• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Irandalla Ondru Episode 15

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,900
Reaction score
46,305
Location
Earth
Dear Friends,
Thank you so much for your likes and comments. :):):)

இரண்டல்ல ஒன்று – 15

உணர்ச்சி பிழம்புகளால் வாசுதேவன் தடுமாறிக் கொண்டிருக்க, "அவுகளை... வான்னு கூப்பிடுங்களேன்..." என்று சந்துருவின் காதில் முணுமுணுத்தாள் கோமதி.

"தேவா எனக்காக வரலை... அவன் மச்சினிச்சியைப் பாக்க வந்திருக்கான்... அவன் பொஞ்சாதி மனசு வருத்தப்படக்கூடாதுன்னு வந்திருக்கான்..." என்று சந்துரு கூற, 'இவுகளுக்கு பிரச்சனையை முடிக்கும் எண்ணம் இருக்கா இல்லியானே தெரியலியே...' என்ற எண்ணத்தோடு சந்துருவை யோசனையாகப் பார்த்தாள் கோமதி.

தன் மனைவியின் பார்வைக்கெல்லாம் அசறுவேனா, என்பது போல் சந்துரு வாசுதேவனை பார்த்துக் கொண்டிருந்தான்.

வாசுதேவன், தன் என்ன ஓட்டத்தை ஆழ் மனதில் புதைத்துவிட்டு அமைதியாக வீட்டிற்குள் சென்றான்.

கோமதி அனைவருக்கும் பர்பி, மிச்சர் கொடுக்க... சந்துரு கோமதியிடம், "தேவாவுக்கு லட்டு கொண்டு வா... அவனுக்கு பர்பி பிடிக்காது." என்று அவளுக்கு மட்டும் கேட்குமாறு கூறினான்.

ஆனால், சந்துருவின் உதட்டசைவில் அவன் கூறியதை புரிந்து கொண்ட வாசுதேவன், "எனக்கு எதுவும் வேணாம்..." என்று கோமதியிடம் மறுப்பு தெரிவித்தான்.

சந்துருவின் மொத்த குடும்பமும் வாசுதேவனைக் கவனிக்க, பவித்ராவின் குடும்பம் தீவிரமாக நந்தினியிடம் பேசி கொண்டிருந்தனர்.

அனைவரும் பேசிக் கொண்டிருக்க, வாசுதேவன் யாரிடமும் பேசாமல் அமைதியாக அனைவரையும் கண்காணித்துக் கொண்டிருந்தான்.

வாசுதேவனின் ஒதுக்கம், சந்துருவின் குடும்பத்திற்கு மட்டுமே தெளிவாக தெரிந்தது.

சந்தோஷ், அகல்யா இருவரும் விளையாடிக் கொண்டிருக்க, 'சந்தோஷ்... அதுக்குள்ள இந்த வீட்டில் நெருக்கமா பழகிட்டானே...' என்ற எண்ணத்தோடு தன் மகனை பார்த்துக் கொண்டிருந்தான்.

சிறிது நேரத்திற்குப் பின், நந்தினியின் பெற்றோர் விடைபெறுகையில், "நாங்க மூணு நாளில் சென்னை கிளம்பறோம்..." என்று நந்தினியின் தாய் செல்வி கூற, அனைவரும் சம்மதமாக தலை அசைக்க, "என்ன அத்தை அதுக்குள்ள சென்னை கிளம்பறீக? இருந்துட்டு போலாமே..." என்று கேள்வியாய் நிறுத்தினான் வாசுதேவன்.

"இல்லை மாப்பிளை லீவு அவ்வுளவு தான்... அது தான் நந்தினிக்கு நீங்க எல்லாரும் இருக்கீங்களே..." என்று ஆவுடையப்பன் வாசுதேவனிடம் உரிமையாகக் கூற, வாசுதேவன் சிரித்த முகமாகத் தலை அசைத்தான்.

