• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Idhu Irul Alla! - 23

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

பத்மினிக்கு நடந்தது

  • கர்ம பலன்

    Votes: 0 0.0%
  • சமூக அவலம்

    Votes: 20 50.0%
  • பெற்றோரின் கவனக்குறைவு

    Votes: 5 12.5%
  • பெண் குழந்தைகளுக்கு தங்களை தாங்களே காத்துக்கொள்ளத் தெரியவில்லை

    Votes: 11 27.5%
  • மேற்சொன்ன எல்லாமே

    Votes: 15 37.5%

  • Total voters
    40

Annapurani Dhandapani

மண்டலாதிபதி
Joined
Jan 31, 2018
Messages
346
Reaction score
3,223
Location
Chennai

இது இருளல்ல!



23.



கிருஷ்ணா-பவதாரிணியின் நிச்சயதார்த்தத்துக்கு ஏற்பாடு செய்தனர் அவர்களுடைய பெற்றோர்!

அவர்களும் மனதளவில் இதை எதிர்பார்த்தாலும் பாஸ்கரனையும் பத்மினியையும் நினைத்து, இப்போது இது தேவையா என்ற எண்ணமே இருவருக்கும் முதலில் வந்த எண்ணம்!

ஆனால் பெற்றோர் ஏற்பாடு செய்துவிட்டனர்! இதையும் நாம் சந்தித்துதானே ஆக வேண்டும் என்று தங்களைத் தாங்களே சமாதானமும் செய்து கொண்டார்கள்!

நிச்சயதார்த்தத்துக்கு முந்தைய நாள் பிற்பகல் வேளையில் கிருஷ்ணாவைத் தேடி ஒரு பெண், அவன் வேலை செய்யும் காவல் நிலையத்துக்கு வந்தாள்!

அவள் அவனிடம் ஒரு கைக்குட்டையைக் கொடுத்து,

"நா .... பக்கத்தில ஒரு பிரைவேட் ஆஸ்பிடல்ல நர்ஸா வேல பண்றேன்! இத இந்த போலீஸ் ஸ்டேஷன்ல இருக்கற கிருஷ்ணராஜ்ங்கற போலீஸ்காரர் கிட்ட குடுத்துடுங்கன்னு ஒரு பொண்ணு குடுத்துச்சி! அவ கால்ல ஏதோ காயம்னு கட்டு போட்டுக்க வந்திச்சி! இத நீயே குடுக்கலாமேன்னு நா கேக்கும் போதே, அவ கூட வந்தவங்க மருந்து வாங்கிட்டு வந்துட்டாங்க! அந்தப் பொண்ணு, என்னப் பாத்து, அக்கா! இது உங்க கர்சீப்! கீழ விழுந்திடுச்சின்னு சொல்லி என் கைல வெச்சி அழுத்திச்சி! அது ஏதோ பிரச்சனைல இருக்கு போலன்னு புரிஞ்சிகிட்டேன்! அவளப் பாக்க பாவமா இருந்திச்சி! அதான், இன்னிக்கு லீவ் போட்டுட்டு உங்கள பாக்க வந்தேன்!" என்று கூறிவிட்டு "என்ன எந்த பிரச்சனைலயும் மாட்டி விட்டுடாதீங்க சார்!" என்று கோரிக்கையையும் வைத்தாள்!

அவளுடைய பெயர், முகவரி மற்றும் அவளிடம் கைக்குட்டையைக் கொடுத்தவளின் விவரங்களை வாங்கிக் கொண்டு அவளை அனுப்பி வைத்தான் கிருஷ்ணா!

அது பெண்கள் பயன்படுத்தும் வெள்ளை நிறக் கைக்குட்டை! ஆனால் அது மிகவும் அழுக்காகியிருந்தது! அவன் அதைத் திருப்பித் திருப்பிப் பார்த்தான்! அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை!

அவள் கூறியதை நினைத்துப் பார்த்தான்! அந்தப் பெண் யாராக இருக்கும் என்று அவனால் ஊகிக்க முடியவில்லை!

அவள் கொடுத்தவற்றை அப்படியே தன்னுடைய மேஜையின் உள்ளறையில் வைத்துப் பூட்டிவிட்டு வீட்டுக்குக் கிளம்பினான்!

அந்தக் குழப்பத்துடனேயே வீட்டுக்கு வந்தவன் அதைப் பற்றியே நினைத்துக் கொண்டு தூங்கிவிட்டான்! மறுநாள் அவனுக்கும் பவதாரிணிக்கும் நிச்சயதார்த்தம்!

விடியற்காலை வழக்கம்போல அவன் எழுந்து தன் காலைக் கடன்களை முடிப்பதற்காக வீட்டின் கொல்லைப்புறம் செல்ல, அங்கே அவர்கள் வீட்டு வேலையாள் பழைய படுக்கை விரிப்பைத் துவைப்பதற்காக எடுத்து வந்தான்!

அந்த நீல நிறத் துப்பட்டியானது பல முறை துவைத்ததினால் நிறம் மங்கி வெளுத்துப்போய் அதிலிருந்த ஓவியங்கள் எல்லாம் அழிந்து மிகவும் பழையதாகிப் போயிருந்தது!

அந்த வேலையாள் அதை எடுத்துத் தண்ணீரில் நனைத்ததும் அதில் அழிந்து போயிருந்ததாக நினைத்த ஓவியம் தெளிவாகத் தெரிந்தது!

இதைப் பார்த்த கிருஷ்ணாவுக்கு பொறி தட்ட, அவசர அவசரமாகக் கிளம்பி நேராக பவதாரிணியிடம் சென்று, அவசர வேலை என்று மட்டும் கூறிவிட்டு காவல் நிலையம் விரைந்தான்!

அங்கு சென்று தான் நேற்று மாலை பத்திரப்படுத்தி வைத்த அந்த அழுக்குக் கைக்குட்டையை எடுத்து, தண்ணீரில் நனைத்தான்!

