரிச்சலுடன் சொன்னான்.

“சரி அதுக்கு ஏன் நீ இவ்ளோ டென்ஷனா இருக்க...?” என்று விக்னேஷ் கேட்டான்.

“எல்லாம் அந்த பொண்ணு தான் காரணம்...” என்று கூறி கொண்டே சென்று அவனிடம் இருந்த பேன்ட் வாங்கினான்.

“எந்த பொண்ணு..?” என்று ஓரளவுக்கு புரிந்தாலும் அதனை அவன் வாயால் கேட்க நினைத்து சிரித்து கொண்டே கேட்டான் விக்னேஷ்.

“அன்னைக்கு அந்த ஹாஸ்பிட்டல்ல பார்த்தோமே... அந்த பொண்ணு தான்... இன்னைக்கும் அந்த பொண்ணு தாண்டா பால கொட்டுச்சு... ஆனாலும் என்னை திட்டுது... சரியான திமிரு பிடிச்ச பொண்ணு போல...” என்று கடுகடு என்று முகத்தை வைத்து கொண்டு உடையை மாற்றினான்.

விக்னேஷும், ஆனந்தும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்து கொண்டனர். இருவருமே அவனை கிண்டலாக பார்த்து சிரித்தனர்.

சுந்தரம் கோபமாக இருந்தான். ஆனாலும் அவனுக்கு இருவரும் எதையோ மறைப்பது போல தோன்றினாலும் அதை கேட்க அப்போது நேரம் இல்லை என்று தோன்றியது.

மறுபடியும் அழகன் வந்தான்., “அண்ணா... இன்னும் என்ன பண்ணுறீங்க..? உங்கள மாமா கூப்பிடுறாரு... வாங்க..” என்று அவனது கையை பிடித்து இழுத்தான்.

“ரெண்டு பேரும் சேர்ந்து எதோ திருட்டுத்தனமா சிரிக்கிறீங்க... பார்த்துக்குறேன்...” என்று கூறி முறைத்து கொண்டே சென்றான்.

போகும் போதே மனதில் இன்னும் குழப்பமாக இருந்தது. அந்த பெண் மாப்பிள்ளை வீட்டு சொந்தமா என்ற யோசனை வந்து சென்றது. இருந்தாலும் அடுத்து அதை யோசிக்க நேரம் அமையவில்லை.

அனைத்து சண்டங்குகளும் முடிந்து அனைவரும் சாப்பிட்டு சென்றனர். மாப்பிள்ளை, பெண் இருவரையும் ஒன்றாக சாப்பிட அழைத்து சென்றனர். விக்னேஷ் உடன் சாப்பிட சென்றான் சுந்தரம். விக்னேஷிடம் சாப்பிட அமர்ந்த பின், அப்போது எதற்கு அப்படி சிரித்தான் என்று கேட்டான் சுந்தரம்.

“உனக்கே இன்னும் கொஞ்ச நேரத்துல தெரிய வரும்...” என்று புதிர் போல சொன்னான். புரியாமல் அவன் மீண்டும் மீண்டும் கேட்டான். ஆனாலும் அவன் எதுவும் சொல்லவில்லை.

தொடரும்....
 




MithraPrasath

SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
274
Reaction score
1,366
Age
31
Location
Bangalore
ஹாய் ப்ரெண்ட்ஸ் கொஞ்சம் லேட்டா வந்துருக்கேன். சாரி. இன்டர்நெட் பிரச்சனையா இருந்தது அதான் லேட். எப்டியும் அடுத்த அத்தியாயமும் இன்றே போட்டுடுவேன். கதை முடிய போகுது ப்ரெண்ட்ஸ். ப்ளீஸ் தவறாம படிச்சுட்டு எப்டி இருக்குன்னு சொல்லுங்க.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
மித்ராபிரசாத் டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஹப்பாடா?
ஒரு வழியாக மீனாட்சி, ஆனந்த்
இவங்களோட கல்யாணம்
நல்லபடியாக நடக்கப் போகுது
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அடுத்து, இனி சுந்தரத்துக்கும்
ஹாஸ்பிடல்ல இவனை
இடிச்ச அந்தப் பெண்ணுக்கும்
கல்யாணமா?
சூப்பர்ப், மித்ரா டியர்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஹே, அந்த பெண் யாரு?
சுந்தரத்துக்கு சொந்தக்காரப்
பெண்ணாப்பா?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top