• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Idhu Irul Alla! - 21

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Annapurani Dhandapani

மண்டலாதிபதி
Joined
Jan 31, 2018
Messages
346
Reaction score
3,223
Location
Chennai
இது இருளல்ல!


21.


"யாமினி! இப்ப இருக்கற சூழ்நிலைல நா உனக்கு வாழ்க்கை குடுத்ததா நீ நெனச்சிகிட்டு இருக்க! ஆனா அது உண்மையில்ல! நீதான் எனக்கு வாழ்க்கை தரணும்! நீ எனக்கு வாழ்க்கை தரலாமா வேண்டாமான்னு நா சொல்றத முழுசா கேட்டப்றமா முடிவு பண்ணு!"

பீடிகையுடன் வாசு கூற ஆரம்பித்ததை அவள் மிகவும் கவனமாகக் கேட்கத் தொடங்கினாள்!

1990 வருடம்!

"பத்மினீ....."

"ஆயிடுத்தும்மா.... அஞ்சு நிமிஷம்....."

"அஞ்சு நிமிஷம்... அஞ்சு நிமிஷம்னு கிட்டதட்ட ரெண்டு மணி நேரமா வெளிய நின்னுண்டிருக்கடீ.... சீக்கிரம் முடிச்சுட்டு வா..... ட்யூஷனுக்கு நேரமாச்சு...."

பத்மினியின் அம்மா மைதிலி சமையலறைக்கும் வாசலுக்கும் ஓடிக் கொண்டிருந்தாள்!

"இதோ! முடிச்சுட்டேன்மா!" என்று கூறிக்கொண்டே ஒரு கையில் காலியான வாளியையும், மறு கையில் துடைப்பத்தையும், எடுத்துக்கொண்டு உள்ளே வந்தாள் பத்மினி!

அவள் உள்ளே வருவது கண்டு வெளி வாசலை எட்டிப் பார்த்தாள் மைதிலி!

சாலையை அடைத்து பெரியதாகப் போடப்பட்டிருந்த படிக்கோலத்தைப் பார்த்து மனதுக்குள் மகிழ்ந்தாலும், வெளியே முகத்தை கடுகடுவென்று வைத்துக் கொண்டு கூறினாள்!

"எதுக்குடீ இன்னிக்கு இவ்ளோம் பெரிய கோலத்தப் போட்டிருக்க? சின்னதா ஒரு இழு இழுத்துட்டு வாடீன்னுதானே சொன்னேன்!" என்றபடியே அவளிடம் காபியை நீட்டினாள்! வாளியையும் துடைப்பத்தையும் உரிய இடத்தில் வைத்துவிட்டு தன் கைகளை சுத்தமாகக் கழுவிக் கொண்டு வந்த பத்மினி தன் தாய் நீட்டிய காபியை எடுத்து மெதுவாக உறிஞ்சத் தொடங்கினாள்!

"எச்ச பண்ணி குடிக்காதன்னு எத்தன வாட்டி சொல்லியிருக்கேன்! பாட்டி பாத்தா திட்டப் போறா!" என்று மெல்லிய குரலில் மகளைக் கடிந்து கொண்டே அவள் தலையில் கட்டியிருந்த துண்டைக் கழற்றிவிட்டு,

"ஏண்டீ இப்டி ஈரத்தலையோட பனியில் நின்ன... ஜலதோஷம் பிடிச்சுடாதா..... தலைய ஆறவிட்டுண்டே கோலம் போடப்படாதா? ரெண்டு மணி நேரமா......" என்று குறைபட்ட படியே மகளுடைய ஈரக்கூந்தலை ஆறவிட்டாள் மைதிலி!

"ம்மா.... துண்டக் கழட்டிட்டா குனிஞ்சு கோலம் போடும்போது முடியெல்லாம் முன்னால வந்து விழுந்து கோலம் போடறச்சே டிஸ்டர்ப் ஆகுதும்மா...." என்றாள் மகள்!

"என்னமோ போ.... பரிட்சை நேரத்தில ஒடம்புக்கு வரப்போறது.... எதுக்கு இன்னிக்கு இவ்ளோம் பெரிய கோலம்...."

"மைதிலி! அவளுக்கு கோலம் போடப் பிடிக்கும்னு ஒனக்கு தெரியும்தானே! அதுவும் மார்கழி மாசம் வேற! அவ போடாம இருப்பாளா? அப்றம் ஏன் இப்டி ஒரு கேள்வி கேக்கற?" என்றபடியே அங்கு வந்த மைதிலியின் மாமியார் காமாட்சி, வெளி வாசலை எட்டிப் பார்த்துவிட்டு, தன் பேத்தியை திருஷ்டி வழித்துக் கொஞ்சினாள்!

