• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Idaividaatha Innalgal - 20

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

MithraPrasath

SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
274
Reaction score
1,366
Age
31
Location
Bangalore
ஹலோ ப்ரெண்ட்ஸ்..
எனக்கு ஆதரவு தந்து இதுவரை கதையை படித்த அனைவருக்கும், லைக், கமெண்ட்ஸ் போட்ட அனைவருக்கும் நன்றி.. நன்றி. இந்த அத்தியாயத்தோடு கதை முடிவடைகிறது. கதையை பற்றிய உங்களது கருத்துக்களை சொல்லவும். என்னோட கதைல உங்களுக்கு பிடிச்சது என்ன..? பிடிக்காதது என்ன..? அத எல்லாம் மறக்காம சொல்லுங்க. நான் கதை எழுதுறதுல எதை மாற்றி கொண்டா நல்லா இருக்கும்.. கதைல எது இருந்தா இன்னும் நல்லா இருந்துருக்கும் அப்டின்னு நீங்க நினைக்கிறதையும் மறக்காம சொல்லுங்க..
தேங்க்ஸ்...

இடைவிடாத இன்னல்கள்​

அத்தியாயம் 20

பல வருடத்திற்கு பிறகு விக்னேஷை பார்க்கவும் சந்தோஷத்தில் வேகமாக சென்று, அவனை கட்டி தழுவி வரவேற்றான் சுந்தரம். ஆனால் விக்னேஷின் முகத்தில் அந்த சந்தோஷம் துளியும் இல்லாமல் இருந்தது. ஆனந்தும் வந்து விக்னேஷை சந்தோஷமாக வரவேற்றான்.

“எப்டி விக்னேஷ் இருக்க..? எவ்ளோ வருசமாச்சு பார்த்து... உன்னை காண்டக்ட் பண்ணவே முடியலையே...? எங்க போன இவ்ளோ நாள்... இப்போ எப்டி அதுவும் மலர் கல்யாணத்தப்போ இங்க சரியா வந்த..?” என்று சுந்தரம் புரியாமல் விடாமல் கேள்வியை கேட்டு கொண்டிருந்தான்.

விக்னேஷ் எதோ போல நின்றிந்தான். சுந்தரமோ, ஆனந்தோ அதை கவனிக்கவில்லை. சிவா அதை கவனித்து, “என்ன விக்னேஷ் அண்ணா., எதுவுமே பேச மாட்டறீங்க..? உங்க முகமே சரி இல்ல.. எதுவும் பிரச்சனையா அண்ணா...?” என்று கேட்டான்.

“ஆமாம் ஒரு முக்கியமான விஷயமா வந்துருக்கேன்... ஒரு பிரச்சனை. அந்த பரமு ஜெயில்ல இருந்து தப்பிச்சுட்டான்...”என்று விக்னேஷ் சொல்லும் போதே அனைவரும் அதிர்ச்சியாகினர். இந்த ஐந்து வருடங்களும் இருந்த நிம்மதி அவன் கூறிய பரமு தப்பித்துவிட்டான் என்றதில் காணாமல் போனது.

ஆனந்த் பதறி கொண்டு, “ஐயோ... என்னடா சொல்ற..? எப்படி தப்பிச்சான்..? இப்போ எங்க இருக்கான்..? அவன பிடிச்சுட்டீங்களா..?!!” என்று பயத்துடன் கேட்டான்.

“நேற்று அவங்க அம்மா அவன பார்த்து பேசிருக்காங்க.. நேற்று நைட்டே ஜெயில்ல இருந்து தப்பிச்சுட்டான் அவன்.. கண்டிப்பா அவன் இங்க தான் வந்துருக்கணும்.. அதான் உடனே இங்க நான் வந்தேன்...” என்று சொல்லும் போதே,

“எதுக்காக வந்துருக்கான்...? என்ன பண்ண போறான்..?” சிவாவும் பயத்துடன் கேட்டான்.

“அது தெரியல.. அவங்க அம்மாவும் இப்போ எங்கன்னு தெரியல..? போலீஸ் ரெண்டு பேரையுமே தீவிரமா தேடுறாங்க... எப்டியும் பிடிச்சுருவாங்க... ”

“இப்போ மலருக்கு தான் கல்யாணம்... அவள எதுவும் பண்ண வந்துருக்கானா..?” என்று சுந்தரம் சந்தேகத்தோடு கேட்டான்.

“தெரியல...” என்று விக்னேஷ் குழப்பத்துடன் சொல்லவும்,

“மலர்... மலர்... எங்க இருக்க..?” என்று வீடு முழுவதும் தேட ஆரம்பித்தனர் அனைவரும்.

மலர் வீட்டின் பின் பக்கத்தில் இருந்து காதில் ஹெட் போனுடன் வந்தாள். அவளை பார்த்த பின்னர் தான் அனைவருக்கும் நிம்மதியாக இருந்தது.

“ரெண்டு நாளைக்கு முன்னாடி மீனாட்சிய அவங்க பாட்டி வந்து பார்த்தாங்க.. ஒருவேளை மீனாட்சிய..” என்று ஆனந்து பதற,

மீனாட்சி அங்கிருந்து, “நான் இங்க தான் இருக்கேன்.. ஒருவேளை குழந்தைய எதுவும் பண்ண வந்துருக்கானா..?” என்று கேட்டால் அவளும் பயந்து.

“குழந்தை பத்தரமா தான் இருக்கா... அழகன் கடைக்கு கூட்டிட்டு போகுறத பார்த்தேன். கூட ஒரு போலீஸ் அனுப்பிருக்கேன். அவங்க பத்தரமா வந்துருவாங்க...

நீங்க நினைக்கிற மாதிரி அவன் அதுக்காக வந்த மாதிரி தெரியல... அப்டி குழந்தைய ஏதாவது பண்ணனும் ன்னு நினைச்சுருந்தா, குழந்தை பிறந்தப்போவே வந்துருக்கணும்...”என்று விக்னேஷ் யோசித்து கொண்டே சொன்னான்.

“அப்பறம் எதுக்கு வந்துருக்கான்..?” என்று கேட்டான் சுந்தரம்.

“எனக்கு தெரிஞ்சு, அன்னைக்கு மீனாட்சி அடிச்சதுல அவனுக்கு ஆண்மையே போய்டுச்சு... அதுல இருந்து ரொம்ப கோபமா இருந்தான். அதுனால கூட வந்திருக்கலாம்..” என்று விக்னேஷ் சொன்னான்.

“அது அவனுக்கு கிடைச்ச சரியான தண்டனை... அப்படி இருந்தும் அவன் நம்ம மேல கோபமா இருக்கானா..?” என்று சிவா கோபமாக கேட்டான்.

மீனாட்சி குழப்பமாக விக்னேஷை பார்த்தாள்.

“அண்ணா அன்னைக்கு நான் அவன அடிக்கல...” என்று சொன்னாள்.

மற்றவர்கள் புரியாமல் குழப்பமாக பார்க்க,

“அன்னைக்கு நான் தான் அவன அப்படி அடிச்சேன்.. மீனாட்சிய காப்பாற்ற வேற வழி தெரியல எனக்கு. அதான் அப்டி பண்ணிட்டேன். ஆனா அவனுக்கு அப்டி ஆகணும்ன்னு நினைச்சு பண்ணல நான்..” என்று வருத்ததோடு சொன்னான் சுந்தரம்.

