• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Irandalla Ondru - Episode 14

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,902
Reaction score
46,328
Location
Earth
Dear Friends,
Thank you so much friends for your likes and comments... :):)

இரண்டல்ல ஒன்று – 14

நந்தினியின் கேள்வியில் அவளை சடாரென்று திரும்பிப் பார்த்தான் சந்துரு.

என்ன சொல்வதென்று தெரியாமல் ராம் பிரசாத், கோமதி இருவரும் முழிக்க, "உங்க அக்கா வருவாங்க... தேவா நிச்சயம் கூட்டிட்டு வருவான்.." என்று அழுத்தமாகக் கூறினான் சந்துரு.

ராமப்ரசாத் நந்தினி கோவில் பிரகாரத்தை அமைதியாகச் சுற்றினர்.

மனநிலை... மாறுவது தானே மனநிலை... நந்தினியின் மனநிலையிலும் சில மாற்றங்கள்...

அழுவது நந்தினிக்குப் பிடிக்காத செயல். எந்தச் சூழ்நிலையிலும் கண்ணீர் வந்து விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள் நந்தினி. ஆனால், வாசுதேவன் கோபமாக சென்றதும், பவித்ரா சொல்லாமல் சென்றதும் நந்தினியைச் சிந்தனையில் ஆழ்த்தியது. 'நான் நினைத்தது என்ன? இங்கு நடப்பது என்ன?' என்று யோசித்தாள் நந்தினி.

"எதற்காக இந்தத் திருமணத்தை இவர்கள் நடத்தியிருக்க வேண்டும்? பாதிப்பு எனக்கும் அக்காவுக்கும் தானே?' போன்ற எண்ணங்கள் நந்தினிக்கு மேலோங்கியது.

'இந்தக் கேள்வியை கேட்டு விட வேண்டும்?' என்று அழுத்தம் நந்தினியின் மனதில் எழுந்தது.

ஆனால், நந்தினியின் அறிவு அவளை நிதானம் காக்க வைத்து… எச்சரிக்கை செய்தது.

'நந்தினி நீ இப்படி ஒரு கேள்வியை கேட்டு இவர்களைக் குற்றவாளி கூண்டில் நிறுத்த நொடிகள் போதும். ஆனால், அவர்கள் மனம்? இந்தக் கேள்வியால் பிரசாத்துக்கு ஏற்படும் அவமானம்...'

நந்தினி மௌனம் காத்தாள்.

பல பெண்களின் மௌனத்திற்குப் பின்னும் விட்டுக்கொடுத்தலுக்குப் பின்னும் பற்பல காரணங்கள் இருக்கும். அவளை விவரம் இல்லாதவள் என்றோ ஏமாளி என்றோ நினைப்பர்வர்களை என்னவென்று சொல்வது?

கோமதி, சந்திரசேகர் தூண் அருகே அமர்ந்திருக்க, 'கூடா நட்பு கேடாய் முடியும்...' என்று வாசுதேவன் கூறிய வார்த்தைகள் சந்துருவின் காதில் மீண்டும் மீண்டும் ஒலித்தது.

சந்துருவின் கை முஷ்டி இறுகி, அவன் கோபம் கட்டுக்கடங்காமல் ஏறியது.

'யார் நட்பு யாருக்கு கேடு? நான் இவனுக்கு கேடு நினைப்பேனா? நான் கேடு நினைத்தால் இவன் என்ன ஆவான்? என்று தேவாவுக்குப் புரிய வேண்டும்... இன்று தேவா சொன்ன வார்த்தைக்கு அவன் வருத்தப்படணும்...' என்று கோபத்தில் தாறுமாறாக சிந்தித்துக் கொண்டிருந்தான் சந்திரசேகர்.