"என் கண்ணே பட்டுடும்! ரொம்ப ஜோரா போட்டிருக்க பத்தூ... சீக்கரம் கௌம்பு! ட்யூஷனுக்கு டைமாச்சு!"

"சரி! பாட்டீ!" என்றபடியே தன் நீண்ட அடர்ந்த கூந்தலை ஒரு க்ளிப்பில் அடக்கிவிட்டு தன்னுடைய புத்தகப் பையை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள்!

"வரேம்மா!" என்று கூறிவிட்டு தன் சைக்கிளை எடுத்துக் கொண்டு தான் போட்ட கோலத்தை மிதிக்காமல் வெகு கவனமாக ஓரமாகவே அதை உருட்டிக் கொண்டு போகிறவளைப் பார்த்து சிரித்துக் கொண்டனர் மாமியாரும் மருமகளும்!

"ஆச்சு! இவ கௌம்பிட்டா.... இனி அவன எழுப்பணும்!" என்றபடியே உள்ளே போனாள் மைதிலி!

"பாஸ்கரா..... டேய்! பாஸ்கரா! எழுந்திருடா! மணியாகறது..... எழுந்திருடா! ஒனக்கு வேலைக்கு நேரமாகலையா....." என்று கூவியபடி தன்னை எழுப்பும் அம்மாவை அரைக்கண்ணை விழித்துப் பார்த்தான் பாஸ்கரன்!

"ம்மா... போம்மா.... தூக்கம் வரது.... தூங்க விடும்மா...." என்று அலுத்துக் கொண்டே திறந்த கண்களை மூடிக்கொண்டு இன்னும் கொஞ்சம் வசதியாக படுத்துக் கொண்டு போர்வையை தன் தலை வரை போர்த்திக் கொண்டான்!

"நேக்குத் தெரியாது! பூஜை பண்ணறதுக்கு இப்ப அப்பாவும் தாத்தாவும் வரப்போறா! அவா வந்து உன்னப் பாத்து கத்தறதுக்குள்ள எழுந்து வா!" என்று மகனை மிரட்டினாள் மைதிலி.

"ம்ச்.... தெனமும் இதே பாட்டு பாடாதம்மா..." என்று கூறிக் கொண்டே எழுந்து அமர்ந்தான் பாஸ்கரன்!

"நீ தெனமும் என்ன இதே பாட்ட பாட வெக்காத! எழுந்து போய் பல் தேச்சி குளிச்சிட்டு வா!" என்றுவிட்டு வெளியேறினாள் மைதிலி!

"அவ எங்கமா? எழுந்துட்டாளா?"

"அவ காத்தால நாலு மணிக்கே எழுந்து, குளிச்சு, வாசல்ல கோலம் போட்டுட்டு ட்யூஷன் கௌம்பி போய்ட்டா! நீதான் இன்னும் சந்தி பண்ணாம இருக்க...." சமையலறையிலிருந்து வந்த அம்மாவின் செய்தி வாசிப்பில் முகம் சுளித்தான் மகன்!

"இவ எதுக்கு இவ்ளோ கரெக்ட்டா வேல செய்யறா? இவ கரெக்ட்டா இருக்கறதுனாலதான இவால்லாம் என்ன திட்றா....." என்று மனதுக்குள் கடுத்தபடி படுக்கையிலிருந்து எழுந்தான் பாஸ்கரன்!

"அப்டியே போகாத! படுக்கைய மடிச்சி வெச்சுட்டுப் போ!" கட்டளையாய் வந்த மைதிலியின் குரலில் வெறுப்படைந்தாலும் வேறு வழியில்லாமல் தான் படுத்திருந்த படுக்கையை ஏனோ தானோவென்று சுருட்டி மடித்து அலமாரியில் அதற்குரிய இடத்தில் சொருகிவிட்டுப் போனான்!