“அன்னைக்கு நீ தான் அடிச்சியா..?” என்று ஆனந்த் கேட்டான்.

மீனாட்சி பதற்றத்துடன், “அன்னைக்கு பாட்டி என்கிட்ட பேசிட்டு, அண்ணி கிட்ட தான் பேசுனாங்க.. அப்போ...” என்று இழுத்தாள்.., “அண்ணி எங்க இருக்காங்க..?” என்று பயந்து போய் கேட்டாள்.

அப்போது தான் அங்கே அபி இல்லாததை உணர்ந்தான் சுந்தரம். அவனுக்குள் பயம் அதிகமாகியது. அபியை வீடு முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை. பின்புறம் மோட்டர் போடா சென்றதாக மலர் சொல்லவும், அங்கு விரைந்தனர். மோட்டர் ரூம் திறந்து இருந்தது. ஆனால் உள்ளே அபி இல்லை. சுந்தரத்திற்கு பதற்றம் அதிகமானது.

“அவள எதுக்கு அவன் கடத்தணும்..?”என்று கோபத்துடம் புரியாமல் கேட்டான் ஆனந்த்.

“இப்போ அவ ப்ரெக்னன்ட்டா இருக்கா... என்னை பழி வாங்குறதுக்காக அவள கடத்திருக்கணும்...” என்று கூறி சுந்தரம் மனமுடைந்து போய் கீழே சாய்ந்தான். அவனை விக்னேஷ் பிடித்து ஒரு இடத்தில் அமர வைத்தான். தகவல் சொல்லி அவளை தேட சொன்னான் விக்னேஷ்.

“என்ன அண்ணா அண்ணி நிஜமாவே கர்ப்பமா இருக்காங்களா..? இத ஏன் முன்னாடியே சொல்லல நீங்க ரெண்டு பேரும்..?”என்று வருத்ததுடன் கேட்டான் சிவா.

“இவ்ளோ நாள் கழிச்சு அண்ணி கர்ப்பமா இருக்காங்க.. அவங்கள பத்தரமா பார்த்துட்டு இருக்க வேண்டியது அவசியம். இத முன்னாடியே சொல்லிருந்த இத்தனை பிரச்சனை வந்துருக்காது அண்ணா... அவங்கள ரெஸ்ட் எடுக்க வச்சு, நாங்க அவங்கள பத்தரமா பார்த்துட்டு இருந்துருப்போம்..” என்று சொல்லி மீனாட்சியும் வருத்தப்பட்டாள்.

“உங்க கிட்ட சொல்லகூடாதுன்னு நாங்க நினைக்கல... டாக்டர் கிட்ட முழுசா செக் பண்ணிட்டு அவங்க கன்பார்ம் பண்ண அப்பறம் உங்க எல்லாரு கிட்டயும் சொல்லலாம்ன்னு இருந்தோம். உங்க எல்லாருக்கும் நம்பிக்கை தந்து அப்பறம் அது இல்லாம போச்சுன்னா, உங்கள கஷ்டபடுத்துற மாதிரி ஆகிடும். அதான் நாங்க சொல்லல... வேற எந்த காரணமும் இல்ல...” என்று சோகத்துடன் சொல்லி முடிக்கும் போதே சுந்தரத்தின் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது.

அனைவரும் இப்போது என்ன செய்வது என்று குழப்பத்தில் இருந்தனர்.

“அவள எங்க கடத்திட்டு போனானோ..? என்னால அவளுக்கு இப்படி ஒரு கஷ்டம் வந்துருச்சே...” என்று சுந்தரம் புலம்பி கொண்டிருந்தான்.

அப்போது அழகன் வேகமாக ஓடி வந்தான்.

“அண்ணா... அண்ணிய பாட்டி எங்கையோ கூட்டிட்டு போறாங்க.. எங்க போறாங்க.. உங்களுக்கு தெரியுமா..?” என்று சந்தேகத்துடன் கேட்டு கொண்டே வந்தான்.

உடனே விக்னேஷ், “நல்லா பார்த்தியா..? அது அபி தானா..?”

“ஆமாம் அண்ணா... அது அண்ணியே தான்.. எதுவும் பிரச்சனையா..?” என்று பதறி கொண்டு கேட்டான்.

“எதுல கூட்டிட்டு போறாங்க..?” என்று கேட்டான் விக்னேஷ்.

“ஒரு பழைய அம்பாசிடர் வண்டி...” என்று கூறி சுந்தரத்தின் அருகில் சென்று அமர்ந்து அவனை ஆறுதலாக கையை பற்றி நடந்ததை வினவினான்.
 




MithraPrasath

SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
274
Reaction score
1,366
Age
31
Location
Bangalore
விக்னேஷ் உடனே செயல் பட்டான். தஞ்சை போலீஸுக்கு தகவல் சொல்லி அபியை தேட அனைத்து ஏற்பாடுகளையும் செய்தான். விக்னேஷும் அபியை தேட சென்று விட்டான். சுந்தரமும் ஒரு புறம் அபியை தேட சென்றான்.

பெண்கள், குழந்தைகள் அனைவரையும் வீட்டிலே இருக்க சொல்லி, பாதுகாப்பிற்கு சிவாவையும், அழகனையும் வீட்டிலே விட்டுவிட்டு ஆனந்தும் கிளம்பினான் அபியை தேட. ஊர் முழுவதும் தேடியும் அவள் கிடைக்கவில்லை.

சுந்தரம் சோர்ந்து போய் விட்டான். மனதில் பயம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தது. அபியை நினைத்து நினைத்து வருத்தம் அதிகரித்து கொண்டே இருந்தது. விக்னேஷிடம் இருந்தும் எந்த தகவலும் இல்லை. ஆனந்தும் தேடி கொண்டே இருந்தான்.

வடிவு பாட்டி அபியை அவள் அம்மாவிற்கு ஆக்சிடென்ட் என்று பொய் கூறி அழைத்து சென்றாள். முன்னே டிரைவர் சீட்டில் பரமு அமர்ந்திருந்தான். பரமுவை இதுவரை அவள் பார்த்திராததால், அவனை டிரைவர் என்று எண்ணி கொண்டாள்.

அம்மாவிற்கு ஆக்சிடென்ட் என்று ஏன் அப்பா நமக்கு கால் செய்யவில்லை என்று சந்தேகம் வந்தது அபிக்கு. இருந்தும் பாட்டியை நம்பி உடன் சென்றாள். வண்டி செல்லும் பாதை ஊரை விட்டு வெளியே போவதை கவனித்து அவளுக்குள் வடிவு பாட்டி கூறியது பொய்யாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது. உடனே சுந்தரத்திற்கு கால் செய்தாள். பாட்டி போனை பிடிங்கி வெளியே வீசினாள்.

அபி தப்பிக்க வெளியே குதிக்கலாம் என்று எண்ணி கார் கதவை திறக்க முயற்சிக்க, முன் புறம் இருந்த பரமு ஒரு கத்தியை வடிவிடம் கொடுத்து அவளது கை, கால்களை கட்டி வாயை பொத்தி உட்கார வைக்க சொன்னான். அப்போது தான் அவன் தான் பரமு என்பது புரிந்தது அபிக்கு.

சுந்தரம் எங்கு வைத்து பரமுவை அடித்தானோ அதே இடத்திற்கு அபியை அழைத்து சென்றான் பரமு. அவளை பாட்டி இழுத்து வந்து ஒரு ஷேரில் கட்டி வைத்தாள். அபி பயத்தில் தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சி கொண்டிருந்தாள் அவர்களிடம்.

