• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Irandalla Ondru Episode -16

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,908
Reaction score
46,355
Location
Earth
Dear Friends,
Thank you so much for your likes and comments... :)

அன்பான வாசகர்களே,

கதையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டு இருந்தது போல், கதை யதார்த்தமாக நகர்ந்து சென்றாலும், கதையில் வரும் இடங்கள் நிகழ் கால இடங்களை ஒட்டிச் சென்றாலும் கற்பனை நிறைந்தது என்பதை இங்கு நினைவு கூர்கிறேன். கதை மாந்தர்களின் எண்ணப் போக்கின் படி, கதை அறிவியல் புனைவுகளை மெல்லிய வருடலாகத் தொட்டு செல்லும். கதையின் போக்கு உங்களைக் கவரும் என்ற நம்பிக்கையோடு அடுத்த பதிவு இதோ...



இரண்டல்ல ஒன்று – 16

சந்துருவின் பதிலில், ஒரு நொடி கூட சிந்திக்காமல், "ஆனால், ஏன் அப்படி பண்ணீங்க?" என்று கேசரியை ருசித்தபடியே நிதானமாகக் கேட்டாள் நந்தினி.

நேற்று வந்த பெண்… தன் அண்ணனைக் கேள்வி கேட்பது பிடிக்காமல், ராம் பிரசாத்தின் கோபம் தலைக்கேறி, அவன் கை முஷ்டி இறுகியது.

'ஏன் என் கல்யாணத்தை செய்தீக?' என்று கேட்காமல் நந்தினி கேட்கும் கேள்வி என்ற எண்ணம் கோமதியின் மனதில் உதித்தது.

சந்துரு மிகவும் நிதானமாக, நந்தினியிடம் கேள்வியை எதிர் பார்த்தவன் போல் புன்னகையோடு, "சுபா சின்ன வயசிலிருந்து இங்க தான் வளர்ந்தா... தேவா கூட அப்படி தான்... தேவா நெருங்கிய நண்பன் ஆகிட்டான்... சுபா என் தங்கையாகவே ஆகிட்டா... அவளுக்கு தேவாவை விட என்னைத்தென் பிடிக்கும்... நான் சொல்றது தான் சரின்னு சொல்லுவா... ஏன் உன் புருஷன் ராம் கூட என்னைவிட, தேவாவுக்குத் தான் நெருக்கம்.... வாசு அண்ணா... வாசு அண்ணான்னு அவன் பின்னாடிதென் சுத்துவான்..." என்று ராம் பிரசாத்தை பார்த்தபடி கூறினான் வாசுதேவன்.

நந்தினி எதுவும் பேசாமல் பிடிவாதமாக பதிலுக்காக அமர்ந்திருக்க, 'என்ன ஒரு அழுத்தம்? அண்ணா இவளுக்கு விளக்கம் சொல்லிட்டு இருக்காக... இவ இவ்வளவு பிடிவாதமா அமைதியா அமர்ந்திருகா?' என்ற யோசனையோடு நந்தினியைக் கடுப்பாக பார்த்தான் ராம் பிரசாத்.

நந்தினி சமாதானம் அடையவில்லை, என்று அவள் பார்வை கூற, சந்துரு தன் பேச்சை மேலும் தொடர்ந்தான்.

"யாரும் சுபாவின் ஆசைக்குச் சம்மதம் தெரிவிக்குற மாதிரி தெரியலை... அவ கண் கலங்குறது எனக்கு பிடிக்கலை... எனக்கு சுபா மேல் இல்லாத அக்கறையா? அதனால் தான்..." என்று சந்துரு சுபாவின் மீதுள்ள உரிமையை நிலை நாட்டினான்.

கோமதி பொறுமையாக பேசும் தன் கணவனை ஆச்சரியமாகப் பார்த்தாள்.

'நல்லவர் தான்... பொறுமைசாலி தான்... ஆனால் இந்த அளவுக்கா?' என்று தன் கணவனை ஆராயும் கண்களோடு கோமதி பார்க்க… சந்துரு அவன் புருவம் உயர்த்தி தன் மனைவியைக் கேள்வியாக பார்க்க… கோமதி மறுப்பாகத் தலை அசைத்தாள்.