 




Annapurani Dhandapani

மண்டலாதிபதி
Joined
Jan 31, 2018
Messages
346
Reaction score
3,223
Location
Chennai
பத்மினி! பதினைந்து வயது சிறுமி! பதினொன்றாவது படிக்கிறாள்! பத்தாவதில் பள்ளியில் முதல் மாணவியாக வந்து தேர்ச்சி பெற்றிருந்தாள்! இப்போது அறிவியல் க்ருப்தான் எடுத்துப் படிக்கிறாள்! ஒரு சிறந்த விஞ்ஞானியாக வேண்டும் என்பதுதான் அவளுடைய கனவு, லட்சியம் எல்லாம்! சாதாரணமாக படிப்பில் கெட்டியாக இருப்பவர்கள் மற்ற விஷயத்தில் கொஞ்சம் மந்தமாக இருப்பார்கள்! ஆனால் பத்மினி அப்படியல்ல! புதிதாகக் கற்றுக் கொள்வதில் ஆர்வம் அதிகம்! அதனாலேயே படிப்பு, பாட்டு, கைவேலை, கொஞ்சமாக சமையல் என்று எல்லாவற்றிலும் படு சுட்டி! மொத்தத்தில் அவள் அழகும் அறிவும் கொண்ட ஒரு சகலகலாவல்லி!

அம்மா அப்பாவுக்கு அடங்கியவளாக, தாத்தா பாட்டியின் செல்லமாக, அண்ணனின் இனிமையான தோழியாக அந்த வீட்டின் இளவரசியாக வளைய வருபவள்!

பாஸ்கரனுக்குத் தன் தங்கை மேல் அலாதி பிரியம்! அதிலும் அவள் எல்லாவற்றிலும் படு சுட்டியாக இருப்பது அவனுக்குப் பெருமையே! ஆனால் சமயத்தில் அவளுடைய கடமை உணர்ச்சி அவனுக்குப் பாதகமாக அமையும் போதெல்லாம் அவன் தன் தங்கை மீது வெறுப்பைப் பொழிவான்!

பாஸ்கரன் தன் காலைக் கடன்களை முடித்து குளித்துவிட்டு வந்து சந்தியாவந்தனம் செய்தான்! அவன் அதை முடித்துவிட்டு வரவும் பத்மினி ட்யூஷன் முடிந்து வரவும் சரியாக இருந்தது!

"ம்மா! காபி குடும்மா!" என்று பாஸ்கரன் கேட்க,

"இந்தா!" என்று பத்மினி கொண்டு வந்து கொடுத்தாள்!

"ஏய்! குள்ள வாத்து! எதுக்குடீ சீக்ரம் எழுந்து என் உயிர வாங்கற?"

"ச்சி போடா.... லூசு...." என்று சலனமேயில்லாமல் அவனைத் திட்டிவிட்டு போனாள் பத்மினி!

"ஏய்! யாரப் பாத்துடீ லூசுன்னு சொன்ன...." கோபமாக அவளுடைய கூந்தலைப் பிடித்து இழுத்தான்!

"ம்மா.... பாரும்மா.... இவன் என் முடியப் பிடிச்சி இழுக்கறான்...."

"இப்ப நா அங்க வந்தேன்னா ரெண்டு பேருக்கும் செமத்தியா விழும்...." சமையலறையிலிருந்து கத்தினாள் மைதிலி!

அம்மாவின் கத்தலில் தங்கையின் கூந்தலை விட்டுவிட்டு அவளுடைய தலையில் தட்டிவிட்டு அங்கிருந்து ஓடினான் பாஸ்கரன்!

"ம்மா.... அவன் என்ன அடிக்கறான்...." அடுத்த குற்றப் பத்திரிகையை வாசித்தாள் அவனுடைய தங்கை!

இது அவர்கள் வீட்டில் தினப்படி நடக்கும் ரகளை!

"டேய் பாஸ்கரா! கொஞ்சமாவது மெச்சூர்டா நடந்துக்கோடா! அவ கொழந்தை! இப்பதான் பதினொண்ணாவது படிக்கறா! நீ பெரியவன்! வேலைக்கே போக ஆரம்பிச்சுட்ட! அவ கிட்ட போய் உன் வீரத்த காட்டலாமா?"

பாட்டி காமாட்சி தன் பேரனிடம் தன் பேத்திக்காக பரிந்தாள்!

"போ பாட்டி! நோக்கு ஒண்ணும் தெரியாது...." என்றபடியே பூஜையறைக்குள் நுழையப் போனவனை மைதிலியின் குரல் நிறுத்தியது!

"அவ முடியப் பிடிச்சல்ல.... கை அலம்பிண்டு பூஜை ரூமுக்கு போ...."

அம்மாஆ.... என்று கடுத்தபடியே தன் அம்மா சொன்னதைச் செய்துவிட்டு பூஜையறைக்குள் நுழைந்தான் பாஸ்கரன்!

அங்கே அவனுடைய அப்பா ரகுராமனும் அவனுடைய தாத்தா சபாபதியும் பூஜை செய்ய தயாராகிக் கொண்டிருந்தனர்!

