• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Kaadhale thunai 6

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
காதல் 6

ஊரில் திருவிழாவிற்கு ஆதி அழைத்து இருந்தாள் பிரீத்தியை, அவளால் உடனே கிளம்ப முடியாத சூழல்.

காரணம் இன்னும் நான்கு நாட்களுக்குள், அந்த பிராஜக்ட் சப்மிட் செய்ய வேண்டும்.

அதற்கு தான் இரவும், பகலும் அயராது தங்களின் உழைப்பை இதில் கொடுத்து கொண்டு இருக்கிறோம் என்பதை அவள் நன்கு அறிவாள்.

அதுவும் ஆதிக், அவனின் வழிநடத்தல் இதில் அதிகம்.

நிறைய அவனிடம் இருந்து, கற்றுக் கொள்ளும்படி இருந்தது. அதிலும், அதில் ஏற்படும் சில நுணுக்கமான தவறுகள் எல்லாம் எப்படி சரி செய்வது என்பதை எளிய முறையில் கற்றுக் கொடுத்தான்.

“இவனை இன்னும் புரிஞ்சிக்க முடியல என்னால, நல்லா பார்துகிறான் என்னை. இவனோட எதிரி தட்டி பறிக்க வந்த பொழுது தைரியமா எதிர்த்து நின்றான்”.

“எனக்கும், என்னை சேர்ந்த எல்லோருக்கும் பாதுகாப்பு கொடுத்து இருக்கான். எல்லாத்துக்கும் மேல, அப்போ அப்போ என்னை நல்லா சைட் அடிக்கிறான். இவன் ஆனா நான் கிட்ட போனா மட்டும், முகத்தை ஏன் இறுக்கமாக வச்சு இருக்கான்?” என்று மனம் அவனை சுற்றி தான் வந்து கொண்டு இருந்தது.

அதோடு நிறுத்தாமல், இப்பொழுது இந்த நான்கு நாட்களாக அவளின் பார்வை முழுவதும் அவன் மேல் தான்.

“அடியே! சைட் அடிச்சது போதும், என்னை வேலை செய்ய விடேன்” என்று அவன் மனம் இப்பொழுது அரற்றி கொண்டு இருந்தது.
ஆதிக், அவளை இப்பொழுது அவனை நினைக்க வைத்து விட்டாலும், அவன் மனம் இன்னும் அவளாக திருமணம் குறித்து பேசவில்லை என்ற வருத்தம் இருக்க தான் செய்தது.

பெண் பார்க்கும் வைபவத்தில் அவளை சரியாக பார்க்க கூட இல்லை, ஆனால் அடுத்து பாட்டியுடன் கடைக்கு சென்ற இடத்தில் அவளை நன்றாக பார்வன், அவள் வசம் சிறிது விழுந்தான்.

அடுத்து இந்த பிராஜக்ட் குறித்து பேசும் பொழுது தான், அவளின் நிமிர்வும், கம்பீரமும் அவனை அவள் வசம் திரும்ப செய்தது. அதன் பிறகு, அவன் மனதில் ஒன்றே ஒன்று தான் ஓடிக் கொண்டு இருந்தது, அது இனி அவள் அவனை முழுவதுமாக நினைக்க வேண்டும், காதல் புரிய வேண்டும் என்பது.

“ஹ்ம்ம்.. இப்போ தான் சைட் அடிக்க ஆரம்பிச்சு இருக்கா, இனி எப்போ காதல் சொல்லி, எப்போ ஹனிமூன் பத்தி எல்லாம் பேசுறது” என்று சலித்து கொண்டான்.

“ஆதிக்! இன்னும் ஒரு நாலு நாள் ல பிராஜக்ட் முடிஞ்சு, நாம சப்மிட் பண்ணிடலாம் இல்லையா? ” என்று கேட்டாள் பிரீத்தி.

“ஆமா பிரீத்தி! முடிச்சிடலாம், என்ன திடீர்னு? நாம இதை பத்தி பேசி இருக்கோம் தானே” என்று எதற்கு கேட்கிறாள் என்று தெரியாமல் கேட்டான்.

“இல்லை என் சிஸ்டர் அபிஷேகப்பட்டி ஊர் ல இருக்கா, அவ அங்க திருவிழாவுக்கு கூப்பிட்டா. அதான் நாலு நாள் ல இது முடிஞ்சா, அடுத்த நாள் அங்க கிளம்பலாம் பார்க்கிறேன்” என்று கூறவும், அவன் விழித்தான்.
அந்த ஊர் அவனின் சொந்த ஊர் அல்லவா, இரண்டு நாட்கள் முன் அஜய் செய்து இருந்த கலாட்டா அவன் காதுக்கு வந்தது.

