• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Irandalla Ondru Episode -9

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,908
Reaction score
46,355
Location
Earth
அன்பான வாசகர்களின் சொல்லுக்கிணங்க வாரம் மூன்று பதிவுகள் தர முயற்சிக்கிறேன். தங்கள் likes மற்றும் comments க்கு நன்றி... உங்கள் விமர்சனங்களை எதிர் பார்த்து அடுத்த பதிவு இதோ... :):):)

இரண்டல்ல ஒன்று – 9

ரயிலின் அசைவுக்கு ஏற்ப… அனைவரும் அசைந்தபடியே பயணிக்க, நெல்லை எக்ஸ்பிரஸ் எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம்... செங்கல்பட்… பாதையில் திருநெல்வேலி நோக்கிப் பயணிக்க ஆரம்பித்தது.

செல்வி தன் மகளை, "கூறு கெட்டவ... " என அவளைத் தொடர்ந்து திட்டிக் கொண்டிருக்க, நந்தினி தன் தாயின் மொபைலில் இருந்து பவித்ராவுக்கு, ஒரு புது மொபைல் வாங்கி வைக்குமாறு மெசேஜ் அனுப்பிக் கொண்டிருந்தாள்.

அப்பொழுது ஒரு சிறு குழந்தை ஓட, "ராம் நில்லு..." என்று அந்தக் குழந்தையை துரத்திக் கொண்டு அந்தக் குழந்தையின் தாய் பின்னே ஓடினாள்.

"ராம்..." இந்தப் பெயர், அதே ரயில் பெட்டியில் பயணிக்கும் நந்தினி, வைஷ்ணவி இருவரின் காதிலும் விழுந்தது.

நந்தினியின் முகத்தில் வெட்க புன்னகை தோன்ற, அந்தக் குழந்தையை பார்த்துச் சிரித்தாள். அந்தக் குழந்தை நந்தினியைப் பார்த்து சிரித்து விட்டு வேகமாக ஓடியது.

வைஷ்ணவி முகத்தில் ஓர் கசப்பான புன்னகை தோன்ற, அந்தக் குழந்தையை தன் அருகில் வருமாறு, தன் தலையை அசைத்தாள்.

குழந்தை மறுப்பாகத் தலை அசைக்க, 'பெயர் ராம் இல்லையா? அது தான் வர மாட்டேங்குது...' என்று தோன்றும் கசப்பான சிந்தனையை வைஷ்ணவியால் தவிர்க்க முடியவில்லை.

வைஷ்ணவியின் எண்ணங்கள் ஒரு ஏளன புன்னகையோடு பின்னோக்கி ஓட ஆரம்பித்தது. ராம் நிறைந்திருந்தான் வைஷ்ணவியின் நினைவுகளில்... வைஷ்ணவியின் தந்தை கவலை தோய்ந்த முகத்தோடு தன் மகளை கவனித்துக் கொண்டிருந்தார்.

செல்வி நந்தினியை திட்டிக் கொண்டிருந்தாலும், நந்தினியின் முகத்தில் வெட்கப் புன்னகை… 'நம்ம ரோபோட்டை எப்ப கொடுக்கலாம்... கல்யாணத்துக்கு முன்னாடி ராமை சந்திக்க முடியுமா? இல்லை கல்யாணம் முடிந்த பின் கொடுக்கலாமா? இந்த வீட்டில் எல்லாரும் சுத்த வேஸ்ட்… ஒரு மொபைல் நம்பர் கூட வாங்கித் தரலை... இந்த அக்கா என்னன்னா, அது கிராமம்... அப்படி இருக்கனும்... இப்படி இருக்கணுமுன்னு சட்டம் பேசுறா... " என்று பவித்ராவை மனதிற்குள் திட்டியபடி, நந்தினியின் ராம் பற்றிய எண்ணங்கள் முன்நோக்கிச் சென்று கொண்டிருந்தன.

"நந்தினி நம்ம பவித்ரா மாதிரி பொறுமை கிடையாது... அந்த ஊரில் சாமாளிச்சிருவாளா?" என்று செல்வி தன் கணவர் ஆவுடையப்பனிடம், பயத்தோடும், சந்தேகத்தோடும் கேட்க ஆவுடையப்பன் சிரித்துக் கொண்டார்.

