• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Idhu Irul Alla! - 26 (Final)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

How was the Story?

  • Wow

    Votes: 22 51.2%
  • Good

    Votes: 19 44.2%
  • Okay

    Votes: 1 2.3%
  • I don't like

    Votes: 1 2.3%

  • Total voters
    43

Annapurani Dhandapani

மண்டலாதிபதி
Joined
Jan 31, 2018
Messages
346
Reaction score
3,223
Location
Chennai
இது இருளல்ல!


26.

பாஸ்கர் மாமா மிகவும் சீரியஸாக இருப்பதாக ஆகாஷ் வாசுவிடம் தெரிவிக்க, அனைவரும் அரக்கப் பரக்க மருத்துவமனைக்கு விரைந்தனர்!

அங்கே மாமா மூச்சுக்குத் திணறிக் கொண்டிருக்க, பத்மினி.... வாசூ.... என்று முனகியபடியே இருந்தவரைக் கண்டு ருக்மணி கண்ணீர் சிந்தினாள்.

கடவுளே..... இவரோட வேதனைய இப்பவாவது குறைக்க வழி செய்ய மாட்டியா? என்று மனதுக்குள் புலம்பினாள்!

என்னதான் எல்லாருக்கும் பாஸ்கர் மாமாவின் மீது கோபமிருந்தாலும் அவர் அவஸ்த்தைப்படுவதை அவர்களால் பார்த்துக் கொண்டிருக்கவும் முடியவில்லை!

வாசு தன் மாமாவின் கைகளை மெதுவாகப் பற்றிக் கொண்டு அவரருகில் அமர்ந்தான்!

"மாமா! என்ன மன்னிச்சிடுங்க! உங்ககிட்ட நா ரொம்ப கோவமா பேசிட்டேன்.... அப்டி பேசியிருக்கக் கூடாதுதான்.... என்ன மன்னிச்சிடுங்க மாமா.... உங்க சொந்த புள்ளைன்னு நெனச்சி என்ன மன்னிச்சிடுங்க...." என்று கூறி அவன் கண்ணீர் சிந்த, இவனுடைய குரல் அவரை எட்டியதோ என எண்ணும்படி அவர் மெதுவாகக் கண் விழித்து அவனைப் பார்த்தார்!

அவனைப் பார்த்ததும் அவருடைய மூச்சு சீராகத் தொடங்கியது! ரத்த அழுத்தமும் இதயத் துடிப்பும் சரியாக இயங்கத் தொடங்கியது!

"மாமா..... உங்களுக்கு ஒண்ணுல்ல மாமா..... எல்லாம் சீக்கிரம் சரியாகிடும்.... சீக்கிரமே.... நம்ம வீட்டுக்கு போவோம்....." என்றான்.

மாமா அவனைப் பார்த்து மெதுவாகக் கேட்டார்!

"நா வீட்டுக்கு வரேன்...... ஆனா என் பொண்ணுதான் உன் பொண்டாட்டி.... சரியா....." என்றார்!

வாசுவுக்கு வந்ததே கோபம்!

"யோவ்... யோவ்.... என் வாயில நல்லா வருதுய்யா....." என்று கத்தத் தொடங்க,

ருக்மணி மாமியும் சௌமியும் தலையில் அடித்துக் கொண்டனர்!

சௌமி, "ஏம்மா... ஏம்மா, இந்தப்பா என் வாழ்க்கையோட இப்டி விளையாடறார்.... நா என்னம்மா பாவம் பண்ணினேன்...." என்று கண்ணீருடன் கேட்டாள்!

"இந்த மனுஷன் திருந்தவே மாட்டார்டீ!" என்று ருக்மணி மாமி கோபமாகச் சொன்னாள்.

"மாமா... ஏதோ போனாப் போகட்டும்! வயசனவராச்சேன்னு பாத்தா.... என்ன ஓவரா பண்றீங்க..." என்று ஐஷு மாமாவை அதட்டினாள்!

