• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Idhu Irul Alla! - 18

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Annapurani Dhandapani

மண்டலாதிபதி
Joined
Jan 31, 2018
Messages
346
Reaction score
3,223
Location
Chennai
இது இருளல்ல!

18.

நன்றாகத் தூங்கியெழுந்த யாமினிக்கு வாசு கூறிய வார்த்தைகளே காதில் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தன!

அவன் தன்னுடைய உயிராக என்னை நினைக்கிறானா! ஆனால் நான் அவனுக்காக எதையுமே செய்யவில்லையே என்று நினைத்து வியந்து கொண்டிருந்தாள்!

அதே நேரத்தில் அவன் சொன்னது போலவே என் தேவைகளை நான் சொல்லாமலேயே புரிந்து கொண்டு அதை பார்த்து பார்த்து நிறைவேற்றியும் வந்துள்ளானே என்று நினைவில் கொண்டு வந்து வியந்தாள்!

அதற்கு மேல் வாசு செய்து வைத்த சமையல் வேறு அவளுக்கு அமிர்தம் போல இனித்தது! ஏதோ அவனும் அவன் தங்கைகளும் தனக்காகவே மெனக்கெட்டு இவ்வளவு சுவையான சாப்பாட்டை செய்திருப்பதாக நினைத்து நினைத்து தனக்குள் மகிழ்ந்து கொண்டாள்!

அன்றிரவு அவளுக்குத் தூக்கம் வரவில்லை! மதியம் நன்றாகத் தூங்கிவிட்டதாலா அல்லது இன்று புதிதாய் தன் மனதை உணரத் தொடங்கியதாலா என்று அவளுக்கே புரியவில்லை!

எழுந்து உட்கார்ந்தவள் கட்டிலில் நன்றாகத் தூங்கிக் கொண்டிருக்கும் வாசுவைப் பார்த்தாள்! அவன் மிக மிக அழகாக இருப்பதாக அவளுக்குத் தோன்றியது!

இத்தனை நாட்களாக அவனைப் பற்றி பெரிதாக எதையுமே நினைக்காதவள் இன்று ஏதோ அந்த அறைக்குள் புதிதாக நுழைந்தது போல உணர்ந்தாள்!

அவனையே பார்க்க வேண்டும் போல இருந்தது வேறு அவளுக்கு புதிதாக இருந்தது!

எனக்கு என்னாச்சு? நா ஏன் இப்டி நடந்துக்கறேன்! ம்ச்! கண்ண மூடித் தூங்கினா எல்லாம் சரியாய்டும்! என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டு படுத்து கண்ணை மூடிக்கொண்டாள். ஆனால் மூடிய கண்களுக்குள் வாசு வந்து சிரித்தான்!

இதென்னடா வம்பாப் போச்சு? என்று நினைத்தபடி புரண்டு படுத்தவளின் கையில் அவளுடைய கைப்பேசி தட்டுப்பட்டது! அதை எடுத்து எதையோ அழுத்த, அது அவள் எடுத்த படங்களின் களஞ்சியத்துக்குச் (photo gallery) சென்றது!

அதில் அன்று வாசு தனக்கு இந்த கைப்பேசியின் பயன்பாடு குறித்து கற்றுத் தருகையில் எடுத்த செல்ஃபீயைப் பார்த்தாள்!

துணி துவைக்கும் கல்லில் அவன் மேல் இடித்தபடி அமர்ந்த நிலையில் இருவர் தலையும் ஒட்டிக் கொண்டும் இருவரின் கன்னங்களும் கிட்டத்தட்ட உரசிக் கொண்டும் புன்னகைத்துக் கொண்டிருந்த செல்ஃபீயைப் பார்த்ததும் அவளுக்கு ஒரு பக்கம் சிரிப்பாக இருந்தது! மறுபக்கம் வெட்கமாக இருந்தது!

நானும் அவரும் அழகான ஜோடில்ல! என்று தனக்குத் தானே கேட்டு சிரித்துக் கொண்டாள்.

அவன் கற்றுத் தந்தபடி அந்தப் படத்தை பெரிதுபடுத்தி, அவனுடைய கண்கள், நெற்றி, புருவம், அடர்ந்த கரிய மீசை, வெள்ளைப் பற்கள், கன்னம் என்று ஒவ்வொன்றாக தனித்தனியாக பெரிதுபடுத்திப் பார்த்து, அவனை ரசித்துக் கொண்டிருந்தாள்!

தூங்கிக் கொண்டிருந்த வாசு தூக்கத்தில் புரண்டு படுக்க, எங்கே, தான் அவனை இப்படி ரசித்துக் காெண்டிருப்பதைக் கண்டுவிடுவானோ என்று பயந்து அவசரமாகத் தன் கைப்பேசியை மூடி வைத்துவிட்டு கண்களை மூடிக் கொண்டாள்! மூடிய கண்களுக்குள் மீண்டும் வாசு வந்து புன்னகைக்க, அவனைப் பற்றிய இனிய கற்பனையில் மூழ்கத் தொடங்கினாள்!