இவ்வாறான பேச்சுகளோடு, அவர்கள் பயணம் தொடர்ந்தது.

மறுநாள் காலை,

“ போளி.... போளி.... கடம்பூர் போளி.... கடலை மிட்டாய்... கடலை மிட்டாய்... கோவில்பட்டி கடலை மிட்டாய்.... வட வட மசால் வடை... வட வட உளுந்த வடை... காபி... காபி... காபி...” எனக் குரல்களோடு ரயிலில் அவர்கள் காலை பொழுது விடிந்தது.

"என்னமா... சரியா தூங்கலியா?" என்ற கேள்வியோடு தன் துப்பட்டாவை சரி செய்த படியே நந்தினி இறங்க, "கையில் அவ்வளவு நகை இருக்கு... உங்க அம்மாவுக்குத் தூக்கம் வருமா?" என்று ஆவுடையப்பன் தன் மகளின் காதில் கிசுகிசுக்க, நந்தினி "க்ளுக்..." என்று சிரித்தாள்.

"சிரி... நல்ல சிரி... என்னவோ எனக்குக் கல்யாணம் மாதிரி நான் தென் பதட்டமா இருக்கேன்..." என்று செல்வி மகளைப் பார்த்து கழுத்தை நொடிக்க, "நான் ஏன்மா பதட்டமா இருக்கணும். கூப்பிட்டா ஓடி வரத் தூரத்தில் அக்கா வீடு... அந்த கேம்ப்... இந்த கேம்ப்... இதெல்லாம் போய்… எனக்குக் கிராமத்தில் தங்கி பழக்கம் தான்... Infact I love villages..." என்று நந்தினி ஸ்டைலாக கூறினாள்.

"பாவம் மாப்பிள்ளை தான் சிட்டி பொண்ணுன்னு கொஞ்சம் பதட்டமா இருப்பாருன்னு நினைக்கிறேன்... You don ' t worry ma ... I will take care ... " என்று நந்தினி சமாதானமாக கூறிக் கொண்டே, "அம்மா... நான் Refresh ஆகிட்டு வரேன்..." என்று அங்கிருந்து சென்றாள்.

உண்மையில் ராம் பிரசாத் திருமணத்தை எண்ணி பதட்டமாகத்தான் இருந்தான்.

"கடம்பூர் போளி... உளுந்த வடை... காபி..." என மூன்றையும் வாங்கிக் கொண்டு, நந்தினி அமைதியாகச் சாப்பிட, "நல்லா சாப்பிடு... ஆனால் சமையல் வேலை மட்டும் கத்துகவே இல்லை..." என்று செல்வி சிடுசிடுத்தாள்.

"பவித்ரா எல்லாம் கத்துக்கிட்டு போனதுக்கே, அவங்க மாமியார் இன்னய வரைக்கும் அடுப்படியை அவங்க கையில் தான் வச்சிருக்காங்க... பவித்ராவுக்கு வேலைத் தெரியாத மாதிரியே தான் பேசுவாங்க... அவளுக்கு என்ன தெரியுமுன்னு மாப்பிள்ளைக்காவது இன்னைக்கு வரைக்கும் தெரியுமான்னு எனக்கு தெரியலை... பவித்ரா சந்தோஷமா தான் இருக்கா... அவ பொறுமைசாலி பொழச்சிப்பா... ஏதோ சண்டை சச்சரவு இல்லாம அவ வாழ்க்கை ஓடுது... காலப் போக்கில் எல்லாம் சரி ஆகிருமுன்னு நானும் விட்டுட்டேன்..." என்று செல்வி மெதுவாக நந்தினிக்கு மட்டும் கேட்கும் படி கூறினார்.

"சமையல் ஒரு விஷயமா... நான் எல்லாம் baking பண்ண ஆரம்பிச்சேன்னு வைங்க… நீங்க எல்லாம் என்கிட்டே கிளாஸ்சுக்கு வரணும்..." என்று நந்தினி கெத்தாக கூறினாள்...

