• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Kanmani unai naan karuththinil niraiththen episode 24

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Saasha (Sara Saravanan)

SM Exclusive
SM Exclusive
Joined
Jul 19, 2018
Messages
3,389
Reaction score
12,897
Location
Bengaluru
Screenshot_2019-04-08-00-57-27.jpeg





கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன்.
- சாரல்.


அத்தியாயம் – 24

“என்னது நாங்க ஆராவை விட்டுட்டு இருக்கணுமா…. என்ன டாக்டர் சொல்றீங்க..?” இளா அதிர்ச்சி காட்ட,

“அவ ஏதோ சாவு அது இதுன்னு, தத்துபித்துன்னு உளர்றா… அதுக்கு ஏதோ கவுன்சிலிங் போல டிரீட்மெண்ட் கொடுத்து அனுப்புவீங்கன்னு பார்த்தா…, என்ன இப்படி குண்ட தூக்கி போடுறீங்க…?”பிக்னிக் மூடு ஸ்பாயில் ஆன வேதா ,
இந்த ட்ரீட்மெண்ட்தான் கொடுக்கணும் அப்படின்னு கூட முடிவு பண்ணி வேகமா பேசினார்…

“முதல்ல எல்லாரும் உக்காருங்க… நான் சொல்ல வர்றதை தெளிவா கேளுங்க…எனக்கு தெரிஞ்சி ஆராக்கு உடம்புல எந்த பிரச்சினையும் அவங்க உட்பட உங்க அஞ்சு பேர் கிட்டயே யும் தனி தனியா பேசினேன் அதுல அவங்க மட்டும் தான் தெளிவா இருக்காங்க… கவுன்சிலிங் தேவைதான்… ஆனால் அது அவங்களுக்கு இல்லை உங்களுக்குத்தான் தேவைப்படுது… அந்த பொண்ண குழந்தையாகவே வச்சிருக்க ட்ரை பண்ணி இருக்கீங்க, அதனாலதான் அவளுக்கு இந்த மாதிரி பிரச்சினையாகி இருக்கு… அவங்கள இன்டிபென்டன்டா இருக்க விட்டாலே, கொஞ்ச நாளில இயல்பு நிலைக்கு திரும்பிடுவாங்க… எனக்கு நாற்பது வருஷம் இந்த பீல்டுல எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு நீங்க வந்த உடனேயே உங்க பிரச்சினை என்னன்னு எனக்கு தெரிஞ்சு போச்சு..”

“நீங்க நாலு பேருமே வளைச்சு வளைச்சு அந்த போண்ணுக்கு சின்ன வயசுல இப்படி ஆச்சு அப்படி ஆச்சு இதைத்தான் சொல்லி சொல்லி குழந்தை மாதிரி பார்த்துக்கிட்டோம், அப்புறம் ஏன் அவளுக்கு இந்த மாதிரி மன அழுத்தமானது ஆனது….? அப்படின்னு கேட்டீங்க… நான் இப்ப சொல்லறேன் அவங்கள குழந்தை மாதிரி பார்த்துக் கிட்டதால்தான் ஒரு சின்ன பிரச்சினையைக் கூட எதிர்த்து நிற்கக்கூடிய தைரியம் இல்லாம போச்சு…”

“யாரோ ஒரு அம்மா தடாலடியா நீ ஒரு அனாதை அப்படின்னு அந்த பொண்ண திட்டினதும், அவங்களுக்கு அதை தாங்கிக்கிற சக்தி கூட இல்ல. ஏன்.. இத்தனை நாளா அந்த பொண்ணுக்கு தான் ஒரு அனாதை அப்படின்னு தெரியாதா…? அப்புறம் ஏன் இப்ப பீல் பண்ணனும், அந்த அம்மா சொன்னதுக்கு யோசிச்சு பாருங்க…”