"நாங்க உங்க வீட்டுக்கும் வரோம்.. அண்ணாச்சி கிட்டயும்... மதினி கிட்டயும் சொல்லிட்டு தான் கிளம்புவோம்..." என்று செல்வி கூற, வாசுதேவன் புன்னகைத்துக் கொண்டான்.

"பவித்ரா... நாம கிளம்பலாமா?" என்று வாசுதேவன் கேட்க, "அப்பா... நாளைக்கி லீவு தானே... நான் விளையாடிட்டு நாளைக்கி வரட்டுமா..." என்று இறைஞ்சுதலாகக் கேட்டான் சந்தோஷ்.

வாசுதேவன் அவன் உயரத்திற்கு அமர்ந்து, "இல்லை டா..." என்று பொறுமையாக பேச ஆரம்பிக்க, "தேவா பெரியப்பா... ப்ளீஸ்..." என்று கெஞ்சுதலாக கேட்டாள் அகல்யா.

"அட.. பெரியப்பாவா? இதெல்லாம் உனக்கு யார் சொல்லி கொடுத்தது?" என்று அகல்யாவை அருகே அழைத்து வாசுதேவன் கேட்க, "சுபா அத்தை..." என்று பளிச்சென்று பதில் கூறினாள் அகல்யா.

அங்கு அசாத்திய அமைதி நிலவ, 'இவர்கள் என்ன செய்ய முயற்சிக்கிறார்கள்?' என்ற யோசனையில் வாசுதேவன் மூழ்க, அவன் சிந்தனையை கலைக்கும் விதமாக, "பெரியப்பா ப்ளீஸ்... சந்தோஷ் இங்க இருக்கட்டுமே... புது சித்தி இங்க தானே இருக்காங்க..." என்று சமர்த்தியசாலித்தனமாக அகல்யா நந்தினியை தன்னோடு சேர்த்துக் கொண்டாள்.

குழந்தையை ஏமாற்ற விரும்பாமல், "அத்தான் சந்தோஷ் இங்க இருக்கட்டுமே... நான் பார்த்துப்பேன்..." என்று நந்தினி அகல்யாவுக்கு ஆதரவாகப் பேச, 'இவ பாத்துப்பாளா? ஏன் நாங்கெல்லாம் பாத்துக்க மாட்டோமா?' என்று எண்ணினான் ராம் பிரசாத்.

பவித்ரா செய்வதறியாமல் தர்ம சங்கடமாக நெளிந்தாள். முதியவர்கள் அங்கு நடப்பதை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தனர்.

மேலும் பேச்சை வளர்க்க விரும்பாமல், "சந்தோஷ் இங்க இருக்கட்டும்... அவன் கேட்டா… நான் கொண்டு வந்து விடறேன்..." என்று அவர்கள் பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்தான் சந்துரு.

வாசுதேவன் எதுவும் கூறாமல் கிளம்ப, பவித்ரா சந்தோஷுக்கு பல அறிவுரைகளைக் கூறிவிட்டு கிளம்பினாள்.

பவித்ரா ஜீப்பில் எதுவும் பேசாமல் அமர்ந்திருக்க… வாசுதேவனின் எண்ணங்கள் பலவாக சுற்றிக் கொண்டிருக்க… எதுவும் பேசாமல் மௌனமாக வாசுதேவன் ஜீப்பை செலுத்திக் கொண்டிருந்தான்.

அவர்கள் உள்ளே செல்ல, "சந்தோஷ் எங்க?" என்று உத்தமி தன் கண்களால் சந்தோஷை தேடியபடியே கேட்க, "அவன் நந்தினியோடு இருக்கான்..." என்று பவித்ரா தயக்கமாக கூறினாள்.

"யாராவது புதுசா கல்யாணம் ஆனவங்க கிட்டக் குழந்தையை விட்டுவிட்டு வருவாகளா?" என்று உத்தமி பவித்ராவிடம் சிடுசிடுக்க, பவித்ரா சுபாவை கண்களால் தேடினாள்.

