• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kanavil Vandha Kalvane...! - 23

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அத்தியாயம் – 23

கதிர்நிலவன் சென்றவுடன் உள்ளே வந்தவள், “உன்னிடம் உண்மையைச் சொல்ல எனக்கும் ஆசைதான் ஆனால் கடைசியில் என்னை நீ ஏற்றுக்கொள்வாய் என்று எனக்கு தெரியும்.. ஆனால் இந்த வாழ்க்கை நாம் இருவர் மட்டும் தீர்மானித்தால், கடைசியில் என்னுடைய நிலையில், என்னுடைய மகள் நிற்க வேண்டி வரும்..” என்று வாய்விட்டுக் கூறியவள் தனது அறைக்குள் சென்றுவிட,

அவளின் பின்னோடு வீட்டிற்குள் வந்த தேவகிக்கு கவியின் மேல் சந்தேகம் எழுந்தது.. அவர் வந்த காரியத்தை மறந்து அவள் பின்னே சென்றவர்,

“கவிமலர் உன்னோட மனதில் என்ன இருக்கிறது..?” என்று அவளைப் பார்த்துக் கேட்டார்

அவரைப் பார்த்தவள் ஒரு புன்னகையுடன், “என்னோட மனதில் ஆயிரம் இருக்கிறது அம்மா.. ஆனால் அதை நான் சொல்ல முடியாத சூழலில் இருக்கிறேன்..” என்று கூறினாள்

“கவிம்மா உன்னுடைய அப்பா என்ன செய்கிறார்..?” என்றார் தேவகி

“யாருக்கு தெரியும் அம்மா..? அப்பா வரும் வரையில் இங்கேதான் இருப்பேன்..” என்று சம்மந்தம் இல்லாத பதிலைக் கூறியவள் உள்ளே சென்று மறைய, தேவகி சந்தேகம் அதிகமானது.

தனது வீட்டிற்குள் நுழைந்தவர் நேராக அவரின் படுக்கை அறைக்குள் சென்றவர், அலைமாரியில் இருந்த போட்டோவை எடுத்து “அக்கா இன்று நீங்கள் இறந்த நாள். ஆனால் அந்தப்பெண் கவியின் பிறந்தநாளும் இன்றுதான். எனக்கு என்னோமோ சந்தேகமாகவே இருக்கிறது இவள் நம்முடைய மகள் மிருதுவா..? ஜோதிதான் உன்னுடைய உயிர் தோழியா..? அவளுக்குத்தான் நம் மகளைக் கொடுத்தீங்களா..? சொல்லுக்கா எனக்கு பதில் சொல்லு..” என்று புகைப்படத்தில் இருந்த கவியின் அன்னை அன்பரசியிடம் கதறினார் தேவகி.

இங்கே காரில் சென்றவர்கள் ஆளுக்கொரு சிந்தனையில் வந்தனர்.. முகிலன் தான் சென்னை சென்றதும் செய்ய வேண்டிய வேலைகளைப் பட்டியலிட்டபடியே வந்தான் என்றால், கதிர்நிலவன் உண்மையைத் தெரித்துக் கொள்ள நினைத்தபடியே வந்தான்..

அகிலும், முகிலினியும் திருப்பூரில் ஒருவரின் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று பழைய பஸ்நிலையத்தில் இறங்கிவிட, கதிர்நிலவன், முகிலன், நிலா மூவரும் சென்னை நோக்கிச் சென்றனர்..

கதிர்நிலவன், முகிலன் இருவரும் எதுவும் பேசாமல் வர, நிலா சென்னை சென்றதும் முகிலனிடம் உண்மையைக் கூற வேண்டும் என்று நினைத்தாள்

இவ்வாறு இவர்களின் பயணம் சென்னையில் முடிந்தது.. இருவரையும் அவரவர் வீட்டில் இறக்கிவிட்ட கதிர்நிலவன் புயல் வேகத்தில் வீட்டிருக்கு சென்று காரை நிறுத்தியவன் புயல் போல உள்ளே நுழைந்தான்..

“அப்பா.. அப்பா..” என்று கத்திக்கொண்டு வீட்டிற்குள் வரும் மகனைக் கண்டு பதட்டத்துடன் சமையல் அறையில் இருந்து உள்ளே வந்தார் வசந்தி..