அவன் சிந்தனையை கலைக்கும் விதமாக, "நாம தேவை இல்லாத வேலையை பார்த்துட்டோமோ?" என்று கோமதி சந்துருவிடம் சற்று அச்சத்தோடு கேட்க, "நீ தானே இந்தக் கல்யாணம் நடக்கணுமுன்னு ஆசைப் பட்ட... இப்ப இப்படி கேட்டா என்ன அர்த்தம்?" என்று கடித்தான் சந்துரு.

கணவனின் கோபம் கோமதியைச் சீண்ட, "என்னவோ நான் மட்டுமே இந்தக் கல்யாணத்தை பேசி முடிச்ச மாதிரி பேசுறீங்க... உங்க சம்மதம் இல்லாமலா நடந்துச்சு?" என்று தன் பயத்தை மறந்தவளாகக் கோபமாக கேட்டாள் கோமதி.

மனைவி எகிறச் சற்று அமைதியானான் சந்துரு.

தன் கணவன் அமைதியாக இருக்கவும், "நீங்க இரெண்டு பேர் பேசுற சந்தர்ப்பமே இல்லை... நேரில் பார்த்து பேசும் சந்தர்ப்பம் கிடைத்தால் எல்லாம் சரி ஆகிருமுன்னு நினச்சேன்..." என்று கோமதி யோசனையாகக் கூற, "நானும் இதை தான் நினச்சேன்... நடந்தது நடந்து போச்சு... ஒரே குடும்பமுன்னு ஆகிட்டா, என்னைத் தவிர்க்க முடியாதுன்னு யோசிச்சேன்... ஆனால் இன்னும் தேவா முறுக்குகிட்டு நிக்கறான்..." என்று விளக்கம் அளிப்பது போல் ஆரம்பித்து, கோபமாக முடித்தான் சந்துரு.

"நான் பண்ணது தப்பு தென்... நான் இல்லைன்னு சொல்லல... ஆனால், எத்தனை வருஷம் ஆகுது... மறக்கக் கூடாதா?" என்று தன்னைக்கு தானே புலம்பிக்கொள்வது போல், தன் மனைவியிடம் சந்துரு புலம்பக் கோமதி யோசனையாக தன் கணவனைப் பார்த்தாள்.

ஒரு நொடியில், தன்னிலை திரும்பியவனாக, "அப்படி என்ன பெரிய தப்பு பண்ணிட்டேன்... இவன் வீட்டில பவித்ரா வாழறதை விட, சுபா சந்தோஷமா தான் இருக்கா... இதை மூஞ்சிக்கு நேரா சொன்னா, தேவா தாங்குவானா?" என்று சந்துரு காட்டமாக கேட்க, ராம் பிரசாத்,நந்தினி இருவரும் இவர்கள் அருகே வந்து அமர்வதற்கும் நேரம் சரியாக இருந்தது.

நந்தினி அமைதியாக இருக்க, "அண்ணா வீட்டுக்குப் போலாமா?" என்று கேட்டான் ராம்.

சந்துரு சம்மதமாக தலை அசைக்க, இவர்கள் வீட்டை நோக்கிப் பயணித்தனர்.

இதற்கிடையில் கோமதி சுபாவிடம் விஷயத்தைத் தெரிவித்திருக்க, சுபா வேகமாக வீட்டை வந்தடைந்தாள். சுபாவின் பதட்டத்தில், உத்தமி ஒரு அளவிற்கு விஷயத்தைக் கணித்திருந்தார்.

வாசுதேவன் கோபமாக வீட்டிற்குள் நுழைய, பவித்ரா மௌனமாக உள்ளே நுழைந்தாள்.

வாசுதேவன் எதுவும் பேசாமல், அங்கிருந்த சாய்வு நாற்காலியில் தன் கால்களைக் குறுக்கே போட்டு, தன் இரு கைவிரல்களையும் ஒன்றுக்குள் ஒன்று கோர்த்து அமர்ந்தான். அவன் முகத்தில் சிந்தனை ரேகைகள்.

பவித்ராவின் முகம் எண்ணிலடங்கா வேதனையைக் காட்டியது.