“உன் புருஷன் இங்க வரவும் உன்னை விட்டுடுறேன்.. என்ன சரியா..?” என்று நக்கலாக கூறி அபியின் கன்னத்தில் தடவினான்.

“ச்சி...” என்று அருவருப்புடன் முகத்தை திருப்பினாள்.

“அடடா கோபம் வருது... அதெல்லாம் வர கூடாது...” என்று கூறி இன்னொரு ஷேர் எடுத்து அவள் முன் போட்டு அமர்ந்தான்.

பின் வடிவு ஒரு போன் கொடுத்தாள். அதை வாங்கி அபியிடம் திரும்பி, “உன் புருஷனுக்கு கால் பண்ணுவோமா...?!!” என்று கேட்டு சிரித்தான்.

அவள் தைரியத்தோடு, “கூப்பிடு.. அப்போ தான் உனக்கு முடிவு வரும்... இப்போ எப்டியும் அவரு உன்னை கண்டுபிடிச்சுட்டு இங்க தான் வந்துட்டு இருப்பாரு...” என்று கோபத்துடன் சொன்னாள்.

“அதையும் பார்ப்போமா.. முடிவு எனக்கு வருதா..? இல்லை உனக்கு வருதா..? இல்ல உன் அருமை புருஷனுக்கு வருதான்னு பார்ப்போம்..” என்று கூறி விட்டு சுந்தரத்தின் நம்பருக்கு டயல் செய்தான்.

அவனும் உடனே போன் அட்டென்ட் செய்தான்.

“ஹலோ சார்.. எப்டி இருக்கீங்க..?” என்று பரமு கேட்கும் போதே, அவனது குரலை அடையாளம் கண்டு விட்டான் சுந்தரம்.

“டேய்... அபிய எங்க வச்சுருக்க..? என் கிட்ட நீ கிடைச்ச... அப்பறம் என்ன ஆவன்னு தெரியாது..” என்று கோபத்துடன் மிரட்டினான்.

“பொறுங்க பொறுங்க சார்.. அவ்ளோ கோபம் கூடாது... நீங்க சீக்கிரம் வந்தா உன்னோட பொண்டாட்டிய காப்பாற்றலாம், உன்னோட குழந்தையும் காப்பாற்றலாம்...” என்று சொல்லி நிறுத்தினான்.

“உனக்கு என் மேல தான கோபம்., வெறுப்பு... எதுக்கு அவள கஷ்ட படுத்துற.. அவளுக்கோ குழந்தைக்கோ ஏதாவாது ஆச்சு... அப்பறம் உன்னை நான் கொலை பண்ண கூட தயங்க மாட்டேன்..” என்று ஆவேசமாக கூறினான்.

“அதுக்கெல்லாம் உனக்கு நேரம் இல்லப்பா.. உன்னோட பொண்டாட்டிக்கு ஏற்கனவே நான் விஷம் கொடுத்துட்டேன்... இன்னும் கொஞ்ச நேரத்துல அவளும், உன்னோட குழந்தையும் போய் சேர்ந்துருவாங்க.. முடிஞ்சா அதுக்குள்ள வந்து சேரு.. உன்னோட பொண்டாட்டி கடைசியா பார்த்து பேசிக்கோ..” என்று கூறி எள்ளலாக சிரித்தான்.

அவன் அபிக்கு விஷம் கொடுத்ததாக கூறியதை கேட்டவுடன் சுந்தரத்திற்கு ஆடி போய்விட்டது. அவளுக்கு எதுவும் ஆகிவிடுமோ என்ற பயத்தில் பேச்சே வரவில்லை.

“என்ன சார் பேச மாட்றீங்க..? சீக்கிரம் வர்றீங்களா..?” என்று நக்கலாக கேட்டான்.

“நான் வர்றேன்டா... உன்னை கொலை பண்ண வர்றேன்டா... தைரியமானவனா இருந்தா அங்கயே இரு...” என்று கோபமாக கூறி போனை கட் செய்தான்.

அபிக்கு விஷம் கொடுத்திருப்பதாக கூறியது உண்மையா..? இல்லை பொய்யா..? என்று சந்தேகம் வந்தது சுந்தரத்திற்கு. இப்போது எங்கு இருப்பான் என்று எண்ண தொடங்கினான். அன்று நாம் அவனை அடித்ததற்கு பலி வாங்கவே இன்று வந்திருப்பதால், அன்று கடத்தி வைத்திருந்த அதே இடத்திலே வைத்திருக்க வாய்ப்பிருப்பதாக மனதிற்கு தோன்றவும்.., உடனே விக்னேஷ் மற்றும் ஆனந்தக்கு கால் செய்தான். தகவலை சொல்லி, வரும் போது ஒரு ஆம்புலன்ஸையும் வர சொல்லிவிட்டு கிளம்பினான் அந்த இடத்திற்கு.

அங்கு அபி சுந்தரம் வருவதை தெரிந்ததால், தைரியமாக இருந்தாள். ஆனாலும் பரமு தனக்கு விஷம் கொடுத்ததாக கூறியதை நினைத்து குழம்பி கொண்டிருந்தாள். தனக்கு இவர்கள் எதுவுமே கொடுக்காத போது எப்படி சுந்தரத்திடம் அப்படி சொன்னான்...?? இனி கொடுக்க போகிறானா..?!! என்று குழப்பம் அவளை பயத்தில் தள்ளியது.

இருந்தாலும் பொய் சொல்லி தான் வர வைக்கிறான்.., தன்னுடைய முடிவை தானே தேடி கொள்கிறான் என்று மனதில் நினைத்து ஒரு புறம் சந்தோஷ பட்டாள். அவள் நினைப்பதை புரிந்து கொண்டவன்,

“என்னடா நமக்கு விஷம் கொடுத்ததா சொல்றானே.. அப்டின்னு யோசிச்சுட்டு இருக்கியா..?” என்று கேட்டு சிரித்தான் பரமு.

“அவளுக்கு தான் விஷயமமே தெரியாதுல... அப்டி தான் நினைப்பா... எனக்கு தெரிஞ்சு எப்டியும் சுந்தரம் இங்க வரும் போது இவ உயிரை விட்டுடுவா.. எப்டியும் இப்போ மருந்து வேலை செய்ய ஆரம்பிச்சுருக்கும்...” என்று கூறி வடிவும் சிரித்தாள்.

அப்போது தான் அபிக்கு வயிற்றில் வலி வருவது போல உணர்ந்தாள். தொண்டையெல்லாம் அடைப்பது போன்று இருந்தது அவளுக்கு. பதற்றமாக இருந்தது. குழந்தைக்கு எதுவும் ஆகிவிட கூடாது என்று மனதில் ஆண்டவனை வேண்டினாள்.

பரமுவுக்கும், வடிவுக்கும் அவளை பார்த்து சிரிப்பாக இருந்தது.

“என்ன வயுறு வலிக்குதா..? வலிக்க தானே செய்யும்.. குடிச்சுருக்குறது விஷம்... அப்டி தான் இருக்கும்.. கொஞ்ச நேரம் பொறு.. உன் புருஷன் வரவும் அவனோட நிலைமையும் தெரிஞ்சுகிட்டு செத்து போ...” என்று பரமு அவளிடம் கெஞ்சுவது போல சொல்லிவிட்டு சிரித்தான்.