அவர்கள் வீட்டில் தினமும் சாளக்கிராமத்துக்கு அபிஷேகம், ஆராதனைகள், மற்றும் பூஜை செய்து இறைவணக்கம் செய்த பின்புதான் காலைக் காபியே குடிப்பார்கள்! இது சபாபதியின் அப்பா தாத்தா காலத்திலிருந்து காலம் காலமாக தொன்று தொட்டு வரும் பழக்கம்! இப்போது கால மாற்றத்தினால் சென்னை பல மாற்றங்களைக் காணத் தொடங்கியிருந்தாலும் இவர்கள் வீட்டில் இது போன்ற சில விஷயங்கள் இன்னும் மாறவில்லை! ஆனால் தங்கள் உடல்நிலையில் ஏற்பட்ட மாற்றத்தினால் காபி குடித்துவிட்டு பூஜை செய்கிறார்கள்! அவ்வளவுதான் வித்தியாசம்!

தாத்தா பூஜை செய்ய அவனுடைய அப்பா தன் தந்தைக்கு உதவியாக எல்லாம் எடுத்துத் தர, பாஸ்கரன் தன் தந்தைக்கு உதவியாக நிற்பான்!

சபாபதி தாத்தா சிறந்த சிவபக்தர்! பூஜை முடிந்த பின் தன் வெண்கலக் குரலால் தேவார, திருவாசகப் பாடல்களை, கயிலையில் குடியிருக்கும் சிவபெருமானை இவர்கள் குடியிருக்கும் மயிலைக்கே வரவழைத்து விடுமளவு பாடுவார்!

சபாபதி பாடுவதோடு மட்டுமல்லாமல், சிறிய அளவில் கதா காலாட்சேபமும் செய்வார்! அவர்கள் குடியிருக்கும் மயிலாப்பூரில் உள்ள ஏழு பிரசித்தி பெற்ற சிவன் கோவில்களிலும், இரண்டு அம்மன் கோவில்களிலும் இவருடைய குரலும், கதா காலாட்சேபமும் மிகவும் பிரசித்தி! வாரத்தின் ஏழு நாட்களும் அந்த ஒன்பது கோவில்களுக்கும் சென்று வருவதை அவர் வழக்கமாகவே கொண்டிருந்தார்! கதா காலாட்சேபம் இல்லாத நாட்களிலும் கூட, சுவாமி தரிசனம் செய்துவிட்டு, ஒரு தேவாரப் பாடலையாவது பாடிவிட்டுதான் அவர் வீடு திரும்புவார்! அவ்வளவு சிவபக்தி கொண்டிருந்தார் அவர்!

பாஸ்கரனின் அப்பா ஒரு தமிழக அரசு ஊழியர்! அந்த காலத்தில் எம்பிஎஸ்ஸி எழுதி சிவில் சப்ளைஸ் துறையில் கிளார்க்காகப் பணியிலமர்ந்து படிப்படியாக பதவியுயர்வு பெற்று இன்று உயரதிகாரியாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்!

பாஸ்கரனின் அம்மா ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியை! பாட்டி காமாட்சி இல்லத்தரசி!

பாஸ்கரனும் படிப்பில் கெட்டிதான்! கல்லூரிப்படிப்பு முடித்து அவனும் அவனுடைய அப்பா போலவே அரசுத் தேர்வெழுதி தமிழக அரசில் அதே சிவில் சப்ளைஸ் துறையிலேயே வேலை கிடைத்துவிட்டது! அவன் வேலையில் சேர்ந்து இரண்டு மாதங்களாகிறது! அவனுக்கு இப்போது திருமணத்துக்குப் பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்!

பத்மினிக்கும் பாஸ்கரனுக்கும் கிட்டதட்ட பத்து வயது வித்தியாசம்! ஆனால் பத்மினிக்கு இருந்த முதிர்ச்சி பாஸ்கரனுக்கு எப்போதும் இருந்ததில்லை!

பாஸ்கரன் தாத்தாவின் பாடல்களை வெறுப்போடு வேறு வழியில்லாமல் கேட்பான்! ஆனால் பத்மினி அவர் பாடும்போது அதை மெய்மறந்து கேட்டு கூடவே தானும் பாடுவாள்! அது மட்டுமல்லாமல் தாத்தாவின் சொற்பொழிவுகளுக்காக தினமும் வெவ்வேறு தேவாரப் பாடல்களை எடுத்து எழுதிக் கொடுப்பாள்!