தண்ணீரில் நனைந்து ஈரமான அந்த கைக்குட்டையில் குட்டிக் குட்டியாக நிறைய படிக்கோலங்கள் வரையப்பட்டிருந்தது மங்கலாகத் தெரிந்தது!

இது... இது.... ஐயோ பத்மினி! நீயா? நீயாம்மா? கடவுளே! உனக்கு நன்றி! என்று கடவுளுக்கு நன்றியுரைத்தபடியே அந்த நர்ஸ் கொடுத்த தொலைபேசிக்கு அழைக்கலாம் என எண்ணி தொலைபேசியின் அருகில் செல்ல, இறைவனே வரம் கொடுத்தது போல அந்த நர்ஸே அப்போது அவனை அழைத்தாள்!

"ஹலோ சார்! எங்கிட்ட கர்சீப் குடுத்திச்சே, அந்தப் பொண்ணுக்கு ஜொரம்னு இன்னிக்கு இங்க வந்திருக்கு சார்! அதுக்கு டெம்பரேச்சர் அதிகமா இருக்கறதால இன்னிக்கு அட்மிட் பண்ணி ட்ரிப்ஸ் போடச் சொல்லி எங்க பெரிய டாக்டர் சொல்லிருக்கார்னு இப்ப அட்மிஷன் போட்டிருக்காங்க! அந்தப் பொண்ணு, உங்ககிட்ட எதோ சொல்லணும்னு தவிக்கிது சார்! அதும் நேர்லதான் சொல்லணும்னு சொல்லுது சார்! நீங்க உடனே வாங்க சார்! ப்ளீஸ்!" என்று படபடப்பாய்க் கூறி முடித்தாள்!

கிருஷ்ணா, அனுமதிக்கப்பட்ட அந்தப் பெண்ணைப் பற்றிய அங்க அடையாளங்களக் கேட்க, அவள் கூறிய விவரங்கள் எதுவும் பத்மினியின் அடையாளங்களுடன் ஒத்துப்போகவில்லை! எனினும், இந்தப் பெண்ணுக்கு பத்மினியைப் பற்றி ஏதோ தெரிந்திருக்க வேண்டும்! அதைத்தான் இவள் என்னிடம் சொல்வதற்காக இவ்வளவு தவிக்கிறாள் என்று கிருஷ்ணாவின் போலீஸ் மூளை அவனுக்கு உணர்த்தியது!

அதன் பிறகு அவன் சற்றும் தாமதியாமல் பாஸ்கரனுக்கு அழைத்து விவரம் கூறிவிட்டு வீட்டுக்கு வந்து பவதாரிணியை அழைத்துக் கொண்டு பத்மினியைத் தேடிச் செல்ல ஆயத்தமானான்!

எதற்கும் இருக்கட்டும் என்று தன் உயரதிகாரியிடம் முறைப்படி அனுமதி வாங்கவும் அவன் மறக்கவில்லை!

பாஸ்கரனும் தன் மனைவி ருக்மணி மற்றும் தாய் மைதிலியுடன் கிளம்பினான்!

பவதாரிணி ஒரு மருத்துவச் செவிலி என்பதால் ஒரு வேளை பத்மினிக்கு மருத்துவ உதவி எதுவும் தேவைப்படுமோ என்று நினைத்தே அவன் அவளை அழைத்துச் சென்றான்!

அந்தப் பெண் கூறிய ஊர் சென்று அவள் கூறிய மருத்துவமனையைக் கண்டுபிடித்து அங்கு சென்று சேர மதியம் ஒன்றாகிவிட்டது!

கிருஷ்ணா எதிர்பார்த்தது போல கைக்குட்டை கொடுத்த பெண்ணுக்கு பத்மினியைத் தெரிந்திருக்கிறது! அவள் இருக்கும் இடத்தைப்பற்றி அந்தப் பெண் கூற, கிருஷ்ணா கவனமாகக் கேட்டுக் கொண்டான்!

"....... அந்த தெருவுக்குள்ள போனா, மூணாவதா சிவப்பும் மஞ்சளுமா பெயின்ட்டு பண்ணின சின்னதா ஒரு வீடு...... அதுக்குள்ள மாடியில ஒரு ரூம்லதான் அந்தப் பொண்ண முந்தா நேத்தி பாத்தேன்...."

மிக கவனமாக அந்தப் பெண் கூறியதைக் கேட்டுக் கொண்ட கிருஷ்ணா, பாஸ்கரனுடன் அங்கு சென்றால், அவள் கூறியது போல வீடு அங்கு இல்லவேயில்லை!

இருவரும் குழம்பிப் போனார்கள்!

கடவுளே! இதென்ன சோதனை! என் தங்கையை என் கண்ணில் காட்டு! ப்ளீஸ்! என்று பாஸ்கரன் மனமுருகி வேண்டியபடியே சுற்று முற்றும் பார்க்க, அங்கே ஒரு வீட்டில் புதிதாகப் பெயின்ட் செய்து கொண்டிருந்தார்கள்! அதுவும் அந்தப் பெண் கூறியது போல சின்ன வீடுதான்! அது மாடி வீடு போலதான் இருந்தது!

ஒரு வேளை, இதுவாக இருக்குமோ என சந்தேகம் வர, கிருஷ்ணாவிடம் கூறினான்!

அவனுக்கும் இந்தச் சந்தேகம் வந்திருந்தது! போலீஸ் மூளையாயிற்றே!

சட்டென்று முடிவெடுத்து, அங்கிருக்கும் காவல் நிலையத்தினைத் தொடர்பு கொண்டு தன்னைப்பற்றிக் கூறி, தான் வந்த விஷயத்தையும் கூற, அந்தக் கடவுளின் அருளால் அவனுக்கு அங்கிருந்து உதவி கிடைத்தது!

அவர்களே நேரில் வந்து அந்த வீட்டை சோதனை போட, அங்கே பத்மினி இருந்தாள்!

ஆம்! பத்மினி இருந்தாள், குற்றுயிரும் குலையுயிருமாக!
 




