• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Idhu Irul Alla! - Epilogue

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

நான் கொடுத்த எபிலாக்!

  • சரி

    Votes: 26 100.0%
  • தவறு

    Votes: 0 0.0%

  • Total voters
    26

Annapurani Dhandapani

மண்டலாதிபதி
Joined
Jan 31, 2018
Messages
346
Reaction score
3,223
Location
Chennai
இது இருளல்ல! - எபிலாக்


"பத்மினீ! தர்ஷிணீ! ரெண்டு பேரும் என்ன அட்டகாசம் பண்றீங்க?!" என்று தாங்களும் தூங்காமல் மற்றவர்களையும் தூங்க விடாமல் விளையாடிக் கொண்டிருக்கும் தான் பெற்ற மகள்களை செல்லமாகக் கோபித்தாள் யாமினி!

இவள் பேசியதைக் கேட்டதும் தங்கள் பொக்கை வாயைக் காட்டி கன்னம் குழியச் சிரித்து எல்லாரையும் மயக்கிக் கொண்டிருந்த குழந்தைகள் இருவரும் தன் அன்னையிடம் தாவ முயன்றன!

வாசு - யாமினி திருமணமாகிய மறுவருடம் யாமினி கருவுற்றாள்! குடும்பமே ஆனந்தக் கூத்தாடியது!

பவதாரிணியும் ருக்மணியும் போட்டி போட்டுக் கொண்டு அவளுக்கு பிடித்ததை சமைத்துப் போட்டனர்! ஐஷுவும் சௌமியும் தன் அண்ணியை சுற்றிச் சுற்றி வந்து அவளுக்குப் பணிவிடை செய்தனர்!

கிருஷ்ணா ஒரு பக்கம் அவளுக்காக கோயம்பேடுக்கே சென்று காய்கறி பழங்கள் வாங்கி வந்தார் என்றால், பாஸ்கர் மாமா குன்னூரிலிருந்து எல்லாவற்றையும் தருவித்தார்! முக்கியமாக குங்குமப்பூ! குங்குமப்பூவை வாங்கி வந்து சூடான பாலில் கலந்து தினமும் அதைக் குடிக்கச் சொல்லி அவளை பாடாய் படுத்தினார்!

வாசுவைப் பற்றி சொல்லவே தேவையில்லை! யாமினியை அவன் தன் கண்ணுக்குள் வைத்து தாங்கினான்!

யாமினிக்கு மனம் நிறைந்து இருந்தது! பிறந்தது முதல் தனக்கு என்று யாரும் இருந்ததில்லை! எவரும் தனக்காக எதையும் செய்ததில்லை! இப்போது எல்லாரும் இவ்வளவு தாங்குகிறார்களே என்று மகிழ்ச்சியாய் இருந்தது!

அதற்கு மேலே பயமாகவும் இருந்தது!

"ரொம்ப பயமா இருக்கு வாசு!"

"எதுக்கு யாமினி பயம்?"

"நீங்கல்லாம் இவ்ளோ தாங்கறீங்களே! திடீர்ன்னு எதுவும் இல்லன்னு...."

அவள் மேற்கொண்டு எதுவும் பேசும் முன் அவளுடைய வாயைப் பொத்தினான்! அவளைத் தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டு கூறினான்!

"இத்தன தாள் நாம கஷ்டப்பட்டுட்டோம்! இனிமே எல்லாம் நல்லதே நடக்கும்! நீதானே சொல்லுவ! நாம நல்லது நெனச்சா நல்லதுதான் நடக்கும்னு! நல்லதே நெனப்போம்!"

"ம்!"

"பயப்படாத யாமினி! அம்மா சொல்லியிருக்காங்களே! அவங்கதான் நமக்கு குழந்தையா பிறக்கப் போறாங்க! அவங்கள நாமதானே நல்லா வளக்கணும்! அதனால நீ தைரியமா இருக்கணும் சரியா?"

"ம்!"

தான் கூறிய வார்த்தையினால் அமைதியடைந்து தன் நெஞ்சில் சாய்ந்திருந்தவளுக்கு அவளுடைய கர்ப்ப காலம் முழுதும் உடலளவிலும் மனதளவிலும் தைரியமூட்டிக் கொண்டிருந்தான் வாசு!

யாமினிக்கு பிரசவத்தில் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன!

தன் அன்னை பத்மினி தனக்கே மகளாகப் பிறந்து விட்டாள் என்ற ஆனந்தத்தில் கண்கள் கசிய முதல் குழந்தையைத் தன் கையில் வாங்கிக் கொண்ட வாசுவுக்கு, இன்ப அதிர்ச்சியாக அடுத்த குழந்தையும் பெண்ணாகவே இருக்கக்கண்டு, அதையும் செவிலி கொண்டு வந்து கொடுக்க, மனம் நிறைந்த பூரிப்புடன் அதையும் வாங்கிக் கொண்டான்!

யாமினி மயக்கம் தெளிந்தவுடன், பிறந்த குழந்தைகளை பவதாரிணியிடமும் ருக்மணி மாமியிடமும் தந்துவிட்டு மனைவியைப் பார்க்க ஓடினான்!