"இவ சொல் பேச்சு கேட்டு இவ பின்னாடி போனா... உனக்கு அவமானம் தான் மிஞ்சும்..." என்று உத்தமி பவித்ராவை பார்த்தபடி கழுத்தை நொடிக்க, "அம்மா..." என்று கர்ஜித்தான் வாசுதேவன்.

"உம் பொஞ்சாதியை நான் ஒண்ணும் சொல்லலை... அவளுக்காகத் தென் சொல்லுதேன்... இந்தக் கல்யாணம் நடந்தா அவ தா வருத்தப்படுவான்னு சொன்னேன்... நீ கேட்கலை... பாரு... இப்ப மருமக முகம் எப்படி வாடி கிடக்குத்துன்னு... இன்னும் என்னென்ன காத்திருக்கோ?" என்று உத்தமி வருத்தமாகக் கூற, வாசுதேவன் உத்தமி சொல்வது சரியென்று ஆமோதித்தான்.

பவித்ரா செய்வதறியாமலும் என்ன பேசுவதென்று புரியாமலும் தன் கைகளைப் பிசைந்தாள்.

"சரி விடு வாசு... கல்யாணம் முடிஞ்சிருச்சு... இனி நமக்கும் அவுகளுக்கும் என்ன? எல்லாரும் போய் அவுக சோலிய பாருங்க..." என்று உத்தமி கூற, பவித்ரா தன் மாமியாரை அதிர்ச்சியோடு பார்த்தாள்.

வாசுதேவன் மேலும் பேசுவதற்கு எதுவும் இல்லை என்பது போல் சாய்வு நாற்காலில் சாய்ந்து , கண்களை இறுக மூட, சுபா வாசுதேவனின் கால்களில் விழுந்தாள்.

"அண்ணா... என்னை மன்னிக்கவே கூடாதா?" என்று தழுதழுப்பான குரலில் சுபா கேட்டாள்.

"சுபா எந்திரி... நான் உன்னை மன்னித்துப் பல வருஷங்கள் ஆகுது..." என்று அழுத்தமாகக் கூறினான் வாசுதேவன்.

சுபா வாசுதேவனின் காலடியில் அமர்ந்து, மறுப்பாகத் தலை அசைத்தாள்.

"நீ என்னை மன்னிக்கவே இல்லைனு எனக்குத் தெரியும் அண்ணா... உன் தங்கையா பிறந்த பாசத்துக்காக ஏத்துக்கிட்ட..." என்று கண்ணீரோடு கூறினாள் சுபா.

"சுபா.. ஏன் இந்தத் தேவை இல்லாத பேச்சு... நான் தான் உன்னை மன்னிச்சிட்டேன்னு சொல்றேன்ல..." என்று வாசுதேவன் கர்ஜிக்க, "நீ என்னை மன்னிச்சிருந்தா, சந்துரு அண்ணா கிட்ட பேசிருப்ப..." என்று கம்மலான குரலில் கூறினாள் சுபா.

"என்னால் அவனை ஒரு நாளும் மன்னிக்க முடியாது. ஏன் இப்ப தேவை இல்லாம பழைய கதை பேசுற..." என்று வாசுதேவன் சுபாவின் முகம் பார்த்து கேட்க, அவன் காலடியிலிருந்து வாசுதேவனின் முகம் பார்த்து, "நீ இன்னும் சந்துரு அண்ணா மேல கோபமா இருக்கும் பொழுது, அது எப்படி அண்ணா பழைய கதை ஆகும்?" என்று சுபா விடாப்பிடியாகக் கேட்டாள்.

"ஏய்... உன்னை வாசு சொன்ன வார்த்தைக்காக உள்ளே சேர்த்தேன்... இல்லனா நீ பண்ண காரியத்துக்கு அன்னைக்கே உன்னை தலை முழுக்கிருப்பேன்... எல்லாம் அவனால... இன்னும் அவன் பெயரை சொன்ன இந்த வீட்டுப் பக்கம் வரக்கூடாதுன்னு சொல்லிப்புடுவேன்..." என்று உத்தமி சுபாவை அதட்ட, சுபா வாசுதேவனின் முகத்தைப் பரிதாபமாக பார்த்தாள்.

