• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kadhal Kadan - 12 Radhika And Bharadwaj Wedding Reception

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Shivapriya Murali

இணை அமைச்சர்
Author
Joined
Jan 21, 2018
Messages
621
Reaction score
2,738
Location
Bangalore
காதல் கடன்

(12)



வாசலில் அவளை அழைத்துச் செல்ல ஒரு கருப்பு நிற ரோல்ஸ் ராய்ஸ் நின்றிருந்தது. ராதிகா அதில் ஏறியதும் ஆவலுடன் துளசியும் பானுவும் ஏறிக்கொள்ள அரவிந்த் காரை ஓட்டிக்கொண்டு விழா நடக்கும் இடத்தின் வாயிலை வந்தடைந்தான்.


துளசி மற்றும் பானுவின் உதவியோடு காரிலிருந்து இறங்கியவள் நுழைவாயிலில் செய்யப்பட்ட அலங்காரத்தைப் பார்த்து மெய்மறந்து நின்றுவிட்டாள்...


கொஞ்சமே பூத்திருந்த தாமரை போல வடிவமைக்கப்பட்டிருந்தது அந்த நுழைவாயில். வெளிப்புறத்தில் தங்க நிறத்திலும், உட்புறத்தில் பிங்க் நிறத்திலும் வேலைப்பாடுகள் செய்யப்பட்டு, தரை விளக்குகளும் ஃபோகஸ் விளக்குகளும் ஒளிர ஒரு தேவலோக அரண்மனைக்குள் நுழையும் ஒரு உணர்வைத் தந்தது. “வாசலே இப்படி இருந்தா உள்ள இன்னும் எப்பிடி இருக்கும் ராதுக்கா,” என்று அதிசயித்த பானுவுக்கும் பதிலளிக்க நா எழவில்லை, ராதிகாவிற்கு. பிடிமானம் வேண்டுமென்று தோன்றியதோ என்னவோ...பானுவின் கையை சிறிது கெட்டியாகவே பிடித்துக்கொண்டாள்.

0ad7c1bdbe4159dc3c365e28cc05d511.jpg

1d6288a6288bc3145f78fe63182c530e.jpg

வாயிலைக் கடந்து உள்ளே நுழைந்த மூவரையும் வரவேற்றது, பூக்களால் அலங்கரிக்கப்பட்ட நடைபாதை. பூச்சரங்களாலேயே கூரை போல் வேயப்பட்டு பக்கவாட்டுகளில் எல்லாம் பூச்சரங்கள் தொங்கவிடப்பட்ட பாதையில் மெதுவாக அடிமேலடியெடுத்து வைத்து நடந்தவளை அப்பாதையின் முடிவில் வரவேற்றார் ரோஜாப்பூப்பந்துகளுக்கு இடையே ஒய்யாரமாகப் படுத்திருந்த பிள்ளையார். கழுத்தில் வண்ணப் பூமாலையுடன் விளக்குகளுக்கு மத்தியில் தலைக்கு ஒரு கையை அட்டம் கொடுத்து பக்கவாட்டில் படுத்திருப்பதுபோல் இருந்த அந்தச் சிலை “வாம்மா ராதிகா...உனக்காகத்தான் வெயிட்டிங்” என்று கூறுவது போலிருந்தது.

2679969b80acca14c8d8a5091c8b1933.jpg

பிள்ளையாரின் முன் ஒரு நொடி கண்மூடி கை கூப்பி வணங்கியவளின் மனதில் இருந்த படபடப்பு சிறிது அடங்கியது போலிருக்க, மனம் அமைதியடைந்தது. ஆனாலும் “வாசல்லேயே காத்துண்டு இருக்கேன்னு சொன்னாரே, எங்கே காணோமே?” என்று பரத்தைத் தேடத் தொடங்கியது ராதிகாவின் கண்களும் மனமும்.