"அடிப்போடீ...." என்று மாமா அவளிடம் முகம் திருப்பினார்!

ஆகாஷுக்கும் ரொம்ப கோபமாய் வர, அவன் தன் கோபத்தை, அவருக்குப் போடும் ஊசியில் காட்டினான்!

ஆ..... என்று கத்தினார் மாமா!

"அடேய்.... ஊசி போட்டு என்ன கொன்னுடாதடா..... எனக்கு முடிக்க வேண்டிய முக்கியமான வேலை இன்னும் பாக்கியிருக்கு....." என்றார் மாமா!

உன்ன முடிக்கறதுதான் என் வேலை கிழவா! என்று ஆகாஷ் தன் மனதுக்குள் எண்ணிக்கொண்டான்!

"சொல்லு வாசு.... என் பொண்ணுதான் உன் பொண்டாட்டி.... சரீன்னு சொல்லு....." என்று திரும்பவும் மாமா நச்சரிக்க, இப்போது யாமினிக்குமே பாஸ்கர் மாமாவின் மீது கோபம் வந்தது!

"யாமினி! என்னமோ மாமாவுக்காக அவ்ளோ பரிஞ்சி பேசினியே.... பாத்தியா மாமாவோட லட்சணத்த...... இந்த மனுஷன் நல்லவரே கெடையாதுன்னு ஒவ்வொரு இடத்திலயும் நிரூபிச்சிகிட்டே இருக்கார் பார்!" என்றான் வாசு யாமினியிடம்!

"ஓஹோ.... ஏ பொண்ணு.... நீயும் இங்கதான் இருக்கியா.... வா... வா.... நீ தான் இங்க முக்கியமான ஆள்... நீயில்லாம என் வாசு கல்யாணம் நடக்காது.... எங்க கூடவே இருந்து வாசுவோட கல்யாணத்த முன்ன நின்னு நடத்தி குடுக்கணும்.... சரியா....." என்றார் யாமினியிடம்!

எல்லாருக்கும் மாமாவின் மீது வெறுப்பு வர, அனைவருமே அங்கிருந்து சென்றுவிட்டனர்!

"டேய்... வாசூ..... என் பொண்ணுதாண்டா உம்பொண்டாட்டி....." என்று கத்தினார் பாஸ்கர் மாமா! அப்படிக் கத்தியதால் அவருக்கு மூச்சு வாங்கியது!

இந்த கெழவன் இப்டி கத்தி கத்தியே சாகப் போறான் என்று நினைத்துக் கொண்டான் ஆகாஷ்!

ஆனால் விந்தையிலும் விந்தையாக இரண்டு தினங்களில் பூரண குணம் பெற்று வீடு வந்துவிட்டார் மாமா!

வீடு வந்தவரை யாரும் வரவேற்கத் தயாராக இல்லை! ஆனால் அவர் அதைப் பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக் கொள்ளவேயில்லை!

எங்கோ வெளியில் போவதும் வருவதுமாக இருந்தார்! துணையாக கிருஷ்ணாவைக் கூட அவர் கூட்டிச் செல்லவில்லை! அந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமையன்று அதிகாலையிலேயே எழுந்து எல்லாரையும் எழுப்பி விட்டார்!