"தாத்தா! இன்னிக்கு இதப்பத்தி சொல்லுங்கோ! இதுல சுந்தரர் சிவபெருமானோட அழகைப் பத்தி சொல்லியிருக்கார்..... நேத்திக்கு காரணீஸ்வரர் கோவில்ல அப்பர் சொன்ன தேவார விளக்கம் சொன்னேளே.... அது ரொம்ப நன்னா இருந்ததுன்னு என் ஃப்ரண்ட் சங்கரியோட பாட்டி உங்ககிட்ட சொல்லச் சொன்னா...." என்று வேறு தாத்தாவை உற்சாகப்படுத்துவாள்!

தாத்தாவும் பேத்தி எழுதித் தருவதை ஆவலோடு வாங்கிக் கொண்டு அவள் சொல்வது போலவே பாடுவார்!
 




Last edited:

Annapurani Dhandapani

மண்டலாதிபதி
Joined
Jan 31, 2018
Messages
346
Reaction score
3,223
Location
Chennai
தாத்தா இப்படியென்றால் பாட்டி நிறைய சமஸ்க்ருத சுலோகங்கள் சொல்லுவார்! மஹாவிஷ்ணுவின் அவதாரங்களை கதையாகக் கூறிதான் குழந்தைகள் பாஸ்கரனுக்கும் பத்மினிக்கும் அவர் சோறூட்டுவார்!

இதனாலேயே குழந்தைகள் இருவருமே தெய்வபக்தியோடு ஒழுக்கமாக வளர்ந்தனர்!

பாஸ்கரனுக்கு பாட்டு பிடிக்கும் என்றாலும் பாடப் பிடிக்காது! பத்மினி நன்றாகப் பாடுவதால் அவளும் சிறிது சிறிதாகக் கச்சேரி செய்ய ஆரம்பித்திருந்தாள்!

பூஜை புனஸ்காரங்கள் முடிந்து, எல்லாரும் பரபரவென அவரவர் செல்ல வேண்டிய இடங்களுக்குக் கிளம்பினர்!

முதலில் பாஸ்கரனும் அவனுடைய அப்பா ரகுராமனும் கிளம்ப, அதற்கடுத்து பத்மினியும் அவளுடைய அம்மா மைதிலியும் கிளம்பினர்!

பாஸ்கரனின் உற்ற நண்பன் கிருஷ்ண ராஜ்! ஆரம்பப் பள்ளியிலிருந்து ஒன்றாகப் படித்து கல்லூரியிலும் ஒன்றாகவே படித்தனர்! பாஸ்கரன் தமிழக அரசுத்துறையில் கிளார்க் வேலை பார்க்க, கிருஷ்ணாவுக்கு சின்ன வயதிலிருந்தே போலீஸாக வேண்டும் என்ற கனவுடன் வளர்ந்து, அதற்காகவே கடினமாக உழைத்து ஒரு போலீஸாகவும் ஆகினான்!

சைக்கிளில் பள்ளிக்குச் செல்லும் போது தன்னருகில் சைக்கிளை ஓட்டிக் கொண்டு வரும் பவதாரிணியைப் பார்த்து சிரித்தாள் பத்மினி!

"என்ன பத்தூ! இன்னிக்கு கொஞ்சம் லேட் போல! என்னாச்சு?"

"ஆமா மன்னி! இன்னிக்கு கோலம் கொஞ்சம் டைம் இழுத்துடுத்து.... அதான்!"

"ஏய்.... என்ன மன்னீன்னு கூப்டாதன்னு எத்தன முறை சொல்வேன்? எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலடீ...." சந்தோஷமாகக் குறைபட்டவளை குறுகுறுப்பாகப் பார்த்து சிரித்தாள் பத்மினி!

"அதுல ரொம்ப வருத்தமா மன்னீ...." என்று பத்மினி பவதாரிணியை வம்புக்கு இழுக்க,

"ஏய்.... ச்சும்மா இருடீ...." என்றாள் பொய்க் கோபத்துடன்!

பின்னாலேயே தன் பைக்கில் அவர்களை தொடர்ந்து வந்த கிருஷ்ணாவைப் பார்த்து பவதாரிணியின் சத்தம் குறைய,

"ராஜூண்ணா... நீங்க எப்ப வந்தீங்க...." என்றாள்.

"ஏய்! வேணாம் பத்தூ.... அவர நா மட்டும்தான் ராஜூன்னு கூப்பிடுவேன்! நீல்லாம் கூப்பிட்டா எனக்கு செம்ம கோவம் வரும்!"

"அவர் எனக்கு அண்ணா! அதனால நா எப்டி வேணும்னாலும் கூப்பிடுவேன்!" என்றவளைக் கண்டு பவதாரிணியும் கிருஷ்ணாவும் சிரித்தனர்!

"அவன் கௌம்பிட்டானா பத்மினி!"