இரண்டு குழந்தைகளை பிரசவித்த அயற்சியில் துவண்ட துணியாய் கிடந்தவளின் அருகே அமர்ந்து கொண்டு வியர்த்திருந்த அவளுடைய முகத்தைத் தன் கைக்குட்டையால் துடைத்துவிட்டான்!

"தேங்க்ஸ்! தேங்க்ஸ் யாமினி!" என்று கூறி அவளுடைய கன்னத்தில் மென்மையாய் முத்தம் பதித்தான்!

தனக்கு, பிரசவத்தில் இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்துள்ளன என அறிந்த யாமினி வாசுவிடம்,

"என்ன வாசு! நமக்கு ரெண்டு பொண்ணு பிறந்திருக்கு? ஸ்கேன் பாத்து ரெட்டைக் குழந்தைன்னு டாக்டர் சொல்றச்சே, ஒண்ணு பையனாயிருக்கும்னு நெனச்சேன்!" என்று அவள் கூற,

"ம்! அத்த உன் கிட்ட என்ன சொல்லி சத்தியம் வாங்கியிருக்காங்களோ...." என்று கேட்டு வாசு அவளைப் பார்த்து புன்னகைக்க,

"யாரு... அத்த...." என்று குழம்பினாள் யாமினி!

"ம்... எங்கம்மா உனக்கு அத்தன்னா, உங்கம்மா எனக்கு அத்ததானே? அதான்! நா பிறந்தப்ப எங்கம்மா என் கிட்ட சத்தியம் வாங்கின மாதிரி, நீ பிறந்தப்ப உங்கம்மா உன் கிட்ட ஏதோ சத்தியம் வாங்கியிருக்காங்க போல! அதான் எங்கம்மாவும் உங்கம்மாவும் இப்ப ஒண்ணா சேந்து நமக்கு இரட்டைக் குழந்தைங்களா வந்து பிறந்திருக்காங்க!" என்றான்!

யாமினி நெஞ்சம் நெகிழ, தன் கணவனின் கையில் முகம் புதைத்து விசும்பினாள்!

"ஹே..... அழாதடா.... நீ எப்பவும் சொல்ற மாதிரி நாம ரொம்ப குடுத்து வெச்சிருக்கோம்! நமக்கு எல்லா சொந்தங்களும் இருக்கு! இப்ப நம்ம அம்மாக்களும் நமக்கு கெடைச்சுட்டாங்கடா....." என்று கூறி அவளை ஆறுதல் செய்தான்!

அவனுடைய அபரிமிதமான அன்பினால் ஆறுதலடைந்த யாமினி, கொஞ்சம் கொஞ்சமாக உடல் தேறினாள்!

குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவதற்கு எல்லாரும் ஒவ்வொரு பெயரை ஆலோசனையாகக் கூற,

"இது அவன் குழந்தைங்க! அவனும் யாமினியும் முடிவு செய்வாங்க!" என்று பாஸ்கர் மாமா கூறியதைக் கேட்ட மற்ற எல்லாரும் மாமாவின் மனமாற்றத்தை அதிசயமாகப் பார்த்தார்கள்!

பின்னே! எப்போதும் எல்லாவற்றிலும் தன் அதிகாரத்தைச் செலுத்த நினைக்கும் மாமா இப்போது வாசுவுக்காக ஒன்றை விட்டுக் கொடுக்கிறார் என்றால் அது அதிசயம்தானே?!

எங்கள் பெற்றவர்களின் பெயரைதான் குழந்தைகளுக்கு வைக்கப் போகிறோம் என்று வாசு தெளிவாகக் கூறினான்!

யாமினி வாசுவிடம் கேட்டாள்!

"முதல் குழந்தைக்கு பத்மினி அத்த பேரை வெச்சிடலாம் வாசு! ஆனா எங்கம்மா பேர் என்னன்னு எனக்குத் தெரியாதே! அவங்கள நா கண்ணால கூட பாத்ததில்ல வாசு!" என்று வருந்தியவளை,

"நீ உங்கம்மாவ பாத்ததில்லதான்! ஆனா உங்கம்மா இவ்ளோ நாளா உன்ன பாத்துகிட்டேதான் இருந்திருக்காங்க.... இப்ப உன் வயித்திலயே வந்து குழந்தையா பிறந்து அவங்க நமக்கு தரிசனம் குடுத்திருக்காங்கல்ல... அதனால நம்ம ரெண்டாவது குழந்தைக்கு தர்ஷிணின்னு பேர் வெக்கலாம்! சரியா? பத்மினிங்கற பேருக்கும் ரைமிங்கா இருக்கும்! என்ன சொல்ற?"

"ம்!" என்று அழகாய் புன்னகைத்து அவன் சொன்னதை ஆமோதித்தாள் யாமினி!

மற்றவர்களும் வாசு சொன்னதை முழுமனதுடன் ஏற்றுக் கொண்டார்கள்!

குழந்தைக்களுக்கு ஆறு மாதமாகிறது! நாளைதான் முதன் முதலாக குழந்தைகளை கோவிலுக்கு எடுத்துச் செல்லப் போகிறார்கள்! நாளை காலை மயிலை கபாலீஸ்வரர் கோவிலில் அபிஷேகத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறார் பாஸ்கர் மாமா! கூடவே அன்னதானத்துக்கும் ஏற்பாடு செய்திருக்கிறார்!

