• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode kaathale thunai 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
காதல் 2

ஆதிக் மிகவும் கோபத்தில் இருந்தான், அவனுக்கு கிடைக்க வேண்டிய ப்ராஜெக்ட் அதுவும் தனக்கு நிச்சயம் கிடைக்கும் என்று நம்பிய அந்த ப்ரொஜெட் இப்பொழுது கை நழுவி இருந்தது.

அதுவும், இப்பொழுது அந்த ப்ராஜெக்ட் சென்று இருப்பது ஏதோ சிறிய அளவிலான கம்பெனிக்கு என்று தன் பி.ஏ சொல்லவும், கொதித்து விட்டான். எங்கு தவறு நேர்ந்தது, எப்படி நேர்ந்தது என்று தெரியாமல் குழம்பி கொண்டு இருந்தான்.

உடனே தன் பி. ஏ. ரத்தீஷை அழைத்து, உடனே காபின் வருமாறு பணித்தான். அவனோ, இருக்கும் அத்தனை கடவுளுக்கும் மனு போட்டுவிட்டு, தைரியத்தை வரவழைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தான்.

“ரத்தீஷ்! வாட் இஸ் கோயிங் ஆன்? இந்த ப்ராஜெக்ட் எவ்வளவு முக்கியம் அப்படின்னு உனக்கு தெரியுமா, தெரியாதா? அப்புறம் இது எப்படி நம்ம கை விட்டு போச்சு?”.

“எனக்கு அன்னைக்கு வேறு ஒரு முக்கிய வேலை வந்ததால, நீ இந்த ப்ராஜெக்ட் டீம் லீட் ஸ்வேதா கூட்டிட்டு போன. அவ பெர்பெக்ட் presentation கொடுக்க போய் தான், உன்னையும் அவளையும் அனுப்பினேன்”.

“எப்படி மிஸ் ஆகிடுச்சு, ஸ்வேதா டிட் எனிதிங் ராங்?” என்று அவனை பார்த்து கூர்மையாக கேட்டான் ஆதிக்.

“இல்லை சார்! எல்லாமே பக்காவா தான் செய்தாங்க, ஆனா நம்ம ப்ராஜெக்ட் விட இன்னும் பெட்டெர் presentation அவங்க கொடுத்து இருந்ததால, அங்க போய்டுச்சு சார் ப்ராஜெக்ட்” என்று கூறியவனை எரித்தான்.

அடுத்து அவன் அந்த கம்பெனி டிடைல்ஸ் கேட்பான் என்று அறிந்து, உடனே அதன் கோப்பை எடுத்து அவன் முன் வைத்தான். அதை எடுத்து பார்த்தவனுக்கு, கண்கள் அந்த புகைப்படத்தில் நிலைத்து நின்றது.

எவ்வளவு நேரம் அவன் அப்படியே அந்த புகைப்படத்தை பார்த்தானோ, அவனின் செல்பேசி சிணுங்கவும் தான் சுயநினைவிற்கு வந்தான். செல்பேசியில் அழைத்தது அவனின் பாட்டி, எதற்கு அழைக்கிறார்கள் இப்பொழுது என்ற எரிச்சலுடன் எடுத்து பேசினான்.

“டேய் ஆதிக்! சீக்கிரம் கிளம்பி நேரா அப்பலோ ஆஸ்பிட்டல் வா” என்று கூறி போனை வைத்தார்.

“என்ன?” என்று அதிர்ந்தவன், ஏற்கனவே அவன் தந்தைக்கு போன வருடம் தான் பை பாஸ் சர்ஜெரி முடிந்து இருந்தது. அவருக்கா, இல்லை பாட்டிக்கு ஏதுமா என்று தெரியாமல் உடனே அவன் அங்கு இருந்து கிளம்பி, தன் காரை எடுத்துக் கொண்டு விரைந்தான்.

பெருங்குடியில் இருக்கும் அந்த மருத்துவமனை வாயிலின் முன், அவன் வண்டியை நிறுத்தும் பொழுது, சரியாக அந்த நேரம் பாட்டி அவன் இறங்கும் முன் அவர் வண்டியில் ஏறி விட்டார்.