ஆனால் அவள் தேடிய அந்தக் கள்வன் விழா அரங்கில் ஏதோ ஒரு மூலையில் கையில் ஒரு காபி கப்புடன் தன் முன்னிருந்த எல்இடி திரையில் ராதிகாவின் ஒவ்வொரு அசைவையும் பார்த்துக்கொண்டிருந்தான் என்பது ராதிகாவுக்குத் தெரியாது. ராதிகாவின் கண்களில் தனக்கான தேடலைக் கண்டவன், அருகிலிருந்த சர்வரை சைகையால் அழைத்து கப்பை அவனிடம் கொடுத்துவிட்டு, அவளுடைய தேடலுக்கு விடையாக, மனைவியை வரவேற்கக் கிளம்பினான்.



பிள்ளையாரிடமிருந்து வலதுபக்கமாகத் திரும்ப, ரிசப்ஷனுக்கான அரங்கத்தை எதிர்பார்த்த ராதிகா அதற்கு பதிலாக மிக அழகாக அலங்கரிக்கப்பட்ட ஒரு நந்தவனத்தில் தான் நின்றுகொண்டிருப்பதைக் கண்டாள். “இங்கேதானா ரிசப்ஷன் நடக்கப்போறது?” என்று நினைத்தபடி அரவிந்தைப் பார்க்க...அவனோ முன்னால் பார்க்கும்படி ராதிகாவிற்கு சைகை செய்தான்.

f7fda06cf9f97744abe1db7dd8954e60.jpg

பரத் மற்றும் ராதிகாவின் குடும்பம் முழுவதும் அங்குதான் குழுமியிருந்தது. “இதோ ராதிகா வந்துட்டாளே...” என்று அனைவரும் அவளைச் சூழ்ந்துகொள்ள...அவளுடைய கண்ணோ பரத்தை மட்டுமே தேடியபடி இருந்தது. சுற்றியிருந்தவர்கள் ஏதோ பேசியபடி இருக்க, அவ்விடத்தைக் கண்களால் துழாவியவளின் பார்வை ஓரிடத்தில் வந்து நிலைகொண்டது. அங்கே ஒரு மரத்தில் சாய்ந்தபடி பேன்டின் இரு பாக்கெட்டுக்குள்ளும் கையை விட்டபடி அவளின் அலைப்புறுதலைப் பார்த்தபடியே நின்றிருந்தான் பரத். அவனைக் கண்ட நொடி மூச்சுவிடவும் மறந்து அப்படியே சமைந்துபோனாள் ராதிகா. நேற்று அவள் கூறியது போலவே ஃபுல் ப்ளேக் சூட் அணிந்திருந்தான். கோட்டில் ஒரு சிறிய மஞ்சள் ரோஜாப்பூ வைத்திருந்தான். நேர்த்தியாக ஹேர்கட் செய்து, தாடியை அழகாக ட்ரிம் செய்திருந்தான். தாடியை ட்ரிம் செய்தவுடன் அவனுடைய முறுக்கு மீசை இன்னும் கொஞ்சம் முறுக்கலாகத் தெரிந்தது போலிருந்தது. அவனுடைய கன்னத்தில் விழுந்த குழி இப்போது தெளிவாகத் தெரிந்தது ராதிகாவிற்கு. அந்த மீசையில் தடுக்கி கன்னக்குழியில் ‘தொபுக்கடீர்’ என்று விழுந்து மூழ்கியே போனாள் ராதிகா.



ராதிகாவைப் பார்த்ததும் அவளை நோக்கி ஒரு மந்தஹாசமான புன்னகையுடன் நடந்துவந்தவன், “இப்போ ஓகேவா?” என்பதுபோல அவளைப் பார்த்து புருவம் உயர்த்த...அவளும் சுற்றியிருப்பவர்கள் கவனிக்கிறார்களா என்று எச்சரிக்கைப் பார்வை பார்த்தபடியே, “ஓகே” என்று தலையை அசைத்தாள். முகத்தில் ஒரு வெட்கப்புன்னகை வந்து ஒட்டிக்கொண்டது ராதிகாவிற்கு. அவளுடைய பிங்க் லேஹங்காவிற்கு மேட்சாக முகமும் வெட்கத்தில் பிங்க் நிறம் பூசிக்கொள்ள...அவனையும் அறியாமலே “பஞ்சு மிட்டாய்” என்று முணுமுணுத்தது பரத்தின் இதழ்கள்.