'அது தானே... என்கிட்டே பேச மாட்டா... ஊமைக் கோட்டான் மாதிரி இருந்துகிட்டு... அப்படியே புருஷன் காதில் ஓதி ஓதி எல்லா வேலையையும் முடிச்சிப்பா...' என்று எண்ணியவராக பவித்ராவை அளவிடும் விதமாகப் பார்த்தார்.

"பவித்ரா..." என்று வாசுதேவன் அழைக்க, அவர்கள் அறையை நோக்கி வேகமாகச் சென்றாள் பவித்ரா.

"எப்பப்பாரு... கூப்பிட்டு கூப்பிட்டு என்னதென் சொல்லுவானோ?" என்று உத்தமி முணுமுணுக்க, "நான் வேணா மருமககிட்ட கேட்டு சொல்லட்டுமா?" என்று நயாண்டி தொனியில் கேட்டபடியே அங்கு வந்து அமர்ந்தார் மஹாதேவன்.

"என்ன ரொம்ப சந்தோசமா இருக்கீக போல? எல்லாம் நீங்க ஆசை பட்டபடி நடக்குதுன்னு ரொம்ப ஆனந்த படவேண்டாம்... அவன் பொஞ்சாதிக்காக அவுக வீட்டுக்கு போயிருக்கான்... அம்புட்டுதேன்... அவன் பழசை எதையும் மறக்கலை... மறக்கவும் மாட்டான்..." என்று உத்தமி கழுத்தை நொடிக்க, 'காலம் அனைத்தையும் மாற்றும் வல்லமை படைத்தது...' என்ற எண்ணத்தோடு மஹாதேவன் சிரித்து கொண்டார்.

பவித்ரா அவர்கள் அறையில் யோசனையாக அமர்ந்திருக்க, "எட்டி, என்ன யோசனை பலமா இருக்கு... அத்தானுக்கு எதுவும் வச்சிருக்கியா?" என்று வாசுதேவன் நாற்காலியில் அமர்ந்தபடி பவித்ராவிடம் வம்பிழுத்தான்.

"ம்... ச்.." என்று பவித்ரா உச்சு கொட்ட, "ஒத்தை தங்கைக்கு ஜோரா கல்யாணத்தை முடிச்சிருக்கீக? எதுக்கு இம்புட்டு சலிப்பு?" என்று பவித்ராவின் முகம் பார்த்து கேட்டான் வாசுதேவன்.

"சந்தோஷ் இருந்துப்பானா? புது இடம் ஆச்சே? நாம அவனை விட்டுட்டு வந்திருக்க கூடாதோ?" என்று யோசனையாக கேட்டாள் பவித்ரா.

"ஆம்புளை புள்ளை டீ... அம்மா அம்மான்னு உன் பின்னாடி அலையாகக் கூடாது..." என்று வாசுதேவன் மிடுக்காகக் கூற, 'அதை நீங்க சொல்றீங்களா?' என்பது போல் ஒரு பார்வை பார்த்தாள் பவித்ரா.

அவள் பார்வையை ரசித்துச் சிரித்து, "இருந்தாலும் உனக்குக் குசும்பு அதிகந்தென்..." என்று வாசுதேவன் சிரித்தான்.

பவித்ரா எதுவும் பேசாமல் அமர்ந்திருக்க, "சந்துரு பார்த்துப்பான்..." என்று நேரடியாகக் கூறினான் வாசுதேவன்.
 




Last edited:

akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,900
Reaction score
46,305
Location
Earth
அந்தக் குரலில் இருந்ததென்ன? 'கோபம், ஏமாற்றம், இல்லை உரிமை.... அனைத்தும் கலந்திருக்கிறதோ?' என்று எண்ணினாள் பவித்ரா.

"பவித்ரா..." என்று உத்தமி அழைக்க, சமையலறை நோக்கி வேகமாக ஓடினாள் பவித்ரா.

வாசுதேவன் தன் கண்களை இறுக மூடி அமர்ந்திருந்தான். அவன் முகம் பல உணர்ச்சிகளைப் பிரதிபலித்தது.