"ம்... இன்னும் என்ன தூக்கம்.... எல்லாரும் எழுந்திரிங்கோ.... ஆத்ல இன்னிக்கு முக்கியமா ஒரு பூஜையிருக்கு.... என் வாசுவுக்காக..... எல்லாரும் எழுந்து போய் குளிச்சிட்டு வாங்க.... சௌமி, ஐஷூ... ரெண்டு பேரும் என்ன வேடிக்கை பாக்கறேள்... வீட்ட நன்னா பெருக்கி துடைச்சி மாக்கோலம் போடுங்கோ... டீ.... ருக்மணீ..... வாசல்ல நன்னா பெரிசா படிக்கோலம் போடு..... ஹாங்... சொல்ல மறந்துட்டேன் பாரு.... நீ குளிச்சிட்டு வந்து மடிசார் கட்டிக்கோ.... புரியறதா.... வாசு, கிருஷ்ணா... எல்லாரும் ரெடியாகுங்கோ... ம்மா பவி.... நீ சமையல் ஒண்ணும் பண்ண வேண்டாம்... எல்லாம் நா கேட்ரிங்க்ல சொல்லியாச்சு..... ம்... ம்... போங்கோ... போங்கோ... குளிச்சி ரெடியாகி வாங்கோ... சாஸ்த்ரிகள் இப்ப வந்துடுவார்.... ஆங்... யாமினீ... நீயும் நன்னா தலைக்கு குளிச்சிட்டு நல்லதா ஒரு புடவை கட்டிண்டு ரெடியாகு...." என்று மூச்சு விடாமல் விரட்டினார்!

வாசு அசையாமல் அமர்ந்திருப்பதைக் கண்ட கிருஷ்ணா, அவனை சமாதானம் செய்து அனுப்பினார்!

"அப்பா... என்னப்பா... அவர்.... இப்டி பிஹேவ் பண்றார்...."

"என்ன மீறி உனக்கோ யாமினிக்கோ ஒரு கெடுதல் நடக்காது! நடக்கவும் விட மாட்டேன்! இது என் ப்ராமிஸ்! போ! போய் ரெடியாகு!" என்று கூறி அனுப்பினார்!

ஐஷுவும் சௌமியும் தங்கள் பங்குக்கு பிடிவாதம் பிடித்தனர்!

"இங்க பாரும்மா சௌமி! உங்கப்பா உனக்கு எந்தக் கெடுதலும் பண்ண மாட்டார்! அவர எனக்கு நல்லா தெரியும்! இருந்தாலும் இப்ப ஏன் இப்டி நடந்துக்கறான்னு எனக்குப் புரியல! உனக்கு நா ஒரே ஒரு வாக்குறுதி தரேன்! உன் விருப்பமில்லாம உன் கல்யாணம் நடக்காது! அதே மாதிரி வாசு, யாமினிக்கு எந்தக் கெடுதலும் நடக்க விடமாட்டேன்! சரியா? போய் குளிச்சிட்டு வா!" என்றார் கிருஷ்ணா!

சௌமியும் மெதுவாக எழுந்து குளிக்கச் சென்றாள்!

எல்லாரையும் இதைச் சொல்லியே சமாதானம் செய்து அனுப்பி தயாராகச் சொன்னார்!

அவர் சொல்படி அனைவரும் குளித்து தயாராகி வந்தனர்! மற்றவர்களிடம் கோலம் போடச் சொன்ன பாஸ்கர் மாமாவே வீட்டு வாசலில் பெரியதாக இல்லாமல் சின்னதாய் அழகாய் ஒரு படிக்கோலம் போட்டுடிருந்தார்! அது மட்டுமல்லாமல், சமையல் செய்யப் பயன் படுத்தும் ஜல்லிக் கரண்டியால் அரிசி மாவினால் வீட்டுக்குள்ளும் கோலம் வைத்து முடித்தார்! அவர் முடிக்கவும் சாஸ்த்திரிகள் வரவும் சரியாக இருந்தது!

பாஸ்கர் ருக்மணியை கைபிடித்து அழைத்துச் சென்று மனையில் அமர்த்தி வைத்து விட்டு அவளருகில் தானும் அமர்ந்து கொண்டார்!

யாமினியை தன்னருகில் அழைத்தார்!

சாஸ்த்திரிகளைப் பார்த்து கம்பீரமாய்க் கூறினார்!

"இங்க பாருங்கோ! இந்தப் பொண்ணு பேரு யாமினி! இவ தாய் தோப்பனார்ல்லாம் யாருன்னு தெரியாது...." என்று அவர் ஆரம்பித்தார்!

