• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Iratturamozhithal 21

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

lakshmi2407

அமைச்சர்
Joined
Mar 26, 2018
Messages
3,214
Reaction score
15,304
Location
Tamil nadu
IM 21

பணக்காரர்கள் மட்டுமே வசிக்கும் ஒரு பரபரப்பில்லாத, அமைதியான இடம். SNP, சுற்றும் முற்றும் பார்த்தபடியே வண்டியை நிறுத்தினான். கூகுள் வரைபடம் காண்பித்த இடம் தெளிவாய் இதுதான் என்று தெரிந்தது. காரில் இருந்து இறங்கும் முன், டேஷ் போர்டில் பாதுகாப்பிற்காக எப்போதும் வைத்திருக்கும் Beretta 92FS , கைத்துப்பாக்கியை கையில் எடுத்து அதன் mag ஐ [புல்லட் களை அடுக்கி துப்பாக்கியில் செருகும் magazine எனும் mag] சரி பார்த்தான். பதினைந்து தோட்டாக்களும் இருந்தன. ஒரு கிலோவுக்கும் குறைவான எடையுள்ள கைத்துப்பாக்கி, இதுவரை பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை... இனி ? எடுத்து, முதுகின் பின்புறம், பேண்ட் - ல் செருகினான்.

மெதுவாய் இறங்கி, கையில் இருந்த அலைபேசியை பார்த்தான், அப்போதும் சிக்னல் கிடைக்கவில்லை.பாதி திறந்தும் திறவாமல் இருந்த அந்த வீட்டின் இரும்புக்ராதியை மெதுவாய் திறந்தான் . நாலைந்து காலடித்தடங்கள், நடுவே எதையோ/யாரையோ இழுத்து சென்ற தடயம், கார் நிறுத்துமிடத்தில் இருந்து ஆரம்பித்து, வீட்டின் கதவு வரை இருந்தது.. உள்ளிருந்து சன்னமாய் முனகல் சத்தம் மிக மெல்லியதாக கேட்டது.

வீட்டினுள் செல்வதா? வேண்டாமா?, என மனம் ஊசலாட..., அப்பெண்ணின் தீனமான குரல் மீண்டும் கேட்க, உட்செல்வதென நொடிக்கும் குறைவான வேகத்தில் முடிவெடுத்தான்.. அடிதடிக்கு தயாராய் வந்திருந்தாலும்.. பாஸ்கருக்கோ, பரிதிக்கோ தகவல் தெரிவிக்காதது ஒரு பக்கம் நெருட , ஆனாலும் விஷயம் தெரிந்து ஒரு பெண்ணை... அது யாராயிருந்தாலும் பரவாயில்லை, விடமுடியாது ..இங்கே ஊசலாடுவது ஒரு பெண், அவளது மானம் அல்லவா?

மெல்ல அடிமேல் அடிஎடுத்து வைத்து கதவின் அருகில் நின்றான், பூட்டி இருக்கிறதா என பார்க்க, SNP எதிர்பாராவிதமாய் கதவு கைப்பிடியை திருகியதும் திறந்தது. சற்றே எச்சரிக்கையாய் திறந்து இரண்டு அடி எடுத்து வைக்க,

விஷ்க் ...

வலதுபுறத்தில் இருந்து.. வேகமாய் எதோ தாக்க வர, கிட்டே வருகையில் அது ஒரு மனிதனின் கை, என அறிந்து, நொடியில் வலக்கையால் அக்கையை பிடித்து முறுக்கினான், அதன் சொந்தக்காரன், வலியில் முனகினான், காரணம், SNP அம்மனிதனின் கையை திருப்பி, முதுகு பக்கமாய் வளைத்து, சுவற்றில் அவன் முகத்தினை முட்டி இருந்தான்.. மின்னல் வேகத்தில் நடந்த இச்செயலில், குபுக் கென வாயில் இருந்து வந்த ரத்தம் அடியாளின் சட்டையை நனைத்தது.

மீண்டும் SNP -யை அவன் தாக்க வர, இம்முறை அதிக கஷ்டமில்லாமல், அடியாள் வயிற்றிலும், முகத்திலும், மாறி மாறி, குத்துவிட, அவன்.. கத்தக் கூட த்ராணியின்றி கீழே விழுந்தான்.