அதுதான் காலை சீக்கிரம் கிளம்ப வேண்டுமே என்று இப்போது குழந்தைகளைத் தூங்க வைக்க முயன்றால், இரண்டு குழந்தைகளும் வீட்டில் உள்ளவர்களுடன் மும்முரமாக விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்!

மறுநாள் எல்லாேரும் தயாராகி கோவிலுக்குச் சென்றனர்! கபாலீஸ்வரருக்கும் கற்பகாம்பாளுக்கும் நடந்த அபிஷேக ஆராதனைகளை கண்குளிரக் கண்டு களித்தனர்!

பிரார்த்தனைகள் முடிந்து பிராகாரத்தை வலம் வந்த பின், குழந்தைகளுடன் யாமினியை அமர்த்திவிட்டு அவளுக்குத் துணையாக பவதாரிணியும் ருக்மணியையும் அமர வைத்தார்கள்! ஐஷுவும் சௌமியும் கூட அவர்களுடனேயே அமர்ந்துவிட்டனர்!

பாஸ்கர் மாமா அன்னதானத்துக்காக தயார் செய்திருந்த உணவுப் பொட்டலங்களை கோவிலைச் சுற்றியுள்ள ஏழை எளிய மக்களுக்கு வழங்க, அவருக்கு கிருஷ்ணாவும் வாசுவும் உதவினர்!

"என் மானத்த வாங்கிட்டியேடீ.... நீல்லாம் நல்லாருப்பியா.... உன்ன எவ்ளோ நம்புனேன்.... என் தலயில மண்ணள்ளிப் போட்டியேடீ....." என்று கத்திக் கொண்டே ஒரு பதின் பருவத்துச் சிறுமியை தன் கையிலிருந்த குச்சியால் விளாசிக் கொண்டிருந்தான் ஒருவன்! அந்தச் சிறுமி பாவம், வலி தாங்க முடியாமல் அழுதாள்.... கூடவே,

"இல்ல நைனா... நா ஒன்யும் செய்ல நைனா... என்னிய நம்பு நைனா...." என்று கதறினாள்!

சத்தம் வந்த திசை நோக்கி ஓடினார் பாஸ்கர் மாமா! அங்கு நடந்து கொண்டிருந்ததைப் பற்றி அருகிலிருந்தவர்களிடம் விசாரிக்க,

"அது ஒன்யும் இல்ல சார்! அந்த பொண்ணு எவங் கூடயோ ஓடிப் போச்சி.... அவன் செரீல்ல போல.... அதான் இன்னிக்கு திரும்பி வந்திச்சி.... ஓடிப் போன பொண்ண எந்த அப்பன் ஏத்துப்பான்... அதான் போட்டு சாத்தறான்...." என்றான் பக்கத்து கடைக்காரன்!

பாஸ்கர் மாமா ஓடிப்போய் அடித்துக் கொண்டிருந்தவனைத் தடுத்தார்!

"ஐரே... நீ போ ஐரே.... இது என் வீட்டு விசயம்.... நீ போ..."

"இங்க பாருப்பா... நீ மொதல்ல அந்தப் பொண்ண அடிக்கறத நிறுத்து... பாவம்... சின்ன பொண்ணு.... எங்கியாவது கண்ல பட்டுடப் போறது...."

"போவட்டும்.... கண்ணுல பட்டு குருடா போவட்டும்... இல்ல படாத எடத்தில பட்டு சாவட்டும்.... சனியன்..."

"அவ செத்துட்டா... நீ நிம்மதியா இருந்துடுவியா.... என்ன பேசறப்பா நீ...."

"யோவ்... ஐரே.... உனுக்கு இன்னாய்யா தெரியும்... இத்த நா எப்டி வளத்தேன்.... நா கஸ்டபட்டேங்காட்டியும்..... இத்த ராணி மாரி வளத்தேன்யா... ஆனா இந்த.... சிறுக்கி மு...... எவங்கூடயோ ஓடிப் போய்ட்டு.... இப்ப அவன் நல்லவன்லன்னு திரும்பி வந்திருக்கா....." என்று இன்னும் காதில் கேட்கக் கூடாத வார்த்தைகள் சொல்லி திட்டினான்!

"இல்ல.... இல்ல நைனா... நா ஓடிப் போவல.... என்னிய நம்பு.... அவந்தா.... உனுக்கு ஆஸ்டென் (accident) ஆயிருச்சின்னு சொல்லி இட்னு போனான்... அவங்கிட்டேந்து தப்ச்சினு வரேன் நைனா...." என்று சொல்லி அழுதாள் சிறுமி!

"ஏய்... ஆராண்ட பொய் சொல்ற...." என்று அவன் திரும்பவும் ஆரம்பிக்க,

அவனுடைய மனைவி ஓடி வந்து தன் மகளை இப்போது அடிக்கத் தொடங்கினாள்! பக்கத்தில் வேடிக்கை பார்த்திருந்தவர்கள் சிலர் வந்து தடுத்துப் பார்த்தனர்! சிலர் நமக்கேன் வம்பு என்று சும்மா இருந்தனர்! சிலருக்கு இது சுவாரசியமான பொழுது போக்காக மாறி விட்டிருந்தது!

"ஆர்னா அப்டி சொல்லி கூப்ட்டா நீ பாட்டுக்கு பூடுவியா....." என்று கூறி அடிக்க, அந்தச் சிறுமி நைந்த துணி போல கீழே விழுந்தாள்!