வாசுவுக்கு கண்கள் கோபத்தில் சிவந்தது! யாமினி வேதனையுடன் தலை குனிந்து நின்றிருந்தாள்!

பாஸ்கர் மாமா தொடர்ந்தார்!

"இவள நா என் பொண்ணா ஸ்வீகாரம் பண்ணிக்கப் போறேன்! நீங்க அத நல்லபடியா நடத்திக் குடுங்க!" என்றார்!

கேட்டிருந்த அனைவருமே இன்பமாய் அதிர, ருக்மணியின் கண்கள் ஆனந்தமாய் நிறைந்தது!

பாஸ்கர் மாமா, வாசுவைப் பார்த்து,

"என்ன வாசு! என்னோட இந்தப் பொண்ணு யாமினிதான் உன் பொண்டாட்டியா இருக்கணும்! எவளோ ஒரு அநாதையில்ல.... சரியா! டீல் ஓகேயா?" என்றார் கம்பீரம் குறையாத குரலில்!

"டபுள் ஓகே மாமா!" என்றபடியே கண்களில் கசியும் ஆனந்தக் கண்ணீருடன் ஓடி வந்து மாமாவின் அருகில் அமர்ந்து அவருடைய கையைப் பிடித்துக் கொள்ள, அவர் வாஞ்சையுடன் தன் மருமகனின் தலையைக் கோதிவிட்டார்!

"அப்பா! அதுக்காக என்ன இப்டி பயமுருத்தியிருக்க வேணாம்!" என்று சௌமி சொல்ல,

"பின்ன... பாஸ்கரன்னா எல்லாருக்கும் ஒரு பயம் வர வேணாமா...." என்று சொல்லி பெரிய குரலில் சிரித்தார் மாமா!

"ஆனா நா உங்களப் பாத்து பயப்பட மாட்டேன் மாமா!" என்று ஐஷூ நக்கலாகக் கூற,

"நீ மட்டும் விதிவிலக்குடீ.... ஏன்னா, நாந்தான் உனக்கு பொம்மையாச்சே... எங்கியாவது குழந்தைங்க பொம்மைய பாத்து பயப்படுமா.... உன்னோட செல்ல பொம்மை நாந்தான்... உண்மைய சொல்லணும்னா... நாந்தான் உன்னப் பாத்து பயப்படணும்....." என்று சிரித்தார் மாமா!

"ஆங்.... அந்த பயமிருக்கட்டும் மாமா....." என்று ஐஷு கெத்து காட்டினாள்!

பார்த்திருந்த பவதாரிணியும் கிருஷ்ணாவும் உடன் சேர்ந்து சிரித்தனர்!

யாமினி எதுவும் சொல்லத் தெரியாமல் பனித்த கண்களுடன் அதற்கு நேர் மாறாய் இதழ்களில் பூத்த புன்னகையுடன் ருக்மணி மாமியின் அருகில் வந்து அமர்ந்து கொண்டாள்!

பாஸ்கர் மாமா யாமினியை தன் மகளாய் தத்து எடுத்துக் கொண்ட பின், தொடர்ந்து வரும் சுப முஹூர்த்த தினத்தில் மயிலை கபாலீஸ்வர் ஆலயத்தில் வீற்றிருக்கும் அந்த கற்பகாம்பாளின் முன்னிலையில் வாசுவுக்கும் யாமினிக்கும் ஒரு தோஷ நிவர்த்தி போல திரும்பவும் திருமணம் செய்ய நிச்சயம் செய்யப்பட்டது!

கிருஷ்ணாவும் பவதாரிணியும் கல்யாண ஏற்பாட்டை கவனித்தனர்!

