• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Irandalla Ondru - Episode 20

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,900
Reaction score
46,305
Location
Earth
அன்பான வாசகர்களே...
உங்கள் விமர்சனங்கள் மற்றும் likes க்கு நன்றி... உங்களைக் காண, இரண்டல்ல ஒன்று ஒரு நாள் முன்னதாகவே பயணித்து விட்டது. :):)


இரண்டல்ல ஒன்று – 20

"அப்புறம்..." என்று வாசுதேவன் கேள்வியாய் நோக்க, "அது... அது..." என்று தடுமாறினாள் பவித்ரா.

வாசுதேவன் பவித்ராவின் பதிலுக்காகப் பிடிவாதமாக அமர்ந்திருந்தான்.

"நந்தினி கல்யாணத்துக்கு மறுநாள் அத்தையும்... சுபாவும் பேசிட்டு இருந்தாங்க..." என்று பவித்ரா தயக்கத்தோடு ஆரம்பித்தாள்.

வாசுதேவன் எதுவும் பேசாமல், பவித்ராவை கூர்மையாகப் பார்க்க... பவித்ரா மேலும் தொடர்ந்தாள்.

"அன்னக்கி என்ன பேசுனாங்கன்னா… சுபாவுக்கு இன்னும் குழந்தை இல்லை... அவளுக்குக் குழந்தை இல்லாம சந்தோஷ் பிறந்ததே தப்புன்னு பேசினாங்க... சுபாவுக்குக் குழந்தை பிறக்காம நாம ரெண்டாவது குழந்தை பெத்துக்க கூடாதுன்னு அத்தை சுபாகிட்ட சொல்லிக்கிட்டு இருந்தாங்க... சுபா எதுவும் பேசலை தான்... ஆனால், இந்த நேரம் அத்தைக்கு விஷயம் தெரிஞ்சா..." என்று பவித்ரா பேசிக் கொண்டிருக்க, "பவித்ரா..." என்று கர்ஜித்தான் வாசுதேவன்.

பவித்ரா தன் மூச்சை உள்ளிழுத்து, 'இவங்க நம்ப மாட்டாங்க... சாமியாட்டம் ஆடப் போறாங்க...' என்று பவித்ரா எண்ணிக் கொண்டிருக்க, "நீ ஏன்டி இப்படி இருக்க? உனக்கு அம்மாவைத் தப்பா புரிஞ்சிக்கிறதே வேலையா போச்சு..." என்று பவித்ராவை பார்த்துச் சலிப்பாகக் கூறினான் வாசுதேவன்.

"அம்மா... அப்படி சொல்லுவாங்களா?" என்று வாசுதேவன் பவித்ராவை பார்த்து கோபமாக கேட்க, "இதுக்கு தான்... நான் உங்க கிட்டச் சொல்லலை... நீங்க எப்படியும் நான் சொல்றதை நம்ப போறதில்லை... அப்புறம் என்ன காரணத்துக்கு நான் உங்க கிட்ட சொல்லணும்?" என்று கடுப்பாகக் கேட்டாள் பவித்ரா.



"உன்னை நம்பாம இல்லை பவித்ரா... உன் அறியாமையைத் தான் நான் சொல்றேன்..." என்று வாசுதேவன் பவித்ராவின் தவறைச் சுட்டிக் காட்ட, "ஆமா... நான் முட்டாள்... நீங்க அதிபுத்திசாலி..." என்று சலிப்பாகக் கூறி மெத்தையின் மீது கோபமாக அமர்ந்தாள் பவித்ரா.

பவித்ராவின் முகம் சலிப்பைக் காட்ட, வாசுதேவன் பவித்ராவை கூர்மையாகப் பார்த்தான்.

"சரி பவித்ரா... அம்மா சொன்னதாகவே இருக்கட்டும்... நான் சொன்னது எனக்குச் சரி... நீ சொன்னது உனக்குச் சரி... நான் உன் நம்பிக்கையைக் கெடுக்க விரும்பலை... நீ புத்திசாலியாவே இருந்துட்டு போ... ஆனால், என் கிட்ட ஏன் சொல்லலை?" என்று பவித்ராவின் முகம் பார்த்துக் கிடுக்குபிடியாக கேட்டான் வாசுதேவன்.

"அது... அது... வந்து... நீங்க உங்க அம்மா பேச்சைக் கேட்டு..." என்று பவித்ரா ஆரம்பிக்க, "மேல பேசாத பவித்ரா..." என்று தன் இரு காதுகளையும் மூடிக் கொண்டும் தன் பற்களை கடித்துக் கொண்டும் வார்த்தைகளை கடித்து துப்பினான் வாசுதேவன்.

"அத்தான்..." என்று பவித்ரா அழைக்க, "என்னைப் பத்தி நீ என்னடி நினைச்சுக்கிட்டு இருக்க?" என்று கேட்டு வாசுதேவன் கண்கலங்க பவித்ராவை விலகல் தன்மையோடு பார்த்தான்.

