• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kaadhal Pandhayam-3(2)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
"நான் மேரேஜ பன்னது அருண் இல்லடி உதய்"

"என்னடி சொல்ற நீ? அருணை கல்யாணம் பன்னலியா? நீயும் அருணும் எப்படி லவ் பன்னிங்க. எப்படிடி அப்புறம் இது?" என்று அதிர்ந்து கேட்டாள் ஹாசினி.

"என்ன பன்றதுடி?" என்று ஸ்வப்னா பெருமூச்சுவிட "ஏன் பேரண்ட்ஸ் ஏதாச்சும் பிளாக் மெயில் பன்னாங்களா?"

"ஆமாடி" என்றதும் "சாரிடி" என்று வருத்தமாக சொல்ல அருண் அவளை பார்த்து இப்ப என்ன சொல்ற என்பது போல் பார்த்தாள்.

"இதுக்கு நீ ஏன் வருத்தபடறே? அவங்க எனக்கு நல்லதுதான் செஞ்சிருக்காங்க. அருண் மாதிரி ஆளுகளால் உருகி உருகி லவ் பன்ன முடியும் ஆனா வசதியான வாழ்க்கையை உதயாலதான் தரமுடியும்" என்றதும் அருணின் காலிலிருந்து தரை நழுவ ஆரம்பித்தது.

"அருணும் வசதியான வீட்டு பையன்தானே?"

"ஆமா அதெல்லாம் எதுவரைடி? நான் அருணை மேரஜ் பன்ன உடனே அவர் டாடி எங்களை வெளில அனுப்பிச்சுருவாரு. எங்க வீட்ல எதுவும் செய்ய மாட்டாங்க தவிர அவங்க சப்போர்ட்டும் போயிடும்"

"அதுக்கு?" என்றாள் ஹாசினி.

"சச்சின் படத்துல வர சந்தானம் மாதிரி எங்கிட்ட இருக்கறது உன் காதல் மட்டும்தான்னா என்ன பன்றது?"

"அப்ப பணத்துக்காகதான் அருணை காதலிச்சியா?"

"அவரும் மட்டும் என்ன என் அழகுக்காகதானே லவ் பன்ன ஆரம்பிச்சாரு"

"ஸ்வப்னா! அருண் எனக்கு தெரிஞ்சு ஜெம்மாதான் உன் கூட இருந்தாரே?"
"அது என் புத்திசாலித்தனம் ஸ்வாதி"

"கடைசியா நீ என்ன சொல்ல வர்றே?"
"ஸ்வாதி! நீ என் குளோஸ் பிரண்ட் அப்படிங்கறதால எல்லா உண்மையை சொல்றேன். நீ ஏன் அவனை சப்போர்ட் பன்ற? நீ என் பிரண்டா இல்லை அவன் பிரண்டா?" என்று கோபமாக சீறினாள் ஸ்வப்னா.

"சாரிடி அருண் மேல இருந்த கிரேஸ்ல பேசிட்டென்"

கதவு திறக்கும் சப்தம் கேட்டது.

"ஆ!" என்ற ஸ்வப்னாவில் அலறலும் போன் விழும் சப்தம் கேட்டது.

"இப்ப வேண்டாம் ப்ளீஸ் உதய்" என்று ஸ்வப்னாவின் கெஞ்சலும், "நோ சான்ஸ்" என்ற ஆண்குரலும் கேட்டது.

ஹாசினி உடனே போனை கட் செய்துவிட்டு அருணை பார்த்து இப்ப என்ன சொல்றங்கற மாதிரி பார்வை பார்த்தாள்.

"அந்த ஸ்வப்னா என் கையில் கிடைச்சா" என்று ஆவேசமாக கத்தினான் அருண்

"பாஸ்... காதலில் தோற்றால் சூசைட் அதுவே காதலி ஏமாத்துனா மர்டரா?" என்றாள் ஹாசினி.

அப்புறம் வேற என்ன செய்ய என்பது போல் பார்த்தான் அருணாச்சலம்.

"பாஸ்... லவ் பன்றப்ப உங்க ரெண்டுபேரை பத்தி பேசுனா நீங்க உஷாராக அவங்களை கவனிங்க அப்படி எல்லாம் இல்லாம அம்மா பத்தி அப்பா பத்தி அடிக்கடி பேசனும். அபி பத்தி பேசனும். உங்க பேமிலி மெம்பர்சுக்கு என்ன பிடிக்கும் பிடிக்காதுன்னு கேட்டாங்களா?"

