• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Irandalla Ondru Episode 27

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sapphire

இணை அமைச்சர்
Joined
Oct 24, 2019
Messages
540
Reaction score
482
v.nice??????????????????????????
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
"அப்ப, அக்காவுக்கு என்ன ஆச்சு? என்ன பண்ணீங்க? அக்கா அழுத்திருக்கா... நல்லா இருந்தவ தீடீருன்னு ஏன் இப்படி மூச்சுப் பேச்சு இல்லாமல் இருக்கணும்?" என்று நந்தினி கேள்வி மேல் கேள்வி கேட்க, வாசுதேவன் அவன் கண்களை இறுக மூடிக் கொண்டான்.

வாசுதேவனின் மௌனம் நந்தினியின் கோபத்தைக் கிளப்ப, அவன் சட்டையைக் கொத்தாகப் பிடித்தாள் நந்தினி.

"அத்தான் சொல்லுங்க... வீட்டில் என்ன நடந்துச்சு?" என்று ஆவேசமாகக் கேட்டாள் நந்தினி.

பதறிய பவித்ராவின் தயார் செல்வி, "நந்தினி என்ன காரியம் பண்ற?" அவளை அறைய முற்படுகையில், "அத்தை..." என்று ராம் பிரசாத்தின் குரல் ஓங்கி ஒலித்தது.

"மாப்பிளை..." என்று செல்வி தடுமாற, "இப்படி எங்களை அடக்கி அடக்கி தான் அக்கா இப்படி கிடக்குறா..." என்று நந்தினி காட்டமாகக் கூறினாள்.

"நந்தினி வாயை மூடு..." என்று செல்வி கூற, "ஏன் மூடனும்... கூட பிறந்த அண்ணன், தம்பி இல்லனா கேட்க ஆள் இல்லைனு நினைப்பா... அவளுக்கு எதாவது ஒன்னுனா நான் கேட்பேன்..." என்று நந்தினி கர்ஜித்தாள்.

"அதுக்கு எங்க வாசு சட்டையை பிடிப்பியா?" என்று சந்துருவின் தாயார் பார்வதி சண்டைக்கு வர, வாசு தலையில் கை வைத்து அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தான்.

"அம்மா..." என்று தன் தாயாரை அடக்கினான் ராம் பிரசாத்.

"என்னை ஏன் டா அடக்குற? உன் பொஞ்சாதிக்கு இம்புட்டு கோபம் நல்லதில்லை..." என்று பார்வதி ராம் ப்ரசாத்திடம் நந்தினியைக் கண்டிக்க, "அவ கேட்ட விதம் தப்பா இருக்கலாம்... ஆனால் அவ கேட்டதுல என்ன தப்பு இருக்கு?" என்று ராம் பிரசாத் பொறுமையாகக் கேட்டான்.

அனைவரும் ராம் பிரசாத்தை அதிர்ச்சியாகப் பார்க்க, "அவ பக்க நியாயத்தை யோசிங்களேன்..." என்று பவ்மயாக கூறினான் ராம் பிரசாத். அவன் கேள்வி வாசுதேவனுக்கு சாட்டை அடியாக இறங்கியது.

'நான் பவித்ராவின் பக்க நியாயத்தை யோசிக்கவே இல்லையோ? அவ கண் முழிக்கட்டும் எல்லாம் பேசி சரி பண்ணனும்...' என்று வாசுதேவன் சிந்திக்க, "அக்காவுக்கோ... குழந்தைக்கோ எதாவது ஆகட்டும்... அப்புறம் இருக்கு மொத்த குடும்பத்திற்கும்... உங்க அம்மாவை உண்டில்லைன்னு பண்ணிருவேன்... அவுங்க தான் பிரச்சனைக்கு காரணமா இருக்கும்..." என்று நந்தினி எச்சரித்தாள்.

வாசுதேவன் எதுவும் பேசும் மனநிலையில் இல்லை... மாற்றவர்கள் பேசுமுன் செல்வி முன்திக் கொண்டார்.

"நந்தினி நீ வாயை மூடு... மாப்பிள்ளை அவளை தயவு செஞ்சி வீட்டுக்கு கூட்டிட்டு போங்களேன்... இருக்கிற பிரச்சினையை பெருசு பண்ணிருவா போல..." என்று ராம் பிரசாத்தைப் பார்த்து கை எடுத்துக் கும்பிட்டார் செல்வி.