வாசுவின் தங்கைகள் இருவரும் லெஹங்காதான் வேண்டுமென்று அடம்பிடித்தனர்! அவர்கள் விருப்பப்பட்டதை பாஸ்கர் மாமா பெரிய மனதோடு வாங்கித் தர, இளையவர்கள் இருவரும் மயக்கம் போடாத குறையாய் மகிழ்ந்தனர்! அதற்கு மேல் ருக்மணி மாமிக்கு பிடித்த புடவையை பிடித்த நிறத்தில் அவர் தேர்ந்தெடுத்த போது மாமி, ஆ.... வென்று வாய் பிளந்து ஆச்சர்யம் காட்டினாள்!

"என்னடீ.... உங்கப்பா.... இப்டி மாறிட்டாரு....." என்று சந்தோஷமாய் சொல்லிக் கொண்டாள்!

"ஒனக்கு என்ன பிடிக்கும்னு எனக்கும் தெரியும் ருக்கு.... வா..." என்று அவளுடைய கை பிடித்து நகைக் கடைக்கு அழைத்துச் சென்ற மாமாவை,

"ஐயோ... விடுங்கோ... எல்லாரும் நம்மளையே பாக்கறா...." என்று செல்லமாக கோபமும் பட்டாள்!

"எவன் பாக்கறான்... எம் பொண்டாட்டி கைய நா புடிக்கறேன்... எவனாவது எதாவது கேள்வி கேட்டா.... அவன் வாய் மேலயே போடுவேன்..." என்றார் மாமா!

ருக்மணி சிரித்தபடி அவருடன் நடந்தாள்!

திருமணத்துக்குத் தேவையான தாலிக் கொடி, திருமாங்கல்யாம், மற்றும் யாமினிக்கு நகைகள் என்று வாங்கிய பாஸ்கர் மாமா, ஐஷுவுக்கும் சௌமிக்கும் சேர்த்தே வாங்கினார்! அதே நேரத்தில் ருக்மணிக்குப் பிடித்த நகைக் கலெக்ஷனை வாங்கவும் அவர் தவறவில்லை!

ருக்மணி தன் கண்களை அகல விரித்து அதிசயமாய்ப் பார்க்க,

"நாம ரெண்டு பேரும் எவ்வளவோ சந்தோஷமா இருந்திருக்கணும்.... சாரி... இனி மேலாவது உன் மனசுக்கு பிடிச்ச மாதிரி நடந்துக்க முயற்சி பண்றேன்!" என்று கூறி தன் மனைவியை அழைத்துச் சென்றார் மாமா! ருக்மணி பல காலத்துக்குப்பின் மகிழ்ச்சியாய் உணர்ந்தாள்!

யாமினிக்கு பிடித்த மாதிரி பட்டுப் புடவையை வாசு வாங்கித் தர, அதற்காக டிசைனர் ப்ளவுஸை அவளே தன் கையால் அலங்கரிக்க, அவளுடைய கையில் மற்றவர்கள் மருதாணியிட்டு அலங்கரித்தனர்!

 




Annapurani Dhandapani

மண்டலாதிபதி
Joined
Jan 31, 2018
Messages
346
Reaction score
3,223
Location
Chennai
வாசு - யாமினியின் திருமணத்தன்று கோவிலில் ஐஷுவும் சௌமியும் அழகான பட்டுப் பாவாடை தாவணியில் அடக்கமான அழகுடன் வளைய வந்தார்கள்!

வாசுவின் நண்பர்கள், ஆகாஷ் - ஷிவானி, டேவிட், சந்திரிகா, ரவிக்குமார், முகமது, காயத்திரி எல்லாரும் அவரவர்களின் துணையுடனும் குழந்தை குட்டிகளுடனும் வந்திருந்தனர்! அவர்கள் மட்டுமல்லாமல் ஸ்டீவன், அவனுடைய அலுவலக நண்பர்கள் கரண், கேப்ரியல், அவனுடைய உயரதிகாரி வேணு சாஸ்த்திரி என்று செல்லமாகத் திட்டு வாங்கும் வேணு கோபால், என அனைவரும் வந்திருந்தனர்!

