• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Idhu Irul Alla! - 24

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ருக்மணி மாமி சொன்ன குற்றச்சாட்டு

  • சரி

    Votes: 23 92.0%
  • தவறு

    Votes: 1 4.0%
  • 50 : 50

    Votes: 1 4.0%

  • Total voters
    25

Annapurani Dhandapani

மண்டலாதிபதி
Joined
Jan 31, 2018
Messages
346
Reaction score
3,223
Location
Chennai
இது இருளல்ல!


24.


தன்னுடைய தாயைப் பற்றியும் தன் பிறப்பின் ரகசியத்தையும் யாமினியிடம் கூறி முடித்தான் வாசுதேவன்!

அவனுடைய மடிக்கணிணியில் பத்மினி பேசிய வீடியோ பதிவு ஓடி முடிந்திருந்தது!

கண்கள் கசிய கேட்டிருந்தாள் யாமினி!

பத்மினியின் படத்தை அவனுடைய மடிக்கணிணியில் பார்த்து அதிர்ந்தே போனாள் யாமினி!

அவளுடைய படத்தைப் பார்த்தால் குழந்தை என்றுதான் கூற முடியும்! படத்தில் கள்ளம் கபடம் அறியாத குழந்தையாய் சிரித்துக் கொண்டிருந்தாள் பத்மினி! கொஞ்சம் சௌமியின் சாயலும் தெரிந்தது!

வீடியோ பதிவில் இளைத்து கருத்து கன்னங்கள் ஒட்டி கண்கள் உள்ளே போய் வாடி வதங்கியிருந்த பெண்ணுக்கும் இவளுக்கும் சம்மந்தமே இல்லாமல் இருந்தது!

யாமினியால், படத்திலிருக்கும் குட்டிப் பெண்தான் தன் மாமியார் என்று நம்பக் கூட முடியவில்லை!

இவளுக்கா? கள்ளம் கபடமில்லாத இந்தக் குழந்தைக்கா? இந்த சின்னப் பொண்ணுக்கா இந்த நிலை வர வேண்டும்? கடவுளே! உனக்கு கண்ணேயில்லையா?

இவளுக்கு நேர்ந்த கொடுமையை வைத்துப் பார்த்தால் தனக்கு நடந்தது ஒன்றுமேயில்லை என்று எண்ணிக் கொண்டாள் யாமினி!

வாசு வருத்தம் தோய்ந்த முகத்துடன் இறுகிப் போய் அமர்ந்திருந்தான்!

"இப்ப நீதான் யாமினி முடிவு பண்ணனும், என்ன நீ ஏத்துக்கறதா வேண்டாமான்னு...." என்றான் விரக்தியாய்!

அவள் பதிலொன்றும் கூறாமல் அவனிடம் தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொடுத்தாள் யாமினி!
அவளிடம் வேண்டாம் என்று தலையசைத்தான். அவனுடைய அறைக்கதவு தட்டப்பட்டது!

யாமினி தன் கண்ணைத் துடைத்துக் கொண்டு கதவைத் திறக்க, அறை வாசலில் ஐஷுவும் சௌமியும் கண்ணீர் வழிய நின்றிருந்தனர்!

யாமினி கதவைத் திறந்ததும் ஓடி வந்து வாசுவைக் கட்டிக் கொண்டு அழுதாள் ஐஷு!

"ஒனக்குள்ள இவ்ளோ சோகம் வெச்சிகிட்டு..... சாரி.... சாரிண்ணா.... நா.... உன்கிட்ட ரொம்ப விளையாடிட்டேன்.... சாரிண்ணா...." என்று கதறியழுதாள்.

சௌமியோ,

"வாசுண்ணா.... அத்தைக்கு எவ்ளோ பெரிய கொடுமை நடந்திருக்கு.... ரொம்ப பாவம்ண்ணா பத்மினி அத்தை.... நெனச்சுப் பாக்கவே கொடுமையா இருக்குண்ணா.... எப்டிண்ணா... எப்டி.... எல்லாம் தெரிஞ்சும் எப்டி நீங்க அமைதியா இருந்தேள்..."

வாசுவால் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் உடைந்து போய் அழுதான்!

இத்தனை நாட்களாக தங்கைகள் முன்னால் வெளிப்படையாக அழ முடியாமல் தேக்கி வைத்திருந்த கண்ணீரையெல்லாம் கொட்டித் தீர்த்தான்!

மூவரும் அழுவதைக் காணச் சகியாமல் அவர்களைத் தடுக்கவும் தெரியாமல் அந்த அறையை விட்டு வெளிய வந்த யாமினி மேலும் அதிர்ந்தாள்!

அங்கே கிருஷ்ணாவும் பவதாரிணியும் ருக்மணி மாமியும் ஆளுக்கு ஒரு பக்கம் அமர்ந்து வாயில் கை வைத்தபடி சத்தமில்லாமல் அழுது கொண்டிருந்தனர்!

யாமினி மெதுவாக சமையலறைக்குச் சென்று பால் காய்ச்சி எல்லாருக்கும் எடுத்து வந்து கொடுத்தாள்!

முதலில் யாரும் அவள் கொடுத்ததை வாங்கவில்லை! ஆனால் அவள் வற்புருத்தி எல்லாரையும் குடிக்க வைத்தாள்!

ஐஷு கேட்டாள்!

"அண்ணா! நா அந்த வீடியோவ பாக்கலாமா?"

"வே.... வேணாம்.... வேணாம்மா..."

"இல்லண்ணா.... இவ்ளோ நேரம் நீயும் அண்ணியும் பேசினது எல்லாம் கேட்டுகிட்டுதான் இருந்தோம்! அந்த வீடியோ சத்தம் கூட தெளிவா கேட்டுச்சு.... எனக்கு உன்னோட அம்மாவ பாக்கணும்ணா...."