"அத்தான் அப்படி பாக்காதீங்க..." என்று பவித்ரா தொடங்க, வாசுதேவன் தன் தலையை மறுப்பாக அசைத்து, "உன் விருப்பத்திற்கு மாறா... நான் ஏதாவது செய்றேனா டீ?" என்று வாசுதேவன் உடைந்த குரலில் கேட்டான்.

"அத்தான்..." என்று பவித்ரா மீண்டும் தொடங்க, அவளைப் பேசவிடாமல் வாசுதேவன் மீண்டும் தொடர்ந்தான். "நீ ஆசைப்படுற இந்தக் குழந்தையை... நான் வேண்டாமுன்னு சொல்லுவேன்னு நீ நினைச்சியா பவித்ரா? உன் மனசு எனக்குத் தெரியாதா டீ... உன் மனசு கஷ்டப்படுற மாதிரி நான் நடந்துப்பேனா?" என்று காட்டமாகக் கேட்க நினைத்து, பரிதாபமாகக் கேட்டான் வாசுதேவன்.

பவித்ரா வாசுதேவனின் கேள்வியில், அவன் குரலில் தாக்கப்பட்டு, அமைதியாக… தன் தலையில் கை வைத்துக் கொண்டு… கண் கலங்க அவனைப் பார்த்தாள்.

"உன் விருப்பத்திற்கு தானே நந்தினி கல்யாணம் நடந்துச்சு... உன் விருப்பத்திற்கு தானே நான் மறுவீட்டுக்கு வந்தேன்... உன் விருப்பப்படி தானே விருந்து நடந்துச்சு..." என்று வாசுதேவன் பவித்ராவை அடுக்குஅடுக்கான கேள்விகளால் தாக்கினான்.

வாசுதேவன் சொல்லி காட்டியதில், சீற்றம் கொண்டவளாய்… "அத்தான்... நீங்கச் சொன்ன எல்லா விஷயத்துக்கும் அத்தை தடங்கல் பண்ணாங்க... நீங்களும் உங்க அம்மா கிட்ட சரின்னு சொல்லிட்டு தான் வந்தீங்க... நான் ஒவ்வொரு தடவையும் உங்க கிட்ட சண்டை போட்ருக்கேன்... ஒவ்வொரு விஷயம் நடக்கிறதுக்கும் போராட்டம்... அப்புறம் நீங்க எனக்காகச் சம்மதம் சொன்னீங்க... இப்பவும் எனக்காகச் சரின்னு சொல்லுவீங்கன்னு தெரியும்... ஆனால்... நாலு மாசம் கழிச்சி சொன்னா, எந்த பேச்சுக்கும் இடமே இருகாதில்லை..." என்று மேலும் பேசும் எண்ணத்தோடு தன் பேச்சை நிறுத்தினாள் பவித்ரா.

பவித்ராவின் எண்ணத்தை அவள் முகம் கண்ணடியாகக் காட்ட, வாசுதேவன் வேதனை நிறைந்த மனதோடு அவள் இன்னும் என்ன சொல்லக் காத்திருக்கிறாள் என்று தெரிந்து கொள்ள அமைதியாக அமர்ந்திருந்தான்.

'சொல்ல ஆரம்பித்ததைச் சொல்லித் தானே ஆக வேண்டும்...' என்ற எண்ணம் பவித்ராவுக்கு மேலோங்க, "ஆனால்... மத்த விஷயங்களும் இதுவும் எனக்கு ஒண்ணு இல்லை அத்தான்..." என்று பவித்ரா கூற, அவள் கூறியது புரியாமல் தன் கண்களை சுருக்கி பவித்ராவை பார்த்தான் வாசுதேவன்.

"நம்ம குழந்தை விஷயத்தில்... அத்தை பேச்சைக் கேட்டுட்டு நீங்க எதிர்மறையா பேசுவீங்களோன்னு எனக்குப் பயம்... என் இஷ்டபடி தான் நடக்கும்னாலும்... குழந்தை விஷயத்தில் உங்க கிட்ட இருந்து வர ஒரு எதிர்மறைச் சொல்லைக் கூட என்னால் ஏத்துக்கவும் முடியாது... தாங்கவும் முடியாது அத்தான்..." என்று அழுத்தமாக ஆரம்பித்து, அழுதபடி பேசினாள் பவித்ரா.



வாசுதேவன் விரக்தியாகப் புன்னகைத்தான்.

வாசுதேவனின் கோபம் வடிந்து, வருத்தம் மேலோங்கியது.

பவித்ரா பவி ஆக மாறி இருந்தது.

'ஏன் பவி... என்னோடு வாழ்ந்த இத்தனை வருஷ வாழ்க்கையில் நீ என்னை இவ்வளவு தான் புரிஞ்சிகிட்டியா?' என்ற வாசுதேவனின் கேள்வி பவித்ராவின் மீது சாட்டையடியாக இறங்கியது.

பவித்ரா கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அவனை வேதனை நிறைந்த கண்களோடு பார்த்தாள்.