அவரைப் பார்த்தவன், “அம்மா அப்பா எங்கே..?” என்றான் கோபமாகக் கேட்டான்..

அவனின் முகத்தில் இருந்த குழப்பத்தைப் பார்த்த வசந்தி, தனது கணவனை அழைத்துவர திரும்பியவர் அப்படியே நின்றார்.. அவனைப் பார்த்த படியே வந்தவர் அவனின் தந்தை ராம்குமார்...

“என்ன கதிர் என்ன பிரச்சனை..?” என்று மட்டும் கேட்டார்..

அவரின் முகத்தில் இருந்த தெளிவைப் பார்த்தவன், “அப்பா என்னுடைய அத்தை மகள் தான் கவிமலரா..? இந்த உண்மை உங்களுக்குத் தெரியுமா..?” என்று கேட்டான்

“ம்ம் தெரியும்.. ஆனால் அந்த பெண்ணை மறந்துவிட்டு நாங்கள் பார்த்த பெண்ணைத் திருமணம் செய்துக் கொள் கதிர்..” என்று அமைதியாக வெடிகுண்டை வீசினார் ராம்குமார்..

“அப்பா என்ன பேசறீங்க என்று புரிந்துதான் பேசறீங்களா..?” என்று கோபமாகக் கத்தினான் கதிர்நிலவன்

“ம்ம் நல்ல புரிந்துதான் பேசுகிறேன் கதிர்.. நீ அந்த பெண்ணைத் திருமணம் செய்ய கூடாது.. நாங்கள் பார்க்கும் பெண்ணைத் திருமணம் செய்துக் கொள்..” என்று திரும்பவும் கூறி அவனை இன்னும் கோபத்தை அதிகரித்தவர்,

“அடுத்த மாதம் உனக்கும் நான் பார்க்கும் பெண்ணிற்கும் திருமணம்..” என்று முடிவாகக் கூறியவர் வசந்தியைப் பார்க்க, அவரும் அவர்களையே தான் பார்த்துக்கொண்டு இருந்தார்..

“இந்த கதிர் இதில் பெண்ணின் போட்டோ இருக்கிறது பார்..” என்று அவன் கையில் கவரைக் கொடுக்க, கையைக் கட்டிக்கொண்டு அவரைப் பார்த்தவன்,

“அப்பா நான் இந்த திருமணத்திற்கு சம்மதம் சொல்வேன் என்று எப்படி உறுதியாக நம்பறீங்க..?” என்று கேட்டான்

“என்னோட மகன் மேல் எனக்கு முழு நம்பிக்கை இருக்கு..” என்று இருபொருள் படக் கூறியவர், அங்கிருந்த டேபிளின் மேல் கவரை வைத்தவர், அறைக்குள் சென்று மறைய அவனது அன்னை வசந்தியும் அவரின் பின்னே செல்ல,

“அவள் திருமணப் பத்திரிக்கையுடன் வந்து பார் என்று கூறுகிறாள்.. இங்கே திருமணத்திற்கு நாள் குறிக்கின்றனர்.. இவர்களின் பேச்சிற்கு நான் கட்டுப்படுவேன் என்று எப்படி நினைத்தனர்..” என்று கோபத்துடன் கூறியவன் தனது அறைக்குள் சென்று மறைந்தான்..

அங்கே சென்றவுடன், “அவளுக்கும் இவருக்கும் ஒரு பாடம் கற்பித்தே ஆகவேண்டும்..” என்று முடிவை எடுத்தான் கதிர்நிலவன்..

மறுநாள் காலையில் எழுந்த நிலாவிற்கு ஆசரமத்தின் நிர்வாகியிடம் இருந்து அழைப்பு வர அதை எடுத்துப் பேசினாள்..

“நிலாம்மா உன்னைப் பார்க்க சிவானந்தம் அவர்களின் மகன் வந்திருக்கிறார்..” என்று கூற

அதுவரையில் குழப்பத்தில் இருந்தவள் இப்பொழுது கொஞ்சம் தெளிவும், அத்துடன் தனது காதல் ஜெய்க்கும் என்ற நம்பிக்கையும் வந்தது..

சிறிது நேரம் யோசித்தவள், “சார் அவரை அந்த ஆசரமத்தின் பக்கத்தில் இருக்கும் பூங்காவில் இருக்க சொல்லுங்க..” என்று கூறியவள் இன்னும் சில தகவலைப் பெற்றுகொண்டு அறைக்குள் சென்றவள் தயாராகி வெளியே வந்தாள்..