“இத்தனை வருஷமா அந்த பொண்ணு சுயமாக வாழ வேண்டிய, செய்ய வேண்டிய விஷயங்களை நீங்க இருந்து செய்ய வச்சிருக்கீங்க இல்லன்னா செஞ்சு கொடுத்து இருக்கீங்க. அவங்ளுக்கு ஒரு பிரச்சனைனா, அத அவங்கள ஃபேஸ் பண்ண விடாம , நீங்க பேஸ் பண்ணி இருக்கீங்க… அதனால அந்த பொண்ணுக்கு அப்படி ஒரு அனுபவமே ஏற்படாமல் போயி, இப்போ இந்த நிலைமையில் இருக்கிறாங்க…”

“ஷீ இஸ் பேர்பெக்ட்லி ஆல் ரைட்… ஒரு குழந்தை சைக்கிள் கத்துக்க ஆசைப்பட்டா, நாம அந்த குழந்தை பேலன்ஸ் பண்ற வர தான் சைக்கிள பிடிச்சுட்டு ஓட்ட வைக்கனும். அந்த குழந்தைக்கு சைக்கிள் ஓட்டும் தகுதி வந்தும் நாம் அந்த குழந்தைய சைக்கிளை தனியா ஓட்ட விட்டிரனும்… இல்லைன்னா அவங்க ,எந்த காலத்திலும் தனியா ஓட்ட மாட்டாங்க… கண்டிப்பா விழுவாங்கதான். விழுந்தா தான் அடுத்த முறை எப்படி விழாம ஓட்டணும்னு தெரியும். அடிபட்டால் தான், வலி என்னன்னு தெரியும் அந்த வலியை தாங்கக் கூடிய மனோ பலமும் கிடைக்கும்… நீங்க எல்லாரும் அந்த பொண்ணு மேல அதீத அன்பு வச்சிருக்கீங்க தான். ஆனால் அந்த பொண்ணு, உங்க அன்பாலதான் இப்போ இப்படி இருக்காங்க அதை முன்னாடி புரிஞ்சிக்கங்க…”

“உங்க கைக்குள்ளேயே பொத்தி பொத்தி வச்சுக்காதீங்க… கையை விட்டு வெளியில விடுங்க கொஞ்ச நாளில அந்த பொண்ணு தானா அவங்களோட வாழ்க்கையை எதிர்கொள்ள ஆராம்பிப்பாங்க …”

“லீவ் ஹெர்… லெட் லிவ் ஹெர் லைஃப் ஆன் ஹெர் ஓன்..”


அந்த டாக்டர் மூச்சு விடாமல் பேசி முடித்ததும் ,
வெளியில் இருந்த நர்சை கூப்பிட்டு,
“சிஸ்டர்…, கேன் ஐ ஹாவ் சம் வாட்டர்…?”
டாக்டர் இல்லைங்க, நம்ம இளா…

பேசினது நானு ,தண்ணி உனக்கா…? அப்படி பார்த்திட்டு நர்ஸை எடுத்துட்டு வர சொன்னார் கண்ணாலே….
 




Saasha (Sara Saravanan)

SM Exclusive
SM Exclusive
Joined
Jul 19, 2018
Messages
3,389
Reaction score
12,897
Location
Bengaluru
வக்கேஷன் மூடு வண்டி ஏறி வந்தவாசி போயிங்…

ஆராக்கு ஒரே பாட்டு , டான்ஸ்ன்னு கும்மாளம் மூடு…
கார்ல எல்லாரும் அந்த பிள்ளையை முறை முறைன்னு முறைச்சி ஃப்யிங்…

என்னவோ ஆரா, இவனோட இருக்க மாட்டேன்னு சொன்னா மாதிரி…

வீட்டுக்கு போயும் அமைதி அமைதி அமைதிக்கெல்லாம் அமைதி…

கொஞ்ச நேரத்தில் ஆரா,
“என்ன கிருஷ் அண்ணா..? இவ்வளோ அமைதியா இருக்க..? எல்லாரும் என்னை இப்படி பார்க்குறீங்க… டாக்டர் சீக்கிரம் ஆரா மர்கயா சொல்லிட்டாங்களா..?”