நாற்காலியிலிருந்து எழுந்து, பவித்ராவின் முகம் பார்க்காமல் எதிர்த் திசையில் திரும்பிக் கொண்டு, "பவி... உனக்கும் உன் குழந்தைக்கும் நான் பாதுகாப்பா இருபெங்குற நம்பிக்கையை உன் அத்தான் இத்தனை வருஷ வாழ்க்கையில் உனக்குக் குடுக்கலயா டி?" என்று வாசுதேவன் ஆழமான குரலில் கேட்டான்.
 




Last edited:

akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,900
Reaction score
46,305
Location
Earth
அந்தக் குரல்... அந்தக் குரலில் கோபம்... வருத்தம்... இயலாமை... தோற்றுப் போன உணர்வு... காதல்... ஏமாற்றம்... அன்பு... என அனைத்தும் கலந்திருக்க, வாசுதேவனின் வலி நிறைந்த குரலிலும் அவன் கேட்ட கேள்வியிலும் அவன்மேல் கொண்ட அன்பில் கட்டுண்டவளாய், "அத்தான்..." என்று விம்மலோடு அவன் மார்பில் சாய்ந்து கதறி அழுதாள் பவித்ரா.

தன் மனைவியின் கண்ணீர் வாசுதேவனை வேரோடு சாய்த்தாலும்... அழும் மனைவியைத் தலை கோதி சமாதானம் செய்ய வாசுதேவனின் மனமும், அவன் உடம்பில் உள்ள ஒவ்வொரு அணுவும் துடித்தாலும்... வாசுதேவனின் கோபம் பவித்ராவை தூர நிறுத்தச் செய்தது.

அழும் மனைவியைப் பார்க்கும் சக்தி, வாசுதேவனுக்கு ஏது?

கலங்கிய கண்களோடு வாசுதேவன் அவர்கள் அறையிலிருந்து வெளியே சென்றான்.

பவித்ரா மெத்தையில் சாய்ந்தமர்ந்து, 'நான் அத்தான் கிட்ட அன்றே சொல்லிருக்க வேண்டும்...' என்று இன்னும் காத்திருக்கும் பல பிரச்சனைகளை அறியாமல், இன்றைய பிரச்சனைக்காக தன்னை தானே நொந்து கொண்டாள்.

நாம் இவர்கள் மன ஆறுதலுக்கு, தனிமை கொடுத்துப் பண்ணை வீட்டுக்குச் செல்லுவோம்.

ராம் பிரசாத் சற்று பதட்டமாகத் திரிந்து கொண்டிருக்க, "என்னடா ஆச்சு?" என்று வினவினார் சிவசைலம் ராம் பிரசாத்தின் தந்தை பொறுப்போடு...

"அதெல்லாம் ஒன்னும் இல்லை அப்பா..." என்று ராம் பிரசாத் மழுப்ப, "போன இடத்தில் ஒன்னும் பிரச்சனை இல்லையே?" என்று சந்துரு தன் கண்களைச் சுருக்கி, சந்தேக பார்வையோடு கேட்டான்.

"ம்... க்கும்… இதெல்லாம் சரியா கேட்பாக... வந்த மனுஷனை வான்னு உள்ளே கூப்பிடாம வியாக்கியானம் பேசுவாக' என்று எண்ணியபடி கோமதி கழுத்தை நொடிக்க... "அதெல்லாம் ஒன்னும் இல்லை அண்ணா..." என்று ராம் பிரசாத் தன் தலையை இருபக்கமும் மறுப்பாகத் தலை அசைத்தான்.

நந்தினி கோமதி அருகே பட்டாளை தூணில் சாய்ந்து அங்கு நடப்பவற்றை அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள்.

"ராம்... உத்தமி இருந்தாளா?" என்று பார்வதி வினவ, "இல்லமா.... அம்மா இல்லை... நாங்க கிளம்பும்போது தான் வந்தாக..." என்று ராம் தரையில் அமர்ந்தபடி கூற, "அது தானே பாத்தேன்..." என்று பார்வதி சலிப்பாகக் கூறினார்.

"அதுவும் நல்லது தான்..." என்று சந்துரு கூற, ஆமோதிப்பாகத் தலை அசைத்தார் சிவசைலம்.

"உனக்கு என்ன யோசனை?" என்று சிவசைலம் மீண்டும் வினவ, 'நாமளே பரவால்லை... நம்மளை விட இவங்க எல்லாரும் நிறையக் கேள்வி கேட்பாங்க போல...'என்று எண்ணியபடி ராம் பிரசாத்தின் பதிலுக்காகக் காத்திருந்தாள் நந்தினி.

"வேலையைப் பத்தி தான் அப்பா?" என்று ராம் பிரசாத் கூற, "நானே கேட்கணும்ன்னு நினச்சேன்... என்ன பண்ண போற?" என்று சந்துரு கேள்வியாக நிறுத்தினான்.

"விவசாயம்..." என்று ராம் பிரசாத் கூற, அனைவரும் ராம் பிரசாத்தை அதிர்ச்சியாகப் பார்த்தனர்.

