• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Irandalla ondru - Episode 31

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

laksh

இணை அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
568
Reaction score
624
Location
chennai
வாசுதேவன் சந்தோஷோடு பவித்ரா வீட்டிற்குள் நுழைய, "அம்மா ஏன் இங்க இருக்காங்க?" என்று கேட்டான் சந்தோஷ்.

"அம்மாவுக்கு கொஞ்சம் உடம்பு சரி இல்லை...கொஞ்ச நாள் இங்க ஓய்வெடுத்துட்டு... அப்புறம் நம்ம வீட்டுக்கு வருவாக..." என்று பொறுமையாக சந்தோஷிடம் கூறினான் வாசுதேவன்.

"ஏன் நம்ம வீட்டில் அம்மா ரெஸ்ட் எடுக்க முடியாதா?" என்று அடுத்த கேள்வியைக் கேட்டான் சந்தோஷ்.

"சந்தோஷ்... கொஞ்சம் அமைதியா இரு..." என்று கடுப்பாகக் கூறினாள் பவித்ரா.

"என் மேல் இருக்கிற கோபத்தை ஏன் பிள்ளை மேல் காட்டுற..." என்று பவித்ராவின் காதில் கிசுகிசுத்தான் வாசுதேவன்.

பவித்ரா சற்று தள்ளி நின்று கொள்ள, "பவித்ரா வா... கோவிலுக்கு போயிட்டு வருவோம்..." என்று பவித்ராவின் முகம் பார்த்து சத்தமாகக் கூறினான் வாசுதேவன்.

பவித்ரா மறுப்பு தெரிவிக்கும் முன், "பவித்ரா கிளம்பு... நான் சந்தோஷை பார்த்திக்குறேன்..." என்று செல்வி கூற வேறு வழியின்றி வாசுதேவனை முறைத்தபடி கிளம்பினாள் பவித்ரா.

பவித்ரா மௌனமாக அமர்ந்திருக்க, "நீ ரொம்ப மாறிட்ட பவி..." என்று மெதுவாகக் கூறினான் வாசுதேவன்.

"இந்த குழந்தை வந்தப்ப கூட நீ என் கிட்ட முதலில் சொல்லலை... நீ இப்ப கொஞ்ச நாளாவே என்னை நம்பலை பவி..." என்று வருத்தமான குரலில் சாலையைப் பார்த்தபடி கூறினான் வாசுதேவன்.

"இப்ப என்கிட்டே சண்டை இழுக்கத் தான் கூட்டிட்டுவந்தீங்களா?" என்று கோபமாகக் கேட்டாள் பவித்ரா.

வாசுதேவன் சாலையிலிருந்து பார்வையை பவித்ராவின் பக்கம் திருப்பினான்.

'இந்த ஒரு நாளில் எவ்வுளவு சோர்வாகத் தெரிகிறாள்.' என்றெண்ணி, 'நீ இன்னைக்கி பவித்ரா கிட்ட பொறுமையா பேசுற... பிரச்சினையை முடிச்சி வீட்டுக்கு கூட்டிட்டு போற...' என்று தனக்கு தானே கூறிக் கொண்டான் வாசுதேவன்.

இருவரும் கோவிலுக்குள் செல்ல, பவித்ராவை கை பிடித்து அழைத்துச் சென்றான் வாசுதேவன்.

பவித்ரா கைகளை உருவிக் கொள்ள முயல... வாசுதேவன் புன்முறுவலோடு அவள் கைகளை இறுகப் பற்றிக் கொண்டான்.

பவித்ராவின் கண்கள் கலங்கி அவன் விரல்களை அந்த கண்ணீர் தீண்ட, வாசுதேவனின் கைகள் தானாய் விலகியது.

இருவரும் இறைவனைத் தரிசித்து விட்டு, தூண் அருகே அமர்ந்தனர்.

பவித்ரா சோர்வாகத் தூண் மீது சாய்ந்து அமர்ந்தாள். அந்த நேரத்தில், அவர்களைச் சுற்றி யாருமில்லை.

வாசுதேவன் தான் கொண்டு வந்த தண்ணீரை அவளிடம் கொடுத்தான். பவித்ரா மறுப்பாகத் தலை அசைக்க, அவன் அவளை கட்டாயப்படுத்தவில்லை.

