• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Idhu Irul Alla! - Epilogue

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

நான் கொடுத்த எபிலாக்!

  • சரி

    Votes: 26 100.0%
  • தவறு

    Votes: 0 0.0%

  • Total voters
    26

Jeyakumar Sundaram

புதிய முகம்
Joined
Jun 13, 2018
Messages
1
Reaction score
1
Location
Chennai
சகோதரிக்கு

பல இடையூறுகளின் மத்தியில் தொடர்ந்து படிக்கின்ற உத்வேகத்தை தந்தது தங்கள் கதையின் நளினம் . பாராட்டுக்கள்.

கடத்தப்பட்டு கற்பிழந்த பெண்களுக்கு வாழ்வழிக்கும் கதையை அழகாக நியாயப்படுத்தியிருக்கிறீர்கள். அது ஒரு விபத்து என்பது கதையில் அழகாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாசுவின் பாத்திரம் நன்றாக சித்தரிக்கப்பட்டுள்ளது. தான் குப்பையிலிருந்து எடுக்கப்பட்டவன் என்று வெளிப்படுத்தப்படுகின்ற போது வாசுவின் நிலையை அழகாக படம் பிடித்துக்காட்டியுள்ளீர்கள்.

யாமினி ஒரு அழகான கதாப்பாத்திரம். அவள் கெடுக்கப்பட்டதற்கான காரணம் அழுத்தமாக இல்லை என்பது என்னுடைய எண்ணம்.

கிருஷ்ணா, பவதாரணி தம்பதியர் குணநலன்கள் மிகச்சிறப்பு. வாசு, யாமினி இருவருடமும் அவர்கள் காட்டும் பாசம் அலாதி. அவர்கள் நிச்சயதார்த்தம் காட்சி அருமை. அப்பா நாகலிங்கம் ?

பாஸ்கர் மாமா, ருக்மணி மாமி அருமை. மாமா யாமினியை தத்தெடுக்கும் காட்சி மிக அருமை. வாசு மீது கொண்டுள்ள மாமாவின் அன்பு அலாதி. மாமாவின் வெறுப்பேற்றும் வார்த்தைகள் அனைத்தும் அருமை.

பத்மினி பாத்திரம் அழகு.

ஆகாஷ், ஷாலினி கொஞ்சம் இடங்களில் வந்தாலும் அற்புதமாக செயல்பட்டார்கள. குறிப்பாக வளைகாப்பு காட்சி கண்ணீர் வரவழைத்தது.

ப்யூட்டியும் ஸ்வீட்டியும் அருமை.

பல இடங்களில் கண்ணீர் வரவழைத்தது என்பது உண்மை. நிறைய முடிச்சிகள் ஆனால் அனைத்தையும் அழகாக அவிழ்திருக்கிறீர்கள். யாமினியை கற்பழித்ததற்கான காரணம் இன்னும் வலுவாக இருந்திருந்தால் மிக நன்றாக அமைந்திருக்கும் என்பது என்னுடைய கருத்து.

அழகான கதை
ஆழமான கருத்து
‘இது இருளல்ல’ நாவல்
ஈர்க்கின்ற படைப்பு
உணர்ச்சிகளை
உணர்வுகளை
உள்ளடக்கிய கதை.
மொத்தத்தில் அருமையான நாவல்.

போட்டியிலே வெற்றி பெற வாழ்த்துக்கள்.

அன்புடன்

சகோதரன்
ஜெயக்குமார் சுந்தரம்
 




Last edited:

Annapurani Dhandapani

மண்டலாதிபதி
Joined
Jan 31, 2018
Messages
346
Reaction score
3,223
Location
Chennai
சகோதரிக்கு

பல இடையூறுகளின் மத்தியில் தொடர்ந்து படிக்கின்ற உத்வேகத்தை தந்தது தங்கள் கதையின் நளினம் . பாராட்டுக்கள்.

கடத்தப்பட்டு கற்பிழந்த பெண்களுக்கு வாழ்வழிக்கும் கதையை அழகாக நியாயப்படுத்தியிருக்கிறீர்கள். அது ஒரு விபத்து என்பது கதையில் அழகாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாசுவின் பாத்திரம் நன்றாக சித்தரிக்கப்பட்டுள்ளது. தான் குப்பையிலிருந்து எடுக்கப்பட்டவன் என்று வெளிப்படுத்தப்படுகின்ற போது வாசுவின் நிலையை அழகாக படம் பிடித்துக்காட்டியுள்ளீர்கள்.