"நீ படிச்ச படிப்புக்கும் விவசாயத்திற்கும் என்ன சம்பந்தம்?" என்று சிவசைலம் கேட்க, "சந்துருவுக்கு விவசாயத்தில் எல்லா நுணுக்கங்களும் தெரியும்... உனக்கு என்ன தெரியும்?" என்று பார்வதி வினவ, கோமதி அவரை ஆமோதிப்பது போல் தலை அசைத்தாள்.

நந்தினி அங்கு நடப்பவற்றை அமைதியாகக் கண்காணித்துக் கொண்டிருந்தாள்.

"அண்ணன் இருக்கிற தைரியத்தில் தான் இந்த யோசனையே அம்மா... நான் படித்த படிப்பை விவசாயத்தில் செலுத்தணும்... நாம விவசாயத்தை நவீன முறையில் விஞ்ஞான அறிவோடு பண்ணனும்..." என்று ராம் பிரசாத் ஆர்வமாகக் கூற… அனைவரும் ராம் பிரசாத்தை குழப்பமாகப் பார்க்க… நந்தினி ராம் பிரசாத்தை யோசனையாகப் பார்த்தாள்.

"நான் ரோபோட் சம்மந்தமா தான் படிச்சிருக்கேன்... ரோபோட்ன்னா பெருசா தான் இருக்கணும்... மனிதர்கள் மாதிரி தான் இருக்கணும்னு அவசியம் இல்லை... ஒவ்வொரு செயலுக்கும் தனித்தனியா மெஷின் செய்யலாம்..." என்று ராம் பிரசாத் கூற, "ஏண்டா... இதெல்லாம் சரி பட்டு வராது... நடக்குறத பேசு..." என்று பார்வதி நிதர்சன தன்மையோடு பேசினார்.

ராம் பிரசாத் பதில் எதுவும் கூறாமல், தன் தாயை பார்க்க… "எனக்கும் உங்க அம்மா சொல்றது தான் சரின்னு படுது... நம்ம நிலத்தை நம்பி நிறைய குடும்பங்கள் இருக்கு... எக்கச்சக்க மக்களின் பசிக்கான பதில் இதில் தான் இருக்கு... அப்படி இருக்கும்போது நாம இதெல்லாம் செய்றதுக்கு விவசாயம் என்ன விளையாட்டு காரியமா?" என்று கேட்டார் சிவசைலம்.

ராம் பிரசாத் தன் பெற்றோரை ஏமாற்றமாகப் பார்க்க, "அப்படி இல்லை மாமா... எனக்கு விவசாயம் பத்தி பெருசா தெரியாது... ஆனால் விவசாயத்தை நல்ல டெக்கனிகளா பண்ண முடியும் மாமா... நான் நிறைய படிச்சிருக்கேன்... தண்ணீர் ஊற்றும் முறையிலிருந்து, உழுது பயிரிடுற வரைக்கும்... அப்புறம் களை பறிக்கிறது... இப்படி எல்லாமே டெக்கனிகளா பண்ண முடியும்..." என்று நந்தினி ஆர்வமாகக் கூறினாள்.

"இதுக்கெல்லாம் ஏற்கனவே மெஷின் இருக்கு மா..." என்று சந்துரு கூற, "இல்லை அண்ணா நான் சொல்றது அடுத்த லெவல்... எல்லாமே automated..." என்று ராம் பிரசாத் ஆர்வமாகக் கூறினான்.

"இல்லை... நீங்கச் சொல்றது எங்களுக்கே புரியலை... புதுசா எதாவது பண்ணா கிராமத்தில் எதிர்ப்பு கிளம்பும்... ஆளுக்கொன்னு சொல்லுவாங்க..." என்று யோசனையாகக் கூறி, தனக்கு சம்மதம் என்பதை அவர் அறியாமல் கூறி கொண்டிருந்தார் சிவசைலம்.



"அப்பா ஊரைப் பத்தி யோசிக்காதீங்க... என்ன பிரச்சனை வந்தாலும் பாத்துக்கலாம்... தம்பி ஆசை படுறான்... நம்ம குளக்கரை பக்கத்தில் இருக்கிற நிலம் நல்ல விளைச்சல் நிலம்... அது ஏலத்துக்கு வருதுன்னு நான் கேள்விப்பட்டேன்...அதை வாங்கி கொடுத்திருவோம்... நம்மால் முடிந்த பணத்தை அவனுக்குக் கொடுப்போம்... மத்தது வங்கில கடன் வாங்குவோம்..." என்று சந்துரு ராம்பிரசாத்துக்கு சாதகமாக பேசச் சிவசைலம் யோசனையோடு சம்மதமாகத் தலை அசைத்தார்.

"அப்பா... ரொம்ப யோசிக்காதீங்க... இப்ப இருக்கிற விவசாய நிலத்தைக் கொடுக்கலை... அதனால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் வராது...தம்பி முயற்சி வெற்றி பெற்றா லாபம்... இல்லைனாலும் நாம அதில் அடுத்ததாக விவசாயத்தை பண்ணுவோம்..." என்று சந்துரு தெளிவாகக் கூற, சிவசைலம் தலை அசைத்தார்.
 