"அண்ணா... நீ என் கிட்ட பழைய மாதிரி பேசுறதில்லை... நான் பண்ணது தப்பு தான்... பெரிய தப்பு தான்... மன்னிக்க முடியாத தப்பு தான்... உன்னை என்கிட்டே பழைய மாதிரி பேசுன்னு நான் சொல்ல மாட்டேன்... நீ என்னை ஏத்துக்கிட்டதே பெரிய விஷயம்... ஆனால், உன் கோபம் இல்லாத வருத்தம் இல்லாத முழு அன்புக்காக நான் ஏங்கறது நிஜம் அண்ணா..." என்று சுபா அவன் காலடியில் அமர்ந்து கண்ணீர் உகுக்க, சுபாவின் கண்ணீர் வாசுதேவனின் பெருவிரலை தொட்டது.

சுபாவின் கண்ணீர் ஸ்பரிசம் வாசுதேவனின் உடலை நடுங்கச் செய்தது. தங்கை செய்த தவறை மறக்கவும் முடியாமல், மன்னிக்கவும் முடியாமல் அவன் நெஞ்சம் ஊமையை அழுதது.

உடல் நடுங்க வாசுதேவன் அமைதியாக அமர்ந்திருக்க, "வாழ்க்கையில் அம்மா, அப்பாவை விட, கூட பிறந்தவங்க ரொமப் முக்கியம் அண்ணா... நம்ம காலத்துக்கும் கூட வரது அவங்க தான அண்ணா... சந்தோஷத்தை பகிர்ந்துக்க இல்லைனாலும்... துக்கத்தை பகிர்ந்துக்க அவுகளால மட்டும் தான் அண்ணா முடியும்..." என்று சுபா மேலும் பேச, அங்கு மௌனம் நிலவியது.

"நான் என் பழைய வாசு அண்ணாவை கேட்கலை... ஆனால், பவித்ரா மதினிக்கு அவங்க தங்கச்சி வேணும் அண்ணா... அவுகளை பிரிச்ச பாவமும் என் தலையில் விழ வேண்டாம்... நீ அவகளை கூட்டிட்டு சந்துரு அண்ணா வீட்டுக்குப் போ அண்ணா... எல்லா விஷேஷத்திலயும் கலந்துக்கோ... சந்துரு அண்ணா கிட்ட பேசு... பேசாமல் இரு... அது உன் இஷ்டம்..." என்று சுபா அத்தனை வருத்தத்திலும் பிடிவாதமாக கூற, தன் மனைவியின் சோகம் அப்பிய முகத்தை ஆராயும் விதமாகப் பார்த்தான் வாசுதேவன்.

"சுபா..." என்று அங்கு ஓங்கி ஒலித்தது பவித்ராவின் குரல்.

அங்கு நடப்பத்தை மௌனமாக பார்த்துக் கொண்டிருந்த மஹாதேவனும், சுபாவை கோபமாக பார்த்துக் கொண்டிருந்த உத்தமியும் பவித்ராவை அதிர்ச்சியாகப் பார்த்தனர்.

"நீ அமைதியா இரு... அத்தான் அவுகளுக்கு பிடிக்காத இடத்துக்கு வரவும் வேண்டாம்... என்னை அங்கு கூட்டிட்டு போகவும் வேண்டாம்.. இது வரைக்கும் பட்டதே போதும்... அவுக அவுக வேலையை எல்லாரும் பாருங்க..." என்று கூறி அவர்கள் அறைக்குள் நுழைந்தாள் பவித்ரா.