"அம்மா... அமைதியா இருங்க... அக்காவை பார்க்காம நான் வீட்டுக்குப் போக மாட்டேன்... இப்ப என்ன நான் அமைதியா இருக்கணும்... பொறுமையா இருக்கணும்... எதுவும் பேச கூடாது அது தானே... யார் என்ன சொன்னாலும் தலையை ஆட்டிக்கணும்... அவ்வளவு தானே... அப்படியே இருக்கேன்..." என்று கூறி அங்கு ஓரமாக இருந்த நாற்காலியில் அமைதியாக அமர்ந்தாள் நந்தினி.

"இன்னைக்கின்னு பார்த்து நான் வேற, நீங்க கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கலாம்ன்னு மதினியைப் பார்த்து சொன்னேன்..." என்று சுபா சந்துருவிடம் கண்கலங்க, "அது தானே... ஏமாளி குனிச்சிக்கிட்டே இருக்கணும்... மிதிக்கிறவங்க மிதிச்சிகிட்டே இருப்பீங்க?" என்று நந்தினி சலிப்பாகக் கேட்டாள்.

"நந்தினி... ப்ளீஸ் கொஞ்சம் அமைதியா இரு... அவங்க தப்பே பண்ணாலும், உன் அக்கா வீட்டு ஆளுங்க..." என்று ராம் பிரசாத் தன்மையாகக் கூற, "அதுக்கு?" என்று ராம் பிரசாத்தைக் கேள்வியாகப் பார்த்தாள் நந்தினி.

"அவங்களுக்கு உடம்பு சரி இல்லாத நேரத்தில், நீ அவங்க குடும்பத்தில் குழப்பத்தை உண்டு பண்றதை, பவித்ரா மதினியே விரும்ப மாட்டாங்க..." என்று ராம் பிரசாத் நந்தினியின் சிந்தனை நாடியை சரியாகப் பிடிக்க, "அக்காவுக்கு ஒன்னும் ஆகாதுல?" என்று சந்தேகமாய் கேட்டாள் நந்தினி.

"ஒன்னும் ஆகுது... நீயே பயந்தா எப்படி?" என்று நந்தினியிடம் சமாதானம் பேசினான் ராம் பிரசாத்.

"எனக்கு பயம் எல்லாம் இல்லை... இப்படி ஆகிருச்சேன்னு கோபம் தான்..." என்று நந்தினி வெறுப்பாக கூற, "நான் வாசு அண்ணனுக்காக பேசலை... மதினி இப்படி இருக்கும் போது பிரச்சனை வேண்டாம் நந்தினி... அமைதியா இரு..." என்று கெஞ்சினான் ராம் பிரசாத்.

மற்றவர்களின் சொல்லுக்கு மட்டுப்படாத நந்தினி, இன்றைய ராம் பிரசாத்தின் செயலால் அவன் சொல்லுக்கு கட்டுப்பட்டு நின்றாள் நந்தினி.

"இருந்தாலும் உங்க தம்பி... அவன் பொஞ்சாதியை ரொம்பத்தேன் தாங்குதான்..." என்று கோமதி சந்துருவின் காதில் கிசுகிசுக்க, சந்துரு தன் மனைவியை மேலும் கீழும் பார்த்தான்.

தன் கணவனின் பார்வையில் கோமதி தன் வாயை மூடிக் கொண்டாள்.

ஆவுடையப்பன், சிவசைலம், மஹாதேவன் மூவரும் அங்கு நடப்பதை அமைதியாகக் கண்காணித்துக் கொண்டிருந்தனர்.

அனைவரும் பவித்ராவின் நிலை அறிய, மருத்துவரின் சொல்லுக்காகக் காத்திருந்தனர்.

அப்பொழுது மருத்துவர், "ஸ்ட்ரெஸ்.. அது தான் பல்ஸ் இறங்கியிருச்சு... இப்ப நால்லாருக்காங்க..." என்று கூற, அனைவரும் பவித்ராவை பார்த்துவிட்டு வெளியே வர வாசுதேவன் உள்ளே சென்றான்.

"பவி..." என்று அழைத்தபடி படுத்திருந்த அவள் தலையைக் கோதினான் வாசுதேவன்.

வாசுதேவனின் அழைப்பில்... பவித்ரா அவன் முகம் பார்த்தாள். பவித்ராவின் பார்வை பல செய்திகள் கூற, அவள் பார்வை கூறிய செய்திகள் புரிந்தாலும் , அதை ஏற்றுக் கொள்ள மனமில்லாமல்... தன்னவளை பரிதாபமாகப் பார்த்தான் வாசுதேவன்.

இரண்டல்ல ஒன்று இணையாகப் பயணிக்கும்…


Next episode on Friday friends...
Pona comment la Suba ah vituten
Nalla vela Karthikeyan nalla pesanaru....
Nandhini Vasu sataiya pudichadhu thapu but avanga ketta kelvi correct dha
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top