யாமினியின் வளர்ப்புத் தாய் கமலாம்மா, அவளுடைய உடன் பிறவா சகோதரி பத்மினி, பத்மினியுடைய அம்மா, மற்றும் அவளுடன் அந்த கல்யாண கான்ட்ராக்டரிடம் வேலை செய்த நண்பர்கள் எல்லாரும் வந்திருந்தனர்!

நண்பர்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் பார்த்ததால் வாசுவின் மனம் மகிழ்ச்சியில் கூத்தாடியது என்றால், அதற்கு மேல் யாமினியின் அழகு வேறு அவனை பாடாய் படுத்திக் கொண்டிருந்தது!

தான் வாங்கிக் கொடுத்த பட்டுப் புடவையில் சர்வ அலங்காரத்துடன் அம்மன் சன்னதியில் நின்றிருந்த யாமினியின் அழகை வாசு தன் கண்களால் பாராட்ட, அவள் வெட்கத்துடன் தலை குனிந்தாள்! அவளுடைய சிவந்த முகம் இன்னும் சிவக்க, வாசு வானத்தில் பறந்து கொண்டிருந்தான்!

இதைக் கண்ட எல்லாரும் அவர்களைக் கிண்டல் செய்ய, அவர்கள் இருவரும் ஒருவரைப் பார்த்து ஒருவர் சிரித்துக் கொண்டனர்!

அம்மனின் சன்னதியில் குருக்கள் மந்திரம் ஓதியபடி மங்கல நாணை எடுத்துக் கொடுக்க, பெற்றோரும் உற்றாரும் பெரியோரும் அட்சதை தூவ, மனதில் பொங்கிப் பெருகும் பரவசத்துடன் வாசு யாமினியின் கழுத்தில் மீண்டுமொரு முறை மங்கல நாணை அணிவித்தான்!

அவனுக்கு சற்றும் குறையாத அதே பரவசத்துடன் அவளும் அவன் அணிவித்த திருமாங்கல்யத்தை மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் தலை குனிந்து ஏற்றுக் கொண்டாள்!

திருமண வைபவங்கள் இனிதே நிறைவேற, பாஸ்கர் மாமாவும் ருக்மணி மாமியும் வந்திருந்த அனைவருக்கும் ஐந்து நட்டத்திர ஹோட்டலில் விருந்து வைத்து ஜமாய்த்தனர்!

யாமினி வளர்ந்த அந்த ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கும் அவர்கள் சார்பில் விருந்து அளிக்கப்பட்டது!

அன்று மாலை கிருஷ்ணா மற்றும் பவதாரிணியின் விருப்பமாக திருமண வரவேற்பும் இனிதே நடைபெற்றது!

வாசுவும் யாமினியும் அழகாக தங்களை அலங்கரித்துக் கொண்டு தங்கள் துணையின் கண்களுக்கு விருந்தாகிக் கொண்டிருந்தனர்!

ஐஷுவும் சௌமியும் தாங்கள் ஆசையாக வாங்கிய லெஹங்காவில் அட்டகாசமான அழகில் மினுக்கினர்!

வாசு இளவரசன் போல ஷேர்வாணியில் கம்பீரமாகக் காட்சி தர, யாமினி தன் கைப்பட தானே டிசைன் செய்த டிசைனர் புடவையில் அதற்கேற்ற அலங்காரத்தில் ஜொலித்தாள்!

மணமக்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துப் பார்த்து பூரிக்க, மற்றவர்கள் அனைவரும் இவர்களைப் பார்த்து பூரிக்க, இருவருமே ஒரு புதுவிதமான உணர்வுகளில் மிதந்து கொண்டிருந்தனர்!

