• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Idhu Irul Alla! - 19

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Annapurani Dhandapani

மண்டலாதிபதி
Joined
Jan 31, 2018
Messages
346
Reaction score
3,223
Location
Chennai
அன்புள்ளங்களுக்கு,

இன்று வாசுவைப்பற்றி ஒற்றை வார்த்தையில் க்ளூ கொடுத்திருக்கிறேன்! அடுத்த அத்தியாயத்திலிருந்து Flash back ஆரம்பிக்கிறேன்! Flash back கொஞ்சம் பெரியதாக இருப்பதால் முழுமையாக அளிக்க வேண்டியிருப்பதால் வரும் திங்களன்று அடுத்த பதிவினை தருகிறேன்! அதற்குள் நீங்கள் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து வாருங்கள்! விரைவில் வருகிறேன்!


இது இருளல்ல!


19.

இனிமையான எண்ணங்கள் மனம் முழுதும் நிரம்பியிருந்த காரணத்தால் யாமினியும் வாசுவும் புன்னகை முகமாக வலம் வந்ததைப் பார்த்த கிருஷ்ணாவுக்கும் பவதாரிணிக்கும் மனம் மிகவும் மகிழ்ந்தது!

வாசுவின் இளையவர்கள் கூட இவர்களின் இந்தத் தோற்றப் பொலிவு கண்டு மகிழ்ச்சியடையவே செய்தார்கள்!

"ரொம்ப நாளைக்கப்றம் அண்ணன் முகத்தில சிரிப்ப பாக்கறோம்ல!" என்று ஐஷு சௌமியிடம் சந்தோஷமாய்க் கூற,

"ஆமா ஸ்வீட்டீ..... அண்ணாவும் மன்னியும் அழகான பேர்ல(pair)! ஒருத்தருக்கொருத்தர் காம்ப்ளிமென்ட் பண்ணிக்கற மாதிரி இருக்காங்க!"

"ஆமா ப்யூட்டி! சும்மா சாதா ட்ரஸ்லயே இவ்ளோ அழகா இருக்காங்களே, இவங்களுக்கு ப்ரைடல் மேக்கப் பண்ணா...... ப்பா.... மாடல் மாதிரி இருப்பாங்கல்ல...."

"ஆமா ஸ்வீட்டீ.... நானும் இததான் நெனச்சேன்...."

"இவங்களுக்கு நெஜமாவே அப்டி ட்ரஸ் பண்ணி பாக்கணும்னு ஆசையா இருக்குடீ.... அப்டி பண்ணி போட்டோ ஷூட் செஷன் நடத்தி ஆல்பம் க்ரியேட் பண்ணி ஃபேஸ்புக்ல போடணும்! எங்கண்ணன்-அண்ணி : உலகத்திலயே அழகான ஜோடி! அப்டீன்னு!" என்று ஐஷு சொல்ல, சௌமி சிரித்தாள்.

"ரெண்டு பேரும் எப்பவும் இப்டியே சந்தோஷமா இருக்கணும்!" என்று இருவரும் ஒரே குரலில் கூறிக் கொண்டனர்!

ருக்மணி மாமி கூட வாசுவையும் யாமினியையும் பார்த்து, இந்தக் குழந்த வாழ்க்கைல ஒரு வழியா நல்லது நடக்கறது! பெருமாளே! இவா ரெண்டு பேரும் நன்னா இருக்கணும்! என்று தன் மனதுக்குள் திருஷ்ட்டி வழித்துக் கொண்டாள்!

அனைவரும் சாப்பிட உட்கார, யாமினியும் ருக்மணி மாமியும் பரிமாறத் தொடங்க, பாஸ்கர் மாமா, யாமினி தனக்குப் பரிமாறக் கூடாது என்றார்.

"கண்ட கண்ட கழுதையெல்லாம் எனக்கு சாப்பாடு போட வேண்டாம்! டீ ருக்மணி! எங்க போய்த் தொலஞ்ச! எனக்கு சோறு போடறத விட உனக்கென்ன வெட்டி முறிக்கற வேல?" என்று கத்தினார்.

யாமினியின் முகம் சூம்பிப் போயிற்று!

"பாஸ்கரா! நீ தேவையில்லாம பிரச்சனை பண்ற! யாமினி ஒண்ணும் கழுதையில்ல..... அவ என் மருமக! ஞாபகம் வெச்சுக்க!" என்று கிருஷ்ணா கோபமாகச் சொன்னார்!