அவனை தாக்கும் போதே, பக்கவாட்டில் இருந்து "ஸ்ஸ்", காற்றை கிழித்து கத்தி வர, சட்டெனெ பின்புறம் குனிந்தவன், காலால்.. கத்தி வைத்திருப்பவன் கால்களை முழு பலத்துடன் உதைக்க.. "க்ம்ம்மா .", உடைந்த கால்களை கையில் பிடித்து அந்த அடியாளும் சரிய, SNP..., வேறு யாரும் உள்ளனரா என சுற்றும் முற்றும் பார்த்து, அருகே மயங்கி இருந்தவனின் கையில் இருந்த கத்தியை அகற்றினான்.

அடிபட்டவனுக்கு மூச்சு இருக்கிறதா என பார்த்து, நிமிர...

..ஹக்...

நடு மண்டையில் சுரீர் என்று ஒரு வலி.. கதவின் பின் ஒருவன் ஒளிந்திருந்து வந்து தாக்கியதே காரணம். அவன் கையிலிருந்த கட்டையில், தன் ரத்தத்தினை பார்த்த பின்புதான் SNP -க்கு உரைத்தது., யாரிடமும் தகவல் கூறாமல் வந்தோம் என்பது. மீண்டு தாக்க எத்தனிக்க, ஷ்ஷ்ஷ்... எதையோ, ஸ்பிரே செய்வதை உணர்ந்து... மூச்சை இழுத்து பிடித்து நிறுத்தினான். ஆனாலும், தவிர்க்க இயலாமல், மெது மெதுவாய் மூர்ச்சையானான் SNP.

++++++++++++

பரிதி அவன் அலுவலக அறையில், மிக தீவிரமாய், போதை பொருட்கள் கடத்தும் கும்பலை குறித்த அவன் அறிந்த தகவல்களை, அட்டவணை படுத்திக்கொண்டு இருந்தான். தொலைபேசி அலற, ஒரு ரிங்-கிலேயே பரிதியின் கீழ் வேலை செய்யும் மற்றோரு காவல் அதிகாரியால் எடுக்கப்பட்டது.. காரணம், எக்காரணம் கொண்டும் இளம்பரிதி-யை தொந்தரவு செய்யவேண்டாம், என்று அவன் கூறியிருந்தான்.

"ம்ம்.. எப்படி இத்தனை கிலோவ, இன்னொரு நாட்டுக்கு ரொம்ப சுலபமா கடத்தறாங்க.. ஏன் , சில நாடுகள்-ல இருக்கிறா மாதிரி, போதைப்பொருட்கள் கடத்தலுக்கு மரண தண்டனை கொடுக்க கூடாது?", என பலவாறாய் சிந்தனை..

"சார்", சிந்தனைக்கு கடிவாளமிட்டது, காவலரின் குரல்..

"ம்ப் ச் , நான்தான் தொந்தரவு பண்ணாதீங்க-ன்னு.. ", இந்த கேஸ் குறித்த தொடர்பும், அதன் வலைப்பின்னலும், மீண்டும் மனதில் தொகுப்பாய் வர வெகு நேரமெடுக்கும் என்பதை உணர்ந்தவனாய்..

"சார். சார்...., இது ரொம்ப அர்ஜென்ட், நம்ம ஸ்டேஷன் கான்ஸ்டபிள் தான் சார் லைன்-ல இருக்கார்", அவர் சொல்லி முடிக்கும்முன் போனை கையில் வாங்கி இருந்தான், இளம்பரிதி, அக்காவலர்கள்களை, மனோகரனை கண்காணிக்கவென அனுப்பியது இவனாயிற்றே?

"சொல்லுங்க... என்னாச்சு ?"

"சார், மனோகரன் வீட்டல ஆளுங்க இருக்காங்க.. ஆனா, அவனை காணோம், பழைய வேலைகாரங்க யாருமே இல்ல... கிட்டத்தட்ட மொத்தமா ஆளுங்க மாறினா மாதிரி இருக்கு.. "

"ஒரே நைட்-ல எப்படியா காணாம போவாங்க?"

