• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

jangiri

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Thendral

Moderator
Staff member
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
4,900
Reaction score
23,832
Location
Phoenix
தேவையான பொருட்கள் :
முழு உளுத்தம்பருப்பு – ¾ கப்

அரிசி மாவு (optional) – 1 tsp

கேசரி பவுடர் – சிறிது

உப்பு – 1 சிட்டிகை

க்கரைப் பாகு : சக்கரை ¾ கப்

தண்ணீர் – சக்கரைக்கு தேவையான அளவு

எலுமிச்சை சாறு – ½ tsp

ரோஜா எசன்ஸ் – 5 துளிகள்

கேசரி பவுடர் – 1 சிட்டிகை

செய்முறை : உளுத்தம் பருப்பை 2 மணி நேரம் ஊற வைத்து , பின் வடைக்கு அரைப்பது போல அரைத்துக் கொள்ளவும் . பின் அத்துடன் கேசரி பவுடர் , உப்பு 1 சிட்டிகை சேர்த்து , தேவைப்பட்டால் அரிசி மாவு சேர்த்து கலந்து கொள்ளவும்.

பின்பு வானலியில் சக்கரை பாகை செய்து கொள்ளவும். சக்கரை மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். பின்னர் கம்பி பதம் வரும் அளவு கொதிதவுடன் அடுப்பை அனைத்து விடவும். பின் எலுமிச்சை சாறு , கேசரி பவுடர் கடைசியாக ரோஜா எசன்ஸ் சேர்த்து தனியாக வைக்கவும்.

ஒரு ஜிப் லாக் கவர் எடுத்துக் கொள்ளவும். அதில் அரைத்து வைத்திருக்கும் மாவை ஊற்றி , ஓரத்தில் சிறிது கட் செய்து மெஹந்தி போடுவது போல செய்து கொள்ளவும். முதலில் சிறிது வட்டம் போட்டுப் பார்க்கவும்.

சரியாக வந்ததும் முறுக்கு போல ஜாங்கிரி யை பிழிந்து கொள்ளவும்.

ஒரு தட்டையான வானலியில் எண்ணெய் வைத்து சூடானதும் அதில் ஜாங்கிரியைப் பிழியவும்.

நன்கு பொரிந்து வந்ததும் , அதை திருப்பிப் போட்டு மீண்டும் பொரிக்கவும்.

பின்பு அதை நாம் செய்து வைத்திருக்கும் சக்கரைப் பாகில் ஒரு ஐந்து நிமிடம் மூழ்கி வைக்கவும்.

பின்பு தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். ஒரு அரைமணி நேரம் பொறுத்து பின்பு பரிமாறவும்.

சுவையான ஜாங்கிரி தயார்....

செஞ்சு பாத்துட்டு எப்படி இருந்துச்சுன்னு சொல்லுங்க ப்ரெண்ட்ஸ்.

நான் அடிக்கடி செய்யும் ஸ்வீட்..... மை ஃபேவரைட்.
 




Puvi

அமைச்சர்
Joined
Feb 24, 2018
Messages
2,791
Reaction score
11,159
Location
Chennai
கண்டிப்பாக முயற்சி செய்கிறேன், சேட்டு கடை ஜிலேபி என் மகளுக்கு சூடா சாப்பிட பிடிக்கும்.ரெசிபி தெரியாது,நன்றி தென்றல்.
 




Thendral

Moderator
Staff member
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
4,900
Reaction score
23,832
Location
Phoenix
கண்டிப்பாக முயற்சி செய்கிறேன், சேட்டு கடை ஜிலேபி என் மகளுக்கு சூடா சாப்பிட பிடிக்கும்.ரெசிபி தெரியாது,நன்றி தென்றல்.
செஞ்சு குடுத்து அசத்துங்க புவி :love:
 




Puvi

அமைச்சர்
Joined
Feb 24, 2018
Messages
2,791
Reaction score
11,159
Location
Chennai
செஞ்சு குடுத்து அசத்துங்க புவி :love:
இந்த சன்டே ட்ரை பண்ணி பார்த்துட்டு,உங்களுக்கு எப்படி இருந்ததென்று சொல்கிறேன் ்.
 




Thendral

Moderator
Staff member
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
4,900
Reaction score
23,832
Location
Phoenix
இந்த சன்டே ட்ரை பண்ணி பார்த்துட்டு,உங்களுக்கு எப்படி இருந்ததென்று சொல்கிறேன் ்.
தேங்க்ஸ் பா.. வெய்டிங்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
நானும் இதுவரை ஜிலேபி
செஞ்சதில்லை பா
என் பையனுக்கு ரொம்பவும்
பிடிக்கும், தென்றல் டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ரெசிப்பி படிக்கும்பொழுது
ஈஸியா இருக்கிறது போல்
தோணுது
செஞ்சுப் பார்த்துட்டு சொல்றேன்,
தென்றல் டியர்
 




Saasha (Sara Saravanan)

SM Exclusive
SM Exclusive
Joined
Jul 19, 2018
Messages
3,389
Reaction score
12,897
Location
Bengaluru
Ada ஜாங்கிரி போட்டூட்டீங்களா ...?மை First ஜாங்கிரி manufacturing orange இனிப்பு முறுக்கா மாறிடுச்சு....இந்த முறை நீயா நானான்னு பார்திடறேன் (ஜாங்கிரி கூட) டார்லிங்...????
 




Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
கண்டிப்பாக முயற்சி செய்கிறேன், சேட்டு கடை ஜிலேபி என் மகளுக்கு சூடா சாப்பிட பிடிக்கும்.ரெசிபி தெரியாது,நன்றி தென்றல்.
ஜிலேபி மைதா மாவில் செய்வது, ஜாங்கிரி உளுந்தம்பருப்பில் செய்வது பா இரண்டும் வேறு வேறு.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top