Annapurani Dhandapani

மண்டலாதிபதி
Joined
Jan 31, 2018
Messages
346
Reaction score
3,223
Location
Chennai
ஒரு ஒற்றைப் படுக்கைக் கட்டிலின் கீழே இருட்டாக இருந்த இடத்தில் இருட்டோடு இருட்டாகக் கிடத்தப்பட்டிருந்தாள்!

நிறைமாத கர்ப்பிணியாக, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு, கண்களில் தன் வாழ்வின் ஔியினைத் தேடியபடி காய்ந்த சருகாகிக் கிடந்தாள்!

முதலில் கட்டிலின் அருகே ஏதோ கிழிந்த துணி கிடக்கிறது என்றுதான் எல்லாரும் நினைத்தனர்! அப்படி நினைத்து அதை உதற எத்தனித்த போதுதான் அங்கே ஒரு பெண் படுத்திருப்பதும் அது பத்மினி என்பதும் அவர்களுக்குத் தெரிந்தது!

"பத்மினீஈஈஈஈஈ......"

பார்த்தவுடன் பாஸ்கரன் அலறிவிட்டான்!

"ஐயோ.... ஒனக்கு என்னாச்சும்மா.... என் கண்மணீ... எப்டி துறுதுறுன்னு இருந்த கொழந்த..... இப்டி கெடக்கியேம்மா...." தன் தங்கையை வாரியணைத்துக் கொண்டு அழுது அரற்றினான் பாஸ்கரன்.....

கிருஷ்ணாவுக்கோ.... அதற்கு மேல்.... அவனாலும் தன்னைக் கட்டுப் படுத்திக் கொள்ள முடியவில்லை! ஆனாலும் இப்போது அழ நேரமில்லையே!

அவசர அவசரமாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டாள் பத்மினி!

பத்மினியைப் பார்த்ததும் மைதிலியும் ருக்மணியும் பவதாரிணியும் அதிர்ச்சியில் உறைந்தே போயினர் எனலாம்! மைதிலியும் ருக்மணியும் அழுது கரைய அவளைத் தேற்றும் வகையறியாது பவதாரிணி நின்றிருந்தாள்! வேதனை அவளுடைய நெஞ்சை அழுத்திக் கொண்டிருந்தது!

அங்கே மிகவும் முயற்சி செய்து அவளுக்குப் பிரசவம் பார்த்தனர் மருத்துவர்கள்! கடினமான அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருந்தது! ஏனெனில் அந்த பிரசவத்தைத் தாங்குமளவு பலம் பத்மினிக்கு இருக்கவில்லை! அவள் சரியாகச் சாப்பிட்டே மாதக்கணக்கில் ஆகியிருக்கும் என மருத்துவர்கள் கூறக் கேட்டு அனைவரும் உடைந்து போனார்கள்!

"ஐயோ.... என் கொழந்த பாவம் பசி தாங்க மாட்டாளே.... எத்தன மாசமா பசியில கிடந்திருக்காளோ.... எப்டித் தாங்கினாளோ.... சோறு போடாம என் கொழந்தைய இப்டி நாசப்படுத்திட்டாளே...." என்று அரற்றினாள் மைதிலி!

சிறிய உயிரை மட்டும்தான் பிழைக்க வைக்க முடியும் என்ற நிபந்தனையுடன் அறுவை சிகிச்சை செய்து அவளுடைய குழந்தையை வெளியில் எடுத்தனர் மருத்துவர்கள்!

அந்தப் பிரசவத்தில் பத்மினிக்கு அழகான ஆண்குழந்தை பிறந்தது!

இவ்வளவு நேரம் சரியாகச் செயல்பட்ட பாஸ்கரன் இப்பாேதுதான் முதல் தப்பைச் செய்தான்!

குழந்தையை குளிப்பாட்டி எடுத்து வந்து அவர்களிடம் தர, பாஸ்கரன் அதை வாங்கவில்லை! அவனுடைய அம்மாவையும் மனைவியையும் கூட வாங்க விடவில்லை!

அந்தக் குழந்தையை முதன் முதலில் தன் கைகளில் விருப்பத்துடன் வாங்கியது பவதாரிணிதான்!

பத்மினிக்கு மருத்துவர்கள் கொடுத்திருந்த மயக்கம் சீக்கிரம் தெளியாதுதான் என்றாலும் அவள் தான் கூற வேண்டியதை தன் அன்புக்குரியவர்களிடம் கூறிவிட்டு நிரந்தரமாகக் கண்மூடி விட வேண்டுமென்று நினைத்தாளோ என்னவோ, அவள் சீக்கிரமே மயக்கம் தெளிந்து கண்விழித்தாள்!

பத்மினி அரை மயக்கத்தில் ராஜூண்ணா.... ராஜூண்ணா.... என்று அரற்ற, மருத்துவர்கள் வெளியில் வந்து,

"ராஜூண்ணாங்கறது யாரு? அவரதான் அவங்க கூப்பிடறாங்க!" என்றனர்!

கிருஷ்ணா உள்ளே ஓடினான்!

"அண்ணா...." இருக்கும் கொஞ்ச நஞ்ச தெம்பைத் திரட்டி அழைத்தாள்!

"ம்மா.... பத்மினீ...." என்று அழுதான் கிருஷ்ணா!

"இல்லண்ணா.... அழாதீங்கோ! பேச நேரமில்ல..... எனக்கு எம் பையன் கிட்ட பேசணும்... ப்ளீஸ்.... ஏற்பாடு பண்ணுங்கோண்ணா...." என்றாள்.

கிருஷ்ணாவுக்கு எதுவும் புரியவில்லை! அவளே விளக்கினாள்!

"அண்ணா... எவ்ளோ சீக்ரம் முடியுமோ அவ்ளோ சீக்ரமா ஒரு வீடியோ ரெக்காடிங் செய்ய ஏற்பாடு பண்ணுங்கோ.... ப்ளீஸ்...."