"எது மைதா மாவுல பண்ணுவியே.. அந்த pizza... cake... donuts... burger...bread… sandwich... muffins... cookies... இதெல்லாமா? " என்று செல்வி முகத்தைச் சுழித்து கொண்டு வினவ, "ம்... oven மட்டும் கையில் கொடுத்து பார்த்தா மெர்ஸெல் ஆகிடுவாங்கள்ள..." என்று நந்தினி பெருமையாக கூறினாள்.

"முதல்ல… இங்கெல்லாம் oven எல்லாம் வச்சிருக்க மாட்டாங்க... அப்படியே இருந்தாலும், இதெல்லாம் யாரும் சாப்பிட மாட்டாங்க... நானே இதெல்லாம் சாப்பிட மாட்டேன்... காலையில் sandwich ... மத்தியானம் salad ... நைட் pizza சாப்பிட நீ எந்த நாட்டில் இருக்க?" என்று செல்வி கடுப்பாகக் கூறினார்.

"சரி விடுங்க... பொங்கல், இட்லி, தோசை... பண்ணிட்டா போச்சு..." என்று நந்தினி தோளை குலுக்க, "அதெல்லாம் உனக்குத் தெரியாதே..." என்று செல்வி பற்களைக் கடித்தார்.

"அம்மா... நீங்க செய்ற மாதிரியே செஞ்சா போதும் தானே..." என்று நந்தினி தீவிரமாக கேட்க, "என் கிட்ட ஒரு நாள் கேட்டுட்டு அப்புறம் ஞபாகம் வச்சி எல்லாம் நான் செய்ற மாதிரியே செய்ய முடியாது..." என்று நந்தினிக்குப் புரிய வைக்கும் எண்ணத்தோடு கூறினார் செல்வி.

"நீங்க சொல்ல சொல்ல நான் செஞ்சா?" என்று நந்தினி குழந்தையின் ஆர்வத்தோடு கேள்வியாக நிறுத்த, "என்னால, உனக்குத் தினமும் phone இல் சொல்லி தர முடியாது." என்று செல்வி கோபமாகக் கூறினார்.

நந்தினி தன் தாயிடம் அமைதியாக இருக்கும் படி செய்கை காட்டி, சின்ன மொபைல் போன்ற device ஒன்றைக் கையில் எடுத்தாள்.

நந்தினி அதை ON செய்ய, "hai நந்தினி..." என்று இயந்திர குரலில் கூறியது அந்த device. Display எதுவும் வரவில்லை. "ஹாய் ஹனி... இட்'ஸ் மீ நந்தினி..." என்று நந்தினி கூற, display ON ஆனது.

"என்ன வேணும் நந்தினி?" என்று ஹனி கேட்க… நந்தினி, "பொங்கல் எப்படி வைக்கணும் ஹனி?" என்று நந்தினி கேள்வியாக நிறுத்தினாள்.

"சக்கர பொங்கலா? வெண் பொங்கலா?" என்று ஹனி எதிர்க் கேள்வி கேட்டது.

"அது என்ன ஹனி?" என்று செல்வி அந்த Device யை பார்த்தபடி கேட்க, "Name ... இதுக்கு நான் வச்ச பேரு" என்று நந்தினி கூற செல்வி பதில் ஏதும் கூறாமல் மனதிற்குள் நொந்தபடி மௌனமாக தலை அசைத்தார்.

இவர்கள் பதில் கூறாததால், "சக்கர பொங்கலா? வெண் பொங்கலா?" என்று மீண்டும் ஹனி வினவ, "வெண் பொங்கல்..." என்று நந்தினி தன் தாயைக் குறும்பு புன்னகையோடு பார்த்தபடியே கூறினாள்.

அப்பொழுது ஹனி, செல்வியின் குரலில் பொங்கல் செய்முறையை கூற, "அடிப்பாவி... நான் பேசினதை எப்ப ரெகார்ட் பண்ண?" என்று செல்வி ஆச்சரியமாகக் கேட்க, " இது மட்டுமில்லை… நீங்கச் சொன்ன ரெசிபி எல்லாம் ரெகார்ட் ஆகிருக்கு... இது நான் பண்ண device அம்மா...” என்று நந்தினி பெருமையாக கூறினாள்.
 