அதற்குள் அரவிந்த், “எல்லாரும் டிபன் சாப்பிட்டாச்சா, உள்ளே போலாமா,” என்று கேட்க, எல்லோரும் ஆமாம் என்று தலையசைத்தபடி உள்ளே செல்ல யத்தனிக்க, “மன்னி இன்னும் ஒண்ணும் சாப்பிடலை,” என்று துளசி கூறினாள். ராதிகாவிற்காக அவளிருந்த அறைக்கே மாலைச் சிற்றுண்டி அனுப்பப்பட்டிருந்தாலும், இருந்த டென்ஷனில் ராதிகாவால் எதுவும் சாப்பிட முடியவில்லை. “பரவாயில்லை, எனக்கு இப்போ எதுவும் சாப்பிடனும் போல இல்லை,” என்றவளைப் பார்த்து, “அச்சச்சோ, டின்னர் சாப்பிட ராத்திரி பத்து மணிக்கு மேல் ஆயிடும், பசி தாங்க முடியாது ராதும்மா, ஏதாவது கொஞ்சமாவது சாப்பிடு,” என்று கூறிய பர்வதம், பரத்தைப் பார்த்து, “நீ சாப்பிட்டியாடா?” என்று கேட்க, “இப்போதான் காபி குடிச்சேன்மா,” என்று பதிலளித்தான். விழாவின் இறுதிக்கட்ட ஏற்பாடுகளில் மும்முரமாக இருந்ததால் அவனும் எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை. “நன்னாருக்கு போ, ரெண்டு பெரும் ஸ்டேஜ்ல ஏறி நின்னு பசியில மயங்கி விழறதா ஏதாவது ப்ளான் இருக்கா என்ன? முதல்ல ரெண்டு பேரும் போய் ஏதாவது சாப்பிட்டுட்டு வாங்கோ, அழைச்சுண்டு போ பரத்,” என்று ராதிகாவை அவனோடு அனுப்பிவிட்டு அனைவரும் சென்றுவிட்டனர்.



பரத்தும் அரவிந்தை நோக்கி ஏதோ சைகை செய்துவிட்டு ராதிகாவை அழைத்துக்கொண்டு எதிர்திசையில் நடந்தான். அமைதியாக நடந்தவர்கள் பஃபே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தனர். அங்கே மையமாக பஃபே உணவு மேஜைகள் அமைக்கப்பட்டிருக்க அவற்றைச் சுற்றி பல்வேறு குழுக்களாக பல்வேறு வண்ணங்களில் பல்வேறு விதமாக மேஜை நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. இன்னொரு பக்கத்தில் டென்ட் போன்ற அமைப்பில் வரிசையாக மேஜை நாற்காலிகள் போடப்பட்டு, உணவு பரிமாறத் தயாராக மேஜை அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. “பஃபே இல்லாம உக்காந்து சாப்பிடனும்னு நெனைக்கறவாளுக்கு சாப்பிடறதுக்கு இந்த ஏற்பாடு என்று கூற, அந்த இடத்திற்கு நேரெதிராக இருந்த இன்னொரு டெண்டைக் காட்டி, “அங்கேதான் பாரம்பரிய சௌத் இந்தியன் வாழையிலை விருந்து பரிமாறப் போறோம், யார்யாருக்கு என்ன பிடிக்கறதோ சாப்பிட்டுக்கலாம்.” என்று கூறினான்.