இப்போது மாதிரி 90களில் கைப்பேசியின் பயன்பாடு இன்னும் இந்தியாவில் வந்திருக்கவில்லையே.. அதனால் திருமணங்களில் வீடியோ பதிவு செய்யும் நபரைத் தேட, அன்று முகூர்த்த நாளாயிற்றே, (அதனால்தானே அவனுடைய திருமண நிச்சயதார்த்த விழாவை அன்று நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது!) ஒரு வீடியோ பதிவு செய்பவர் கூட கிடைக்கவில்லை! கிருஷ்ணா அலைந்து திரிந்து எப்படியோ ஒரு வீடியோ பதிவு செய்பவரை அழைத்து வந்தான்!

கிருஷ்ணா கேட்டுக் கொண்டதற்கிணங்க, அந்த நபர் அந்தக் கருவியை பத்மினிக்கு நேர் எதிரே அவளை ஃபோகஸ் (focus) செய்து நிலை நிறுத்திவிட்டு (fix), அதை எப்படி இயக்க வேண்டும் என்று கிருஷ்ணாவுக்கு கற்றுக் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டான்!

மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் உயர்அதிகாரிகளின் முழு சம்மதத்துடன் வீடியோ பதிவு செய்யப்பட்டது!

வீடியோ ரெக்கார்ட் செய்யும் போது, பத்மினி, மைதிலி, பாஸ்கரன், ருக்மணி, கிருஷ்ணா மற்றும் பவதாரிணி, அவள் கையில் புதிதாய்ப் பிறந்த குழந்தை தவிர வேறு யாரும் இருக்கவில்லை!

பத்மினி, தற்போது அவளுடைய உடம்பில் ஏறிக் கொண்டிருக்கும் ட்ரிப்ஸின் உதவியால் கொஞ்சமே கொஞ்சம் பலம் பெற்றிருந்தாள்! அந்த சொற்ப பலத்தைக் கொண்டு வீடியோ பதிவு செய்யும் கருவியைப் பார்த்துப் பேசத் தொடங்க, கிருஷ்ணா அதை இயக்கிக் கொண்டிருந்தான்!

"அண்ணா நா சொல்றச்சே ரெகாட் பண்றத நிறுத்திடுங்கோ!" என்று கிருஷ்ணாவிடம் கூறிவிட்டு,

"என் குழந்தை..... இல்ல... இல்ல.... என்னக் காப்பாத்த வந்த கடவுள்..... என் தெய்வம்...." என்றபடியே எழுந்து அமர முயன்றாள்! முடியவில்லை! அறுவை சிகிச்சை செய்த இடம் வலித்தது! கண்கள் வேறு சொருகத் தொடங்கியது! மைதிலியும் ருக்மணியும் அவளை எழுப்பி சாய்வாக அமர வைத்தனர்!

அவள் சாய்வாக அமர்ந்து கொண்டு தன் கைகளை நீட்டி தன் மகனைக் கேட்டாள்!

பவதாரிணி குழந்தையுடன் அவளருகில் செல்ல, மைதிலி சட்டென்று வெறுப்போடு நகர்ந்து கொண்டாள்! பவதாரிணி பத்மினியின் அருகில் அமர்ந்து கொண்டாள்!

பத்மினிக்கு குழந்தையைக் கையில் வாங்கிக் கொள்ளக் கூட முடியவில்லை! அத்தனை பலகீனமாக இருந்தாள்! குழந்தை பவதாரிணியின் கையிலேயே இருக்க பத்மினி தன் குழந்தையை கண்களில் கண்ணீருடன் ஆசையாகத் தொட்டுப் பார்த்தாள்!

"என் கடவுள்....


வசுதேவ சுதம் தேவம்
கம்ஸ சாணூர மர்த்தனம்
தேவகீ பரமானந்தம்
கிருஷ்ணம் வந்தே ஜகத் குரும்!


இந்த தேவகிய சிறை மீட்கறதுக்கு வந்து பொறந்திருக்கற வாசுதேவன்! வாசுதேவா...." என்று அழைத்து குழந்தையின் குட்டி நெற்றியில் முத்தமிட்டாள்!

"வாசுதேவா.... நீ நன்னா இருக்கணும்...நல்ல பையனா நீ வளரணும்.... எந்த பொண்ணுகிட்டயும் தப்பா நடந்துடாத.... சரியா.... நன்னா படிச்சி பெரியாளாகணும்.... எந்த தப்பும் உன்னால நடந்திடக் கூடாது..... எந்த தப்புக்கும் நீ துணை போகக் கூடாது..... சரியா......எங்கியாவது தப்பு நடக்கறதப் பாத்தா...... தைரியமா எதிர்த்துக் கேளு..... நா ஒனக்கே பொண்ணா பொறப்பேன்... நீ என்ன நன்னா தைரியமான பொண்ணா வளக்கணும்.... இப்ப நா படிக்க ஆசப்பட்டதெல்லாம் அப்ப நீ என்ன படிக்க வெக்கணும்... அதோட எனக்கு கராத்தே மாதிரி சண்டைப் பயற்சியும் கத்து குடுக்கணும்! அப்பதான் இது மாதிரி சமூக விரோதிகள் கிட்டேந்து என்ன நானே காப்பாத்திக்க முடியும்! செய்வியாடா கண்ணா...." என்று கண்ணீருடன் பிறந்த குழந்தையைப் பார்த்து அவள் இறைஞ்சினாள்!

பிறந்து ஒரு மணி நேரமேயான அந்த பச்சைக் குழந்தைக்கு எப்படி இவள் பேசுவது புரியப்போகிறது என்று பாஸ்கரன் அலட்சியமாகப் பார்த்தான்!

ஆனால் அதிசயத்திலும் அதிசயமாக இன்னும் கண்திறக்காத அந்தக் குழந்தை தன் தாயின் குரல் கேட்டு முதல் முறையாகக் கண்விழித்துப் பார்த்தது! பார்த்ததோடு மட்டுமல்லாமல், கைநீட்டி யாசகம் கேட்கும் தன் தாயின் கையில் சத்தியம் செய்வது போல தன் வலது கையை வைத்தது!