“பாட்டி! என்னாச்சு? டாக்டர் என்ன சொன்னாங்க? உங்களுக்கா, இல்லை அப்பாவுக்கா?” என்று கேள்வி எழுப்பிக் கொண்டு இருந்தான்.

“முதல வண்டியை எடு, எனக்கு தான் ஜெனரல் செக் அப் பண்ணிக்க வந்தேன். உங்க அப்பா டிரைவர் கூட்டிட்டு, பத்திரிக்கை வைக்க ஊருக்கு போய்ட்டான்”.

“நான் பக்கத்து வீட்டு நீலா கூட இங்க வந்தேன் அப்போ, அதான் இப்போ உன்னை டிரைவர் வேளைக்கு கூப்பிட்டேன். நேரா இப்போ பக்கத்துல இருக்கிற மாக்ஸ் ஷோ ரூம் போ, உனக்கு டிரஸ் எடுக்கணும்” என்றவரை முறைத்து பார்த்தான்.

“பாட்டி! நான் எவ்வளவு பயந்துட்டு வந்தேன் தெரியுமா? சும்மா டிரைவர் வேலை பார்க்க கூப்பிட்டேன் சொல்லுறீங்க, உங்களை என்ன பண்ணுறது?”.

“நான் இன்னைக்கு ஒரு ப்ராஜெக்ட் கை விட்டு போச்சு, அதை எப்படி மிஸ் பண்ணோம் அப்படின்னு பார்த்துகிட்டு இருந்தேன். உங்களுக்கு வண்டி வேணும் சொன்னா, நான் ஏற்பாடு பண்ணி இருப்பேன் தெரியும் தானே” என்று அவன் பாட்டுக்கு புலம்பிக் கொண்டும், திட்டிக் கொண்டும் இருந்தான்.

அவரோ, அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் ஷோ ரூம் எந்த பக்கம் வருகிறது என்று பார்த்தார்.

“அடேய், ரைட் ல தான் ஷோ ரூம் இருக்கு, யூ டர்ன் அடிச்சு அங்க போ” என்று கூறவும், நொந்து விட்டான்.

காரை பார்க் பண்ணிவிட்டு, கையோடு அவனையும் அழைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தார். ஒன்றும் கூற முடியாமல், பல்லை கடித்துக் கொண்டு பின்னே சென்றான் ஆதிக்.

“அட! நம்ம ப்ரீத்தி பொண்ணு இங்க தான் இருக்கு, டேய் நீ போய் டிரஸ் எடு, நான் பேத்தியை போய் பார்த்து பேசிட்டு வரேன்” என்று கூறி சென்றவரை பார்த்து, அவனின் பல் இன்று அடிகடி கடித்துக் கொண்டது.

“எம்மாடி ப்ரீத்தி! எப்படி இருக்க? கல்யாணத்துக்கு ஷாப்பிங் பண்ண வந்தியா?” என்று கேட்டார்.

“நல்லா இருக்கேன் பாட்டி, நீங்க எப்படி இருக்கீங்க?” என்று கேட்டாள்.

“நான் நல்லா இருக்கேன், என்ன நீ மட்டுமா வந்து இருக்க” என்று கேட்டார்.

“இல்லை பாட்டி, பிரிண்ட்ஸ் கூட வந்து இருக்காங்க. இன்னைக்கு ஒரு ப்ராஜெக்ட் எங்க கைக்கு கிடைச்சது, எங்க உழைப்பு வீண் போகல. அந்த சந்தோஷ கொண்டாட்டத்துக்கு தான், நான் எங்க வீட்டுல இருக்கிற எல்லோருக்கும் டிரஸ் எடுத்து கொடுக்கலாம்ன்னு வந்தேன்” என்று கூறவும், அவரும் மகிழ்ந்து அவளை பாராட்டினார்.

“என் பேரன் கூட வந்து இருக்கான், தடியன் எடுதுட்டானா என்னனு தெரியல? நீ பாரு மா, நான் அங்க அவனை பார்க்கிறேன்” என்று கூறிவிட்டு அவன் இருக்கும் இடம் நோக்கி சென்றார்.

