• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Irandalla Ondru Episode 27

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,908
Reaction score
46,355
Location
Earth
Dear Friends,
Thank you so much for you likes and comments... :)

இரண்டல்ல ஒன்று – 27

பவித்ரா ஆதரவின்றி தரையில் சரிந்து விழ, வாசுதேவன் வேதனையோடு வேறு பக்கம் திரும்பி இருக்க... "மதினி..." என்ற சத்தமான அழைப்போடு அவளைத் தாங்கி பிடித்தாள் சுபா.

சுபா எழுப்பிய சத்தத்தில், வாசுதேவன் பதட்டத்தோடு திரும்பினான்.

பவித்ராவை தன் மீது சாய்த்துக் கொண்டு, "பவி... எட்டி பவி..." என்று பதறிய குரலில் எழுப்பினான் வாசு தேவன்.

பவித்ரா மூச்சுப் பேச்சின்றி கிடந்தாள். பவித்ராவை எழுப்ப முயன்ற வாசுதேவனின் கைகள் சில்லிட்டது. "வாசு அண்ணா... எனக்குத் தெரியும்... நீ அம்மா பேச்சைக் கேட்கும் போதே... இப்படியொரு நாள் நடக்கும்னு தெரியும்..." என்று சுபா வாசுதேவனிடம் காட்டமாகக் கூறினாள்.

"ஒன்னும் நடக்கலை... எல்லாம் அதிர்ச்சி மயக்கம் தான்... இதுவரைக்கும் திட்டாத நீ திடீருன்னு திட்டினா அப்படி தான்..." என்று கூறிக் கொண்டே, தண்ணீரை வேகமாக பவித்ராவின் முகத்தில் தெளித்தார் உத்தமி.

"அம்மா... இவ்வளவு வேகமா தண்ணீர் முகத்தில் அடிச்சா... அவளுக்கு வலிக்கும் அம்மா..." என்று கூறியபடி, தன் மேல் கிடந்த துண்டால் பவித்ராவின் முகத்தைத் துடைத்தான் வாசுதேவன்.

"இதுக்கு மட்டும் இல்லைடா... நீ பேசின பேச்சுக்கும் வலிக்கும்..." என்று வாசுதேவனை வெறுப்பாகப் பார்த்தபடி கூறினார் மஹாதேவன்.

"எல்லாம் என் தப்பு தான்... எல்லாம் என் தப்பு தான்... இத்தனை வருஷம் அவளே தனியா சமாளிச்சாளே... இன்னைக்கும் சமாளிச்சிருவான்னு நினைச்சி அமைதியா இருந்தது... என் தப்பு தான்..." என்று தலையில் அடித்துக் கொண்டார் மஹாதேவன்.

"பவி... எட்டி பவி..." என்பதைத் தவிர வாசுதேவன் எதுவும் பேசவில்லை.

வாசுதேவன் பவித்ராவை எழுப்ப முயற்சி செய்து கொண்டிருக்க, "என்ன நடந்திருச்சுன்னு ஆளாளுக்கு குதிக்கிறீங்க? அவளும் நடிக்கறா?" என்று உத்தமி சீற, " உன்னை மாதிரி நினைச்சியா? உன்னைப் பத்தி எனக்கு தெரியாதுன்னு நினைக்காத... பிள்ளைங்க முன்னாடி நான் எதையும் சொல்ல கூடாதுன்னு நினைக்கிறேன்... இல்லனா நடக்கிறதே வேற..." என்று உத்தமியை மிரட்டினார் மஹாதேவன்.

இது போல் சில சமயம் கோபித்துக் கொள்ளும் கணவனின் குணம் அறிந்து, உத்தமி தன் வாயை கப்சிப் என்று மூடிக் கொண்டார்.

"வாசு... பவித்ராவை காருக்கு தூக்கிட்டு போ... நீ ஓட்ட வேண்டாம்... நான் வண்டி எடுக்கறேன்... சுபா நீ கூட வா... அவங்க அம்மா அப்பா இங்கிருக்கும் பொழுது அவுக கிட்ட சொல்லாம மருத்துவமனைக்கு கூட்டிட்டு போறது தப்பு... அவுங்களுக்கு போகும் வழியில் சொல்லிடு..." என்று கட்டளையை பரப்பித்துக் கொண்டு கார் சாவியை எடுத்துக் கொண்டு கிளம்பினார் மஹாதேவன்.