'இந்த மதினியை....' என்று சுபா பவித்ராவை மனதிற்குள் திட்டியபடியே பார்க்க, பவித்ராவை வாஞ்சையோடு பார்த்தான் வாசுதேவன்.

வாசுதேவனின் பார்வை மாற்றத்தைக் கண்டுகொண்ட உத்தமி, 'அட சாகசக்காரி... எம் பொண்ணு அவ்வளவு அழுது இறங்காத எம் மவனை... ஒரு வார்த்தையிலே சரிச்சிப்புட்டாளே...' என்று உத்தமி எண்ணிக் கொண்டிருக்க, "பவித்ரா..." என்று அதிகாரமாக அழைத்தான் வாசுதேவன்.

சுபாவின் அன்பில், கண்ணீரில் கரைந்திருந்த வாசுதேவனின் மனம் தடுமாற்றமாய் செய்வதறியாமல் ஊசலாடிக் கொண்டிருந்தது.
 




Last edited:

akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,902
Reaction score
46,328
Location
Earth
பவித்ராவின் சொல்... ஒரு சொல்... அதை நச்சென்று நங்கூரம் பாய்ச்சியது போல் நிலை நிறுத்தி விட்டது.

"கிளம்பு... நந்தினியைப் பார்க்க… அவ வீட்டுக்குப் போவோம்..." என்று வாசுதேவன் நிதானமாகக் கூற, "இல்லை அத்தான்... வேண்டாம்... இன்னொரு நாள் போவோம்..." என்று மறுப்பாகத் தலை அசைத்தாள் பவித்ரா.

"கிளம்புன்னு நான் சொன்னா அதுக்கு மறுவார்த்தை இல்லை..." என்று வாசுதேவன் பவித்ராவை மிரட்ட, பவித்ரா அவனை மிரட்சியாகப் பார்த்தாள். மேலும் பிரச்சனை வளர்ந்துவிடுமோ என்ற அச்சம் பவித்ராவுக்கு...

'ம்.. க்கும்... நல்ல போடுதுங்க நாடகம்... அவ இஷ்டப்படி நடக்கிறதுக்கு அவளையே மிரட்டுதான்... அவனை ஆட்டி படைக்க வேண்டியது... ஆனால், அப்படியே அஞ்சுற மாதிரி என்னா நடிப்பு...' என்று எண்ணியபடி அவர்களை பார்த்துக் கொண்டிருந்தாள் உத்தமி.

பவித்ரா வாசுதேவனிடம் சம்மதமாக தலை அசைக்க, "அவுக வீட்டுக்கு போறதுக்கு, பட்டு சேலை கட்டணுமா? என்ன நகை போடணுமுண்ணு அம்மா கிட்ட கேட்டுட்டு கிளம்பு..." என்று வாசுதேவன் அதிகாரமாக கூற, "அது சரி.. சேலை... நகை... இதெல்லாம் சொல்லத்தேன் நான் இந்த வீட்டில் இருக்கேன்..." என்று யாருக்கும் கேட்காத வண்ணம் முணுமுணுத்தார் உத்தமி.

பவித்ரா கிளம்புவதற்காக உள்ளே செல்ல எத்தனிக்க, "அண்ணா..." என்று சுபா ஏதோ பேச ஆரம்பிக்க, அவளை ஆழமாகப் பார்த்தான் வாசுதேவன்.

அவன் பார்வையின் வீரியம் தங்காமல், தான் சொல்ல நினைத்ததைச் சொல்ல வந்ததைக் கூற முடியாமல் தரை பார்த்து நின்றாள் சுபா.

வாசுதேவன் எதுவும் பேசாமல் அவளை அமைதியாகப் பார்த்தான்.

சுபாவின் மௌனம் நீடிக்க, அவள் தலை கோதி, "அங்க யார் மனசும் காயப்படுற மாதிரி நான் எதுவும் பேச மாட்டேன்..." என்று வாசுதேவன் கூற, “உன்னை பத்தி எனக்குத் தெரியும் அண்ணா... அதே மாதிரி..." என்று சுபா பேச, வாசுதேவன் மறுப்பாகத் தலை அசைத்தான்.