யாமினி ஒரு அழகான கதாப்பாத்திரம். அவள் கெடுக்கப்பட்டதற்கான காரணம் அழுத்தமாக இல்லை என்பது என்னுடைய எண்ணம்.

கிருஷ்ணா, பவதாரணி தம்பதியர் குணநலன்கள் மிகச்சிறப்பு. வாசு, யாமினி இருவருடமும் அவர்கள் காட்டும் பாசம் அலாதி. அவர்கள் நிச்சயதார்த்தம் காட்சி அருமை. அப்பா நாகலிங்கம் ?

பாஸ்கர் மாமா, ருக்மணி மாமி அருமை. மாமா யாமினியை தத்தெடுக்கும் காட்சி மிக அருமை. வாசு மீது கொண்டுள்ள மாமாவின் அன்பு அலாதி. மாமாவின் வெறுப்பேற்றும் வார்த்தைகள் அனைத்தும் அருமை.

பத்மினி பாத்திரம் அழகு.

ஆகாஷ், ஷாலினி கொஞ்சம் இடங்களில் வந்தாலும் அற்புதமாக செயல்பட்டார்கள. குறிப்பாக வளைகாப்பு காட்சி கண்ணீர் வரவழைத்தது.

ப்யூட்டியும் ஸ்வீட்டியும் அருமை.

பல இடங்களில் கண்ணீர் வரவழைத்தது என்பது உண்மை. நிறைய முடிச்சிகள் ஆனால் அனைத்தையும் அழகாக அவிழ்திருக்கிறீர்கள். யாமினியை கற்பழித்ததற்கான காரணம் இன்னும் வலுவாக இருந்திருந்தால் மிக நன்றாக அமைந்திருக்கும் என்பது என்னுடைய கருத்து.

அழகான கதை
ஆழமான கருத்து
‘இது இருளல்ல’ நாவல்
ஈர்க்கின்ற படைப்பு
உணர்ச்சிகளை
உணர்வுகளை
உள்ளடக்கிய கதை.
மொத்தத்தில் அருமையான நாவல்.

போட்டியிலே வெற்றி பெற வாழ்த்துக்கள்.

அன்புடன்

சகோதரன்
ஜெயக்குமார் சுந்தரம்
அன்பு சகோதரருக்கு,

பல இடையூறுகளுக்கு மத்தியில் என் கதையைப் படித்து தங்களின் மேலான கருத்துக்களை பதிவிட்டமைக்கு என் மனமார்ந்த நன்றிகள்!

தங்கள் வாழ்த்துக்களுக்கும் என் நன்றிகள்!
 




Rani95

புதிய முகம்
Joined
Feb 24, 2018
Messages
3
Reaction score
4
Location
Chennai
வாசு காரை செலுத்தியபடியே,

"அவன் யார்னு தெரியுதாப்பா?" என்று தன் தந்தையிடம் கேட்க,

"யாரு! இப்ப உன்கிட்ட பேசினானே? அவனா? எங்கியோ பாத்த ஞாபகம்... தெரீலப்பா...." கிருஷ்ணா சொன்னார்!

"என் க்ளாஸ் மேட்.... சுந்தர்.... என் கூடவே எல்லா டீச்சர்ட்டயும் பனிஷ்மென்ட் வாங்குவானே...."

"ஓ.... எஸ்... ஞாபகம் வருது...."

"இப்ப என்ன பண்றான் தெரியுமா? ஹெச் டீ எஃப் சி பேங்க்ல வேல பண்றானாம்.... தேனாம்பேட் ப்ராஞ்ச்.... அநேகமா ப்ராஞ்ச் மேனேஜர் ப்ரமோஷன் வரும்னு எதிர் பாக்கறானாம்...."

"சூப்பர் வாசு.... க்ரேட்!"

"தெரியுமா யாமினி.... அவனும் என்ன மாதிரிதான்... சரியான வாலு.... ரொம்ப மோசமா படிப்பான்.... டென்த்ல அண்ணன் ஃபெயில் வேற.... இப்ப பாரு எப்டி இருக்கான்னு...."