அந்தப் பார்வை பரிமாற்றத்தை, கவனித்த நந்தினி, "எல்லாரும் உங்க சொல்லை நம்புவாங்க போல?" என்று நந்தினி புன்னகை ததும்பும் முகத்தோடு கேட்டாள்.

"ஏய்..." என்று ராம் பிரசாத் எகிற, "ராம்..." என்று சந்துரு தன் தமையனை அதட்டி அடக்கினான்.

கோமதி சற்று பதட்டம் அடைந்து நந்தினியைப் பார்த்தாள்.

'இந்த பொண்ணு என்ன… முதல் நாளே இப்படி பேசுது? அம்மா சொன்னது சரி தான் போல... பொண்ணு அழகா லட்சணமா இருக்கா... நல்லா படிச்ச பொண்ணு வேற... அந்தப் பெண்ணோடு அழுத்தத்தைப் பார்த்தா, பயங்கர கெட்டிக்காரியா இருப்பா போல... யாரவது ஓப்படச்சியா இப்படி ஒருத்தியை பார்த்து வைப்பாளா? நீ கோட்டிக்காரிதென்... பாத்து பொழச்சுக்கோ...' என்று தன் தாய் பேசியது நினைவு வரக் கோமதி சிந்தனையில் ஆழ்ந்தாள்.

சந்த்ருவுக்கு நந்தினி மீது கோபம் வரவில்லை... அவளைச் சகோதரத்துவம் மேலோங்கப் பார்த்தான்.

"ஏன் நீ என் சொல்லை நம்பலையா?" என்று நக்கல் தொனித்த குரலில் கேட்டான் சந்துரு.

சந்துருவின் நக்கல் தொனித்த கேள்வியில், நந்தினியின் புன்னகை விரிந்தது.

"தேங்க்ஸ்... நீங்க கோபப்படாம பேசறதுக்கு..." என்று நன்றி நவிழ, "ம்.. க்கும்... கோபப்பட கூடாது... நல்ல செவிட்டில் ஒண்ணு கொடுக்கணும்...' என்று ராம் பிரசாத்தின் மனம் விரும்பியது.

ராம் பிரசாத்தின் அறிவு, அவன் படித்த படிப்பு, பெண்ணின் மீது வைத்திருக்கும் மரியாதை அவனை அமைதி காக்க செய்தது.

"நான் உங்க சொல்லை நம்பலை..." என்று பளிச்சென்று கூறி, அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினாள் நந்தினி.

"உங்க செயலை நம்பறேன்... நான் உங்களை யாரோ மாதிரி பாக்கலை... வாசு அத்தான் மாதிரி தான் பாக்கறேன்... எல்லாரும் உங்க மேல் உள்ள அன்பில் உங்க சொல்லை நம்பி, நீங்க சொல்றதை நம்பறாங்க... ஆனால், நான் ரெண்டு நாளா உங்களைப் பார்த்ததில், பெரிய பிரச்சனை வரக் கூடிய விஷயத்தை இவ்வளவு சாதாரணமா நீங்க செஞ்சிருப்பீங்கன்னு எனக்குத் தோணலை... உங்க செயலுக்கு பின்னாடி ஏதோ ஒரு காரணம் இருக்குன்னு எனக்கு தோணுது..." என்று நந்தினி கூற, சந்துருவின் பார்வை மெச்சுதலாகா மாறினாலும், அவன் அதிர்ச்சி பன்மடங்காக பெருகியது.

சந்துரு சற்று தடுமாறினான்... 'தன் தாய்... தன் மனைவி... எல்லாரும் கெட்டிக் காறங்க தான்... எந்தப் பிரச்சனையையும் சாமர்த்தியசாலித்தனமாக, பொறுமையாக அணுகக் கூடியவர்கள் தான்... ஆனால் இவள்? பெண்கள் படிக்கிறார்கள்... வேலைக்குச் செல்கிறார்கள்... பெரிய பதவியில் இருக்கிறார்கள்... தலைமை பதவியில் திறம் பட செயல் படுகிறார்கள்... கேள்விப்பட்டிருக்கிறேன்... பார்த்ததில்லை... ஆனால், எதிரே நிற்பவனை இரண்டு நாளில் கணித்து, அவனிடம் கேள்வியும் கேட்டு, அவனைப் பாராட்டவும் செய்து... அப்பப்பா...' என்று எண்ணினான் சந்துரு.