பார்த்தவர்கள் அத்தனை பேரும் உருகிப் போனார்கள்!

பத்மினி தன் குழந்தையின் பிஞ்சுக் கையைப் பிடித்து முத்தம் வைத்தாள்! தன் கண்களில் ஒற்றிக் கொண்டாள்!

"அண்ணா... ரெகாடிங்க கட் பண்ணிடுங்கோ...." என்று கூறிக் கொண்டே பவதாரிணியின் தோளிலேயே சாய்ந்து கொண்டாள்!

கிருஷ்ணாவும் ரெகார்டிங் பட்டனை அணைத்தான்!

"பத்தூ.... உனக்கென்னடீ ஆச்சு.... அந்த விஜயகுமாரோட நீ ஓடிப்போனதா மொதல்ல நெனச்சோம்.... அப்றம் அவன் கூட நீ ஓடலன்னு புரிஞ்சது.... நீ எப்டிடீ இங்க வந்த...." என்று மைதிலி நடந்ததை சுருக்கமாகச் சொல்லி அவளிடம் விவரம் கேட்க,

பத்மினி சிறிது மூச்செடுத்துக் கொண்டு தனக்கு நடந்ததைக் கூறினாள்!
 




Annapurani Dhandapani

மண்டலாதிபதி
Joined
Jan 31, 2018
Messages
346
Reaction score
3,223
Location
Chennai
"நா ஓடிப் போய்ட்டேன்னு நீங்கல்லாம் நெனச்சிண்டிருக்கலாம்! இல்ல... நா ஓடிப் போகல.... அந்த விஜயகுமார் என்ன நம்மாத்து வாசல்ல விட்டுட்டு போனப்றமா நா நம்மாத்து கேட்ட (gate) தெறந்து உள்ள வரும் போது, கேட் பக்கத்தில ஏதோ சத்தம் கேட்டது.... என்னன்னு குனிஞ்சி பாக்கறச்சே யாரோ என் வாயப் பொத்தி தூக்கிண்டு ஓடினா... என்னால கத்தக் கூட முடியல....

நா சீக்கிரமே மயங்கிட்டேன்.... நா கண் முழிச்சி பாக்கறப்ப.... எந்த எடம்னே தெரியல... மங்கலான வெளிச்சம்..... ஒரே அழுக்கா.... கட்டில்ல...... நா.... நா.... அசிங்கமா...... என்ன யார் யாரோ.... என்னென்னமோ பண்ணிட்டா.... எவ்வளவோ போராடினேன்.... என்னால எதையும் தடுக்க முடியல.... அங்கேந்து நா தப்பிக்க முயற்சி பண்ணேன்... அதனால அவா எனக்கு மயக்க ஊசி போட்டா.... நன்னா படிச்சி... நாசால ஆஸ்ட்ரோ நாட்டா (astronaut) ஆகணும்னு நெனச்சேன்.... எல்லாம் பாழாயிடுத்து.... நா இப்டி சீரழிஞ்சி.... நாசமா போய்ட்டேன்...." தாங்க முடியாமல் அழுதாள் பத்மினி!

கேட்டிருந்த அனைவருமே அழுதனர்!


பத்மினி சிறிது மூச்செடுத்துக் கொண்டு திரும்பவும் பேசினாள்!

"ஆனா நா தைரியத்த இழக்கல.... பாட்டி சொல்லியிருக்கா..... கடவுள் வருவார்... எப்டியாவது என்ன அந்த நரகத்திலேந்து விடுவிப்பார்னு... நா நம்பிக்கையா காத்திருந்தேன்....."

"என்னடீ கடவுள்...... கடவுளாம் கடவுள்! அப்டி ஒருத்தன் இல்லவே இல்ல!" உடைந்து அழுதாள் மைதிலி!

"இல்லம்மா.... கடவுள நிந்திக்கப்படாது.... தாத்தா திட்டுவா..... கடவுள் இருக்கார்.... ஆமா.....

நீதானேம்மா சொல்லி குடுத்த..... அந்தக் கடவுள்தான் என் வயித்தில கருவா வந்து உருவாகி இப்ப எனக்கு பிள்ளையா பொறந்திருக்கார்!"

இப்போது பாஸ்கரன் அடுத்த தப்பைச் செய்தான்!

"புள்ளையா அது... சனியன்.... எந்தப் பாவியோட வித்தோ...." என்று பாஸ்கரன் தூற்றினான்!

"தெரியாதுண்ணா... நிச்சயமா தெரியாது..... ஆனா அது என்னக் காப்பாத்ததான் வந்து என் வயித்தில பொறந்திருக்கு..... ஆமா.... என் வயித்தில அது உருவானதுக்கு அப்றமாதான் எனக்கு அந்த நரகத்திலிருந்து விடுதலை கெடச்சுது..... அது உருவானது கூட எனக்குத் தெரியல.... அஞ்சு மாசம் கழிச்சிதான் தெரிஞ்சது..... அத அழிச்சிடணும்னு அவால்லாம் என்னென்னமோ பண்ணினா.... ஆனா இதுதான் கடவுளாச்சே! கடவுள யாராலயாவது அழிக்க முடியுமா...... அதான் என்ன அவா ஒரு மூலைல தூக்கிப் போட்டுட்டா..... அந்த சிறைலேந்து எனக்கு முதல் விடுதலை கெடச்சது..... ஆனா முழு விடுதலை வேணுமே.... எனக்கும் என் குழந்தைக்கும்......"

"ம்க்கும்...." என்றான் பாஸ்கரன்!