வாசுதேவன் எதுவும் பேசாமல், பவித்ராவை கைகளில் ஏந்தியபடி அமைதியாக இருந்தான். அதற்குள் சுபாவின் கணவர் கார்த்திகேயன் விஷயமறிந்து, அவர்களுக்காக மருத்துவமனை வாசலில் காத்திருந்தான்.

வாசுதேவன் பவித்ராவை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்குள் செல்ல, மஹாதேவன் அவன் பின் தொடர்ந்து சென்றார்.

வாசுதேவன், மஹாதேவன், பவித்ரா உள்ளே செல்ல, கார்த்திகேயன், சுபாவை கை பிடித்து நிறுத்தினான்.

"என்ன நடந்தது சுபா?" என்று தன் கண்களைச் சுருக்கி கேட்டான் கார்த்திகேயன்.

சுபா நடந்ததைக் கூற, அவள் கன்னத்தில் பளார் என்று அறைந்தான் அவள் கணவன்.

"நீ உங்க அப்பா மாதிரின்னு நினைச்சன் டீ... உங்க அம்மா மாதிரின்னு காட்டிட்டியே டீ.... அது சரி... உங்க அம்மா புத்தி உனக்கு இல்லாம போகுமா?" என்று கார்த்திகேயன் சுபாவை திட்ட, சுபா ஏதோ பேச வாயெடுத்தாள்.

"பேசாதா... உனக்கு உங்க அம்மாவை பத்தி தெரியாது... பவித்ரா அக்கா பாவம் டீ... இத்தனை வருஷம் அவங்க உங்க கிட்ட நாத்தனார் மாதிரியா நடந்துக்கிட்டாங்க? நீ உன் நாத்தனார் புத்தியை காட்டிட்டல... ச்ச..." என்று கார்த்திகேயன் அவளை வெறுப்பாய் பார்த்தான்.

"இல்லங்க... அம்மா நெஞ்சை பிடிச்சதால் கொஞ்சம் நிதானம் தவறிட்டேன்..." என்று கண்களை கசக்கினாள் சுபா.

"உங்க அம்மா நடிச்சிருப்பாங்க டீ... இது உங்க நொண்ணக்கு புரியாது... அப்படியே துடிச்சு போயிருப்பாரு... உனக்கு எங்க போச்சு அறிவு? உங்க வீட்டில் என் கிட்ட மரியாதை கொடுத்து பேசுறது அவுக மட்டும் தான். அவுகளையும் இங்க கொண்டு வந்து படுக்க வச்சிடீங்க மொத்த குடும்பமுமா சேர்ந்து.... உங்க அப்பா நல்லவரா இருந்து ப்ரோஜனமே கிடையாது... வாயே திறக்க மாட்டாக...." என்று சுபாவிடம் ஏறினான் கார்த்திகேயன்.

"இத பார்... நீ அங்க போகாம இருந்தாலே எல்லாம் சரி ஆகிரும்... நீ இருக்கிற தயவுல தான் உங்க அம்மா ஆட்டம் அதிகமா இருக்கு... அங்க எல்லாம் சரியாகுற வரைக்கும், நீ உங்க வீட்டு பக்கம் போக கூடாது..." என்று கார்த்திகேயன் கூற அவனை அதிர்ச்சியாக பார்த்தாள் சுபா.

"நான் உன்னை கல்யாணம் பண்ணிகிட்ட முறை தப்பு தான்... அதுக்கு தான் இத்தனை வருஷம் பொறுமையா இருந்தேன்... இனி இருக்க முடியாது... நான் சொல்றதை கேள்... இல்லை அம்மா... ஆட்டு குட்டின்னு உங்க வீட்டுக்குப் போன, அப்புறம் நடக்கிற கதையே வேற... எல்லாரையும் வகுந்துருவேன்..." என்று கார்த்திகேயன் கர்ஜனையாகக் கூற, சுபா இன்றைய குற்ற உணர்ச்சியில் வேறு வழியின்றி தலை அசைத்தாள்.

