• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kadhal Kadan (Valentine's Day Special)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Shivapriya Murali

இணை அமைச்சர்
Author
Joined
Jan 21, 2018
Messages
621
Reaction score
2,738
Location
Bangalore
எல்லாருக்கும் இனிய காதலர் தின வாழ்த்துக்கள்.

இந்த இனிய நாளைக் கொண்டாட என்னோட பங்களிப்பா காதல் கடனிலிருந்து ஒரு சின்ன ரொமண்டிக் டீசர்???

இதுதான் என்னோட முதல் முயற்சி...எத்தனை தடவை படிச்சு பார்த்தாலும் எப்பிடி இருக்குன்னு என்னால கணிக்கவே முடியல...

So, As usual...All of you be the judge...

பயங்கரமான மசாலா நான்வெஜ் பிரியாணி போடும் எழுத்தளர்களுக்கு இடையே...இது ஒரு பருப்பு சாதம் ரேஞ்சுக்காவது இருக்கான்னு தயவு தாட்சண்யம் பாக்காம உங்களோட கருத்தை சொல்லுங்கோ...

Here Comes the Teaser...

காதல் கடன்

(Valentine’s Day Special)

26ebfb62b2e2d4cfb1836add5386fd34.jpg

எதிரில் நின்று கைகட்டி தன்னையே பார்த்துக் கொண்டிருந்தவனை ஏறெடுத்தும் பார்க்காமல் அங்கும் இங்கும் பார்வையை ஓடவிட்டுக்கொண்டிருந்தாள் அவள். அவர்களுக்குத் துணையாக வந்த அவளுடைய தங்கையை அறைக்கு வெளியே நிறுத்தி, அறைக்கதவை மூடித் தாழிட்டிருந்தாள்.

பரத் ஏதோ சொல்ல வாயெடுக்க... “நீங்க எதுவுமே சொல்லாதீங்கோ, நான் உங்கமேல ரொம்ப கோபமா இருக்கேன்,” என்றாள் அவன் முன் தடுப்பதுபோல் கையை நீட்டி.

அவளுடைய இடது தோளில் தொங்கிக்கொண்டிருந்த பூச்சரத்தைப் பற்றி பரத் இழுக்க, அதோடு சேர்ந்து அவளும் அவனருகில் வந்தாள்...பூவாசத்தொடு சேர்ந்த பெண்வாசம் பரத்தை கிறங்கடித்துக் கொண்டிருந்தது. “அம்மாடி, அவ்வளவு கோபமா? ரொம்ப பயமா இருக்கு நேக்கு...” என்று காதருகில் கிசிகிசுத்தான்...

காதருகில் உரசிய மீசையின் தீண்டலும், மூச்சுக்காற்றின் சீண்டலும் உடலில் மின்சாரம் பாய்ச்ச...மெதுவாக நிமிர்ந்து அவனுடைய கண்களைச் சந்தித்தாள்...அந்தக் கண்களில் தெரிந்த காதலும் கலக்கமும் பரத்தின் உயிர் தீண்ட...அக்காதலில் கட்டுண்டு மௌனமாய் நின்றான்...

“நேத்திக்கி ஏன் என்னை அப்பிடி விட்டுட்டு போனேள்?” என்று கண்ணீர் தோய்ந்த குரலில் அவள் கேட்க...அதைக் கேட்டு கண்கள் சுருக்கியவன்... “ஏன் விட்டுட்டு போனேன்னு கேக்கறியா இல்லன்னா எவ்வளவு தைர்யம் இருந்தா விட்டுட்டு போயிருப்பேன்னு கேக்கறியா?” என்று கேட்க...

கேள்வி கேட்டவனை இன்னும் நெருங்கி, அவனுடைய சட்டைக் காலரை இரு கைகளாலும் கொத்தாகப் பிடித்துக்கொண்டாள்... “எவ்வளவு தைர்யம் இருந்தா ஒரு வார்த்தை கூட சொல்லாம என்னை அப்படியே அம்போன்னு விட்டுட்டு போயிருப்பேள்? நான் எவ்ளோ பயந்துட்டேன் தெரியுமா? ராத்திரியெல்லாம் தூங்கவே இல்லை, எவ்ளோ அழுதேன் தெரியுமா?” என்றாள் அவனிடம்.