அங்கே அவன், ஒன்றும் எடுக்காமல் இருப்பதை பார்த்து முறைத்தார்.

“ஏற்கனவே என் கிட்ட வேணும்கிற அளவுக்கு டிரஸ் இருக்கு பாட்டி,
இங்க இருக்கிற டிசைன் மாதிரியே. கல்யாணத்துக்கு கோட், ஷெர்வானி எல்லாம் அஜய் எடுத்துட்டு வருவான், நாம கிளம்பலாம்” என்று கூறியவனை பார்த்து சரி என்றார்.

“பாட்டி! நீங்க இங்க உட்காருங்க, நான் வண்டியை எடுத்துட்டு வந்திடுறேன்” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றான்.

அவன் வண்டி எடுத்துக் கொண்டு வெளியே வந்த நேரம், பாட்டி ப்ரீத்தியுடனும் அவளின் தோழியுடனும் பேசிக் கொண்டு இருந்தார். அவளின் முகத்தில் தெரிந்த சந்தோஷத்தை பார்த்து, ஏனோ அவன் மனம் அவளை ரசிக்க தொடங்கியது.

மாநிறம் தான், ஆனால் அதுவே அவளை அழகாக காட்டியது. நெற்றியில் விழுந்த முடியை சரி செய்த விதம், அவனை கவர்ந்து இழுத்தது. புடவையில் தான் வந்து இருந்தாள், அந்த கடல் வண்ணம் அவளின் நிறத்தை அழகாக எடுத்துக் காட்டியது.

அன்று அவள், என்ன புடவை கட்டினாள் என்று கூட தெரியாது. ஆனால் இன்று அவள் உடுத்திய புடவை நிறத்தில் இருந்து, அவள் கழுத்தில், காதில், கையில் என்ன எல்லாம் செய்து இருக்கிறாள் என்று கேட்டால், சரியாக பதில் சொல்லும் அளவிற்கு அவளை ரசித்துக் கொண்டு இருந்தான் ஆதிக்.

“டேய்! என்ன டா வேடிக்கை? வண்டியை எடு” என்று அவன் பாட்டி அவன் அருகில் இருந்து கத்தவும் தான், சுயநினைவிற்கு வந்தான்.

“ச! பாட்டி ஏறி அமர்ந்தது கூட தெரியாம, நான் அவளை நல்லா வேடிக்கை பார்த்து இருக்கேன்” என்று நொந்து கொள்ளும் பொழுது, அவன் மனசாட்சி அதுக்கு பேர் வேடிக்கை இல்லை சைட்டு என்று எடுத்து கூறவும், அவன் அதை அடக்கி வைத்தான்.

“டேய்! எங்க டா போற? வீட்டுக்கு வண்டியை விடு டா” என்று பாட்டி அலறவும் தான், அவன் சென்ற பாதையை கவனித்தான்.

அவள் தனது அக்டிவாவில், முன்னே சென்று கொண்டு இருந்தாள் அவளின் வீட்டிற்கு. மனதிற்குள், ரொம்ப முத்திடுச்சா டா என்று எண்ணிக் கொண்டான்.

“பாட்டி! அவ பாதுகாப்பா போய் சேர்ந்துட்டாளா என்னனு, நீங்க தான பார்க்க சொல்லி, போக சொன்னீங்க. நீங்க மறந்துட்டு, என்னை சொல்லாதீங்க” என்று பிளேட்டை திருப்பி போட்டான்.

ம்கும்! இவனை எனக்கு தெரியாதாக்கும், பொண்ணு பார்த்துட்டு, எரிச்சல் பட்டு வந்தது என்ன? இப்போ நடந்துகிறது என்ன? என்று அவர் மனம் பேரனை கேலி செய்தது.

அதை பற்றி எல்லாம் கவலை கொள்ளாமல், அவள் வீடு சென்ற பிறகு தான், இவன் தன் வீட்டிற்கு சென்றான். அங்கே பாட்டியை இறக்கிவிட்டு, நேராக இவன் பி.ஏ. ரத்தீஷை அழைத்து, ப்ரீத்தி கம்பெனி முகவரி கேட்டு, அங்கே சென்றான்.