இல்லை என்பதை மெளனம் சொல்ல "பாஸ்... இந்த ஸ்வப்னாவுக்காக நீங்க பேமிலியை விட்டு சூசைட் பன்ன போறிங்களா?"

அவன் மெளனமாக அழுதான்.

"உங்களை என்று சொல்லலை பொதுவாக சொல்றேன் சூசைட் பன்றவங்க முதலில் அவங்க மேல் பாசம் வைச்சிருக்கற அம்மா, அபி மாதிரி தங்கச்சி, அக்கா, வெளில பாசம் காட்டிக்க விரும்பாத அப்பா, அண்ணன்கள் இவங்களை பற்றி யோசிங்க." என்று சொல்லிவிட்டு அவனை விட்டு சென்று மரத்தின் அடியில் அமைதியாக நின்றுக் கொண்டாள்.

அருண் சில நிமிடங்கள் அழுது முடித்தபின் அவளை பார்த்தான்.

கொஞ்சம் நேரம் கழிச்சி கமெண்ட் செய்யலாம் அப்டேட் முடியலை ப்ளீஸ்
 




Last edited:

sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
ஹாசினி அவன் அருகில் வர " என் போனை தா" என்றான்.

அருணாச்சலம் யாருக்கோ டயல் செய்தான்.

"நான் நல்லா இருக்கேண்ணா. பெங்களுருல என் பிரண்ட் வீட்லதான் இருக்கேண்ணா. நான் வந்திடறேண்ணா." என்று அருண் பேசும் பொழுது பாசத்துடன் பயம் கலந்த மரியாதை அவன் பேச்சில் தெரிந்தது.

அடுத்த நிமிடத்தில் அண்ணி! சாரி அண்ணி! சாரி அண்ணி! நான் உங்க புள்ளை அண்ணி. நான் நாளைக்கே வர்றேன் அண்ணி." என்று பேசிய பொழுது அவன் பேச்சில் பயம் இல்லை ஆனால் மரியாதை பாசம் அன்பு எல்லாம் அவள் உணர்ந்தாள்.

அடுத்த நிமிடத்தில் "சாரிடா தங்கம்! சித்பா உடனை வர்றேன். என் பாப்புவ பாக்க உடனே வர்றேன். சித்பா வரும் போது தங்கத்துக்கு நிறைய சாக்லேட் பொம்மை வாங்கிட்டு வர்றேன். சோ ஸ்வீட் செல்லம் நீ! சித்பாவுக்கு முத்தா கொடு." என்றபின் முத்தம் கொடுத்தான் அருணாச்சலம்.

குழந்தையிடம் பேசும்பொழுது அவனும் குழந்தையாக மாறி இருந்தான்.

எத்தனை விதமான அன்பு! எத்தனை அன்பு! இவ்வளவு பாசம் வைச்சிருக்கறவங்களை விட்டுட்டு சாகப் போறியா? உன்னை என்று மனதிற்குள் திட்டினாள்.



Write your reply...
 




N.Palaniappan

மண்டலாதிபதி
Joined
May 22, 2018
Messages
164
Reaction score
277
Location
Coimbatore
ஹாசினி அவன் அருகில் வர " என் போனை தா" என்றான்.

அருணாச்சலம் யாருக்கோ டயல் செய்தான்.

"நான் நல்லா இருக்கேண்ணா. பெங்களுருல என் பிரண்ட் வீட்லதான் இருக்கேண்ணா. நான் வந்திடறேண்ணா." என்று அருண் பேசும் பொழுது பாசத்துடன் பயம் கலந்த மரியாதை அவன் பேச்சில் தெரிந்தது.

அடுத்த நிமிடத்தில் அண்ணி! சாரி அண்ணி! சாரி அண்ணி! நான் உங்க புள்ளை அண்ணி. நான் நாளைக்கே வர்றேன் அண்ணி." என்று பேசிய பொழுது அவன் பேச்சில் பயம் இல்லை ஆனால் மரியாதை பாசம் அன்பு எல்லாம் அவள் உணர்ந்தாள்.

அடுத்த நிமிடத்தில் "சாரிடா தங்கம்! சித்பா உடனை வர்றேன். என் பாப்புவ பாக்க உடனே வர்றேன். சித்பா வரும் போது தங்கத்துக்கு நிறைய சாக்லேட் பொம்மை வாங்கிட்டு வர்றேன். சோ ஸ்வீட் செல்லம் நீ! சித்பாவுக்கு முத்தா கொடு." என்றபின் முத்தம் கொடுத்தான் அருணாச்சலம்.