அரை மனதாக வாசு திரும்பவும் தன் மடிக்கணிணியில் இருந்த அந்த வீடியோ பதிவை தங்கைகளுக்காக ஓடவிட்டான்! இருவரும் கண்கள் கசிய பார்த்து முடித்தனர்!

அது முடிந்ததும் சௌமி தன் தந்தையை நன்றாகத் திட்டினாள்!

"இந்த அப்பாவுக்கு எவ்ளோ ஒரு கல் நெஞ்சம்..... அத்தை கேக்கும் போது நா வளக்கறேன்னு ஒத்துக்க மனசிருந்ததா.... இதுல எப்ப பாத்தாலும் அண்ணாட்ட அதிகாரத்த காட்ட வேண்டியது..... அப்பா ரொம்ப மோசம்..... நீ ஏம்மா எல்லாம் தெரிஞ்சிருந்தும் அப்பாவ எதிர்த்து ஒரு வார்த்தை கூட சொல்லல..... நீ இப்ப காட்டின கோவத்த அன்னிக்கே காட்டியிருந்தேன்னா.... அண்ணாவுக்கு இவ்ளோ மன உளச்சல் இருந்திருக்காது....." என்று தன் மனதில் இருந்த ஆதங்கத்தைக் கொட்டினாள்!

மற்றவர்கள் எல்லாரும் அவள் பேசுவதை ஒன்றும் சொல்லாமல் கேட்டிருக்க, யாமினியால் அப்படி இருக்க முடியவில்லை!

"என்ன பேசற சௌமி? உங்கப்பா கல் நெஞ்சக்காரரா? பாவம் சௌமி அவரு!"

"என்ன மன்னி, நீங்க? இப்பவும் அப்பாவுக்காக பரிஞ்சி பேசறீங்க? அப்பா வாசுண்ணாவ எவ்ளோ கீழ்த்தரமா நெனச்சிருந்தா அண்ணாவ வளக்க மாட்டேன்னு சொல்லியிருப்பார்!"

"நீ உங்கப்பாவ புரிஞ்சிகிட்டது அவ்ளோதான்!" என்று யாமினி கூறியதும் எல்லாருமே யாமினியை அதிசயமாகப் பார்த்தனர்!

"என்ன யாமினி சொல்ற? எல்லாம் தெரிஞ்சும் அவர் என்ன வளக்க ஒத்துக்கல.... நீ பாத்தல்ல... அந்த வீடியோல.... எவ்ளோ கடுமையா பேசினார்னு... எங்கம்மா என்ன கடவுளா பாத்தாங்க.... ஆனா இவர் என்ன கீழ்த்தரமாதான் நெனச்சார்....." என்று கோபமாகச் சொன்னான் வாசு!

"தயவு செஞ்சி அப்டி சொல்லாதீங்க..... அவர் உங்க நல்லதுக்காகதான் அப்டி இருந்திருக்கார்! அவர் உங்கள கண்டிப்பா கீழ்த்தரமா நெனக்கவேயில்ல! சொல்லப் போனா உங்கள ஒரு உத்தம புத்திரன்னு.... உத்தமி பெத்த புத்தின்னுதான் அவர் நெனக்கிறார்! எப்பவுமே நெனப்பார்!"

"இது என்ன புதுக்கதை?"

"ஆமா வாசு! உங்க மேல ஒரு குற்றம் குறை கூட கிடையாதுன்னு அவர் நெனக்கறதுனாலதான் அவர் என்ன வெரட்டணும்னு சொல்றார்! தன் தங்கை மகன் ஒரு உத்தம புத்திரன்ங்கிறதுனாலதான், கெட்டுப் போன நான் உங்களுக்குத் தகுதியானவள் கிடையாதுன்னு அவர் தன்னோட மகள உங்களுக்கு கட்டி வெக்கணும்னு துடிக்கறார்!"

கேட்டிருந்த எல்லாருக்குமே யாமினி பேசுவது ஆச்சர்யமாக இருந்தது!

"நெனச்சு பாருங்க.... அவர் உங்கள ஏத்துகிட்டு வளத்திந்தா நீங்க அவர அப்பான்னு கூப்பிட்டிருக்க மாட்டீங்க.... மாமான்னுதான் கூப்பிட்டிருப்பீங்க... உங்களுக்கு அப்பா-அம்மாவோட பாசம் முழுமையா கெடைக்காம போயிருக்கும்! அது கெடைக்கணும்னுதான் அவர் உங்கள ஏத்துக்கல!

உங்கள ஏத்திகிட்டு வளக்கும்போது இன்னும் பிரச்சனைகள் வரும்! உங்கம்மாவ பத்தி, அதாவது அவரோட தங்கைய பத்தி எல்லாரும் தப்பு தப்பா பேசி உங்கள அவமானப்படுத்துவாங்க! நீங்க மனசொடஞ்சி போயிருப்பீங்க! நீங்க அப்டிலாம் மனசொடிஞ்சி போய்டக் கூடாதுன்னுதான் அவர் உங்கள வளக்க முன்வரல!

சும்மாவே அவருக்கு கோவம் அதிகம்! இதுல நீங்க குழந்தைத்தனமா குறும்பு செய்யறச்சே அவர் தன்னோட வேதனைய கோவமா உங்ககிட்ட காட்டலாம்.... உங்க குழந்தைப் பருவம் முழுசும் பெத்தவங்க பாசத்துக்காக ஏங்கிப் போயிருக்கும்!"

"ஆங்.... ஒருவேள என்ன கிருஷ்ணாப்பாவும் ஏத்துக்காம போயிருந்தா.... அப்பவும் இந்த நிலை வந்திருக்கும்தானே...."