"போய்... அவுகளை பாரு... புள்ள தாச்சி வேற... என்ன பாவம் பண்ணமோ... இன்னைக்கி வரைக்கும் நமக்கு குழந்தை இல்லை... நீ இதை வேற சேர்த்து வச்சிருக்க..." என்று வருத்தமான குரலில் கார்த்திகேயன் கூற கண்களில் வலியோடு அவனைப் பார்த்தாள் சுபா.

சுபாவின் முகம் பார்த்து, சற்று கோபம் தணிந்தவனாக அவள் தலை கோதி, "போ ... போய் அவகளை பாரும்மா... அவுகளுக்கு ஒன்னும் ஆகாது " என்று சுபாவை ஆறுதல் படுத்தி உள்ளே அனுப்பினான் கார்த்திகேயன்.

அதற்குள் கோவிலுக்குச் சென்று கொண்டிருந்த சந்திரசேகரின் குடும்பம், விஷயம் அறிந்து மொத்த குடும்பமாக மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர்.

பவித்ராவின் பெற்றோர் செல்வி, ஆவுடையப்பன் இருவரும் வர அனைவரும் பவித்ராவின் நிலை அறிந்து கொள்ள ஐ.சி.யூ. வாசலில் நின்றனர்.

வாசுதேவன் முகத்தில் உயிரோட்டம் இல்லாமல், வாடிய முகத்தோடு கண்களை இறுக மூடிக்கொண்டு, தன் கைகளை மார்பின் குறுக்கே கட்டியபடி சுவரில் சாய்ந்திருந்தான்.

அனைவரும் கவலை தோய்ந்த முகத்தோடு காத்திருக்க, நந்தினி ஆராயும் கண்களோடு கண்ணாடி வழியே பவித்ராவை பார்த்தாள்.

அழுது சிவந்து வீங்கியிருப்பது போல் பவித்ராவின் முகம் காட்சி அளிக்க, நந்தினி வாசுதேவன் அருகே சென்றாள்.

"அத்தான்... அக்கா அழுதாளா?" என்று தன் கண்களைச் சுருக்கி கேட்டாள் நந்தினி.

நந்தினியின் கேள்வியில் கண்களைத் திறந்த வாசுதேவன், பதில் கூறாமல் மௌனமாக நின்றான்.

வாசுதேவனின் மௌனம் நந்தினிக்குச் சந்தேகத்தைக் கிளப்ப, "அக்காவை அடிச்சீங்களா?" என்று நந்தினி வாசுதேவனைப் பார்த்து கூர்மையாகக் கேட்டாள்.

அனைவரும் பதட்டத்தோடு வாசுதேவனைப் பார்க்க, வாசுதேவன் மறுப்பாகத் தலை அசைத்தான்.
 
Last edited:

akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,908
Reaction score
46,355
Location
Earth
"அப்ப, அக்காவுக்கு என்ன ஆச்சு? என்ன பண்ணீங்க? அக்கா அழுத்திருக்கா... நல்லா இருந்தவ தீடீருன்னு ஏன் இப்படி மூச்சுப் பேச்சு இல்லாமல் இருக்கணும்?" என்று நந்தினி கேள்வி மேல் கேள்வி கேட்க, வாசுதேவன் அவன் கண்களை இறுக மூடிக் கொண்டான்.

வாசுதேவனின் மௌனம் நந்தினியின் கோபத்தைக் கிளப்ப, அவன் சட்டையைக் கொத்தாகப் பிடித்தாள் நந்தினி.

"அத்தான் சொல்லுங்க... வீட்டில் என்ன நடந்துச்சு?" என்று ஆவேசமாகக் கேட்டாள் நந்தினி.

பதறிய பவித்ராவின் தயார் செல்வி, "நந்தினி என்ன காரியம் பண்ற?" அவளை அறைய முற்படுகையில், "அத்தை..." என்று ராம் பிரசாத்தின் குரல் ஓங்கி ஒலித்தது.

"மாப்பிளை..." என்று செல்வி தடுமாற, "இப்படி எங்களை அடக்கி அடக்கி தான் அக்கா இப்படி கிடக்குறா..." என்று நந்தினி காட்டமாகக் கூறினாள்.