"டேய்! கொஞ்சம் நிறுத்தறியா! என்னம்மா... நா பாட்டுக்கு சொல்லிண்டே இருக்கேன்.... நீ பாட்டுக்கு அந்தப் பொண்ணப் போட்டு இப்டி மாட்ட அடிக்கற மாதிரி அடிக்கறயே..." என்று ஓங்கிக் குரல் கொடுத்தார் பாஸ்கர் மாமா!

இப்போது அவர்கள் அடிப்பதை நிறுத்தினர்!

பாஸ்கர் மாமா அந்தச் சிறுமியை தூக்கி எழுப்பினார்! அழுது கொண்டிருந்தவளின் கண்களைத் துடைத்தார்!

"என்னம்மா ஆச்சு! அழாம சொல்லு!" என்று அவள் கண்களைப் பார்த்துக் கேட்க,

"நா எந்த தப்பும் பண்ல சார்! எப்பயும் எங்க நைனா அந்த ஓட்டல் கடையாண்ட குடிச்சிட்டு உயிந்து கடப்பாரு.... அவன்... அதான் அந்த நாலாம் நம்பர் கடை டய்லரு.... அவந்தான் டெய்லியும் என்னாண்ட வந்து.... உங்கப்பாரு... கடையாண்ட உய்ந்து கடக்காருன்னு சொல்லும்... நா போய் அப்பார தூக்கி வூட்டுக்கு இட்டாருவேன்.... அன்னிக்கும் அப்டிதா.... உங்கப்பாருக்கு ஆஸ்டென் ஆச்சி.... நா ஆசுபத்ரி இட்னு போறன்னு சொல்லி அவன் என்ன இட்டுனு போய்... ஒரு கார்ல ஏத்தி உட்டான்... உட்டுட்டு அவன் போய்ட்டான்.... கார்ல யாரோ ரெண்டு பேர்.... என் வாயப் பொத்தி.... எனுக்கு மயக்கமா வந்துச்சி..... ரெண்டு நாளா மயக்கத்தில கடந்தேன்... மயக்கம் தெளிஞ்சதும் அங்கேந்து எப்டியோ தப்ச்சி வந்தா... இவரு என்னிய போட்டு அடிக்கறார் சார்...." என்று அழுது கொண்டே கூறினாள் சிறுமி!

 




Last edited:

Annapurani Dhandapani

மண்டலாதிபதி
Joined
Jan 31, 2018
Messages
346
Reaction score
3,223
Location
Chennai
இவ்வளவு நேரம் அந்தப் பெண் எவனுடனோ ஓடிப் போய்விட்டாள் என்று நினைத்திருந்தவர்கள் இப்போதுதான் இது ஒரு கடத்தல் சம்பவம் என்றே புரிந்து கொண்டனர்!

உடனேயே வந்து அந்த தகப்பனிடம் அந்த சிறுமிக்காக வக்காலத்தும் வாங்கினர்!

"அடக்கடவுளே! பாத்தியாப்பா... இந்தப் பொண்ணப் போய் அப்டி அடிச்சியே.... பாரு... ரெண்டு நாளா மயக்கத்தில இருந்த பொண்ணப் போட்டு அடிச்சி... ஏம்மா... பெத்தவ நீயே இப்டி பண்லாமா...." மாமா கேட்டார்!

"யோவ்... ஐரே... பெரீஸா வண்ட்டாரு.... வெள்ளையும் சொள்ளையுமா.... உனுக்கு இப்டி நடந்திருந்தா தெரியும்யா.... இத்த நாளைக்கு எவன்யா கட்டுவான்...." என்று கேட்டு தலையில் அடித்துக் கொண்டு அழுதான் அவன்!

மாமா விரக்தியாய் சிரித்தார்!

"எனக்குத் தெரியும்யா.... அந்தக் கஷ்டம் என்னன்னு எனக்கு நல்லாத் தெரியும்... வாழவும் முடியாம சாகவும் முடியாம... கட்டுன பொண்டாட்டி கிட்ட கூட மனசத் தொறந்து நம்ம வேதனைய சொல்ல முடியாம.... எங்க நம்ம அழுதுட்டா அவ ஒடஞ்சி போய்டுவாளேன்னு.... போலியா.... எல்லார் மேலயும் கோவம் இருக்கற மாதிரி நடிச்சுண்டு..... அதிகாரம் பண்ற மாதிரி நடிச்சுண்டு..... நமக்கு வேண்டியவங்களக் கூட தள்ளி நிறுத்தி.... தெரியும்யா.... இத்தன வருஷமா இததானே நா பண்ணிண்டு இருக்கேன்...."

"என்னா ஐரே சொல்ற.." என்று அதிர்ச்சியாய்க் கேட்டான் அந்த தகப்பன்!