12ea9141c88cdf34286709e8c6781d6d.jpg

dc39280d18b8837293c98cd06682eafb.jpg

பஃபே மேஜைகளிலேயே கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேலான உணவு வகைகள் வரிசையாக பெயருடன் அடுக்கப்பட்டிருக்க, அதைத் தவிர உட்கார்ந்து சாப்பிடும் விருந்து எனவும், மலைப்பாக இருந்தது ராதிகாவிற்கு. “கிட்டத்தட்ட மூவாயிரம் பேர் வரப்போறா, இப்பிடி அரேஞ் பண்ணினாதான் சரியா இருக்கும்,” என்று அவளுடைய மலைப்பிற்கு பதிலளித்தவனைப் பார்த்து, “இங்கே அத்தனை பேர் உக்கார இடம் இருக்கா?” என்று கேட்டாள் ராதிகா.

Abhinav-and-Amita-014.jpg

25940afe65bdecb16abe4d35c17edda2.jpg

15e1750075fca3080e5037a05538c540.jpg

 




Last edited:

Shivapriya Murali

இணை அமைச்சர்
Author
Joined
Jan 21, 2018
Messages
621
Reaction score
2,738
Location
Bangalore
0c3f434cacb637167934de860c664176.jpg

“திறந்த வெளியா இருக்கறதனால அப்படி தெரியறது, ஆனா இந்த பபே ஏரியாவைச் சுத்தி எக்ஸாக்டா 3000 பேர் உக்கார டேபிள் சேர் போட்டிருக்கோம். இதைத் தவிர இந்த ரெண்டு டெண்ட்லயும் ஒரு நேரத்துல 500 பேர் சாப்பிடலாம். சரியா இருக்கும்னு நெனைக்கிறேன்,” என்றவன், “சரி நீ என்ன சாப்பிடறேன்னு சொல்லு?” என்று கேட்க, “இல்லை ஜாஸ்தி ஒன்னும் வேண்டாம், ஏதாவது லைட்டா இருந்தா போதும்” என்று ராதிகா கூற, “சரி” என்றவன் அங்கிருந்த ப்ரூட் சாலட் கவுண்டருக்குச் சென்று இரண்டு பவுல்களில் பழத்துண்டுகளை நிரப்பியவன், ஒன்றை ராதிகாவிடம் கொடுத்துவிட்டு, அங்கிருந்த சர்வரிடம் “ரெண்டு ஆரஞ்ச் ஜூஸ் கொண்டுவாங்க, பாண்ட்கிட்ட(pond)” என்று கூறிவிட்டு, “வா உனக்கு ஒரு பியூடிபுல்லான இடத்தைக் காட்டறேன்” என்று அவளை அழைத்துக்கொண்டு டெண்ட்களைச் சுற்றி அழைத்துச் சென்றான். அவன் அழைத்துச் சென்ற இடத்தைப் பார்த்தவளுக்கு, மனம் பறிபோனது.

Niell-and-Anjana-007.jpg

ShubhangMallika-09 (1).jpg

எதிர்பார்க்கவே முடியாதபடி அங்கே ஒரு தெப்பக்குளமும் படித்துறையும் இருந்தது. அதன் கருங்கல் படிகள் முழுவதிலும் பூக்கோலம் போடப்பட்டு பித்தளை உருளிகளில் பூஅலங்காரம் செய்யப்பட்டது. குளத்தின் படிகளில் அந்த இடத்தின் அழகை ரசித்தபடியே கையிலிருந்த ப்ரூட் சாலடை சாப்பிட்டுக் கொண்டிருக்க, ஜூசும் கொண்டுவந்து கொடுக்கப்பட்டது. பவுலை கீழே வைத்துவிட்டு இருவரும் ஜூசைக் குடிக்கத் தொடங்க, “ஆனா எனக்கு ஒரு டவுட்டு,” என்றாள் ராதிகா, “என்ன?” என்பது போல் அவளைப் பார்த்த பரத்திடம், “இப்படி எல்லாத்தையும் வெட்ட வெளியில ஏற்பாடு செஞ்சிருக்கேளே, இப்போ ஜோன்னு மழை வந்துடுத்துன்னா என்ன பண்ணுவேள்?” என்று அப்பாவியாகக் கேட்டாள் ராதிகா.