அவன் சிரிக்கும் போதெல்லாம் உள்ளுக்குள் நெருப்பாய் பொங்கியது அபிக்கு மனது. “உன்னால அவர ஒன்னும் பண்ண முடியாது.. நல்லவங்களுக்கு எப்போதுமே நல்லது தான் நடக்கும்... ஏற்கனவே உன்னை இங்க வச்சு தான் அவரு அடிச்சு உன்னை ஆம்பலையாவே இருக்க முடியாத மாதிரி செஞ்சுருக்காரு... மறந்து போச்சா..? அவர இங்க வந்து உன்னை அடிச்சு கொல்லத்தான் போறாரு...” என்று அவள் கோபத்தில் கர்வமாக சொல்லி, அவனது கோபத்தை தூண்டி விட்டாள்.

“ஹ்ம்ம்... எனக்கு மறக்குமா அதெல்லாம்.. அதுக்கு தானே இவ்ளோ நாள் காத்திருந்து இப்போ இவ்ளோ பெரிய காரியத்த பண்ணிருக்கேன்.. இன்னும் கொஞ்ச நேரத்துல நான் ஆசை பட்டது நடக்க போகுது...

என்னை ஆண்மை இல்லாதவனா செஞ்ச அவன நான் எப்டி சும்மா விட முடியும்.. அவன நான் கொலை எல்லாம் பண்ண மாட்டேன். நீ அப்டி நினைச்சு தான இப்டி பேசிட்டு இருக்க...

உனக்கு விஷம் கொடுத்த மாதிரி, அவனுக்கும் வேற ஒன்னு கொடுத்துருக்கேன்... இதெல்லாம் எப்போன்னு உனக்கு குழப்பம் வரும்..

சாப்பிட்ட பிறகு நீயும் உன்னோட புருஷனும் கூல் ட்ரிங்க்ஸ் குடிச்சீங்களே.. அதுல தான் இத கலந்துருந்தேன்... மற்ற எல்லாருக்கும் கூல் ட்ரிங்க்ஸ் கொடுக்கக நீ வெளில போனப்ப நான் வந்து உனக்கும், சுந்தரத்துக்கும் எடுத்து வச்சுருந்த கூல் ட்ரிங்க்ஸ்ல மருந்த கலந்துட்டேன். அதுவும் உன் புருஷன் வேண்டாம்ன்னு சொல்ல சொல்ல நீ ஆசையா கொடுத்தையே... அதுல தான் மருந்து கலந்து இருந்தது.

உனக்கு விஷம் கலந்தேன், உன் புருசனுக்கு என்ன மருந்து கலந்தேன்னு உனக்கு தெரியுமா..? கெமிக்கல் கேஸ்ட்ரேஷன்(Chemical castration).... அது என்ன மருந்துன்னு உனக்கு தெரியுமா..? அது சாப்பிட்டா என்ன நடக்கும்ன்னு தெரியுமா..?” என்று அவளை பார்த்து கேட்டான் பரமு..

வடிவு உடனே, “அவ தான் டாக்டர் ஆச்சே.. அவளுக்கு அந்த மருந்த பற்றி தெரியாம இருக்குமா என்ன..?” என்று அவளும் கோபமாக அவளை பார்த்தார்.

அபிக்கு அதுவரை இருந்த நம்பிக்கை எல்லாம் ஒரே நிமிடம் காணாமல் போனது. அவளுக்கு அந்த மருந்தின் விளைவை நினைக்கும் போதே தலை தானாக சுற்றியது.

“என்ன யோசிக்குற... அந்த மருந்த பற்றி தெரியும்ல.. நாய் மாதிரியான விலங்குக்கு அதோட எண்ணிக்கைய குறைக்கக் கொடுக்குற மருந்து.. அது மனுஷனுக்கு கொடுத்தா அவனுக்கு பாலுணர்ச்சியே போய்டும்... அது மட்டும் இல்லாம இன்னும் பல பக்க விளைவு வரும்... அந்த மருந்த தான் உன் புருஷனுக்கு கொடுத்துருக்கேன்..” என்று கூறி தான் நினைத்தது நடக்க இருக்கும் சந்தோசத்தில் வெறி கொண்டவனாக சத்தமாக சிரித்தான்.

அவனது சிரிப்பு சத்தம் கேட்கும் போது அவளுக்கு பயமே வந்தது. கோபமும் வந்தது. அடுத்த நொடியே வயிற்று வலி அதிகமாவதை அவள் உணர்ந்தாள். வலியில் அவள் துடிப்பதை பார்த்து மற்ற இருவரும் சந்தோஷப்பட்டனர்.

“சுந்தரத்தோட வாரிசு அழியுரத பார்க்கவே சந்தோஷமா இருக்குலமா..” என்று பரமு வடிவை பார்த்து கேட்டான்.

“ஆமாம்டா.. என் குடும்பத்துக்கு வாரிசு இல்லாம பண்ண அவனுக்கு வாரிசே இருக்க கூடாது.. அதுமட்டும் இல்ல அவன் குடும்பத்துக்குமே வாரிசு இருக்க கூடாது... அதுக்கும் ஏதாது வழி பண்ணனும்.. அவனோட குடும்பத்தையே பழி வாங்கணும்.. அவங்க யாருமே நிம்மதியா இருக்க கூடாது..” கோபத்தோடு சொன்னாள் வடிவு.
 




MithraPrasath

SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
274
Reaction score
1,366
Age
31
Location
Bangalore
வடிவு அப்படி சொல்லவும் அபிக்கு இன்னும் கஷ்டமாகவே இருந்தது. புத்தி சொல்லி திருத்த வேண்டிய தாயே மகனை இன்னும் ஏற்றி விட்டு வேடிக்கை பார்க்கிறார். அவர் பழி வாங்க நினைப்பது, தனது பெண்ணின் குடும்பத்தை என்று சிறிதும் நினைக்க வில்லை என்ற வருத்தமே வந்தது.

அப்போது வெளியில் யாரோ வருவது போன்ற ஓசை கேட்டது. உடனே அபியின் வாயை ஒரு துணியில் கட்டி விட்டு வேகமாக இருவரும் சென்று மறைந்து கொண்டனர். வருபவரை மறைந்து இருந்து தாக்க காத்திருந்தனர். சுந்தரம் பதட்டமாக ஓடி வந்தான். வாசலில் நின்று பார்க்கும் போது உள்ளே ஒரு ஷேரில் அபியை கட்டி வைத்திருப்பது தெரிந்தது.

அவளை காப்பாற்ற வேகமாக உள்ளே நுழைந்தான். மறைந்து இருந்த இருவரும் அவனை பின்புறமாக தலையில் அடித்தனர். நிலை தடுமாறி அவன் கீழே விழுகவும் வடிவு தன்னால் முடிந்த அளவு தனது வெறி தீரும் அளவுக்கு அவனை அடித்து கொண்டே இருந்தாள்.

அபிக்கு அதனை பார்த்து அழுக மட்டுமே முடிந்தது. எழுந்து செல்ல முடியாமல் அவளை அவர்கள் கட்டி வைத்திருப்பதால், அபி சுந்தரத்தை காப்பாற்ற முடியாமல் இருந்ததை நினைத்து வருந்தினாள். சுந்தரம் தலையில் கைவைத்தவாறு கீழே கிடந்தான்.