"என்ன பெரிய மருமக.... யார் இவ...... இன்னாரோட பொண்ணு..... இன்னாரோட பேத்தி..... இன்ன குடும்பத்திலேந்து வந்திருக்கேன்னு எதாவது தெரியுமா இவளுக்கு..... எங்கியோ குப்பைல கிடந்திருப்பா.... அவள யாராவது கொண்டு போய் அனாத ஆஸ்ரமத்தில போட்டிருப்பா.... என்ன பொறப்போ இவ..... நல்லவளுக்கா பொறந்திருப்பா.... கண்டிப்பா இவம்மா கெட்டவளாதான் இருப்பா.... அதான் ஒருத்தன் இவளக் கெடுத்துட்டான்..... இவளெல்லாம் உன் மருமகள்னு எப்டி நீ ஒத்துகிட்ட...." என்று நாக்கில் நரம்பில்லாமல் பேசினார் பாஸ்கர் மாமா!

கேட்டிருந்த அனைவரும் அதிர்ந்தனர் என்றால் வாசு கோபத்தில் கண்கள் சிவக்க மாமாவை அடிப்பதற்காக எழுந்தான்!

பவதாரிணியை பரிசோதிப்பதற்காக ஆகாஷ் வாசுவின் வீட்டுக்குள் வந்து கொண்டிருந்தான்!

வாசுவைத் தடுக்க அவன் வேகமாக வரவும் யாமினியின் அழுத்தமான வார்த்தைகள் அதைவிட வேகமாக வந்து வாசுவைத் தடுத்தது!

"நில்லுங்க வாசு!"

"எப்டி பேசறார் பாரு யாமினி!?"

கொஞ்ச நாளாக தன்னைக் கெடுத்தவன் பற்றிய எண்ணங்களினால் ஒரு மாதிரி வேதனையான மனநிலையில் இருந்த யாமினி, இன்று வாசு என்ற ஆண் சிங்கத்தின் காதலை தன் மனதில் உணர்ந்து கொண்டதினாலோ என்னமோ, தைரியசாலியாக, யாரை வேண்டுமானாலும் அடித்துக் கேள்வி கேட்கும் பழைய யாமினியாக மாறியிருந்தாள்!

"அவர் என்ன பொய்யா சொன்னாரு! உண்மையதானே சொல்றாரு!" என்றாள்.

"என்ன பேசற நீ?" என்றான் வாசு கோபமாக!

"ஆமா வாசு! என்னப் பெத்தவங்க யார் என்னன்னு எனக்கு சத்தியமா தெரியாது! உண்மையாவே எங்கம்மாவ யாராவது ஏமாத்தியிருக்கலாம்! குந்தி தேவி மாதிரி ஊர் உலகத்துக்கு பயந்து அவ என்ன குப்பைல வீசியிருக்கலாம்! கரெக்ட்டுதானே!?" என்றாள்.

"ஆனா...." என்று இழுத்த வாசுவை திரும்பவும் நிறுத்தினாள் யாமினி!

"இல்லன்னா.... பொறந்தது பொண்ணுன்னு தெரிஞ்சி எந்த புண்ணியவானோ நா வேணாம்னு தூக்கி போட்டிருக்கலாம்..... எந்த சுயநலவாதியோட பேராசையினாலோ, என் கழுத்தில கிடந்த சங்கிலிக்காக நா கடத்தி வரப்பட்டு நா அநாதையாக்கப்பட்டிருக்கலாம்..... மதக்கலவரத்தில செத்து போன ஏதாவது முஸ்லிம் தம்பதியரோட குழந்தையா கூட நா இருந்திருக்கலாம்..... ரோட் ஆக்ஸிடென்ட்ல மாட்டி என்ன பெத்தவங்க என்ன மட்டும் காப்பாத்திட்டு அவங்க செத்து போயிருக்கலாம்..... நாந்தான் பிச்சயெடுக்கறேன்.... எம்பொண்ணாவது நல்லா வாழட்டும்னு எந்த பிச்சக்காரியாவது என்ன ஆஸ்ரம வாசல்ல போட்டிருக்கலாம்.... கரெக்ட்டுதானே வாசு..." என்று அழுத்தம் திருத்தமாகக் கேட்டாள் யாமினி!