"திரும்பியும் தப்பா சொல்றீங்க! உங்க பாஸ்கர் மாமாவுக்கு தன்னோட நண்பர் கிருஷ்ணாவையும் சரி, அவங்க மனைவி பவதாரிணியையும் சரி, ரெண்டு பேரையும் பத்தி ரொம்ப நல்லா தெரியும்! எப்படியும் கிருஷ்ணா மாமா உங்கள மனப்பூர்வமா ஏத்துகிட்டு நல்லபடியா வளப்பார்னு அவர் புரிஞ்சி வெச்சிருந்தார்! அதுவும் கிருஷ்ணா மாமாவோட அம்மா அதாவது உங்க பாட்டி, எவ்ளோ கோவப்பட்டாலும் பவதாரிணி அத்த ஒருநாளும் உங்கள கைவிடவே மாட்டாங்கன்னு அவருக்குத் தெரியும்! அதான் அவர் கல் நெஞ்சா நடந்துகிட்ட மாதிரி நடிச்சார்! நடிச்சிகிட்டும் இருக்கார்...."

"இது......" வாசு தடுமாறினான்!

"ஆமா வாசு! யோசிச்சி பாருங்க! அவர் பெரிசா இழந்திருக்கார்! அடுத்தடுத்து தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, தங்கை, ஆச ஆசயா பெத்துக்கணும் நெனச்ச தன்னோட குழந்தை எல்லாத்தையும் இழந்திருக்கார்! எவ்ளோ துடிச்சிருப்பார்..... எத்தன வேதனைய மனசில சுமந்துகிட்டு அவர் நடமாடிட்டிருக்கார்...

இதுல அவருக்கு ஒரே சந்தோஷம் நீங்க மூணு பேர்! நீங்க மூணு பேர் அதாவது, வாசு, ஐஷு, சௌமி, நீங்க மூணு பேர் மட்டும்தான் அவரோட ஒரே சந்தோஷம்! உங்ககிட்ட அதிகாரத்த காட்டற மாதிரி அவர் உங்கள கிண்டறார்.... நீங்க அவர்கிட்ட கோவத்த காட்றேன்னு எதிர்த்து பேசறீங்க.... உண்மைலயே அவர் உள்ளுக்குள்ள ரசிச்சிகிட்டு வெளிய உங்ககிட்ட சண்டை போடறதா நாடகம் ஆடிகிட்டு இருக்கார்!"

கேட்டிருந்த வாசுவும் அவன் தங்கைகளும் கொஞ்சம் கொஞ்சமாக தெளியத் தொடங்கினார்கள்!

"எந்தக் கவலையும் இல்லாம அம்மா அப்பா தாத்தா பாட்டி தங்கைன்னு ஒரு அழகான கூட்டுக்குள்ள செல்லமா வாழ்ந்தவர்! திடீர்ன்னு அவர இருட்டுல காட்டுக்குள்ள தன்னந்தனியா விட்டுட்ட மாதிரி எல்லாரும் ஒரே நேரத்தில அவர விட்டுட்டு போய்ட்டாங்க! அவர் அந்த இருட்டில விளக்கா நெனச்சி பயணம் பண்ணினதே உங்கள மட்டும்தான்! நீங்க தான் அவரோட விடிவௌக்கா இருந்திருக்கீங்க! இன்னமும் இருக்கீங்க வாசு!" என்றாள் யாமினி அழுத்தம் திருத்தமாக!

ருக்மணியைப் பார்த்துக் கேட்டாள் யாமினி!

"அம்மா! அவர் எவ்ளோ வேதனப்பட்டார்ன்னு பக்கத்தில இருந்து பாத்தவங்க நீங்க! உங்களுக்குக் கூட அவரோட கோவம் புரியலையா?" என்று யாமினி ருக்மணியைக் கேட்க,

"ரொம்ப சந்தோஷம் யாமினி! இந்த சின்ன வயசிலயே இவ்ளோ தூரம் தீர்க்கமா யோசிச்சு நல்லது கெட்டது புரிஞ்சிக்கற! பாக்கவே சந்தோஷமா இருக்கு!" என்றவள் சிறிது இடைவெளி விட்டு சொன்னாள்,

"நீ சரியாதான் சொல்ற யாமினி! அவரோட வேதனைய நா பக்கத்தில இருந்து பாத்தவதான்! அதனாலதான் அவரோட எப்பவும் துணையா நின்னேன்! ஆனா... அந்த மனுஷன்..... அந்த மனுஷனாலதான் பத்மினிக்கு இப்டி ஆனதே..... அவரும் அவரோட அப்பா, தாத்தா மூணு பேர்தான் பத்மினி வாழ்க்கை சீரழிஞ்சி போனதுக்கு முக்கிய காரணம்...." என்று கோபமாகச் சொன்னாள்!

யாமினி அதிர்ச்சியாகப் பார்க்க, வாசுவும் மற்றவர்களும் வேதனையுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்!

"ஏம்மா இப்டிலாம் சொல்றீங்க... அவருக்கு தங்கை மேல எவ்ளோ பாசம் இருந்துச்சு...." என்று கேட்டாள் யாமினி.

"ஆமா யாமினி! பாசம் இருந்துச்சுதான்... இல்லங்கல.... ஆனா..... ஆனா.... வெறும் பாசம் மட்டும் போறுமா யாமினி...... கண்மூடித்தனமான பாசம் மட்டுமே ஒரு பொண்ண காப்பாத்த முடியுமா? இவா பண்ணின தப்பு, அந்தக் குழந்தை வாழ்க்கைல மண்ணள்ளிப் போட்டுடுத்து...."

"அம்மா அப்டிலாம்......."

"இரு யாமினி! இவ்ளோ நேரம் நீ சொன்னத நாங்க கேட்டோம்ல.... இப்ப நா சொல்றத நீ முழுசா கேளு....." என்றவள் தொடர்ந்து பேசினாள்.