"ஆமாண்ணா! கௌம்பிட்டான்!"

"சரி! நீ இத்தன சீக்கிரமா எழுந்து அந்த பனியில தன்னந்தனியா கோலம் போட்டுகிட்டிருக்க! அவனயும் எழுப்பி ஒனக்கு துணைக்கு பக்கத்தில நிக்க சொல்றதுதானேம்மா!?"

"அதான் நீங்க இருந்தேளேண்ணா? நா வாசல் கூட்றச்சே வந்து மாடி படியில உக்காண்டேள்! நான் ட்யூஷன் கௌம்பற வரைக்கும் அங்கியே தானே உக்காண்டிருந்தேள்!?"

"ஒனக்கெப்டி தெரியும்?"

"நாந்தான் உங்களப் பாத்தேனே! எனக்கு காவலா எங்கண்ணன் இருக்கான்னுதான் நானும் தைரியமா கோலம் போட்டுண்டிருந்தேன்!" என்றாள் பத்மினி!

"ஹூம்...." சிரித்தான் கிருஷ்ணா! பவதாரிணிக்கு பெருமையாக இருந்தது!

"தோ! இப்ப கூட எனக்கு காவலாதானே துணைக்கு வரீங்க..."

"உங்க தங்கைய உங்களால ஏமாத்தவே முடியாது!" என்றாள் பவதாரிணி!

கிருஷ்ணா திரும்பவும் சிரித்தான்!

"இன்னிக்கு எந்த கோவில்ல கச்கேரி பத்மினி?" பவதாரிணி கேட்க,

"வெள்ளீஸ்வரர் கோவில்ல மன்னீ! 5.30 மணிக்கு!"

"ஒனக்கா? ஒங்க தாத்தாவுக்கா?" என்று கேட்டான் கிருஷ்ணா!

"எனக்குதாண்ணா! தாத்தாவுக்கு கபாலீஸ்வரர் கோவில்ல...."

"ஓ.... ஆமா... அவரு என்ன பாடுவாரு? நீ என்ன பாடுவ...."

"நா பாட்டு பாடுவேன்! தாத்தா பாடிண்டே கதை சொல்வார்!"

"ஓ.... எனக்கு ஒண்ணும் புரியல..."

இதைக் கேட்ட பெண்கள் இருவரும் சிரித்தனர்! அவர்கள் சிரிப்பதைப் பார்த்த கிருஷ்ணாவும் சிரித்தான்!

அதற்குள் பள்ளிக்கூடம் வந்துவிட, கிருஷ்ணாவுக்கும் பவதாரிணிக்கும் டாட்டா காட்டிவிட்டு தன் பள்ளியின் பெரிய காம்பௌண்டிற்குள் நுழைந்தாள் பத்மினி!

அருகிலேயே பவதாரிணி வேலை செய்யும் மருத்துவமனை இருக்க, அவளும் கிருஷ்ணாவுக்கு டாட்டா சொல்லிவிட்டு மருத்துவமனைக்குள் நுழைந்தாள்!

அவளை வழியனுப்பிவிட்டு, பவதாரிணியிடம் தலையசைத்து விடைபெற்றுக் கொண்டு கிருஷ்ணா தன் பைக்கை வேகமெடுத்து தன் வேலைக்குச் சென்றான்!

பத்மினி பள்ளிப்படிப்பு, ட்யூஷன் படிப்பு, வீட்டு வேலை, தன் கச்சேரி, தன் தாத்தாவின் கச்சேரி என்று பம்பரமாய் சுழன்று கொண்டிருந்தாள்!

நாட்கள் வெகு வேகமாய் ஓடிப் போக, ரகுராமன் பணி ஓய்வு பெற்றார்! மைதிலியும் தன் வேலையை விட்டுவிட்டாள்! பாஸ்கரனுக்கும் ருக்மணிக்கும் திருமணம் இனிதே நடைபெற்றது!
 




Annapurani Dhandapani

மண்டலாதிபதி
Joined
Jan 31, 2018
Messages
346
Reaction score
3,223
Location
Chennai
பத்மினிக்கு ருக்மணியை மிகவும் பிடித்தது! ருக்மணிக்கும் தன்னையே சுற்றிச் சுற்றி வரும் குட்டிப் பெண்ணான தன் நாத்தனாரை மிகவும் பிடித்தது!

அதுவும் இந்தச் சின்ன வயதிலேயே பத்மினி இவ்வளவு அருமையாகப் பாடுகிறாள் என்று ருக்மணிக்கு அலாதி பெருமை!