"துரோகம்... நம்பிக்கை துரோகம்... நீ உற்பட..." என்று முணுமுணுத்து விட்டு, அவர்கள் அறைக்குள் நுழைந்தான் வாசுதேவன்.

வாசுதேவனைப் பார்த்தபடி, சுபா நின்று கொண்டிருக்க, "உங்க அண்ணன் நீ அழுததில் கரஞ்சிட்டான்னு நினைக்காத... அவன் பொஞ்சாதி முகத்தைப் பார்த்து உருகி, அவளுக்காக போறான்..." என்று உத்தமி முணுமுணுக்க, 'ம்... தெரிஞ்சி தானே இந்தக் கல்யாணத்தை நடத்தினோம்...' என்று எண்ணியவளாக, தன் தாயிடம் பதில் ஏதும் கூறாமல் புன்னகைத்தாள் சுபா.

பவித்ரா அமைதியாக அமர்ந்திருக்க, வாசுதேவன் அவள் முகம் பார்த்து தன் புருவத்தை உயர்த்த, "அத்தான்... என்னால் தான் எல்லாமே..." என்று வருத்தத்தோடு கூறினாள் பவித்ரா.

"அட... எம் பொஞ்சாதிக்கு இவ்வளவு பிரச்சனை பண்ற அளவுக்குத் தைரியம் வந்திருச்சா? அசத்தல் டீ..." என்று வாசுதேவன் சிலாகிக்க, பவித்ரா அவனைக் கோபமாக முறைத்தாள்.

"எட்டி... ஒரு நிசத்தைச் சொல்லட்டுமா... எம் பொஞ்சாதி சண்டை போட்டா, உன்னை திட்டினா கூட நான் உன்னை ரசிப்பேன்..." என்று வாசுதேவன் பாராட்ட, அவனைப் பரிதாபமாக பார்த்தாள் பவித்ரா.

"பவி... நீ என்ன பண்ணுவ? இந்த விஷயத்தில் நீ அணுவளவும் பாதிக்கப் பட கூடாதுன்னு தென் நான் நினைப்பேன்... கிளம்பு... நந்தினி காத்துகிட்டு இருப்பா..." என்று வாசுதேவன் தன் வருத்தம், சோகம், குழப்பம் அனைத்தையும் தன் மனதிற்குள் மறைத்துக் கொண்டு கூற, வாசுதேவனை தன் கண்களை விரித்துக் காதல் பொங்கப் பார்த்தாள் பவித்ரா.

"எட்டி... என்ன பார்வை இது? இப்படி பாத்து வைக்க வேண்டியது... அப்புறம் நாம புது புருஷன் பொண்டாட்டி இல்லைன்னு அம்மா சொன்னாங்க... ஆத்தா சொன்னாங்கன்னு சொல்ல வேண்டியது..." என்று வாசுதேவன் செல்லமாக மிரட்ட, பவித்ராவின் முகம் செந்தாமரையாய் மலர்ந்தது.

'கிளம்பு...' என்று தன் கண்களால் வாசுதேவன் செய்கை காட்ட, பவித்ரா சிட்டாக கிளம்பினாள்.

அவர்கள் ஜீப், சந்துருவின் வீட்டின் முன் நிற்க, அத்தனை நேரம் சந்துரு கூறியதை நம்பாத கோமதி, ராம் பிரசாத் இருவரும் சந்துருவை ஆச்சரியமாகப் பார்க்க, 'ஐயா யாரு? எங்க கணிப்பு எப்படி?' என்று தன் சட்டை காலரைத் தூக்கி விட்டபடி அவர்களைப் பெருமையாக பார்த்தான் சந்துரு.