அவள் வீட்டில் இருந்து சிறிது தள்ளி இருந்த காம்ப்ளெக்ஸ் ஒன்றில், மூன்றாவது மாடியில் தான் அவளது கம்பெனி. அங்கே உள்ளே சென்றவன், தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, அவளை காண வேண்டும் என்றான்.

அங்கு இருந்த பெண், அவளுக்கு தகவல் தெரிவித்து அவளின் பதில் என்னவென்று கேட்டு அவனிடம் சிறிது நேரம் காத்து இருக்குமாறு கூறினாள். அங்கே போடப்பட்டு இருந்த ஒற்றை சோபாவில், அமர்ந்து அங்கே இருந்த பத்திரிக்கைகளை எல்லாம் புரட்டி பார்த்துக் கொண்டு இருந்தான்.

வீட்டில் இருந்தவள், சிறிது ரெப்ரெஷ் செய்துக் கொண்டு உடனே கம்பெனி வந்து சேர்ந்தாள். அவனிடம் எப்படி பேச வேண்டும் என்று, நன்றாகவே ஒத்திகை பார்த்துக் கொண்டாள். வண்டியை அதன் இடத்தில் நிறுத்திவிட்டு, லிப்டில் மேலே சென்று கம்பெனி உள்ளே வந்தவள், அவனை பார்த்து அழகாக புன்னகை புரிந்து வரவேற்றாள்.

அவனை, தன் காபின்க்கு அழைத்து சென்றவள் என்ன விபரம் என்று கேட்டாள்.

“வாழ்த்துக்கள்! அந்த ப்ராஜெக்ட் உங்க கைக்கு கிடைச்சது அப்படின்னு கேள்விபட்டேன், உங்க presentation பார்க்கலாமா இப் யூ டோன்ட் மைன்ட்” என்று கேட்டவனை ஆழ்ந்து பார்த்தாள்.

“சாரி! ப்ராஜெக்ட் சக்சஸ் பண்ணிட்டு, அப்புறம் உங்களுக்கு நான் கண்டிப்பா காட்டுறேன்” என்று அவளும் புன்முறுவல் பூத்தாள்.

ப்ரீத்தியின் அந்த புத்திக் கூர்மை தான், முதலில் அவனை கவனிக்க வைத்தது. இப்பொழுதும், அவளின் புத்திசாலித்தனம் அவனை ஈர்த்தாலும், அவளிடம் இப்பொழுது வம்பு வளர்க்க தோன்றியது.

“ஒகே பைன்! அப்புறம் இப்போ இந்த ப்ராஜெக்ட் சக்சஸ் பண்ணுறது உனக்கு முக்கியமா? இல்லை என்னை கல்யாணம் கட்டிக்கிறது உனக்கு முக்கியமா?” என்று கேட்டான், பதிலை தெரிந்து கொண்டே.

“ரெண்டு கண்ணுல எது பிடிக்கும், அப்படின்னு கேட்கிற மாதிரி இருக்கு. எனக்கு ரெண்டுமே முக்கியம் தான், அதனால இப்போ எனக்கு கூடுதல் வேலை இருக்கு, வேறு எதுவும் விஷயம்ன்னா பேசுங்க, இல்லைனா கிளம்புங்க” என்று ப்ரீத்தி கூறவும், மனதிற்குள் சிரித்தான்.

“ஒ ரியல்லி! அப்போ சரி, நாளைக்கு சண்டே தானே, உங்க அப்பா கிட்ட பெர்மிஷன் கேட்டு வைக்குறேன் நாம சேர்ந்து வெளியே போக, ரெடியா இரு” என்றவனை பார்த்து அதிர்ந்தாள் ப்ரீத்தி.

அடுத்து அவள் பேசும் முன், அவன் வெளியேறி இருந்தான். சந்தோஷமாக விசில் அடித்துக் கொண்டே, அவன் காரை நேராக அலுவலகத்திற்கு விரட்டினான்.