பரமு தான் வடிவை தடுத்து நிறுத்தி, “விடும்மா.. நீயே கொன்னுடாத... அவன் பொண்டாட்டி சாகுறத பார்க்குற வரைக்குமாது இருக்கட்டும்...” என்று கூறி, வடிவின் கையில் இருந்த கட்டையை பிடிங்கினான்.

அவனது வார்த்தைகளை கேட்ட சுந்தரம், எழுந்திரிக்க முடியாமல் தலையை மட்டும் திருப்பி அபியை பார்த்தான். அவளது முகத்தில் தெரிந்த கவலை, தாங்க முடியாத வலி எல்லாம் அவனை இன்னும் கஷ்ட படுத்தியது. ஒருவரை ஒருவர் பார்வையாலே நலம் விசாரிக்க தொடங்கினர். இது புரியாத மற்ற இருவரும்,

“ரெண்டு பேரும் என்ன லவ் பண்றீங்களா..?” என்று பரமு கிண்டலாக கேட்டான்.

வடிவு கோபத்தோடு சென்று அபியை கன்னத்தில் அடித்தாள். அவள் ஏற்கனவே வயிற்று வலியில் துடித்து கொண்டிருந்ததால் வடிவு அடிக்கவும் வலியை பொருத்து கொள்ள முடியாமல் இன்னும் உடலையே சுருக்கினாள். இதை பார்த்த சுந்தரம், “வேண்டாம்..” என்று கத்தினான்.

“ஓ... காதல் மனைவிய அடிக்க கூடாதோ..? அப்போ சரி... அம்மா நீ அவள நீ நல்லா அடி...”என்று கூறி சிரித்தான்.

அபியை இன்னும் அடிக்க போகிறார்கள் என்றவுடன், வலியை தாங்கி கொண்டு வேகமாக எழுந்தான் சுந்தரம். பரமு அவனை பிடித்து நிறுத்த, அவனுக்குள் புது வேகமே வந்தது. பரமுவை கோபத்தோடு தள்ளி விட்டுவிட்டு வேகமாக அபியை காப்பாற்ற சென்றான்.

வடிவு அவளை மறுபடியும் அடிக்க ஆரம்பித்தாள். சுந்தரம் வேகமாக சென்று வடிவை தள்ளி விட்டான். அபியை கட்டியிருந்த கயிற்றை கழட்டி விட்டான். வலியில் துடித்துக் கொண்டிருந்த போதும் அபி சுந்தரத்தை தலையில் அடிபட்ட இடத்தில் கை வைத்து பார்த்தாள்.

“உடனடியா ஹாஸ்பிட்டல் போகணும்... உங்களுக்கு பலமா அடிபட்டு இருக்கு...” என்று கூறிவிட்டு தனது வயிற்றில் கை வைத்தாள்.

“என்ன ஆச்சு.. என்ன பண்ணுது..? உனக்கு இவங்க விஷம் கொடுத்தாங்களா..?” என்று பதறி அவனும் கேட்டான்.

பரமு எங்கோ எழுந்து வேகமாக சென்றான். எதையோ தேடி எடுத்து வந்தான்.

கீழே விழுந்த வடிவு அதற்குள் ஒரு கட்டையை தேடி எடுத்து வந்திருந்தாள். சுந்தரத்தின் பின் புறம் அவனை அடிக்க அதை ஓங்கினாள். அதற்குள் அபி வடிவை கவனித்து விட, சுந்தரத்தை பிடித்து இழுத்து நகன்று சென்று விட்டாள்.

பரமு தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அபியை சுட நினைத்து குறி பார்த்து சுட, அதே நேரம் தான் அவர்கள் அங்கிருந்து நகன்றும் விட அங்கு வடிவு வந்து விட்டாள். குண்டு அவளது நெஞ்சை துளைத்தது.

அடிக்க நெருங்கி வந்த வடிவு திடீரென்று ஆ என்று கத்தி கீழே விழுந்தாள். என்ன நடந்தது என்று சுந்தரமும், அபியும் திரும்பி பார்த்தனர். அங்கு வடிவு குண்டு அடி பட்டு கீழே விழுந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

“அம்மா...” என்று பதறி கொண்டு ஓடி வந்தான் பரமு.. தன் வினை தன்னை சுடும் என்பது நிஜமானது. அவன் சுட நினைத்தது யாரையோ.. ஆனால் அங்கே சுடப்பட்டு இறந்தது அவனது தாய். தாங்க முடியாமல் அவன் அழுது கொண்டிருந்தான்.

பரமுக்கு கவனிக்கா நேரம், சுந்தரம் மெதுவாக அபியை அங்கிருந்து நகர்த்தி கூட்டி சென்றான். வெளியே சென்று கொண்டிருக்கும் போதே அபிக்கு அதற்கு மேல் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது என்று கூறி கீழே சாய்ந்தாள். அவளை தன்னோடு சாய்த்து கொண்டு, அப்படியே தூக்கி கொண்டு ஓடினான்.

நடக்கும் போது கால்களை யாரோ தட்டி விட, கீழே விழுந்தான் சுந்தரம். அதில் அபிக்கும் இன்னும் வயிற்றில் அடிபட்டது. வலி தாங்காமல் அவள் கத்தி அழுது அப்படியே மயங்கிவிட்டாள்.

பரமு தான் சுந்தரத்தின் கால்களை தட்டி அவனை கீழே விழுக செய்தான். சுந்தரத்தின் தலையில் துப்பாக்கியை வைத்து, “அவள இங்கயே விட்டுட்டு நீ வா..” என்று அவனை பிடித்து எழுப்பினான். சுந்தரமும் எதையும் முழுசாக முடித்து வைக்க வேண்டும் என்று மனதில் சுந்தரம் நினைத்து கொண்டு எழுந்தான்.

பரமு சுந்தரத்தை அபியிடம் இருந்து தள்ளி விட்டான். துப்பாக்கியை பின் புறம் இடுப்பில் வைத்துவிட்டு, கீழே கிடந்த ஒரு மர கட்டையை எடுத்தான். “உனக்கு கொடுத்த மருந்து வேலை செய்யுமான்னு எனக்கு தெரியாது.. ஆனா நான் அனுபவிச்ச அதே வலிய நீ அனுபவிக்கிறத நான் பார்க்கணும்..” என்று கூறி சுந்தரத்தை அடிக்க ஆரம்பித்தான்.

சுந்தரமும் அவனை பதிலுக்கு தாக்க, அங்கே இருவரும் சண்டை பயங்கரமாக போட்டு கொண்டிருந்தனர். அப்போது தான் அங்கு போலீஸ் வந்தனர். தூரத்தில் அபி கீழே விழுந்து கிடப்பது தெரிந்து வேகமாக ஓடி வந்தான் விக்னேஷ்.

சுந்தரம் கைக்கு கிடைக்கும் பொருள்களை எல்லாம் எடுத்து பரமுவை அடித்து கொண்டிருந்தான். பரமு சுந்தரத்தை கீழே தள்ளி அவனை தாக்க, ஒரு பெரிய கல்லை எடுத்து போட போகும் போது, விக்னேஷ் அவனை சுட்டான். நிலை தடுமாறி கல் பின் புறம் விழுந்தது. இருந்தாலும் சுந்தரத்தை விட மனமில்லாமல் தனது காலால் அவனை மிதிக்க முயன்றான். அப்போதும் துப்பாக்கியால் மாறி சுட பட்டு கீழே விழுந்தான்.