"பெண் புத்தி பின் புத்தி..." என்ற வாக்கியத்தின் பொருள் இப்பொழுதுதான் சந்துருவிற்கு தெளிவாகப் புரிந்தது.

'காலத்தின் போக்கில் பின்னால் நடப்பதையும்... தன் கண்களுக்கு முன்னாள் மட்டுமின்றி பின்னால் நடப்பதையும் அறிக கூடியவர்கள் பெண்கள்... பெண் புத்தி பின் புத்தி தான்...' என்று பிரமிப்பாக எண்ணினான் சந்துரு.

தன் கணவனின் தடுமாற்றத்தைக் கண்ட கோமதி, நந்தினியின் சாமர்த்தியசாலித்தனத்தை மனதில் மெச்சினாலும், அவள் கண்கள் மெல்லிய பொறாமை உணர்வைக் காட்டியது.

'எல்லாம் தெரியுமுன்னு நினைப்பு...' என்று ராம் பிரசாத் பெரு மூச்சை வெளியேற்ற, அவரவர் சிந்தனையில் அனைவரும் அமைதி காத்தனர்.

அமைதியைக் கலைக்கும் விதமாக, "எல்லாம் தெரிஞ்சிக்கணுமுன்னு கேட்கலை... என் மனசில் பட்டத்தை சொல்லணுமுன்னு தோணுச்சு... சொல்லிட்டேன் அத்தான்..." என்று நந்தினி லகுவாக கூற, சந்துரு புன்னகைத்துக் கொண்டான்.

"அவுகளை அத்தனை முறை அத்தான்னு கூப்பிடுற... என்னை அக்கான்னு கூப்பிடு..." என்று கோமதி வம்பிழுக்க, இப்பொழுது மௌனமாக புன்னகைப்பது நந்தினியின் முறையாயிற்று.

'பவித்ராவை தவிர, வேறு யாரையாவது அக்கான்னு கூப்பிட முடியுமா?' என்று எண்ணியபடி மௌனமாக அமர்ந்திருந்தாள் நந்தினி.

சந்துரு, கோமதி இருவரும் அர்த்தம் பொதிந்த பார்வையை பரிமாறிக் கொண்டனர்.

அனைவரும், உணவை முடித்துக் கொண்டு உறவினர்களோடு பேசிக் கொண்டிருக்க, நேரம் மெல்லமாக நகர்ந்தது.

நந்தினி சந்தோஷ், அகல்யாவோடு பேசி சிரித்துக் கொண்டிருக்க, அவர்களுக்கு இடையூறு இல்லமால் நாம் பவித்ரா வாசுதேவன் இல்லத்தை நோக்கிப் பயணிப்போம்.

மகாதேவன் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருக்க, உத்தமி பட்டாளை தூணில் சாய்ந்து கொண்டு, "ராத்திரி நேரம் தோட்டத்தில் இருக்காதீங்கன்னு சொன்னா கேக்கறது கிடையாது... ரெண்டு பேரும் மரத்தடியில் இருட்டில இருந்து குசுகுசுன்னு பேசவேண்டியது..." என்று உத்தமி சலித்துக் கொள்ள மஹாதேவன் சிரித்துக் கொண்டார்.

தோட்டத்தில் மாமரத்தடியில் கயிற்றுக் கட்டிலில் தலைக்கு தன் கையை அண்டைக் கொடுத்து படுத்திருந்தான் வாசுதேவன்.

வாசுதேவன் அருகே சம்மணமிட்டு அவன் முகம் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் பவித்ரா.

இரவில் பூத்திருந்த மல்லி, பிச்சி பூக்களின் மணம் மூக்கைத் தொலைக்க அதை இருவரும் அனுபவித்துக் கொண்டிருந்தனர்.

நிலவொளியில் பவித்ரா வாசுதேவனின் கண்களுக்கு தேவதையாகக் காட்சி அளித்தாள். வாசுதேவனின் கம்பீரம் பவித்ராவுக்கு அந்த இருளில் பாதுகாப்பு உணர்வைக் கொடுத்தது.