"ஆமா யாமினி! நீ சொன்னது எதுவா வேண்ணா உனக்கு நடந்திருக்கலாம்!"

"ம்... அப்ப அநாதையா நா மாறினது என் தப்பில்ல! என்னப் பெத்தவங்க யார்ன்னு தெரியாம இருக்கறது என் தப்பு இல்லவேயில்ல! இந்த சமுதாயத்தோட தப்பு! அதுக்கு நா ஏன் வருத்தப்படணும்! இவர் சொல்றது கரெக்ட்டு தான்!" என்றாள்.

பாஸ்கர் மாமா பெருமையாக வாசுவைப் பார்த்தார்!

"பாத்தியா! நா சொல்றது சரின்னு இந்தப் பொண்ணே ஒத்துகிட்டா! நா எப்பவுமே சரியாதான் பேசுவேன்! அதனால மொதல்ல இவள இந்தாத்த விட்டு..."

"பொறுங்க.... நா இன்னும் பேசி முடிக்கல...." என்று மாமாவை கடுமையான குரலில் நிறுத்தினாள் யாமினி!

"நா பண்ணாத தப்புக்கு எனக்கு எதுக்கு தண்டனை!? என் பிறப்பு.... நீங்க கேட்ட இன்னார்னு வேண்ணா தெரியாம இருக்கலாம்.... ஆனா இப்ப நா திருமதி யாமினி வாசுதேவன்! அதாவது... திருவாளர் வாசுதேவனுடைய மனைவி! திருவாளர் கிருஷ்ணராஜ் திருமதி பவதாரிணி கிருஷ்ணராஜ் தம்பதியோட மருமகள்! எனக்குன்னு இந்த ஒரு அடையாளம் இப்ப இருக்கு!" என்றாள் திடமாக!

"என்ன இந்த வீட்ட விட்டுப் போகச் சொல்ல யாருக்கும் அதிகாரம் கெடையாது! ஆனா உங்கள இந்த வீட்ட விட்டுப் வெளிய போன்னு சொல்ற அதிகாரம் எனக்கிருக்கு! ஏன்னா, நா இந்த வீட்டு மருமக!" என்று நிறுத்தி சில நொடிகள் கழித்து, "ஆனா நா அத சொல்ல மாட்டேன்! ஏன்னா..... உங்கள விட எனக்கு இங்கிதம் தெரியும்!" என்று விட்டு ருக்மணி மாமியைப் பார்த்து, "நா பேசினதுக்கு என்ன மன்னிச்சிடுங்க!" என்று மனதாற மன்னிப்பும் கேட்டாள்!

"சபாஷ் யாமினி!" என்று கூறி வாசு பலமாகக் கைதட்டினான்! ஆகாஷ் மனதுக்குள், அடேங்கப்பா! சரியான நெத்தியடி! என்று நினைத்துக் கொண்டான்! ஐஷுவும் சௌமியும் கூட ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டு, "இவருக்கு இது தேவையா?" என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர்!

கிருஷ்ணாவும் பவதாரிணியும் மனம் மகிழ்ந்தாலும் நிலைமை விபரீதமாகிக் கொண்டிருப்பதை உணர்ந்தார்கள்!

"என்னையா வெளிய போன்னு சொல்ற? அத நீயும் கேட்டு கை தட்றயா?" என்று கோபமாகக் கேட்ட பாஸ்கர் மாமா, சட்டென்று தன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு கீழே சரிய, இதைப் பார்த்த வாசு, முகம் சுளித்தான்!

"மாமா! இந்த நெஞ்சு வலி ட்ராமா இனிமே செல்லாது! எழுந்திருங்க!" என்றான்!

ஏனெனில், வாசு பள்ளி கல்லூரியில் படிக்கும்போது மாமா இதைப்போல எதையாவது சொல்லி அவனை அதட்டி அதிகாரம் செய்யும் போதெல்லாம் வாசு எதிர்த்துப் பேசுவான்! அப்போதெல்லாம் பாஸ்கர் மாமா நெஞ்சு வலி வந்தது போல நடித்து தன் அதிகாரத்துக்கு வாசுவை கட்டுப்பட வைப்பார்! சில சமயம் அவர் ஜெயிப்பார்! பல சமயம் பவதாரிணியின் வற்புருத்தலில் அவன் மாமா பேச்சைக் கேட்பது போல நடிப்பான்!