"வாசு வாப்பா..." என்று அவன் கன்னம் தொட்டு திருஷ்டி கழித்து, பார்வதி அவனை உள்ளே அழைக்க, சிவசைலம் வாசுவைத் தோளோடு அணைத்து உள்ளே அழைத்தார்.

"அண்ணா வாங்க..." என்று ராம் பிரசாத் வாசுதேவனை உணர்ச்சி பொங்க அழைக்க, " அத்தான் வாங்க... அக்கா..." என்று பவித்ராவை கட்டிக் கொண்டாள் நந்தினி.

நந்தினிக்கு ஒரு யுகம் கடந்தார் போல் பிரமை தோன்றியது.

"மாப்பிள்ளை வாங்க..." என்று செல்வி, ஆவுடையப்பன் அழைக்க அனைவருக்கும் வாசுதேவன் தன் தலை அசைப்பைப் பதிலாக கொடுத்தான்.

பல வருடங்களுக்கு முன் பேசிய வார்த்தைகள் இன்று வாசுதேவன் காதில் எதிரொலித்து... 'உனக்கும் எனக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது... உன் மூஞ்சில முழிக்க மாட்டேண்டா..' என்று தான் அன்று கூறிய வார்த்தைகளை இன்று கூறியது போல் உணர்ந்தான் வாசுதேவன். வாசுதேவன் தன் பாதங்களை சந்துருவின் வீட்டுக்குள் வைக்க எத்தனிக்க, வாசுதேவனின் உடல் கோபத்தால் இறுகியது. சந்துரு எதுவும் பேசாமல் வாசுதேவனை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான்.

இரண்டல்ல ஒன்று இணையாக பயணிக்கும்…
 




Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,504
Reaction score
29,240
Age
59
Location
Coimbatore
Hiii naa first tuuuuu... ????..
Chitrama.. ???..
காவ்யா பெரியவங்க சொன்னா கேட்டுக்கனும் ஆனால் சொன்ன பேச்சு கேட்கறதில்லை காவ்யாம்மா நான் நேரில் வந்து பிச்சு பிச்சு
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
காவ்யா பெரியவங்க சொன்னா கேட்டுக்கனும் ஆனால் சொன்ன பேச்சு கேட்கறதில்லை காவ்யாம்மா நான் நேரில் வந்து பிச்சு பிச்சு
Waiting chitrama.. ???????
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
Nice update Akila... வாசல் வரைக்கும் வந்தாச்சுல்ல உள்ள போய் உங்க கோபத்தை காட்டலாம் வாசு சார்.. வாசப்படில வைச்சு முறுக்கிக்கல்லாம் கூடாது...
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
Happadi sunda varala.. ???.. naan kooda sanda vanthu intha sunday atha ninaichey poyirumo nu payanthuten.. shappaaaaa..

Enna thaan kaa pirachanai.. oralavu guess panna mudiyuthu.. correct taa thappa nu teriyalaye.. subha love pannunaala.. atha vaasu kitta sollama santhuru kita sollirukaala.. avan kalayanam panni vachitaana... En thangachi un thangachi nu sanda vanthurucha.. ???.. ithaan enaku terinchathu..

Vaasu konjam konjama score panraan.. paaapom.. thideernu anniyan maathiri maarurathaala tak nu paarattida mudiyaathu.. full nambikkai varattum avan mela..

Ooiii maamiyaare.. yaaru saagasam panra.. nee pannuva un magan kitta.. athukku ellarum unna maathiri irupaangala.. kedi maami.. ???..

Nandhu poruma.. poruma.. neenga sonnathu correct kaa.. enga ammavum sanda venaam pirachanai venaam nu ellara pathiyum terinchey teriyaatha maathiri irupaanga.. avangalukku per vivaram theriyaathava thaan.. but she is clever.. over raa pannuna nanthini maathiri point point taa kettu vaaya adaichiruvaanga.. appuram enna yaarum ethuvum solla mudiyaathu.. nandhini ooda puthisaalithanam enga amma va niyaabaga paduthuthu.. ????????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top