பவித்ரா வேலையில் மூழ்க… வாசுதேவன் சிந்தனையில் மூழ்க நாம் அவர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் பண்ணை வீட்டை நோக்கிப் பயணிப்போம்.

என்ன செய்வதென்று தெரியாமல் குழந்தைகளை பார்த்தபடி பட்டாளையில் அமர்ந்திருந்தாள் நந்தினி.

நந்தினிக்கு வேலை எதுவும் கொடுக்காமல்… கோமதி, பார்வதி இன்னும் சில உறவினர்கள் வேலையில் மூழ்கி இருந்தனர். புதுப் பெண் என்ற மரியாதையும் சில நாட்கள் தானே... அதை அனுபவித்துக் கொண்டிருந்தாள் நந்தினி.

ராம் பிரசாத், 'தன் வாழ்க்கை எதை நோக்கிப் போகும்?' என்று எண்ணியவனாக அவர்கள் அறையில் முடங்கி கொண்டான்.

விளையாடிக் களைத்து போன, அகல்யா, சந்தோஷ் இருவரும் நந்தினி அருகே வந்து அமர்ந்தனர்.

"சித்தி, பொம்மை எதாவது செஞ்சி குடுங்க..." என்று சந்தோஷ் செல்லமாகக் கேட்க, அகல்யா ஆர்வமாகத் தலை அசைத்தாள்.

அப்பொழுது, அவர்கள் அறைக்குள் செல்ல… நந்தினி கதவை தட்ட, அவளைப் பார்த்த ராம் பிரசாத், "இது உன் அறையும் தான் தட்டிட்டு எல்லாம் உள்ள வர வேண்டாம்." என்று ராம் பிரசாத் அவள் முகம் பார்க்காமல் எங்கோ பார்த்தபடி கூறினான்.

நந்தினி இன்று தான் இவர்கள் வீட்டுக்கு வந்திருக்கிறாள். அவளுக்கு அனைத்துமே சற்று தயக்கமாக இருந்தது. ஆனாலும் நந்தினியின் குறும்பு மேலோங்க, "Thanks for sharing your room ..." என்று கூறி, ஈ என்று சிரித்தாள்.

"நக்கல்..." என்று ராம் பிரசாத் முணுமுணுத்தான்.

குழந்தைகள் பொம்மையை பார்க்க ஆர்வமாகக் காத்திருக்க, நந்தினி தன் பையை எடுத்து தரையில் அமர்ந்து அதிலிருந்து ஒவ்வொரு பொருளாக எடுத்தாள். அவளைப் பார்த்தபடி அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தான் ராம் பிரசாத்.

அதில் பவுடர், சீப்பு போன்ற அலங்கார பொருட்களை எதிர்பார்த்த ராம் பிரசாத்துக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

"சித்தி.... புது பொம்மை செய்ஞ்சி தரீங்களா?" என்று சந்தோஷ் ஆர்வமாகக் கேட்க, "சந்தோஷ்... உங்க சித்தி பெரிய சயின்டிஸ்ட் போல..." என்று நக்கல் தொனித்த குரலில் கூறினான் ராம் பிரசாத்.

"ம்... கரெக்ட் சித்தப்பா..." என்று சந்தோஷ் புது மனிதன் என்ற தயக்கம் இல்லாமல் உரிமையாகக் கூறினான்.

"எங்க சித்தப்பாவும் அப்படி தான்... நிறையப் பொம்மை பண்ணுவாங்க..." என்று ராம் பிரசாத்தை விட்டுக் கொடுக்காமல் கூறினாள் அகல்யா.

நந்தினி மும்முரமாக வேலையில் மூழ்கினாள்.

செய்தித்தாள் , வர்ண தூரிகை, cloth clip, செப்பு கம்பி 15cm நீண்ட அளவில், 2 L.E.D, சிவப்பு மற்றும் கருப்பு electrical tape, 3v பேட்டரி (CR2032) , கத்தரிக்கோல்… இதைப் போல் இன்னும் சில பொருட்களை எடுத்துக் கடை பரப்பினாள் நந்தினி.