இவனுக்கு, இப்போ என்ன வேணும் என்று புரியாமல் திகைத்தது விதி.

umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
அபிஷேகப்பட்டி கிராமத்தில், சுளுக்கு எடுத்து முடித்த ஆதிகேசரி தன் தாய்க்கு உதவியாக சமையல் வேலையை கவனித்துக் கொண்டு இருந்தாள்.

“ஏத்தா ஆதி! இந்த பிள்ளைக்கு காலுல சுளுக்கு பிடிச்சிடுச்சு, செத்த அதை எடுத்து விடு ஆத்தா. ரெம்ப நேரமா, வலி ல முனங்கிகிட்டே இருக்காப்ல” என்று வீட்டின் வெளியே நின்று குரல் கொடுத்தார், ஒரு பெண்மணி.

“ஆதி! நான் கவனிச்சிக்கிடுறேன் இங்கே, நீ அந்த பிள்ளைக்கு சுளுக்கு எடுக்க எண்ணெய் எடுத்துட்டு போ ஆத்தா” என்று அவளின் அன்னை அவளை அங்கு அனுப்பி வைத்தார்.

வெளியே வந்து பார்த்தவள், அங்கே அஜய் வலியில் முனங்குவதை பார்த்து உடனே அவனை உள்ளே அழைத்து, அந்த கட்டிலில் படுக்க வைத்தாள்.

கணுக்காலில் தான் சுளுக்கு, நன்றாக பிசகி இருந்தது என்று பார்த்தாலே தெரிந்தது. சுடு தண்ணீர் எடுத்து வந்து, முதலில் அவனை சற்று எழுப்பி, அந்த வெந்நீரில் காலை வைக்க கூறினாள்.

அதன் பின், காலை நன்றாக சுத்தம் செய்து சிறிது ஒத்தடம் கொடுத்துவிட்டு, அதை நன்றாக துடைத்தாள். அதன் பின் அவனை மீண்டும் படுக்க வைத்துவிட்டு, எண்ணெய் எடுத்து காலில் தடவி, சிறிது அழுத்தம் கொடுத்து தடவினாள்.

அதில் அவன் சற்று மெய்மறந்து இருந்த வேளையில், சுளுக்கை நன்றாக உருவி விட்டாள். அதில் வலி பொறுக்காமல், ஆவென்று கத்திவிட்டான்.

“அம்புட்டுதேன், உந்தன் தைரியமோ? இப்படி பிசகி போற அளவுக்கு, அப்படி என்ன சோழியை பார்த்தீர் ஐயா?” என்று நக்கல் குரலில் கேட்டாள்.

“என்னோட வேலை தான், அந்த காட்டு அருவி கிட்ட சில யானை எல்லாம் கூட்டமா போய்கிட்டு இருந்தது, அதை போட்டோ எடுத்துட்டு, கீழே இறங்கும் பொழுது தான், கால் சுளுக்கிடுச்சு” என்றான் அஜய்.

“அதை போட்டோ பிடிச்சு, அவார்ட் ஏதும் வாங்க போறியா என்ன? சும்மா அந்த பெட்டியை தூக்கிட்டு, இதை எடுக்கிறேன், அதை எடுக்கிறேன்னு அலையாம பெரிய ஐயா கூட போய் வயல் ல வேலை பார்த்தா, துட்டாவது கிடைக்கும்” என்று கூறிவிட்டு சுளுக்கு எடுத்ததற்கு காசு வாங்கினாள் அவனிடம்.

“கேசரி! நான் போட்டோ பிடிச்சு அவார்ட் வாங்கி இருக்கேன். இப்போ கூட ஒரு புஸ்தகத்துக்கு முன் பக்க போட்டோக்கு தான், இதை எடுத்தேன். அதுவே எனக்கு லட்ச கணக்கில் கொடுப்பாங்க, சும்மா எல்லாம் எடுக்கிறதா இருந்தா, உன்னை வேணா எடுப்பேன்” என்றவனை பார்த்து முறைத்தாள்.

“எலேய் நண்டு! என்னை படம் பிடிச்சியோ, அப்புறம் உம்ம ஐயன் கிட்ட மாட்டிவிடுவேன் பார்த்துக்கோ ல” என்று மிரட்டினாள்.