"சார், அதான் தெரில சார், நைட் இங்கதான் இருந்தேன். சந்தடியே பண்ணாம போய்ட்டாங்க.. "

"அவன் கார்.-ல்லாம் ..?"

"எல்லாமே வீட்ல/ஷெட் ல தான் இருக்கு சார்"

"யோவ் .. என்னய்யா பண்றீங்க..? கண்ணுக்கு முன்னால காணாம போயிருக்கான்...?, வைய்யா போனை... ", சிறிது கடுப்புடன், போனை வைத்தான். ம்ம்ம்.. டோட்டலா காலி பண்ணிட்டு எங்க போவான்? அவன் எந்த விஷயத்தையும் சாதாரணமா விட்ற ஆளில்லையே?.. பலவாறாய் சிந்தனை மனதுக்குள்..

சட்டென.. தொலைபேசியை எடுத்து, சரண்யுசாயா வை அழைத்தான். "அத்தை"

"சொல்லுங்க தம்பி...", இளம்பரிதியை இயல்பாய் பேர் சொல்லி அழைக்க வரவில்லை சரண் க்கு.. அதனால், தம்பி என்ற விளிப்பு, அடிக்கடி இளா - வும் வரும்..

"சாயங்காலம் வீட்டுக்கு தியா வரணும்-ன்னு சொல்லிட்டு இருந்தா, அதான் நீங்க இருப்பீங்களா , இல்ல , வெளிய எங்கயாவது போறீங்களா? - ன்னு தெரிஞ்சிக்கலாம்னு போன் பண்ணினேன்."

"வீட்லதான் இருப்பேன், வரச்சொல்லுங்க..", என்றவள்... "தம்பி....?", என்று நிறுத்தினாள் .

"ஆங்.. லைன்ல தான் இருக்கேன். சொல்லுங்க ?"

"ஏதாவது பிரச்சனையா?, குரலே சரியில்ல ?", வக்கீல் அல்லவா ?, சரியாய் கணித்திருந்தாள்.

"அதெலாம் ஒண்ணுமில்ல, வேலை டென்ஷன்... அப்பறம் பேசறேன்.., வெளிய போறதா இருந்தா, கால் பண்ணிட்டு போங்க , வைக்கறேன்."

இதேபோல், தியா-விற்கும் அழைத்து, SNP வீட்டில் இருக்க சொன்னான். பாஸ்கரிடம், கல்பா-வை வீட்டில், முடிந்தால் அவர்களின்(SNP ) வீட்டுக்கு அம்மாவுடன் வந்து இருக்குமாறு பணிக்கச் செய்தான், அவனுக்கு மட்டும் மனோகரன் கண்காணிப்பில் இருந்து மாயமான விஷயத்தை கோடி காட்டி, ஸ்டேஷனுக்கு வர சொன்னான்.

SNP யின் அலைபேசி, நாட் ரீச்சபிளாகவே இருந்தது. பதட்டம் மெதுவே ஏற ஆரம்பித்தது. அரைமணி நேரத்தில், பாஸ்கர், பரிதியை தேடி அலுவலகதிற்கே வந்தான். கவலையோடு, "அப்பா?",என..

"பாக்கலாம், உக்காரு ", என்று அவனை ஆசுவாசப் படுத்தினான்.

கடைசியாய், அலைபேசி, எந்த பகுதியில் செயலாற்றியது?, என தகவல் தருமாறு, காவலர்களிடம் கேட்டான். "அவர் என்ன கார் எடுத்திட்டு போனாரு?"

"ஜாகுவார் "

"நம்பர் சொல்லு", என்க .. பாஸ்கர் சொன்னான்.

குறித்துக் கொண்டவன், "உங்க பர்சனல் செக்யூரிட்டி என்ன ஆனாங்க?"

"அது ... வந்து... அவருக்கு கார்ட்ஸ்-ஆ இருந்த நாலு பேரை ஊர்-ல்ல உங்க சொந்தக்காரங்க பாதுகாப்புக்கு ன்னு அனுப்பி இருக்கார்... செக்யூரிட்டி ஆபிஸ்-ல அவங்க வேற ஆளுங்களை ஏற்பாடு பண்ணி நாளைக்கு அனுப்பறேன்-ன்னு சொல்லி இருக்காங்க., அதுக்குள்ள..."