"எங்க வீட்டு ஆம்பளைங்களுக்கு என்னிக்குமே பொம்பளங்களை மதிக்கத் தெரியாது! பொம்பளைங்க எல்லாம் இவாளப் பொறுத்த வரைக்கும் கைல வெச்சி வெளையாடற பொம்மைகள்! இவா சந்தோஷமா இருக்கறப்ப பொம்மை மாதிரி அலங்காரம் பண்ணிப் பாப்பா... இவாளுக்கு கோவம் வரச்சே மொத்தக் கோவத்தையும் அந்த பொம்மைகள் மேல காட்டுவா... பெண்களுக்கும் மனசிருக்கு; அவாளுக்கும் உணர்வுகள் இருக்கு; வலி இருக்கு; வேதனை இருக்குன்னு என்னிக்குமே புரிஞ்சுக்க மாட்டா; அப்டியே புரிஞ்சுண்டாலும் அது அவாளுக்கு ஒரு பெரிய விஷயமே இல்ல!

அதே மாதிரி பொம்பளைங்க மேல நம்பிக்கையும் கிடையாது! நம்பிக்கைன்னா, பொம்பளைங்களோட டேலண்ட்ஸ் (talents) மேல, அவங்களோட கேபாசிட்டி (capacity) மேல எந்த நம்பிக்கையும் கிடையாது! பொம்பளைங்களால எந்த பிரச்சனையையும் சால்வ் பண்ண முடியும்ங்கற நம்பிக்கை எங்காத்து ஆம்பிளைங்களுக்கு கிடையாது! அவாளப் பொறுத்த வரைக்கும் பொம்பளைங்களுக்கு சமைக்கவும் சாப்பிடவும் அழகா உடுத்திகிட்டு மினுக்கவும் மட்டும்தான் தெரியும்; மத்தபடி பொம்பளைங்களுக்கு மூளையே கிடையாதுன்னுதான் எப்பவுமே நெனப்பா.

வீட்டு வேலை தவிர மற்ற வெளி வேலை எல்லாத்தையும் நாம சரியா செஞ்சாலும் அதப்பத்தி நூறு கேள்வி கேட்டு, இல்லல்ல.... நோக்கு இதல்லாம் தெரியாது! விடு நா பாத்துக்கறேன்... அப்டீன்னுதான் சொல்வா....

 




Annapurani Dhandapani

மண்டலாதிபதி
Joined
Jan 31, 2018
Messages
346
Reaction score
3,223
Location
Chennai
நா அப்ப ப்ரக்னென்ட்டா இருந்தேன்! நா எடுத்து வெக்கற ஒவ்வொரு அடியையும் பக்கத்துல நின்னு பாத்து... பாத்து நட.... பாத்து நடன்னு சொல்லிண்டே இருப்பார்! மொதல்ல எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது... இப்டி தாங்கறாரேன்னு.... ஆனா என்ன பண்ணினாலும்.... பாத்து.. பாத்துன்னு சொல்லிண்டே இருப்பார்! பாத்து தலை வாரிக்கோ... பாத்து முழுங்கு... பாத்து பாத்ரூம் போ... பாத்து சாப்பிடு... ஒவ்வொரு வாட்டி நா வாந்தியெடுக்கும் போதும் பக்கத்தில வந்து நின்னு மெதுவா... மெதுவான்னு சொல்வார்.... இது பாசத்தினால இல்ல... வாந்தியெடுக்கும்போது வாய் வழியா குழந்தை வெளிய வந்துடப் போறதுங்கற பயம்...."

கேட்டிருந்த யாமினிக்கு சங்கடமாக இருந்தது! ருக்மணி மாமி தொடர்ந்தாள்!

"வெளியேந்து பாக்கறதுக்கு இது என்மேல அவர் காட்ற அக்கரை மாதிரி இருக்கும்! ஆனா உண்மைல இது என் மேல இவரோட அவநம்பிக்கைன்னு எனக்கு மட்டும்தான் தெரியும்! இவரோட குழந்தைய நா சரியா பெத்துக் குடுக்காம போய்டுவேனோ அப்டீங்கற பயம் இவரோட பேச்சில அப்பட்டமா தெரியும்!

பொண்டாட்டியோட கருவில இருக்கற குழந்தையை ஆப்பரேஷன் பண்ணி புருஷன் வயித்தில வெச்சு பாதுகாத்து வளக்கலாம்ன்னு ஒரு ஆப்ஷன் இருந்திருந்தா, இந்த மனுஷன் அத கண்டிப்பா செஞ்சிருப்பார்! என் மேல இருக்கற பாசத்தினால இல்ல... என் மேல இருக்கற அவநம்பிக்கையால...."

"பாவம்மா நீ..." என்றாள் சௌமி!

"அன்னிக்கு... பத்மினி கச்சேரி பண்றன்னிக்கு... எனக்கு ரொம்ப மசக்கையா இருந்ததுதான்... ரொம்ப வாந்தியெடுத்துண்டு இருந்தேன்... ஆனா என்னை என்னால பாத்துக்க முடியாதா? அட அப்டியே நா மயங்கி விழுந்தாதான் என்ன? வீட்டுக்குள்ளதானே கிடப்பேன்! இவர் பத்மினிக்கு துணையா போக வேண்டியதுதானே? சரி! போகும்போது அவள அவ ஃப்ரண்டோட அனுப்பியாச்சு... அட்லீஸ்ட் கச்சேரி முடிஞ்சப்றமா கோவில்லேந்து கூட்டிண்டு வரதுக்காவது போயிருக்கலாம்ல... கேட்டா என்ன பாத்துக்க வீட்ல இருந்தேன்னு சொல்வார்! என்னத்த பாத்துண்டார்.... நானே வாந்தியெடுத்துட்டு அத நானே கழுவியும் விடணும்... இதுக்கெதுக்கு இவர் எனக்கு துணைக்கு....." என்றாள். அவள் முகம் பாறை போல இறுகிக் கிடந்தது!

"ஏன் என்ன பாத்துக்க சொல்லி பத்து நிமிஷம் பக்கத்தாத்து மாமிட்ட சொல்லிட்டு போனா அவா எனக்கு துணையா இருக்க மாட்டேன்னு சொல்வாளா என்ன?

சொல்ல மாட்டார்! ஏன்னா அவ்ளோ அவநம்பிக்கை... என் மேலயும், பக்கத்தாத்து மாமி மேலயும்.....