"என்ன மாதிரி நீயும் கஷ்டப் படாதய்யா..... அவள அடிச்சிப் போட்டுட்டு... நீ மட்டும் நிம்மதியாவா இருப்ப... காலம் பூரா அழுதுண்டு தானே இருப்ப.... அதுக்குதான் சொல்றேன்...... உன் பொண்ண மொதல்ல உள்ள கூட்டிண்டு போ.... தலைல எண்ண வெச்சி குளிப்பாட்டு.... இவளப் பிடிச்ச பீடையெல்லாம் ஒழிஞ்சதுன்னு... மஞ்சத் தண்ணி தெளிச்சி உள்ள கூட்டிண்டு போய்யா... சாமி வௌக்கேத்தி குங்குமம் வெச்சி விடு..... இவள நல்லா படிக்க வெய்... இத்தன கஷ்டப்பட்டும்... தைரியமா திரும்பி வந்திருக்கா... நல்ல வயிறு நிறைய சாப்பாடு போடு.... அவளுக்கு இன்னும் தைரியம் சொல்லிக் குடு.... கராத்தே மாதிரி சண்ட போட கத்துக் குடு... இவள மாதிரி பொண்ணுங்கதான் நாளைக்கு நம்ம நாட்ட காப்பாத்த போற ஜான்சி ராணிகள்!" என்று அவனிடம் சொல்லிவிட்டு சிறுமியிடம் திரும்பினார் மாமா!

"ம்மா... பாப்பா.... தைரியமா இருக்கணும்... நல்லா படிக்கணும்.... எவன் உன் வழியில குறுக்க வந்தாலும்.... எட்டி மிதி.... சரியா... போம்மா..... கூட்டிண்டு போப்பா.... ஏம்மா... உன் பொண்ண கூட்டிண்டு போம்மா...." என்று கூறிவிட்டு கண்ணில் நிறைந்திருந்த கண்ணீரை யாரும் அறியாமல் துடைத்துக் கொண்டார்!

அவர் பேசியதெல்லாம் தள்ளியிருந்து கேட்டு சிலையாகி நின்று கொண்டிருந்த வாசுவை கிருஷ்ணா தோளில் தட்ட, மெல்ல சுயவுணர்வுக்கு வந்தான்!

மெதுவாகப் போய் தன் மாமாவின் தோளைத் தொட்டான்! அவனுடன் கிருஷ்ணாவும் வந்து பாஸ்கர் மாமாவின் தோளில் கையைப் போட்டார்!

"தம்பீ.... யார் தம்பி இவரு....உங்க நைனாவா?" கேட்டான் அந்த தகப்பன்!

"என் தெய்வம்!" என்றான் வாசு!

"என்னா தம்பி சொல்ற...."

"ஆமாங்க! இவர் என் குல தெய்வம்!" என்று மாமாவைக் காட்டி சொல்லிவிட்டு,

"அவர் என் இஷ்ட தெய்வம்!" என்று தன் தந்தையைக் காட்டி சொன்னான்!

மாமா வாசுவை அதிசயமாகப் பார்க்க,

"வாங்க மாமா!" என்று கூறி அவரை அணைத்தாற்போல அழைத்துப் போனான்!

அதற்குள் இவர்கள் சென்று வெகு நேரமாகிறதே என்று இவர்களைத் தேடி வந்த ருக்மணி மாமியும் மாமாவின் பேச்சைக் கேட்டு உள்ளுக்குள் வருந்தினாள்!

அன்று யாமினி சொன்னது மாமிக்கு ஞாபகம் வந்தது! அவ எவ்ளோ சரியா இவரப்பத்தி புரிஞ்சிண்டிருக்கா! என்று நினைக்காமல் அவளால் இருக்க முடியவில்லை! திரண்டு வந்த கண்ணீரை அவளும் யாருமறியாமல் துடைத்துக் கொண்டாள்.

மாமாவையும் மாமியையும் அழைத்துக் கொண்டு கோவிலுக்குத் திரும்ப வந்து எல்லாரையும் காரில் ஏற்றினான் வாசு!

எல்லாரும் ஏறி அமர்ந்ததும், அவன் கடைசியாக ஏறப் போகும்போது,

"ஹே! வாசுதேவா! எப்டி இருக்க? எவ்ளோ நாளாச்சு உன்ன பாத்து?" என்ற குரல் கேட்டு திரும்பிப் பார்க்க, வாசுவின் பள்ளித் தோழன்!

அவன் தன் மனைவியுடன் நின்றிருந்தான்! அவள் நிறைமாத கர்ப்பிணியாய் அவனருகில் நின்றிருந்தாள்!

"ஹே... சுந்தர்! எப்டியிருக்க..."

"டீவில பாக்கறேண்டா..... தினம் தினம் நீ சாகசம் பண்ணிட்டு இருக்க.... ரொம்ப சந்தோஷமா இருக்கு...."

"தேங்க்ஸ்டா..."

"ஆங்... ஆமா.... இவளுக்காகதான்... செக்கப் போய்ட்டு வரோம்..."

"ஓ... கோவிலுக்கு வந்தோம்..."

"சரி.... இது என் நம்பர்... நீ அவசியம் வீட்டுக்கு வரணும்..."

இருவரும் போன் நம்பர்கள் வாங்கிக் கொண்டனர்! கைகுலுக்கி விடைபெற்றனர்!

வாசு தன் காரைக் கிளப்பிக் கொண்டு நகர்ந்தான்!

வாசுதேவா.....

வாசுதேவா......

இந்தப் பெயர் கேட்டு அந்த தெருவின் ஓரத்தில் சாக்கடையின் அருகே அழுக்கில் படுத்திருந்த அந்தப் பிச்சைக்காரன் மிகவும் சிரமப்பட்டு எழுந்து அமர்ந்தான்!