அதுவரை திரையை பார்த்துக்கொண்டிருந்த பரிதி , நிமிர்ந்து பாஸ்கரை பார்த்தான். :"இது எதோ க்ளியரிங் தி ஸ்டேஜ் மாதிரி இல்ல...?", என்று கேட்க.. பாஸ்கர் ஆதித்யா... முதன் முறையாய் SNP யின் தன்னிச்சையான முடிவிடுக்கும் குணத்தினை குறித்து கவலைப்பட்டான்.

"அப்படின்னா.. இவர் அவன்கிட்ட மாட்டிக்க , அப்பாவே பிளான் பண்ணி...", பாஸ்கர் பேச..

பரிதி இடைமறித்து, "இருக்கலாம்.., அவருக்கு கார்ட்ஸ் இல்ல ன்னு தெரிஞ்சும், எங்கயோ போய் இருக்கார்-ன்னா .. அப்படித்தான் தெரியுது."

பேச்சு ஒரு பக்கம் இருந்தாலும்.... SNP வாகனத்தின் பதிவு என், அலைபேசி என், சிக்னல் கிடைத்ததும் தகவல் அனுப்பவும் அனைத்து டிராபிக் கண்ட்ரோல் -க்கும் ஆணையிட்டான், பரிதி. சுவர் முழுவதுமாய் இருந்த பெரிய திரையில், சென்னையின் போக்குவரத்து புள்ளிகளாய் தெரிய .. அதில், SNP யின் ஜாகுவாரை தேட தலைப்பட்டனர் இருவரும்..

அங்கே, சென்னையின் அதிக ஆள் நடமாட்டமில்லாத பகுதியில், முன்னும் பின்னும் லாரிகள் அணிவகுத்து இருக்க, SNP யின் ஜாகுவார் கேட்பாரின்றி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.... ஆம், SNP எனும் சூர்யநாராயண பிரகாஷ், தி கிரேட், கடத்தப் பட்டு இருந்தான்.

++++++++++++++++++++

"அட.. சீக்கிரமே முழிச்சிட்ட?, எனக்கு இன்னும் கொஞ்ச வேலைகள் பாக்கி இருக்கே?", குரல் பரிச்சயமில்லை, ஆனால்... அக்குரலில் கிண்டலும் , கோபமும் மண்டிக் கிடந்தது. SNP யோசித்தவாறே... கண்களை முயன்று திறந்தான், இமைகள் பாறாங்கற்களை வைத்தைப்போல் பாரமாய் இருந்தன . கைகள், இருக்கையுடன் கட்டப்பட்டிருந்தது. இடம் எதோ ஒரு பெரிய வீடு. செயற்கை வெளிச்சத்துடன் பளிச்சென்று இருந்தது. எதிரே, ஒரு தொலைக்காட்சி போன்ற மானிட்டர், ஒரு அலைபேசி, சுற்றி சிறியதும் பெரியதுமான ஒயர்கள் இருந்தது. அருகிலேயே, SNP யின் அலைபேசியும், இன்ன பிற பொருட்களும் இருந்தன. நல்ல வேளையாய் . துப்பாக்கி அவனிடம் தான் இருந்தது, ஆனால் உபயோகிக்க முடியாது கை கட்டப்பட்டு இருந்தது.. குரல் வந்த திசையில் தலையை கஷ்டப்பட்டு திருப்பினான், SNP. தலை இன்னமும் விண் விண்னென்று வலித்தது.

அங்கே நின்றவன்... மனோகரன். சி 4 எனப்படும் வெடிகுண்டு தயாரித்து விற்கும் பணப்பேய், தேசத்துரோகி..

விஷ(ம)மாய் நோக்கிய மனோகரன், "ஒரு சின்..ன படம் போடறேன். இப்போதான் எடிட் பண்ணி வந்துச்சு..பிச்சர் தெளிவா இருக்கா-ன்னு பாத்து சொல்லு"., என்று வன்மமாய்.. கிண்டலுடன் சொல்லி, தொலைக்காட்சியை உயிர்பித்தான்.