ஆனால் அதைப் போல இப்போது செய்ய வேண்டுமென்றால் யாமினியை அல்லவா அவர் சொல்வது போல வீட்டை விட்டு அனுப்ப வேண்டும்!? இது எப்படி முடியும்? இவர் இப்படி ஏதாவது தடங்கல் செய்வார் என்றுதானோ என்னமோ அப்பா என் கல்யாணத்தை அப்படி அவசர அவசரமாக நடத்தி வைத்தார் போல! இப்படி நினைத்துதான் வாசு, பாஸ்கர் மாமா தன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு கீழே சரிவதைப் பார்த்து, "உங்க ட்ராமா இங்க இனிமே செல்லாது!" என்றான்.

கீழே விழுந்து சில நொடிகளுக்கு மேல் ஆகியும் பாஸ்கர் மாமா எழுந்து கொள்ளாததால் சௌமி தன் அப்பாவின் அருகில் சென்று பார்த்து அலறினாள்.

"அண்ணா! இது ட்ராமா இல்ல.... அப்பா மூக்குலேந்து ப்ளட் வரது....." என்று கத்தினாள்.

அவளுடைய அலறலில் எல்லாருடைய கவனமும் அவரிடம் செல்ல, ஆகாஷ் முதலுதவி செய்தான்.

"வாசு! பிபி ஷூட் அப் ஆயிருக்கு! அவர உடனே ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி ட்ரிப்ஸ் போடணும்டா!" என்றான்.

"சீக்கிரம்...." என்று வாசு அதற்கு நடவடிக்கை எடுக்க, ஆகாஷ் சௌமியிடம் கூறினான்.

"சௌமி! அங்கிள் கிட்ட பேசிகிட்டேயிரு! அவர் மயக்கம் ஆகிடக் கூடாது!" என்று எச்சரிக்கை செய்தான்.

சௌமி எதோ பேச்சு கொடுக்க, பாஸ்கர் மாமா, இந்தக் களேபரத்திலும் தன்னுடைய ஆதிக்கத்தை வாசுவின் மீது செலுத்தினார்.

"டே.... வாசு.... நேக்கு என்னமோ ஆகப்போறது..... நா கண்ண மூடறதுக்கு முன்னால என் பொண்ணு கழுத்தில தாலியக் கட்டுடா...." என்று கத்தினார்!

இதைக் கேட்ட அனைவரும் அதிர்ந்தனர்! யாமினிக்கு இதயமே நின்றுவிடும் போலிருந்தது! அப்படியே சிலையாகி நின்றுவிட்டாள்!

"மாமா..... வாய மூடுங்க.... சௌமி என் தங்கை! அது மட்டுமில்ல! நா ஏற்கனவே கல்யாணம் ஆனவன்! இதோ இருக்கா என் மனைவி!" என்று அழுத்தமான குரலில் கத்தினான் வாசு!

மாமா, அவன் பேசியதிலிருந்த முதல் வாக்கியத்தை மட்டும்தான் மனதில் வாங்கிக் கொண்டார் போலும்! அதனால் அதற்கு மட்டும் பதிலளித்தார்!

"டே.... என்னடா தங்கை.... அவ என்ன உன் கூடப் பொறந்த தங்கையா.... இல்லதானே.... அதனால நீ தாலி கட்டுடா!" என்றார்.

"மாமா..." என்று பல்லைக் கடித்தான் வாசு!

"டே வாசு.... சௌமி கழுத்தில தாலி கட்டுடா.... நா அத கண் குளிரப் பாத்துட்டு சாவேன்டா..."

"மாமா! நீங்க யாரப்பத்தியும் கவலப்பட மாட்டீங்களா? சௌமிக்கும் ஒரு மனசிருக்கு! அதுல அவளுக்குன்னு ஆசைகள் இருக்கு! நீங்க இப்டி பிடிவாதம் பிடிக்கறதுனால எதுவும் ஆகப்போறதில்ல.... பேசாம இருங்க! எல்லாம் சரியாய்டும்!" என்றான்! அவன் மனம் முழுக்க மாமாவின் மீது வெறுப்பு இருந்தாலும் இப்போது அவருடைய உடல்நிலையை கருத்தில் கொண்டு கொஞ்சம் நிதானமாகப் பேசினான்! ஆனால் மாமா விடுவதாக இல்லை! பிடிவாதம் பிடித்தார்!