சாதாரணமாக தனக்கு இல்லாத திறமைகள் தன் நாத்தனாருக்கு இருந்தால் பெண்களுக்கு பொறாமையானது சற்றே தலை தூக்கும்! ஆனால் ருக்மணிக்கு பத்மினியைப் பார்த்து எந்தப் பொறாமையும் இல்லை! பெருமை மட்டும்தான்! சொல்லப் போனால் கர்வம் என்று கூடச் சொல்லலாம்! தன் பிறந்த வீட்டு சொந்தங்களிடம் தன் நாத்தனாரைப் பற்றி கர்வத்தோடு கூறிக் கொள்வாள்!

"இப்ப புதுசா கச்சேரி பண்றாளே, ஒரு குட்டிப் பொண்ணு, அவ என்னோட நாத்தனார்தான்! எவ்ளோ ஜோரா பாடுவா தெரியுமா! அவ பாட்ட நாள் முழுக்க கேட்டுண்டிருக்கலாம்! அவ்ளோ நன்னா படுவா! பாட்டு மட்டுமில்ல, அவ படிக்கோலம் போட்டா அவ்ளோ அழகா இருக்கும்! எந்தப் பக்கத்திலிருந்து பாத்தாலும் ஒரே மாதிரி, ஜியாமெட்ரிகலா பர்ஃபெக்ட்டா இருக்கும்! படிப்பில படு சுட்டி! ரொம்ப சமத்து! இவ்ளோ இருந்தும் துளி கூட கர்வம் கிடையாது தெரியுமோ! மன்னீ! மன்னீன்னு என்னையே சுத்தி சுத்தி வருவா!" என்று பெருமை பொங்க கூறுவாள்!

நாட்கள் நகர்ந்தோட, பத்மினி பதினொன்றாவது முடித்து பன்னிரெண்டாவது அடியெடுத்து வைத்த சமயம்! ருக்மணி கருவுற்றாள்!

நவராத்திரி ஆரம்பமாயிற்று! பத்மினிக்கு கோலவிழியம்மன் கோவிலில் அந்த பத்து நாட்களும் கச்சேரிக்கு புக்காகியிருந்தது!

இந்த ஆண்டு பொதுத் தேர்வு என்பதால் அவள் இந்த நவராத்திரியுடன் கச்சேரிகள் செய்வதை நிறுத்திக் கொண்டு பொதுத் தேர்வுக்குப் பிறகு திரும்பவும் கச்சேரிகளுக்கு ஒத்துக் கொள்ளலாம் என்று பெற்றோரின் ஆலோசனைக்கு கட்டுப்பட்டாள்!

எப்போதும் கச்சேரி முடிந்ததும் பத்மினியை பாஸ்கரன்தான் வீட்டுக்கு அழைத்துச் செல்வது வழக்கம்! இப்போதும் அவன்தான் அந்தப்பணியை மேற்கொண்டான்!

நவராத்திரியின் ஐந்தாம் நாள்!

அன்று வீட்டில் பெரியவர்கள் யாரும் இல்லை! சபாபதி தாத்தாவும் பாட்டியும் குடும்பத்தில் ஏதோ முக்கிய விழா என்று மதுரை சென்றிருந்தனர்! அவர்களுடன் ரகுராமனும் மைதிலியும் சென்றிருந்தனர்! நாளை காலைதான் அவர்கள் சென்னை வரவிருந்தனர்!

ருக்மணிக்கு அன்று மசக்கை அதிகமாக இருக்க, பாஸ்கரன் அவளுக்குத் துணையாக வீட்டில் இருக்க நேர்ந்தது!

"நீீ எப்டிடீ திரும்பி வருவ!"

"ஒரு மணி நேரம்தானேண்ணா! நா பாத்துக்கறேன்! நீ என்னப்பத்தி கவலப்படாத! மன்னிய கவனமா பாத்துக்கோ!"

"நேக்கொண்ணும் இல்ல! நீங்க பத்தூவோட துணைக்கு போங்க!"என்றாள் ருக்மணி!

"இல்ல ருக்மணி! ரொம்ப வாந்தி எடுத்திண்டிருக்க நீ! நவராத்ரின்னு யாராவது வந்துண்டேயிருப்பா! தனியா உன்னால சமாளிக்க முடியாது!" என்று பாஸ்கரன் கூற,

"அதாண்ணா! நா பாத்துக்கறேன்! நீ மன்னிய பாத்துக்கோ!" என்றாள் பத்மினி!

"இல்ல! இல்ல! இரு! நா கிருஷ்ணாவ கூப்பட்றேன்!" என்றுவிட்டு அவன் தன் நண்பனுக்கு போன் செய்ய, அவன் முக்கிய வேலையில் இருப்பதாகவும் அன்று அவனுக்கு இரவுப்பணியும் சேர்ந்துவிட்டதாகவும் தெரிவித்தான்!