இவளுடைய மாற்றமோ, இவள் காணும் கனவுகளோ எதையுமே உணராத வாசு ஆழ்ந்த நித்திரையில் இருந்தான்!

திடீரென்று யாரோ விசிப்பது போல சத்தம் கேட்டது யாமினிக்கு! அவசரமாக எழுந்து பார்க்க, வாசுதான் தூக்கத்திலேயே மெல்லிய குரலில் ஏதோ உளறிக் கொண்டிருந்தான்!

மின் விளக்கைப் போட்டுவிட்டு அவனருகில் சென்று பார்த்தாள்! அவன் தூங்கிக் கொண்டுதான் இருந்தான்! ஆனால் அவன் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது! ஏதோ முனகியபடி இருந்தான்!

"வாசு! என்னாச்சு?" என்று மெதுவாகக் குரல் கொடுத்து அவனுடைய கன்னத்தில் தட்டினாள் யாமினி!

தட்டிய அவளுடைய கையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டவன்,

"ம்மா! வாம்மா! வாம்மா! நீ வாம்மா!" என்றான்!

யாமினி அதிர்ந்தாள்! தன் கையை உருவிக் கொள்ள முயல, அவன் அவளுடைய கையை விடாமல் இன்னும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு,

"உம்மடில படுத்துக்கறேன்! நீ வாம்மா!" என்று குழந்தை போல கூறிக்கொண்டே அவளை இழுத்தான்!

அவள் அவன் மேல் விழுந்து விடாமல் சுதாரித்துக் கொண்டாள்!

ஆனால் அவனோ,

"நீ என்ன விட்டுப் போகாதம்மா! ப்ளீஸ் உக்காரும்மா!" என்று இழுத்து அவளை அமர வைத்து, தன் தலையை அவள் மடி மீது வைத்துக் கொண்டான்! அவளுடைய கையை தன் கன்னத்தில் அழுத்திப் பிடித்துக் கொண்டு தூங்கியே போனான்! அவனுடைய கண்களிலிருந்து வழியும் கண்ணீரும் நின்றுவிட்டது! அவன் முனகலும் அடங்கியது!

வாசுவைப் பார்த்து யாமினிக்கு ஒரு பக்கம் ஆச்சர்யமாகவும் மறுபக்கம் பாவமாகவும் இருந்தது!

அடடா! மின்விளக்கை அணைக்கவில்லையே! என்று நினைத்து எழ முயன்றாள்!

அவனுடைய கன்னத்தில் அழுந்திக் கொண்டிருந்த கையை விலக்கிக் கொள்ள முயற்சித்தாள்! அவன்தான் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறானே?! அவளால் தன் கையை அசைக்கக் கூட முடியவில்லை! அமர்ந்திருந்த நிலையிலிருந்தும் அசைய முடியவில்லை!

அப்படியே அமர்ந்திருந்தாள்! இவ்வளவு நேரம் நிழலை ரசித்துக் கொண்டிருந்தவள், இப்போது நிஜத்தை ரசிக்கத் தொடங்கினாள்!

ரசித்துக் கொண்டிருந்தவள் அப்படியே கண்ணயர்ந்தும் விட்டாள்!

காலை அவள் கண்விழிக்கும் போது, தான் வாசுவின் அருகில் கட்டிலில் படுத்திருப்பது கண்டு குழம்பினாள்!

நா எப்டி இங்க வந்தேன்? என்று யோசித்தவளுக்கு இரவு நடந்தது நினைவுக்கு வர, மின் விளக்கைப் பார்த்தாள்! அது அணைந்திருந்தது!

ஐயோ! இத யார் அணைச்சிருப்பாங்க? என்று நினைத்தபடியே திரும்பிப் பார்க்க, வாசு இன்னும் தூங்கிக் கொண்டிருந்தான்! அவளுடைய கையை அவன் இன்னும் பிடித்துக் கொண்டிருப்பதை அப்போதுதான் அவள் உணர்ந்தாள்!

மெதுவாக தன் கையை உருவிக் கொண்டு எழுந்து சென்றாள்!

அவள் சமையலறையில் மும்முரமாக வேலை செய்து கொண்டிருக்கும் போது வாசு எழுந்து வந்தான்!

அவளும் ருக்மணி மாமியும் ஏதோ சமைத்துக் கொண்டிருந்தனர்! இவன் வருவது கண்டு, மாமி வாசுவின் கைகளில் காபியைக் கொடுத்துவிட்டு கேட்டாள்!