அன்றைய இரவின் தனிமையில் வாசு தன் அருகில் அளவான அலங்காரத்தில் அமர்ந்திருந்த யாமினியை அன்புடன் பார்த்திருக்க,

"எ...... என்ன.... வாசு.... புதுசா பாக்கற மாதிரி.... பாக்கறீங்க...." என்று மெல்லிய குரலில் கேட்க,

"ஹூம்....இல்ல... அன்னிக்கு.... நம்ம முதல்ல கல்யாணம் பண்ணிகிட்டு வந்தன்னிக்கு என்ன எப்டி நீ விரல் சொடுக்கி கூப்பிட்ட.... எவ்ளோ அலட்சியமா..... அசட்டு தைரியத்தோட...... இப்ப என்னடான்னா...... இவ்ளோ அமைதியா உக்காந்திருக்கியேன்னு நெனச்சேன்...."

அவள் மெலிதாக சிணுங்கினாள்!

"ஹேய்... சும்மா சொன்னேன்...." என்று சிரித்துவிட்டு அவளுடைய கையைப் பிடித்து, அவளுடைய உள்ளங்கையில் இட்டிருக்கும் மருதாணியை தன் விரல்களால் மென்மையாகத் தடவியபடியே கேட்டான், "இப்ப உனக்கு சந்தோஷமா?"

அவன் எதற்கு இப்படிக் கேட்கிறான் என்று புரியாமல் அவள் விழிக்க,

"நம்ம கல்யாணம் நீ ஆசப்பட்ட மாதிரி, உன் ட்ரஸ்ஸை நீயே டிசைன் பண்ணி போட்டுகிட்டு, கை நிறைய மருதாணில்லாம் இட்டுகிட்டு உன் மனசுக்குப் பிடிச்சவன் உன்னப் பாத்து அழகா இருக்கன்னு கண்ணாலயே சொல்ல, நீ அதுக்கு வெக்கப்பட்டு தலை குனிய, பெரியவங்கல்லாம் அட்சதை தூவ, அந்த கடவுளோட சன்னதியில நம்ம கல்யாணம்.... உன் ஆசைப்படியே நடந்திருக்கே.... உனக்கு சந்தோஷமா?" என்று கேட்டான் வாசு!

யாமினி கண்கள் விரிய அவனைப் பார்த்தாள்!

"அப்ப நீங்க.... அன்னிக்கு...."

"ம்.... நீ அம்மா கிட்ட பேசினத நா கேட்டேன்..... உன் ஆசைய நிறைவேத்த முடீலயேன்னு தவிச்சிகிட்டு இருந்தேன்.... நல்ல வேளை.... மாமா தோஷ நிவர்த்தின்னு திரும்பவும் நம்ம கல்யாணத்துக்கு ஏற்பாடு செஞ்சார்!" என்றான்!

யாமினி எதுவும் சொல்லத் தோன்றாமல் அவனுடைய கையைப் பிடித்து அதில் முத்தம் பதிக்க,

"இது என்ன அநியாயம்... உன் ஆசைய முதல் முதலா நெறைவேத்தியிருக்கேன்.... நீ என்ன தம்மாத்தூண்டு கிஸ் பண்ற...." என்று அவளைப் போலவே சென்னைத் தமிழில் பேசிக் காட்டி அவளை வம்புக்கிழுத்தான்!

யாமினி மென்மையாகச் சிரித்துக் கொண்டாள்! அவனும் கூடச் சேர்ந்து சிரித்தான்!

அவன் அவளுடைய கையில் இடப்பட்டிருந்த மருதாணியின் அழகில் கவரப்பட்டு அதில் தன் விரல்களால் கோலமிட்டபடி இருக்க, அவளோ அவனை கவனிக்காமல் திடீரென்று ஏதோ தோன்றியவளாய், முகத்தை வெகு சீரியஸாய் வைத்துக் கொண்டு அவனைப் பார்த்து கேட்டாள்.

"எனக்கு ஒரு டௌட்டு வாசு?"

"என்ன டௌட் யாமினி?"

"நாம, இன்னிக்கு நம்ம கல்யாண நாள கொண்டாடுவோமா? இல்ல, நமக்கு ரிஜிஸ்டர் மேரேஜ் நடந்துச்சே, அன்னிக்கு நம்ம கல்யாண நாள கொண்டாடுவோமா?"