அது மட்டுமின்றி, அவனின் சித்திகும் இடையில் உடம்பு முடியாமல் இருந்ததாலும், திருவிழா வேறு நெருங்குவதால், அவன் வீட்டினர் எல்லோரும் அவனை அழைத்து செல்ல திட்டமிட்டு கொண்டு இருந்தனர்.

இப்பொழுது இவள் இப்படி கூறவும், முதலில் வர முடியாது என்றவன் உடனே பாட்டிக்கு கால் செய்து பேசி இந்த வார கடைசியில் அங்கே செல்லலாம் என்று பச்சை கொடி காட்டி விட்டான்.

“மருமகளே! உன் மகனுக்கு யார் வேப்பிலை அடிச்சது தெரியல, ஊருக்கு போக சரின்னு ஒத்துகிட்டான். நீ போன் போட்டு சொல்லிடு அவங்களுக்கு, பத்திரிக்கை எடுத்து வச்சுக்கோ அப்படியே, அங்க இருக்கிற இன்னும் நம்ம சொந்த பந்தங்கள் எல்லோருக்கும் பத்திரிக்கை வச்சிடுவோம்” என்று கூறிவிட்டு அதற்கான வேலையில் இறங்கினார்.
 




umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
இங்கே அபிஷேகப்பட்டியில் ஆதிசேகரி, வீட்டுக்குள்ளே இருக்க பிடிக்காமல் தாயிடம் கெஞ்சிக் கொண்டு இருந்தாள்.

“ஆத்தா! இது சரியில்லை, நான் வெளியே போனா தான் என்ன? அந்த நண்டு மட்டும், ஊர் சுத்தலாம் நான் சுத்த கூடாதா?” என்றவளை பார்த்து முறைத்தார்.

“அடியே! பேசுற அந்த வாயை முதல தைக்கணும். பொம்பளை பிள்ளையா, அடக்கமா வீட்டுல இருத்தா. இப்போதேன் அக்கா போன் போட்டுச்சு, இன்னும் நாலு நாள் ல எல்லோரும் வறாங்க இங்க”.

“அவிக வந்த உடனேயே, சாமிக்கு பொங்கல் வைக்க நேர்ந்து இருக்குல, அப்போ வெளியே கூட்டிட்டு போறேன்த்தா” என்று அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

“ஹ்ம்ம்.. இன்னும் நாலு நாள் வீட்டுல அடைஞ்சு கிடக்கணுமா, எல்லாம் இந்த நண்டால வந்தது. அவன் மட்டும் கைல கிடைச்சான், அப்படியே அவன் சிண்டு முடியை பிடிச்சு இழுத்து, கும்மு கும்முன்னு குனிய வச்சு கும்மிடனும்” என்று அவன் மீது இன்னும் கோபம் கொண்டாள்.

அன்று ஒருவருக்கு இடுப்பில் சுளுக்கு எடுக்க, இவளின் அன்னை அங்கே விரைந்திட, இவள் இப்படியே வெளியே சென்றால் என்ன என்று யோசிக்கும் பொழுது, உள்ளே வரலாமா என்று கேட்டுக் கொண்டு வெளியே நின்றான் ஒரு வாலிபன்.

அவனை பார்த்தால், ஊருக்கு புதிது என்று தெரிந்தது. இங்கே என்ன வேலை இவனுக்கு? என்று யோசித்துக் கொண்டே இவள் யார் என்று கேட்டாள் அவனிடம்.

“என் பேர் சுதாகர், அஜய் நந்தன் என்னோட ப்ரெண்ட். அவன் வீடு தான இது, அவன் இல்லையா” என்று கேட்டான்.

“நண்டு வீடு இது இல்லைங்க, இன்னும் கொஞ்ச தூரம் போய் பிள்ளையார் கோவில் வரும், அதுல வலது பக்கம் திரும்பினா அவிக வீடுதேன். ஆமா, நண்டுதேன் இந்த வீட்டுக்கு உங்களை வர சொன்னதா” என்று யோசனையுடன் கேட்டாள்.

அவளின் யோசனை சரி என்பது போல், டேய் மாப்பிள்ளை என்று கூறி அவனை கட்டி தழுவிக் கொண்டான் அஜய் நந்தன். அதை பார்த்து, இவள் முகத்தை கடுகடுவென்று வைத்துக் கொண்டாள்.