“அதான் பார்த்தாலே தெரியறதே...” என்று இன்னும் குறையாத அவளுடைய இமைகளின் வீக்கத்தை மென்மையாக விரலால் வருடினான். அவனுடைய வருடல் தந்த இதத்தில் இமைகளை மூடித்திறந்தவள்...கண்களில் கண்ணீர் ததும்ப அவனையே பார்த்தபடி நின்றிருந்தாள்...

விழுந்துவிடவா என்பதுபோல அவளுடைய விழி விளிம்பில் வைரமணி போல தளும்பி நின்ற கண்ணீரை, தன் இரு கரங்களாலும் அவளுடைய கன்னம் ஏந்தி, கட்டை விரலால் துடைத்தவன், “அதான் நான் இப்போ வந்துட்டேனே...இன்னும் ஏண்டா அழறே செல்லக்குட்டி?” என்று கரகரத்த குரலில் அவளிடம் கேட்டான் பரத்.

“நேத்திக்கி நீங்க என்னை விட்டுட்டு போனதுல இருந்து இப்போ வரைக்கும் நான் தவிச்ச தவிப்பெல்லாம் இப்பிடி கண்ணீரா வெளியில வர்றது...என்னால நிறுத்தவே முடியல...” என்றாள் அவள் இன்னும் அதிகத் தவிப்புடன்.

நேற்றிலிருந்து அதே தவிப்பை அனுபவித்த அவனுக்கு, அவளுடைய பூமனம் என்ன பாடு பட்டிருக்கும் என்பது நன்றாகவே புரிந்தது. நடந்ததை மாற்றமுடியாது என்றபோதிலும், மருந்தாக முடியும் என்று முடிவெடுத்தான்.

தன்னுடைய காலரிலிருந்து விலக்க முற்பட்ட அவளது கைகளை, விட்டுவிடாதே என்ற தவிப்புடன் அங்கேயே பிடித்து வைத்துக்கொண்டான்...அவளுடைய இடை சுற்றி கை வளைத்து, எஞ்சியிருந்த இடைவெளியையும் கடந்து, இருவருக்கு இடையேயும் காற்றுகூட புகமுடியாத அளவிற்கு அவளை இறுக்கமாகத் தன்னுடன் அணைத்துகொண்டான்...சாதகப் பட்சி தாகம் தீர்க்கும் அந்த ஒரு மழைத்துளிக்காக வானத்தை அண்ணாந்து பார்ப்பதைப் போன்ற தவிப்புடன் அவன் முகத்தையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தவளின் துடிக்கும் இதழ்களை தன் இதழ்களால் ஆக்கிரமித்துக்கொண்டான்...இதழ் போர் நடக்கும் நேரம் இமைகளுக்கு ஓய்வுநேரம் போலும்...தானாகவே மூடிக்கொண்டன இமைகள்...அவனுடைய சட்டைக் காலரிலிருந்து கைகளைப் பிரித்து பரத்தின் கழுத்தைச் சுற்றி மாலையாக்கி கட்டிக்கொண்டாள்...கால்களை மெதுவாக எம்பி, விரல்களில் நின்று தனது உயரத்தை சிறிது அதிகமாக்கிக் கொண்டவள்...அவனுடைய மோகத் தாக்குதலுக்கு தன்னுடைய இதழ்களைத் தேன் விருந்தாக்கினாள்.

உயிர் உறிஞ்சும் முதல் முத்தம்...பிரிவென்பதே இல்லாதபடி உடலும் உயிரும் பின்னிப் பிணைந்து இணைந்துவிடாதா என்ற ஏக்கத்துடன், காதலும், மோகமும், மையலும் ஒன்றோடொன்று போட்டிபோட முத்தக்கடலில் மூழ்கி முத்தெடுத்துக் கொண்டிருந்தவர்கள் மூச்சுமுட்ட இதழ்களைப் பிரித்துக் கொண்டனர். காந்தங்களோ இதழ்கள்...அவர்களுடைய கட்டுப்பாடின்றி மீண்டும் இதழ்கள் இணைந்துகொள்ள... இதழ்ப்போர் தொடர்ந்தது... மோகச்சமரில் நொடிகளும் நிமிடங்களாக மாற மறந்து உறைந்துபோயினவோ...காலவரையறையின்றி பிரிவதும் இணைவதுமாகத் தொடர்ந்தது முத்த யுத்தம்...அறைக்கதவு தடதடவென தட்டப்பட... “சீக்கிரம் வாக்கா...யாராவது வந்துடப்போறா...” என்று வெளியிலிருந்து அவளுடைய தங்கையின் மெல்லிய குரல் கேட்டது.