அவள் கூறியதை அப்படியே அவனிடம் கூறிய ஆசரமத்தின் நிர்வாகி தனது வேலையை பார்க்க செல்ல அவனும் அந்த பூங்காவிற்கு சென்றான்..

இதில் நடந்த குழப்பம் என்னவென்றால், முகிலனிடம் சிவானந்தம் அவர்களின் வளர்ப்பு மகள் என்று கூறியவர், நிலாவிடம் சிவானந்தம் அவர்களின் மகன் வந்திருக்கிறார் என்று கூறியது இங்கே இருவரும் யாரையோ காணப் போகிறோம் என்று நினைத்துக் கொண்டனர்..

அடுத்த அரைமணி நேரத்தில் பூங்காவை அடைந்தனர் இருவரும்.. வாசலில் இருந்துப் பார்த்தவள் அங்கே முகிலன் நிற்பதைப் பார்த்து முதலில் திகைத்தவள் அவனின் அருகில் செல்ல அவனும் இவளைப் பார்த்து திகைத்து நின்றான்..

“முகில் நீ இங்கே என்ன பண்ற..?” என்று கேட்டாள் நிலா

“அந்த கேள்வியை நான் கேட்க வேண்டும் நீ இங்க என்ன பண்ற..?” என்று கோபமாகக் கேட்டான்

“இரு இரு நீ இங்கே இருப்பது எனக்கு தெரியாது.. என்னைப் பார்க்க என்னை வளர்த்தவரின் மகன் வந்திருப்பதாக ஆசாரத்தின் நிர்வாகி அழைத்தார்.. அவரை இங்கே தான் இருக்க சொல்லி சொன்னேன் அவரைப் பார்க்கத்தான் வந்தேன்..” என்று உண்மையைக் கூறினாள் நிலா
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அவள் சொன்னதைக் கேட்டுத் திகைத்தவன், “அவனைப் பார்த்து நீ என்ன பண்ண போறா..?” என்று உதட்டில் தவழ்ந்த புன்னகையுடன் கேட்டான்

“கண்டிப்பாக சொல்லனும்மா.. அவன் வந்தவுடன் உன் முன்னாடியே சொல்கிறேன்..” என்று அவனிடம் கோபமாகக் கூறினாள் நிலா..

அப்பொழுது அங்கே வந்த ஆசரமத்தின் நிர்வாகி, “நிலா இவர்தான் சிவானந்தம் அவர்களின் மகன் பெயர் முகிலன்..” என்று அறிமுகம் செய்து வைத்தவர்,

முகிலனின் பக்கம் திரும்பி, “இவள் நிலா சிவானந்தம் அவர்களின் செல்ல மகள்..” என்று அறிமுகம் செய்தார்

“இந்த பெண்ணைத்தான் உனக்கு திருமணம் செய்து வைக்க போவதாகவும் என்னிடம் கூறினார்..” என்று இருவரும் கேட்காத தகவலையும் சொன்னவர் அங்கிருந்து சென்றார்

அவர் செல்லும் வரையில் பொறுமையாக நின்றவள் அங்கிருந்த சிமிண்ட் பெஞ்சில் அமர, அவளின் மனம், ‘என்னோட முகிலன் தான் சிவானந்தம் அவர்களின் மகனா..? அவருக்கு உண்மை தெரிந்து தான் சத்தியம் வாங்கினாரா..?’ என்ற கேள்வி மனதில் எழுத்தது..

முகிலன் அவளின் அருகில் அமராமல் கோபமாக, “உன்னிடம் எங்க அப்பா சத்தியம் வாங்கியது உண்மையா..?” என்று கேட்டான்

“ஆமாம்.. வளர்த்தவர் எது கேட்டாலும் மறுக்காமல் செய்வது தானே அவரின் வளர்ப்புக்கு நான் காட்டும் மரியாதை..” என்றாள் நிலவும் கோபமாக கூறினாள்

“சரி இப்பொழுது நானாக இருக்கவும் பரவாயில்லை.. என்னுடைய இடத்தில் வேறொருத்தன் இருந்தால், அவனை திருமணம் செய்துக்கொண்டு சந்தோசமாக சென்றுவிடுவாய் இல்ல.. காதலித்த நான் எங்கிருந்தாலும் வாழ்க என்று சொல்லிவிட்டுப் போக வேண்டும் இல்ல..” என்று கேட்கவும் நிலவிற்கும் கோபம் வந்தது