பவித்ரா எழுந்து செல்ல, அவள் மெலிதாக தள்ளாடினாள்.

"பவி..." என்று பதறியபடி எழுந்தான் வாசுதேவன். "எட்டி... என்ன ஆச்சு..." என்று அக்கறையாகக் கேட்டான் வாசுதேவன்.

"அதெல்லாம் ஒண்ணுமில்லை அத்தான்... உங்களை பாத்துகிட்டே தரையில் கால் வைத்தேன்... கீழே இருந்த கல்லை கவனிக்கலை..." என்று தடுமாற்றத்தோடு கூறினாள் பவித்ரா.

பவித்ராவின் கண்களில் மெல்லிய பதட்டம் தெரிந்தது. அவள் கண்களை ஊடுருவிப் பார்த்தான் வாசுதேவன்.

"பவி..." என்று ஆழமான குரலில் அழைத்தான் வாசுதேவன்.
 




Last edited:

akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,908
Reaction score
46,355
Location
Earth
"ம்..." என்று அவன் முகம் பார்க்காமல் கூறினாள் பவித்ரா.

"சந்தோஷை கூப்பிடணுமா?" என்று அவள் முகத்தை நிமிர்த்திக் கேட்டான் வாசுதேவன்.

"அத்தான்... நீங்க வேற... எல்லாரும் சிரிப்பாங்க... அதுக்குள்ளயா பிள்ளையைத் தேடுவேன்..." என்று பவித்ரா சிணுங்க, "சரி... எதுக்கு எந்திரிச்ச?" என்று கேட்டான் வாசுதேவன்.

"மாங்காய் பறிக்க தான் அத்தான்... சாப்பிடணும் போல இருந்துச்சு..." என்று ஆசையாகக் கேட்டாள் பவித்ரா.

"அதை என்கிட்டே கேட்க வேண்டியது தானே பவி..." என்று அவளை கடிந்து கொண்டு, பழுத்தும் பழுக்காமலும் இருக்கும் மாங்காயைப் பறித்து அவளிடம் கொடுத்தான் வாசுதேவன்.

அதை பவித்ரா பெற்றுக் கொள்ள, அவள் கண்ணில் இருந்து இரு துளி கண்ணீர். சாமர்த்தியசாலித்தனமாக அதை வாசுதேவனிடம் இருந்து மறைத்துக் கொள்வதாக எண்ணிக் கொண்டாள் பவித்ரா.

பவித்ராவை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்த வாசுதேவன், அவளை அமைதியாக கண்காணித்துக் கொண்டிருந்தான். அவளுக்குச் சற்று அவகாசம் கொடுத்து, அவள் கன்னங்களை பிடித்து, அவள் கண்களை ஆழமாகப் பார்த்து, "எட்டி... எதாவது பிரச்சனையா?" என்று சற்று இறங்கிய குரலில் தன் கண்களை சுருக்கிக் கேட்டான் வாசுதேவன்.

"அத்தான் அதெல்லாம் ஒண்ணுமில்லை... நாம நந்தினியை விருந்துக்கு கூப்பிடனும்..." என்று ராம் பிரசாத் பெயரை தவிர்த்து பேச்சை மாற்றும் விதமாகக் கயிற்று கட்டிலில் அமர்ந்து மாங்காயைக் கொறித்தபடி கேட்டாள் பவித்ரா.

பவித்ராவின் போக்கை பின்பற்றியே, அவள் அருகில் அமர்ந்து கொண்ட வாசுதேவன், "உங்க ஊரில் பெண்ணை மட்டும் தன் விருந்துக்கு கூப்பிட்டுவீங்களா?" என்று அவளிடம் வம்பிழுத்தான்.

"அத்தான்..." என்று பவித்ரா வாசுதேவனை முறைக்க, "சரி... சரி... கூப்பிட்டுருவோம்... உன் தங்கையை கூப்பிடாமலா?" என்று பவித்ராவின் முறைப்புக்குப் பதிலாக புன்னகைத்தான்.

"அத்தை கிட்ட சொல்லிருங்க..." என்று பவித்ரா கூற, சம்மதமாகத் தலை அசைத்தான்.