“அப்படியே போட்டென்னா பார்த்துக்க… எனக்கு வர்ற கோபத்துக்கு உன் மண்டைய உடைக்கணும் போல இருக்கு.”

ஆரா திரு திருங்க…!!!!
வேதா ,கிருஷின் மண்டையில் கொட்டு வைத்தார்… “என்னடா பேசற குழந்……….”
டபக் வாயை பொத்தி கொண்டார்…

எல்லாரும் ஒரே நேரத்தில் நோக்கி வர்மம்…
பின்ன பதினெட்டு வருஷ பழக்கம்ஜி…, பத்து நிமிஷத்துல மாத்திக்க முடியுமா…

அவ குழந்தை இல்ல… குழந்தை இல்லை… மனசுக்குள்ள வேதா உருப்போட்டுகொண்டார்..
ஆமாம் அவ குழந்தை கிடையாது இப்போ… இந்த நாலும் குழந்தையா மாறிட்டுது… எதுக்கும் பசிக்கவும் இல்லை..
ஆனா ஆரா….?
கிச்சனுக்கு போயி காலையில மீந்த பொங்கல் குண்டானோட கம்மிங்…

எது குண்டான்னு வித்தியாசமே தெரியலடி எருமை… கிருஷோட கவுண்டர் கூட மிஸ்ஸிங்…

தியேட்டர் ல போடுற விளம்பரம் போல ,
என்ன ஆச்சு நம்ம ஊருக்கு…?
எங்க பார்த்தாலும் ஒரே தூசு, புகை மண்டலம்…
டயலாக் ஓடுது எனக்கே….

யாரு எக்கேடு கெட்டு போங்க, அயம் அ பிஸி ஈட்டர்… ஆரா, ஒவ்வொரு வாய் திங்கறதும் , ஒவ்வொருத்தர் மூஞ்சை பார்க்கிறதும்….
தட்டுல போட்டு கூட திங்க தெரில அந்த புள்ளைக்கு… ஆரா வித் குண்டான்..
முன்னபின்ன பார் க்கு போனால் தான பீர் எப்படி இருக்கும்னு தெரியும்…

ஸ்லீப் பிங் டோஸ் ஹெவி யானதும் , அதானப்பா பொங்கல் , கண்ணை கட்டிட்டு அந்தம்மாக்கு…

மிச்ச நாலும்அடுத்ததா வட்ட மேசை மாநாடு… இனிமே நோ… குயந்த புள்ளை ஆரா…, மிஷன் டிரீட்டிங் ஆரா பெரிய புள்ளை…. ஸ்டார்ட்ஸ் நவ்….

அது ஒன்னும் அவங்க நினைச்சது போல அவ்வளவு சுலபமா இல்லை…

இப்பத்தான் ஓவரா பாசம் பொங்கிச்சு…கொஞ்ச ஆசை ஆசையா வந்துச்சு…

மத்தளத்துக்கு ரெண்டு பக்க இடின்னா, இளாவுக்கு நாலு பக்கமும் இடி…
தோழியா என் காதலியா சொல்லடி என் பெண்ணேன்னு பீஜீயம் , நாம லவ்வரா, கேர் டேக்கரா இல்ல , விதியோட சாக்கெரான்னு ( புட் பால் கிரவுண்ட் ஆச்சாம் இளாவோட வாழ்க்கை…)

இருக்காதா பின்ன ,விரதம் இருக்கிறவன் முன்னாடி வித விதமா பதார்த்தம் வச்சது போல,
இப்பத்தான் நம்ம ஹீரோயின் பூனையாய் ஈஷிங், மடியில சிட்டிங், வாய்க்கு கொண்டு போன சாப்பாட்ட புடிங்கி தின்னிங்க்… இப்படித்தான் ஆரா அடிக்கடி பண்ணினா ஒரே அக்கப்போரா….