“இதே கேள்வியை நான் கேட்டால், என்ன செய்வீங்க..? என்னுடைய இடத்தில் வேறொரு பெண் இருந்தால், அப்பாவின் சொல்லிற்கு கட்டுப்பட்டு அவளையே திருமணம் செய்துக்கொண்டு நீங்க சந்தோசமாக இருக்க உங்களைக் காதலித்த நான் வேறொருவனை திருமணம் செய்துக்கொண்டு வாழவும் முடியாமல், சாகவும் முடியாமல் இருக்க வேண்டும்..” என்று அவளும் கோபமாகவே கேட்டாள்..

இருவருக்கும் கோபம் அடங்க மறுத்தது.. காதலைச் சொல்லியும் கண்ணியத்துடன் இருந்தவனும், காதலைச் சொல்லாமல் அவனின் நினைவுகளுடன் இருந்தவளும் இப்பொழுது எதிரியாக எதிரேதேரே நின்றனர்..

இவர்கள் இருவருமே சிவானந்தம் கொடுத்த போட்டோ கவரை இந்த நொடி வரையில் பிரித்துப் பார்க்கவே இல்லை அதுதான் இத்தனை குழப்பத்திற்கும் முதல் காரணம்!

“சரி இப்பொழுது நீங்க வந்த விசயத்தைச் சொல்லுங்க..” என்று கூறினாள் நிலா கோபமாக

“என்னை திருமணம் செய்து கொள்வதாக என்னுடைய அப்பாவிற்கு சத்தியம் செய்துக் கொடுத்தாக என்னுடைய அப்பா கூறினார்.. என்னை திருமணம் செய்துக் கொள்ள உங்களுக்கு சம்மதமா..?” என்று கேட்டான் முகிலன்.. அவன் சிவானந்தம் மகன் என்ற முறையில் கேட்டான்

“நான் உங்க அப்பாவிற்கு சத்தியம் செய்துக் கொடுத்து உண்மைதான்.. ஆனால் நீங்கள் என்னை திருமணம் செய்ய வேண்டாம், எனக்கு உங்களைப் பிடிக்கவில்லை.. உங்க அப்பாவிற்கு நான் செய்த சத்தியம் என்னுடன் போகட்டும் நீங்க நீங்கள் விரும்பும் பெண்ணைத் திருமணம் செய்துக் கொள்ளுங்கள்..” என்று கூறினாள் சிவானந்தம் அவர்களின் வளர்ப்பு மகளாக கூறினாள்

“அப்பாடி இப்பொழுதுதான் நிம்மதியாக இருக்கிறது... நானும் வேறொரு பெண்ணை நேசிக்கிறேன்.. அந்த பெண்ணைத் தான் திருமணம் செய்துக் கொள்ள நினைத்தேன்..” என்று அவன் முடிக்கும் முன்னே,

“அப்போ என்னிடம் இப்பொழுது திருமணம் செய்ய கேட்டது..?” என்று கோபமாகக் கேட்டாள்

“இங்கிருக்கும் அனைவரும் சத்தியத்திற்கு கட்டுப்பட்டவர்கள் என்று சொல்ல முடியாது.. அதேபோல் உங்களிடம் பொய்யாக வாழ்க்கை நடத்த எனக்கு துளியும் விருப்பம் இல்லை.. நீங்களே சம்மதம் சொல்லி இருந்தாலும் நான் உங்களிடம் இந்த உண்மையைச் சொல்லி இருப்பேன்.. எனக்கு இந்த திருமணத்தில் உடன்பாடு இல்லை என்று..” என்று அவன் சொல்லி முடித்துவிட்டுத் திரும்பிச் செல்ல

அவள் நின்ற இடத்தை விட்டு நகராமல், “ஹலோ முகிலன் உங்க காதலியை எனக்கு அறிமுகம் செய்து வைக்க மாட்டீங்களா..?” என்று சிரிப்புடன் கேட்க,

“கண்டிப்பாக உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன் நிலா.. நீங்களும் காதல் செய்றீங்களா..? அப்படி என்றால் எனக்கும் அவரை அறிமுகம் செய்து வைங்க..” என்று முகிலன் சிரிப்புடன் கூற

“கண்டிப்பாக அறிமுகம் செய்து வைக்கிறேன்..” என்று கூறியவள் அவன் பூங்காவின் வாசல் செல்லும் வரையில் அமைதியாகவே இருந்தவள்,

தனது செல்லை எடுத்து முகிலனுக்கு அழைத்தாள்.. வாசலை அடைந்த முகிலனின் அலைபேசி அழைத்தது..