வாசுதேவன் நந்தினியை அழைத்து ஸ்பீக்கர் ON செய்ய, "அத்தான் சொல்லுங்க..." என்று நந்தினி கூறினாள்

"சந்தோஷ்... என்ன பண்ணுதான்?" என்று பவித்ரா கேட்க, "அவன் என் பக்கம் எல்லாம் ரொம்ப வரவே இல்லை அக்கா... அகல்யா கூட தான் எப்ப பாரும் விளையாட்டு..." என்று அவர்கள் அறையில் அமர்ந்து speaker இல் கதை பேசினாள் நந்தினி.

ராம் பிரசாத் மொபைலை பார்த்தபடி நந்தினியை நோட்டமிட்டுக் கொண்டிருந்தான்.

"நந்தினி நீயும் மாப்பிள்ளையும் என்னைக்கு தோது படுமுன்னு சொல்லுங்க... அன்னைக்கி விருந்து ஏற்பாடு பண்ணிருவோம்..." என்று வாசுதேவன் கூற, நந்தினி ராம் பிரசாத்தை கேள்வியாக நோக்கினாள்.

"அம்மா... எங்கயோ போகணும்னு சொன்னங்க... ரெண்டு நாள் கழித்து, ஞாயிற்றுக் கிழமை போகலாம்..." என்று ராம் பிரசாத் பொதுவாக கூற, "சரி.. நந்தினி... ஞாயிற்றுக் கிழமை வாங்க..." என்று கூறினாள் பவித்ரா.

"அக்கா... கல்யாண வீடு... இந்த formality ... அந்த formality ன்னு சொல்லிச் சொல்லி south Indian dishes ஒரே boring ... நீ சைனீஸ்... இத்தாலியன்... பண்ணு அக்கா..." என்று நந்தினி பவித்ராவிடம் உரிமையாகக் கூறி, "அக்கா எல்லாம் சூப்பரா செய்வா..." என்று ராம் ப்ரசாத்திடம் அவனுக்கு மட்டும் கேட்கும் படியாக தன் தமக்கையைப் பற்றி பெருமையாகக் கூறினாள் நந்தினி.

'நீ நல்லா சாப்பிடுவியா?' என்பது போல் ராம் பிரசாத் நந்தினியைப் பார்க்க, 'ஏன் நீங்க எல்லாம் சாப்பிடாம, காத்த மட்டும் சுவாசிச்சா வாழறீங்க?' என்று வினவும் வகையில் ராம் பிரசாத்தை பார்த்தாள் நந்தினி.

அவர்கள் கண்களின் யுத்தத்தைத் தடுக்கும் விதமாக, "சரி நந்தினி... நாம அப்புறம் பேசுவோம்..." என்று கூறி பவித்ரா பேச்சை முடித்தாள்.

"வாசு... பவித்ரா... நேரமாச்சு... உள்ள வந்து படுங்க..." என்று உத்தமியின் குரல் ஓங்கி ஒலிக்க, இருவரும் உள்ளே சென்றனர்.

வாசுதேவன் விருந்தை பற்றி உத்தமியிடம் கூற, "நான் ஞாயிற்றுக் கிழமை வெளிய போகணும்... நான் வீட்டில் இருக்க மாட்டேன்..." என்று உத்தமி சுவரை பார்த்தபடி கூற, வழக்கம் போல் மஹாதேவன் அமைதியாக அமர்ந்திருந்தார்.

"சரி அம்மா... பவித்ரா பாத்துப்பா..." என்று வாசுதேவன் பவித்ராவை பார்த்தபடி கூற, "அவளுக்கு புதுசா வரவங்களுக்கெல்லாம் சமைக்கத் தெரியாது... நான் காலையிலே என்ன செய்யணும்னு எடுத்து வச்சிட்டு போறேன்... அவ நான் சொல்றபடி செஞ்சிருவா..." என்று உத்தமி கூற, "சரி அம்மா..." என்று வாசுதேவன் தலை அசைக்க பவித்ரா விருட்டென்று அவர்கள் அறைக்குள் நுழைந்து கொண்டாள்.

பவித்ரா நடந்த வேகத்தில், சற்று தள்ளாட அவளைக் கூர்மையாக பார்த்தபடி, 'ஏதோ விஷயம் இருக்கு...' என்று எண்ணியபடி உள்ளே சென்றான் வாசுதேவன்.