Last edited:

akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,908
Reaction score
46,355
Location
Earth
செல்வி மௌனமாக இருக்க, நந்தினி தன் பேச்சை மேலும் தொடர்ந்தாள். “நான் எனக்குத் தேவையானதை ரெகார்ட் பண்ணிருக்கேன்… நான் எதையும் தேட வேண்டிய தேவை இல்லை.. கேள்வி கேட்டால் போதும்… பதில் சொல்லும். Google search கூட link பண்ணிருக்கேன்... எனக்கு புரியாலைன்னா, search பண்ணி images display பண்ணும்... kitchen ingredients இல் நான் confuse ஆகிற கூடாதில்லை... So no confusion… voice app இருக்கு... ஹனி சொல்ல சொல்ல நான் சமைச்சிருவேன்... பார்த்து தேடி... ம்.. No Tension ..." என்று நந்தினி தன் தலையை இருபக்கமும் அசைத்து கூறினாள்.

செல்வி நந்தினியைக் குழப்பமாக பார்க்க, "இது மட்டுமில்லை அம்மா... நீங்க நான் என்ன என்ன பண்ணணுமுன்னு சொல்லுவீங்களோ... எல்லாம் உங்க ஸ்டைலில் ரெகார்ட் பண்ணிருக்கேன்.. தலைக்கு எண்ணெய் வைக்கிறதில் இருந்து... நான் யோகா செய்ய வேண்டியது வரை … நீங்க சொல்ற அதே நேரத்தில், உங்க ஸ்டைலில் சொல்லும். அப்பா சொல்றது கூட நிறைய இருக்கு... All set up done… An automated interactive search engine with voice and alarm setup… நீங்க ரெண்டு பெரும் எப்பவும் என் கூட இருக்கிற மாதிரியே இருக்கும்..." என்று பெருமையாக ஆரம்பித்து, உணர்ச்சி பொங்க முடித்தாள் நந்தினி.

'நந்தினியின் கண்கள் கலங்கியதோ...' என்ற எண்ணம் தோன்றியது செல்விக்கு. அவரால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

'பவித்ராவுக்கு எடுத்தவுடன் கண் கலங்கும். இவ வேற ரகம்... ஆனால் பாசக்காரி... இவளும் இல்லாமல் வீடு வெறிச்சோடி இருக்கும்... சீக்கிரம் நாமும் அழகியபுரம் வந்துவிட வேண்டியது தான்...' என்று சுய ஆராய்ச்சியில் மூழ்கினார் செல்வி.

நந்தினி தன்னை மீட்டுக் கொண்டவளாய், "நான் செய்ற சமையலில் எதாவது தப்பு நடந்துச்சு நீங்க தான் பொறுப்பு…" என்று நந்தினி தன் device யை ஒரு கையில் வைத்துக் கொண்டு, மற்றோரு கையால் வடையை ருசித்த படி, கால் மேல் கால் போட்டு ஸ்டைலாக கூற, "பிச்சி புடுவேன் பிச்சி... நீ சமையலை கத்துக்காம இந்த மெஷினை நம்புற... அதுக்கு நானா பொறுப்பு? என்னவாகப் போகுதோ? ஆண்டவா நீ தான் காப்பாத்தணும்.. " என்று செல்வி புலம்பினார்.

"அம்மா.. என் ஹனியை தப்பா பேசாதீங்க..." என்று தன் தாயை எச்சரித்து, “Bye... ஹனி..." என்று ஹனியிடம் கூறி அதை off செய்து தன் பெட்டிக்குள் வைத்தாள் நந்தினி.

விருதுநகர்... கோவில்பட்டி.. கடந்து திருநெல்வேலியை வந்தடைந்தது ரயில்.

வைஷ்ணவி, வைஷ்ணவியின் தந்தை தர்மலிங்கம் இருவரும் திருநெல்வேலி ஹோட்டலில் தங்கிவிட்டு, திருமணத்தன்று அழகியபுரம் செல்வதாகப் பேசிக்கொண்டு ஹோட்டல் நோக்கிச் சென்றனர். தர்மலிங்கத்தின் முகத்தில் கவலையை தாண்டியும் ஒரு கம்பீரம் இருந்தது. அவர்களுடன் இன்னும் சிலர் சென்றனர். அனைவரிடமும் ஒரு பவ்யம் தெரிந்தது. அவர்கள் ஹோட்டலுக்கு செல்ல, நாம் நம் கவனத்தை நந்தியின் பக்கம் திருப்புவோம்.