தன்னருகே அமர்ந்திருந்த தன் மனைவியிடம் கூறினான்!

"கேக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்குங்க...." தன் மடியிலிருந்த குழந்தை பத்மினியின் தலையைக் கோதியபடியே கூறினாள் யாமினி!

தர்ஷிணி சமத்தாக பவதாரிணியின் கையிலிருந்தபடி தன் அத்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாள்!

"நானு... இவன் எல்லாம் உருப்படவே மாட்டோம்னு எங்க டீச்சர் எப்பவும் திட்டுவாங்க..." என்று சொல்லி சிரித்தான்.

"நாங்கல்லாம் உருப்பட்டுட்டோம்! ஆனா நல்ல குடும்பத்தில பொறந்து நல்லா படிச்சி கோல்ட் மெடல் வாங்கின ஒருத்தனுக்கு வீட்ல இருக்கறவங்க தப்பு தப்பா சொல்லிக் குடுத்ததால, படிச்ச படிப்புக்கு தகுந்த மாதிரி நடந்துக்காம அறிவு கெட்டுப் போய், என்னப் பழி வாங்கறேன்னு தன் வாழ்க்கைலயே மண்ணள்ளிப் போட்டுகிட்டான்.... எல்லா இடத்திலயும் ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்கினவனால ஒரு சின்ன இன்டர்வியூல ஏற்பட்ட தோல்விய தாங்க முடியல.... ஒரு சின்ன ஏமாற்றத்த தாங்கிக்க முடியல.... இந்த வேலை இல்லன்னா வேற வேலை கெடைக்கும்னு யோசிக்கத் தெரியல.... இவனெல்லாம் என்னதான் படிச்சானோ...." என்றான் வாசு!

பேசிக் கொண்டிருந்த தன் தந்தையை தன் தாயின் மடியிலிருந்தபடி இழுத்தாள் குழந்தை பத்மினி!

"அடி என் செல்லகுட்டி.... இருடீ கண்ணம்மா.... அப்பா வண்டி ஓட்டறேன்.... அப்றமா அப்பா கிட்ட வருவீங்களாம்...."

பத்மினி கன்னம் குழிய சிரித்துக் கொண்டே தன் தந்தையிடம் தாவ முயன்றது. இவள் சிரித்ததைப் பார்த்த தர்ஷிணியும் சிரித்தாள்!

"இரும்மா கண்ணா.... அப்பா வண்டி ஓட்ட வேண்டாமா.... சமத்துல்ல...." கொஞ்சிக் கொண்டே யாமினி குழந்தையை சமாதானப் படுத்த முயல...

பத்மினி தன் தந்தையிடம் செல்ல வேண்டும் என்று சிணுங்கினாள்.

எல்லாரும் அவளை வாங்கி தன்னுடன் வைத்துக் கொண்டு சமாதானம் செய்ய முயன்றனர்! ஆனால் யாரிடமும் சமாதானமடையாமல் பத்மினி வாசுவிடம் செல்ல வேண்டும் என்று அழத் தொடங்கினாள்!

"வாசு! வண்டிய ஓரமா நிறுத்திட்டு குழந்தைய நீ வாங்கிக்கோப்பா.... என்னன்னு தெரீல... அவ உங்கிட்ட வரணும்னு அடம் பிடிக்கறா.... கொஞ்ச நேரம் அவள நீ வெச்சுக்கோ..." என்றார் கிருஷ்ணா!

அவர் சொல்படி வாசு வண்டியை ஓரம் கட்டினான்! பத்மினியை தூக்கிக் கொண்டு காரை விட்டு வெளியில் வந்து அருகிலிருந்த கொன்றை மரத்தடியின் நிழலில் நின்று குழந்தைக்கு வேடிக்கை காட்டினான்!

அவன் வெளியே வரவும், கிருஷ்ணாவும் பாஸ்கர் மாமாவும் வண்டியை விட்டு இறங்க, தர்ஷிணி தன் தாத்தாவிடம் தாவியது!