அவனா, இவளின் மிரட்டலுக்கு அஞ்சுவான், இன்னும் சற்று அவளை வம்பு வளர்த்தான்.

“கேசரி! உனக்கு புண்ணியமா போகும், சீக்கிரம் எங்க அப்பாரு கிட்ட சொலிடு, அப்புறம் அவரை வச்சே உன்னை பொண்ணு கேட்டு, வீட்டுக்கு வந்திடுறேன்” என்றவனை பார்த்து முறைத்ததோடு இல்லாமல், அவனின் ஒட்டி பிறந்த புகைப்பட கருவியை கையில் எடுத்துக் கொண்டாள்.

“நண்டு! இன்னொரு தடவை நீ இப்படி பேசினியோ, இதை தூக்கி உடைச்சிடுவேன் பார்த்துக்கோ” என்று இபொழுது அவள் குரலில் தீவிரம் இருந்தது.

அதை உணர்ந்தவன், அப்போதைக்கு அவளிடம் வம்பு வளர்க்காமல் சமாதான உடன் படிக்கை போட்டு, அவளிடம் இருந்து, அவனின் கமெராவை வாங்கிக் கொண்டு சென்றான்.

“ஏய் பிள்ளை ஆதி! பெரிய ஐயா வீட்டில் அம்மாவுக்கு சுகமில்லை போல, உன்னை கூட்டியார சொன்னாங்க” என்று அவளின் தோழி லக்ஷ்மி வந்து கூறவும், உடனே அவளுடன் அங்கே விரைந்தாள்.

அங்கே அஜயின் அன்னை காமாட்சி, படுக்கையில் முடியாமல் படுத்து இருந்தார். அவருக்கு பிபி அதிகமாக இருக்கிறதாக, அஜயிடம் கூறிக் கண்டு இருந்தார் மருத்துவர். அதற்க்கான மாத்திரை, மருந்துகளை கொடுக்க சொல்லிவிட்டு, சரியான உணவு முறையை பின் பற்றுமாறும் கூறி சென்றார்.

“அத்தே! ஒழுங்கா சாப்பிடுறது இல்லையா, அதான் உம்ம மவன் வந்தாச்சு ல, அப்புறம் என்ன கவலை உமக்கு?” என்று கேட்டுக் கொண்டு இருந்தாள் ஆதிசேகரி.

“நல்லா சொல்லு, ஆத்தா ரத்த கொதிப்பு வர அளவுக்கு இப்போ என்ன நடந்திடுச்சு? அப்பாரு கூட ஏதும் சண்டையை போட்டியோ?” என்று கேட்டான்.

“அட போ டா! உமக்கு ஒரு கல்யாணம் பண்ணி பார்க்கணும்தேன் என் ஆசை. அதான் வர்மனுக்கு கல்யாண தேதி குறிச்சாச்சு ல, அப்புறம் உனக்கு பொண்ணு பார்க்கலாம் சொன்னா, ஏன் வேண்டாம்கிற?” என்று அவனிடம் கேட்டார்.

“ஆத்தா! இந்தா இந்த பிள்ளையை கட்டி வைங்க, அப்போ நீங்க எனக்கு” என்று ஆதியை கை காட்டிவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்றான்.

“என்னத்தா! இன்னுமா உங்க ரெண்டு பேருக்கும் சண்டை தீர்ந்த பாடில்லை. அவந்தேன் அம்புட்டு உன்னை பிடிக்கும் சொல்லுறானே, கொஞ்சம் நீயும் யோசி தாயி” என்று வாஞ்சையாக அவளிடம் கேட்டார் அஜய்யின் அன்னை.

“அத்தே! என்னை வம்பு வளர்த்துட்டு போகுது உம்ம பிள்ளை, நீங்க வேற. சரி இருங்க, நான் போய் கஞ்சி காய்ச்சி கொண்டாறேன். சாப்பிட்டு மாத்திரை போட்டு படுங்க, அய்யன் வரதுக்குள்ள நான் வீட்டுக்கு நடையை கட்டனும்” என்று கூறிவிட்டு, அவள் சொன்னதை செய்துவிட்டு வீட்டிற்க்கு வந்தாள்.