அந்த பையன் நம்மாத்து வாசல் வரைக்கும் விட்டுட்டுதான் போயிருக்கான்! பத்மினிய நம்மாத்து வாசல்லேந்துதான் யாரோ தூக்கிண்டு போயிருக்கா...அப்டீன்னா என்ன அர்த்தம்! ரொம்ப நாளா யாரோ அவள தொடர்ந்திருக்கா.... அப்டீன்னுதானே அர்த்தம்.... இதக்கூட இந்த மனுஷன் பாத்து வெச்சுக்கல.... அப்றம் என்ன ம...க்கு..." சட்டென்று தன் கூறிய கெட்ட வார்த்தைக்காக தன் வாயிலேயே போட்டுக் கொண்டாள்! பின்னர் யாமினியிடம் தொடர்ந்தாள்!

"சாரி யாமினி... என் கோவம் என் வாய்ல கெட்ட வார்த்தை வரது.... சாரி....... யார் நம்ம தங்கைய ஃபாலோ பண்றான்னு கூட கவனிக்கல..... அப்றம் எதுக்கு இவர் டெய்லி தங்கையோட துணைக்குப் போறார்?!" மாமியின் முகம் கோபத்தில் சிவந்திருந்தது! பல்லைக் கடித்து தன் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டாள்!

வாசு இதைக்கேட்டு கண்கள் சிவந்தான்! அவனுடைய முகம் பாறையாய் இறுகியிருந்தது!

"அதுக்கப்றமும் அந்த பையன் வீட்டுக்கு போய்ட்டு வந்ததுமே சொன்னேன், கிருஷ்ணா அண்ணா இல்லன்னா பரவால்ல.... போலீஸ் ஸ்டேஷன் போய் சொல்லுங்கோன்னு.... அவா எப்டியாவது அண்ணாவுக்கு தகவல் குடுப்பான்னு..... கேட்டாரா மனுஷன்.... அப்டி அவர் சொல்லியிருந்தார்ன்னா, அண்ணா அன்னிக்கு ரோந்துதான் போயிருந்தார், அன்னிக்கே பத்மினிய காப்பாத்தியிருக்கலாம்....

யார் கூடயும் ஃப்ரண்ட்லியா பழக மாட்டார்! தான்ங்கற அகம்பாவம் ஜாஸ்த்தி! எல்லார் கிட்டயும் எதுக்காவது சண்டை போடறது.... தெருல போற கீரக்காரிலேந்து பூக்காரிலேந்து..... பக்கத்தாத்து மனுஷா.... எல்லார்கிட்டயும் வெடுக்கு வெடுக்குன்னு பேசறது.... அப்றம் எப்டி பக்கத்தாத்தில உதவின்னு போய் நிக்கறது....

இவரால வேற வழியில்லாம கையப் பெசஞ்சிகிட்டு காத்தால வரைக்கும் வெய்ட் பண்ணினோம்..... இவப்பாவும் தாத்தாவும் அதுக்கு மேல.... தாத்தா.... பேத்தி ராத்திரி வீட்டுக்கு வரலன்னதும் உயிர விட்டுடுறார்... என்ன மனுஷன் இவர்?

இவப்பா... அதான் என் அருமை மாமனார்.... அவரப் பத்தி நெனச்சாலே நேக்கு பத்தி எரியறது..... இப்பவாவது போலீஸ் கம்ப்ளெயின்ட் குடுங்கோன்னு சொன்னா, ஒத்துண்டாரா அந்த மனுஷன்.... ரகசியமா தேடுன்னு அண்ணாட்ட சொல்றார்.... ஏண்ணா... நீங்களும் கேட்டுண்டுதானே இருந்தேள்...." என்றாள் கிருஷ்ணாவைப் பார்த்து!

கிருஷ்ணா வேதனையோடு தலையாட்டினார்!

"தாத்தா சாவுக்கு வந்தவால்லாம் வாய்க்கு வந்தத பேசறச்சே எல்லார் வாய் மேலயும் போடறத விட்டுட்டு .... இன்னுருத்தனா இருந்தா.... நீ யார்ரா எம்பொண்ணப்பத்தி பேசன்னு அருவாளத் தூக்கியிருப்பான்.... இவர் கோழ மாதிரி தூக்கில தொங்கினார்!

யாமினி.... நீ அன்னிக்கு சௌமி நிச்சயத்தில அந்த மாப்ளப் பையன்தான் உன்னக் கெடுத்தான்னு கண்டு புடிச்சதும்.... எதப் பத்தியும் கவலப்படாம.... உன் வாழ்க்கையப் பத்தி கூட நெனக்காம.... எவ்ளோ தைரியமா போய் அவன் சட்டையப் புடிச்சி அடிச்ச..... அத மாதிரி இவரும் இவப்பா, தாத்தா எல்லாரும் தைரியமா நின்னிருந்தாங்கன்னா..... பத்மினிக்கு இந்தக் கொடுமை நடந்திருக்காது.....

காமு பாட்டிக்கும் என் மாமியாருக்கும் இருந்த தைரியம் கூட இந்த மூணு ஆம்பளைங்களுக்கும் இல்ல.... அப்றம் என்ன ஆம்பளைன்னு ஜம்பம் வேண்டிக் கெடக்கு.... வாய்க்கு வாய் நோக்கு ஒண்ணும் தெரியாது... நோக்கு ஒண்ணும் தெரியாதுன்னு பாட்டு வேற....

வீட்ல இருந்த ரெண்டு பெரிய தலையும் உயிர விட்டுட்டா.... இந்த மனுஷருக்கு இது வரைக்கும் வீட்டுப் பொறுப்பு பத்தி ஒரு மண்ணும் தெரியாது.... வீட்ல இருக்கற பொம்னாட்டி பேச்சையாவது கேக்கணும்.... அதுவும் கிடையாதுன்னா.... இப்டி ஒவ்வொருத்தரா பறி குடுத்ததுதானே ஆகணும்.... அப்பவும் புத்தி வந்துதா...... இல்லையே.... இதுல இவர் டபுள் டிகிரியாம்.... என்ன படிச்சி என்ன பிரயோஜனம்....." என்றவள் அருகிலிருந்த தண்ணீர் பாட்டிலைத் திறந்து கடகடவென்று தண்ணீரைக் குடித்துவிட்டு மீண்டும் யாமினியிடம் கேட்டாள்!