அவனும் எடுத்து காதில் வைக்க, “பழைய கணக்கு ஒன்று பைசல் பண்ணிட்ட, புதுக்கணக்கு ஒன்றை டீலில் வைத்துவிட்டுப் போகிறாய்.. அதற்கு வட்டியும் முதலும் யார் தருவார்கள்..?” என்று சிரித்துக் கொண்டே கேட்டாள்

“இப்பவே வந்து வட்டியும் முதலும் கொடுத்தால் என்னைத் திருமணம் செய்துக் கொள்வாய் என்று சொல் வருகிறேன்.. இல்லன்ன நீ அந்த சிவானந்தம் அவர்களின் மகனையே திருமணம் செய்துக் கொள்..” என்று கூறினான் முகிலன்

“எனக்கு அந்த சிடுமூஞ்சி வேண்டாம் என்னோட முகில் தான் வேண்டும்..” என்று வெக்கத்துடன் கூறினாள்

“கொடுத்த அசலை விட வட்டி அதிகமாக தரணும்..” என்று பேரம் பேசினான் முகிலன்

“ம்ம் தருகிறேன்..” என்று கூறினாள் நிலா

அடுத்த பத்து நொடியில் அவளின் எதிரே நின்றான் முகிலன் அவளின் காதலனாக..! அவளும் அவனின் முன்னே நின்றாள் அவளின் காதலியாக..!

“முகில் உன்னிடம் உண்மையைச் சொல்லாமல் இருந்தது என்னுடைய தவறுதான் என்னை மன்னித்துவிடு! உன்னைத்தவிர வேறொருவனை என்னால் மனத்தால்கூட நினைத்துப் பார்க்க முடியாது முகில்..” என்று கலங்கிய கண்களுடன் கூறியவளை ரசித்தபடியே நின்றிருந்தான் முகிலன்..

அவன் அமைதியாக நிற்பதைப் பார்த்து, தனது ஹென்பேக்கில் இருந்து ஒரு சிறிய பெட்டியை எடுத்தவள் அவனின் அருகில் சென்று அவனின் கையைப்பிடித்து அவனின் விரலில் மோதிரத்தைப் போட்டவள்,

“ஐ லவ் யூ முகில்.. ஐ லவ் யூ சோ மச் முகிலன்..” என்று கூறியவள் அவனைக் கட்டிக்கொள்ள அவளைக் கட்டிக் கொண்டவன் தனது காத்திருப்பு கைகூடிவிட்ட சந்தோஷத்தில் கண்ணீர் விட, தனது காதலனையே கைபிடித்த சந்தோஷத்தில் இருந்தாள் நிலா..

“டேய் அந்த பொண்ணு பாவம் முகில் நீ என்னை விரும்புவதாக சொன்னதும் அவளின் முகமே மாறிவிட்டது..” என்று சிரித்துக் கொண்டே கூறினாள்

“நீயும் அவனிடம் கூறவும் அவனுக்கும் முகமே மாறிவிட்டது, ஆனால் உனக்கு தைரியம்தான் நிலா முகத்தின் முன்னாடி பிடிக்கலை என்று சொல்ற..” என்று அவளை வம்பிற்கு இழுத்தான் முகிலன்

“அவன் மட்டும் என்னைத் திருமணம் செய்ய கேட்டது சரியா..? நான் என்ன சிவானந்தம் வளர்ப்பு மகளா..? முகிலனின் காதலியாக்கும்.. என்னிடம் வைத்துக் கொண்டால் அப்படிதான் பதிலடிக் கொடுப்பேன்..” என்று சிரித்தவள்,

“அவனும் ஒரு பெண்ணை விரும்புகிறேன் என்று கூறினான் முகில்.. அவனிடம் அவளின் காதலியை அறிமுகம் செய்ய கேட்டேன் அறிமுகம் செய்கிறேன் என்று சொல்லி இருக்கிறான்..” என்று கூறி குறும்பாகச் சிரித்தாள்..