அபியையும், சுந்தரத்தை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர். அந்த பரமுவும் இன்னும் உயிருடன் இருப்பது தெரிந்து அவனையும் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அபியின் பெற்றோர், சுந்தரத்தின் சகோதர சகோதரிகள் அனைவரும் மருத்துவமனைக்கு வந்துவிட்டனர். சுந்தரம் தலையில் கட்டுடன் அபிக்கு என்ன ஆனதோ என்று பார்க்க வேகமாக விரைந்து வெளியே வந்தான். வெளியில் இருந்த அழகன் அண்ணனை கட்டி கொண்டு அழுக ஆரம்பித்தான். பின்புறம் மற்ற அனைவரும் நின்றிந்தனர். அவனது மனமோ அபியின் நிலையை தெரிந்து கொள்ளவே துடித்து கொண்டிருந்தது.

“என்ன அண்ணா ஆச்சு.. அண்ணிய அவன் என்ன பண்ணான்.. நாங்க எல்லாரும் ரொம்ப பயந்துட்டோம்.. உங்களுக்கு ஒன்னும் ஆகலையே...” என்று கூறி கண்களில் வழிந்த நீரை துடைத்து கொண்டே சுந்தரத்தையே பார்த்தான் அழகன்.

ஆனால் அவனோ பதில் சொல்லாமல், “அபிய எங்க அட்மிட் பண்ணிருக்காங்க..?” என்று கேட்டான்.

“அண்ணிய ஐசியு ல வச்சுருக்காங்க.. என்ன எதுன்னு ஒண்ணுமே சொல்ல மாட்டுறாங்க..” என்று வருத்ததுடன் கூறினான் சிவா..

ஐசியு பிரிவிற்கு விரைந்து சென்றான் சுந்தரம். வெளியே அபியின் தாய் அழுது கொண்டிருந்தார். சுந்தரத்தை பார்க்கவும், “என் பொண்ணுக்கு என்ன நடந்தது மாப்பிள்ளை.. அவளுக்கு என்னன்னு யாருமே ஒன்னும் சொல்ல மாட்டுறாங்க..” என்று கூறி சுந்தரத்தின் கைகளை பற்றி கொண்டு அழுதார்.

சுந்தரத்திற்கு பேச்சே வரவில்லை. என்ன சொல்வது.., தன்னால் தான் அபிக்கு இந்த நிலைமை... என்று மனதில் புலம்பி கொண்டிருந்தான் சுந்தரம்.

அப்போது டாக்டர் ஒருவருடன் பேசி கொண்டே விக்னேஷ் ஐசியுவில் இருந்து வெளியே வந்தான். அவர்களை பார்க்கவும், சுந்தரம் அருகில் சென்று, “டாகடர் அபிக்கு எப்படி இருக்கு..? எங்க குழந்தை..?” என்று இழுத்தான். அதற்கு மேல் கேட்க முடியாமல் அவன் கண்கள் கண்ணீரை கொட்டியது.

டாக்டர், “ரூம்க்கு வாங்க.. பேசலாம்...” என்று கூறி அமைதியாக சென்று விட்டார்.

விக்னேஷும் சுந்தரத்துடன் சென்றான்.

“நீங்க அட்மிட் பண்ண அந்த ஆளுக்கு இன்னும் உயிர் இருக்கு.. இவ்ளோ குண்டடி பட்டும் அவர் உயிரோட இருக்குறது பெரிய விஷயம்.. ஆனாலும் அவருக்கு பிழைக்க எந்த வாய்ப்பும் இல்ல.. எப்போனாலும் அவரு இறந்து போகலாம்..” என்று பரமு உயிருடன் இருப்பதை பற்றி ஆச்சர்யமாக கூறினார்.

சுந்தரம் குழப்பத்துடன் கேட்டு கொண்டிருந்தான். அந்த பரமு இன்னும் உயிரை விடாமல் இருப்பது அவனுக்குள் ஒரு வித பயத்தை ஏற்படுத்தியது.

“உங்க மனைவிக்கு ஒன்னும் இல்ல.. அவங்க நல்லா இருக்காங்க.. அவங்களுக்கு கொடுக்க பட்ட விஷத்த எடுத்தாச்சு.. அபாய கட்டடத கடந்துட்டாங்க.. அதே போல அவங்க வயிற்றுல இருந்த உங்க குழந்தைக்கும் ஒன்னும் இல்ல... ஆனா உங்க மனைவி கர்ப்பப்பை தான் அடி பட்டதுல ரொம்ப வீக் ஆகிடுச்சு..

இனி அவங்க டெலிவரி வரைக்கும் பெட் ரெஸ்ட் ல தான் இருக்கணும்.. அடுத்து ரொம்ப கவனமா பார்த்துக்கோங்க., ஏதாது ஸ்ட்ரெயின் பண்ணா குழந்தைக்கு ஆபத்து அதுனால தான் சொல்றேன்.... குழந்தைக்கு இப்போதைக்கு எந்த பாதிப்பும் இல்ல.. ஆனாலும் குழந்தை பிறந்த பிறகு தான் குழந்தைக்கு அந்த விஷத்தால எந்த பாதிப்பும் இருக்கான்னு தெரியவரும்..” என்று டாக்டர் சொல்லவும் தான் சுந்தரத்திற்கு சற்று நிம்மதியாக இருந்தது.

“கண்டிப்பா நாங்க இனி எந்த கஷ்டமும் அவளுக்கு வர விடாம பத்தரமா பார்த்துப்போம்..” என்று கூறினான்.

விக்னேஷ், “ஓகே டாக்டர்.. நாங்க அந்த பரமுவ சென்னைக்கு கூட்டிட்டு போகலாமா..?” என்று கேட்டான்.

டாக்டர் பேசுவதற்கு முன்பு சுந்தரம், “டாக்டர் இன்னொரு விஷயம் நீங்க எனக்காக பண்ணனும்...” என்று சொன்னான். விகேன்ஷ் புரியாமல் பார்த்தான்.
 




MithraPrasath

SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
274
Reaction score
1,366
Age
31
Location
Bangalore
டாகடர், “ஹ்ம்ம்.. சொல்லுங்க... என்ன பண்ணனும்..”என்று கேட்டார்.

“அபிய பற்றி எங்க குடும்பத்துல இருக்குற யாருக்கும் எதுவும் சொல்ல வேண்டாம்.. அதேபோல ஐசியுல இருக்க அந்த பரமு கேட்குற மாதிரி உங்க ஹாஸ்பிட்டல்ல வேலை பார்க்கிற நர்ஸ் கிட்ட சொல்லி, என் மனைவிக்கு கர்ப்பம் கலைஞ்சு போயடுச்சுன்னும், எனக்கும் ஆண்மை போயடுச்சுன்னும் பேச வைங்க...”என்று கூறவும், விக்னேஷும், டாக்டரும் குழம்பினர்.

“எதுக்கு நீ இப்படி பண்ண சொல்ற சுந்தரம்.. எனக்கு புரியல..” என்று கேட்டான் விக்னேஷ்.

“காரணமா தான்..” என்று விக்னேஷ் பார்த்து கூறிவிட்டு, டாக்டரிடம் திரும்பி, “ப்ளீஸ் டாக்டர்.. இந்த ஒரு ஹெல்ப் மட்டும் பண்ணுங்க.. அப்டி பண்ணுறது என்னோட மனைவி உயிருக்கு தான் நல்லது..”