"ஆமாண்ணா.... இதுக்குதான் முதல்ல விடுதலை வேணும்.... இது செத்துப் பிறந்தா பிரச்சனையில்ல.... ஒரு வேளை இந்தக் கொழந்த பொண்ணா பொறந்ததுன்னா.... அதோட அது வாழ்க்கை முடிஞ்சது.... அதுவும் இந்தக் கொடுமையெல்லாம் அனுபவிக்கும்.... ஒரு வேளை ஆண் குழந்தையா பொறந்தாலும் அதுக்கு இங்கேந்து விடுதலை கிடையாதுண்ணா.... அது ஊர் பொறுக்கியா மாறிடும்..... அதனாலதான்..... என் குழந்தைய இங்கேந்து காப்பாத்தறதுக்குதான் நா உசிர கைல புடிச்சிகிட்டிருந்தேன்...

ஆனா எப்டி காப்பாத்த... நானோ ஒடம்பில தெம்பேயில்லாம கெடக்கேன்.... அதுக்காகதான்.... நா இருந்தேனே... அந்த வீட்ல எதோ வேல செய்ய வந்தா..... ஒரு அக்கா... அவாகிட்ட.... ராஜூண்ணா பத்தி சொல்லி.... அடையாளத்துக்கு என் கர்சீப்ப குடுத்தனுப்பினேன்...... நா சொன்னது அந்தக்காவுக்கு புரிஞ்சிதோன்னு பயந்தேன்.... ஆனா.... நெஜமாவே கடவுள் என் பக்கம்தான்..... இவ்ளோ சீக்ரம் நீங்க வருவேள்னு நா எதிர் பாக்கவேயில்ல.... கடவுளுக்கு நன்றி......" என்றவள், கிருஷ்ணாவிடம்,

"ராஜூண்ணா! நா செத்தப்றமா என் பாடிய மெடிக்கல் காலேஜுக்கு குடுத்துடுங்கோ..."

"வேணாம்டீ.... அப்டிலாம் பேசாத பத்தூ.... நீ நன்னா தேறி.... "

"ம்மா.... இனிமே நா ஒடம்பு தேறி வர என்ன மிச்சமிருக்கு....." என்று அதற்கு முற்றுப்புள்ளி வைத்தாள் பத்மினி!

யாருக்கும் எதுவும் சொல்லத் தோன்றாமல் கண்ணீர் மல்கியபடி இருந்தனர்!

"இந்தக் கொழந்தைய நன்னா வளப்பியாண்ணா?" என்று அவள் கேட்க, பாஸ்கரன் கல் போல நின்றான்! ருக்மணி எதையோ சொல்ல வேண்டும் என்று வாய் திறக்க, பாஸ்கரனின் முறைப்பில் அவள் தன் வாயை இறுக மூடிக் கொண்டாள்!

இதைப் பார்த்த கிருஷ்ணா திகைக்க,

"என்ன தெகச்சிப் போய் பாக்கறீங்க ராஜூ! நல்லா வளக்கறேன்னு சொல்லுங்க உங்க தங்கைகிட்ட!" என்று பவதாரிணி சொல்ல,

கிருஷ்ணா அவள் கூறியது போலவே பத்மினியிடம் கூறினான்!

பவதாரிணியின் தோளில் இன்னும் வசதியாகச் சாய்ந்துகொண்டு,

"பவா மன்னீ தேங்க்ஸ்........ வாசுதேவன் கிட்ட என் வாழ்க்கையப்பத்தி எதையும் சொல்லிடாதீங்க! அவன பத்திரமா பாத்துக்கோங்க...." என்றபடியே மயங்கினாள்! அப்படியே அவளுடைய உயிர் பிரிந்தது!

சமூக விரோதிகளின் கொடூரத்தால் ஒரு பதினேழு வயதுச் சிறுமி கடத்தப்பட்டு பாலியல் தொழிலில் கொடூரமாக ஈடுபடுத்தப்பட்டு பல வன் கொடுமைகளுக்கும் ஆளாகி நல்வாழ்வை மட்டுமல்லாது தன் இன்னுயிரையும் இழந்துவிட்டாள்!

மைதிலி ஓவென ஓலமிட்டு அழ, ருக்மணி மௌனமாக அழுதாள்! கிருஷ்ணாவும் பாஸ்கரனும் நடந்ததை ஏற்க முடியாமல் தவித்தனர்! பவதாரிணி கண்களில் கண்ணீருடன் பிறந்த குழந்தையைத் தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்தபடி அமர்ந்திருந்தாள்!

ஆனால் இப்படியே இருக்க முடியாதே! அடுத்து நடக்க வேண்டியதைப் பார்த்தாக வேண்டுமே! அந்த நினைவு ஏதுமின்றி எல்லாரும் அமர்ந்திருக்க, முதலில் மருத்துவமனை ஊழியர்கள் வந்தனர்! மருத்துவர்கள் கெடுபிடி செய்தனர்!

எல்லாவற்றுக்கும் மேலாக பச்சைக் குழந்தை பசியினால் வீறிட்டு அழுதது.

பவதாரிணி சுதாரித்து கிருஷ்ணாவை உலுக்க, கிருஷ்ணா முதலில் குழந்தை பசியாற ஏற்பாடு செய்தான்!

அடுத்ததாக பத்மினியின் உடலை அவளுடைய விருப்பப்படி மருத்துவக் கல்லூரிக்கு அளிப்பதாக எழுதி கையெழுத்திட்டுவிட்டு பாஸ்கரனிடம் திரும்பினான்!

"பாஸ்கரா! இந்தக் கொழந்தை..."

"நீயே எதாவது அனாதை ஆஸ்ரமத்தில சேத்திடு கிருஷ்ணா..."

"டேய்! என்னடா பேசற!? இது உன் தங்கையோட கொழந்தைடா..."

"இல்லைன்னு சொல்லல.... ஆனா இத என்னால வளக்க முடியாது!" என்ற பாஸ்கரனின் முகம் கல் போல பாறையாகி இருந்தது!

கிருஷ்ணாவும் ருக்மணியும் அதிர்ந்து போய் மைதிலியைப் பார்க்க அவளுடைய முகம் அதற்கு மேல் இறுகியிருந்தது!