குழந்தைகள் அவள் செய்ய போகும் பொம்மைக்காக அவளை ஆர்வமாகப் பார்த்தனர்.

LED யின் காம்பு போன்ற ஓரத்தில், செம்பு கம்பியை சுற்றி அதைச் சிவப்பு நிற electrical tape வைத்து மீண்டும் சுற்றினாள் நந்தினி. இதே போல் மற்றோரு கம்பியையும் சுற்றினாள் நந்தினி. நந்தினி ஒரு Positive Lead மற்றும் ஒரு negative Lead செய்து battery யோடு இணைக்க முயற்சிப்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. அவள் வேலை செய்யும் பாங்கு நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. நந்தினியின் செயலில் அந்த லைட் மினுக் மினுக்கென்று எரிந்தது. அதைத் துணி கிளிப்பில் சொருகினாள் நந்தினி.

அதன் பின் கண் போன்ற உருவம் வரைந்து, அதை clip ல் சொருகி ஒரு முகமூடி போல் செய்தாள். இதே போல் இருவருக்கும் செய்ய கண்கள் மட்டும் மின்னுவது போல் முகமுடி கிடைத்த சந்தோஷத்தில் குழந்தைகள் துள்ளி குதித்தன.

mask.gif

இரு குழந்தைகளும், நந்தினியின் கன்னத்தில் முத்தமிட்டு, "Thank you சித்தி..." என்று ஆனந்தமாகக் கூறிவிட்டு மற்றவர்களிடம் காட்டுவதற்காக ஆர்வமாக ஓடினர்.

நந்தினி குழந்தைகளிடம் லயித்து அவர்களை பார்த்துக் கொண்டிருக்க, ராம் பிரசாத் அவளைக் கூர்மையாக பார்த்தான்.

'இது சம்பந்தமாக படித்தவர்கள்... இதைப் பற்றி தெரிந்தவர்கள்... நந்தினி செய்ததை எளிதாக செய்து விட முடியும்... ஆனால் இவள் இதை செய்த பாங்கு... நேர்த்தி... வேகம்... சற்று கவனிக்கப்பட வேண்டியது' என்று எண்ணியபடி ராம் பிரசாத் அவளைப் பார்க்க, தன் புருவம் உயர்த்தி அவனை, கேள்வியாகப் பார்த்தாள் நந்தினி.

"நீ ஏன் வேலைக்குப் போகலை?" என்று ஒற்றை வரியில் கேட்டான் ராம் பிரசாத்.

"நான் வேலைக்கு போகலைன்னு யார் சொன்ன? போனேன்... இப்ப போகலை..." என்று சுருக்கமாக பதில் கூறினாள் நந்தினி.

"வேலை எல்லாம் விட்டுவிட்டு... ஏன் இந்தக் கிராமத்துக்கு வரணும்?" என்று ராம் பிரசாத் நந்தினியிடம் கேட்க, "வேலையை விட்டு எல்லாம் இங்க வரலை... வேலையை விட்டேன்... இங்க வரக் கூடிய சூழலும் அமைஞ்சிருச்சு..." என்று நந்தினி புன்னகைத்தாள்.

'நான் கேட்கிற கேள்வி இவளுக்குப் புரியலையா? இல்லை புரியாதது போல் நடிக்கிறாளா?' என்ற எண்ணம் மேலோங்க, "நீ எப்பவுமே இப்படி தான் பேசுவியா?" என்று கேட்டான் ராம் பிரசாத்.

"என் கிட்ட எல்லாரும் எப்படி பேசுறாங்களோ... நானும் அதை மாதிரியே பேசுவேன்..." என்று நந்தினி எகத்தாளமாக பதில் கூற, "இவ்வளவு படிச்சிருக்கும் நீ, இவ்வளவு சமர்த்தியசாலித்தனமாக வேலை பார்க்கும் நீ... உனக்கு அவ்வளவு வலுமையான எதிர் காலம் இருக்கும் ஊரை விட்டுட்டு... வேலையை விட்டுட்டு... ஏன் கிராமத்தில் இருக்கும் என்னைக் கல்யாணம் பண்ண சம்மதிக்கணும்?" என்று நீட்டி முழக்கிக் கடுப்பாக கேட்டான் ராம் பிரசாத்.

