• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kaadhal Pandhayam #4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
"அரசி! அரசி!" என்று உற்சாகமான குரலில் அழைத்தபடியை அரசியின் மாளிகைக்குள் நுழைந்தார் எழில்முகில் வேந்தர்.

"வாருங்கள் அரசே!" என்று அரசி செளந்தர்யவதி எதிர் நின்று அழைக்க அதை ஏற்று புன்னகை வீசிய எழில் முகிலர் பஞ்சுமெத்தை திண்டுக்கள் போடப்பட்ட ஆசனத்தில் அமர்ந்தார்.

"அப்பா!" என்றபடி இளவரசி ரத்னமாலையும் அங்கு வர, "மகளே! நீயும் இங்குதான் உள்ளாயா?" என்றார் அரசர்.

"ஆம் தந்தையே" என்று ரத்னா பதில் உரைக்க, "நல்லது! நானே அன்னையுடன் வந்து உன்னை காணலாம் என்றிருந்தேன். நீயே இங்கிருக்கிறாய்" என்றார் அரசர்.

"என்ன விஷயம் அப்பா?" என்று ரத்னமாலை கேட்டாள்.

"உன் திருமண விஷயம்தான்" என்றவுடன் வெட்கத்தில் நாணி தலை கவிழ்ந்து புன்னகை சிந்தினாள் ரத்னமாலை.

"சுயம்வரத்திற்கான ஏற்பாடுகள் ஆரம்பித்து விட்டீர்களா?" என்று வினவினாள் அரசியார்.

"ம்" என்று அவர் தலையசைக்க, "நம் மகளின் நிபந்தனை"என்று முகம் சுருக்கி கேட்டார் அரசி.

"அதுக்கு வழி கண்டுபிடித்து ஆகிவிட்டது" என்று அரசர் கூற எப்படி என்று இருவரும் அரசரை கேள்விகளோடு முகம் சுருக்கி பார்த்தார்கள்.

"என்ன அப்படி பார்க்கிறிர்கள்?" என்றார் அரசர்.

"என் தோழி அழகம்மையின் பிரச்சனை தீர்க்கும் இளவரசரை அறிய என்ன வழி கண்டறிந்து உள்ளீர்கள் தந்தையே" என்று இளவரசி வினவினார்.

"நானும் குழப்பத்தில்தான் இருந்தேன். நம் மதி மந்திரியார் மதிபாலர்தான் ஒர் வினாவை எழுப்பி அதற்கு விடை கூறும் இளவரசர் எவராயினும் அவர் நம் புதல்வியை மணம் முடிக்கலாம் என்று சொன்னார். நானும் அவரை மடல் வரைய கூறிவிட்டேன்" என்றார் அரசர்.

"என்ன வினா தந்தையே?" என்று ஆர்வமாக கேட்டாள் இளவரசி ரத்னமாலை.

"காணா உலகில் கரைந்துவிட்ட காளையனால் கண்ணீரால் கரைகின்றவளை காக்க போகா வழி கண்டு போய் சேர்ந்து பொல்லா சதி வென்றால் புதுமலர் புன்னகையால் பூத்திடும். அழகுமலர் அள்ளி அணைத்திடும். இதுதான் அந்த கேள்வி. யார் இதற்கு துணிந்து விடை சொல்கிறாரோ அவரே இளவரசியின் மணாளன்" என்று சொல்லிவிட்டு புன்முறுவல் புரிந்தார் எழில் முகில் வேந்தர்.

"அற்புதம் தந்தையே! என்னே நம் மந்திரியார் அறிவு!" என்று வியந்து பாராட்டினாள் இளவரசி ரத்னமாலை.

"அதுதான் அவர் சிறப்பு மகளே." என்று அரசர் பாராட்டினார்.

"ஆம் தந்தையே. நீங்கள் கூறுவதும் சரிதான்" என்றார் இளவரசி ரத்னமாலை.

"இதற்கு விடை சொல்லி சவாலை ஏற்கும் துணிவுமிக்க இளவரசர்தான் யாரென்று தெரியவில்லையே?" என்று தாயாக வருத்தத்துடன் கேட்டார் செளந்தர்யவதி.

"கண்டிப்பாக யாரேனும் துணிவும் அறிவும் மிக்க நபர் வருவார்" என்று இளவரசி நம்பிக்கையுடன் சொல்ல,
"அதையும் பார்ப்போம்" என்றார் அரசர் எழில்முகில் வேந்தர்.

இளவரசியின் சுயம்வர மடல் செல்ல அதை வாசித்த பெரும்பாலான இளவரசர்கள் அதன் பொருள் அறிந்தாலும் பெரும் சவாலை ஏற்க தயாராக இல்லாத காரணத்தால் அவர்கள் யாரும் துணியவில்லை.

இளவரசர்களில் சிலர் சவாலை ஏற்று சில தேசங்கள் வரை சென்று பார்த்து திரும்பி வந்து விட்டார்கள்.