அவளுடைய கேள்வியால் பயங்கரமாகப் புரையேறியது பரத்துக்கு...”ஏன், ஏன் இவ்வளவு கொலவெறி?” என்று சிரித்தபடியே கேட்டவன், “அடாது மழை பெய்தாலும், விடாது ரிசப்ஷன் கொண்டாடுவோம் நாங்க...அது தெரியமா உனக்கு?” என்று கேட்க, “ஆமாமா நீங்கல்லாம் கில்லாடிகளாச்சே, செஞ்சாலும் செய்வேள்,” என்று கூறிவிட்டு எழுந்துகொண்டாள் ராதிகா. இந்த சம்பாஷணையின் தாக்கத்தால் இருவரும் மலர்ந்த முகத்துடனேயே விழா மண்டபத்திற்குள் நுழைய...மேடையில் மைக் பிடித்து விருந்தாளிகளுக்கு வரவேற்பைத் தெரிவித்தபடி அவர்கள் வருவதற்காகவே காத்திருந்த அரவிந்த், “Lets give it up for the star couple of the day…Mr. Bharadwaj and Mrs. Radhika Bharadwaj” என்று அறிவிக்க, எங்கிருந்தோ மென்மையான இசை முழங்கியது.

284b49373e3dce7ba14cdfbbeb264c6a.jpg



நான்கு பேர் மணப்பெண்ணை வரவேற்கும் சாதர் எனப்படும் பூக்களால் ஆனா போர்வையை ராதிகாவின் தலை மீது விரித்துப் பிடிக்க, ஒரு பெண் வந்து மஞ்சள் ரோஜாக்களால் ஆன ஒரு பூங்கொத்தை ராதிகாவிடம் கொடுத்தாள். அதை வாங்கிக்கொண்டு ராதிகா நிமிர்ந்தபோது பரத் அவளருகில் இல்லை, அவளிடமிருந்து முன்னால் சென்று ரிசப்ஷன் மேடையின் அருகில் நின்றிருந்தான்.



ராதிகாவின் பூப்பந்தல் ஊர்வலம் மெதுவாக அவனை வந்தடைய, மேடைக்குச் செல்லும் படி யில் ஏறியவன், மேல்படியில் ஒருகாலும், கீழ்படியில் ஒருகாலும் வைத்து, திரும்பி ராதிகாவை நோக்கி கை நீட்ட, அவனை நிமிர்ந்து பார்த்தவள், “கை குடுக்கலேன்னா என்னடா பண்ணுவே?” என்பதுபோல் பரத்தை பார்த்தபடி நின்றிருந்தாள். அவள் அப்படி பிடிவாதமாக நின்றிருப்பதைப் பார்த்து பரத்தின் முகத்தில் ஒரு செல்லப் புன்னகை விரிய, தாடியை ட்ரிம் செய்து விட்டிருந்ததால் அவனுடைய புன்னகையின் முழு வசீகரமும் ராதிகாவை வெகுவாகத் தாக்கியது. “நீ எவ்வளோ மயக்கறா மாதிரி சிரிச்சாலும் நான் விழமாட்டேன்,” என்று நினைத்தபடியே அவனுடைய புன்னகை என்னும் ஆழியில் விரும்பியே குதித்து மூழ்கினாள் ராதிகா.



“எவ்வளவு நேரந்தான் இப்படியே அடம் பிடிக்கிறேன்னு பாப்போம்,” என்று பரத் நீட்டிய கையை நீட்டியபடியே வைத்திருக்க...தன் கையிலிருந்த மலர்கொத்தை அவன் கையில் வைத்துவிட்டு, இரு கைகளாலும் லேஹங்காவை லேசாகத் தூக்கியபடி அவனைத் தாண்டி படியேறிச் சென்றாள் ராதிகா. மேடையின் மீது சிறிது தூரம் நடந்தவள், பரத் தன்னுடன் வராமல் போகவே, “என்ன வரலையா?” என்பது போல் தலையை மட்டும் திருப்பி பரத்தைப் பார்க்க, அவன் பூங்கொத்தைப் பிடித்தபடியே அங்கேயே அப்படியே நின்றிருந்தான்.