அடிப்பாவீ.... இப்ப இது ரொம்ப முக்கியமாடீ.... என்று மனதில் நினைத்தவன்,

"யாமினீ.... நா ஒண்ணு சொல்லட்டுமா...." என்று மெதுவாகக் கேட்டான்!

"ம்!"

"மொதல்ல இப்ப நடக்கற ஃபங்ஷன கொண்டாடுவோமா.... இல்லன்னா நா ரொம்ப காண்டாய்டுவேன்...." என்று சென்னைத் தமிழில் கூறினான் முகத்தை அவளைப் போலவே சீரியஸாய் வைத்துக் கொண்டு!

அவள் அவனை முறைத்து விட்டு,

"தெர்லன்னுதானே கேட்டேன்... அதுக்கு போய் இவ்ளோ அல்டிக்கறீங்களே!"

"நானாடீ அல்டிக்கறேன்...." என்று அப்பாவியாய்க் கூறினான்!

"நா கேட்டதுக்கு மொதல்ல பதில் சொல்லுங்க...."

"அது ஒரு பெரிய விஷயமா யாமினி.... நாம ரெண்டு நாளையுமே நம்ம கல்யாண நாளா கொண்டாடலாம்.... எவன் கேப்பான் நம்மள...." என்றான்!

"ஐய... ரெண்டு கல்யாண நாளா.... விட்டா தினம் தினம் கல்யாண நாள் கொண்டாடுவீங்க போல...." என்று அவள் நக்கலடித்தாள்!

"ஆஹா..... தினம் தினம் கல்யாண நாள் கொண்டாட நா ரெடி....." என்று சிரித்துக் கொண்டே வாசு சொன்னதைக் கேட்டவள் முதலில் புரியாமல் பின்னர் புரிந்து கொண்டு வெட்கத்தோடு சிணுங்கினாள்!

"என்ன ஓகேயா..." என்று குறும்பாய் புன்னகைத்துக் கேட்டான் வாசு!

"ஹக்கும்.." என்று செல்லமாய் சிணுங்கியபடியே எழுந்தவளை இழுத்து அணைத்து தன் அபரிமிதமான காதலை அழகான கவிதையாய் அவளுடைய இதழ்களில் தன்னுடைய இதழ்களால் அவன் வரையத் தொடங்க, அவனுடைய அன்பான காதல் கவிதையில் தன்னைத் தொலைக்கத் தொடங்கினாள் அவனுடைய யாமினி!



வாசு - யாமினியின் வாழ்வில் சூழ்ந்திருந்த இருள் விலகி எங்கும் புதிய வெளிச்சம் பரவி அவர்களின் வாழ்வை ஔிபெறச் செய்யத் தொடங்கிவிட்டது என்ற மகிழ்ச்சியுடன் நாமும் விடை பெறுவோம்! நன்றி!



சுபம்!




 




vadivelammal

இணை அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
574
Reaction score
1,781
Location
bangalore
hi poorani
rompa arumayaana novelpa rendu appavi nalla ullangalin valliku marinthiduvathupol irunthathu end part bhaskarin thavarai thiruthikollum mudivu superp thosa nivarthi kalyanam endraalum ithu avargal iruvarin vallvin vidiyallukkaana saavi superp palliyaana appavigalaana padmini yamini vaasu ivargalaipondravargalin valgai namakku oru padipinnai nice and thanks for social awarness novelpa
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,144
Location
madurai
superb story sis baskar mama yaariyum nalla meruti vittaru. avar yaminiyai magalai thathu etuthu kondathu arumai........ arumai..... arumai sis(y)(y)(y)(y)(y):love::love::love::love:padminiyin kulanthaiyai valartha krishna& pavadharini.......... rukmini,ishu,sowmi ovoru charactersum arumai.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top