"இப்டி அநியாயம் பண்றேளே... என்ன மாதிரி எத்தன பொண்ணு வாழ்க்கைய நாசம் பண்ணிருப்பேள்.... உங்களுக்கெல்லாம் தண்டனை குடுக்க.... அந்த கடவுள் வருவார்....

வசுதேவ சுதம் தேவம்
கம்ஸ சாணூர மர்த்தனம்
தேவகீ பரமானந்தம்
கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்!
"

"ஐய... இந்தா பொண்ணு... என்ன மந்திரம் போடறியா... நீ மந்திரம் போட்டா... அந்த கிஸ்ன பரமாத்மா வந்துருவானா...."

"வருவான்... என்னோட கிருஷ்ணன் வருவான்... என்ன காப்பாத்த நிச்சயம் அந்தக் வாசுதேவன் ஓடி வருவான்....."

"தோ பாருங்கடா....இத்த காப்பாத்த..... கிஸ்னன் வருவானாம்..." அருவருப்பாய் சிரித்தவனைப் பார்த்து அவள் சொன்னாள்!

"பாவம் பண்றேள்... நீங்கள்லாம் பாவம் பண்றேள்... இந்த பாவத்துக்கெல்லாம் ஒருநாள் நன்னா அனுபவிப்பேள்.... ஒரு நாள் வரும்.... அப்ப தட்டு நெறைய சோறு இருந்தும்.... உங்களால ஒரு பருக்கை சாதம் கூட சாப்பிட முடியாம போகும்.... ஒரு சொட்டு தண்ணி குடிக்க முடியாம போகும்.... நல்லா இருந்த எங்கள இப்டி பண்ணி சமூகத்தோட பார்வைல எங்கள தாழ்வா இருக்க வெச்சீங்கள்ல.... எல்லாரும் உங்கள அடிச்சி வெரட்டுவா.... என்ன மாதிரி பொண்களை அநியாயமா பலி வாங்கினதுக்கு... பின்னால வாழ முடியாம.... சாவு வராதான்னு காத்துண்டு கெடப்பேள்... அப்ப நெனச்சுப்பேள்... நா சொன்னது சரீன்னு.... நா நம்பற என் வாசுதேவ கிருஷ்ணன் உங்களுக்கு நா சொன்னது மாதிரி தண்டனை தரத்தான் போறான்!"

அவளுடைய குரல் பேயாய் அந்தப் பிச்சைக்காரனின் காதில் ஒலித்தது....

அவன் தன் காதைப் பொத்திக் கொண்டு கத்தினான்!

த... பொண்ணு... இன்னிக்கு எனக்கு சோறு கெடைச்சிருச்சி.... ஒரு புண்ணியவான் சோறு போட்டாருடீ.....

என்று எண்ணிக் கொண்டே அந்த வெள்ளைச் சட்டை வெள்ளை வேட்டி கட்டிய ஐயர் தானமாகத் தந்த உணவுப் பொட்டலத்தைப் பிரித்தான்! அவன் பிரிக்கவும் எங்கிருந்தோ பறந்து வந்த ஒரு காக்கை அந்த உணவில் எச்சமிட்டது!

ச்சே... சனியன்... எங்கேந்து வந்த.... ச்சீ... ஹூம்... பசிக்கிது....

பரவாயில்லை! அதை ஒதுக்கிவிட்டு சாப்பிடலாம் என்று நினைத்து ஒரு கவளம் எடுக்கப் போக, காற்று பலமாக வீசி உணவு முழுதும் மண்ணானது! அவனால் அதைச் சாப்பிட முடியவில்லை! ஏக்கத்தோடு மண் விழுந்த உணவை குப்பையில் வீசினான்! தண்ணீர் பாட்டிலை எடுத்தான்! சாலையின் எதிரே வாலாட்டிக் கொண்டிருந்த நாய் ஒன்று ஓடி வந்து இவன் மேல் பாய, இவன் நாய்க்குப் பயந்து தண்ணீர் பாட்டிலை கீழே தவறவிட்டான்! பாட்டிலில் இருந்த மொத்த தண்ணீரும் தரையில் கொட்டி வீணாகியது!

உண்ண உணவும் இல்லை! குடிக்கத் தண்ணீரும் இல்லை! பசி உயிர் போனது! பக்கத்தில் நடந்து கொண்டிருந்தவர்களிடம் கையேந்தினான்!

"ச்சீப்போ...."

"சாப்பிட்டு பத்து நாளாச்சி.... ஒரு வாய் சோறு போடுங்கடா..." ஈனஸ்வரத்தில் முனகினான்!

"எடுக்கறது பிச்ச... இதுல மரியாதையில்லாம... அடா... போடான்னு திமிரு பேச்சு வேற...." என்று திட்டிக் கொண்டே தடியால் அடித்தனர்!

 




Annapurani Dhandapani

மண்டலாதிபதி
Joined
Jan 31, 2018
Messages
346
Reaction score
3,223
Location
Chennai
வாசு காரை செலுத்தியபடியே,

"அவன் யார்னு தெரியுதாப்பா?" என்று தன் தந்தையிடம் கேட்க,

"யாரு! இப்ப உன்கிட்ட பேசினானே? அவனா? எங்கியோ பாத்த ஞாபகம்... தெரீலப்பா...." கிருஷ்ணா சொன்னார்!