Last edited:

akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,900
Reaction score
46,305
Location
Earth
"என்ன நீங்க அவுக சொல்றதுக்கெல்லாம் தலையைத் தலையை ஆட்டிகிட்டு இருக்கீங்க... எவ்வளவு செலவு... நஷ்டம் வந்தா என்ன பண்றது?" என்று பார்வதி சிவசைலத்தை பார்த்துக் கேட்க, "என்ன பாரவ்தி நீ... நாமளே நம்ம பையனை நம்பலைனா எப்படி? அதுவும் நல்லதே நடக்கும்னு நம்புவோம்..." என்று சிவசைலம் தன் மகன்களுக்கு ஆதரவாகப் பேசினார்.

பார்வதி ஏற்காமல் பார்க்க, "பணம் கொடுக்கச் சந்துரு தான் யோசிக்கணும்... அவன் சரின்னு தான் சொல்லுதான்... கோமதி உனக்கு எதுவும் பிரச்சனை இருக்கா?" என்று தன் மருமகளை பார்த்துக் கேட்க, "மாமா... எனக்கு ராம் புதுசா கண்டுபிடிச்சி... பெருசா வரது தான் சந்தோசம்... அவுக இஷ்டப்படி செய்யட்டும்..." என்று கோமதி ராம் பிரசாத்துக்கு ஆதரவாகப் பேச, சந்துரு தன் மனைவியைப் பெருமையோடு பார்த்தான்.

ராம் பிரசாத் தன் அண்ணியை நன்றி உணர்ச்சியோடு பார்க்க, "அப்படியே சமைக்க... வீட்டு வேலை எல்லாம் பார்க்க ஒரு மெஷின் செஞ்சி குடு ராம்..." என்று கோமதி ராம் ப்ரசாத்திடம் கேட்க... "அது எல்லாம் ஒரு விஷயமே இல்லை... நான் உங்களுக்குச் செஞ்சி தரேன்..." என்று நந்தினி கூற, ராம் பிரசாத் நந்தினியை அதிர்ச்சியாகப் பார்த்தான்.

'இவளுக்கு எல்லாம் தெரியும் போலும்... விவரமா பேசுறாளே...' என்ற எண்ணத்தோடு தன் மருமகளை பார்வதி பெருமையாகப் பார்க்க, கோமதி அதே எண்ணத்தோடு நந்தினியைச் சற்று பொறாமையாகப் பார்த்தாள்.

கோமதியின் கண்களில் தெரிந்த உணர்வை நொடி பொழுதில் உணர்ந்து கொண்ட நந்தினி, "எனக்குச் சமையல் தெரியாது... இன்னும் நிறைய வீட்டு வேலை எல்லாம் தெரியாது... உங்க கிட்ட தான் ரகசியமா சொல்றேன்...நீங்க எனக்கு சொல்லிக் குடுங்க... அதை வைத்தே நான் உங்களுக்கு மெஷின் செய்து தரேன்..." என்று கோமதியின் காதில் கிசுகிசுப்பாகப் பேசி நட்புக் கரம் நீட்டினாள்.

நந்தினியின் சாமர்த்தியசாலித்தனத்தை மனதில் மெச்சிய படி, சிரித்த முகமாகத் தலை அசைத்தாள் கோமதி.

குடும்பம் ஒற்றுமையாக இருக்க, நீ... நான்... என்ற போட்டி எதற்கென்று அறியாதவளா கோமதி. நந்தினி இறங்கி சுமுகமாக இருக்க முயற்சிக்கும் பொழுது குடும்ப நலனை விரும்பும் கோமதி அதை ஏன் கெடுக்க வேண்டும்.

கோமதி நந்தினியை பார்த்துப் புன்னகை பூக்க, தன் அம்பு சரியாகப் பாய்ந்ததை உணர்த்த நந்தினி தன் கவனத்தை ராம் ப்ரசாத்திடம் திருப்பினாள்.

பார்வதி யோசனையாக அமர்ந்திருக்க, "பார்த்துப் பண்ணுங்க..." என்று அத்தோடு பேச்சை முடித்துக் கொண்டு தோட்டத்திற்குச் சென்றார் சிவசைலம்.

அனைவரும் வேலையில் மூழ்கி விட, தங்கள் அறையில் அமர்ந்து, நந்தினி மும்முரமாக laptop இல் மூழ்க, ராம் பிரசாத் அவளைச் சுவாரஸ்யமின்றி பார்த்தான்.

அப்பொழுது, ராம் பிரசாத்தின் மொபைல் ஒலிக்க... ராம் பிரசாத் அதை யோசனையாகப் பார்த்தான்.

'வைஷ்ணவியிடம் பேச வேண்டும்... ஆனால், இங்கு நந்தினி இருக்கிறாள்... வெளியே சென்று பேசி யாராவது கேட்டுவிட்டால் இன்னும் பிரச்சனை ஆகிடும்... நந்தினியிடம் மறைக்கப் போவதில்லை என்றாலும்...' என்று ராம் பிரசாத் சிந்திக்க, நந்தினியின் "பிரசாத்" என்ற அழைப்பு அவன் கவனத்தைத் திசை திருப்பியது.