காஸ்டியூம் டிசைனர் அனு வர்தன் கிட்ட அசிஸ்டன்ட்டா தள்ளி விட்டாய்ங்க… அங்க போயி டிசைனை கத்துக்கிச்சோ இல்லையோ டிசைன் டிசைனா திங்க கத்துகிச்சு… பின்ன புரொடக்ஷன் சாப்பாடு, ஸ்டார் டிசைனர், அவங்க வீட்டுல இருந்து எடுத்துட்டு வந்து திங்க, இவங்க மிச்சமெல்லாத்தையும் திங்க, ஒரு நாள் வயிறு சரியில்லாம ஆரா லீவ்…
அனு , இளாக்கு ஃபோனை போட்டு ,
“ஹே இளா, உன் கசின் சோ கியூட்… லவ்லி டூ அசிஸ்ட் ஹெர்… அவளுக்கு பிடிச்ச மேங்கோ ரைஸ் எடுத்துட்டு வந்தேன்… வாட் ஹாப்பெண்ட் டூ ஹெர்…”

இந்த இடத்தை நல்லா கவனிச்சிக்கிட்டான், அவங்க சோறு மீந்து போச்சுன்னு ஃபோன் போட்டிருக்காங்க…இவ டிசைன் பண்ண இல்லாம துணி மீந்து போச்சுன்னு கேக்கலை… மினுக்கி…. அங்கேயும் போயி பாப்பா ஃபேஸெய் காட்டி, கொஞ்சி கொஞ்சி பேசி மயக்கிட்டா …
 




Saasha (Sara Saravanan)

SM Exclusive
SM Exclusive
Joined
Jul 19, 2018
Messages
3,389
Reaction score
12,897
Location
Bengaluru
அடுத்த மாசம் ஸ்டார் டிசைனர் நளினி கிட்ட சேர்த்து விட ,அங்க இருந்து விண்டாலூ சிக்கன் வீட்டுக்கே பார்சல் வர வெறுத்துட்டான்…

அடுத்த ஐந்து மாதங்களில் ஆராஸ் லேடிஸ் வியர் கலெக்ஷன்ஸ் ஓபனிங் செரிமனி… வேதாஜி ரிப்பன் வெட்ட, அவங்க மருமக ரோஜாஜி குத்து விளக்கு ஏற்ற, ஆராஜி கேக் வெட்டி ….கிராண்ட் ஓபனிங்…

கேக்குலாம் நல்லாத்தான் வெட்டுறா இந்த குள்ள வாத்து…, துணிய ஒழுங்கா வெட்டுவாளா… கிரிஷ்க்கு அவன் கவலை…

ஆராஸ் பேச்சு எழுந்ததுமே பாதி பணம் நீதான் போடணும்னு வலுக்கட்டாயமாக , வாழைக்காய் பஜ்ஜி சுட்டு கொடுத்து பாட்னர் ஷிப் டீலை முடிச்சிட்டாங்க வேதாவும், ரோஜாவும்…
ஒரு வாழைக்காய் பஜ்ஜி க்குக் ஆசைப்பட்டு வாழ்க்கைய அடகு வச்சிட்டான் ஆராஸ் சில்….
ஆனா கிருஷும் இளாவும் ஆராஸின் மார்கெட்டிங் பிசினஸ்ஸ ஹாண்டில் பண்ண, ஆராவும் கடுமையான உழைப்பை போட குட்டீஸ் லயிருந்து பாட்டீஸ் வரைக்கான ஆராஸ் டிசைனர் வேர் செம்ம பிக் அப் காட்டியது…


“மா…, உன் பொண்ணு தட்டு தட்டா நிரப்பி ஃபுல்லா கட்டுவான்னு பார்த்தா நல்லாவே கல்லாவும் கட்டுறா , வித்தை தெரிஞ்சவ தான் பொழைச்சுப்பா…”
மெச்சி கொண்டான் கிருஷும்…


அவங்களோட மிஷன் டிரீட்டிங் பெரிய புள்ளை ஆராவுக்கு, ஆராஸ்ஸின் வளர்ச்சி ரொம்ப உதவியது… கஸ்டமர் ஹாண்டலிங், ஒர்க்கேர்ஸ் ஹாண்டெலிங், டைம் மேனேஜ்மென்ட் என நிறைய படிக்க படிக்க தனிப்பட்ட முறையில் ஆராவிடம் நிறைய மாற்றம்…