பவித்ரா, வாசுதேவன் இருவரும் வரவேற்க.. நந்தினியின் குடும்பம் அவர்கள் காரில் ஏறி அழகியபுரம் நோக்கிப் பயணித்தது.

பவித்ரா புது மொபைல் கொடுக்க, நந்தினி தன் sim கார்டை அதில் போட்டு கொண்டாள்.

"அத்தான்... அத்தான்..." என்று அழைத்து, நந்தினி கேட்ட ஆயிரம் கேள்விகளுக்கும் பொறுமையாகப் பதில் கூறினான் வாசுதேவன்.

வாசுதேவன் அவர்கள் வீட்டிற்கு வரும்படி அழைத்துவிட்டு, ஆவுடையப்பன் வீட்டில் விட்டுச் சென்றான்.

பவித்ரா அந்த வீட்டைத் தயாராக வைத்திருந்தாள். அவர்கள் சொந்த பந்தமும் அங்குக் கூடியிருந்தது.

அங்கிருந்த முதியவள் ஒருத்தி. " பவித்ரா... இங்கன தானே இருக்க.. இந்த கிழவிய அப்பப்ப பாத்துட்டு போறது... உங்க அம்மா... அப்பா... வந்தா தா இந்த பக்கம் வருவியாக்கும்..." என்று கழுத்தை நொடிக்க பவித்ரா தர்மசங்கடமாக நெளிந்தாள்.

"ஆச்சி... அப்படி கேளுங்க... நான் கூட்டியாரேன்னு தான் சொல்லுதேன்... உங்க பேத்தி கிளம்பினாத்தானே?" என்று பவித்ராவை வம்பில் சிக்க வைத்து, புன்முறுவலோடு வேடிக்கை பார்த்தான் வாசுதேவன்.

பவித்ரா வாசுதேவனை முறைக்க, வாசுதேவன் அவளைப் பார்த்து கண்ணடித்தான் .

"அட.. பேராண்டி... உம்மை பத்தி எனக்கு தெரியாத?" என்று மாப்பிள்ளை மரியாதை குறையாமல், ஆச்சி நக்கல் தொனியில் கூற, அங்கு ஒரு சிரிப்பலை பரவியது.

கேலியும் கிண்டலுமாக பதட்டத்தோடும் சந்தோஷமாகவும் எதிர்பார்த்த திருமண நாளும் வந்தது.

பவித்ரா திருமணத்துக்கு தயாராக, "பவி... நீ இந்தக் கல்யாண வேலையில் மூழ்கி என்னை மறந்துட்ட... " என்று வாசுதேவன் வம்பிழுக்க, "அத்தான்... " என்று செல்லமாக கண்டித்தாள் பவித்ரா.

"ம்... உங்க அம்மா அப்பா தங்கச்சி இங்க வந்ததிலிருந்து, நீ சிட்டா பறந்து அங்க போய்டுற..." என்று வாசுதேவன் ஏமாற்றமான குரலில் கூற, பவித்ரா "க்ளுக்..." என்று சிரித்தாள்.

"என்னடி சிரிப்பு?" என்று வாசுதேவன் பவித்ராவை அவனருகில் இழுக்க, வாசுதேவனின் சட்டை பட்டனைத் திருகினாள் பவித்ரா.

"என்ன பவி?" என்று வாசுதேவன் குழைய, "அத்தான்... வேலை நிறைய இருக்கு... நந்தினி எனக்காக காத்துகிட்டு இருப்பா... கல்யாணம் முடியட்டும்... உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்றேன்..." என்று பவித்ரா நெகிழ… வாசுதேவன் கூர்மையான பார்வையோடும் புன்முறுவலோடும் அவளைக் கேள்வியாக பார்க்க, கதவு தட்டப்பட்டது.

"அத்தை..." என்று தன் உதடுகளை அசைத்து, கதவைத் திறந்தாள் பவித்ரா.