"விவசாயம் மற்றும் ரோபோடிக்ஸ்..." இது சம்மந்தமாக நந்தினி குறிப்புகள் எடுத்துப் பேச, 'இருக்கிற பிரச்சனையில் இவ வேற... இவகிட்ட இதெல்லாம் யார் கேட்டா...' என்று எண்ணியபடி, "மேடம்... உங்க உதவியை நாங்க கேட்கலை..." என்று கடுப்பாகக் கூறினான் ராம் பிரசாத்.

"நான் உதவி எல்லாம் செய்யலை... நான் எதுக்கு உங்களுக்கு உதவி பண்ணனும்?" என்று நந்தினி கேட்க, 'இவள் இப்பொழுது செய்றதுக்கு பெயர் என்ன?' என்று மனதில் எழும்பிய கேள்வியோடு, அவளைக் குழப்பமாகப் பார்த்தான் ராம் பிரசாத்.

"I am a part of your research project... முடிந்தால் என் கூட work பண்ணுங்க... இல்லையா நான் மாமா, அத்தான் கிட்ட கேட்டு எனக்குத் தனியா நிலம் வாங்கி குடுங்க... லோன் வாங்கி குடுங்க research பண்றேன்னு கேட்பேன்... நீங்கப் படிச்ச அதே படிப்பு... அதே திறமை... அதே அறிவு என் கிட்ட இருக்கும்போது... ஆராய்ச்சியை நீங்க மட்டும் தான் பண்ணுவீங்களா? நான் பண்ண கூடாதா?" என்று பிடிவாதமாகக் கேட்டாள் நந்தினி.

அவள் கேட்ட விதத்தில் கோபம் அடைந்த ராம் பிரசாத், "அதை உங்க அப்பா கிட்ட கேளு, ஏன் எங்க வீட்டில் கேக்குற?" என்று ராம் பிரசாத் கோபமாகக் கூற, "உங்க கிட்ட கேக்கணுமுன்னு தான் கல்யாணம் பண்ணி வச்சிருக்காங்க... இனி எல்லாம் எங்க அப்பா கிட்ட இருந்து அஞ்சு பைசா கூட கேட்க முடியாது... கல்யாணமுன்னு நகை போட்டு தாரை வார்த்துக் கொடுக்கும் போதே எங்க அம்மா... அப்பாவுக்கு எல்லா பொறுப்பும் முடிச்சிருச்சு..." என்று நந்தினி அழுத்தமாகக் கூறினாள்.

ராம் பிரசாத் ஏதோ கோபத்தில் அவ்வாறு கூறினாலும், நந்தினியின் தைரியமான வாக்கு வாதம் அவனை மெய் சிலிர்க்க வைத்தது.

'எல்லா பெண்களும்... இப்படி நிமிர்ந்து நின்றால்...' என்ற பிரமிப்போடு நந்தினியைப் பார்த்தான் ராம் பிரசாத்.

ஆனால் தன் பிரமிப்பை நந்தினி அறியா வண்ணம் மறைத்துக் கொண்டு, "உன் ஆராய்ச்சிக்கெல்லாம் நாங்க செலவு பண்ண முடியாது..." என்று வீம்பாகக் கூறினான் ராம் பிரசாத்.

"சரி விடுங்க... இந்த வேலை செய்தா நஷ்டம் ஆகிரும்... அது தான் என்னைப் பண்ண வேண்டாமுன்னு சொல்லிட்டீங்கன்னு எல்லார் கிட்டயும் சொல்றேன்..." என்று நந்தினி அவர்கள் அறையை விட்டு வெளியே செல்ல… அவள் கைகளை அழுத்தமாகப் பிடித்து, "லூசா நீ..." என்று கோபமாகக் கேட்டான் ராம் பிரசாத்.

"லூசா? யாரு? நானா? நீங்களா?" என்று நிறுத்தி நிதானமாகக் கேட்டாள் நந்தினி.

"ஏய்... யாரை லூசுன்னு சொல்ற?" என்று ராம் பிரசாத் தன் பற்களைக் கடிக்க, "இந்த மிரட்டுற வேலை... பல்லைக் கடிக்குற வேலை எல்லாம் என்கிட்டே வேண்டாம்... மிரட்டிச் சுத்த வேஸ்ட்... நான் பயப்பட மாட்டேன்... பல்லைக் கடிச்சா உங்க பல் தான் சீக்கிரம் விழுந்திரும்... வயசான காலத்தில் கஷ்டப்படுவீங்க... அதனால இனிமேல் பல்லைக் கடிக்காதீங்க..." என்று நந்தினி இலவச ஆலோசனை வழங்கினாள்.

'என் வாழ்வில் பிரச்சனை நந்தினியா இல்லை வைஷ்ணவியா?' என்ற கேள்விக்குப் பதில் தெரியாமல், "உஷ்..." என்ற பெருமூச்சோடு அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தான் ராம் பிரசாத்.
 