சில நொடிகள் அப்படியே நின்றவன், பின்னர் தலையை சிலுப்பி சுதாரித்துக்கொண்டு, சிரித்தபடியே படியேறி அவளருகில் வந்தவன், பூங்கொத்தை அவளிடம் கொடுத்துவிட்டு, ராதிகாவைத் தொடாமலேயே அவளை அழைத்துக்கொண்டு சென்று மேடையில் போட்ட சோபாவில் உட்கார வைத்தான்.

4fff04b33f6398c13d4b508992febc1a.jpg

மேடையைப் பற்றி சொல்லவே இல்லையே. பிங்க் மற்றும் வெள்ளை நிற ரோஜாக்களை நெருக்கமாக அடுக்கி மூன்று வளைவுகள் ஒன்றின் பின் ஒன்றாக அமைக்கப்பட்டிருந்தன. பூக்களின் பிம்பங்கள் மொத்தமும் பிரதிபலிக்கும்படியாக பளிங்கு போன்ற தரை அமைக்கப்பட்டிருந்தது. சோபாவில் அமர்ந்த ராதிகாவின் பிம்பமும் அவளருகில் நின்றிருந்த பரத்தின் பிம்பமும் தரையில் ரோஜாப்பூக் குவியலுக்கு மத்தியில் இருப்பதுபோல் தெரிய...அதையே வியப்புடன் விழியகற்றாமல் பார்த்துக் கொண்டிருந்தவளைப் பார்த்து பிம்பத்திலேயே கண் சிமிட்டினான் பரத். “குறும்பைப் பாரு,” என்று நினைத்தபடியே ராதிகா தலையை உயர்த்த, இதுவரை பரத் என்னும் மாயையில் சிக்கியிருந்தவள் அப்போதுதான் அந்த அரங்கின் பிரம்மாண்டத்தையும், அதில் செய்யப்பட்டிருந்த பலவிதமான அலங்காரங்களையும் கவனித்தாள்.

ea536eb7bac4fc47bb4850ff3a53f0e4.jpg

0f0d6309b8f8c10653a625dacdf6abca.jpg

MegandMo-02.jpg


அரங்கம் முழுவதும் அங்ககே பூக்களால் ஆன பிரம்மாண்டமான கொத்து விளக்குகள் தொங்கிக்கொண்டிருந்தன. மேடையின் ஒரு பக்கத்தில் பச்சை மற்றும் நீல நிறத்தில் அலங்கரிக்கப்பட்ட ஒரு சிறிய சிட்டிங் ரூம் போன்ற அமைப்பு இருந்தது. இன்னொரு பக்கத்தில் ஒரு மேடை அமைக்கப்பட்டு அங்கே திருமதி. பாம்பே ஜெயஸ்ரீ அவர்கள் கச்சேரிக்குத் தயாராகிக் கொண்டிருந்தார். மேடைக்கு முன்னாலிருக்கும் இடம் முழுவதிலும் வட்ட மேஜைகள் போடப்பட்டு, சுற்றி நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. அவர்களுடைய குடும்பத்தினர் அனைவரும் முன்னிருந்த மேஜையில் உட்கார்ந்திருந்தனர். ராகவனும் ஸ்ரீராமும் விருந்தாளிகளை கவைர்ரப்தில் முனைப்பாக இருந்தனர். பின்னிருந்த மேசைகளில் விருந்தாளிகள் வந்து அமரத் தொடங்கியிருந்தனர். அவர்கள் அனைவருக்கும் ஒரு மெனு கார்டும் கொடுக்கப்பட்டிருக்க, மேஜைகளைச் சுற்றிவந்து வரவேற்பு பானங்களை சர்வர்கள் வழங்கத் தொடங்கியிருந்தனர்.
ThothathriSupraja-14.jpg

7560e96cebdc50f44e5f1a2f0d023149.jpg


அரங்கின் ஒரு கோடியில், ஒரு மெஹந்தி போடும் ஸ்டால், டேட்டூ ஸ்டால், ஒரு பொம்மலாட்ட அரங்கம், ஒரு கேண்டி ஸ்டால், வளையல் வழங்கும் ஸ்டால் என்று வகைக்கொன்றாக அமைக்கப்பட்டிருந்தது.