"நந்தினி வாயை மூடு..." என்று செல்வி கூற, "ஏன் மூடனும்... கூட பிறந்த அண்ணன், தம்பி இல்லனா கேட்க ஆள் இல்லைனு நினைப்பா... அவளுக்கு எதாவது ஒன்னுனா நான் கேட்பேன்..." என்று நந்தினி கர்ஜித்தாள்.

"அதுக்கு எங்க வாசு சட்டையை பிடிப்பியா?" என்று சந்துருவின் தாயார் பார்வதி சண்டைக்கு வர, வாசு தலையில் கை வைத்து அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தான்.

"அம்மா..." என்று தன் தாயாரை அடக்கினான் ராம் பிரசாத்.

"என்னை ஏன் டா அடக்குற? உன் பொஞ்சாதிக்கு இம்புட்டு கோபம் நல்லதில்லை..." என்று பார்வதி ராம் ப்ரசாத்திடம் நந்தினியைக் கண்டிக்க, "அவ கேட்ட விதம் தப்பா இருக்கலாம்... ஆனால் அவ கேட்டதுல என்ன தப்பு இருக்கு?" என்று ராம் பிரசாத் பொறுமையாகக் கேட்டான்.

அனைவரும் ராம் பிரசாத்தை அதிர்ச்சியாகப் பார்க்க, "அவ பக்க நியாயத்தை யோசிங்களேன்..." என்று பவ்மயாக கூறினான் ராம் பிரசாத். அவன் கேள்வி வாசுதேவனுக்கு சாட்டை அடியாக இறங்கியது.

'நான் பவித்ராவின் பக்க நியாயத்தை யோசிக்கவே இல்லையோ? அவ கண் முழிக்கட்டும் எல்லாம் பேசி சரி பண்ணனும்...' என்று வாசுதேவன் சிந்திக்க, "அக்காவுக்கோ... குழந்தைக்கோ எதாவது ஆகட்டும்... அப்புறம் இருக்கு மொத்த குடும்பத்திற்கும்... உங்க அம்மாவை உண்டில்லைன்னு பண்ணிருவேன்... அவுங்க தான் பிரச்சனைக்கு காரணமா இருக்கும்..." என்று நந்தினி எச்சரித்தாள்.

வாசுதேவன் எதுவும் பேசும் மனநிலையில் இல்லை... மாற்றவர்கள் பேசுமுன் செல்வி முன்திக் கொண்டார்.

"நந்தினி நீ வாயை மூடு... மாப்பிள்ளை அவளை தயவு செஞ்சி வீட்டுக்கு கூட்டிட்டு போங்களேன்... இருக்கிற பிரச்சினையை பெருசு பண்ணிருவா போல..." என்று ராம் பிரசாத்தைப் பார்த்து கை எடுத்துக் கும்பிட்டார் செல்வி.

"அம்மா... அமைதியா இருங்க... அக்காவை பார்க்காம நான் வீட்டுக்குப் போக மாட்டேன்... இப்ப என்ன நான் அமைதியா இருக்கணும்... பொறுமையா இருக்கணும்... எதுவும் பேச கூடாது அது தானே... யார் என்ன சொன்னாலும் தலையை ஆட்டிக்கணும்... அவ்வளவு தானே... அப்படியே இருக்கேன்..." என்று கூறி அங்கு ஓரமாக இருந்த நாற்காலியில் அமைதியாக அமர்ந்தாள் நந்தினி.

"இன்னைக்கின்னு பார்த்து நான் வேற, நீங்க கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கலாம்ன்னு மதினியைப் பார்த்து சொன்னேன்..." என்று சுபா சந்துருவிடம் கண்கலங்க, "அது தானே... ஏமாளி குனிச்சிக்கிட்டே இருக்கணும்... மிதிக்கிறவங்க மிதிச்சிகிட்டே இருப்பீங்க?" என்று நந்தினி சலிப்பாகக் கேட்டாள்.