"யாமினி! நா உன்ன ஒண்ணு கேக்கறேன்! பதில் சொல்லு..."

"என்னமா?"

"நீ என்ன படிச்சிருக்க?"

"ப்ளஸ் டூ!"

"ஐஷு, சௌமி ரெண்டு பேரும் என்ன படிக்கறாங்கன்னு தெரியுமா?"

"எஞ்சினீரிங் படிக்கறாங்க!"

"ம்.... உங்க மாமியார் என்ன படிச்சிருக்காங்கன்னு தெரியுமா?"

"நர்ஸிங் படிச்சிருக்காங்கன்னு வாசு சொன்னார்!"

"குட்! சரி.... நா என்ன படிச்சிருப்பேன்னு நெனக்கிற?"

"அது....."

"பரவால்ல சொல்லு யாமினி!"

"அந்த காலத்து எஸ்எல்ஸி..." என்று இழுத்தாள் யாமினி.

"ஹூம்..... நா எம்.காம். கோல்ட் மெடலிஸ்ட்! அது மட்டுமில்ல டிப்ளமா இன் கம்பெனி லா அன் கம்பெனி மேனேஜ்மென்ட்! இவ்ளோ படிச்சவளதான் எங்காத்துக்காரர், நோக்கொண்ணும் தெரியாது! மினுக்கதான் லாயக்குன்னு மட்டம் தட்டினார்!" என்றாள் விரக்தியுடன்!

இந்த செய்தி வாசு மற்றும் அவன் தங்கைகளுக்கே புதியது போலும்! மூவரும் விழி விரித்தனர்!

"நெஜமாவாமா!" என்று வாய்விட்டே கேட்டாள் சௌமி!

"சும்மா படிச்சிட்டு சர்டிஃபிகேட் வாங்கினேன்னு நெனக்காத சௌமீ.... எங்கப்பா கோய்முத்தூர்ல காட்டன் மில் வெச்சிருக்கார் தெரியும்தானே..... என் கல்யாணத்துக்கு முன்னாடி.... ஒண்ணில்ல.... ரெண்டில்ல..... மூணு வருஷம்.... மூணு வருஷம், அந்தக் கம்பெனிய நாந்தான் நிர்வாகம் பண்ணினேன்..... நானும் என் ஃப்ரண்டும் சேந்து எங்கப்பா கம்பெனில லீகர் அட்வைசராவும் வேல பண்ணினோம்! என் ஃப்ரண்டோட வேல பிடிச்சி, அப்றம் என் ஃப்ரண்டையே பிடிச்சிப்போய் எங்கண்ணன் அவளை கல்யாணம் பண்ணிண்ட்டுட்டான்.. அவ வேற ஜாதின்னு உங்கப்பா எங்காத்து மனுஷாளோட பேசறத நிறுத்திட்டார்..... அதனால யாருக்கு நஷ்டம்.... சத்தியமா எங்கப்பாவுக்கு எந்த நஷ்டமும் இல்ல....

இது எல்லாம் தெரிஞ்சும் உங்கப்பா என்னப் பாத்து, மக்கு, ஒண்ணுக்கும் உதவாதவ, எதுக்கும் லாயக்கில்ல... இப்டிலாம் திட்டுவார்.... கேக்க மனசு எவ்ளோ காயப்படும் தெரியுமா? ஆனா இந்த மனுஷருக்கு இவரோட ஆஃபீஸ்ல இவர் டேபுளுக்கு வர ஃபைல் தவிர வேற எதப்பத்தியும் தெரியாது....

இன்னொண்ணு சொல்லட்டுமா? அந்தக் கம்பெனிக்கு இன்னும் நான் ஸீக்ரட் லீகல் அட்வைசர்தான்! இப்ப வரைக்கும் அந்த கம்பெனிலேந்து எனக்கு சம்பளம் வருது! தெரியுமா?" என்றவளைப் பார்த்து வாய் பிளந்தனர் இளையவர்கள்!

"என் மாமியார் மைதிலி மட்டும் மக்கா என்ன... என் மாமியார் அந்த காலத்து கெமிஸ்ட்ரீ போஸ்ட் க்ராஜுவேட்.. டீச்சர் ட்ரெய்னிங்கும் பண்ணியிருந்தா.... அதனாலதான் ஸ்கூல் டீச்சரா வேலை பண்ணினா...... கடைசி கடைசியா ஹெச். எம். ஆகவும் மூணு மாசம் வேல பண்ணினா.... டிஈஓ கிட்டேந்து நல்லாசிரியர் விருது கூட வாங்கியிருக்கா..... தெரியுமா?..... அப்பதான் பத்மினி காணாம போனா.... அதுக்கப்றம்தான் அம்மா வேலைக்கு போறத விட்டா..... இவ்ளோ பண்ணியிருந்தும்..... அவங்களையும் எங்க மாமானார் மக்கு, ஒனக்கு ஒண்ணும் தெரியாதுன்னுதான் சொல்வார்! ஆனா அவருக்கும் ஆஃபீஸ் ஃபைல் தவிர வேற ஒண்ணும் தெரியாது.....