Last edited:

akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,900
Reaction score
46,305
Location
Earth
"பக்கத்தில் ஒரு புத்திசாலி இருந்தா அவங்களை கூட்டணியில் சேத்துக்கணும்..." என்று நந்தினி கூற, "யாரு?" என்று அங்குமிங்கும் தேடினான் ராம் பிரசாத்.

"பிரசாத்... இதெல்லாம் பழைய ஜோக்... நாங்க நிறைய படத்துல பாத்துட்டோம்... நிறைய கதையில படிச்சிட்டோம்..." என்று நந்தினி அவனைக் கலாய்க்க, "உனக்கு என்ன வேணும்?" என்று பொறுமை இழந்தவனாகக் கேட்டான் ராம் பிரசாத்.

"நீங்க ஏதோ பதட்டத்தில் இருக்கீங்க... அது தான் நிதானம் இல்லாம என்னன்னவோ பேசுறீங்க..." என்று ராம் பிரசாத்தின் பொறுமை இழந்த கேள்வியில் நந்தினி அத்தனை நேரம் இருந்த குறும்பு தனம் மறைந்து தீவிர முகபாவனையோடு கூறினாள்.

ராம் பிரசாத் துணுக்குற்றவனாய் அவளைப் பார்க்க, அவனுக்கு தனிமை கொடுத்து நந்தினி அவர்கள் அறையிலிருந்து வெளியே சென்றாள்.

'நான் படித்த படிப்பு வீணாகக் கூடாது... சுதந்திரமாகச் சிந்தித்து செயல் பட வேண்டும்... அது உபயோகமாகவும் இருக்க வேண்டுமென்றால்... நான் பிரசாத்தோடு இணைத்துப் பணிபுரிய வேண்டும்...' போன்ற எண்ணங்கள் நந்தினியின் மனதில் எழுந்தது.

ராம் பிரசாத் செய்வதறியாமல் நாற்காலியில் சாய்வாக அமர்ந்து… தன் கண்களை இறுக மூடிக் கொண்டான்.

ராம் பிரசாத்தின் மனதில் பல எண்ணங்கள். தவறு என்று அறிந்தாலும், வைஷ்ணவி பற்றிய எண்ணங்கள் அவன் மனதில் எழுந்து கொண்டு தான் இருந்தது. அதுவும் இன்று வைஷ்ணவி அழைத்ததிலிருந்து... பல குழப்பங்கள்... பல கேள்விகள்...

'நான் அனைத்தயும் எப்படி சமாளிக்க போகிறேன்?' என்ற கேள்வி ராம் பிரசாத்தின் மனதில் பூதாகரமாய் எழுந்தது.

'நான் ஏன் நந்தினியிடம் கோபமாக பேசினேன்... பாவம் அவ என்ன தப்பு பண்னா என்னை கல்யாணம் செய்ததை தவிர?' என்று நந்தினிக்காக வருத்தப்பட்டான்.

நந்தியை காயப்படுத்தும் நோக்கமெல்லாம் ராம் பிரசாத்துக்கு இல்லை. 'நந்தினியிடம் பேச்சு இல்லாமல் விலகி நிற்க வேண்டும் என்று எண்ணினாலும், தன் சாமர்த்திய பேச்சால்... என்னை விலக விடமால் செய்கிறாள்... பக்குவமான பெண் என்பதால், நான் சொன்ன விஷயங்களை இயல்பாக எடுத்துக் கொண்டாலும்… இனி புதிதாக பிரச்சனை வந்தால் நந்தினி அமைதியாக இருக்க மாட்டாள்...' என்று நந்தினி பற்றிய ராம் பிரசாத்தின் எண்ணங்கள் அவனை எச்சரித்து நின்றது.

ஜன்னல் வழியாகக் காற்று சில்லென்று வீசியது. நம்மால் ராம் பிரசாத் அறையிலுள்ள ஜன்னல் வழியாகச் சாலையில் சோர்வாக நடந்து செல்லும் வாசுதேவனை காண முடிகிறது.

வாசுதேவன் வீட்டிற்குள் நுழைய, "ஏண்டா... உம் பொஞ்சாதி நீ போனதிலிருந்து அறையை விட்டு வெளியே வரவே இல்லை... வேலை எல்லாம் அப்படி அப்படியே கிடக்கு... என்ன தான் பண்ணுதாலோ அறைக்குள்ள... சந்தோஷ் கூட வெளிய தான் விளையாடுதான்..." என்று உத்தமி குற்றப் பத்திரிக்கை படிக்க… வாசுதேவன் தலை அசைத்துக் கொண்டு உள்ளே சென்றான்.

உத்தமி தன் போக்கில் முணுமுணுத்துக்கொண்டிருந்தார்.



வாசுதேவன் அறைக்குள் சென்று நாற்காலியில் அமர முற்பட, அவன் வழியை மறைத்தபடி, "அத்தான்..." என்று

கோபமாக... அழுத்தமாக அழைத்தாள் பவித்ரா.