"பவித்ரா இந்த சேலை... இந்த நகை போடு..." என்று உத்தமி நீட்ட, பவித்ரா அவரைத் திடுக்கிட்டு பார்த்தாள்.

'single side border... ... பாக்கு நிறம் ரோசா பூ நிறத்தில் கரை கொண்ட அடர்த்தியான பட்டு... உருட்டு உருட்டாக நகைகள்...' என்று அதைக் கணக்கிட்டு கொண்டிருந்தாள் பவித்ரா.

நந்தினி நேற்று பவித்ராவிடம் கூறியதை இப்பொழுது யோசித்தாள். 'அக்கா... நானும் வந்ததிலிருந்து பாக்கறேன்... உன் நகையும்... உன் சேலையும்... உன் ரசனை எங்க அக்கா போச்சு... என் கல்யாணத்துக்கு நான் சொல்ற மாதிரி தான் வரணும்... பெண்ணோட அக்கான்னா நாலு பேரு அசந்து பார்க்கணும்... நானே உனக்கு எல்லாம் செட் பண்ணிட்டேன்...' என்று நந்தினி கொடுத்த சேலையும் நகையும் நினைவு வர பவித்ரா தர்மசங்கடமாக நெளித்தாள்.

"அம்மா ஆசையா குடுக்கிறாங்க இல்ல.. வாங்கிக்கோ..." என்று வாசுதேவன் அழுத்தமாகக் கூற, பவித்ரா அவனைப் பரிதாபமாக பார்த்தாள்.

தன் மனைவியின் முகமாற்றத்தை கண்டுகொண்டு, "என்ன?" என்று தன் கண்களால் வினவினான் வாசுதேவன்.

"நந்தினி, அவ கல்யாணத்துக்கு என்னென்ன போடணும்னு குடுத்திருக்கா..." என்று தயங்கியபடியே கூறினாள் பவித்ரா.

"எங்க காட்டு..." என்று உத்தமி அவர்கள் அறைக்குள் நுழைய… பவித்ரா அவற்றைக் காட்டினாள்.

"Double color ஆரஞ்சு பின்கிஷ் சேலை அத்தை... அதற்குத் தோதாக நகைகள்..." என்று பவித்ரா நீட்ட, பவித்ரா கண்களில் அதை அணிய வேண்டும் என்ற ஆசை மின்ன அதை வாசுதேவன் கண்டு கொண்டான்.

"இது என்ன கலர்... பலிச்சுன்னே இல்ல... இந்த நகை போட்டா கடைசி வரிசையில் இருக்கிறவங்களுக்கு நகை போட்ட மாதிரியே தெரியாது..." என்று உத்தமி முகம் சுழித்து கூற, பவித்ராவின் முகம் தன் ஏமாற்றத்தை அப்பட்டமாகத் வெளிப்படுத்தியது.

இது வழக்கமாக நடப்பது தான்...

'அம்மா சொல்றதை போடு பவி...' இதோ சொல்ல போகிறான் வாசுதேவன் என்ற எண்ணத்தோடு, கல்யாண குஷி சற்று வடிந்தார் போல் பவித்ரா சோகமாக வாசுதேவனைப் பார்த்தாள்.

"அம்மா... கல்யாண பொண்ணு ஆசைப்படுறா… அப்ப நாம என்ன சொல்ல முடியும்... ஏதோ ரெண்டு பேரும் ஒரே கலர்ன்னு நந்தினி சொன்னதா எனக்கு ஞாபகம்..." என்று வாசுதேவன் கூற, பவித்ரா அவனை ஆச்சரியமாகப் பார்க்க, உத்தமி தன் மகனை அதிர்ச்சியாகப் பார்த்தார்.

எதுவும் பேசாமல் சம்மதமாகத் தலை அசைத்து வெளியே சென்றார் உத்தமி.

தன் மகன் வாசு கல்யாண விஷயத்தில் உறுதியாக நின்று விட, தன் மகனிடம் எதிர்த்துப் பேசி அவனைப் பகைத்து கொள்ளாமல், சமர்த்தியசாலித்தனமாக விட்டுக் கொடுத்து வாசுதேவனிடம் நல்ல பெயரை தக்க வைத்துக் கொண்டார் உத்தமி.