"எட்டி..." என்று வாசுதேவன் அழைக்க, பவித்ராவின் கண்கள் கலங்கியது.

"எட்டி..." என்று பவித்ராவின் கைகளை தன் கைகளுக்குள் புதைத்து வாசுதேவன் அன்பாக அழைக்க, "நீங்க என்னை அப்படி கூப்பிடாதீங்க..." என்று கூறி பவித்ரா அவன் கைகளைத் தட்டிவிட்டாள்.

பவித்ராவின் உதாசீனம், வாசுதேவனுக்குக் கோபத்தை வரவழைக்க, "எப்ப கூப்பிட வேண்டாமுன்னு சொல்லுவாங்க... சம்பந்தம் இல்லைன்னு சொல்லுவாக விட்டுட்டு போலாமுன்னு நினைக்கிற ஆளு நான் கிடையாது... கூப்பிட கூடாதுன்னு சொன்னாலும் கூப்பிடற உரிமை எனக்கிருக்குன்னு சொல்லுவேன்... என்னை வேணாமுன்னு சொன்னாலும் நான் விட்டுட்டு போக மாட்டேன்..." என்று உறுதியாகக் கூறினான் வாசுதேவன்.

பவித்ராவின் முகத்தில் மெல்லிய புன்னகை தோன்றியது. "எட்டி இப்ப எதுக்கு சிரிக்க?" என்று வாசுதேவன் அவள் புன்னகையை ரசித்தபடி கேட்க, "இல்லை எப்படி எல்லாம் திரிச்சி பேசலாமுன்னு உங்க அம்மா பிள்ளை கிட்டத் தான் நான் கத்துக்கணும்..." என்று நக்கலாகக் கூறினாள் பவித்ரா.

"இப்ப எதுக்கு அவுகளை இழுக்க? நாம தானே பேசிக்கிட்டு இருக்கோம்..." என்று மென்மையாகக் கேட்டான் வாசுதேவன்.

'இழுத்துட்டாலும்... நீங்க சும்மா விட்டுருவீங்க...' என்று எண்ணியபடி, "போலாமா?" என்று கடுப்பாகக் கேட்டாள் பவித்ரா.

"பவி... கொஞ்சம் நேரம் பேசிட்டு போலாம்..." என்று கூறினான் வாசுதேவன்.

"நான் என் அத்தானைத் தவிர, வேற யார் கிட்டயும் பேசுறதில்லை..." என்று பவித்ரா பிடிவாதமாகக் கூற, அவள் அழிச்சாட்டியத்தில் வாசுதேவன் முகத்தில் புன்முறுவல் பூத்தது.

"அது யாரு ட்டி உன் அத்தான்?" என்று குறும்பாகக் கேட்டான் வாசுதேவன்.

"என் அத்தானை... காலைல தான் யாரோ தூக்கிட்டு போய்ட்டாங்க... நான் தேடிகிட்டு இருக்கேன்..." என்று கடுப்பாகக் கூறினாள் பவித்ரா.

"கவலை படாத சீக்கிரம் கண்டுபிடிச்சிரலாம்..." என்று வாசுதேவன் பவித்ராவை சீண்ட, "தேவை இல்லை விடுங்க... அவசியமுமில்லை இஷ்டமில்லாத யாரையும் கட்டாயப்படுத்த வேண்டாம்... அவுக அவுக அவங்க அம்மா அப்பா தங்கையோட சந்தோஷமா இருக்கட்டும்..." என்று கண்கலங்கக் கூறினாள் பவித்ரா.

"சந்தோஷமா? நீ இல்லாமலா?" என்று குனிந்திருந்த பவித்ராவின் முகத்தை உயர்த்தி, அவள் கண்களை ஊடுருவி ஆழமாக கேட்டான் வாசுதேவன்.

பவித்ரா மௌனம் காக்க, தன் தலையை அசைத்து இரு கைகளையும் பின்னே ஊன்றி வானத்தை பார்த்து, "உன் அத்தானுக்கு ஒரு பெரிய பிரச்சனை தீர்வு சொல்லேன்..." என்று வறட்சியான குரலில் கேட்டான் வாசுதேவன்.