“அவளும் என்னிடம் அவளது காதலனை அறிமுகம் செய்வதாக கூறினாள் நிலா..” என்று இவனும் கூற, இருவருக்கும் சிரிப்பை அடக்கவே முடியவில்லை..

இருவரும் கலகலப்பாக சிரித்தனர்.. வெகு நாட்களுக்கு பிறகு இருவரும் மனம் விட்டு சிரித்தனர்.. அங்கே நடந்த அனைத்தையும் பார்த்த நிஷா, ‘இவர்கள் காதல் எத்தனை இன்னல்களை கடந்து இன்று இருவரும் மனம் விட்டு சிரிக்கின்றனர்..’ என்று நினைத்தவள், இவர்கள் இருவரையும் பார்த்து கண்கலங்கினாள் நிஷா..

அவளின் மனம், ‘இதேபோல கதிர்நிலவனும், கவிமலரும் சேர்ந்துவிட்டால் அதுவே எனக்கு போதும்..’ என்று சந்தோசமாக இறைவனிடம் பிராத்தனை செய்தாள்..

நிஷாவிற்கு இப்படி ஒரு மனமா..? என்று ஆச்சரியமாக இருக்கிறதா..? எல்லோருக்கும் இருக்கும் ஒருப்பக்கம் மட்டுமே பார்க்கிறோம்.. அவர்களின் மறுபக்கம் நாம் பார்க்க நினைப்பது இல்லையே..

இதோ இப்பொழுது இருக்கும் நிஷாவை மாற்றியது அவளின் கையில் இருக்கும் கவிமலரின் கடந்த கால நினைவுகளை சுமந்து நிற்கும் இந்த டைரியே..!

அவளின் டைரியை கவிக்கே தெரியாமல் எடுத்து வைத்திருந்தாள் நிஷா.. இந்த நிகழ்ச்சி நடந்தது மூன்று மாதம் ஆகிறது.. அவள் தனது தந்தையைப் பார்க்க திருப்பூர் வந்த சமயம் அவரின் அலுவலகம் செல்ல வேண்டிய சூழ்நிலையில் அங்கே சென்றவள்..

கவிமலர் தனது டைரியை ட்ராவில் வைத்துப் பூட்டுவதைப் பார்த்து அதை அவளுக்கே தெரியாமல் எடுத்து வந்தாள் நிஷா.. ஆனால் அதை படிக்கும் பொறுமை அவளிடம் இல்லாத காரணத்தால் இத்தனை நாளும் படிக்காமல் இருந்தாள்

கவிமலரையும், கதிர்நிலவனையும் பிரிக்க நினைத்து கடிதம் எழுதிய மறுநாள்[கவியின் பிறந்தநாள் அன்று] அந்த டைரியைப் பார்த்தவள் அதைப் படிக்க ஆரமித்தாள்..

அந்த மூன்று டைரியும் முடிந்ததும் அவளின் கண்களில் கண்ணீர் வழிந்தது.. இப்பொழுது இவர்களை எப்படி சேர்ப்பது தான் செய்த தவறை எப்படி சரி செய்வது என்ற யோசனையில் இருந்தாள்..

அப்பொழுதுதான் இவர்களைப் பார்த்தாள்.. உடனே தனது தந்தைக்கு அழைத்தவள் சில தகவலைக் கூறினாள்.. பிறகு போஸ்ட் ஆபீஸ் சென்று அந்த டைரியை தனது தந்தைக்கு அனுப்பினாள்..

அவள் எங்கிருந்து எடுத்தாலோ அதே இடத்தை சென்று அடைந்தது அந்த டைரி..! அடுத்து என்ன நடக்க போகிறது..? நிஷா என்ன செய்ய போகிறாள்..? கதிர் என்ன செய்வான்..? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்...
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சந்தியா ஸ்ரீ டியர்
 




Hana Ravin

இணை அமைச்சர்
Joined
Apr 15, 2018
Messages
683
Reaction score
1,122
Age
28
Location
Malaysia
Superb epi.. anal nisha villain nenaichen.. takkunu nallavangala akitangale
 




Nadarajan

முதலமைச்சர்
Joined
Apr 28, 2018
Messages
5,558
Reaction score
6,007
Location
Tamilnadu
ஒரு ஜோடி சேர்ந்துவிட்டது
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top