"என் க்ளாஸ் மேட்.... சுந்தர்.... என் கூடவே எல்லா டீச்சர்ட்டயும் பனிஷ்மென்ட் வாங்குவானே...."

"ஓ.... எஸ்... ஞாபகம் வருது...."

"இப்ப என்ன பண்றான் தெரியுமா? ஹெச் டீ எஃப் சி பேங்க்ல வேல பண்றானாம்.... தேனாம்பேட் ப்ராஞ்ச்.... அநேகமா ப்ராஞ்ச் மேனேஜர் ப்ரமோஷன் வரும்னு எதிர் பாக்கறானாம்...."

"சூப்பர் வாசு.... க்ரேட்!"

"தெரியுமா யாமினி.... அவனும் என்ன மாதிரிதான்... சரியான வாலு.... ரொம்ப மோசமா படிப்பான்.... டென்த்ல அண்ணன் ஃபெயில் வேற.... இப்ப பாரு எப்டி இருக்கான்னு...."

தன்னருகே அமர்ந்திருந்த தன் மனைவியிடம் கூறினான்!

"கேக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்குங்க...." தன் மடியிலிருந்த குழந்தை பத்மினியின் தலையைக் கோதியபடியே கூறினாள் யாமினி!

தர்ஷிணி சமத்தாக பவதாரிணியின் கையிலிருந்தபடி தன் அத்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாள்!

"நானு... இவன் எல்லாம் உருப்படவே மாட்டோம்னு எங்க டீச்சர் எப்பவும் திட்டுவாங்க..." என்று சொல்லி சிரித்தான்.

"நாங்கல்லாம் உருப்பட்டுட்டோம்! ஆனா நல்ல குடும்பத்தில பொறந்து நல்லா படிச்சி கோல்ட் மெடல் வாங்கின ஒருத்தனுக்கு வீட்ல இருக்கறவங்க தப்பு தப்பா சொல்லிக் குடுத்ததால, படிச்ச படிப்புக்கு தகுந்த மாதிரி நடந்துக்காம அறிவு கெட்டுப் போய், என்னப் பழி வாங்கறேன்னு தன் வாழ்க்கைலயே மண்ணள்ளிப் போட்டுகிட்டான்.... எல்லா இடத்திலயும் ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்கினவனால ஒரு சின்ன இன்டர்வியூல ஏற்பட்ட தோல்விய தாங்க முடியல.... ஒரு சின்ன ஏமாற்றத்த தாங்கிக்க முடியல.... இந்த வேலை இல்லன்னா வேற வேலை கெடைக்கும்னு யோசிக்கத் தெரியல.... இவனெல்லாம் என்னதான் படிச்சானோ...." என்றான் வாசு!

பேசிக் கொண்டிருந்த தன் தந்தையை தன் தாயின் மடியிலிருந்தபடி இழுத்தாள் குழந்தை பத்மினி!

"அடி என் செல்லகுட்டி.... இருடீ கண்ணம்மா.... அப்பா வண்டி ஓட்டறேன்.... அப்றமா அப்பா கிட்ட வருவீங்களாம்...."

பத்மினி கன்னம் குழிய சிரித்துக் கொண்டே தன் தந்தையிடம் தாவ முயன்றது. இவள் சிரித்ததைப் பார்த்த தர்ஷிணியும் சிரித்தாள்!

"இரும்மா கண்ணா.... அப்பா வண்டி ஓட்ட வேண்டாமா.... சமத்துல்ல...." கொஞ்சிக் கொண்டே யாமினி குழந்தையை சமாதானப் படுத்த முயல...

பத்மினி தன் தந்தையிடம் செல்ல வேண்டும் என்று சிணுங்கினாள்.

எல்லாரும் அவளை வாங்கி தன்னுடன் வைத்துக் கொண்டு சமாதானம் செய்ய முயன்றனர்! ஆனால் யாரிடமும் சமாதானமடையாமல் பத்மினி வாசுவிடம் செல்ல வேண்டும் என்று அழத் தொடங்கினாள்!

"வாசு! வண்டிய ஓரமா நிறுத்திட்டு குழந்தைய நீ வாங்கிக்கோப்பா.... என்னன்னு தெரீல... அவ உங்கிட்ட வரணும்னு அடம் பிடிக்கறா.... கொஞ்ச நேரம் அவள நீ வெச்சுக்கோ..." என்றார் கிருஷ்ணா!

அவர் சொல்படி வாசு வண்டியை ஓரம் கட்டினான்! பத்மினியை தூக்கிக் கொண்டு காரை விட்டு வெளியில் வந்து அருகிலிருந்த கொன்றை மரத்தடியின் நிழலில் நின்று குழந்தைக்கு வேடிக்கை காட்டினான்!

அவன் வெளியே வரவும், கிருஷ்ணாவும் பாஸ்கர் மாமாவும் வண்டியை விட்டு இறங்க, தர்ஷிணி தன் தாத்தாவிடம் தாவியது!