"எத்தன மணிக்கு நீ ஆஃபீஸ்க்கு கௌம்புவ வாசு?"

"இன்னிக்கும் லீவ்தான்! நாளைக்குதான் டூட்டி ஜாயின் பண்றேன் மாமி!" என்று கூறி, அவன் யாமினியைப் பார்த்துக் கொண்டே காபியை வாங்கிக் கொண்டு போனான்!

சிறிது நேரத்தில் ஐஷு எழுந்து வந்தாள்! வந்தவள் நேராக யாமினியிடம் சென்று,

"அண்ணி! நீங்க தெச்சு தந்தீங்களே, அந்த பிங்க் சுடி! அது கொஞ்சம் லூசா இருக்கு! லைட்டா பிடிச்சு குடுங்க அண்ணி! நா ஊருக்கு போக பேக் பண்ணனும்!" என்றாள்.

"ம்! சமையல் முடிச்சிட்டு பண்ணித் தரேன்!" என்று கூறிவிட்டு தன் வேலையைத் தொடர்ந்தாள் யாமினி!

சொன்னது போல சமையலை முடித்து விட்டு ஐஷுவின் சுடியை தைக்க உட்கார்ந்த யாமினிக்கு இடுப்பு வலித்தது! உட்கார முடியாமல் சிரமப்பட்டாள்!

ஏதோ எடுப்பதற்காக வந்த வாசு இவள் படும் அவஸ்த்தையைக் கண்டுவிட்டு குற்றமாக உணர்ந்தான்! அவனுக்கு நேற்றிரவு நடந்தது நினைவுக்கு வந்தது!

ஏதேச்சையாக தான் கண் விழித்துப் பார்க்கும் போது, தான் அவள் மடியில் தலை வைத்து உறங்கிக் கொண்டிருப்பதையும் அவளுடைய கையை கெட்டியாகப் பிடித்திருப்பதையும், அதனால் அவள் அமர்ந்த நிலையிலேயே உறங்குவதையும் கண்டவன் அதிர்ந்தான்! மின் விளக்கு வேறு எரிந்து கொண்டிருந்தது கண்டு குழம்பினான்!

மெதுவாக எழுந்து மணி பார்த்தால், அதிகாலை நான்கு என்று கைப்பேசி சொன்னது!

அடக்கடவுளே! நேத்து நைட்டு நா என்ன பண்ணித் தொலச்சேன்னு தெரிலயே! இவ என்ன சமாதானம் செய்யறேன் பேர்வழின்னு என் பக்கத்தில வந்திருப்பா போலிருக்கு! அவள அம்மான்னு நெனச்சி அவ மடியில தூங்கியிருக்கேன்! பாவம்! என்னால இவளுக்கு எவ்ளோ கஷ்டம்! இவ வாழ்க்கையே என்னாலதான் நாசமாப் போச்சு! இப்ப நானே இவள நோகடிக்க ஆரம்பிச்சுட்டேனா? என்று தன்னையே நொந்து கொண்டான்!

அவளை சரியாகப் படுக்க வைத்துவிட்டு மின் விளக்கை அணைத்துவிட்டு வந்து அவளருகில் படுத்தான்!

ஏனோ தெரியவில்லை! அவளுடைய உள்ளங்கையின் கதகதப்பு வேண்டும் போல இருந்தது அவனுக்கு! அதனால் அவளுடைய கையை எடுத்து திரும்பவும் தன் கன்னத்தில் வைத்துக் கொண்டான்! விட்ட தூக்கத்தை மிகவும் நிறைவாக உணர்ந்தபடியே தொடர்ந்தான்!

இரவு வெகு நேரம் அமர்ந்த நிலையிலேயே உறங்கியதால் அவளுக்கு இப்போது இடுப்பு வலிக்கிறது என்று புரிந்து கொண்டவன், தன்னுடைய பெற்றோரின் அறைக்குச் சென்று பவதாரிணி தன் இடுப்பு வலிக்காகப் பயன் படுத்தும் களிம்பை கேட்டு வாங்கி வந்தான்!

"யாமினி!"

"ம்!" நெளிந்தபடியே தைத்துக் கொண்டிருந்தவள் அவன் அழைத்ததும் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்!

"சாரி! நேத்தி நைட்டு... அம்மான்னு நெனச்சு.... உன் மடியில தூங்கிட்டேன்..... சாரி..." என்றான்.

அவனைப் பார்த்துப் புன்னகைத்துவிட்டு அவள் சொன்னாள்.

"பொண்டாட்டி மடில புருஷன் தூங்கலாம்! தப்பில்ல வாசு!"

அவள் சொன்னதைக் கேட்டவன் மெலிதாகச் சிரித்தான்!

"என்ன சிரிக்கறீங்க?"