மேடையில் ராதிகாவும் பரத்தும் அமர்ந்தபிறகு, ஒருபக்கம் கர்நாடக இசைக் கச்சேரி ஆரம்பிக்க, விருந்தாளிகள் ஒவ்வொருவராக வந்து மணமக்களை வாழ்த்தத்தொடங்கினர். தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், திரைப்படக் கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் என்று வந்து வாழ்த்திய பிரபலங்களின் வரிசை நீண்ட நேரத்திற்கு முடியவே இல்லை. பூங்கொத்துகளும் பரிசுப் பொருட்களுமாய் மேடை நிறைந்துபோனது.



அப்போது திடீரென்று கூட்டத்தில் ஒரு சலசலப்பு ஏற்பட, என்னவென்று பார்த்தால், அரவிந்த் மேடையேறி, இப்போது மணமக்கள் கேக் கட் செய்வார்கள் என்று அறிவித்தான். ஆனால் அங்கே கொண்டுவரப்பட்ட கேக்கை வெட்டவே மாட்டேன் என்று ராதிகா அடமாக மறுக்க அவளை சமாதானப் படுத்தி கேக் கட் செய்வதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது பரத்துக்கு. அப்படியென்ன அந்த கேக்கில் விசேஷம் என்று யோசிக்கறேளா, சொல்றேன் கேளுங்கோ...



நாலு குட்டி குட்டியான தலைகாணி மேல ஒரு குட்டி யானை உட்கார்ந்த்திருந்தது போல் செய்யப்பட்ட கேக் அது. அன்னம் பிரம்மாவின் அமெரிக்க கிளைகளுடன் இணைந்து நடத்தப்படும் வெட்டிங் கேக் பேக்கரியிலிருந்து நிபுணர்கள் வந்து நான்கு நாட்கள் இரவு பகலாக உழைத்து அந்த கேக்கை செதுக்கி இருந்தார்கள்.



வெள்ளை, நீலம், ஆரஞ்சு, பிங்க் நிறத்தில் செய்யப்பட்ட தலையணை போன்ற கேக் அடுக்குகளில், தங்க நிறத்தால் நுண்ணிய வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதன் மீது ஒரு க்ரே நிற யானைக் குட்டி உட்கார்வது போல அமைக்கப்பட்டிருந்தது. யனைக்குட்டியின் அணிகலன்களும் மிக நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் செதுக்கப்பட்டு அப்படியே தத்ரூபமாக இருந்தது. அதைப் பார்த்தவுடன் ராதிகாவிற்கு மிகவும் பிடித்துவிட, வெட்டவே மாட்டேன் என்று அடம் அடம் பிடித்துவிட்டாள். பின்னர் ஒருவாறாக அதைப் போலவே இன்னொரு கேக் தானே செய்து தருவதாகக் கூறி ராதிகாவை கேக் வெட்ட ஒப்புக்கொள்ளவைத்தான் பரத்.



மூன்று மணிநேரம் தொடர்ந்த இந்த நிகழ்ச்சியின் முடிவில், ஹீல்ஸ் போட்டு நின்றதால் ராதிகாவின் கால்கள் வலியால் துவண்டு போயிருந்தன. வந்த விருந்தினர் வந்தபடி இருக்க, கச்சேரியும் தொடர்ந்தபடி இருக்க...வாழ்த்தியவர்கள் விருந்துண்ணக் கலையத் தொடங்கினர்.
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top