ஆனால் அந்த நாலு பேர்க்கிட்டயும் அதே ஆரா…, கொஞ்சல்,கெஞ்சல் ஊட்டினாத்தான் திங்கறது…, இளா வந்து முத்தம் கொடுத்தா தான் தூங்கரதுண்ணு எல்லாரையும் ஒரே நேரத்தில் டயர்ட் ஆக்கினாள்…

இந்த நேரத்தில் ரோஜா பிரேக்ணன்ட், வெளியில ஒரு பாப்பா ரெண்டு மாச வயித்து புள்ளைக்கு கதைய சொல்லி பீதி கிளப்ப, உள்ள இருக்கிற கிருஷோட வாரிசு பாப்பா தின்னதை எல்லாம் வாந்தியா வெளியில கிளப்ப ஒரே அதிரி புதிரி….

அவங்க ஷோ ரூம் இருக்கும் எல்லா ஊர்களிலும் , ஆராஸ் தொடங்கபட்டது… அதே போல திருச்சியிலும்…

எல்லா இடங்களிலும் ஆசிர்வாத் கட்டிடத்துக்கு அருகிலேயே ஆராஸ் திறக்கப்பட, திருச்சியில் இடப்பற்றாக்குறையினால் ஆசீர்வாத்தின் பின் புறம்… ஒரே பில்டிங்கில் தான்… வெவ்வேறு தெருக்களை நோக்கினார் போல ஆராஸ்…

சென்னை சிட்டியை விட, சிட்டியாக மாறிக்கொண்டிருக்கும் கோயம்பத்தூர், தஞ்சாவூர் திருச்சியில் டிசைனர் டிரசெஸ்க்கு செம்ம வரவேற்பு… குறிப்பாக காலேஜ் மாணவிகளிடம்…

ஆராவொட இருபத்தி மூன்றாவது பிறந்தநாள் கடந்து மூன்று மாதங்கள் தாண்ட, ரோஜாவுக்கு வளைகாப்பு….
ரோஜா வினை கொண்டே எளிய காட்டன் உடைகளை கொண்ட பிரேக்னன்சி வேர் கலக்ஷன்ஸ் திறக்க வைத்து சர்ப்ரைஸ் கொடுத்தாள் ஆரா…


“லட்டு கலக்குறா டாலி…” ஆராவை பார்த்து கொண்டே வேதாவுக்கு முத்தம் வைக்க,
“என்னடா பண்ற என் தாய்கிழவியை… அவன்தான் முத்தம் தரான்னா ,நீ என்ன ஈன்னு பல்லை காட்டிட்டு நிக்கிற….?”


“எல்லாம் நல்ல விஷயம் தான்டா யோசிக்கிறேன்… பேசாம ,ஆராக்கும் இளாவுக்கும் சீக்கிரமே கல்யாணத்தை முடிச்சிடுவோம்…” வேதா கிருஷிர்க்கு பதில் கூற…

“ரோஸ்க்கு நல்ல படியா குழந்தை பிறந்ததும் கல்யாணத்தை வச்சிப்போம் டாலி… நானும் கிரிஷும் யூ எஸ்ஸில் ஆரம்பிக்க போற பிரான்ச்செஸ் க்காண வேலைங்க நெருங்கிட்டு இருக்கு, ரோஸ் இப்படி இருக்கிறப்போ இந்த தடியனை அங்க வார கணக்கில் தங்க வச்சி வேலை வாங்க முடியாது நான்தான் போகனும்… அடுத்த மூணு ,நாலு மாசமும் ஆரா தனியா ஆராஸையும் , ஆசீர்வாத்தையும் பார்த்துக்க போறா… ஜஸ்ட் கிருஷ் நிலவரம் என்னன்னு ஃபோன்ல ஃபாலோ பண்ணினா மட்டும் போதும்…”