அவனை யோசனையாகப் பார்த்தாள் நந்தினி.
 




Last edited:

akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,900
Reaction score
46,305
Location
Earth
சற்று நிதானித்துவிட்டு, "இந்த ஊருக்கு வரதுக்கு காரணம்... எங்க ஊரும் இது தான்... எங்க அக்கா இங்க தான் இருக்கா..." என்று கூறி இடைவெளி விட்டாள் நந்தினி.

"வேலையை விட்டதுக்குக் காரணம்... எனக்கு பிடிக்கலை..." என்று தோளை குலுக்கினாள்.

"சம்பளம் குடுக்கிறாங்கன்னு வேலை பார்க்கணும் அப்படிங்கிற எண்ணம் எல்லாம் எனக்கில்லை... நான் படித்த படிப்பை ரசிச்சு... அனுபவிச்சு வேலை பார்க்கணும்... எதாவது புதுசா பண்ணனும்... அது என் மனசுக்கு பிடிச்சதா இருக்கனும்.... வேலை மட்டும் இல்லை மனிதர்கள் உட்பட..." என்று ராம் பிரசாத்தின் கேள்விக்குப் பதில் கூற ஆரம்பித்து, இருபொருள் பட முடித்தாள் நந்தினி.

'இவள் ஹனியில் எதோ விஷயம் இருக்கும்...' என்று எண்ணினான் ராம் பிரசாத்.

"நீங்க என்ன முடிவோடு, வேலையை விட்டுவிட்டு இங்க இருக்கீங்க?" என்று தெளிவாக கேட்டாள் நந்தினி.

இது வரை ராம் பிரசாத்தை யாரும் கேள்வி கேட்டதில்லை. அவர்கள் கிராமத்தில் ராம் பிரசாத் அதிகமாகப் படித்திருப்பதால் அவனுக்கென்று தனி மரியாதை உண்டு... ராம் பிரசாத் தன் கனவை யாரிடமும் இது வரை பகிர்ந்து கொண்டதும் இல்லை... 'ஏதோ ஒரு பொம்மை செய்ததால், இவளுக்கு எல்லாம் தெரியுமா? இவளால் என் ஆசையை… கனவைப் புரிந்து கொள்ள முடியுமா?' என்ற யோசனையோடு நந்தினியைச் சந்தேகமாக பார்த்தான் ராம் பிரசாத்.

"ஒரு நல்ல காரணம் சொல்ற மாதிரி இருந்தா சொல்லுங்க... நேத்து மாதிரி மொக்கை கதை எல்லாம் வேண்டாம்..." என்று நந்தினி நக்கல் தொனியில் கூற, ராம் பிரசாத் அவளைக் கேள்வியாக பார்த்தான்.

ராம் பிரசாத்தின் பார்வையை சட்டை செய்யமால், தன் பொருட்களை தன் பையில் அடுக்கி வைக்க, "எது மொக்கைக் கதை?" என்று கோபமாக கேட்டான் ராம் பிரசாத்.

"உங்க கதை தான்... ஒரு பொண்ணுக்கு நம்ம வீட்டைப் பிடிக்குமா? நாம வாழற ஊரைப் பிடிக்குமா? நம்ம கூட வாழ்க்கை முழுதும் வருவாளான்னு கூட தெரியாம லவ் பண்ண வேண்டியது... அப்புறம் அந்தப் பெண்ணை குறை சொல்ல வேண்டியது..." என்று நந்தினி வியாக்கியானம் பேச, "நான் யாரையும் குறை சொல்லை..." என்று அழுத்தமாகக் கூறினான் ராம் பிரசாத்.