"டேய்... பத்மினிக்கு நடந்தது...."

"கர்ம பலன்.... இதெல்லாம் அவ அனுபவிக்கணும்னு அவ தலையெழுத்து....."

"என்னடா பேசற...."

"ம்ச்... எதுக்கு இப்ப வீண் பேச்சு... நா இந்தக் குழந்தைய வளக்க மாட்டேன்...." அழுத்தம் திருத்தமாகக் கூறினான் பாஸ்கரன்!

பவதாரிணி கிருஷ்ணாவைப் பார்த்துக் கேட்டாள்!

"இது என் மகன்! நீங்க இத யார்கிட்ட குடுக்கப் போறீங்க?"

"பவி.... நீ என்ன சொல்ற?"

"பத்மினிட்ட வளக்கறேன்னு வாக்கு குடுத்துட்டு.... அப்றம் என்ன பேச்சு இது?"

"ஆனா....."

"அத்ததானே..... சமாளிப்போம்!"

கடைசியாக அந்த வீடியோக்காரர் வந்தார்!

அந்த வீடியோக்காரரிடம் வீடியோக் கருவியை கொடுத்து பதிவு செய்த கேஸட்டை வாங்கிக் கொண்டு அதற்குரிய பணத்தைக் கொடுத்து நன்றி கூறி அனுப்பினான்!

அதோடு பிரச்சனை முடிந்ததாக எல்லாரும் சென்னை கிளம்பினர்!
 




Annapurani Dhandapani

மண்டலாதிபதி
Joined
Jan 31, 2018
Messages
346
Reaction score
3,223
Location
Chennai
வழியில் குழந்தையின் பாலுக்காக மீண்டும் நிறுத்தியபோது, கிருஷ்ணா தன் உயரதிகாரியிடம் பேசி, பத்மினி இப்போதும் கிடைக்கவில்லை என்றும் சென்ற இடத்தில் குப்பைத்தொட்டி ஒன்றில் ஒரு ஆண் குழந்தை கிடைத்தது என்றும் கூறிவிட்டு, அதை முறைப்படி தத்தெடுக்க அவர் உதவி வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டான்!

அதன் பிறகு தன் வீட்டுக்கு போன் செய்து தன் தந்தையிடம் நடந்ததைக் கூற, அவர்,

"பாவம்! அந்தப் பொண்ணுக்கு இது நடந்திருக்க வேணாம்! ஆனா...நல்லது பண்ணினா என் மருமக! எல்லாத்தையும் நான் பாத்துக்கறேன்! நீ பத்திரமா வீட்டுக்கு வாப்பா!" என்று கூறினார்!

பாஸ்கரன் தன் தாயுடனும் மனைவியுடனும் தன் வீட்டுக்குச் செல்ல, கிருஷ்ணா பவதாரிணியுடனும் பத்மினியின் குழந்தையுடனும் தன் வீட்டுக்குச் சென்றான்!

அதற்குள் என்ன செய்ய வேண்டும் என்று கிருஷ்ணாவின் தந்தை நாகலிங்கம் முடிவு செய்து கொண்டார்!

அதன்படி உலகநாயகி ஆர்பாட்டம் செய்யும் போது அவளுக்கு ஒத்து ஊதுவது போல, கிருஷ்ணாவை வீட்டைவிட்டு துரத்துவது போல நாடகமாடி அவனுக்குத் திருமணம் செய்து வைத்து ஆசிர்வாதம் செய்து அனுப்பி வைத்தார்!

நாகலிங்கத்தின் பாசத்தைப் புரிந்து கொண்ட கிருஷ்ணாவும் பவதாரிணியும் கண்களாலேயே அவரிடம் நன்றி கூறி விடை பெற்றனர்!

நன்றாக வாழ வேண்டிய தன்னுடைய மகள் இப்படி சீரழிந்து போனாளேயென்று அழுது அழுதே அன்றிரவு பாஸ்கரனின் அம்மா மைதிலியும் இந்த உலக வாழ்வை முடித்துக் கொண்டாள்!

பாஸ்கரன் மனமுடைந்து போனான்! அவனைத் தேற்றுவதிலேயே ருக்மணியின் பொழுதுகள் கழிந்தன!

குழந்தை வாசுதேவன், கிருஷ்ணா-பவதாரிணியின் அன்பில் வளரத் தொடங்க, அதைப் பார்த்து வந்த பாஸ்கரனும் கொஞ்சம் கொஞ்சமாக தெளிவடையத் தொடங்கினான்!

அதன் பிறகு சுமார் பத்தாண்டுகள் கழித்து, பவதாரிணி கருவுற்ற நேரத்தில்தான் ருக்மணியும் கருத்தரித்தாள்! பவதாரிணிக்கு ஐஸ்வர்யாவும் ருக்மணிக்கு சௌமியாவும் பிறந்தனர்!

தான் ஒரு அநாதை என்று வாசுதேவனுக்கு தெரிந்த அன்று பத்மினி தன் மகனுக்காக பதிவு செய்த வீடியோ பதிவை போட்டுக் காட்டினார் கிருஷ்ணா!

நல்ல குடும்பத்தில் பிறந்த தன் தாய், ஒரு சிலரின் பேராசையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டாள் என்றும் அதன் பலனாகத்தான் தன் பிறப்பு நிகழ்ந்ததென்றும் அறிந்து கொண்ட போது வாசு துடிதுடித்துப் போனான்!

இது எப்படி சாத்தியம்? பத்மினிதான் தன் மகனுக்கு தன் வாழ்க்கையைப்பற்றி எதையும் சொல்ல வேண்டாம் என்றிருந்தாளே!

ஆமாம்! சொல்லியிருந்தாள்தான்! ஆனால் அவனுக்கு இது தெரிய வேண்டுமென்பது விதியென்றால் அதை யாரால் தடுக்க முடியும்!?