பத்மினி..... அவ மட்டும் சாதாரண பொண்ணா...... என்னமா இங்க்லீஷ் பேசுவா தெரியுமா? அவள புதுசா பாக்கறவா, ஃபாரின் ரிட்டன்னு நெனச்சி ஏமாந்து போவா..... அவ்ளோ நன்னா பேசுவா...... சயின்ஸ்ன்னா உயிர் அவளுக்கு.... எதப்பத்தி கேட்டாலும் எப்டி வளச்சி வளச்சி கேட்டாலும் பதில் சொல்லிடுவா.... அவ்ளோ டேலன்டட்.... ஆனா அவள எங்காத்துக்காரர் மக்கு.... மக்குன்னுதான் கூப்பிடுவார்.... குள்ளச்சி.... மக்கு..... லூசு..... அலட்டி...... மினுக்கி.... இப்டிதான் கூப்பிடுவார்..... ஒரு நாள் கூட அழகா வாய் நிறைய அவர் பத்மினின்னு கூப்பிட்டு நா கேட்டதில்ல.....
 




Annapurani Dhandapani

மண்டலாதிபதி
Joined
Jan 31, 2018
Messages
346
Reaction score
3,223
Location
Chennai

சரி.... என்னை, பெத்த அம்மாவை.... பாட்டியை, தங்கையை.... எல்லாரையும் விட்டுடலாம்....

தோ.... நிக்கறாளே..... சௌமி.... தான் பெத்த பொண்ணுதானே... இவளுக்காவது எதாவது தெரியும்னு நெனச்சாரா? எதையாவது கத்து குடுக்கணும்னு தோணிச்சா..... அவளுக்கும் இந்த மாதிரி ஆகிடக்கூடாதுன்னு எதாவது பாதுகாப்பு நடவடிக்கை எடுத்தாரா? இல்லையே..... அவளுக்கு எதுவும் ஆகக்கூடாதுன்னனு.... நீ அவள எங்கியும் அனுப்பாத.... நீயும் வீட்லயே இரு.... இப்டிதான் சொல்வார்..... இப்டி அவள வீட்டுக்குள்ளயே பூட்டி வெச்சா எல்லாம் சரியாய்டுமா..... தப்புலேந்து பாடம் கத்துக்க வேணாம்?

நா கத்துண்டேன்..... பத்மினிக்கு நடந்த தப்புலேந்து பாடத்த நா கத்துண்டேன்! சௌமிய ஹாஸ்டல்ல போடணும்னு போராடி ஹாஸ்ட்டல்ல போட்டேன்! அங்க வெச்சு கிருஷ்ணா அண்ணாட்ட சொல்லி அவளுக்கும் ஐஷுவுக்கும் கராத்தே கத்து குடுக்க ஏற்பாடு செஞ்சேன்! இதெல்லாம் நா எம்பொண்ணுக்காக செஞ்சது....

கான்ஸீக்வன்ஸஸ (consequences) ஃபேஸ் (face) பண்ண தைரியம் இல்லாத கோழை! பத்மினிக்கு இருந்த தைரியத்தில பாதி இருந்திருந்தா கூட பத்மினிய காப்பாத்தியிருக்கலாம்.... பத்மினி தனக்கு கொடுமை நடந்தப்றமும்.... தன் குழந்தையை காப்பாத்த அந்த எமனோட போராடினா..... தன் குழந்தைய பவா மன்னிகிட்ட ஒப்படைச்சப்றம் கூட, அவ தன் வாழ்க்கைய பத்திதான் சொல்லாதன்னு சொன்னாளே தவிர, தன்னப்பத்தி சொல்ல வேண்டாம்னு அவ சொல்லல.... அவ தன்னப்பத்தி சொல்ல வேணாம்னு நெனச்சிருந்தா..... இந்த வீடியோவ ரெக்கார்ட் பண்றதுக்கு அவ அண்ணாட்ட கேட்டே இருந்திருக்க மாட்டா......

அவ தன்னை அசிங்கமா நெனக்கல.... தன் வாழ்க்கை சீரழிஞ்ச மாதிரி தன் குழந்தையோட வாழ்க்கையும் சீரழிஞ்சிடக் கூடாதுன்னு நெனச்சா..... அதே நேரத்தில தன் குழந்தையால வேற எந்தப் பொண்ணு வாழ்க்கையும் சீரழிஞ்சிடக் கூடாதுன்னுதான் அவ வாசுகிட்ட அப்டி ஒரு சத்தியம் வாங்கினா..... அவ குப்பைல விழுந்திருக்கலாம்..... ஆனா குப்பைல போய் விழுந்தாலும் அவ மனசு அழுக்காகல.... நெனப்பு அழுக்காகல..... அவ புடம் போட்ட தங்கமா இருந்தா.... புடம் போட்ட தங்கமாவேதான் செத்தும் போனா....

இந்தக் குழந்தை வாசு! இவன்கிட்ட சண்ட போடற மாதிரி நடிச்சார்ன்னு சொன்னியே யாமினி! கரெக்ட்தான்.... ஆனா, அவர் வாசு கிட்ட மட்டும் நடிக்கல.... எல்லார்கிட்டயும் நடிச்சார்.... நடிச்சிகிட்டிருக்கார்.... இனிமேலும் நடிப்பார்.....

வாசுவுக்கு தன் மகளை கல்யாணம் பண்ணிக் குடுத்து வாசுவையும் சரி, சௌமியையும் சரி, ரெண்டு பேரையும் தன் கட்டுப்பாட்டில வெக்கணும்னு துடிக்கறார்.... உண்மைய சொல்லணும்னா அவருக்கு வாசு மேலயும் பாசமில்ல....பெத்த பொண்ணு சௌமி மேலயும் பாசமில்ல.... இல்லன்னா இப்டி ஒரு கல்யாணத்த பண்ணனும்னு துடிப்பாரா?

இவ்ளோ நாள் இதெல்லாம் புரிஞ்சும் நா சும்மா இருந்தேனேன்னு நீ என்ன கேள்வி கேக்கலாம்... போனவா போய்ட்டா.... இவர் உடம்பு பாழாகக் கூடாதுன்னு சும்மா இருந்தேன்.... ஆனா எம்பொண்ணு வாழ்க்கைலயும் இந்தக் குழந்தை வாசு வாழ்க்கைலயும் மண்ணள்ளிப் போடணும்னு நெனச்சா இனிமே எப்டி சும்மா இருக்கறது? அதான் பொங்கி எழுந்தேன்!"