பவித்ராவின் அழைப்பில், அவளைப் பார்த்தான் வாசுதேவன்.

பவித்ராவின் கண்கள் அழுது சிவந்திருந்தது. அவள் சோகமான முகம் வாசுதேவனின் மனதைத் தொட, எதுவும் பேசாமல் அமைதியாகப் பவித்ராவை பார்த்தான்.

"அத்தான்... கோபமாக இருந்தா என்னைத் திட்டுங்க... அதுக்காகப் பேசாமெல்லாம் இருக்க கூடாது... இப்படி பேசாம வெளிய போகக் கூடாது..." என்று பவித்ரா கண்டிப்போடு கூறினாள்.

'செய்றதையும் செய்திட்டு... பேசுறதையும் பேசிட்டு... இப்ப இப்படி மிரட்டல் வேற... இம்புட்டு தைரியமும் என்கிட்டே மட்டும் தான்... யாரு என்ன சொன்னாலும் என்னைச் சந்தேக பட வேண்டியது... இல்லை அம்மாவைப் புரிஞ்சிக்கிறது கிடையாது...' என்ற எண்ணத்தோடு வாசுதேவன் பவித்ராவை பார்த்தான்.

'பேசினால் தான் வழி விடுவேன்...' என்று பிடிவாதமாகப் பவித்ரா நிற்க, " பவி… உன்னைத் தூக்கி அப்படி போடுறதுக்கு எனக்கு எவ்வளவு நேரம் ஆகும்?" என்று அவன் காதில் கிசுகிசுத்தான் வாசுதேவன்.

"எதுக்கு அத்தான் என்னை தூக்கி போடணும்? அது தான் என்னைத் திட்டினாலும் பரவால்லைன்னு சொன்னேன்ல?" என்று பவித்ரா கண்கலங்க, " எட்டி… யாரைத் திட்டச் சொல்ற? புள்ள தாச்சியையா? இல்லை என் பவியையா? இல்லை எம்பொஞ்சாதியையா?" என்று வாசுதேவன் புருவம் உயர்த்தி கேட்டான்.



அவன் குரல், சொல், முகம் அவன் கோபத்தின் அளவை கூற, 'என் அத்தானுக்கு என்மேல் கோபம் எவ்வளவு நேரம் தாங்கும் என்று எனக்குத் தெரியாதா?' என்ற எண்ணத்தோடு பவித்ரா வாசுதேவனை காதல் பொங்கப் பார்த்தாள்.

"நெக்கலஸ் அன்னைக்கே நீங்க அவசரப்பட்டுக் குடுத்துடீங்க... உங்களுக்கு விஷயம் இன்னக்கி தானே உறுதியா தெரியும்... எனக்குக் கிபிட் எதுவும் கிடையாதா?" என்று சரசமாக வாசுதேவனை சமாதானப்படுத்தும் விதமாக வினவினாள் பவித்ரா.

கோபம், வருத்தம் அனைத்தையும் மறைத்துக் கொண்டு, "உனக்கு என்ன வேணும் பவி?" என்று அவள் கண்களைப் பார்த்து ஆழமாகக் கேட்டான் வாசுதேவன்.

"என்னை மன்னிச்சிருங்க அத்தான்... நான் உங்க கிட்ட தான் முதலில் சொல்லிருக்கணும்... நீங்க ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பீங்க... யார் என்ன சொன்னா என்னனு நான் யோசிச்சிருக்கணும்... சந்தோஷ பட வேண்டியவங்களை வருத்தப்பட வச்சிட்டேன்..." என்று மன்னிப்பை பரிசாக கேட்டாள் வாசுதேவனின் மனைவி.

வாசுதேவன் மெலிதாகப் புன்னகைத்தான். பவித்ராவின் தலை கோதி, அவள் மனதை படிக்கும் நோக்கோடு பவித்ராவின் கண்களை ஊடுருவி பார்த்தான். பவித்ராவின் கண்கள் வாசுதேவன் மீது அவள் கொண்டுள்ள அளவில்லா அன்பை காட்டியது.

வாசுதேவனின் பார்வை, செயல் என ஒவ்வொன்றும் தன் மனைவி கேட்ட மன்னிப்பை முழு மனதாய் கொடுக்க... வாசுதேவனின் தலையோ இரு பக்கமும் மறுப்பாய் அசைந்தது.

"எட்டி... தப்பு பண்ணா... நிச்சயம் தண்டனை உண்டு..." என்று அவன் உதடுகள் மெலிதாகப் பவித்ராவின் காதில் கிசுகிசுத்தது.

வாசுதேவன் கூறிய தண்டனையில் தன் இரு கண்களையும் விரித்து அவனை பரிதாபமாகப் பவித்ரா பார்க்க… தன் மனைவியை புருவம் உயர்த்தி, மீசையை முறுக்கி… குறும்பாய் பார்த்தான் வாசுதேவன்.

இரண்டல்ல ஒன்று இணையாகப் பயணிக்கும்…

அடுத்த பதிவோடு உங்களை செவ்வாய் அன்று சந்திக்கிறேன்...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top