ஐயோ.... தப்பு பண்ணிட்டேன்.... தப்பு பண்ணிட்டேன்.... என்ன மன்னிச்சிடு... ஏ.... பொண்ணு.... உன் சாமி கிட்ட சொல்லி எனக்கு சாவு வர வெய்.... ஏ.... பொண்ணு.... நீ... எங்க இருக்க.... உன் சாமிய கூப்பிடு.... எதோ மந்திரம்லாம் சொன்னியே.... அத சொல்லி உன் சாமிய கூப்பிடு.... எனக்கு சாவு வர வெய்....

அந்த அழுக்குப் பிச்சைக்காரன் அழுதபடி புலம்பிக் கொண்டேயிருந்தான்! வெட்ட வெளியில் அந்த நண்பகல் வேளையில் அவன் கண்களுக்கு இருட்டைத் தவிர வேறு எதுவும் தெரியவில்லை!

இது வெறும் இருளல்ல! அவனுடைய பாவ மூட்டை!

குழந்தை பத்மினி தன் தந்தை வாசுவைப் பார்த்துப் பார்த்து கன்னம் குழியச் சிரித்தது!

"என்ன என் கண்மணிக்கு.... இன்னிக்கு இவ்ளோ சந்தோஷம்.... என்னடா செல்லம்.... ஒரே சிரிப்பா இருக்கு..... அப்பா கிட்ட அப்டி என்ன ஸ்பெஷலா கண்டு பிடிச்சீங்க.... புதுசா பாக்கற மாதிரி... இப்டி சிரிக்கறீங்க...." வாசு தன்னைப் பார்த்துப் பார்த்து சிரிக்கும் குழந்தையை கொஞ்சினான்!

பத்மினி சிரிப்பதைக் கண்ட தர்ஷிணியும் சிரிக்க, குழந்தைகளின் குதூகலத்தில் மற்றவர்களும் சிரித்தனர்!

பத்மினிமும் வாசுவும் சிரிப்பதைப் பார்த்த பாஸ்கர் மாமாவுக்கு கண்கள் குளம் கட்டியது!

ஏதேச்சையாக மாமாவைப் பார்த்த வாசு, குழந்தையை மாமாவிடம் நீட்ட, அவர் குழந்தையை வாங்கிக் கொண்டு கொஞ்சினார்!

குழந்தை பத்மினி மாமாவின் கன்னத்தில் தன் வாயை வைத்து எச்சில் செய்ய, அந்த நொடியில் அவருடைய நெஞ்சிலிருந்த அத்தனை சோகமும் களையப்பட்டு விட்டது போல உணர்ந்தார்!

திரும்பவும் பத்மினி தன் தந்தையிடம் தாவிக் கொண்டு தன் சிரிப்பைத் தொடர்ந்தாள்!

"வாசு! போதும் வாசு! குழந்தைக்கு கண் பட்டுடப் போகுது! ஒரு அதட்டுப் போடுங்க!" என்றாள் யாமினி!

"என் செல்லம்... இவளப் போய் அதட்டுவேனா.... கேட்டியா கண்ணு... உங்கம்மா... உன்ன அதட்டச் சொல்லி எங்கிட்டயே சொல்றா.... இவள என்ன பண்லாம்.... நீ சொல்லுடா செல்லம்....." என்று குழந்தையிடம் முறையிட்டான் வாசு!

இப்போது பத்மினி தன் தாயிடம் தாவிக் கொண்டு தன் விளையாட்டைத் தொடர்ந்தாள்!

உண்மைதான்! இவர்கள் இப்போதுதான் சந்தோஷமாக வாழ ஆரம்பித்திருக்கிறார்கள்! இவர்கள் மீது யாரும் கண் வைத்துவிடக் கூடாது! என்று நினைத்தபடி தன் சட்டைப் பையிலிருந்து கபாலீஸ்வரர் கோவிலில் கொடுத்த விபூதிப் பிரசாதத்தை எடுத்து எல்லாருக்கும் வைத்துவிட்டார் பாஸ்கர் மாமா!

அப்போது அந்த கபாலீஸ்வரரின் அருளாசியாய், வாசுவின் குடும்பத்தினர் மீது கொன்றை மரத்திலிருந்து கொன்றைப் பூக்கள் பூமாரி பொழிந்தது!



♥♥♥♥♥♥♥

Super story mam... Epilogue superr..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top