அடுத்த பத்து நிமிடங்கள் ஓடிய காட்சிகளை கண்ட SNP -க்கு, அப்படியே பூமி தன்னை விழுங்கிவிடாதா என்று தோன்றியது. உடல் முழுவதும் . மூளை வேலை நிறுத்தம் செய்தது. எந்த ஒரு உணர்வும் அடுத்தவனின் பார்வைக்கு காட்டாத SNP யின் முகம்.... வேதனை, அதிர்ச்சி மற்றும் ஒரு கையறுநிலையை, அதை ஒத்த உணர்வினை வெளிப்படுத்தியது..

தோற்றுப் போன உணர்ச்சியின் உச்சக்கட்ட வெளிப்பாடாய், கண்கள் மூடி இருக்க... ""மனோகர்.. இதுக்கு நீ என்ன கொன்னுருக்கலாம்....", SNP வாயிலிருந்து வார்த்தைகள் தானாய் வந்தது.

"நிச்சயமா கொல்லத்தான் போறேன்., " என்றவன், அவனது ஆட்களிடம் திரும்பி.. "முடிஞ்சுதா?"என கேட்டான்.

"எஸ் boss "

"அப்போ கட்டுங்க."

சொன்ன அடுத்த நொடி, அந்த ஒயர்களோடு பிணைக்கப்பட்டிருந்த செல்போனை, SNP யின் மார்பில் வெல்க்கிரோ உதவியுடன் பிணைத்தனர்.

"இப்போ நான் என்னோட கண்டிஷனெல்லாம் ஒன்னொன்னா சொல்லுவேனாம், நீ செய்வியாம் .. என் அக்கவுண்ட்-ல இருந்து எடுத்த எல்லா பணத்தையும் திருப்பி போடற.. இது முதல் கண்டிஷன்..., நான் அதிகம் படிக்கல.. சோ .. பத்து வரைக்கும் தப்பில்லாம எண்ண முயற்சிக்கிறேன்... அப்பறம் உன்னிஷ்டம்.."

"ரெடி.. ஒன்னு... ரெண்டு..."

"மனோகர் ....வெயிட் .. வெயிட்...", SNPயின் சர்வமும் பதற...

"யோவ்... இந்த மனோகர்-ல்லாம் வேணாம், அழகா கரண்-ன்னு கூப்பிடு.. ஓகே..?", மனசாட்சி இல்லாதவனுக்கு, மனம் என்னும் வார்த்தை கூட பிடிக்கவில்லையாம்..

"ஓகே கரண், கவனி.. உன் கணக்கு விவரமெல்லாம் நான் மாத்த சொன்னது உண்மைதான், அனா அதை, பாஸ்கர்தான் பிளான் பண்ணினான்... அவனுக்குத்தான் பாஸ் கோட் தெரியும்.. " நேரம் கடத்த ஆரம்பித்தான்.... சூர்யா நாராயண பிரகாஷ்..

இப்போ கரண் கிட்ட SNP யா ? SNP வலைல கரனா??
வீடியோ - ல SNP யையே பயமுறுத்தற மாதிரி வந்த பதிவு என்ன??


மொழிவோம்...
 




lakshmi2407

அமைச்சர்
Joined
Mar 26, 2018
Messages
3,214
Reaction score
15,304
Location
Tamil nadu
தோழிகளுக்கு...

அதிக இடைவெளி .. மன்னிக்கவும்..

சீக்கிரம் அடுத்த பதிவு தர முயற்சிக்கிறேன்...

உங்களின் ஆதரவுக்கு நன்றி.
ஒரு தோழி சொன்னாங்க, வேற தளத்துல நல்லா இருக்கு.. இங்க அத்தனை சிரத்தை எடுக்கறதில்லையோ-ன்னு ...?

தயவு செய்து அப்படி தப்பா முடிவு எடுத்துடாதீங்க, எனக்கு, அப்படி எதுவும் வேறுபாடு கிடையாது..