'தன் கையை மீறி மகன் எதையும் செய்ய மாட்டான்' என்ற நம்பிக்கை அவர் மனதில் இருந்தது.

ஆனால், தான் செய்தது தவறோ என்று சிந்திக்க ஆரம்பித்தார் அந்தத் தாய். சின்ன ஏமாற்றமாக இருந்தாலும், ஏமாற்றத்தை அவரால் எற்றுக் கொள்ள முடியவில்லை.

'இந்தத் திருமணம் முடியட்டும்... அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்... இப்பொழுது எதுவும் செய்ய முடியாது...' என்ற எண்ணத்தோடு திருமணத்திற்கு தயாரானர் உத்தமி.

வாசுதேவன் அறையில், பவித்ரா அவனை ஆச்சரியமாகப் பார்க்க, "என்ன டி அப்படி பாக்கற... வழக்கமா நம்ம ஊரு கல்யாணத்துக்கு போவோம்... அம்மா சொல்றது சரியா இருக்கும்... இன்னைக்கும் அப்படி தான்... சரி கல்யாண பொண்ணு ஆசை பட்டுட்டா... பெண்ணோட அக்காவும் ஆசை படுறீங்க... அது தான் இதைக் கட்டிக்க சொன்னேன்..." என்று வாசுதேவன் விளக்கமளிக்க, மேலே யோசிக்க நேரமில்லாமல் பவித்ரா மண்டபத்திற்குக் கிளம்பினாள். அது என்ன விஷயம் என்று கேட்க வாசுதேவனுக்கும் நேரமில்லை.

திருமணம் மண்டம்பம் விமரிசையாகக் காட்சி அளித்தது. பட்டு சேலை சலசலக்க, வேஷ்டி மினுமினுக்கப் பட்டு பாவாடை ஜொலிக்க கூட்டம் அலை மோதியது.

சொந்த பந்தங்களின் கலகலப் பேச்சு... பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டாரின் பதட்டம்... வேலையில் மூழ்கிய நெருங்கிய உறவினர்களின் உற்சாக செயல்பாடு என நந்தினி ராம் பிரசாத்தின் திருமணம் நம்மை அன்போடு வரவேற்கிறது.

மாப்பிள்ளை அழைப்பு முடிந்து… நிச்சயதார்த்தம் தொடங்கியிருந்தது. பச்சை நிற சேலையில் நந்தினி தேவதையாக காட்சி அளித்தாள்.

பிறந்த வீடு கட்டு... தாய் மாமன் கட்டு… என பல சடங்குகள் முடிந்து… மாப்பிள்ளை வீட்டார் முகூர்த்த சேலையாக சிவப்பு நிற பட்டு சேலை கொடுக்க நந்தினி சிவப்பு சேலைக்கு மாறி மீண்டும் மணமேடைக்கு அழைத்து வரப்பட்டாள்.

அங்கே ராம் பிரசாத் வேஷ்டி சட்டையில் கம்பீரமாக அமர்ந்திருந்தான். பெண் பார்க்கும் படலத்திற்குப் பின் இன்று தான் மாப்பிளையை பார்க்கும் வாய்ப்பு நந்தினிக்கு கிடைக்க, வெட்க புன்னகையோடு தன் ஓரக் கண்களால் நந்தினி ராம் பிரசாத்தை பார்க்க, ராம் பிரசாத் இலக்கில்லாமல் எங்கோ பார்த்தபடி ஐயர் சொல்வதை செய்து கொண்டிருக்க நந்தினியின் கண்கள் சுருங்கி, புருவங்கள் வளைந்தது.

அப்பொழுது அனைவரின் கவனத்தை திருப்பும் விதமாக, ஒருவர் வேஷ்டி சட்டையோடு கம்பீரமாக நுழைய அவரோடு இன்னும் சிலர் நுழைய அங்குப் பதட்டம் நிலவியது.

இரண்டல்ல ஒன்று இணையாக பயணிக்கும்…
 




Last edited:

akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,908
Reaction score
46,355
Location
Earth
அருமையான எதிர்பார்ப்பு எங்களிடம் அருமையான கதை உங்களிடம்மா காத்திருக்கிறேன்
Chitrama :love::love::love: Solla vaarthai illai
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top