“அடியே! சோறாகிட்டு போனியே, காலாகாலத்துல வந்து சாப்பிடணும்ன்னு தெரியாது?” என்று பொரிய தொடங்கினார் அவளின் அன்னை.

“எம்மோவ்! அங்க காமாட்சி அயித்தைக்கு ரத்த கொதிப்பு ஜாஸ்தி ஆகிடுச்சு, அதனால டாக்டர் அவிகளை பார்த்துபுட்டு சரியான ஆகாரம் எடுக்கணும் சொல்லிட்டு போய் இருக்காக. நான் கஞ்சி காய்ச்சி கொடுத்துட்டு, மாத்திரை போட சொல்லிபுட்டு வந்தேன்” என்று நடந்ததை கூறினாள்.

“என்னது பெரிய ஐயா வீட்டுக்கு போனியா! ஏன் டி உனக்கு இந்த தேவை இல்லாத வேலை? அவிகதேன் நம்ம குடும்பத்தை அப்படி அசிங்கப்படுத்தி விட்டாங்களே பஞ்சாயத்துல, இன்னும் அவிகளோட எதுக்கு டி ஒட்டி உறவாடிகிட்டு இருக்க?” என்று கோபம் அடைந்தார்.

“எம்மோவ்! அயித்தையை பார்த்துட்டு வர மட்டும்தேன் போனேன், அதுவும் சுகமில்லாம இருக்க போய்தேன். பயப்படாம இரு ஆத்தா, வா வந்து நீயும் சாப்பிடு” என்று அவருக்கும் சேர்த்து பரிமாறி, சாப்பிட்டு முடித்தனர் இருவரும்.

அஜய், தன் லேப்டாப்பில் அவனின் கேசரியை பார்த்துக் கொண்டு இருந்தான். அவளின் புகைப்படம், ஒன்றே ஒன்று தான் இருக்கிறது அவனிடத்தில்.

அதுவும் எட்டாம் வகுப்பில் அவள் பெரிய பெண்ணாகி இருந்த பொழுது, முதல் முறை புடவை கட்டி இருந்ததால் வெட்கத்தில் தன்னை பார்க்க தயங்கி நின்ற புகைப்படம் அது.

ஆம்! அப்பொழுது இரு வீட்டினருக்கும் ஓரளவு சுமுக உறவு நிலை தான். அவன் தான், அப்பொழுது அவளுக்கு ஓலை குடிசை கட்டி கொடுத்து இருந்தான், மாமன் ஸ்தானத்தில்.

இத்தனை நாட்களாக அவன் அதை பத்திரப்படுத்தி வைத்து இருந்தவன், இன்றைய நவீன தொழிநுட்பம் கொண்டு அதில் சிறிய மாற்றங்கள் கொண்டு வந்து, அதை தன்னுடைய லேப்டாப்பில் பதிவு செய்து இருந்தான்.

இப்பொழுது, அவளை விதவிதமாக எடுக்க வாய்ப்பு கிடைத்தும் அவளுக்கு பிடிக்கவில்லை என்ற ஒரே காரணத்துக்காக அவன் அவளை எடுக்காமல் வைத்து இருந்தான். தன் காதல் உண்மை, அதன் துணை கொண்டு அவளை ஊராரின் முன் மணம் புரிந்து கொள்வேன் என்று சபதம் எடுத்தான்.

அது அவ்வளவு சுலபமில்லை மகனே, என்று கை கொட்டி சிரித்தது விதி.

தொடரும்..

umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
ஹாய் மக்களே,

அடுத்த பதிவு கொடுத்து இருக்கேன். உங்கள் ஊக்கமும், உற்சாகமும் தான் என்னை வேகமாக எழுத வைக்கிறது, நன்றி நன்றி மக்களே . நாளை அடுத்த பதிவுடன் வருகிறேன் .

அன்புடன்
உமா தீபக்.
 
AnithaKarmegam

இணை அமைச்சர்
Joined
Jan 21, 2018
Messages
711
Reaction score
1,865
Age
27
Location
Thiruvarur

Pavom enga ajay sekiramaaa mrg pani vaikunga ka
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top