என்ன ப்ராபளம் ன்னா.. இப்போ எனக்கு நானே போட்டி யாகிட்டேன்... அதைவிட பெஸ்ட் தரணும்.. அது திரில்லர் வெர்ஷனா இருக்கனும்.. இன்னும் மூணே எபில முடிக்கணும்..

முயற்சிதானே ?? செஞ்சு பாத்துடுவோம்... நீங்க கூட இருந்தா .. எவ்வளவோ பண்ணிட்டோம் இத பண்ணமாட்டோமா?-ன்னு அசால்ட்டா முடிச்சுடுவேன்..ன்னு ஒரு நம்பிக்கைதான்....

அதானே எல்லாம்..? :):)
 




Last edited:

Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
தோழிகளுக்கு...

அதிக இடைவெளி .. மன்னிக்கவும்..

சீக்கிரம் அடுத்த பதிவு தர முயற்சிக்கிறேன்...

உங்களின் ஆதரவுக்கு நன்றி.
ஒரு தோழி சொன்னாங்க, வேற தளத்துல நல்லா இருக்கு.. இங்க அத்தனை சிரத்தை எடுக்கறதில்லையோ-ன்னு ...?

தயவு செய்து அப்படி எதுவும் தப்பா முடிவு எடுத்துடாதீங்க, எனக்கு, அப்படி வேறுபாடு கிடையாது..
:):D:D:D:D
 




lakshmi2407

அமைச்சர்
Joined
Mar 26, 2018
Messages
3,214
Reaction score
15,304
Location
Tamil nadu
ஓகே.. சின்ன விஷயம்.. இந்த கைத்துப்பாக்கி பத்தி கொஞ்சம் தகவல் சேகரிக்க.. கூகிளை கூப்பிட்டேன்.
நல்ல தரமான துப்பாக்கி?? -ன்னு கேட்க...

Beratta FS 92, -ன்னு கூகிள் விவரத்தை துப்ப.. அதில் magazine , கேலிப்பேர் ன்னு சொல்ல.. நான் உடனே...:rolleyes::rolleyes:

magazine in a gun -ன்னு கேக்க.. அது தோட்டாக்களை லைனா அடுக்கி, காலியான உடனே கழட்டி போட்டு இன்னொன்னு சொருகி டப் டப் ன்னு சுடுவாங்களே அதுன்னு தெரிஞ்சுது.

ஆங். கேலிப்பேர் .. தோட்டா வோட (dia ) விட்டம்..

இதை சர்ச் ஹிஸ்டரி-ல வீட்ல பாத்துட்டு ... விட்டாங்க பாருங்க ஒரு லுக்.. :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 




lakshmi2407

அமைச்சர்
Joined
Mar 26, 2018
Messages
3,214
Reaction score
15,304
Location
Tamil nadu
ஒரு பச்சி சொல்லுச்சு லச்சுமா யூடி போடுராங்கனு அதான் தூங்காம வெயிடிங்
:p:p
 




Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
ஓகே.. சின்ன விஷயம்.. இந்த கைத்துப்பாக்கி பத்தி கொஞ்சம் தகவல் சேகரிக்க.. கூகிளை கூப்பிட்டேன்.
நல்ல தரமான துப்பாக்கி?? -ன்னு கேட்க...

Beratta FS 92, -ன்னு கூகிள் விவரத்தை துப்ப.. அதில் magazine , கேலிப்பேர் ன்னு சொல்ல.. நான் உடனே...:rolleyes::rolleyes:

magazine in a gun -ன்னு கேக்க.. அது தோட்டாக்களை லைனா அடுக்கி, காலியான உடனே கழட்டி போட்டு இன்னொன்னு சொருகி டப் டப் ன்னு சுடுவாங்களே அதுன்னு தெரிஞ்சுது.

ஆங். கேலிப்பேர் .. தோட்டா வோட (dia ) விட்டம்..

இதை சர்ச் ஹிஸ்டரி-ல வீட்ல பாத்துட்டு ... விட்டாங்க பாருங்க ஒரு லுக்.. :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
நல்ல தரமான சம்பவங்கள் வீட்டில் நடக்கிறதா லச்சுமா:LOL:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top