பவித்ரா எதுவும் பேசாமல் அவன் கூறுவதை அமைதியாகக் கேட்டாள்...

"நான் பேசினது தப்பு தான்... என்னை மன்னிச்சிரு... பிரச்சனை வளர கூடாதுன்னு நான் அப்படி பேசிட்டேன்... நீ வேண்டாமுன்னு நான் நினைப்பேனா? இல்லை உன் அத்தான்ங்கிற அழைப்பில்லாமல் நான் இப்படி நடைப் பிணமா அலையனும்னு ஆசைப் படுவேனா?" என்று கண்கலங்கக் கேட்டான் வாசுதேவன்.

பவித்ரா உணர்ச்சி துடைத்த முகத்தோடு, அவனைப் பார்த்தாள்.

"அம்மா... நடந்துகிட்ட முறையும் தப்பு தான்... என்னால் அவங்களை எதிர்த்து கேட்க முடியலை பவி... எனக்கு மனசு கஷ்டமா தான் இருக்கு... நான் அப்படி வளரலை... அம்மாவுக்கு உன்னை பிடிக்கும்னு தான் நான் நினைச்சன்... அவுங்க தானே உன்னை எனக்குக் கல்யாணம் பண்ணி வச்சாங்க... ஒரு வேளை என் கட்டாயத்தில் நம்ம கல்யாணம் நடந்து இருந்துதுன்னா, அம்மாவுக்கும் உனக்கும் எதாவது பிரச்சனை இருக்கும்னு யோசிச்சிருப்பேன்... இப்ப கூட எதோ பிரச்சனைன்னு தான் எனக்கு தெரியுது... உண்மையிலே என்ன பிரச்சனைன்னு எனக்குப் புரியலை... அம்மா ஏன் உன்னை வெறுக்கணும்?" என்று பவித்ராவின் முகம் பார்ப்பதை தவிர்த்து கேட்டான் வாசுதேவன்.

"நீ என்கிட்டே சொல்றப்ப, நான் உன்னை நம்ப கூடாதுன்னு உண்மையா நினைக்கலை பவி... நீ சின்ன பொண்ணு அவங்களை புரிஞ்சிக்கலைன்னு தான் நினச்சேன்... நீ பொய் சொல்ற... அப்படி எல்லாம் நான் ஒரு நொடி கூட உன்னைப் பத்தி யோசிச்சது கூட இல்லை பவி... நம்ப கூடாதுங்கிற எண்ணமெல்லாம் கிடையாது பவி... " என்று தன்னிலை விளக்கம் கொடுத்தான்.

"அத்தானை பத்தி உனக்கு தெரியாது எதுவுமில்லை... நான் அம்மா, அப்பா கிட்ட கூட மனசுவிட்டு பேச மாட்டேன்... நான் எல்லா விஷயத்தையும் உன்கிட்ட தானேட்டி சொல்லுவேன்... இப்பவும் அப்படி தான் சொல்றேன்... நான் என்ன பண்ணனும்னு நீயே சொல்லு..." என்று கேட்டு பவித்ராவின் பதிலுக்காகக் காத்திருந்தான் வாசுதேவன்.

இரண்டல்ல ஒன்று இணையாகப் பயணிக்கும்…
wait panna mudiyala seekiram ud kudunga
 




Thara

மண்டலாதிபதி
Joined
Jan 21, 2018
Messages
461
Reaction score
600
Location
Chennai
Nice yepppa oru vazhiya ram Nandhini ya therinjukittan. Vasu in paadu konjam kasttam than
 




akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,900
Reaction score
46,309
Location
Earth
வாசுதேவன் பேசும் முறை அழகாக இருக்கு
ஆதங்கத்தை கவலைப்பட்டு நிதானமாக
சரியான பாதையில் செல்வது அருமை
Thank you
 




akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,900
Reaction score
46,309
Location
Earth
ராம்க்கு நந்தினி தன்னை காதலிப்பது தெரிந்து விட்டது சூப்பர் சகோ
பதிவு அருமை ஆனால் சின்னப் பதிவு சகோ
????
Thank you
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top