“இல்ல நீங்க நினைக்கிற மாதிரியெல்லாம் நடக்காது.. நாங்க அப்டி பொய்யெல்லாம் சொல்ல முடியாது.. ஒரே ஐசியுல இருந்தாலும் அவர் நிலைமை ரொம்ப சீரியஸ்.. அந்த நிலைமைல அவரால எழுந்திரிக்க கூட முடியாது.. அப்டி இருக்குறப்போ உங்க மனைவிக்கு எந்த ஆபத்தும் அவரால வராது..

அதுவும் ஐசியுல அவர் பக்கத்துலே எப்போவும் ஒரு நர்ஸ் இருப்பாங்க.. எதுனாலும் நமக்கு உடனடியா தெரிய வந்துரும்... உங்க மனைவி கண் முழிச்ச உடனே நார்மல் வார்டுக்கு மாத்திடுவோம்.. நீங்க பயப்படாதீங்க..” என்று டாக்டர் தெளிவாக சொன்னார். அப்போதும் சுந்தரம் தனது முடிவில் இருந்து மாறவில்லை.

“இல்ல டாக்டர்.. இதுனால உங்களுக்கு எந்த பாதிப்பும் வராது.. நீங்க இத யார் கிட்டயும் சொல்ல வேண்டாம். அந்த பரமு கேட்கிற மாதிரி மட்டும் சொல்லுங்க ப்ளீஸ்...” என்று கெஞ்சினான்.

பின் ஒருவாறு சம்மதித்தார் டாக்டர். அதேபோல நர்ஸ் இருவரை பேசவும் சொல்ல சொன்னார்.

உள்ளே சென்று சிறிது நேரத்திற்கு பிறகு சுந்தரம், விக்னேஷ் இருவரும் வெளியே வந்தனர். வெளியே குடும்பத்தினர் அனைவரும் டாக்டர் என்ன சொன்னார் என்று கேட்டு ஆர்வமாக காத்திருந்தனர். சுந்தரம் அமைதியாக வெளியே வந்தான்.

விக்னேஷ், “அபிக்கு எதுவும் இல்ல...” என்று மொட்டையாக கூறினான்.

உடனே சுந்தரம், “அபிக்கு ஒன்னும் இல்ல.. ஆனா குழந்தை தான் இல்லாம போய்டுச்சு..” என்று சொல்லவும், விக்னேஷ் குழப்பமாக அவனை பார்த்தான்.

உடனே அபியின் தாய் தான் உடைந்து போய் அழுக ஆரம்பித்தார். அதே நேரம் அங்கு உள்ளே டாக்டர் சொல்லிய படி நர்ஸ் இருவரும் அந்த பரமு கேட்பது போல அபிக்கு கர்ப்பம் களைந்து விட்டது என்று பேசி கொண்டனர். சுந்தரமும் ஆண்மை இழந்து விட்டதாக கூறினர். அதை கேட்ட உடன் வெளியே கேட்கும் அழு குரலும் இவர்கள் கூறியதை உண்மை என்று நம்பி அந்த பரமு நினைத்தது நடந்த சந்தோஷத்தில் உயிரை விட்டான்.

டாக்டரிடம் அந்த நர்ஸ் இருவரும் நடந்தவற்றை உரைத்தனர். கேட்ட உடன் டாக்டர் குழப்பமாக கேட்டு கொண்டிருந்தார்.

சுந்தரம், “இதுக்காக தான் அப்டி சொல்ல சொன்னேன் டாக்டர்... இனி நான் மற்ற எல்லார் கிட்டயும் உண்மைய சொல்லிடுறேன்.. நீங்க கவலை படாதீங்க..” என்று கூறிவிட்டு சந்தோஷமாக அபியை பார்க்க சென்றான்.

அங்கு அபி பரமுக்காக கூறிய அனைத்தையும் அவளும் கேட்டு, அதிர்ச்சியில் உறைந்து போய் இருந்தாள். ஐந்து வருடத்திற்கு பிறகு தங்களுக்கு கிடைத்த வரம் இன்று காணாமல் போனது என்று கலங்கி போய் இருந்தாள். அதுவும் சுந்தரத்தின் நிலைக்கு தான் தான் காரணம் என்று வருத்ததுடன் இருந்தாள்.

அப்போது சுந்தரம் அபியை பார்க்க உள்ளே வந்தான். அபிக்கு அருகில் அமர்ந்து அவளது கையை ஆதரவாக பற்றினான். அவனை பார்க்கவும் அபிக்கு அடக்க முடியாமல் அவனது மடியில் சாய்ந்து அழுக ஆரம்பித்தாள்.

“என்னை பழி வாங்க அந்த பரமு உன்னை இப்படி பண்ணுவான்னு நான் எதிர் பார்க்கல.. என்னால நீ ரொம்பவே கஷ்டத்த அனுபவிச்சுட்ட.. என்னை மன்னிச்சுடு.. இனி ஒரு நாளும் உனக்கு கஷ்டம் வர நான் விடமாட்டேன்..” என்று அவளிடம் மன வருத்தத்துடன் சொன்னான்.

“நீ எதுக்கு மன்னிப்பு கேட்குற.. நமக்கு என்ன நடக்கணும்ன்னு இருக்கோ அது தானே நடக்கும்.. நான் எல்லாத்தையும் கேட்டேன். நம்ம குழந்தை நம்மள விட்டு போய்டுச்சு.. உனக்கும்..” என்று கூறி அதற்கு மேல் முடியாமல் அழுதாள்.

சுந்தரம் அவளை நிமிர்த்தி, “நீ நினைக்கிற மாதிரி எதுவும் நடக்கல.. நம்ம குழந்தை நம்மள விட்டு போய்டுச்சுன்னு நீ எப்டி நம்பின.. நம்ம விருப்பம் இல்லாம நம்ம குழந்தை நம்மள விட்டு போகாது..” என்று மகிழ்ச்சியோடு சொன்னான்.

“ஆனா அந்த நர்ஸ்..” என்று அவள் சொல்லும் போதே,

“அது அந்த பரமுக்காக சொல்லப்பட்ட பொய்.. இருக்கும் போதும் அவன் வன்மத்தோடு இறக்க வேண்டாம்ன்னு நான் தான் அப்டி ஒரு பொய் சொல்ல சொன்னேன்.. ஆனா அது உண்மை இல்ல.. அது போல அந்த பொய் கேட்ட பிறகு தான் அவன் நிம்மதியா இறந்து போனான்.” என்று சுந்தரம் நிம்மதி பெருமூச்சுடன் சொன்னான்.

“அப்போ அந்த ஜூஸ் குடிச்சும் உங்களுக்கு ஒன்னும் ஆகலையா..?!!” என்று குழப்பத்துடன் கேட்டாள்.

“அந்த ஜூஸ் நான் குடிக்கவே இல்ல.. எனக்கு சோடா கலந்த ஜூஸ் குடிச்சா தலைவலி வரும்.. ஆனாலும் நீ ஆசையா கொடுத்ததால, அத குடிக்கிற மாதிரி உன் முன்னாடி வாங்கிட்டு அப்பறம் வெளில போய் கீழ ஊத்திட்டேன்.. சாரி.. ” என்று கூறி சிரித்தான்.