ஐயோ.... தப்பு பண்ணிட்டேன்.... தப்பு பண்ணிட்டேன்.... என்ன மன்னிச்சிடு... ஏ.... பொண்ணு.... உன் சாமி கிட்ட சொல்லி எனக்கு சாவு வர வெய்.... ஏ.... பொண்ணு.... நீ... எங்க இருக்க.... உன் சாமிய கூப்பிடு.... எதோ மந்திரம்லாம் சொன்னியே.... அத சொல்லி உன் சாமிய கூப்பிடு.... எனக்கு சாவு வர வெய்....

அந்த அழுக்குப் பிச்சைக்காரன் அழுதபடி புலம்பிக் கொண்டேயிருந்தான்! வெட்ட வெளியில் அந்த நண்பகல் வேளையில் அவன் கண்களுக்கு இருட்டைத் தவிர வேறு எதுவும் தெரியவில்லை!

இது வெறும் இருளல்ல! அவனுடைய பாவ மூட்டை!

குழந்தை பத்மினி தன் தந்தை வாசுவைப் பார்த்துப் பார்த்து கன்னம் குழியச் சிரித்தது!

"என்ன என் கண்மணிக்கு.... இன்னிக்கு இவ்ளோ சந்தோஷம்.... என்னடா செல்லம்.... ஒரே சிரிப்பா இருக்கு..... அப்பா கிட்ட அப்டி என்ன ஸ்பெஷலா கண்டு பிடிச்சீங்க.... புதுசா பாக்கற மாதிரி... இப்டி சிரிக்கறீங்க...." வாசு தன்னைப் பார்த்துப் பார்த்து சிரிக்கும் குழந்தையை கொஞ்சினான்!

பத்மினி சிரிப்பதைக் கண்ட தர்ஷிணியும் சிரிக்க, குழந்தைகளின் குதூகலத்தில் மற்றவர்களும் சிரித்தனர்!

பத்மினிமும் வாசுவும் சிரிப்பதைப் பார்த்த பாஸ்கர் மாமாவுக்கு கண்கள் குளம் கட்டியது!

ஏதேச்சையாக மாமாவைப் பார்த்த வாசு, குழந்தையை மாமாவிடம் நீட்ட, அவர் குழந்தையை வாங்கிக் கொண்டு கொஞ்சினார்!

குழந்தை பத்மினி மாமாவின் கன்னத்தில் தன் வாயை வைத்து எச்சில் செய்ய, அந்த நொடியில் அவருடைய நெஞ்சிலிருந்த அத்தனை சோகமும் களையப்பட்டு விட்டது போல உணர்ந்தார்!

திரும்பவும் பத்மினி தன் தந்தையிடம் தாவிக் கொண்டு தன் சிரிப்பைத் தொடர்ந்தாள்!

"வாசு! போதும் வாசு! குழந்தைக்கு கண் பட்டுடப் போகுது! ஒரு அதட்டுப் போடுங்க!" என்றாள் யாமினி!

"என் செல்லம்... இவளப் போய் அதட்டுவேனா.... கேட்டியா கண்ணு... உங்கம்மா... உன்ன அதட்டச் சொல்லி எங்கிட்டயே சொல்றா.... இவள என்ன பண்லாம்.... நீ சொல்லுடா செல்லம்....." என்று குழந்தையிடம் முறையிட்டான் வாசு!

இப்போது பத்மினி தன் தாயிடம் தாவிக் கொண்டு தன் விளையாட்டைத் தொடர்ந்தாள்!

உண்மைதான்! இவர்கள் இப்போதுதான் சந்தோஷமாக வாழ ஆரம்பித்திருக்கிறார்கள்! இவர்கள் மீது யாரும் கண் வைத்துவிடக் கூடாது! என்று நினைத்தபடி தன் சட்டைப் பையிலிருந்து கபாலீஸ்வரர் கோவிலில் கொடுத்த விபூதிப் பிரசாதத்தை எடுத்து எல்லாருக்கும் வைத்துவிட்டார் பாஸ்கர் மாமா!

அப்போது அந்த கபாலீஸ்வரரின் அருளாசியாய், வாசுவின் குடும்பத்தினர் மீது கொன்றை மரத்திலிருந்து கொன்றைப் பூக்கள் பூமாரி பொழிந்தது!



♥♥♥♥♥♥♥

 




Pashy2k

அமைச்சர்
Joined
Feb 18, 2018
Messages
1,171
Reaction score
5,157
Location
Chennai
Very nice epilogue.
இவ்வளவு அருமையான குடும்பம் கிடைச்சா எல்லா கஷ்டத்தையும் தாண்டி வந்துடலாம்
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
superb sis baskar mama antha pathinamavayathu penin appa& ammavittam kurum arivurai arumai....... thavaru seithavan thantika patuvittan padminiyoda sernthu nangalum magilnthom arumaiyana epilogue sis. vasu& yaminiyin vazhvu malarnthathu:love::love::love::love::love::love::love::love:
 




Priyapraveenkumar

அமைச்சர்
Joined
Feb 19, 2018
Messages
2,340
Reaction score
2,705
Location
Coimbatore
wow very nice ending.......Vasu yamini twins baby very cute.........
Padmini baby apdiye vasu amma than edho santhosam avngalukku so baby mooliama anupavikkaranga...very nice....
Baskar mama peachu avlo supera irunthathu unarthu sonaru antha aalkitta.........
VasuYamini INE AVANGA BABIESODA Happpya iruppanga...yaminikku nalla family kidaichurukku...Vasukku ellam thelivai avanum happy.....so happy ending.....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top