"நான் உங்களைச் சொல்லலை... பொதுவா சொன்னேன்..." என்று நந்தினி தோளை குலுக்க, ராம் பிரசாத் மௌனம் காத்தான்.

"தப்பு ரெண்டு பக்கமும் தான்... ஆனால், லவ் ஸ்டோரி சுமார் தான்." என்று நந்தினி முகம் சுழிக்க, 'இவ இப்ப என்ன சொல்ல வரா?' என்று நந்தினியை யோசனையாகப் பார்த்தான் ராம் பிரசாத்.

அவர்கள் பேச்சை திசை திருப்பும் விதமாக, "ராம்... நந்தினி... சாப்பிட வாங்க..." என்ற குரல் கேட்க, நந்தினி வெளியே சென்றாள்.

'பழைய விஷயத்தை எண்ணி மனதைக் குழப்பி, நம்மிடம் சண்டை போடுவாளோ? சந்தேகப்படுவாளோ? இல்லை ஏதோ யதார்தமாகத்தான் பேசுகிறாளா?' போன்ற கேள்விகளால் குழம்பினான் ராம் பிரசாத்.

'காதலில் விழுவது அத்தனை பெரிய குற்றமா?' என்ற கேள்வி ராம் பிராசத்தின் மனதில் எழுந்தது.

"ராம்..." என்று மீண்டும் அவன் பெயர் வீடெங்கும் ஒலிக்க, ராம் அவர்கள் அறையில் இருந்து வெளியே வந்தான்.

தேக்கால் செய்யப்பட்ட வேலைப் பாடு நிறைந்த சாப்பாடு மேஜை. பார்வதி, சிவசைலம் ஏதோ வேலையாக உறவினர்களிடம் பேசிக் கொண்டிருந்தனர். சந்துரு, கோமதி, அகல்யா, சந்தோஷ் அமர்ந்திருக்க, ராம் பிரசாத் அமர, அவன் அருகே நந்தினி அமர்ந்தாள்.

இட்லி... தக்காளி சட்னி... பாசி பருப்பு சாம்பார்... கேசரி... அனைத்தும் மணக்க , "யாருக்கு பர்த்டே கேசரி பண்ணிருக்கீங்க?" என்று குழந்தை தனத்தோடு கேட்டான் சந்தோஷ்.

"பர்த்டே மட்டும் இல்லை டா... ஏதாவது சந்தோஷமான விஷயம் நாளும் கேசரி பண்ணலாம்..." என்று கூறினான் சந்துரு.

சந்தோஷ் சந்துருவை புரியாமல் பார்க்க, "நீ இங்க நம்ம வீட்டுக்கு வந்ததுக்குத் தான் கேசரி..." என்று அவனை மடியில் தூக்கி வைத்து அவனை கொஞ்சியபடியே கூறினான் சந்துரு.

குழந்தைகள் சாப்பிட்டு முடிக்கும் வரை, அமைதியாக இருந்த நந்தினி, அவர்கள் விளையாட சென்றவுடன், "உங்களுக்கும், அத்தானுக்கும் என்ன பிரச்சனை?" என்று சந்த்ருவிடம் கேட்டாள் நந்தினி.

"நந்தினி..." என்று ராம் நந்தினியிடம் அழுத்தமாகக் கூற, ராம்பிரசாத்திடம் மறுப்பாகத் தலை அசைத்து, "எல்லாருக்கும் பேசும் உரிமை இருக்கு ராம்..." என்று விளக்கமாகக் கூறினான் சந்துரு.

"அதுக்காக என்ன வேணாலும் கேட்கலாமா?" என்று ராம் பிரசாத் கோபமாக கேட்க, "நான் என்ன வேணாலும் கேட்கலை... எங்க அக்கா அந்தக் குடும்பத்தில் இருக்கா... நான் இங்க இருக்கேன்... நம்ம குடும்ப விஷயம் நான் தெரிஞ்சிக்க கூடாதா? அதனால் தான் கேட்கறேன்..." என்று நந்தினி தன்மையாக தன்னிலை விளக்கம் கொடுத்தாள்.