"வாசூ.... சௌமிக்கு என்ன வேண்டியிருக்கு ஆசை....நா சொல்ற பையன அவ கல்யாணம் பண்ணிக்கணும்.... நா இருக்கும் போதே அவ கல்யாணத்த முடிக்கணும்... ருக்மணிக்கு இதெல்லாம் எதுவும் தெரியாதுடா... அவளுக்கு சமைக்கவும் சாப்டவும் விதவிதமா மாட்டிகிட்டு மினுக்கவும்தான் தெரியும்.... நீ தாலி கட்டுடா..." என்றார்.

இதைக் கேட்டதும் இவ்வளவு நேரம் அழுது கொண்டிருந்த ருக்மணி மாமியும் சௌமியும் சட்டென அழுகையை நிறுத்தினர்! இருவருக்கும் வேதனையும் கோபமும், பாஸ்கர் மாமாவின் மீது வெறுப்பும் வந்தது!
 




Annapurani Dhandapani

மண்டலாதிபதி
Joined
Jan 31, 2018
Messages
346
Reaction score
3,223
Location
Chennai
"டே வாசு..... தாலி கட்டுடா..... நீ என் தங்கச்சி மகன்தானே! என் வீட்டு குழந்தைடா நீ... என் குடும்பம்டா நீ... தாலி கட்டுடா..."

இதைச் சொன்னதுதான் தாமதம்! வாசு பெருங்குரலில் கத்தினான்!

"நா உங்க தங்கச்சி மகன்னு இப்பதான் ஞாபகம் வரதா மாமா? இத்தன நாளா ஞாபகம் வரலியா? இப்ப மட்டும் நா உங்க வீட்டு குழந்தையா? நா பொறந்தப்ப எங்க போச்சு இந்த நியாயம்? நா வளரும்போது உங்களுக்கு இது ஞாபகம் வரலயோ? இப்ப மட்டும் நா கேடு கெட்ட பொறப்பு இல்லயோ? உங்க குடும்ப பொறப்பா ஆயிட்டேனோ? உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போய் என்னிக்காவது ஒரு நாள் எனக்கு சோறு போட்டிருப்பீங்களா? அட சோறு வேணாம்! உங்க சொந்தக்காரங்க மத்தியில நாந்தான் உங்க தங்கச்சி மகன்னு சொல்லியிருக்கீங்களா? பெரிசா வந்துட்டாரு சொந்தம் கொண்டாட...." என்று தன் மனதிலிருந்த ஆதங்கத்தை எல்லாம் கொட்டித் தீர்த்துவிட்டு தன்னுடைய அறையில் சென்று கட்டிலில் பொத்தென்று அமர்ந்தான்!

பெரியவர்கள் தவிர இளையவர்கள் நால்வரும் அதிர்ந்தனர்! இதென்ன புதுக் கதை! அப்படியென்றால் பாஸ்கர் மாமா நிஜமாகவே வாசுவின் தாய் மாமாவா? என்று அனைவரும் புரிந்து கொண்டனர்!

ருக்மணி மாமி, ஆகாஷைப் பார்த்து,

"ஆகாஷ்! நல்லா மூணு நாள் கண்ணே முழிக்க முடியாதபடி இவருக்கு ஒரு ஊசியப் போடு! இவர் அப்டியே கோமாவுக்கு போனா கூட பெட்டர்தான்! அப்டி ஒரு ஊசி போடு!" என்றாள்!

இதைக் கேட்ட பாஸ்கர் மாமா,

"அடிப்பாவீ... சண்டாளீ.... நீ நன்னாயிருப்பியா....." என்று கத்தினார்!

கிருஷ்ணாவும்,

"ஏம்மா இப்டியெல்லாம் பேசற?" என்றார்.

"இல்லண்ணா! இவர் மேல நா வெச்ச நம்பிக்கையெல்லாம் போக்கிண்டுட்டார்! இவர் கூட இனிமே வாழறதே வேஸ்ட்! பொண்ணு நிச்சயதார்த்தம் நின்னு போச்சேன்னு வருத்தப்படறார்ன்னு நெனச்சேன்! ஆனா இந்தப் பாவி மனுஷன் மூணு நாளா இந்தப் பொண்ண மனசுக்குள்ள கரிச்சுக் கொட்டிண்டு இருந்திருக்கார்ன்னு இப்பல்ல புரியறது! ஊரான் புள்ளைய ஊட்டி வளத்தா தம்புள்ள தானே வளரும்னு சொல்லுவா! ஆனா இந்த மனுஷன் அந்தப் பொண்ணுக்கு நடந்த அநியாயத்தக் கூட நெனக்காம அவளப்போய் எவ்ளோ தப்பா பேசறார்? யாராவது பெத்த பொண்ண காப்பத்தறேன்னு இன்னொரு பொண்ணு வாழ்க்கைல மண்ணள்ளிப் போடுவாளா? என்ன ஒரு வக்கிர புத்தி இவருக்கு?" என்று கிருஷ்ணாவிடம் சொல்லிவிட்டு பாஸ்கர் மாமாவைப் பார்த்து சொன்னாள்!