அவன் சொன்ன பிறகு தான் அவளுக்கு உயிரே வந்தது போல இருந்தது. சந்தோசத்தோடு அவன் மேல் சாய்ந்து அழுதாள். சுந்தரம் அபியின் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்து,

“இனி உன்னோட கண்களில் ஆனந்த கண்ணீர் கூட வர கூடாது..” என்று கூறி அவளது நெற்றியில் முத்தமிட்டான்.

வெளியே அங்கு விக்னேஷ் நடந்த அனைத்து உண்மைகளையும் அனைவருக்கும் கூறினான். அப்போது தான் அனைவருக்கும் நிம்மதியாக இருந்தது.

ஒரு வருடத்திற்கு பிறகு....

சுந்தரம், அபிநயாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்திருந்தது. குழந்தை எந்த குறையும் இன்றி நல்லபடியாக பிறந்திருந்தது. இன்று குழந்தைக்கு பெயர் வைக்க ஏற்பாடு செய்திருந்தனர். அதற்கு மொத்த குடும்பமும் ஒன்று கூடி இருக்கின்றனர்.

விக்னேஷ் இன்றும் வந்திருந்தான். நல்ல செய்தி ஒன்றோடு. அந்த கடத்தல் கும்பல் முழுவதையும் பிடித்து விட்டதாக கூறினான். “உன்னோட குழந்தை உங்க குடும்பத்துக்கு இருந்த அத்தனை பிரச்சனைகளையும் முடிச்சு வச்சு, சந்தோஷத்த தொடங்கி வைக்க பிறந்துருக்கான்..”

நிஜத்தில் குழந்தை பிறந்து அனைத்து துன்பங்களும் முடித்து வைத்துவிட்டது என்று அனைவரும் மகிழ்ந்தனர். பின்னர் குழந்தைக்கு கெளதம் என்று பெயர் வைத்தனர். அனைவரும் குழந்தையின் காதில் கெளதம் என்று பெயரை சொல்லி கூப்பிட்டனர். அனைத்து சடங்குகளும் செய்து முடித்து சாப்பிட சென்றனர். குழந்தையை தோளில் போட்டு கொண்டு அபி பேசி கொண்டே இருந்தாள்.

இதை பார்த்த மீனாட்சியும், சௌந்தர்யாவும் என்ன சொல்கிறாள் என்று கேட்க அருகில் வந்தனர்.

“பாலினம் பார்க்காம எல்லார் கிட்டயும் ஒரே மாதிரி இருக்கனும்.. ஆணும் பெண்ணும் சமமா இருக்கனும்..” என்று பேசி கொண்டிருந்தாள்.

“என்ன அண்ணி இப்போவே அட்வைஸா..?!! பாவம் அவன் சின்ன குழந்தை.. அவனுக்கு அது புரிய கூட செய்யாது..”என்று மீனாட்சி சொன்னாள்.

“இது என்னோட கடமை.. என்னோட குழந்தைக்கு கருல இருக்கும் போதே இத சொல்லிட்டு இருந்தேன்.. இப்போவும் சொல்வேன், எப்போவும் சொல்வேன்.. நீங்களும் அத செய்யுங்க..” என்று சொல்லிவிட்டு சிரித்தாள்.

அவர்கள் இருவரும் கிண்டல் செய்வது போல தலையை அசைத்து சிரித்தனர். அப்போது பின்புறம் சாப்பிட்டு முடித்து விட்டு வந்த விக்னேஷ்,

“அபி சொல்றது சரி தான்.. குழந்தைய வளர்க்குறதுல பெரிய பங்கு அம்மாக்கு தானே.. அப்போ அவங்க தான் குழந்தைக்கு ஆணும் பெண்ணும் சமம்ன்னு சொல்லி கொடுக்கணும்.. அத சொல்லி கொடுக்குறது மட்டும் இல்லாம அத செயலாவும் பண்ணனும்..

இந்த காலத்துல கொஞ்சம் மாற்றம் வந்தாலும், ஆணும் பெண்ணும் இன்னும் சமம் ஆகல... ஏன்..? காரனும் அவங்கள வளர்க்குற பெற்றவங்க தான் அதுக்கு காரணம்.

குழந்தைக்கு வாங்கி கொடுக்குற பொருள், அவங்க கிட்ட பேசுறப்போ, நடந்துக்குறப்போ எல்லாமே ஆணும், பெண்ணும் சமம்ன்னு காட்டனும். அப்போ தான் குழந்தைக்கு மனசுல அது புரியும்..” என்று அவனும் சொன்னான்.

“இப்போ நாங்க அப்டி நடந்துகுறது இல்லைன்னு சொல்றியா..?” என்று ஆனந்தும் அவனை முறைத்து கொண்டு கேட்டான்.

“ஆமாம்.. குழந்தைக்கு கிப்ட்ன்னு பெண் குழந்தைக்கு வேற மாதிரியும், ஆண் குழந்தைக்கு வேற மாதிரியும் வாங்கி கொடுக்குறதே தவறு..

அதுவும் பெண் குழந்தைக்கு சின்ன வயசுலே டெடி, கிச்சன் செட் வாங்குறதும் ஆண் குழந்தைக்கு கார் வாங்குறதுன்னு நீங்களே குழந்தை மனசுல பிரிவினைய வளர்க்குறீங்க.. அப்பறம் எப்டி குழந்தை சமமா வரும்.. அவங்க மனசுல அப்போவே நாம இப்டி தான் இருக்கணும் அப்டின்னு நினைப்பு வந்துரும்.. அத தான் நீங்க மாற்றனும்..

இன்னைக்கு பெண்களுக்கு நடக்குற குற்றங்களுக்கு முக்கால் வாசி காரணம் அவங்க வளர்ந்த விதம் தான். அதுக்கு தான் குழந்தைய ஆரம்பத்துல இருந்தே கவனமா வளர்க்கணும்.. அப்போ தான் இந்த உலகம் பெண்களுக்கு எந்த ஆபத்தும் இல்லாத உலகமா மாறும்..” என்று மனதில் தோன்றியதை கூறினான்.

உண்மையில் ஆண்கள் இவ்வாறு தவறு செய்வதற்கு முதல் காரணம் அவனது தாய் அவனை தவறு செய்ய ஆரம்பிக்கும் போதே தண்டிக்காமல் அதை விட்டு விடுவதே, பின்னாளில் அவன் ஒரு பெரிய குற்றவாளியாக மாற்றி விடுகிறது. அது அவனுக்கு தவறாக ஒரு நாளும் தெரிவதே இல்லை.

விக்னேஷ் கூறியதை கேட்டு அனைவரும் ஏற்று கொண்டனர். நாங்க அப்படி இனி வளர்க்குறோம்.. என்று சொல்லி உறுதி எடுத்தனர். அவர்களது வாழ்வும் இனி மகிழ்ச்சியில் தொடரும்.

முற்றும்...
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
மித்ராபிரசாத் டியர்
 




Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,505
Reaction score
29,240
Age
59
Location
Coimbatore
கதை நன்றாக இருந்தது. தலைப்பு எதிர்மறையாக இருப்பது என் பார்வையில் சரியில்லை எப்பொழுதும் நேர்மறையாக சிந்திக்க வேண்டும் என்பது என் கருத்து
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
Arumaiyana story. Happy ending .entha kulanthaiyum nalla kulanthai than mannil pirakaiyile avan nallavan avathu theeyavan avathu annai valarpinilie
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top