தன் மனதிலிருந்த அத்தனை கோபத்தையும் கொட்டித் தீர்த்தாள் ருக்மணி மாமி!

பவதாரிணி எழுந்து வந்து ருக்மணியின் தோளைத் தொட்டாள்!

"முடியல மன்னீ..... இவ்ளோ நாள் நா பொறுமை கடைபிடிச்சதுக்கு அர்த்தம் இல்லாம போய்டுத்து..." என்று உடைந்து போய் அழுதாள் ருக்மணி!

"யார் மேல தப்புன்னு பேசி ஒரு பிரயோஜனமும் இல்ல..... எல்லாம் முடிஞ்சி போச்சு.... யாமினி! வாசுவோட கடந்த காலம் என்னன்னு இப்ப நீ தெரிஞ்சுகிட்டயில்லையா..... இனிமே... உன் பாடு! வாசு பாடு! நீங்க ரெண்டு பேரும் முடிவு பண்ணிக்கோங்க..... இந்த வாழ்க்கைய தொடரலாமா.... வேணாமான்னு....." என்று கூறிவிட்டு கிருஷ்ணா எழுந்து தன்னுடைய அறைக்கு போனார்.

ருக்மணி திரும்பவும் யாமினியைப் பார்த்துக் கூறினாள்!

"வாசு குற்றம் குறையில்லாதவன்! அவனுக்கு நீ தகுதியில்லன்னு அவர் நெனக்கிறார்ன்னு சொன்னியே.... வாசு குற்றமற்றவன்னா நீயும்தாம்மா குற்றமற்றவள்! வாசுவுக்கு நீ தகுதியானவள் இல்லன்னா உனக்கு வாசுவும் தகுதியானவன் கிடையாது..... சரிதானே மன்னீ நா சொல்றது?" என்று பவதாரிணியைப் பார்த்தாள் ருக்மணி!

பவதாரிணி ஆமாம் என்பது போல தவையாட்ட, ருக்மணி யாமினியின் கண்களை நேராகப் பார்த்து அழுத்தம் திருத்தமாகச் சொன்னாள்!

"நல்லா ஞாபகம் வெச்சுக்கோ யாமினி! பத்மினி எப்டி தங்கமோ அதே மாதிரி நீயும் பத்தரை மாற்றுத் தங்கம்தான்! புரியறதா?"

"ம்!" என்று தலையாட்டினாள் யாமினி.

"ஐஷு! சௌமி! ரெண்டு பேரும் இந்த தம்ப்ளரையெல்லாம் சிங்க்ல போட்டுட்டு போய் படுங்க! மணி மூணுதான் ஆகுது! விடியறதுக்கு இன்னும் டைம் இருக்கு! ரெண்டு பேரும் போய் கொஞ்ச நேரம் தூங்குங்க...." என்றாள் பவதாரிணி! அவர்கள் இருவரும் பவதாரிணி சொல்படி பால் தம்ப்ளர்களை சேகரித்து எடுத்துச் சென்றனர்!

"வாசு! யாமினி! ரெண்டு பேரும் போங்க! கொஞ்ச நேரம் தூங்குங்க.... தூங்க முடியாதுதான்.... ஆனாலும் பரவால்ல.... போய் படுங்க!" என்றாள் பவதாரிணி.

யாமினி உள்ளே போனாள். வாசு அசையாமல் நின்றிருப்பது கண்டு பவதாரிணி அவனருகில் வந்து,

"போம்மா..." என்றாள்.

"ம்மா.... ரொம்ப கொழப்பமா இருக்குமா...."

"தூங்கி எழுந்தா குழப்பம் எல்லாம் சரியாய்டும்! நேத்திதான் ஹாஸ்பிடல்லேந்து வந்திருக்க.... போம்மா..... போய் ரெஸ்ட் எடு....." என்றுவிட்டு ருக்மணியை அழைத்துக் கொண்டு அவள் தங்கும் அறைக்குப் போனாள் பவதாரிணி.

வாசு தளர்ந்த நடையுடன் தன்னுடைய அறைக்கு வந்து படுத்தான்! இவன் படுத்ததும் மின்விளக்கை அணைத்துவிட்டு யாமினியும் வந்து படுத்தாள்.

இருவருக்கும் தூக்கம் வரவில்லை! எதையோ கேட்க வேண்டும் என்று இருவரும் ஒருவரை ஒருவர் பார்ப்பது போலத் திரும்பிப் படுத்தனர்!

அவன் அவளுடைய கண்களை ஊடுருவிப் பார்க்க, அவள் கண்களுக்கு பத்மினியின் முகமும் கடைசி கடைசியாய் வாசு கைக்குழந்தையாய் அவளுக்குக் கொடுத்த சத்தியமும் நினைவுக்கு வர, யாமினியின் கண்கள் குளம் கட்டியது!

வாசு இதைப் பார்த்துக் கலவரமடைந்தான்!








- இது இருளல்ல...... விரைவில் வெளிச்சம் வரும்!




 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
superb........ superb sis. rukmaniyin vilakangal arumai
நா கத்துண்டேன்..... பத்மினிக்கு நடந்த தப்புலேந்து பாடத்த நா கத்துண்டேன்! சௌமிய ஹாஸ்டல்ல போடணும்னு போராடி ஹாஸ்ட்டல்ல போட்டேன்! அங்க வெச்சு கிருஷ்ணா அண்ணாட்ட சொல்லி அவளுக்கும் ஐஷுவுக்கும் கராத்தே கத்து குடுக்க ஏற்பாடு செஞ்சேன்! இதெல்லாம் நா எம்பொண்ணுக்காக செஞ்சது....
(y)(y)(y)(y)(y)(y)(y)(y)ippo en yamini alara.......... yaamini enna mudivetuka pora waiting sis
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top