பத்மினி, கிருஷ்ணாவிடம் ரெக்காடிங்கை நிறுத்தச் சொன்னபோது அவன் அதை சரியாக நிறுத்தாததால், வீடியோ கருவியிலிருந்து கேஸட்டை எடுக்கும் வரை அவர்கள் பேசிய அனைத்தும் அதில் பதிவாகியிருந்தது! அதனாலேயே தன் தாய் பத்மினிக்கு நிகழ்ந்த கொடுமைகள் அனைத்தும் வாசுதேவனுக்குத் தெரிய வந்திருந்தது!

பாஸ்கர் மாமா தன்னுடைய தாய் மாமாதான் என்றறிந்து மகிழ்ந்தாலும் தன்னை வளர்க்க அவர் முன்வரவில்லையே என வருந்தினான்! அதை அவரிடமே கேட்கப் போக, மாமா அவனை அலட்சியமாகப் பேசி அனுப்பிவிட்டார்!

அதன் பின்னர் சௌமி வயதுக்கு வந்திருந்த சமயம் எளிமையாக வீட்டில் விருந்தளித்த போது, மாமாவின் வீட்டுக்கு வேண்டா வெறுப்பாகச் சென்றான் வாசு! வாசுவும் மற்ற நண்பர்களும் முன்னறையில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்! பக்கத்து அறையில் ருக்மணியின் உறவுக்காரர்கள் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள்!

"டீ ருக்மணி.... உன்னோட நாத்தனார் பத்மினி பத்தி எதுனா தெரிஞ்சுதா...."

"ம்... ம்ஹூம்... இல்ல சித்தீ...."

"அவ யாரோடயோ ஓடிப் போய்ட்டாளாமே...."

"அப்டிலாம் சொல்லாதீங்கோ சித்தீ.... அவ எங்கியாவது பத்திரமா இருப்பா...." என்று கூறியபடியே கண்களில் திரண்டு வந்து கண்ணீரை மறைக்க உள்ளே ஓடினாள் ருக்மணி!

"இருந்தா சந்தோஷம்தான்.... ஆனா அவ அப்டியா இருப்பா.... அந்தப் பொண்ணு மூக்கும் முழியுமா நன்னா இருக்கச்சேவே நெனச்சேன்... இவல்லாம்... எங்க நன்னா வாழப் போறான்னு.... கடவுள் அழகக் குடுக்கறவாளுக்கு கூடவே மண்ட நெறைய கர்வத்தையும்ல குடுத்துடறார்..... நேக்கென்னமோ அவ எதாவது தப்பு தண்டாவில மாட்டியிருப்பாளோன்னு தோணறது...." என்று மேடை ரகசியம் பேசி பெரிதாக சிரித்தாள் அந்த எழுபது வயதுக் கிழவி சித்திக்காரி!

கொல்லென்று சிரித்தனர் அவளுடன் உட்கார்ந்திருந்த மற்ற பெண்கள்!

இதைக் கேட்ட வாசுதேவன் புழுவாய்த் துடித்தான்! பாதி சாப்பாட்டில் அப்படியே எழுந்து போய் கை கழுவிக் கொண்டு விறுவிறுவென்று தன் வீட்டுக்குப் போய்விட்டான்!

இதெல்லாம் பார்த்த கிருஷ்ணாவும் பவதாரிணியும் மனதுக்குள் வருந்தினர்! ருக்மணிக்கு அடிவயிறே கலங்கியது! ஐயோ! பாவம்! இந்தப் புள்ள மனசு நோகற மாதிரி இவால்லாம் இப்டி பேசறாளே! பத்மினீ.... எங்காத்து மனுஷா பேசினதுக்காக நா மன்னிப்பு கேக்கறன்டீ.... என்று மறைந்த தன் நாத்தனாரிடம் மனதுக்குள் மன்னிப்பு கோரினாள்!

அன்றும் கலங்கிப் போயிருக்கும் வாசுவை பவதாரிணி தன் மடியில் போட்டு ஆறுதல் செய்தாள்!

ஏற்கனவே மாமாவின் மேல் கோபம்! இப்போது மாமியின் உறவினர்களும் இப்படிப் பேச, அவன் மாமாவிடம் மேலும் கடுமையாக நடந்து கொண்டான்!

மாமாவோ அவனை அதிகாரம் செய்வதிலேயே குறியாய் இருந்தார்!

இருவருக்கும் அடிக்கடி தகராறு நடக்க ஆரம்பித்தது! அதனால் கிருஷ்ணாவின் அறிவுரைப்படி குன்னூரில் குடியேறினார் பாஸ்கர் மாமா! அதற்கும் ஒரு குதி குதித்தார்தான்! ஆனால் சௌமியும் மாமியும் அவரை பேசிப் பேசி கரைத்து ஒப்புக் கொள்ளச் செய்தனர்!

தன்னுடைய தாயைப் பற்றியும் தன் பிறப்பின் ரகசியத்தையும் யாமினியிடம் கூறி முடித்தான் வாசுதேவன்!





- இது இருளல்ல...... விரைவில் வெளிச்சம் வரும்!
 




Nishirdha

அமைச்சர்
Joined
Feb 8, 2018
Messages
3,003
Reaction score
5,611
Location
Tamil Nadu
Padmini ku ipdi nadandhurukka kodathu:cry: Indha maari aalunga yellam yeppo than therundhuvangalo:mad: avangaluku than onnum aagama nalla valndhutu irukanga:mad: god nu oruthar irundha ivangaluku romba koduramana punishment than kodukanum:mad: Padmini sonna maari vaasu ku Marubadiyum avanga ponna porandhu nalla dare aana ponna avanga dreams ah Indha jenmathula yaavathu niraivethikanum:)(y)
 




Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
Padmini romba paavam:confused: nallavaalukku than indha logathula idam illa pola:confused: Kali kaalam:cautious: karuda puraana padi thappu seiravaaluku ellam thandanai kidacha than maththava ellam thirundhuva:mad: Kadavul irukaru padmini un kanavu un aathu paiyan moolama kandippa nadakkum(y)
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top