'ஏன் இந்தத் திருமணத்தை செய்தீர்கள்?' என்று கேட்டு அனைவரையும் குற்றம் சாட்டாமல், அதே நேரத்தில் மௌனமாகவும் இல்லாமல், நினைத்ததை அவர்களுள் ஒருத்தியாக மாறிக் கேட்ட நந்தினியைக் கோமதியும், சந்துருவும் மெச்சும் பார்வை பார்த்தனர்.

அங்கு அமைதி நிலவ, மௌனத்தைக் கலைக்கும் விதமாக, "சுபா விரும்பிய பையனை வாசுவுக்கு பிடிக்கலை... அவுக வீட்ல ஏத்துக்களை... நான் அவுக வீட்டுக்குத் தெரியாமல் நான் பதிவு திருமணம் செய்து வச்சிட்டேன்..." என்று இட்லி சாப்பிட்டு கொண்டே, இட்லி சாப்பிடுவது போல் எளிதாகக் கூறினான் சந்துரு.

"அப்ப... எங்க அத்தான் கோபம் நியாயம் தான்... அவுங்க தங்கச்சிக்குக் கல்யாணம் செய்து வைத்தால் சும்மா இருப்பாங்களா?" என்று நந்தினி தன் கண்களை உருட்டி நிதானமாகக் கூற, ராம் பிரசாத், கோமதி இருவரும் நந்தினியின் தைரியத்தை சற்று பயத்தோடு பார்த்தனர். சிறிதும் உணர்ச்சிவசப்படாமல், நந்தினியை ஆமோதிப்பது போல் தலை அசைத்தான் சந்துரு.

"சுபாவை நான் யாரோவா நினைச்சதே இல்லை... எனக்கு ராம் எப்படியோ அப்படி தான் சுபாவும்... சுபா எனக்கும் தங்கை தான்..." என்று உரிமையோடு கூறினான் சந்துரு.

"ஆனால்..." என்று நந்தினி கேட்ட கேள்வியிலும், அவள் மேலே பேசிய பேச்சிலும் சந்துரு அவளை அதிர்ச்சியாகப் பார்த்தான். ராம் பிரசாத் அவளைக் கடுப்பாக பார்த்தான். கோமதி சற்று பொறாமை ததும்பும் விழிகளோடு பார்த்தாள்.

இரண்டல்ல ஒன்று இணையாக பயணிக்கும்…
 




Last edited:

Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
Wow.. ippadiyaa kaa mudipeenga.. enna kelviyaa irukum.. ????..

Sooper naa guess pannunathu correct aacgiruchi.. ???.. enakum konjam arivu irukku.. ??..

Raam nee over raa panra.. sollitten.. nee mattum onnum solla maata avala mattum ippadi kelviyaa kettu kolluviyaa.. ??..

Nandhumaa.. ?????.. sema sema d.. pesunaale nachu thaann.. ???..

Vaasu ipo enna thaan da ninaikura.. onnum puriyala.. but nee oru vishiyam sonna paarthiyaa.. eppudi eppudi amma pinnadi aambala pasanga poga koodathu.. rightuuu pavi paartha paarvaiyai thaan naanum paakuren.. ???.. unake ithu lolla teriyala..

Kelviyai sollamal mudipathey akila kaa vin style.. athai padikave naanum wait.. ????
 




Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,488
Reaction score
29,223
Age
59
Location
Coimbatore
:LOL::LOL::ROFLMAO::ROFLMAO:.. naan thaan kaa first.. ??.. kekanum nu ninaichen.. ithu nalaki update thaana.. done..(y)(y)
பார்த்து காவ்யா விழுந்து விழுந்து சிரித்து மண்டை ஒடைய போகுது :mad::cry::love:
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
பார்த்து காவ்யா விழுந்து விழுந்து சிரித்து மண்டை ஒடைய போகுது :mad::cry::love:
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO: ungalukku thaan chitrama enna samaalikka mudiyaama manda kaayuthu correct taa.. ???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top