"நன்னா கேட்டுக்கோ கேடு கெட்ட பிராம்ணா... நா இனிமே ஒங்கூட வாழ மாட்டேன்! எம் பொண்ணு நன்னா படிச்சி அவ சொந்தக் கால்ல நின்னப்றமா அவளுக்குப் பிடிச்சவனா, அவளப் புரிஞ்சிக்கற நல்ல மாப்ளையா பாத்து கல்யாணம் பண்றச்சே சொல்லியனுப்பறேன்! அது வரைக்கும் நீ உசுரோட இருந்தா வந்து அப்பாவா லட்சணமா எம்பொண்ணு கல்யாணத்த நடத்தி வை! நா இப்ப போறேன்! என்னத் தேடினன்னு வெய், வந்து உன்னக் கொல பண்ணக் கூடத் தயங்க மாட்டேன்!" என்றாள்.

பாஸ்கர் மாமா தன் வாயை மூடிக் கொண்டார்! அதற்குள் ஆகாஷ் ஏதோ ஊசியைப் போட்டு தற்காலிகமாக அவர் மூக்கிலிருந்து வரும் ரத்தத்தை நிறுத்தினான்!

"சௌமி! அழாத! எழுந்திரு! உன் திங்க்ஸ் எல்லாம் பேக் பண்ணு! நம்ம கிளம்பலாம்! இந்தாள் கூட வாழ்ந்ததே வேஸ்ட்! நீ நல்லா படி! நா இருக்கேன் உனக்கு!" என்றாள். சௌமி தயங்கியபடியே சென்று தன்னுடைய பொருட்களை எடுத்து வைக்க ஆரம்பித்தாள்!

பவதாரிணி கண்ணீர் வடிக்க,

"ருக்மணி! கொஞ்சம் பொறுமையா இரும்மா!" என்றார் கிருஷ்ணா!

"இல்லண்ணா! இவர் பண்ணின தப்பெல்லாம் பாத்துண்டு ஊமையா இருந்தேனே, அதுக்கு ரொம்ப நல்ல பேர் கெடச்சுடுத்து! எப்டி சொல்றார் பாத்தேளா? நா மினுக்கிண்டிருக்கதான் லாாயக்குன்னு சொல்றார்! இப்டி பேசிப் பேசிதானே ஒண்ணுக்கு ரெண்டு பேரா வாரிக் குடுத்தோம்! இன்னமும் புத்தி வரலன்னா என்ன பண்றது? இன்னொரு உயிர்பலி குடுக்க மனசிலயும் உடம்பிலயும் தெம்பில்லண்ணா!"

"ஆனாலும் இவ்ளோ பெரிய முடிவெடுக்கணுமா?"

"என்னண்ணா இப்டி பேசறேள்? பாவம் அந்தக் குழந்தை! இப்பதான் அவன் வாழ்க்கைல வசந்தம் வீச ஆரம்பிச்சிருக்கு! இன்னிக்கு காத்தாலேந்துதான் அவன் முகத்தில சிரிப்பே வந்திருக்கு! அதுக்குள்ள அவன் மனச நோகடிக்க கௌம்பியிருக்கார் பாருங்கோ! இவரெல்லாம்.... தோ! இந்தப் பொண்ணு...... யார் பெத்த புள்ளையோ.... இவளாலதான் நம்ம குழந்தை சிரிக்க ஆரம்பிச்சிருக்கான்னா... இவள நாம கொண்டாட வேண்டாமா? அத விட்டுட்டு..... இவளப் போய் தப்பு தப்பா பேசினா...... நம்மல்லாம் நல்லாவே இருக்க மாட்டோம்ணா......"

"சரிமா... ரெண்டு பேரும் எங்கமா போவீங்க......"