“ரொம்ப நாள் ஆச்சா உன்னை பார்த்து, அதேன் உன்னை வர சொன்னேன் டா. அப்புறம் எப்படி இருக்க? கொஞ்சம் மெலிஞ்ச மாதிரி இருக்கியே டா” என்று அவனை கேட்பது போல், கண்களால் அவன் அவளை தான் கேள்விக் கேட்டுக் கொண்டு இருந்தான்.

அவளோ, மிரட்டி கொண்டு இருந்தாள் அவனை. இப்பொழுது, உடனே இடத்தை காலி செய்யவில்லை என்றால், அடுத்து சேதாரத்துக்கு தான் பொறுப்பு இல்லை என்று.

அவனா, உடனே இடத்தை காலி பண்ணுவான். இன்னும் வசதியாக அங்கே வெளிவாயிலில் அமர்ந்து அவனுடன் பேசிக் கொண்டு இருந்தான்.

“கையில் எதுவும் இப்போ பார்த்து எதும் சிக்க மாட்டேங்குது, இரு டா இந்த சொம்பை உம் மேல எறிறேன்” என்று கருவிக் கொண்டே சொம்பை தூக்கி வீசிய பொழுது, அவன் அதை அழகாக கேட்ச் பிடித்து அவளை பார்த்து கண் சிமிட்டினான்.

“ஆஞ்சநேயா! இவன் அலும்பு தாங்கல, முதல அவனை இடத்தை காலி செய்ய வைங்க ” என்று வேண்டிக் கொண்டு இருந்தாள்.
அவளின் வேண்டுதலுக்கு செவி சாய்த்தார், அவளின் தந்தை அப்பொழுது தான் வெளியே வேலை முடித்துக் கொண்டு வந்து இருந்தார்.

“நந்து தம்பி! யார் இந்த பிள்ளை? என்ன திடீர்னு நம்ம வீட்டு பக்கம் வந்து இருக்கீக? பாப்பா எதும் சாப்பிட கொடுத்துச்சா” என்று வீட்டின் ஆளாக அவர்களை உபசரித்து அங்கேயே முற்றத்தில் அவர்களோடு அமர்ந்து விட்டார்.

“இவன் என் பிராண்ட், நம்ம திருவிழா பூராவும் இவனும் இன்னும் கொஞ்ச பேரும் சேர்ந்து தான் போட்டோ பிடிக்க போறாக. நம்ம தோப்பு வீடு இப்போ வேலை நடக்குது, அதேன் கோவில் பக்கத்துல இருக்கிற உங்க மச்சு வீட்டுல, இவங்களை எல்லாம் தங்க வைக்கலாமா என்னன்னு கேட்டுட்டு போக வந்தேன்” என்று பவ்யமாக அவன் பேசியதை கேட்டு வாயை பிளந்தாள் ஆதி.

“அடப்பாவி! எம்புட்டு நேரம் என்னன்னு நான் இங்க கிடந்து யோசிச்சு இருப்பேன். சொன்னியா டா நண்டு! இப்போ பவ்யமா எங்க அப்பாரு கிட்ட பேசுறது என்ன!” என்று நொடிதுக் கொண்டாள்.

“ரொம்ப நாள் தூசி படிஞ்சு இருக்கு தம்பி அங்க, எத்தா ஆதி போய் தம்பிக்கு வீட்டை காட்டிட்டு, சுத்தம் பண்ணிக் கொடுத்துட்டு வாத்தா” என்று மகளிடம் பொறுப்பை ஒப்படைத்தார்.

அவரின் களைப்பு, அவ்வாறு அப்பொழுது அவரை பேச வைத்தது. மனைவி இருந்தால், தடுத்து இருப்பாரோ என்னவோ, வெளியே செல்ல வாய்ப்பு என்று கருதி உடனே வெளியேறினாள்.

ஆனால் அங்கு சென்று வந்த பின், அவள் அடுத்து வீட்டை விட்டு வெளியே செல்ல நினைக்க கூட இல்லை, பிரீத்தி வரும்வரை.

தொடரும்..
 




umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
Hi makkale,
Innaiku 2 pathivu pottu irukken theeyaa velai செய்து. இது logic இல்லாத காதல் கதை just jolly ya படிக்கலாம் மக்களே..

அன்புடன்,
உமா தீபக்..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top