"ஒண்ணுல்ல! ம்.... தெச்சு முடிச்சுட்டியா?"

"ம்.... முடிச்சாச்சு!" என்று கூறிக் கொண்டே தைத்த துணியை நன்றாக உதறிவிட்டு மடித்தாள்! அதற்குள் ஐஷுவே வந்து,

"தேங்க்ஸ் அண்ணி!" என்று கூறி அதை வாங்கிச் சென்றாள்!

"சரி! இப்டி வா!" என்று வாசு அழைக்க,

"என்ன வாசு?" என்றபடி அவனருகில் சென்றாள்!

"இடுப்பு வலிக்கிதுல்ல! கவுந்து படு! இத தடவி விடறேன்!" என்று கூறி களிம்பைக் காட்டினான்.

"இல்ல வேணாம்! கொஞ்ச நேரத்தில சரியாய்டும்! என்று கூறிக் கொண்டே நழுவியவளைக் கைப்பிடித்து கட்டிலில் படுக்க வைத்தான்!

"இல்ல வேணாம்! ப்ளீஸ்!" என்று மெல்லிய குரலில் கூறியவளை அவன் பொருட்படுத்தவேயில்லை!

"திரும்பி படு! சொன்னா கேக்கணும்!" என்று அதட்டினான்!

"ம்ச்.... வேணாம் வாசு!" என்று சிணுங்கியவளை கட்டாயப்படுத்தி திரும்பிப் படுக்க வைத்துவிட்டு அவளுடைய நீண்ட பின்னலை ஒதுக்கிவிட்டு இடுப்பை மறைத்த புடவையினையும் ஒதுக்கினான்! ஒற்றை விரலில் கொஞ்சமாக களிம்பை எடுத்துக் கொண்டு அவளுடைய இடுப்பில் தடவ, அவள், அவனுடைய தொடுகையினால் நெளிந்தாள் என்றால், அவன் அதற்கு மேல் நெளிந்தான்!

"ம்ச்.... யாராவது பாத்தா தப்பா நெனக்க போறாங்க வாசு.... ப்ளீஸ் வேணாம்...." என்று யாமினி முணுமுணுக்க,

வாசு அவளுடைய காதருகே குனிந்து மெல்லிய குரலில் கூறினான்.

"பொண்டாட்டிக்கு இடுப்பு வலிச்சா புருஷன் மருந்து தடவலாம் யாமினி! தப்பில்ல...."

அவள் சிரித்தபடி கண்ணை மூடிக் கொண்டாள்! அவளுடைய இதழ்களில் ஒட்டியிருந்த புன்னகையைப் பார்த்தவன் தானும் தன் இதழ்களில் புன்னகையை தவழவிட்டான்!

களிம்பைத் தடவிவிட்டு விட்டு,

"பத்து நிமிஷம் அசையாதிரு! அப்பதான் மருந்து உள்ள போய் வலி குறையும்!" என்று விட்டு நகர்ந்தான்.

களிம்பை தன் அம்மாவிடம் திருப்பித் தருகையில் அவள் கேட்டாள்!

"என்ன வாசு! இத எதுக்கு எடுத்திட்டுப் போன?'"

"இல்லம்மா..... அது.... " என்று இழுத்துவிட்டு, "சும்மாதான்!" என்று சிரித்துக் கொண்டே போனவனைப் பார்த்த பவதாரிணியும் கிருஷ்ணாவும் தங்களுக்குள் கண் சாடையாக பேசி சிரித்துக் கொண்டனர்!

யாமினியும் வாசுவும் புதுவிதமான உணர்வில் சிக்குண்டு இருக்கையில் பாஸ்கர் மாமா அடுத்த அணுகுண்டுடன் தயாராக இருந்தார்! அவர் வீசிய அணுகுண்டில் வாசு நிலை குலைந்து போனான்!

- இது இருளல்ல...... விரைவில் வெளிச்சம் வரும்!

sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,144
Location
madurai
யாமினியும் வாசுவும் புதுவிதமான உணர்வில் சிக்குண்டு இருக்கையில் பாஸ்கர் மாமா அடுத்த அணுகுண்டுடன் தயாராக இருந்தார்! அவர் வீசிய அணுகுண்டில் வாசு நிலை குலைந்து போனான்!
intha baskar mama summa irukka mattar polaye............. aana mudhala avarala than ivangulukul oru purithal vanthiruku:):):):):):):):)interesting epi sis
 
Niranjana

மண்டலாதிபதி
Joined
Mar 1, 2018
Messages
155
Reaction score
168
Location
Sri lanka

அப்படி என்ன அணுகுண்டு
 
Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
Vasu amma pasam endha alavu ku avarai atti padai kudhu Avanga reindirizza peirukum arumbee vara khadhal alaghu?nice ud annapurani?????
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top