"எங்கியோ போறோம்! ஆனா, இவர் கண்ணு முன்னால இனிமே இருக்க மாட்டோம்!"

"வயசுப் பொண்ண வெச்சுகிட்டு..... நீ தனியா...."

"பயப்படாதீங்கோண்ணா...... அந்த அம்பாள் என்ன காப்பாத்துவா..... அது மட்டுமில்ல.... மேலேந்து செத்துப் போன என் மாமியாரும் என் நாத்தனாரும் என்னையும் என் பொண்ணயும் காவல் காத்துண்டிருப்பா..." என்றாள் கண்ணீருடன்!

சௌமி தன் பைகளுடன் வெளியே வந்தாள்!

"வரேண்ணா..... மன்னி வரேன்!" என்று கிருஷ்ணாவிடம் கூறிய ருக்மணி மாமி, யாமினியிடம்,

"கொழந்த! நீ நன்னாயிருக்கணும்! நீயும் வாசுவும் சந்தோஷமா இருங்க!" என்றுவிட்டு ஞாபகமாக ஆகாஷிடம்,

"ஆகாஷ்! ஊசி போட்டுடு! மறந்துடாத!" என்று கூறிவிட்டே வாசல் நோக்கி நடந்தாள்!

"டீ ருக்மணி! போகதடீ..." என்று பாஸ்கர் மாமா ஈனஸ்வரத்தில் அழைத்தது அவள் காதில் விழுந்தாலும் அவள் அதை கண்டுகொள்ளவேயில்லை!

அவள் போவதையே பார்த்திருந்த யாமினி திடீரென்று வாசு எங்கே என்று தேடி அவனுடைய அறைக்குள் வர,

அவன் அங்கே மயங்கியிருந்தான்! அவன் மூக்கிலிருந்து ரத்தம் வழிந்து தரையெல்லாம் ரத்த வெள்ளமாயிருந்தது!

"வாசூஊஊஊஊஊ......" என்ற யாமினியின் அலறலில் எல்லாரும் வாசுவின் அறைக்குள் வந்தனர்! ருக்மணி மாமியும் சௌமியும் கூட ஓடி வந்தனர்!

அடுத்த அரை மணி நேரத்தில் வாசு ஆகாஷின் மருத்துவ மனையின் தீவிர கண்காணிப்புப் பிரிவில் அனுமதிக்கப் பட்டிருந்தான்!

மாமாவும்தான்! ருக்மணியின் சொல்படி மாமவை வேறு ஒரு அறையில் அனுமதித்து மருத்துவம் செய்து கொண்டிருந்தார்கள்!

இரண்டு நாட்கள் முன்பு ஸ்டீவனின் அலுவலகத்தில் வாசுவுக்கு தலை சுற்றியதைப் பற்றி யாமினி ஆகாஷிடம் கூறினாள்!

"என்னமா இப்ப வந்து சொல்ற? அன்னிக்கே சொல்லியிருக்கலாம்ல...." என்று அவன் கடிந்து கொள்ள,

"இல்ல... அதுக்குள்ள வீட்ல பிரச்சனை.... அப்றம்.... அவர் நல்லா ஆய்ட்டார்.... அதான்...." என்றாள் குற்றவுணர்வுடன்!

"சரி! சரி! விடு..."

"பெரிய ப்ரச்சனைல இருக்கார்னு தோணுது..... அன்னிக்கு ஸ்டீவன் சாரும் அப்டிதான் சொன்னார்!"

"ஓ...." என்பதற்கு மேல் ஆகாஷ் எதுவும் சொல்லவில்லை! உள்ளே சென்று வாசுவை பரிசோதனை செய்ய ஆரம்பித்தான்!

வாசு மயங்கியிருந்தாலும் ஏதோ முனகியபடியிருக்க, அவனுடைய கைகள் யாரையோ தேடியது! அவன் என்ன கூறுகிறான் என்று ஆகாஷ் அவனுடைய வாயருகே குனிந்து கவனித்தான்!

"யாமினி.... யாமினி...." என்று அழைத்தபடியிருந்தான் வாசு!

"யாமினி! உன்னதான் கூப்பிடறான்! நீ வாம்மா!" என்று ஆகாஷ் யாமினியை அழைத்துச் செல்ல, பவதாரிணி வருந்தினாள்.

ருக்மணி மாமி அவளை சமாதானம் செய்து கூறினாள்!