என்ன செய்வதென்று தெரியாமல் கையைப் பிசையும் தருவாயில்,

"பத்மினி இருக்காளா?!" என்று கேட்டபடி ஒருவன் வீட்டுக்கு வந்தான்!

தெரிந்த குரலாயிருக்கிறதே என்று பத்மினி எட்டிப் பார்த்தாள்! வாசலில் நின்றிருந்தவனைப் பார்த்து ஆச்சர்யமாய் புன்னகை செய்தாள்! அவனும் பத்மினியைப் பார்த்து புன்னகை செய்தான்!

வந்தவன் சிறுவனும் இல்லாமல் வாலிபனும் இல்லாமல் இருந்தான்!

பாஸ்கரன் சென்று விசாரித்தான்!

"நா பத்மினியோட க்ளாஸ்மேட், விஜய்குமார்! கெமிஸ்ட்ரி ரெக்கார்ட் வாங்க வந்தேன்!" என்றான் அவன்!

"பத்மினி க்ளாஸ்மேட்டா? நா உன்ன பாத்ததேயில்லையே?"

"இல்ல சார்! நா இந்த வருஷம்தான் இந்த ஸ்கூல்ல சேர்ந்திருக்கேன்! கோய்முத்தூர்ல படிச்சிகிட்டிருந்தேன்! அப்பாவுக்கு சென்னைக்கு ட்ரான்ஸ்ஃபர் ஆகிடுச்சு! அதான்!"

"ஓ..... ஸ்கூல்ல புதுசா சேந்த பையன்னு சொன்னா... அது நீதானா? அப்பா எங்க வேல பண்றார்?"

"ஸ்டேட் பேங்கல!"

"ஓ! சரி! சரி! இப்ப வீடு எங்க?"

"இங்கதான்சார்! பக்கத்து தெருல!"

"ஓ! புதுசா குடி வந்திருக்காரே, தியாகு! அவர் சன்னா நீ!"

"ஆமா சார்!"

"ஓகேப்பா! இப்டி உக்காரு! இப்ப வருவா!" என்றுவிட்டு பத்மினியை அழைத்தான் பாஸ்கரன்!

பத்மினி வந்து அந்த விஜயகுமாரிடம் பேசிய பின்னர் அவன் கிளம்பும் சமயம்,

"ரொம்ப தேங்க்ஸ் பத்மினி! நா வரேன்! அப்றம், இங்க கோலவிழியம்மன்னு ஒரு கோவில் இருக்காமே? அதுக்கு எப்டி போகணும்?" என்று அவன் வழி கேட்க,

"ஏன்ப்பா கேக்கற?" என்றான் பாஸ்கரன்!

"இல்ல! அங்க நவராத்திரி விழா ரொம்ப நல்லா இருக்குமாம்! அம்மா போகணும்னு சொன்னாங்க! அதான்!"

பாஸ்கரன் வழி சொல்லிவிட்டு, விஜயகுமாரை விட்டே அவனுடைய அம்மாவுக்கு போன் செய்தான்!

தன்னை அறிமுகம் செய்து கொண்டு தன் மனைவியின் நிலை பற்றிச் சொல்லி, கோவிலிலிருந்து வரும்போது தன் தங்கையை அழைத்து வரமுடியுமா என்று உதவி கேட்க, அவரும் சரியென்று கூறினார்கள்!

அதன்படி பத்மினி அவளுடைய பள்ளித் தோழன் விஜயகுமாரின் குடும்பத்துடன் கோவிலுக்குச் சென்றாள்!

அன்றிரவு பத்மினி வீடு திரும்பப் போவதில்லை என்று தெரிந்திருந்தால் பாஸ்கரன் இப்படி ஒரு உதவியை அவர்களிடம் கேட்டிருக்கவே மாட்டான்!




- இது இருளல்ல...... விரைவில் வெளிச்சம் வரும்!
 




Last edited:

Nishirdha

அமைச்சர்
Joined
Feb 8, 2018
Messages
3,003
Reaction score
5,611
Location
Tamil Nadu
Padmini ku Semma talent(y) Krishna, bhavatharini, baskar, rukku, padmini parents and grandparents yellarum semma:) nalla super ah poitu irundha family la yepdi padmini ipdi pannuna?? Enaku doubt ah than irukku:unsure:?? Nejamave oodi poitala?? Illa kidnap pannitangala??:unsure: waiting for the next ud(y)
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top