பவித்ரா வாசுதேவனைக் கோபமாக பார்த்தாள்.

"எத்தனை வருஷம் தான் எனக்கு சமைக்க தெரியாது சமைக்க தெரியாதுன்னு இதையே சொல்லுவாங்க... கொடுத்தா செய்ய போறேன்... நான் கல்யாணத்துக்கு முன்னாடியே பத்து பேருக்கு சமைப்பேன்..." என்று கடுப்பாக கூறினாள் பவித்ரா.

"எங்க அம்மா... எங்க அப்பா.. என் தங்கை... எங்க ஆச்சி.. தாத்தான்னு எங்க வீட்டு ஆளுங்க கிட்ட இதைச் சொல்ல சொல்லுங்க... உங்க அம்மாவை உண்டு இல்லைன்னு பண்ணிடுவாங்க... நீங்க மட்டும் தான் என்னை என்ன குறை சொன்னாலும் சரிசரின்னு கேட்டுப்பீங்க..." என்று பவித்ரா ஆற்றாமையோடு கூற, "அம்மா தெரியாதுன்னு சொன்னா, உனக்கு தெரிஞ்சது இல்லைன்னு ஆகிருமா?" என்று அவளைச் சமாதானம் செய்யும் விதமாகக் கூறினான் வாசுதேவன்.

"இல்லை... உனக்குத் தெரிந்த விஷயம் நான் சொல்லி தான் இந்த உலகத்துக்கு நிரூபணம் ஆகணுமா?" என்று வாசுதேவன் பொறுமையாக பவித்ராவுக்கு விளக்க, "நான் வேலைக்காவது போயிருக்கணும்... அங்கேயாவது நல்ல பெயர் கிடைக்குதோ இல்லையோ... சம்பளமாவது கிடைச்சிருக்கும்... எனக்குக் கொஞ்சநஞ்சம் மரியாதையாவது மிஞ்சிருக்கும்..." என்று பவித்ரா புலம்பினாள்.

"இப்ப உன் மரியாதைக்கு என்ன குறைச்சல்?" என்று வாசுதேவன் கோபமாக கேட்க, "ஏன் கேட்க மாடீங்க? உங்க அம்மா வழி ஆளுங்க வரும் பொது, எனக்கு வேலை இருக்கு நான் வீட்டில் இருக்க மாட்டேன்னு சொல்றேன்.. சரிப் போ... அம்மா பார்த்துப்பான்னு சொல்லுவீங்களா? அம்மாவுக்கு என்ன மரியாதை ... அவுக வரும் பொழுது நீ வீட்டில் இருக்குமுன்னு வானத்துக்கும் பூமிக்கும் குதிச்சிருக்க மாட்டிங்க? இப்ப எங்க வீட்டு ஆளுங்க வரும் பொது மட்டும் உங்க அம்மா போகலாமா? இனி நானும் யாரவது வரும் பொழுது கோவில் குளமுன்னு வெளியே போறேன்..." என்று பவித்ரா பிடிவாதமாக கூற, வாசுதேவன் அவளை யோசனையாகப் பார்த்தான்.

"இதுக்கே நான் இப்படி புலம்பறேன்... முதலில் நந்தினி வர அன்னைக்கி நீங்க வீட்டில் இருக்கீங்களானு பார்க்கணும்... உங்க அம்மா, உங்களையும் கூட கூட்டிட்டு போறதுக்கு ஏதாவது திட்டம் போடுவாங்க... அப்பவும் நீங்க சரி அம்மா... பவித்ரான்னு ஒரு ஈனா வானா இருக்கா பார்த்துப்பான்னு சொல்லுவீங்க..." என்று பவித்ரா முணுமுணுக்க, "பவித்ரா..." என்று கர்ஜித்தான் வாசுதேவன்.



இரண்டல்ல ஒன்று இணையாக பயணிக்கும்…
 




Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,510
Reaction score
29,244
Age
59
Location
Coimbatore
இப்படி நிறுத்தி எங்களை தவிப்பில் விடுவதே அகிலாவின் வாடிக்கையாகிவிட்டது. பவி இரண்டாம் குழந்தைக்கு தாயாக போகிறாளா ?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top