"நந்தினி... ப்ளீஸ் கொஞ்சம் அமைதியா இரு... அவங்க தப்பே பண்ணாலும், உன் அக்கா வீட்டு ஆளுங்க..." என்று ராம் பிரசாத் தன்மையாகக் கூற, "அதுக்கு?" என்று ராம் பிரசாத்தைக் கேள்வியாகப் பார்த்தாள் நந்தினி.

"அவங்களுக்கு உடம்பு சரி இல்லாத நேரத்தில், நீ அவங்க குடும்பத்தில் குழப்பத்தை உண்டு பண்றதை, பவித்ரா மதினியே விரும்ப மாட்டாங்க..." என்று ராம் பிரசாத் நந்தினியின் சிந்தனை நாடியை சரியாகப் பிடிக்க, "அக்காவுக்கு ஒன்னும் ஆகாதுல?" என்று சந்தேகமாய் கேட்டாள் நந்தினி.

"ஒன்னும் ஆகுது... நீயே பயந்தா எப்படி?" என்று நந்தினியிடம் சமாதானம் பேசினான் ராம் பிரசாத்.

"எனக்கு பயம் எல்லாம் இல்லை... இப்படி ஆகிருச்சேன்னு கோபம் தான்..." என்று நந்தினி வெறுப்பாக கூற, "நான் வாசு அண்ணனுக்காக பேசலை... மதினி இப்படி இருக்கும் போது பிரச்சனை வேண்டாம் நந்தினி... அமைதியா இரு..." என்று கெஞ்சினான் ராம் பிரசாத்.

மற்றவர்களின் சொல்லுக்கு மட்டுப்படாத நந்தினி, இன்றைய ராம் பிரசாத்தின் செயலால் அவன் சொல்லுக்கு கட்டுப்பட்டு நின்றாள் நந்தினி.

"இருந்தாலும் உங்க தம்பி... அவன் பொஞ்சாதியை ரொம்பத்தேன் தாங்குதான்..." என்று கோமதி சந்துருவின் காதில் கிசுகிசுக்க, சந்துரு தன் மனைவியை மேலும் கீழும் பார்த்தான்.

தன் கணவனின் பார்வையில் கோமதி தன் வாயை மூடிக் கொண்டாள்.

ஆவுடையப்பன், சிவசைலம், மஹாதேவன் மூவரும் அங்கு நடப்பதை அமைதியாகக் கண்காணித்துக் கொண்டிருந்தனர்.

அனைவரும் பவித்ராவின் நிலை அறிய, மருத்துவரின் சொல்லுக்காகக் காத்திருந்தனர்.

அப்பொழுது மருத்துவர், "ஸ்ட்ரெஸ்.. அது தான் பல்ஸ் இறங்கியிருச்சு... இப்ப நால்லாருக்காங்க..." என்று கூற, அனைவரும் பவித்ராவை பார்த்துவிட்டு வெளியே வர வாசுதேவன் உள்ளே சென்றான்.

"பவி..." என்று அழைத்தபடி படுத்திருந்த அவள் தலையைக் கோதினான் வாசுதேவன்.

வாசுதேவனின் அழைப்பில்... பவித்ரா அவன் முகம் பார்த்தாள். பவித்ராவின் பார்வை பல செய்திகள் கூற, அவள் பார்வை கூறிய செய்திகள் புரிந்தாலும் , அதை ஏற்றுக் கொள்ள மனமில்லாமல்... தன்னவளை பரிதாபமாகப் பார்த்தான் வாசுதேவன்.

இரண்டல்ல ஒன்று இணையாகப் பயணிக்கும்…

Next episode on Friday friends...
 
jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
ஹாய் கா..

செம யுடி...

நந்தினி... ராம்... செம...

பட் நந்தினி.. கேட்டது கரட்டு... ஆனா.. சட்டை மட்டும் பிடிச்சுருக்க வேணாம்...

சுபா கார்த்திகேயன்... எல்லாருக்கும்... உத்தமிய புரிது... பட்... செம ஸ்டாரங் லேடி...

கோமதி... நீ எந்த typeney தெரிலயமா...
 
Last edited:

Geethaselvam

அமைச்சர்
Joined
Jul 28, 2018
Messages
1,082
Reaction score
2,230
Location
chennai

Nandini nee ketadhu correct than ma
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top