பிரியவே மனமின்றி இதழ்களும், தேகங்களும் பிரிந்து நிற்க, விட்டால் மறைந்துவிடுவானோ என்ற தவிப்புடன் அவளுடைய கைகள் பரத்தின் சட்டையை மீண்டும் பிடித்துக்கொண்டன...அவளுடைய முகத்தில் தெரிந்த ஆராட்டத்தில் நெகிழ்ந்தவன்...அவளுடைய முகம் முழுவதையும் முத்தத்தால் நனைத்தான்... “நான்தான் வந்துட்டேனே...இனி உன்னை விட்டுட்டு எங்கேயும் போகமாட்டேண்டி, என் செல்லப் பொண்டாட்டி...” என்றான் அவளை இறுக அணைத்தபடி.

அவனுடைய அணைப்பில் ஆழப்புதைந்தவள் தன்னால் ஆன மட்டிலும் அவனை இறுக்கி அணைத்துக்கொண்டாள். அவளைத் தன்னிடமிருந்து மெதுவாக விலக்கி, அறைக்கதவைத் திறப்பதற்காகத் திரும்பியவனை பின்னாலிருந்து கட்டிக்கொண்டவளைக் கைப்பிடித்து முன்னால் கொண்டுவந்து கதவில் சாய்த்து நிறுத்தி அவள்மீது முழுவதுமாகச் சாய்ந்துகொண்டான். குனிந்து அவளுடைய நெற்றியோடு நெற்றி சேர்த்து, அவள் மூக்கு நுனிக்கு முத்தமிட்டவன்... “இப்போ நாம ரெண்டு பேரும் வெளில போகலைன்னா, அவா எல்லாரும் இங்க வந்துடுவா...எப்பிடி வசதி...” என்று சிரித்தபடி கேட்க... தங்களுக்கேயான பிரத்தியேக உலகத்துக்குள் வெளி உலகத்தை நுழைய அனுமதிக்கும் எதிரியான அந்தக் கதவை முறைத்தபடியே நின்றிருந்தாள் அவள்...வரவேமாட்டேன் என்று பிடிவாதமாக நின்றிருந்தவளின் இதழ்களில் மயிலிறகால் தீண்டுவது போன்ற ஒரு மென்முத்தத்தைப் பதித்தவன், நிமிர்ந்து தன்னைச் சமன்படுத்திக்கொண்டு, அவளது நிலையையும் ஆராய்ந்தான், அவள் தோற்றத்தில் திருப்தியடைந்து... “வா போலாம், எல்லாரும் காத்துண்டு இருப்பா” என்று கூறி கதவைத் திறந்தான்...
 




Shivapriya Murali

இணை அமைச்சர்
Author
Joined
Jan 21, 2018
Messages
621
Reaction score
2,738
Location
Bangalore
இது எங்க வரும் எப்போ வரும்னு தெரியாது...ஆனா நம்ம கதைல கண்டிப்பா வர்ற ஒரு முக்கியமான சீன் இது...படிச்சுட்டு ஸ்டார்ட் மியூசிக்...:love::love::love:
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
பருப்பு சாதம் உடம்புக்கு
ரொம்பவே நல்லது
தெரியுமோ உங்களுக்கு?

ஆனாலும், இந்த காதலர் தின
ரொமான்டிக் காதல் டீசர்
வெஜிடபுள் பிரியாணி மாதிரி
ரொம்ப நன்னாவே இருந்தது,
ஷிவப்ரியா டியர்
 




Last edited:

Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
ஷிவா பிரியாணி ஒருவிதமான சுவை என்றால் பருப்பு சாதம் தயிர் சாதம் தேவமிர்தம் தான் எதுவும் எதர்க்கு குறைந்தது இல்லை எதிர் பார்த்தது எப்பிசோடு கொடுத்தது டிசர் புண் பட்ட மனதை டிசர் கொண்டு ஆற்றிகொள்கிறோம். பரத்தின் flash back ல வருகிறதா முதல் மனைவியுடன் முத்த யுத்தம் நடக்கட்டும் நடக்கட்டும்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top