"நேத்து வாசு யாமினிட்ட என்ன சொன்னான்னு நீங்க கவனிச்சேளான்னு எனக்கு தெரீல! ஆனா நா கவனிச்சேன்! நீ தான் என் உயிர்! நீ மட்டும்தான் எனக்கே எனக்கு சொந்தமான உயிர்னு சொன்னான்! பாவம் மன்னி! நம்ம குழந்தை இவ்ளோ நாளா தனக்குன்னு ஒரு சொந்தத்த தேடியிருக்கான் மன்னி! இப்பதான் அவன் தேடின சொந்தம் அவனுக்கு கிடைச்சிருக்கு! சந்தோஷப் படுங்கோ மன்னி!" என்றாள்!

"ஆமா ருக்மணி! நீ சொல்றது சரிதான்!" என்று தன் கண்களை துடைத்துக் கொண்டாள் பவதாரிணி!

உள்ளே, ஆகாஷ் யாமினியிடம் சொன்னான்!

"யாமினி! நீ இங்கியே இவன் பக்கத்திலயே இவன் கையப் பிடிச்சுகிட்டு இரு! நீ இல்லன்னா இவனுக்கு என்னன்னமோ ஆகுது! நா குடுக்கறதெல்லாம் மருந்தில்ல! நீதான் இவனை குணமாக்கற மருந்து! இவன் உன்னதான் தேடறான்! இவன் கூடவே உக்காரு!" என்று கட்டளையிட்டு அவளை வாசுவின் அருகிலேயே இருக்கப் பணித்துவிட்டு வாசுவுக்கு ட்ரிப்சில் ஒரு ஊசியையும் போட்டுவிட்டு வெளியேறினான்!

வாசுவுக்கு என்ன பிரச்சனையென்று யாமினிக்கு கொஞ்சமாகப் புரிய ஆரம்பித்தது!

சொந்தம் என்று அவன் கூறிக் கொள்ளும் சொந்தங்கள் உண்மையில் அவனுக்கு சொந்தமில்லை! உண்மையில் அவனுடைய சொந்தம் என்று இருப்பவர்கள் அவனை நோகடிக்கிறார்கள்! ஏன் இப்படி? அப்படி என்ன தவறு செய்தார் இவர்? இல்லை! இவர் தவறு செய்யவில்லை! அப்படியென்றால்.... ஆமாம்! இவரைப் பெற்றவர்கள் செய்த தவறுக்காக, இப்போது இவருக்கு தீர்ப்பு எழுதுகிறார்கள்!

இல்லை வாசு! நான் இருக்கிறேன் உங்களுக்கு! எவராவது உங்களை எதாவது சொல்ல கிளம்பி வரட்டும்! அவர்களைப் பந்தாடிவிடுகிறேன்! என்று வாசுவிடம் கூறுவதாய் நினைத்துக் கொண்டு தனக்குள் சொல்லிக் கொண்டாள் யாமினி!

கிருஷ்ணா ஸ்டீவனுக்கு போன் செய்து விவரம் கேட்டுக் கொண்டு பவதாரிணியிடம் வந்தார்!

"நம்ம எது நடந்துடும்னு பயந்தோமோ அதுதான் நடந்திருக்கு!" என்றார்!

பவதாரிணியும் ருக்மணி மாமியும் தங்கள் தலையில் இடியிறங்கியதைப் போல உணர்ந்தனர்!

சௌமியும் ஐஷுவும் ருக்மணி மாமியை தனியே அழைத்து வந்து கேட்டார்கள்!

"ம்மா.... அப்ப.... வாசுண்ணா.... நம்ம அத்தையோட பையனாம்மா...."

"ம்... ஆமா சௌமி! வாசு உன்னோட பத்மினி அத்தையோட மகன்தான்!" என்றாள் கண்களில் கண்ணீருடன்!




- இது இருளல்ல...... விரைவில் வெளிச்சம் வரும்!
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,144
Location
madurai
nice epi sis baskar mama panra alampal athikam than.......... katna wife koota avar comaku pogatumnu sollitanga ............ vasu voda amma padminiya............. yaminiya avan uyira ninikian so nice
நம்ம எது நடந்துடும்னு பயந்தோமோ அதுதான் நடந்திருக்கு!" என்றார்!
vasuku enna udampuku:unsure::unsure::unsure::unsure::unsure:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top