பல நாட்டு இளவரசர்கள் செளந்தர்யபுரி மன்னருக்கு பெண்ணை மணம் முடிக்கும் யோசனை இல்லை அதனால் யாரும் செய்ய முடியாத சவாலை விடுகிறார் என்றார்கள்.

சில இளவரசர்கள் ரத்னமாலை யாரையோ காதலிக்கிறார் அதனால் சுயம்வரத்தை தள்ளி போட தன் தோழியை காரணம் காட்டுகிறார் என்று பழி கூறினார்கள்.

ரத்னமாலையின் சுயம்வர மடல் விடுக்கப்பட்டு ஆறு மாதங்கள் ஆகியும் பலன் அளிக்கவில்லை.

அரசருக்கும், அரசியாருக்கும் ஏன் நாட்டு மக்களுக்கும் இளவரசி ரத்னமாலையின் திருமணம் குறித்து மிகப்பெரிய கவலை ஏற்பட ஆரம்பித்து விட்டது.

Message…
 




Last edited:

sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
செளந்தர்யபுரி நாட்டு மக்கள் வசதியாக எந்த குறையும் இல்லாமல் வாழ்ந்து வந்தபோதிலும் இளவரசியின் திருமணம் பற்றிய கவலை அவர்களை வாட்ட அதைப் பற்றி பரவலாக பேச ஆரம்பித்தார்கள்.

ரத்னமாலையின் திருமணம் தன் பொருட்டு நடைபெறாமல் இருப்பது கண்டு மிகுந்த மன வேதனை அடைந்தாள் அழகம்மை.

இளவரசியின் திருமணம் பெருவணிகர் தனசேகரன் மகள் அழகம்மையால்தான் தடை படுகிறது என்று அவர் காதுபட பேச ஆரம்பிக்க தனசேகரர் மன வேதனை அடைந்தார்.

ஒருநாள் தன் நம்பிக்கைகுரிய சிவநேசரை அழைத்து அவரிடம்
"சிவநேசரே! என் மகள் காரணமாக அரசரின் மகள் திருமணம் தடை படுகிறது ஆகையால் நான் மிக்க வேதனையில் உள்ளேன். என் மனம் தொழிலில் நாட்டம் கொள்ளவில்லை ஆகையால் சிறிதுகாலம் நீரே தொழிலிலை பார்த்துக் கொள்ளுங்கள்" என்றார்

"சரி ஐயா" என்று சிவநேசர் சம்மதித்து தலையசைக்க,
"அரசரையும் என்னால் முன் போல் பார்க்க இயலவில்லை ஆகையால் நான் சிலகாலம் புனிதயாத்திரை செல்லலாம் என்று இருக்கிறேன்" என்றார் தனசேகரர்.

"அருமையான யோசனைதான். இறை பக்தியில் நேரத்தை செலவிட்டால் பிரச்சனைகள் அகல அந்த இறைவனே ஏதாவது வழி அருளுவார்" என்றார் சிவநேசர்.

"அதுதான் சரி. இன்னும் இரு தினங்களில் நான் புனித யாத்திரை செல்ல ஏற்பாடுகளை செய்யுங்கள்" என்று ஆணை இட்டார்.

அடுத்த நான்கு தினங்களில் தனசேகரர் மன்னரிடம் சொல்லி விட்டு தன் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் எல்லாரிடமும் விடை பெற்று புனித யாத்திரை சென்று விட்டார்.

இளவரசி ரத்னமாலையின் திருமணம் தன் காரணமாக தடைபடுவதால் தோழியின் முடிவை மாற்ற திட்டமிட்ட அழகம்மை தனிமையில் ரத்னமாலையை சந்தித்தாள்.

"ரத்னா! ஏன் வாழ்க்கைதான் விடை தெரியாத வினாவாக மாறி விட்டது. என் காரணமாக உன் வாழ்க்கையையும் ஏன் நீ கெடுத்துக் கொள்கிறாய்? நான் சாதாரணமான வணிகன் மகள். நான் திருமணம் செய்ய விட்டால் பரவாயில்லை ஆனால் நீயே இளவரசி ஆகையால் உன் முடிவை மாற்றிக் கொள்" என்றாள்.

"அழகம்மை! உன் வாழ்வு கேள்விகுறியாக இருக்கும் நிலையில் என்னால் திருமணம் செய்து நிம்மதியாக வாழ இயலாது"

"அதற்காக உன் எதிர்காலத்தை வீணடிக்கப் போகிறாயா?" என்றாள் அழகம்மை

"அது எனக்கு தெரியாது ஆனால் உன் திருமண பிரச்சனைக்கு தீர்வு இல்லாமல் என் திருமணம் நடக்காது." என்று உறுதியான குரலில் கூறினாள் ரத்னமாலை.

இளவரசியான தோழியின் ஆழமான நட்பின் காரணமாக வெளிவந்த வார்த்தைகளால் அவள் மனம் மகிழ்ந்தாலும் தோழியின் அந்த முடிவை மாற்ற எண்ணம் கொண்டாள் அழகம்மை Write your reply...
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
நான்தான் First,
சக்திபிரியா டியர்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சக்திப்ரியா டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top