குழந்தையிடம் பேசும்பொழுது அவனும் குழந்தையாக மாறி இருந்தான்.

எத்தனை விதமான அன்பு! எத்தனை அன்பு! இவ்வளவு பாசம் வைச்சிருக்கறவங்களை விட்டுட்டு சாகப் போறியா? உன்னை என்று மனதிற்குள் திட்டினாள்.



Write your reply...
Yes சரிதான்.
அண்பு உயிர்ப்பிக்கும்
 




sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
"என் அண்ணா வெளில கோப படுவான் அவ்வளவுதான் ஆனா அவனுக்கு என் மேல பாசம் ஜாஸ்தி எனக்கும் சேர்த்து அவன்தான் பிசினஸ் பார்த்துட்டு வர்றான். நான் அவனுக்கு எதுவும் செய்யலை. அவன் எனக்காக எல்லாம் செய்யறான்" என்றான் அருண்.

அது இப்பதான் தெரியுதா மிஸ்டர் மஜ்னு அவர்களே என்று நினைத்தபடி அவள் பார்க்க
அருண் தொடர்ந்தான்.

"என் அண்ணி அவங்க என் அம்மா மாதிரி. என் காதலை அவங்ககிட்ட சொன்னப்ப சப்போர்ட் பன்னி பேசினாங்க. என்னை சப்போர்ட் பன்னி நிறைய பேசுனாங்க. அவங்க என் காதலுக்காக எவ்வளவு மணி கேட்டாலும் தந்து ஹெல்ப் பன்னாங்க."

"அவங்க பேரு?"
"மகாலட்சுமி"

"நைஸ் நேம்" என்று அவள் சொல்ல "அவங்க பேரு மட்டுமல்ல அன்பு, அழகு, அறிவு, குணம் எல்லாத்திலும் பெஸ்ட்" என்றான் அருணாச்சலம்.

அது இப்பதான் தெரியுதா? கொஞ்சநேரம் முன்னாடி அவங்களை பத்தி தெரியலை உங்களை எல்லாம் என்று நினைத்தபடி அவள் பார்த்தாள்

"வைசுக்குட்டி! சித்பா சித்பா அப்படிம்பா அவ்வளவு அழகாக இருக்கும். ஒருநாள் பூரா கேட்கலாம். அவளோட பிஞ்சு முகம் , மழலை பேச்சு, அவ தர்ற பூ முத்தம் சான்சே இல்லே. வைசுக்குட்டி இப்ப வர்றேன்டா" என்றான் அருண்.

"குழந்தைன்னா என்னிக்கும் க்யூட்தான் பாஸ். அவங்க சிரிச்சே நம்மளை அவங்க வசப் படுத்தீடுவாங்க பாஸ் அப்புறம் நாம அவங்க சொல்றதான் கேட்கமுடியும்" என்று ஹாசினி சொல்ல "சரியா சொன்னயா" என்றான் அருணாச்சலம்.

"என் பாப்பும் அப்படித்தான். அபிக்குட்டி என் தாய் மாதிரி ஹாசினி. எனக்கு என்ன சோகம் வந்தாலும் அவள் முகத்தை பார்த்தால் ஒடிடும். என் காதலை நான் அவகிட்டதான் முதல்ல சொன்னேன். அபிக்கு அவ்வளவு சந்தோஷம். அவதான் பார்த்து ஒகேன்னா என்னைவிட எங்க காதல் மேல அவளுக்குதான் ஆர்வம் அதிகம்"

நினைச்சேன்! இந்த ஸ்வப்னா மாதிரி ஆளுக பலமே இந்த தங்கச்சிகள் தான் என்று நினைத்தவளாய் சிரித்தாள்.

"இவங்களை எல்லாம் விட்டுட்டு சாகப் போனேனே? நான் முட்டாள் ஹாசினி." என்றான் அருணாச்சலம்.

அதான் எனக்கு தெரியுமே மிஸ்டர் மங்குனி அவர்களே என்று அவள் நினைக்க,
"நான் ஏன் அந்த ஸ்வப்னா மாதிரி ஆளுக்காக சாகனும்? நான் வாழப் போறேன். என் பேமிலிக்காக வாழப் போறேன்" என்று அவன் மனம் திருந்தி சொல்ல அவள் அமைதியாக சிரித்தபடி பார்த்துக் கொண்டு நின்றாள்.


Write your reply...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top