“சரி உன் இஷ்டம் இளா ஆனா இன்னும் நாலு மாசம் தான் டைம்…கிருஷ் பாப்பாவுக்கு பேரு வைக்கிறப்போ நிச்சயம்…அதுக்கு அடுத்த மாசம் கல்யாணம்… அதுக்கப்புறம் எதுவும் சாக்கு போக்கு லாம் கிடையாது பார்த்துக்க…” சொல்லிவிட்டு வேதா நகர,

“கண்டிப்பா டாலி….. டேக் இட் ஈஸி…” நடந்து போயிகொண்டிருந்தவரிடம் கத்தினான்…, இளா ஆராவை பார்த்து புன்னகைத்தபடியே ஓக்கே சொல்ல விதிக்கு ஒரே கெக்க பிக்கே… அது எப்படி நான் இருக்கிரப்போ ஆராவை ஈசியா கையை பிடிக்கிறன்னு ஒரே கொக்கரிப்பு… ஒரு வேளை ஒரே ஒரு டும் டும் டும் மிற்கு விதி கும் கும் கும்மென்று கும்ம போகிறதோ….?????

“எப்படியோடா சீக்கிரம் நம்ம கணவர்கள் நல
சங்கத்துக்கு புது உறுப்பினர் வரவு… வெல்கம் மாப்ள…” கிருஷ் பேசிக்கொண்டே போக….


“லட்டு ஒயிட் கலர்ல இருக்குது…”

“எங்கடா, யெல்லோ கலர்ல தான இருக்குது…”

“இல்லையே……., முழுசா முழுங்க ஆசைப்படுறது போல வெள்ளையா மனச கொள்ளையடிக்குதே….”

“உன் வாய் இங்க இருக்குது, கண் எங்கயோ லுக்குதே…”

அவன் லுக்கை தொடர்ந்த கிருஷ்க்கு பக்கு…
கிருஷ் பதார்த்ததை சொல்ல, யதார்த்தம்,
ஒயிட் லெகங்கா வில் ஆரா…
ஆராவும் என்னன்னு கேட்டபடி இவனை பார்க்க, இவன் தனியே வர ஜாடை காட்ட, ஆரா மீண்டும் கேள்வியாய் நோக்க, வா இங்க,நம்ம இளா சேதி சொல்லிட்டு பக்கத்து ரூமுக்கு போயிட்டான்…


அந்த அப்ரசன்டி ஆராக்கு அப்பவும் ஒன்னியும் புரியாம,
“என்ன சொல்ல வரான் இந்த இளா ,கேட்டு சொல்லு அண்ணா…”, டவுட்ட…


“அவன்ட்டயே போயி கேட்டுக்க பக்கி…” தள்ளி விட்டு கிருஷ் காண்டுல போயிட்டான்…

“இப்ப எதுக்கு கூப்பிட்ட…?,”

கேள்வியோடு உள்ளே போனவளை, பின்னிலிருந்து கட்டி கொண்டான் இளா…
“என்ன இளா…?”


“ஒன்னும் இல்லை… சும்மா… ரொம்ப அழகா இருந்தியா அதான் சொல்லலாம்னு….” காதல் பொங்கி ஊத்த இளா,

“அதை இங்க கூப்பிட்டு தான் சொல்லனுமா லூசு இளா…”

இன்னும் கொஞ்ச நாட்களில் இதே வார்த்தை தனியாக வந்து சொல்லைன்னு ஊடல் கொள்ளபோவது தெரியாத ஆரா…, இளாவை லூசு சொல்லிட்டு போறா…

சாரல்…..
 




Saasha (Sara Saravanan)

SM Exclusive
SM Exclusive
Joined
Jul 19, 2018
Messages
3,389
Reaction score
12,897
Location
Bengaluru

Saasha (Sara Saravanan)

SM Exclusive
SM Exclusive
Joined
Jul 19, 2018
Messages
3,389
Reaction score
12,897
Location
Bengaluru

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top